அத்தியாயம்: 42
வந்திருந்த விருந்தினர்களின் கவனத்தை ஒருங்கே தன்பக்கம் ஈர்க்கும் வண்ணம் அந்த ஹாலில் பிரவேசித்தான்..
ரிஷிதரன்.....
சிங்கங்கள்
தன்னை காட்டின் ராஜாவாக
பிரகடனம் செய்ததில்லை...
தனது இயல்பில்
தனது வலிமையில்
தனது கம்பீரத்தில்
தான் யார் என இந்த உலகிற்கு காட்டுகிறது..
அவ்வாறு தான் நடையில் கம்பீரம் உடம்பில் திமிர் முகத்தில் அலட்சியம் என கருப்பு நிற கோர்ட் சூட்டில் வந்திருந்தான் ரிஷி..
" ஹரிணி.. " கௌதம் அவளை உசுப்ப..
" ஹாங்.. " என திருட்டு முழி முழித்தாள் அவள்..
" ஹரிணி.. ஏய்.. போய் அவன வெல்கம் பண்ணி இன்ட்ரோ குடு எல்லாருக்கும்... "
" நானா.. "
" பின்ன நானா.. நீ தான அவனோட பொண்டாட்டி.. போ.. " என விரட்டினான்..
இதயம் படபடக்க அவனின் அருகில் சென்றவளை சின்னச் சிரிப்புடன் அவளின் இடையில் கை வைத்து அணைத்தபடியே நடந்தான் தரன்.. அருகில் இந்து பேசிக் கொண்டே வர.. அவள் பேசிய எதுவும் ஹரிணியின் காதில் விழவில்லை.. முதல் முதலில் அவனை கோர்ட் சூட்டில் பார்க்கிறாள் ஹரிணி.. அவனின் நிறத்திற்கு அது வெகு அழகாய் பொருந்தி இருந்தது.. அவனின் வசீகரத்தின் மயக்கம் தான் அவளிடத்தில்...
டீஜே இருவரின் மீது விளக்கை ஒளிர விட்டு பார்ட்டியின் மைய்ய இடத்திற்கு அழுத்து வந்து மைக்கை தர ஹரிணி வாங்கிக் கொண்டாள்..
"ஹாய் எவ்ரிபடி.. ஹீ இஸ் ரிஷி தரன்.. மை ஹஸ்பெண்ட்.. அண்டு ஹீ இஸ் எ ஃபார்மர்.. " என்ற போது சிலர் சலசலத்தனர்..
மைக்கை கையில் வாங்கியவன் ஒரிரு வார்த்தைகள் ஆங்கிலத்தில் பேச சலசலப்பு சத்தம் நின்றது.. அவனின் ஆங்கில உச்சரிப்பு மிகத் தெளிவாக இருந்தது.. அனைவரையும் கவரும் படியும் இருந்தது அவனின் ஆளுமை நிறைந்த பேச்சு..
பின் மியூசிக் ப்ளே செய்யப்பட எழுந்து நடனம் ஆடினர் சிலர்.. கௌதம் இந்துவுடன் நடனமாட எழுந்தான்.. ரிஷியும் ஹரிணியும் அதில் சேர்ந்து கொண்டனர்.. எதோ தேவலோகத்தில் இருப்பது போல் இருந்தது அவளுக்கு...
" ஹே.. கிட்.. என்ன எதிர்பாக்கலைல.. இட் வாஸ் சர்ப்ரைஸிங் ஃபார் யூ.. " என நடனமாடிய படியே பேசினான் அவளுடன்..
அவன் அவளை சுழற்றி விட மார்பில் மோதி நின்றவள்.. " ஸாரி நா.. நம்ம மேரேஜ் பத்தி இங்க இப்பதா சொல்றேன்.. " தயக்கமாக..
" ஓஹோ... "
" ஹாங்.. நா உங்க கிட்ட ஃபோன்லயாது பேசியிருக்கனும்.. நியர்லி ஒன் மன்த் ஆச்சி நா இங்க வந்து.. ஸாரி.. "
" ம்.. அப்றம்.. " எதோ கதை கேட்பவன் போல கூற.. அவள் கடுப்பானாள்..
