அத்தியாயம்: 41
வீடே மணத்து கிடந்தது இந்துவின் சமையலில்.. கௌதம் இந்துவிற்கென ஹரிணி கலியபெருமாளின் வீட்டிற்கு அருகே உள்ள அப்பார்ட்மெண்ட்டில் வீடு வாங்கிக் கொடுத்திருந்தாள் திருமணப் பரிசாக.. காலையில் வேலைக்குச் செல்லும் போது இந்துவை அவளின் மாமா வீட்டில் விட்டுவிட்டு செல்வான் கௌதம்.. மாலை வந்தவள் இரவு உணவை சமைப்பதில் மும்மரமாக இருந்தாள்..
பின்னால் இருந்து இரு கரம் அவளை இறுக்கி அணைத்தது.. பயந்து போனவாள் கத்தப் போக.. அவளின் வாயை மூடினான் கௌதம்..
" கத்தி ஊர கூட்டி தர்மடி வாங்கி குடுத்துடாத டி.. அத்தான் பாவம்.. " என்றவனை கரண்டியால் அடித்தாள் இந்து..
" வீட்டுக்கு வந்தா காலிங் பெல்ல அடிக்கனும்னு எத்தன தடவ சொல்றது.. நீங்க பேசாட்டிக்கு இன்னொரு சாவி போட்டி வந்தா.. தர்மடி வாங்கித்தா ஆகனும்.. ஹிம்.. " முகம் திருப்பினாள்..
அவளை தன் புறம் திரும்பியவன் இடையில் கை கோர்த்து இழுத்து தன் மார்போடு அணைத்தான்.. உச்சந்தலையில் தன் நாடியை வைத்தவன்..
" உனக்கு ஒரு சர்ப்ரைஸ்.. என்னனு கண்டுபிடி.. "
" ம்.. என்னவா இருக்கும்.." என யோசித்தவள்.. " ம்ச்.. நீங்களே சொல்லிடுங்க.. " சிணுங்களாக..
" யோசிடி.." என்றவனின் இதழ்கள் அவளின் சங்கு கழுத்தில் ஊர்வளமிட.. அவனின் கையில் பொம்மையாக உறைந்து போய் இருந்தாள் இந்து..
" நீங்க.. பண்றத பாத்தா.. இன்னைக்கு சர்ப்ரைஸ் இதுதான் போலா.. " என்றாள் அணைப்பில் இருந்தபடி..
அவளை விலக்கி நிறுத்தியவன் " இல்ல.. இப்ப நீ ஹாலுக்கு வா சர்ப்ரைஸ் இது இல்ல.. இத நாம நம்ம ரூம்ல பாத்துக்கலாம்.. " என கண்ணடித்தான்.. வெட்கப்பட்டு கொண்டே அவனை பின்தொடர்ந்து சென்றாள்..
சிறியதும் பெரியதுமாக இரு கவர்கள் இருந்தது.. சிறிய கவரை அவளிடம் நீட்டியவன் பிரித்துப் படிக்கச் சொன்னான்..
" என்னதிது.. மெட்ராஸ்ல.. " இழுத்தாள் சந்தோஷமாக..
" ம்.. நம்ம கம்பெனியோட ஹெட் ஆஃபிஸ்ஸ சென்னைல தா ஓப்பன் பண்ணப் போறோம்.. இடம் பாத்து அட்வான்ஸ் கொடுத்தாச்சு.. ஒரே மாசத்துல நாம அங்க போகப் போறோம்.. Madhy software development company.. " என்றான் உற்சாகமாக..
சந்தோஷப்படுவாள் என அவள் முகம் பார்த்திருக்க அவளோ " இது தா சர்ப்ரைஸ்ஸா.. ஹிம்.. சந்தோஷம்.. நா போய் சமையல் செய்யப் போறேன்..." என நடக்க முயன்றவளை இழுத்து தன் மடியில் அமர வைத்தான்.
