முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 39

 

அத்தியாயம்: 39


மெட்ராஸ் ரயில்வே நிலையம் இரவு 10.30 மணி.. 


யாத்தியோங் கோ ஜா நேங் கேளியே.. என அறிவிப்புகள் வந்தது கொண்டிருக்க.. கலியபெருமாள் குடும்பம்  ஸ்டேஷனுக்கு வந்திறங்கியது.. 


ஹரிணியின் கண்கள் அங்கும் இங்கும் அழைபாய்ந்த படியே இருந்தது முகமும் வாடியிருந்தது.. அவர்களை வழியனுப்ப பிரகாஷ்ஷும் கவியரசனும் வந்திருந்தனர்.. ரிஷி தரன் வர வில்லை.. முக வாட்டத்திற்கு அதுவே காரணம்..


கணவன் மனைவியாக இருவருக்குள்ளும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத போதும் ஈர்ப்பு இருந்தது.. செல்லச் சண்டைகள் , அவன் அறியாமல் அவளும் , அவள் அறியாமல் அவனும் மாற்றி மாற்றி ரசித்துக் கொண்டே இருப்பர்.. அவர்களுக்குள் இருக்கும் இந்த ஈர்ப்பே அவர்களின் வாழ்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என முழுதாக நம்பினர் இருவரும்..


மற்றவர்கள் பின்னே வர இவள் முன்னே சென்று லக்கேஜ்களை அடுக்கிக் கொண்டு இருந்தாள்.. சுற்றி திரைச்சீலைகள் இருக்க மேலே இருந்த ஹங்கரில் பையை மாட்ட முயற்சித்துக் கொண்டு இருந்தாள்.. அவளின் பின்னால் நிழலாடியது.. யார் என திரும்பியவள் அதிர்ந்து போனாள்..


தரன்.. ரிஷி தரன்.. 


கருநீல முழுக்கை சட்டையை முட்டி வரை மடித்துவிட்டவன் வேட்டியையும் துக்கிக் கட்டி இருந்தான்.. பெர்த்தில் கை வைத்து படு டைலாக நின்று கொண்டு இருந்தான்.. முகம் பூவாய் மலர இதயம் படு வேகமாக துடித்தது அவளுக்கு.. அவன் முன்னேறி அவளை நெருங்க அவள் ஜன்னலில் சாய்ந்து நின்றாள்.. 


" எங்கிட்ட சொல்லாமலேயே போய்டலாம்னு பாத்தியோ.. " அவளின் கண்களைப் பார்த்து கொண்டு தன் இரு புருவங்களை ஒன்றன் பின் ஒன்றாக ஏற்றி இறக்கினான் தரன்.. 


" நீங்க தா ' எனக்கு வேல இருக்கு.. நா வரல'ன்னு சொன்னிங்க.. கடலக் காட்டுக்கு தண்ணி ஊத்துறது தான எங்கள வழியனுப்புறத விட முக்கியமா போச்சு உங்களுக்கு.. ஹிம்.. " என கோபமாக முகம் திருப்பினாள்.. 


அவளின் கோபம் அவனுக்கு பிடித்திருந்தது.. தன்னை தேடினாள் என்பதே அவனுக்குள் போதை ஏற்றியது.. இருவருக்குள்ளும் இருந்த இடைவெளி சென்டிமீட்டரில் இருந்து மில்லிமீட்டருக்கும் குறைவாக மாறியதை அவள் கவனிக்கவில்லை.. இரு கைகளைக் கொண்டு தற்காலிமான சிறை அமைத்து அதில் அவளை கைதியாக்கினான் தரன்.. 


இருவரின் பார்வையும் சந்திக்க அவனின் சாம்பல் நிற கண்ணில் தன்னை தொலைக்கத் தொடங்கினாள் ஹரிணி.. 


" ஓ..‌ அப்ப எனக்கு எது முக்கியம்னு உனக்கு நல்லா தெரியும்.. ம்... அப்படித்தான... " கோவைப் பழமென சிவந்திருந்த அவளின் உதடுகளை பார்த்தவாறு கேட்க..


