அத்தியாயம்: 40
மும்பை
இரண்டு நாட்களிலேயே கௌதமின் மீதிருந்த மோசடி புகாரை யார் செய்தது என நிருபித்து அவனின் வேலையை ராஜினாமா செய்ய வைத்தாள் ஹரிணி..
" வணக்கம் மதி சாஃப்ட் வேர் கம்பெனி ஓனர்ங்களா.. சரி.. சரி... எப்ப ஸார் வீட்டு வர்ரீங்க... " ஹரிணி..
" கிளம்பி பத்து நிமிசம் ஆச்சு.. ஃப்ரெண்டோட கார்ல வந்திட்டு இருக்கேன்.. நம்ம ஊரு ட்ராஃபிக்க பத்தி தெரியாத உனக்கு... " கௌதம்
" நீ கார் ஓட்டு... இல்ல ஓட்டாம போ... எனக்கு நீ பத்து நிமிசத்துல.. வீட்டுக்கு வந்தே ஆகனும்.. ஆ... " என திரைப்பட பாணியில் கூறினாள்..
" ஓகே.. சோடா குடிச்சுகோ.. இல்லைன்னா வாங்கிட்டு வாரேன்.. அப்றம் முக்கியமான விசயம்.. " சீரியஸ்ஸாக..
" என்ன.. "
" யார் சமச்சது.. நீ ன்னா இப்பவே சொல்லிடு யூ டர்ன் போட்டு போய்டுறேன்... "
" எரும அன்னம்மா தா சமச்சாங்க.. நம்பி வா.. நா லிஸ்ட் மட்டும் தா சொன்னேன்.. "
" அன்னம்மா சமையலா அருமையா இருக்குமே.. சாப்பிட யாருக்கு தா கசக்கும்.. இதோ ஆன் தி வே டார்லிங்.. " கௌதம்..
இந்துமதியையும் கௌதமையும் விருந்திற்கு அழைத்திருந்தாள் ஹரிணி.. வீட்டின் பிரம்மாண்டத்தை கண்டு இந்து வாயடைத்துப் போனாள்... சிறு பதற்றமும் உண்டானது அவளுள்.. கௌதம் அவளின் கைகளை பிடித்து ஆறுதலாக அழைத்துச் சென்றான்..
" வெல்கம் ஹோம்.. " என மலர் தூவி வரவேற்றாள் ஹரிணி..
" டார்லிங் எதுக்கு இதெல்லாம்.. எங்கள பயமுடுத்தாத பாரு கொழந்த முகத்த.. " இந்துவை காட்டினான்..
ஏனோ அந்த வீடு இந்துவுக்கு ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்தியது..
" ஓய் இந்து என்னாச்சு.. பயமா இருக்கா.. ஏ.. " ஹரிணி
" இல்ல பயமெல்லாம் இல்ல.. ஆனா ஒருமாதிரி இருக்கு.. " இந்து..
" ட்ராவல் பண்ண டயடு அப்றம் ரெண்டு பேரும் பசில இருப்பிங்க.. ஃபஸ்ட் சாப்பிட்றலாமே.. வாங்க.." என டனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்றவள் இருவருக்கும் பார்த்து பார்த்து பரிமாறினாள்..
" இது என்ன வீட.. இல்ல தர்ம சத்திரமா.. ஏ அன்னம்மா.. இதுகள உள்ள விட்டதே தப்பு இதுல சரிசமமா உக்கார வச்சு சாப்பாடு பரிமாறுற.. நாளைல இருந்து உனக்கு இங்க வேல கிடையாது.. போ.. இப்ப எனக்கு சூடா டீ போட்டு எடுத்துட்டு வா.. இதுகளால என்னோட வீட்டுலேயே நிம்மதியா சாப்பிட முடியல.. " தீப்தி ஹிந்தியில்...
கௌதமிற்கும் அவளுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தா.. அவனையே பிடிக்காது என்ற போது அவனின் மனைவியை மட்டும் எப்படி பிடிக்கும்.. அதான் வீட்டிற்கு வந்தவர்களிடம் இப்படி அநாகரிகமாக நடந்து கொள்கிறாள்..
இந்து சாப்பிட பிடிக்காமல் எழ முயற்சிக்க.. " நாம வந்தது ஹரிணிக்காக.. இவளுக்காக இல்ல... சாப்பிடு ஹரிணி வருத்தப்படுவா.. வந்துகிட்டு இருக்கா.. அவாட்ட எதையும் சொல்லாத.. " சிறிய குரலில் இந்துவின் கைகளை பிடித்து கூறினான்..
