முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 43


 

அத்தியாயம்: 43


தொண்டையும் வயிறும் எரிந்தது.. ஆனாலும் ஹரிணி குடிப்பதை நிறுத்தவில்லை..‌ தீப்தி சொன்ன வார்த்தை இதயத்தை வாள் கொண்டு அறுத்திருந்தது.. ஏற்பட்ட காயத்தை சரி செய்யும் வழி தெரியவில்லை அவளுக்கு.. 


" நீ வேணும்னா உன்னோட அம்மா மாறியே இருக்கலாம்.. அடுத்தவா புருஷன அபகரிக்குறதுல.. நா என்னோட அம்மா மாறி கிடையாது.. கட்டிக்கிட்டினவன இன்னொருத்திக்கு விட்டுக் குடுக்க.. புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன்.. " கூறி சென்றாள் தீப்தி..


அவள் சொன்ன வார்த்தையை மறக்க நினைத்தாள்.. தன்னையே மறக்க நினைத்தவள் மதுவின் உதவியை நாட.. உள்ளே சென்ற  ஒயின் நன்றாக வேலை செய்தது..


பார்கிங்கில் இருந்து காரை எடுத்து வளைத்து நெளிந்து ஓட்டயவளின் காரின் முன்னே சென்று வழி மறைத்தான் தரன்.. 


" ஹே.. ஃபூல்.. தற்கொல பண்ணிக்குறதா இருந்தா பில்டிங்ல இருந்து குதிக்க வேண்டியது தான.. ஏ மேன் என்னோட வண்டில் வந்து விழுற.. நல்ல வேல குட்ஸ் டரெயினுங்கிறதுனால  ஈசியா நா பிரேக் போட்டேன்...‌ இல்லைன்னா என்ன ஆகிருக்கும்.." ஹரிணி போதையில் தெளிவில்லாமல் வந்தது அவளின் குரல்.. 


" குட்ஸ் வண்டியா.. குப்ப வண்டின்னு  சொல்லாமப் போனா..‌" என நினைத்தவன் அருகில் வந்து..


 " இறங்கு கீழ.. " 


" வெய்.. ஆட்டையப் போடப்போறியா.. இந்தா கீ வச்சுக்கோ.. என்ன வீட்டுல ட்ராப் பண்ணிட்டு நீ எடுத்துட்டு போ.. ம்.. " என சாவியை நீட்ட வாங்கியவன் அவளை பின் இருக்கையில் தள்ளினான்... 


" ஹேய்.. உனக்கு வண்டி ஓட்ட தெரியாதுல்ல.. இரு.. நா ஓட்டுறேன்.. " என ஸ்டேரிங்கை பின்னால் இருந்தபடியே அசைத்தாள்.. 


" ப்பாம்பாம்.. ஜஸ் வண்டி வருது.. ப்பாம்பாம்.. " என ஹரிணி ரகளை செய்ய..


" ஒழுங்கா பின்னாடி  உட்காந்திரு... நானே ஓட்டுறேன்.. " 


" நா ஓட்ட கூடாதா அப்ப.. ம்ச்.. எனக்கு ஓட்ட தெரியலைல.. ம்ச்.. எனக்கு கவலையா இருக்கு.. ஆ....ஆ..ஆ..." என‌ கை கால்களை அசைத்து அழ ஆரம்பித்தாள் குழந்தைபோல்..


" நீ நல்லாத்தா ஓட்டுற.. பாரேன் ட்ரிங்ஸ் பண்ணிட்டு டிரைவ் பண்ணக்கூடாதுன்னு.. டாக்டர் அம்பேத்கர் சட்டம் போட்டுட்டாரு.. என்ன பண்ண.. " என்றவன் காரை ஓட்டத் தொடங்கினான்..


" ட்ரிங்ஸ்  டிரைவ் டாக்டர்.. வாவ்..‌ நீர் தமிழ் புலவரா.. எதுகை மோனையில்  பேசுரீர்.. " .


" நீ எப்படின்னாலும் நெனச்சுக்க... " 


" புலவரே.. நான்.. தங்களை வர்ணித்து ஒரு பாடல் பாடவா... அனுமதி வேண்டுகிறேன் புலவரே.. " 


தலையில் அடித்துக் கொண்டவன் " பாடும்.. பாடித்தொலையும்.. " .