இல்லை என தலையசைத்தவளின் இடையை இடது கையால் இறுக்கி தன் மார்போடு அணைத்தவனை விழிகள் அசைக்காது பார்த்தாள் பேதை.. அவனின் வலது கை விரல்களால் பெண்ணவளின் விரல்கள் மணிக்கட்டு முழங்கை தோல் பட்டை என ஊர்வலம் வர பயணம் இதழில் முடிந்தது...


மலரின் இதழ்களை விட மென்மையாக இருக்கும் மங்கையின் அதரங்களில் தேனெடுக்க ஆவல் கொண்டு அவன் நெருங்க...


" லக்கேஜ்ஜ கூட சரியா பேக் பண்ண மாட்டாளா இவ.. ச்ச.. " என கையில் இரண்டு தோலில் இரண்டு தலையில் ஒன்று என உண்மையான  போர்ட்டராக வந்தான் கௌதம்.. 


தரன் நெருங்கி வந்த போதே ஹரிணி சுற்றம் மறக்களானாள்.. இடை அணைத்தபோது மாய வலையில் சிக்கி மயங்கியிருந்தவளை கௌதமின் குரலில் மாயை விலகவே சீட்டில் அமர்ந்து கைப்பையில் இல்லாத ஒன்றை தேட ஆரம்பித்தாள்.. 


' அட கருமாந்திரம் பிடிச்சவனே‌.. இதுக்காடா பிரகாஷ்ஷையும் சித்தப்பாவையும் காவலுக்கு வச்சு.. இவனுங்க யாரையும் கொஞ்ச நேரத்துக்கு உள்ள விடாதன்னு கண்ண காட்டிட்டு வந்தேன்.. ச்ச.. கரெக்டான டயத்துக்கு தப்பா வந்து டிஸ்டப் பண்றானே.. இடியட்.. இவன..' இது தரனின் மைன்ட்‌ வாய்ஸ் .


கடுப்புடன் தன்னை ஆசையாக பார்த்துக் கொண்டு இருந்த தரனையும்.. திரும்பி இருந்தாலும் தன் தோழியின் முகத்தில் இருந்த வெட்கத்தையும் உணர்ந்தவன்.. ' ஐய்யையோ.. நாம தா கரடியா வந்திட்டோமோ.. ம்ச்.. நம்மல ரெஸ்பெக்ட் பண்ணாத  இவனுக்கெதுக்கு‌ ரொமான்ஸ்... காய்ஞ்சு‌போயே இருக்கட்டும்.. ' என பொட்டிகளை அடுக்க ஆரம்பித்தான்.. 


குனிந்திருந்தவனின் முதுகில்‌ கனமான பையை கடுப்புடன் தள்ளிவிட்டு சென்றான் தரன்.. 


"ஐய்யோ.. அம்மாஆஆஆஆ.. வலிக்குதே.. ஆ.. " என நிமிர்ந்து பார்க்க அவன்‌ இல்லை.. 


" என்னங்க நீங்க அடுக்கச் சொன்னா தூக்கிப் போட்டு விளாண்டுட்டு இருக்கிங்க.. போங்கங்க.." என கௌதமை திட்டி விட்டு கீழே கிடந்த லக்கேஜை அடுக்க ஆரம்பித்தாள் இந்துமதி..


" நா ஒன்னு விளாடல.. உங்கொத்தான் தா எம்மேல போட்டுட்டு போனான்.. இடியட்.. " என திட்ட..


" எங்கத்தான பத்தி எதாவது சொன்னிங்க பாத்துக்கோங்க.. அப்பறம் மும்பைக்கு தனியாத்தா போக வேண்டியதிருக்கும்.. " இந்து மிரட்டலாக.. 


" அடிப்பாவி சும்மா இருந்தவன  வேணும்னு அடம்பிடிச்சு கல்யாணம் பண்ணிட்டு.. இப்ப தனியா போன்னு சொல்றா.. இது என்னடி நியாயம்.. "‌


" இது எங்க ஊரு நியாயம்.. எங்க அத்தானுக்கு அப்புறம் தா நீங்க... என்ன லக்கேஜ் டிரென்லயே இருக்கட்டுமா இல்ல இறக்கட்டுமா.. " 


" அது அது பேசாட்டிக்கு இருக்குற இடத்துலையே இருக்கட்டுமே.. நீ இங்க  வா.." என கைகளை விரித்து அழைக்க அதில் தஞ்சமடைந்தாள் இந்துமதி.. அன்பு மனைவியை ஆசையோடு அணைத்தான் கௌதம்.. 