" ஏன்டி.. லட்சக் கணக்குல காசு போட்டு உம் பேருல ஒரு கம்பெனி ஸ்டாட் பண்ணப்போறேன்னு சொன்னா.. நீ என்னமோ திரும்பிட்டு போற.. "
" ம்ச்.. இது நீங்க ஏற்கனவே ப்ளான் போட்டது தான.. மும்பைக்கு பதிலா மெட்ராஸ்.. இத போய் சர்ப்ரைஸ் அது இதுண்டு.. "
" மெட்ராஸ் ல இருந்து நைட் கிளம்புனா நம்ம அப்பத்தா ஊருக்கு காலைல போய்டலாம்.. நம்ம பொண்டாட்டி வீட்டுல ஒத்தைல இருக்குறாளேன்னு.. பாத்துப் பாத்து செஞ்சா.. அவ்வளவு தானான்னு பேசுற.. போடி எந்திரிச்சு.. "
பேசி முடிப்பதற்குள் அவனை அணைத்து முகம் முழுவதும் முத்தமிட்டவள் அவனின் மார்பிலேயே சாய்ந்து கொண்டாள் சந்தோஷமாக.. பிறந்ததில் இருந்தே அவள் அந்த குடும்பத்தை பிரிந்தது இல்லை.. தினமும் வரும் அவர்களின் நினைவை தவிர்க்க முடியாமல் திணறியவளுக்கு கௌதம் கொடுத்து இன்ப அதிர்ச்சி தான்..
" நா ஒன்னு கேட்டா என்ன தப்பா புரிஞ்சுக்க மாட்டிங்கள்ள... " சந்தேகமாக சிறிது பயமும் அவளின் குரலில் இருந்தது..
" நாம ரெண்டு பேரும் ஹஸ்பெண்ட அண்டு வைஃப்.. நமக்குள்ள எந்த சந்தேகமும் வரக்கூடாது.. தைரியமா உனக்கு என்ன வேணுமோ அத கேளு.. உனக்கு உரிம இருக்கு.. எக்காரணம் கொண்டும் உன்னோட உரிமைய விட்டுக் குடுத்துடாத.. அது என்னையே விட்டுக்குடுக்குறதுக்கு சமம்.. ம்.. சொல்லு.. என்ன விசயம்.. " நீண்ட அறிவுரை வழங்கினான்..
" அது.. அன்னைக்கு போனோமே.. ஹரிணி வீட்டுக்கு.."
" அதுனால என்ன.. "
" எப்படி நம்ம வீட்டுக்கு மருமகளா வர சம்மதிச்சாங்க ஹரிணி.. நம்ம வீடு அவங்க வீட்ட விட சின்னது தான.. இந்த ஊர்ல இருக்குற வசதி நம்ம ஊர்ல இருக்காதுல்ல.. அப்பறமும் நம்ம ஊர்லேயே.. "
" வீடு பெரிசா இருந்து என்ன பிரயோஜனம் மதி.. நம்ம குடும்பத்துல இருக்குற பாசம் அங்க இல்லையே.. ஹரிணி பணத்துக்கு மயங்குறவ கிடையாது பாசத்துக்கு ஏங்குறவ.. அது நம்ம ஊருல நம்ம குடும்பத்துல அளவுக்கு அதிகமா கிடைக்குது அவளுக்கு.. அத விட பெருசா என்ன வேணும்.. சொல்லு.."
" அவங்க வீட்டுல இருக்குறவங்களப் பாத்தா எனக்கு கொஞ்சம் வித்தியாசமா தெரியுறாங்க.. என்ன மாறி உறவுன்னே தெரியல.. நிஜம்மாவே அந்த பொண்ணு ஹரிணியோட அக்கா தானா.. "
" எனக்கே தெரியாதத கேட்டா.. எப்படி சொல்லுவேன்.. ஓம் , தீப்தி , கதிர் , ராகவ் இவங்க எல்லாம் ஹரிணிக்கு என்ன உறவுன்னே எனக்கு தெரியாது.. எல்லாத்தையும் அவா அண்ணா , அக்கான்னு தா சொல்லுவா.. ஆனா அவங்களுக்கு பாசமெல்லாம் பணத்த பாத்தா தா வரும்.. ராகவ் ஹரிணிய தவிர மத்த மூனு பேருமே பணப் பேய்ங்க.. காசுக்காக எதனாலும் பண்ணுங்க... "
" ம்ச் ஹரிணி பாவம்ல.. "
" ஹரிணி மட்டுமில்ல உன்னோட அத்தானும் பாவம் தா.. "
" எங்கத்தான் எதுக்கு பாவம்.. அவரு எல்லாத்தையும் சமாளிச்சுக்குவாரு.. " தரனைச் சொல்ல .
" வெளங்கீடும்.. நா உனக்கு அத்தான் கிடையாதா.. அவென் ஒருத்தன் மட்டும் தா அத்தானா... " என கடுப்புடன் சொல்ல.. சிரித்தவள்
" அப்படி இல்லங்க.. சரி நீங்க பாவம்னு சொல்லுற அளவுக்கு என்ன நடந்துச்சு... "
" நாளைக்கு ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல ஒரு பார்ட்டி.. ஓம் தா தர்ரான்.. நாம கண்டிப்பா போய்தா ஆகனும்.. "
" அதுக்கு.. " என்றவளிடம் பெரிய கவரைக் கொடுத்தவன்..