ஹரிணி சமயலறையில் இருந்து தட்டுடன் வந்தாள்.. " டேய் உனக்கு பிடிச்ச ஸ்வீட் பீடா.. சாப்பிட்டு முடிச்சதும் போட்டுக்க.. எடுத்துக்க இந்து.. சாப்பாடு பிடிக்கலையா.. தட்டுல அப்படியே வச்சிருக்க.. "
" இல்ல சாப்பிட முடியல.. வயிறு புல்லாகிடுச்சு.. " இந்து..
" இதுக்கு முன்னாடி இந்த மாறி சாப்பாட்ட பாத்திருப்பாளோ என்னமோ.. அதா பாத்ததும்மே வயிறு நெறஞ்சுடுச்சு.. பழய கஞ்சி சாப்பிடுறவ கிட்ட பிரியாணி குடுத்தா எப்படி.. " தீப்தி தமிழிலேயே ஏளனமாக சொல்ல..
" ஆமா.. பாதி வெந்தும் வேகாததுமா திங்குற உனக்கு எப்படி தெரியும் பழய சோத்தோட அரும.. உனக்கு தெரிஞ்ச டாக்டர் யாராவது இருந்தா கேளு அவங்க சொல்லுவாங்க.. எது உடம்புக்கு நல்லதுன்னு.. நீ வா இந்து நாம வீட்ட சுத்தி பாக்கலாம்.. "ஹரிணி இந்துவை அழைக்க..
" ஹரிணி.. இதுகள மாறி பரதேசிகள பாத்து பரிதாபப் பட்டோமா ஒரு வேல சாப்பாடு போட்டோமா வெளில அனுப்புனோமான்னு இருக்கனும்.. அத விட்டுட்டு வீட்டுக்குள்ள கூட்டீட்டு வர்ர.. நாய குளிப்பாட்டுனாலும் அத வீட்டுக்கு வெளிய தா வைக்கனும்.. நடு ஹால்க்கு வர விடக்கூடாது.." தீப்தி அவமானப்படுத்தும் எண்ணத்தோடு .
" மரியாதையா பேசு.. அவங்க என்னோட கெஸ்ட்.. நீ சொன்னதுல கடையா சொன்னியே அது உண்ம தா.. உன்னைய வீட்டுக்குள்ளையே விட்டுடுக்க கூடாது.. நீயே சிலரோட தயவாலதா இங்க இருக்கங்கிறத மறந்திடாத.. " எச்சரித்தாள் ஹரிணி..
இருவரும் சண்டை போட்டுக் கொண்டு இருக்க அழுத்தமான காலடி ஓசை கேட்டது.. நிமிர்ந்து படிகளில் பார்த்தால் அங்கு முப்பது வயது மதிக்கத்தக்க இளைஞன் வந்து கொண்டிருந்தான்..
ஏசியிலேயே பிறந்து வளர்ந்திருப்பான் போலும் நிறம் மாறாமல் வெள்ளையாவே இருந்தான்.. கண்கள் எதிர் நிற்பவரை சிறப்பாய் எடைபோடும் தன்மையைக் கொண்டிருந்தது.. வெள்ளை நிற கோர்ட் சூட் என ராஜ தோரணையில் வந்தான் ஓம்கார்.. ஹரிணியின் அண்ணன்.. ரோஸ் ( ROS) குழுமத்தின் தலைவன் அவன்..
" ஹாய் ஹரிணி.. ஊர்ல இருந்து எப்ப வந்த.. "
" அத நா கேக்கனும்.. நீ எப்ப வந்த... ஆஸ்திரேலியா போய் இருந்ததா சொன்னாங்க.. " ஹரிணி
வெகு நாள்கழித்து பார்த்துக் கொள்ளும் அண்ணன் தங்கை போல் இல்லை அவர்களின் உரையாடல்..
" மார்னிங் தா வந்தேன்.. ஹலோ கௌதம்.. கௌ ஆர் யூ.. கூ இஸ் திஸ்.. " என இந்துவை பார்க்க.
" ஐ ஆம் ஃபைன்.. ஷீ இஸ் மை வைஃப்.. இந்துமதி.. " கௌதம்.
" கங்கிராஸ்.. " என வாழ்த்தியவன்.. " ஐ வாண்ட டூ ஸ்பீக் ஸம்சிங்(something).. " என கௌதமுடன் பேச சென்றவனை.. தனியாக அழைத்து வந்தாள் தீப்தி..