தரன் சென்ற உடனேயே ஹரிணியும் வெளியே வந்துவிட்டாள்.. கணவன் எங்கே என பார்க்க.. அவன் பிரகாஷ் மற்றும் கவியரசனுடன் பேசிக் கொண்டிருந்தான்..


" இதுக பெரிய பொருளாதார வல்லுனர்கள்.. இந்திய பொருளாதாரத்த எப்படி இம்ப்ரூ பண்ணனும்னு டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்குங்க.. ஹிம்.. " ஹரிணி முணுமுணுத்தாள்.. 


உள்ளே நடந்தது கனவோ என எண்ணும் அளவுக்கு தரன் அவளை கண்டு கொள்ளாமல் பவியுடனும் இந்து உடனும் மும்மரமாக பேசிக்கொண்டு இருந்ததால் வந்த கடுப்பு அவளுக்கு.. 


ரயில் கிளம்ப சில நொடிகள் இருக்கும் நேரம் பிரகாஷ்ஷும் கவியரசனும் புறப்பட மற்றவர்கள் தங்கள் இருக்கைக்கு சென்றனர்.. ஹரிணி மட்டும் வாசலில் நின்று தரனை தேடி கொண்டிருந்தாள்.. 


" என்ன தா தேடுறியா என்ன.. ம்.. " என அவளுக்கு பின்னால் நின்று கொண்டு கேட்டான் தரன்..


குரல் கேட்டவுடன்‌ மகிழ்ந்தவள் திரும்பிப் பார்த்து 'ஆம் 'என தலையசைத்தாள்.. 


"எதுக்குன்னு நா தெரிஞ்சுக்கலாமா.. " என வலது புற புருவத்தை மட்டும் எற்றினான்..


என்னவென்று‌ சொல்வாள் எதற்காக அவளின் மனம் அவனை தேடுகிறது என‌ அவளுக்கே தெரியாத போது அதை  அவனிடம் எப்படி விளக்கி கூறுவாள்.. 


" அது..‌ அது.. ஹாங்.. பாய் சொல்லலைல்ல.. அதா.. பாய் சீ யூ  அண்டு டாட்டா.. ஐய்யையோ ட்ரெயின் மூவ்வாகுது.. இறங்கலயா.. நீங்களும் எங்ககூட.. " தயங்கியவாறு பேச்சை நிறுத்த.. 


வரவா என அவனும் கேட்க வில்லை.. வாருங்கள் என்று அழைக்க அவளும் தயங்கினாள்..  அப்படி அழைத்தால் உடன் செல்ல அவன் தயார் தான்.. ஆனால் முதலில் அழைப்பது யார் என்ற ஈகோ இருவருக்கும் இருந்தது..


வாசலிலேயே நின்று இவர்கள் பேச கடந்து சென்றவர்கள் இவர்களை வித்தியாசமாக பார்த்தனர்.. அவளை வேறு ஒரு கம்பாட்மெண்டிற்கு இழுத்து சென்றவன் அவளின் கன்னத்தை தன் கைகளில் தாங்கி.. " எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஜாக்கிரதையா இரு.. கௌதம் கூடவே இருப்பான்னு எனக்கு தெரியும் ஆனாலும்.. ப்ளீஸ்... எனக்காக கொஞ்சம் கவனமா இரேன்.. ம்.. " என்றவன் அவளை பேச விடாது அவளின் செப்பு இதழ்களில் தன் வலிய உதடுகளால் ஒற்றி எடுத்துவிட்டு சென்றான்..


மின்சாரம் தாக்கியது போல் சில நொடிகள் நின்றவள் ட்ரெயின்னின் ஹாரன் சத்தத்தில் சுயநினைவானது பெறப்பட்டு வாசலுக்கு விரைந்தாள்.. சிரிப்புடன்‌ பாய் என கையசைத்து நின்றவன் புள்ளியாய்‌ மறையும் வரை வாசலிலேயே நின்றாள்.. 