" இத நீ போட்டுட்டு வந்தா நல்லா இருக்கும்.. " என வெஸ்டர்ன் டிரஸ் ஒன்றை கையில் குடுத்தான் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு..
பிரித்துப் பார்த்தவள் அதிர்ந்து விட்டாள்.. இளம் சிவப்பு நிறத்தில் உடல் முழுவதும் சின்னச் சின்ன கற்கள் பதித்து இருந்த அது ஸ்லிம் பிட்டாகவும்.. சிங்கிள் லாங் ஸ்லீவ்வாகவும்.. உடலை இறுக்கி அவளின் அழகை மெருகேற்றும் விதமாக இருக்க..
" முடியாது.. என்னால இந்த கரும்மத்தெல்லாம் போட முடியாது.. போங்க அங்கிட்டு.. " என எழுந்து சென்றாள்..
" ஏய்.. மதிம்மா.. மதிம்மா.. " என அவளை சரிக்கட்ட பின்னே சென்றான்.. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று..
ஐந்து நட்சத்திர விடுதி அது.. கௌதம் கடைசியாக செய்து தந்த ப்ராஜெக்ட் அதிக லாபத்தை தந்ததால் ஓம்மால் கொடுக்கப்படும் சக்சஸ் பார்ட்டி மற்றும் அவனின் போர்வெல் பார்ட்டியும் கூட..
சாம்பல் வண்ண டிசைனர் சேலையில் இந்துவும் அதே நிறத்தில் கௌதம் கோர்ட் என தம்பதியர்கள் இருவரும் கை கோர்த்தபடி வந்து இறங்கினர் அந்த விடுதிக்கு..
" நல்லவேளை சீக்கிரமா வந்துட்ட.. எங்க அந்த அறுவைகல ரொம்ப நேரம் நா தாங்கிக்கனும்மோன்னு நினைச்சு பயந்தே போட்டேன் ... " என்றபடி பார்கிங்கிலேயே கௌதமை பார்த்து அவனுடன் சேர்ந்து கொண்டாள் ஹரிணி..
" ஹே.. இந்து யூ லுக் காஜ்ஜியஸ்.. செம்மையா இருக்க.. அழகு.. நீ கூட பாக்க நல்லாத்தாடா இருக்க.. ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மேனஜர் மாறி.. " என இழுக்க கௌதம் முறைத்தான்..
" இந்து கூட இருக்குறதுனால.. நீ அப்படி தெரியலன்னு சொல்ல வந்தேன்.. அதுக்குள்ள மொறைக்க ஆரம்பிச்சிட்ட.. "
" உனக்கு அப்படித்தா தெரியும்.. வா போலாம்.." என ஹரிணியும் கௌதமும் இந்துவின் இரண்டு கரங்களையும் பிடித்துக்கொண்டு சென்றனர்.. இந்து இது போன்ற பார்ட்டிகளில் கலந்து கொண்டது இல்லையே அதனால் தான் அவளை குழந்தையென பாதுகாப்பாய் அழைத்துச் சென்றனர்..
அந்த பார்ட்டி என்னமோ கௌதமிற்காக கொடுக்கப்பட்டு இருந்தாலும் அங்கு பேசு பொருளாக மாறியது ஹரிணியின் திருமணம் தான்..
" வாட்.. சின்ன குக்கிராமத்துலையா நீ இப்ப இருக்க.. "
" ஹஸ்பெண்ட் பாக்க நீக்ரோ மாறி இருப்பானா இல்ல அதவிட கேவலமா இருப்பானா..."
" விவசாயத்துல என்ன பெருசா கெடச்சுடப் போது.. "
" ஐ திங் இவளுக்கு உடம்புல எதோ ப்ராப்ளம் இருக்கும்னு நினைக்குறேன்.. அத மறைக்கத்தா படிக்காத எவனையோ கட்டிக்கிட்டா போல.. "
" யாருக்குத் தெரியும் ஒருவேல இவளே கேரக்டர் சரியில்லாதவளா இருப்பா... அதா பல பேரு இவள பொண்ணு பாத்திட்டு வேண்டாம்னு சொல்லீட்டு போய்டாங்கள்ளா இருக்கும்.. வேற வழியே இல்லாம கைக்கு கெடைச்ச இளிச்சவாயன கட்டிக்கிட்டாளா இருக்கும்.. "
" இந்த கௌதம்கும் அவளுக்கும் இருக்குற ரிலேஷன் ஷிப்பே காரணமா இருக்கலாம் இந்த திடீர் கல்யாணத்துக்கு... "
வந்தவர்கள் ஹரிணியைப் பற்றி வாய்க்கு வந்த படி பேசினர்.. கதிருக்கும், தீப்திக்கும் மட்டற்ற மகிழ்ச்சி.. இப்படி ஒரு நாளை இருவரும் எதிர் பார்த்து கொண்டு தான் இருந்தனர்.. அதை நிறைவேற்றிக் கொள்ளத்தான் இந்த பார்டியை ஏற்பாடே செய்திருந்தனர்..