" ஓம் நீ என்ன இவன்ட்ட இவ்ளோ க்ளோஸா பேசுற.. ஹீ இஸ் எ ப்ராடு.. நம்ம கம்பெனி ப்ராஜெக்ட்ட ஆப்போஷிட் காரனுக்கு வித்திருக்கான்.. லட்ச கணக்குல நமக்கு நஷ்டமாகிருக்கும்.. மொதல்ல அவன தொரத்தி விடு.. ப்ளீஸ்.. " தீப்தி..
" ஆமா ஓம்.. நம்ம ஆட்களையே நமக்கு எதிரா திருப்ப முயற்சி பண்ணிருக்கான்.. ஹரிணியோட ஃப்ரெண்டுன்னு நாம இவன கூட வச்சிருந்தா அது நமக்கே நாம குழி தோண்டிக்கிற மாறி.. ஹரிணிட்ட சொல்லி இவனோட ஃப்ரெண்ட்ஸிப்ப கட் பண்ணிடு.. " கதிரவன்..
" ஹே.. கமான் ஹைஸ்... நமக்கு கெடச்சிருக்க நியூ கம்பெனி ப்ராஜெக்ட் யாரால கிடைச்சதுன்னு நினைக்குற.. அவனால தா கோடி கணக்குல லாபம் வரப்போது.. கடவுள் இவன மாறி ஆள்ட்ட காச குடுக்கலைன்னாலும் மூளைய அதிகமா குடுத்திருக்கான்.. இவன மாறி ஆளுங்கிட்ட இருக்குற மூளைய வச்சு தா நாம காசு சம்பாத்திக்கிறோம்.. இது எப்ப அவிங்களுக்கு தெரிய வருதோ அப்ப அவிங்க உசார் ஆகிடுவாங்க.. அதுக்கு நாம விடக்கூடாது.. எப்பவுமே அவிங்க நமக்கு அடியையாதா இருக்கனும்.. காசுக்கு நம்மகிட்ட கையேந்திக்கிட்டே தா இருக்கனும்.. காச தனியா சம்பாதிக்க விடவே கூடாது.. என்ன புரியுதா.. உங்களோட கோபத்தால இவன மாறி ஆட்கள ஏத்தி விட்டுடாதிங்க.. ம்.. " ஓம்..
" ம்... " என இருவரும் ஹரிணியையும் கௌதமையும் முறைத்துக் கொண்டே சென்றனர்..
ஓம்கார் பணம்.. பணம்.. பணம் தான் எல்லாம் அவனுக்கு.. ஒவ்வொரு நொடியையும் காசாய் மாற்றும் தந்திரம் அவனுக்கு தெரிந்திருந்தது.. அனைத்துமே பணம் தான் அவனுக்கு..
" தனியா பிஸ்னஸ் பண்ண போறியாமே.. எதுக்கு உனக்கு இந்த வேண்டாத வேல.. பேசாம நம்ம கம்பெனிலையே பாரு.. சம்பளம் அதிகமா தாறேன்... தனியா ஆரம்பிச்சு.. நஷ்டம் வந்தா உன்னால தாங்கிக்க முடியாது... நீ எல்லாம் கத்துக்குட்டி மாறி.." என கௌதமிடம் தனியாய் தொடங்கவிருக்கும் நிறுவனத்தை பற்றி பேசி வேண்டாம் என பயமுறுத்தி சென்றான்..
"ஹரிணி.. உன்னோட கல்யாண விசயத்த நீ இன்னும் சொல்லலையா.. பல மாசம் ஆச்சு... இதுக்கப்றமும் மறைக்குறது சரியா படல.. " என செல்லும் ஓமை பார்த்தபடி சொன்னவன் இந்துவை அழைத்துக் கொண்டு சென்றான்..
கௌதம் சொல்வதும் சரியே..
வீட்டில் கௌதமின் அண்ணனை திருமணம் செய்து கொண்டதாக சொன்னாள்.. தீப்திக்கு மிகவும் சந்தோஷம் ஏனெனில் கிராமத்தில் படிக்காத எதோ பட்டிக்காட்டானைத் தான் திருமணம் செய்திருப்பாள்.. எனவே சொத்து பிரிக்கும் போது அவனை ஈசியாக ஏமாற்றிவிடலாம் என்ற மகிழ்ச்சியே..