" உள்ள வந்தா கதவ மூடிடலாம்... ஏசி காத்து வேஸ்ட் ஆகுதுல்ல.. " அவளுக்கு பின்னால் கௌதம் நின்று கொண்டு இருந்தான்.. 


" கவர்மெண்ட் மேல உனக்கு‌ ரொம்பத்தா அக்கற... " என கதவை படார் என சாத்திவிட்டு சென்றாள்..


" ஓய்.. நில்லு.. உன்னோட முகமே‌ சரியில்லையே.. இங்க என்னைமோ இருக்கே...‌" என வெட்கத்தில் சிவந்திருந்த கன்னத்தை சுட்டிக்காட்டி கேலியாக பேச.. 


" ஹாங்.. அ...தெல்லாம் ஒன்.....னுமில்ல.. " என வார்த்தைகள் தந்தியடித்தது... தரனின் இதழ் ஒற்றலை நினைத்து மீண்டும் முகம் சிவக்க அதை மறைக்கவே கௌதமிடம் நின்று பேசாமல் நடக்கலானாள்..


அவளின் கையைப் பிடித்து நிறுத்தி ஃபோட்டோ எடுக்க முயற்சித்தான்  கௌதம்.. " கௌ...தம்... ஸ்டாப் பிட்... ஃபோட்டோ எடுக்காத டா... " என‌ மொபைலை பிடுங்கினாள் அவள்.. 


" ப்பா.. எவ்ளோ அழகா இருக்கு.. பொண்ணுங்க வெக்கப்படுறதே தனி  அழகு தா.. என்ன லவ்வா... கொஞ்ச நாள்லயே காட்டான் உன்ன கரெக்ட் பண்ணிட்டான் போலயே.. " கௌதம்..


" அவரு ஒன்னும் காட்டான் கிடையாது.. ஹீ இஸ் இன்ஜினியர்.. இப்ப அவரு ஒரு விவசாயி.. " 


" அப்படியா.." 


" ஆமா.. நா மட்டும் தா அவர காட்டான் சொல்லுவேன்.. நீ சொல்லக்கூடாது.." ரோஷமாக 


" ஆ.. ஹாங்.. செல்ல பேர் வச்சிக்கிற அளவுக்கு லவ்வுஸ்ஸு போல.." 


"லவ்வான்னு‌ தெரியல.. ஆனா எனக்கு பிடிச்சிருக்கு.." 


" ஓ...ஹோ..‌ என்ன பிடிச்சிருக்கு.. " 


“இத எப்படி டா விளக்கி சொல்ல முடியும்.. பிடிச்சிருக்கு.. “ 


“ அப்றம்.. “


"நா என்ன‌ கதயா சொல்றேன்.. அப்றம் விழுப்புரம்ன்ட்டு.. வா.. போலாம்.. " 


" கொஞ்சம்‌ இரேன்.. இன்ஜினியர் ஸார்ட்ட என்ன பிடிக்கும்ன்னு சொல்லாமலேயே போனா என்ன அர்த்தம்.." 


" ஊர் காரங்களுக்கு நிறைய உதவி செஞ்சி பாத்திருக்கேன்.. பாராட்டும் புகழும் பிடிக்காம, தான் தா செஞ்சேன்னு காட்டிக்க மாட்டாரு.. அது எனக்கு பிடிச்சிருந்தது.. அப்றம் அவரோட இன்டலிஜென்ட்.. எவ்ளோ ஷார்ப் தெரியுமா அவரு.. எல்லாத்தையும் ரொம்ப சீக்கிரமா புரிஞ்சிப்பாரு.. எந்த பிரச் வந்தாலும் லேட் பண்ணாம எந்த முடிவா இருந்தாலும் யோசிச்சு சீக்கிரமா எடுப்பாரு.. அது சக்சஸ் ஆகும்.. 


ரொம்ப அழுத்தமானவரு.. மனசுல என்ன இருக்குன்னு கண்டு பிடிக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு.. சில நேரம் யாரையுமே மதிக்காம இருக்குற அவரோட திமிரு எனக்கு ரொம்ப பிடிச்சது.. தெரியுமா உனக்கு.. என்னால புரிஞ்சிக்க முடியாது மாஸ்டர் பீஸ்.." பெருமையாக.. 