" நா என்ன சொல்லிட்டு இருக்கேன்.. நீங்க என்னடான்னா இன்டர்வியூ அட்டென் பண்றவன் மாறி ஒன்னு ரெண்டு வார்த்தைல மட்டும் பேசிட்டு இருக்குறிங்க.. "
" நா எப்படி ரியாக்ட் பண்ணனும்னு எதிர்பாக்குற .. " அவளுடன் நடமாடியவாறே.
தெரியவில்லையே.. அவன் கேட்டதுக்கு என்ன பதில் சொல்வது என யோசிக்க.. " ஹலோ.. கிட்.. என்ன நின்னுகிட்டே தூங்கிட்டியா... " என கேலி செய்தான் தொடர்ந்து இசைக்கு ஏற்றவாறு அவளை ஆட வைத்தான்..
“போதுங்க.. என்னால முடியல.. நாம வீட்டுக்கு போலாமா.. “ என்ற இந்துவை பார்ட்டி ஹாலில் இருந்து வெளியே அழைத்துக் கொண்டு நடக்க.. இந்துவின் நடையில் தடுமாற்றம் ஏற்பட்டது.. ரிஷி உடனே இந்துவின் அருகில் சென்றான்.. கௌதம் அவளுக்கு தண்ணிர் கொடுக்க.. அதை குடித்தவள் தலை சுற்றுவதாக கூறினாள்..
" ஹாட் டிரிங் எதையும் மாத்தி குடிச்சுட்டாளா.. " ஹரிணி..
" இல்ல.. நா அவா கூடவே தா இருந்தேன்.. ஒருவேள இங்க இருக்குற அட்மாஸ்ஃபியர் பிடிக்கலையோ என்னமோ.. போலாம்னு சொன்னா.." கௌதம்.
" உடனே கிளம்புங்க.. பக்கத்துல எதாவது டாக்டர்கிட்ட காட்டிட்டு வீட்டுக்கு கூட்டிட்டு போ..." ரிஷி கௌதமிடம்..
" ம்.. சரி.." என இந்துவை கைத்தாங்கலாக அணைத்தபடி நடந்தான் கௌதம்..
" கார் கீ தா.. நா பார்கிங்ல இருந்து எடுத்துட்டு வர்றேன்.." என ஹரிணி சென்றாள்..
ரிஷிக்கு இந்துவிற்கு ஏன் தலைசுற்றல் வந்தது என புரிய.. அவளின் தலையை வருடி.." கவனமா இரு இந்து.." என்றவன் கௌதமிடம் " பாத்து ட்ரைவ் பண்ணு.. டாக்டர்ட்ட மறக்காம கூட்டிட்டு போ.. அவா வேண்டாம்னு தா சொல்வா.. அதுக்காக கூட்டிட்டு போகாம இருக்காத.. " என அறிவுரை சொல்ல..
" எம் பொண்டாட்டிய பாத்துக்க எனக்கு தெரியும்.." என்றான் கௌதம்..
பின் "நீ எங்க தங்கப் போற.. ஹோட்டல்லையா இல்ல ஹரிணி வீட்டுலையா.." என ரிஷியிடம் கேட்க..
" அது உனக்கெதுக்கு.."
" நீ எங்கனாலும் தங்கிக்க எனக்கென்ன.. ஹரிணிய மட்டும் பத்திரமா வீட்டுல விட்டுடு.. "
" கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னியே அதே தா உனக்கும்.. எம் பொண்டாட்டிய பாத்துக்க தெரியும்.. மூடிட்டு போ.. " திமிராக .
ஹரிணி வரவும் கௌதம் தம்பதியர் கிளம்பிச் சென்றனர்..
இருவரும் உள்ளே வர தீப்தி ஓடி வந்து அணைத்துக் கொண்டாள் ரிஷி தரனை..
" ரிஷி...ரிஷி... ரிஷி.... " என இறுக்கி அணைத்தவளை தரன் விலக்கி வைக்கவில்லை என்பது ஹரிணிக்கு அதிர்ச்சியாக இருந்தது..
" லாங் டைம் மேன் உன்னப்பாத்து.. எங்கிட்ட இருந்து தப்பிச்சுடலாம்னு பாத்தியா.. " என அவனின் மார்பில் செல்லமாக குத்தினாள் தீப்தி..