இந்து தான் கோபமாக இருந்தாள்.. அவளின் ஆசை அத்தானை அல்லவா இவர்களின் பேசு பொருளாக மாறி இருப்பது..
" என்னைய மொறச்சா என்ன அர்த்தம் மதி.. நா போய் ஒவ்வொருத்தன்டையும் போய்.. ' என்னோட பொண்டாட்டியோட அத்தான் நல்லவரு.. வல்லவரு.. நாளும் தெரிஞ்சவரு.. ஏபீசீடி படிச்சவரு.. பாசமானவரு..’ ன்னு சொல்லச் சொல்றியா.. அதுகளோட வாயெல்லாம் அண்டாக்குள்ள கொதிக்குற சுடு சோறு மாறி பக்கத்துல போனாலே மேல தெறிக்குங்க.. அடுப்பு தேவயில்ல கேஸ் தேவையே இல்ல தண்ணி ஊத்துனா கொஞ்ச நேரம் கம்முன்னு இருங்குங்க.. அதுக்கப்புறம் மறுபடியும் விட்ட எடத்துல இருந்து மறுபடியும் கொதிக்க ஆரம்பிச்சுடுங்க.. அதுக திசப் பக்கம் கூட திரும்பிப் பாக்காம இருக்குறது தா நமக்கு சேஃப்.." கௌதம்..
"அந்த ஆதரவில்லாத ஆன்டிங்களுக்கு என்ன வேணுமா கௌதம்.. " ஹரிணி..
" ஹா.. என்னோட ஹஸ்பெண்ட்.. கூட்டிட்டு வாரியா.. " கௌதம்..
" எதுக்காம்.. "
" அவங்க வீட்டுல இன்னும் கல்யாணம் ஆகாம பொண்ணுங்க இருக்காங்கலாம்.. உம் புருஷனுக்கே கட்டி வச்சடலாம்னு கூப்பிடுறாங்க.. " இந்துவை பார்த்துக் கொண்டே..
" எங்கத்தான் ஒன்னும் கிருஷ்ணன் கிடையாது.. அவரு ராமன்.. " இந்து...
" யாரு அவனா.. உங்கத்தான பத்தி இன்னும் உனக்கு சரியா தெரியல... இங்க அவென் இருந்திருந்தா நிலமையே வேற மாறி இருந்திருக்கும்.. " கௌதம்..
"ஓ.. அப்படியா... அவருக்கு ஒரு ஃபோன் போட்டு வரச் சொல்லட்டுமா.. ராமனா கிருஷ்ணனான்னு தெரிஞ்சிடும்... " ஹரிணி எதைப்பற்றியும் கவலைப் படாமல் கூலாகவே இருக்க..
" அவன் என்ன பூதமா மனசுல நெனச்சாலே முன்னாடி வந்து நிக்குறதுக்கு.. இப்ப கூப்பிட்டா கூட தமிழ்நாட்டுல இருந்து பறந்தா வரமுடியும்.. " கௌதம்..
" நடக்குறதெல்லாம் பாத்தா சரியா படல.. எனக்கென்னமோ நா அவமானமா ஃபீல் பண்ணனும்னு தா தீப்தி நைட்டோட நைட்டா இந்த பார்ட்டிய அரேஜ் பண்ணிருக்கனும்னு தோனுது.. பாத்துக்கலாம் எவ்ளோ தூரம் போராளுகன்னு.. இவளுக்காகல்லாம் ரிஷய வரச்சொல்ல முடியுமா என்ன.. அவரு வாராம இருக்குறது நல்லது தா.. இவா ரிஷய பாக்காம இருப்பா.. " என்றவள் அதிர்ந்து எழுந்து நின்றாள்..
' எந்திருச்சு நின்னு வரவேற்குற அளவுக்கு யாருடா அது நமக்கு தெரியாத பெரிய ஆளு.. ' என்று நினைத்தவனும் வாயிலை பார்த்து அதிர்ந்தான்..
இந்து சந்தோஷமாக சென்று அணைத்துக் கொண்டாள் வந்தவனை..
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..