முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 38

 

அத்தியாயம்: 38


பெண்ணின் வெட்கம் 


புதிரானது என்றால் 


ஆணின்‌ வெட்கம் 


புதிதானது..



கற்பனை கடலில் மிதந்தபடி கீழே வந்தான் கௌதம்.. அவனின் முகத்தை வைத்தே திருமணத்திற்கு அவனின் சம்மதம் என அறிந்து கொண்டனர் குடும்பத்தினர்.. எனினும்.. 


" ஹரிணி , இந்த ஃபோட்டோ வ பாரு.. நல்லா இருக்காங்கல்ல.. " பிரகாஷ்.. 


" பரவாயில்ல மாடன்னா அழகாத்தா இருக்கா.. நம்பர் என்ன அவங்க அப்பா அம்மாட்ட பேச.. " ஹரிணி..


" எம் பேரனுக்கு வரப்போற பேத்தியாவ நாந்தா பாப்பேன்.. கொண்டா.. ம்.. அழகால்லா இருக்கா.. தஷ்ஸூ பஸ்ஸூன்னு இங்கிலிபிஸ்லாம் பேசுமா.. " நாச்சியம்மாள்.. 


" ஆமா.. பிரகாஷ்..‌ வர்ரவளுக்கு ஹிந்தி தெரிஞ்சிருக்கனும்.. டீ சர்ட் ஜீன்ஸ்ன்னு  மாடர்னா ட்ரெஸ் பண்ணிக்க தெரியனும்.. முக்கியமா தைரியசாலியா இருக்கனும்.. கரப்பான் பூச்சிக்கு பயப்பட கூடாது.. அப்புறம் நம்ம ஃப்ரெண்டு பிஸ்னஸ்லாம் பண்ணப் போறாரு அதுனால கொறஞ்சது ஐம்பது பவுன்னாது.. போட்டுடனும்.‌‌. " ஹரிணி . 


" அப்படி சொல்லுடி ஏ ராசாத்தி.. ஏட்டி உனக்கு இந்த இந்தின்னா யாருன்னு தெரியுமா.. உனக்கு எப்படி தெரியும்.. நீ தா கரப்பா பூச்சின்னு பேப்பர்ல எழுதி வச்சிருந்தாலே பயந்து ஓடுவா.. நீயெல்லாம் எம் பேரனுக்கு சரிப்பட மாட்ட.. அந்த பெண்ணு பேரென்ன.. ஹேமாவா பூமாவா.. அதையே பாத்திடுவோம்... என்னடா மகனை சரிதான.." ஹரிணியிடம் தொடர்ந்து வந்த இந்துவிடம் ஆரம்பித்து கவியரசனிடம் முடித்தார் நாச்சியம்மாள்.. 


" கிராணி.. நாளைக்கே பொண்ணு பாத்துட்டுவோம்.. ஏன்னா வர்ர ஞாயத்துக் கிழம நல்ல நாளு ‌.. அன்னைக்கே கல்யாணத்தையும் வச்சிடுவோம்.. " என தங்களை முறைத்துப் பார்த்துக்கொண்டு இருந்த இந்துவை கவனிக்காது பேசினர்.. 


" எது கல்யாணமா.. அதுவும் ஆறு நாள்லயா.. " கௌதம் அதிர்ச்சியாக.. 


" ஆமா எல்லாம் ரெடி.. நீ தாலி கட்டவேண்டியது மட்டும் தா பாக்கி.. " ஹரிணி.. 


" சீக்கிரம் பண்ணிக்கண்ணே அப்பதா என்னோட ரூட்டு க்ளியர் ஆகும்.. எவ்ளோ நாள்தா நாங்களும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கமா' இருக்குறது.. கல்யாணம் பண்ணீட்டு 'வருத்தப்படும் வாலிபர் சங்கமா' வாழ்ந்திட்டு போறோம்.‌‌. முடிவச் சொல்லுங்கண்ணே.. " பிரகாஷ்..


" ஹரிணி திஸ் இஸ் டூ மச்.. நீ தா ஒரு பொண்ண ஃபஸ்ட் பாத்து வச்சியே.. அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிறேன்.. ஓகேவா... ஓகே ..." கௌதம் இந்துவை பார்த்தவாறு சிறு வெட்கத்துடன்.. 