" அப்றம் லைஃப்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு.. நா உன்ன எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா... ஏன்டா என்ன இப்படி தவிக்க விட்ட.. " தீப்தி சிணுங்களாக சொல்ல..
சிரித்துக் கொண்டே " ஆல் ஆர் ஃபைன்... " என அவளுடன் பேசிக்கொண்டே உள்ளே சென்றான் தரன்..
'என்னடா நடக்குது இங்க... இவங்களுக்குள்ள ஏற்கனமே பழக்கம் இருக்கும் போல.. இவளுக்கு சிரிச்சு கூட பேசத் தெரியுமா.. ப்பா.. வாயெல்லாம் பல்லு பயமா இருக்கு டா சாமி.. ' என டேபிளில் அமர்ந்தாள் தனியாக.. தூரத்தில் இருவரும் பேசி சிரிப்பது தெரிந்தது.. அவர்களின் பழக்கத்தை வேறு மாறி சிந்திக்க அவளுக்கு தோன்றவில்லை..
ஃபோனில் மூழ்கி இருத்தவளின் அருகில் ஆள் அமரும் ஆரவாரம் தெரிய தரன் என நிமிர்ந்தவள் ' ச்ச இவளா.. ' என மீண்டும் ஃபோனில் முகம் புதைத்தாள்..
அங்கு ரிஷியுடன் கதிரவன் மற்றும் ஓம்காரும் பேசிக்கொண்டு இருந்தனர்..
" ஹலோ.. ஐ ஆம் ஓம்.. நைஸ் டூ மீட்டிங் யூ யங் மேன்.." என ஓம் கை நீட்ட.. தரன் தன் பாக்கெட்டுக்குள் கை விட்டு ' நீ எவனா இருந்தா எனக்கென்ன.. நீ நீட்டுனா நானும் நீட்டனுமா... போடா..' என்பது போல் அவனுடன் கை குலுக்குவதை தவிர்த்தான் ரிஷி..
" ஏய்.. அவரு யாருன்னு தெரியுமா உனக்கு.. " கதிர் பற்களை கடித்துக் கொண்டு கேட்க..
" எதிர்லேயே நிக்குறான் தெரியாதா என்ன.. " தரன் ஒருமையில் நக்கலாக..
" ஹேய்.. உன்னோட தகுதிக்கு மீறி நடந்துக்குற.. ஒரு நிமிசம் போதும் உன்ன இந்த உலகத்துலேயே இல்லாம பண்ணிடுவாரு.. மரியாதையா ஸாரி கேட்டு அவருக்கு கீழ அடக்கமா நடந்துக்க.. அது தா உனக்கு நல்லது.. "
" என்னோட தகுதி என்னன்னு நான் தான்டா முடிவு பண்ணனும்.. உன்ன மாறி ஜால்ராக்கல் இல்ல.. என்ன சொன்ன மரியாதையா நடந்துக்கனுமா.. மரியாத என்ன கோயில் பிரசாதமா.. இப்படி கேட்டு வாங்கிற.. எனக்கும் குடு எங்கண்ணனுக்கும் சேத்து குடுன்னு.. அது தானா வரனும்.. " என்று கதிரிடம் சொன்னவன் ஓம்மின் முகத்திற்கு அருகில் சென்று..
" எனக்கு உன்ன மாறி பொறம்போக்குக்கு மரியாத குடுத்து பழக்கமில்ல.. " நிதானமாக ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தி கூறினான் தரன்..
" டேய்.. " கதிரவன் பொங்க .
" ஏய்.. நீ என்ன டப்பிங் ஆர்டிஸ்ட்டா.. அவனோட டைலாக் எல்லாத்தையும் நீயே பேசுறியே அதா கேட்டேன்.. நல்லா தட்டுற ஜால்ரா வ.. ஸார் பேச மாட்டாரா.. ஸார் மௌன விரதமா.. இல்ல ஊமையா.. " என நக்கலாக ஓமை பார்த்து கேட்க..
கதிரவன் எதோ சொல்ல வர அவனை கையசைத்து தடுத்த ஓம்.. " சோ.. நீ ப்ளான் பண்ணித்தா என்னோட சிஸ்டர கல்யாணம் பண்ணிருக்க.. அதா இவ்ளோ திமிரா பேசுற.. என்ன வேணும் உனக்கு... " ஓம்..