" ப்யூட்டி ஒரு பழமொழி சொல்லும்மே.. என்னாதது.. ஹா.. ஊரா வீட்டு நெய்யே.. எம்பொண்டாட்டி கையேன்னாலாம்.. " 


" அப்படின்னா... " 


"இதோ பாரு.. அர்த்தம்லாம் கேக்க கூடாது.. அர்த்தம் தெரிஞ்சா நாயேன் அத சொல்லப் போறேன.. " 


"அப்றம் எதுக்கு டா பழமொழி சொல்றேங்கிற பேர்ல கண்டத உலறுன.."


 "நீ கூட தா கேட்டதுக்கு சம்மந்தமே இல்லாம பேசுன.. அது மாறி தா இதுவும்.. "


"நா ஒன்னும் சம்மந்தமில்லாம பேசல.. எனக்கு அவரோட சில கேரெக்டர் பிடிச்சிருக்கு.. அதுனால அவர் பிடிச்சிருக்குன்னு சொன்னேன்னு சொன்னேன்.. "

 

" அப்ப சரி வா போலாம்.. எல்லாம் ஓகே.. அழகா எல்லாமே புரிஞ்சது.. அவெ உனக்கு புருஷன் இல்ல சாதாரண மனுஷெந்தான்னு.." 


" கௌதம் நீ என்ன சொல்ல வர்ற எனக்கு புரியல... " 


" ஹரிணி.. நீ அவன இந்த ஊர்ல ஒருத்தனா பாக்குற.. அது உனக்கு பிடிச்சிருக்கு.. பட் நா கேக்குறது உன்னால அவன ஹஸ்பெண்டா ஏத்துக்க முடியுதா இல்லயான்னு.. ஹஸ்பெண்ட் அண்டு வைஃப் ரிலேஷன்கிறது வேற.. கல்யாண வாழ்க்கைக்கு காதலும் , புரிதலும் ரொம்ப முக்கியம்.. 


அவன நீ புரிஞ்சிட்டு ஏத்துக்கனும்.. அதுக்கு முன்னாடி உன்ன நீயே புரிஞ்சிக்க முயற்சி பண்ண..‌ உன்னோட மனசு அவன தேடுது அது ஏன்னு கண்டுபிடி.. அவெ மட்டும் இன்டலிஜென்ட் இல்ல என்னோட ஃப்ரெண்டும் இன்டலிஜென்ட் தா.. " என கூறினான் அவன். 


ஹரிணியின் மனதில் எங்கோ ஓர் ஓரத்தில் கணவன் என்ற பெயரில் இடம் பிடித்திருக்கும் ரிஷியின் மீது காதல் உள்ளதா என்பதை தேட கௌதம் சொல்ல.. அவன் சொன்னது எதுவும் புரியவில்லை அவளுக்கு.. எனினும் ஒன்று மட்டும் நன்கு விளங்கியது அது தரனை புரிந்து கொண்டு காதல் செய்யச் சொன்னது.. 


சரி சரி என மண்டையை ஆட்டிக்கொண்டு.. விட்டால் போதும் என ஓடி சென்று படுக்கையில் விழுந்தாள்.. சிந்தனை முழுவதும் தரனை பற்றியதாகவே இருந்தது..


' ரெண்டு பேரோட குணமும் ஒன்னு தா.. தலைகணம் , பிடிவாதம் , ஈகோ இது எல்லாமே அவனுக்கும் அதிகமா இருக்கு அவளுக்கும் இருக்கு..‌ ரெண்டு‌ ஒரே கேரக்டர்.. எப்படி ஒன்னு சேந்து வாழ்வாங்க.. வெறும் உடல் சார்ந்த உறவா இல்லாம.. மனசு சார்ந்த உறவா இருக்கனும் கடவுளே.. என்னோட ஃப்ரெண்ட் சந்தோஷமா எப்பவும் இருக்கனும்... ' என மனதிற்குள் வேண்டிக்கொண்டான்


 

கௌதம்.. 


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி 


அன்பே 38


அன்பே 40


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...