" அந்த பொண்ண தா நீ பிடிக்கலன்னு சொல்லீட்டு கோபமா போய்டியே.. அதுனால அவங்க வீட்டுல பொண்ணு குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.. நா உனக்கு வேற பொண்ணு பாத்திட்டேன்.. சன்டே மேரேஜ்.. மறக்காம வந்திடு.. தாலி கட்டனும்ல.. " ஹரிணி..


" டார்லிங் நா பொண்ணு பிடிக்கலன்னு சொல்லல.. நீ எதோ பேப்பர் காமிச்சேல்ல... அதத்தா நா பிடிக்கலன்னு சொன்னேன்.. நீ தப்பா புரிஞ்சுக்கிட்ட டார்லிங்.. " கௌதம் குலைவாக..


" ஓ..ஹோ.. அவங்க அம்மா.. உனக்கு வேல வெட்டி இல்லன்னே கட்டிக்குடுக்க மாட்டேன்னு சொல்ட்டாங்க.. பொண்ணு வேணும்னா.. கம்பெனிய ஏத்து நடத்து  இல்லைன்னா பொண்ணும் கிடையாது மண்ணும் கிடையாது.. " என அந்த கம்பெனி தொடர்பான பேப்பரில் சைன் செய்யச் சொன்னாள்.. 


பேனாவை எடுத்தவன் சில நொடிகள் யோசித்துவிட்டு  " நீயும் அதுல பார்ட்னர் தான.. இல்லைன்னா நா சைன் பண்ண மாட்டேன்.. " என்றான் அழுத்தமாக..


" நா அதுல ஸ்லீப்பிங் பார்ட்னர்.. அப்பப்ப முழிச்சு உன்ட்ட கேள்வி கேட்பேன்.. ஓகேவா.. " என்றவுடன்‌ சைன் செய்தான் கௌதம்.. 


வெகு விமர்சையாக நடைபெற்றது அவர்களின் திருமணம்.. இப்படி ஒரு திருமணத்தை அந்த ஊரில் யாருமே கண்டதில்லை எனும் அளவுக்கு நடந்தது அந்த கல்யாணம்.. அலங்கார மேடைகள்.. ஊரை சுற்றி உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இலவச விதைகள்.. மரக்கன்றுகள்.. வீட்டில் உள்ளவர்களுக்கும் சொந்தங்களுக்கும்  தன் சொந்த டிசைனில் பட்டு சேலை , வேட்டி.. முக்கியமாக இந்துவின் முகூர்த்த சேலையும் கௌதமின் பட்டு வேட்டி சட்டையும் பார்ப்பவர் அனைவரின் கண்ணையும் பறிக்கும் அளவுக்கு பொலிவுடன் இருந்தது..  


மாப்பிள்ளை வீட்டாரின் சார்பாக அனைத்து செலவுகளையும் ஹரிணியே ஏற்று செய்தாள்.. எவ்வளவு கூறியும் அதில் மட்டும் சமாதானம் ஆகவில்லை.. என் நண்பனுக்கு நான்‌ தான் செய்வேன் என்று விட்டாள்..  


கலியபெருமாள் பெண்ணின் தாய் மாமனாக சபையில் நின்றது அதிர்ச்சி என்றால்.. பவித்ராவை கூட தங்கை முறை செய்ய அனுமதிக்காதது அனைவருக்குமே கவலை அளித்தது... எத்தனை கூறியும் அவர் கௌதமை மகனாக ஏற்க மாட்டேன் அவனின் தந்தையின் ஸ்தானத்தில் இருந்து எதையும் செய்ய மாட்டேன் என்று விட்டார்.. அவற்றிக்கெல்லாம் சேர்த்து வைத்து ஹரிணி ஒற்றையாளாக அனைத்து உறவுகளையும் தாங்கி திருமணத்தை சிறப்பாக செய்து முடித்தாள்..