" ப்பா.. ஆளப் பாக்குறப்ப வாய்ஸ் கரண்ட்ல அடிபட்ட காக்கா மாறி இருக்கும்னு நெனைச்சேன்... பரவாயில்ல கைதி படத்துல வர்ர அர்ஜூன் தாஸ் மாறி கரகரன்னு நல்லாத்தா இருக்கு.. " கேலியாக..
" என்ன வேணும்னு தான கேட்ட.. எனக்கு ஒரு பழக்கம் இருக்கு என்னன்னா எனக்கு ஒன்னு வேணும்னா அத நானே எடுத்துக்கிவேன்.. அத எப்படி அடையனும்னு எனக்கு நல்லாவே தெரியும்.. மத்தவங்கட்ட இருந்த பிச்சையால்லாம் வாங்கிக்க மாட்டேன்.. பிச்ச போடுறவனுக்கும் தகுதி வேணும்ல.." தரன் திமிரோடு..
" ஹிம்.. இந்தியால்ல என்னோட ஸ்டேட்டஸ் என்னனு தெரியுமா உனக்கு.. எதோ ஒரு மூளைல கடப்பாரைய தூக்கி கிட்டு களத்துல வேல பாக்குற உனக்கெப்படி தெரியும் அது.. " அலட்சியமாக..
"ஸ்டேட்டஸ்.. ஸ்டே...ட்......ட்டஸ்.. உனக்கு இருக்குற அத தரமட்டம் ஆக்கத்தான்டா வந்திருக்கேன்.. நீ செஞ்ச செஞ்சுக்கிட்டு இருக்குற எல்லா பாவத்துக்கும் தண்டனையா.. நீ வாழவும் முடியாம சாகவும் முடியாம.. உன்ன என்ன பண்ணப்போறேன்னு பொருத்திருந்து பாரு.. " தரன் கர்ஜித்தான் மெல்லிய குரலில்..
" நீ யாரு.. எதுக்கு ஹரிணிய கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு அவளுக்கு தெரிஞ்சா உன்னோட நிலம என்ன ஆகும்னு தெரியுமா உனக்கு.. எந் தங்கச்சி அந்த முட்டாள் கௌதம் பேச்ச கேட்டு உன்ன கல்யாணம் பண்ணியிருப்பா.. உண்ம தெரிஞ்சா திரும்பி எங்கிட்ட வந்து தா ஆகனும்... அவா கையாலையே உன்ன ஜெயில்ல தள்ளுறேன் டா... " ஓம் .
" என்னோட பொண்டாட்டிய சமாளிக்க எனக்கு தெரியும்.. அப்பறம் நீ கட்டி வச்சிருக்குற இந்த ஸ்டேட்டஸ் கிற கோட்டைய அழிக்க போறதே அவா தா.. அவா பண்ணுவா.. இல்லைன்னா பண்ண வப்பேன்... ஓகே.. பாய்.. என்னோட வைஃப் எனக்காக வெய்டிங்.. ஜால்ரா வரட்டா.. " என்றவனின் திமிரை அடக்க காத்துக் கொண்டு இருந்தனர் ஓம்மும் , கதிரும்..
முழுதாக ஐந்து நிமிடம் முடிந்து விட்டது.. அவள் அருகில் அமர்ந்து.. இருந்தும் தன்னை கண்டு கொள்ளாமல் இருக்கும் ஹரிணியை பார்க்க பார்க்க ஆத்திரமாக இருந்தது தீப்திக்கு.. ஹரிணியின் கவனத்தை தன் பக்கம் திருப்ப நினைத்தவள்..
" வெய்ட்டர்.. ஒன் ஃபுல் ஒயின்.. " என்றாள்.. ஹரிணி நிமிரவில்ல..
" இன்னைக்கு நா ரொம்ப ஹப்பியா இருக்கேன்.. அத உங்கூட ஷேர் பண்ணிக்க விரும்புறேன்.. டேக் இட்.. " என ஒயினை க்ளாஸில் ஊற்றினாள் தீப்தி..
ஹரிணி சியர்ஸ் என்றுவிட்டு கிளாஸை தொடாமல் ஃபோனிலேயே இருந்தாள்..