" ம்க்கிம்.. ஏக்கு ..தோ.. தீஈஈஈன்.. சப்பாங்க தேஷா.. சாரா.. அடுத்து என்ன வரும்.. ஐய்யையோ  நா தப்பு பண்ணிட்டேன்.. தப்பு பண்ணிட்டேன்...‌ மன்னியுங்கள் புலவரே... அறியாமல் நடந்த பிழை அது.. " 


"என்ன பிழை... " 


" தாம் தமிழ் புலவர்.. தங்களிடத்தில் நான் ஆங்கில பாடல் பாடி விட்டேன்.. தமிழ் அறிந்த புலவருக்கு கோபம் அதிகமாக வரும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.. நெற்றிக்கண் திறந்து என்னை எரித்து விட்டுவீரோ.. எனக்கு சாபம் கொடுத்து விடாதீர்கள் புலவரே.. நல்ல ஔவையின் பாடல்களை கற்று வந்து தங்களிடம் பாடுகிறேன்.. சிறிது கால அவகாசம் வேண்டும்.. புலவரே அருள் புரியுங்கள்.. " பவ்யமாக.


" சரி... " 


" பிடித்து விட்டேன் பிடித்து விட்டேன்...... ஔவையின் பாடல் ஒன்றை நா கண்டு பிடித்துவிட்டேன்.. " 


" ஔவையார் தொலைச்சுட்டாரா என்ன.. நீ கண்டு பிடிக்குறதுக்கு.." 


" ஹாங்.. ஒன்றானவன்.. உருவில் இரண்டானவன்.. மூன்றா....னவன்... " என கத்த.. 


" போதும்.. போதும்.." என அலறினான் தரன்..


" நான் பாடியது பிடிக்க்க்கவில்லையா..." 


பதில் கூறாது ஓட்டியவன்‌ காரை அவளின் வீட்டின் முன் நிறுத்தினான்‌.. 


" இறங்கு கீழ.. " 


' ஓ... வந்துட்டோமா.. எங்க வந்திருக்கோம்..' என பார்த்தவள் ஓடிச் சென்று தரனின் கைகளைப் பிடித்துக்கொண்டு..


 " புலவரே புலவரே நான் பாடிய பாடல் பிடிக்கவில்லை எனில் வேறு ஒன்றை பாடுக்கிறேன்... தவறாக பாடியதற்காக என்னை இந்த சிறைச்சாலையில் அடைத்து விடாதீர்... இங்கு உணவு மிக மோசமாக இருக்குமாம்... நான்‌ சாப்பிடாமல் மெலிந்து விடுவேன்.. பாவமில்லை யா நான்.. வேண்டாம் சென்று விடுவோம் நல்ல உணவு கிடைக்கும் சிறையாய் பார்த்து என்னை அடையுங்கள்.. வாருங்கள்.. வாருங்கள்... " என கையை பிடித்து இழுத்தாள்..


'இவள...' என சலித்துக் கொண்டவன் 

" இளவரசியே தவறாக எண்ணி விட்டீர்... இது தங்களின் அரண்மனை.. வாருங்கள் தங்களுக்காக மஞ்சம் தயாராக உள்ளது.. " அவளைப் போலவே பேச..


" மஞ்சம்.. மஞ்சம்.‌.. மஞ்சம்... அப்படின்னா என்னாப்பா... " .


" ஹாங்.. காட்டுகிறேன் வாருங்கள்.. " என அழைக்க அவள் அவனுடன் நடக்கமுடியாமல் தடுமாறினாள்.. கைத்தாங்கலாக தோலில் கை போட்டு அழைத்துச் சென்றான்..


" அரண்மனைய.... பெரீ.......ய பரங்கி மல மேல கட்டீட்டாய்ங்க போல.. என்னால ஏறவே முடியல.." என படிக்கட்டில் அமர்ந்து கொண்டாள்..


" இளவரசி எழுந்திரியுங்கள்.. நாம் செல்லவேண்டும்.. ம்..." என எழுப்ப முயன்றான்.. 


" இயலாது.. என்னால் ஒரு காலை கூட எடுத்து வைக்க முடியாது‌.. வேண்டுமெனில் ஒரு விமானம் ஏற்பாடு செய்து என்னை என்னை பறக்க்க்கவை.. "  என்றவளை தன் கையில் அள்ளிக்கொண்டான்... 