" ஏண்ணே உங்க கல்யாணத்த எங்கண்ணி எப்படி நடத்துச்சு பாத்திங்கல்ல.. வேண்டா வேண்டான்னு சொன்னாலும் கேக்காம எத்தன  செஞ்சிருக்காங்க.. நீ என்னண்ணே பண்ண ஹரிணி கல்யாணத்துக்கு.. " பிரகாஷ் தன் தரன் அண்ணனுக்கு  இப்படி திருமண நடக்க வில்லையே என்ற ஆதங்கம் அவனின் பேச்சில் காண முடிந்தது.. 


" உங்கண்ணன தவிர வேற யார ஹரிணி கல்யாணம் பண்ணியிருந்தாலும் நா நிச்சயம் இத விட சிறப்பா வட்டிக்கு கூட கடன் வாங்கினாலும் பண்ணியிருப்பேன்.. " கௌதம்..


" அது ஏன்... எங்கண்ணுக்கு என்ன கொற.. உங்க ஹரிணி தா குடுத்து வச்சிருந்திருக்கனும் எங்கண்ண கட்டிக்க..‌ எங்கண்ணே எப்பவுமே ஹீரோ.. " பிரகாஷ் தரனை விட்டுக் குடுக்காமல் பேச.. 


" அது உனக்கு... அவென் எப்பையுமே எனக்கு வில்லன் தா.. ஐ ஹேட் ஹிம்.. "  தரன் வந்து கொண்டிருப்பதை பார்த்து விட்டு சத்தமாக அவன் காதில் படுமாறு கூறினான்.. 


தரன் முகத்தில் வேதனை , மகிழ்ச்சி , பொறாமை என அனைத்து உணர்ச்சிகளும் இருந்தது.. 


கௌதமின் தாய், தந்தை , தங்கை என‌ நெருங்கிய சொந்தங்கள் விலகி நிற்க தானும் ஒரு காரணம் என்ற வேதனை..  ஹரிணியில் அன்பை பங்கு போட்டுக் கொள்ளும் கௌதமின் மீது பொறாமை.. இந்துவின் திருமணம் அவளின் மனம் கவர்ந்தவனுடன் என்ற மகிழ்ச்சி.. என ஒருங்கே காண முடிந்தது..


இந்து , பெங்களூரில் இருந்து வந்தவள் யாரிடமும் சரியாக பேசுவதில்லை எதையோ இழந்தார் போல் இருந்தாள்.. கிருஷ்ணம்மாள் தரனுடன் இந்துவின் திருமணத்தை பற்றி பேச அவன் மறுத்ததால் வேறு இடத்தில் இருந்து மாப்பிள்ளை பார்த்தார்.. படிப்பை காரணம் காட்டி தள்ளிப் போட்டான் தரன்.. அதன் பிறகு மீண்டும் மாப்பிள்ளை வேட்டை தீவிரமாக ஆரம்பம் ஆனது.. 


இந்துவிற்கு இதில் விருப்பமில்லை , அம்மாவை எதிர்த்து பேச முடியாமல் தற்கொலை செய்ய துணித்தாள்.. தரன் சரியான நேரத்தில் அவளை காப்பாற்றி ஏன் என்று கேட்ட போது தான் அவள் கௌதமை பற்றி கூறினாள்.. அவளிடம் கௌதம் தான் உனக்கு மாப்பிள்ளை என சத்தியம் செய்து குடுத்தவன் அவனை ஊருக்கும் அழைத்து வந்து திருமணத்தையும் நடத்திவிட்டான்.. 


கௌதமின் இந்துவின் திருமண விசயமாக  தரன் பேசினால் நிச்சயம் கௌதம் ஒத்துக்கொள்ள மாட்டான்.. எனவே தரன் ஹரிணியை தூண்டிவிட்டான்.. 


அறையில் கணினியின் முன் அமர்ந்திருந்தவளிடன் " என்ன பண்ற.. கம்பெனி ஆரம்பிக்கப் போறியா.. உனக்கு மாறி தெரியலையே.. யாருக்கு.. " தரன்..


" கௌதம்கு தா.." தலையை உயர்த்தாமல் பதில் வந்தது.. 