" ஏன்னு கேக்க மாட்டியா.. "
' கேக்கலைன்னா சொல்லாம எந்திரிச்சி போய்டுவியா.. எரும.. ' ஹரிணியின் மைண்ட் வாய்ஸ்..
"நீ கேக்கலைன்னாலும் நா சொல்லுவேன்.. ரிஷியும் நானும் லவ்வர்.. "
நிமிர்ந்து தீப்தியை பார்த்து விட்டு மீண்டும் கவிழ்ந்து கொண்டாள் ஹரிணி..
" நீ நம்பலைன்னு தெரியுது.. நானும் அவனும் ஒரே யுனிவர்சிட்டில தா படிச்சேன்... ரிஷியோட க்ளாஸ் மெட் தா நா.. ஷீ... " என சில ஃபோட்டோஸ்களை தன் மொபைலில் காட்டினாள்..
ஃபோட்டோஸ் கிராபிக்ஸ் செய்யப்படவில்லை என்பதை அது எடுக்கப்பட்ட தேதியே சொல்லியது.. சுமார் எட்டு வருடம் இருக்கும் அது எடுக்கப்பட்டு.. ஒவ்வொரு ஃபோட்டோவிலும் இருவரும் நெருக்கமாக இருந்தனர்.. சிலதில் கட்டிப்பிடித்தும்.. சிலதில் கன்னத்தோடு கன்னம் உரசியும்.. ஏன் இருவரும் முத்தமிட்டுக் கொள்வது போன்றும் இருந்தது..
ஹரிணி முகத்தில் எந்த ஒரு சலனமும் ஏற்பட வில்லை.. அது தீப்தியை கோபமோற்றியது..
" இதப் பாரேன்.. நாங்க ஃபைனல் இயர் படிக்கும் போது.. ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டப்ப எடுத்தது.. " என சேலையில் தீப்தியும் பட்டு வேட்டியில் ரிஷியும் கையில் மாலையுடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை காட்டினாள்..
தீப்தி சாதித்துவிட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.. ஹரிணியின் முகத்தில் கலக்கம் பிறந்தது..
" அவனுக்கு ஆர்மில ஜாயின் பண்ணனும்னு ஏம்.. அதுக்கப்புறம் மேரேஜ்ஜப் பத்தி வெளில சொல்லலாம்னு இருந்தோம்.. பட் அவனோட அப்பாக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு... கஷ்டப்படுத்த கூடாதுன்னு நா ரிஷிய டிஸ்டப் பண்ணல.. ஒன் இயர்க்கு அப்றம் நா சென்னைல ரிஷியப் பாக்க வந்தேன்.. ரிஷி அங்க இல்ல எங்க போய்டான்னு தெரியல... நா தேடாத இடமே இல்ல.. வெளில யார்கிட்டையும் சொல்ல முடியாம ரிஷிய மறக்கவும் முடியாம ரொம்ப கஷ்டப்பட்டேன்.." முகத்தில் அப்படி ஒரு சோகம்.. ஹரிணி ஒயின் பாட்டிலை வெறித்துப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்..
" உனக்குத்தா நா தேங்கஸ் சொல்லனும்.. நீ இல்லைன்னா நா இன்னைக்கு ரிஷிய பாத்திருக்கவே மாட்டேன்.. ரிஷிட்ட எங்க மேரேஜ் பத்தி கேட்டேன்.. இன்னும் ஒரு செவன் மன்த் ல உன்ன டைவஸ் பண்ணிடுறதா சொன்னான்.. எதோ கட்டாயத்துனால தா உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டதா சொன்னான்.. இன்னும் அவென் என்ன மறக்கல... அதுவே எனக்கு போதும்.. " குதுகலத்துடன் குடும்பத்தில் குண்டு வைத்துச் சென்றாள்..
கலக்கத்துடன் இருந்தாலும் மன உறுதியுடன் இருந்தாள் ஹரிணி.. எவ்வளவு முயன்றும் தரனின் மீது சந்தேகம் மட்டும் வரவில்லை ஹரிணிக்கு அதனால் வந்த மன உறுதி.. தீப்தி அடுத்து கூறிய வார்த்தைகள் ஹரிணியின் மன உறுதியை உடைத்து அவளை நிலை குலைய செய்தது..
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..