ஓம்காரனுக்கு இதில் உடன்பாடு இல்லை.. ஏனெனில் பெரிய இடமாக பார்த்து கல்யாணம் செய்து வைத்தால் அவனின் தொழில் மற்றும் பணமும் அதிகமாகும்.. ஆனால் சொல்வதை கேட்டு சரி என தலையாட்டும் ரகம் இல்லை ஹரிணி.. இப்போது வந்தவன் சொத்துக்களை அபகரித்து விட்டால்.. எனவே 'சொத்தில் பங்கு கிடையாது.. ' என மிரட்டினான்..
' இது நீ சம்பாதிச்சது மட்டுமில்ல என்னோட தாத்தாவோடதும் தா.. எனக்கு தாத்தா சொத்து போதும் உன்னோடது தேவையே இல்லை..' என்றுவிட்டாள் ஹரிணி..
அவ்வளவு தான்..
அவளின் கல்யாண விசயம் புஸ்வானமாக மாறும் என்று கௌதம் எதிர்பார்க்க அது தண்ணீரில் நனைத்த பட்டாசாய் மாறியது..
கணினியின் முன் சோகமாக அமர்ந்திருந்தாள் ஹரிணி.. திரையில் விடாமல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.. அதாவது அவளை திட்டும் சத்தம்.. வேற யாராவது அவளை திட்டினால் உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டிருப்பாள்.. எதிர்த்து
கூட பேசாது அமைதியாக இருக்க காரணம் திட்டியவனுக்கு அவள் மேல் கொண்டிருந்த அக்கறையும் அன்பும்..
திரையில் இருந்தது ராகவ்.. யார் எவர் என தெரியாத ஒருவரை தன் தங்கை திருமணம் செய்து கொண்டதால் வந்த கோபம் அவனுக்கு...
" ஃபோர் மன்த்தா ஏன்ட்ட சொல்லனும்னு உங்களுக்கு தோணவே இல்லைல்ல.. என்ன அண்ணனா நினச்சிருந்தேன்னா சொல்லியிருப்பிங்க... " என்றான் அவனின் குரலில் இருந்த வருத்தம் அவளையும் கவலை கொள்ளச் செய்தது..
" ஐய்யோ அண்ணா.. உன்ட்ட சொல்லக்கூடாதுன்னு மறைக்கல.. நீ உன்னோட வேலைய முடிச்சுட்டு வந்ததுக்கு அப்றம் சொல்லாம்னு இருந்தேண்ணா.. சந்தர்ப்பம் சூழ்நிலண்ணா இல்லைன்னா நீ இல்லாம கல்யாணம் நடந்திருக்குமா... எனக்கு கல்யாணம்ன்னா சந்தோஷப்படுற மொத ஆள் நீதான ண்ணா.." என்றாள் சமாதானமாக..
" உங்கள விடவா எனக்கு அந்த வேலை முக்கியம்.. சரி விடுங்க.. யாரது எல்லா டீடைல்லையும் எனக்கு உடனே இ மெயில் பண்ணுங்க.. அவனோட ஃபோட்டோ இருந்தா அதயும் அனுப்புங்க.. உங்களோட ஹஸ்பெண்ட நா பாக்கனும்... " ராகவ்..
ஹரிணியை வருத்தப்பட வைக்கக்கூடாது என அவன் கல்யாணம் நடந்த சூழ்நிலையை கேட்கவில்லை..
" ம்ச்.. கௌதமோட அண்ணன்.. இத விடவா உனக்கு ஒரு சர்டிபிகேட் வேண்டும்.. போண்ணா.. " கௌதமை பற்றி தெரியும் ஆதலால் ராகவ் அமைதியாகிவிட்டான்.
லேப்டாப்பை மூடியவள்.. " அண்ணா என்ன கேட்டான் ஃபோட்டோவா.. ஐய்யையோ அவனோட ஃபோன் நம்பர் தவிர வேற எதுவுமே நம்ம கிட்ட கிடையாதே... " என ஃபேஸ்புக் ட்விட்டர் என சமூக வலைதளத்தில் அவனின் புகைப்படத்தை தேடினாள்..
ஹீஹிம் எதுவும் கிடைக்கவில்லை... " ச்ச.. பேசாட்டி அவனுக்கே ஃபோன் பண்ணி கேப்போம்மா.. ச்சச்ச.. வேணும்ன்னா அவனே கூப்பிடுவான்... நம்ம கூப்பிட்ட கூடாது பா.. " ஈகோ அவளை தடுத்தது...
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..