" இத குடுத்தா அவென் ஏத்துப்பானா என்ன.. அவென் ரொம்ப ரோஷக்காரனாச்சே.. கண்டிப்பா வாங்கிக்க மாட்டான்... " 


" ஆமால்ல..  அவனுக்கு கல்யாணம் ஆகும் போது கிப்டா குடுத்தா வாங்கிக்கிவியான்... " இப்போதும் நிமிரவில்லை அவள் .


" ஓ... அப்ப மும்பை போனதும் அவனுக்கு மேரேஜ் தா... வாழ்த்துக்கள் சொன்னதா சொல்லீடு.. " 


" ஏ... " தலை தூக்கி சந்தேகமாக..


அவளின் அருகில் அமர்ந்தவன் அவளை தன் பக்கம் திருப்பி " நீ என்ன நெனைக்குற.. அந்த அஜிதாவ பத்தி.. அதா பிங்க் லகங்கா..." 


" அவள பத்தி நா நெனைக்கனும்னு அவசியமில்ல.. நீங்க ஏ அவள பத்தி இவ்வளோ ஆர்வமா கேக்குறிங்க.. என்ன‌ சைட் அடிக்குறிங்கலா.. பிச்சுடுவேன்.. " விரல் நீட்டி எச்சரித்தாள். 


நீட்டிய விரலை தன் வலக்கை விரல்களால்‌ கொக்கி போல் இழுத்து இடது கையை சோஃபாவின் மேல் வைத்து ஸ்டைல்லாக அமர்ந்தவன்..  


" நா சைட் அடிக்குற அளவுக்கு அவாட்ட எதுவும் இல்ல.. இப்ப அது மேட்டரும் இல்ல.. அந்த பொண்ணு உன்னோட ஃப்ரெண்ட இதுல இழுத்து விட்டது எனக்கு என்னவோ டவுட்டா இருக்கு.. நீயே பாரு அது கௌதம கரெக்ட் பண்றதுலேயே குறியா இருக்கு.. ஃபோன் மேல ஃபோனா போட்டு பேசுது அதுவும்.. 'பாத்து இருங்க.. சாப்பிடுங்க' அப்படின்னு அக்கறையா பேசுது.. நேத்து கூட பாத்தேன் படிக்கட்டுல உக்காந்து நைட் முழுக்க கடல போட்டுட்டு இருத்தான்.. அவென் மேல நம்பிக்க இருந்தாலும் அது மேல வரல.. அது எதோ ப்ளான் போடுது.. " என அவளின் சிந்தனையை தூண்டிவிட்டு சென்றான்..


அவன் அடித்த பந்து கோலாக  திருமணத்தில் முடிந்தது.. இந்துவின் அண்ணன் அசோக் குமார் வெளிநாட்டில் வேலை செய்வதால் வர இயலவில்லை.. இந்துவின் அண்ணன் சார்பாக ரிஷிதரன் நின்று அனைத்தையும் செய்தான்..


திருமண தம்பதியர் ஒரு வாரகாலம் தேன்நிலவுக்கென செல்ல.. அவர்கள் வந்த உடன் மும்பை செல்வதாக இருந்தனர் கலியபெருமாள் குடும்பத்தினர்.. தங்கை மகளின் பாதுகாப்பிற்காக உடன் வர சம்மதித்தார்.. கௌதமை நம்பவில்லையாம் அவர்.. சென்னையில் இருந்து மும்பைக்கு ஏசி கோட்ச்சில் ஆறு டிக்கெட் போடப்பட்டது.. ஹரிணியையும் சேர்த்து.. 


" ஹிம்.. எனக்கப்புறம் கல்யாணமான இவங்கெல்லாம் தேன் நிலவுன்னு ஒன்னு  கொண்டாடுறேன்னு கிளம்பிட்டானுங்க... நம்மல ஜோடியா மெட்ட மாடில கூட நிலாவ பாக்க விடமாட்டானுங்க போலையே... இந்த லட்சனத்துல இவளும் மும்பை போறாளாம்... எனக்கு இந்த ஜென்மத்துல ஹனிமூன்னே கிடையாதுடா.. ச்ச.. " தரனின் மனநிலை அப்படித்தான் இருந்திருக்கும்..


தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  

அன்பே 37

அன்பே 39

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...