கையில் மிதக்கும் கனவா நீ...

கை கால் முளைத்த காற்றா நீ

கையில் ஏந்தியும் கனக்கவில்லையே...

நுரையால் செய்த சிலையா நீ...


என பாடுவான் என்று நினைத்தால் அது தவறு.. " ப்பா.. பாக்க கத்தரிக்கா மாறி இருந்தாலும் ஆளு பூசணிக்காய் தா.. என்ன கணம்.. " தரனின் மைண்ட் வாய்ஸ்..


கை கால்களை அசைத்து நீந்துவது போல் பாவனை செய்தவள்.." கங்கை நதி ஓரம்... ராமன் நடந்தான்..‌

கண்ணின் மணி சீதை.. தானும் தொடர்ந்தாள்.. மெல்ல நடந்தாள்.. " பாட..


" என்ன பாட்டு இது..  பழைய பாட்டா இருக்கே.. " தரன்..


"என்ன சொன்னீர்கள் புலவரே.. "


" ஹ.. கங்கை நதில ரொம்ப ஓரத்துக்கு போகாதன்னு சொன்னேன்..." 


"ஓகே நா நடுவுல நடக்குறேன்.. " என்றவளை கட்டிலில் கிட்டத்தட்ட தூக்கி எறிந்தான்.. 


" அப்பாடா... ஒருவழியா கொண்டு வந்து சேத்துட்டேன்.. உப்.. முடியல.. பத்து அடி தூரங்கூட இவள தூக்கிட்டு நடக்க முடியல.. பம்கின்.. ஹப்பா.." என பெருமூச்சு விட்டான்.. 


கட்டிலில் உருண்டு கொண்டு இருந்தவள் எழுந்து தரனின் அருகில் வந்து நின்றாள் "நா பம்கின்னு சொன்னத கேட்டுட்டாளோ.. "  என நினைத்தான்.. 


'உவ்வா.... உவ்வ .... ' வயிற்றில் இருந்த அனைத்தையும் அவன் மேல் வாந்தி எடுத்தாள்...


" நா என்ன வாஷ் ஃபோஷனா இவளுக்கு.. ஆனா ரொம்ப உசாரு... தா மேல படாம அடுத்தவன் மேல் படுற மாறி எடுத்திருக்கா.. விவரம் தா.. " என்றவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்தான்.. 


கட்டிலில் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தாள் ஹரிணி.. இவ்வளவு நேரம் தன்னை படுத்தி எடுத்தவள் இவளா என்றிருந்தது தரனுக்கு.. 


குழந்தைமுகம் ரசிக்கத் தோன்றியது என்றாள் அவளின் இளமை ருசிக்க தோன்றியது.. தலைமுதல் கால் வரை அணு அணுவாக ரசித்தவனின் உணர்ச்சிகளும் உணர்வுகளும் அவளால் மட்டுமே தூண்டிவிடப் பட்டது...‌


முழுதாய் அனுபவிக்க நினைத்து நெருங்கியவன் அவளின் பிறை நெற்றியில் முத்தமிட்டு விலகினான்.. அதுவே அவனுக்கு போதுமானதாய் இருந்தது...


'போதையில் தன்னை மறந்து  சுயநினைவில்லாமல் இருக்கும் பெண்ணை ரசிப்பது தவறு இதில் உறவு வேறா... நோ.. பொண்டாட்டிதான நமக்கு லைசென்ஸ் இருக்கு.. சோ.. ரசிக்கமட்டும் செய்வோம்.. ' என நினைத்தவன் உறங்காமல் விடியும் வரை அருகில் படுத்து ரசித்தான்.. எப்போது தூங்கினான் என அவனுக்கே தெரியாது... 


காலை  


காற்றில் பறக்கும் பட்டம் போல் மிதந்து கொண்டிருந்த உடலை நெளிந்து சோம்பல் முறிக்க நினைத்தவளை யாரோ கட்டிப்போட்டு வைத்திருந்தனர்.. கரங்களால்.. 


தரனின் அணைப்பில் இருந்து விலகியவளுக்கு நேற்று என்ன நடந்தது என்றே புரியவில்லை.. எழுந்து அமர்ந்தவள் என்ன முயன்றும் நினைவில் வரவில்லை...


" ஹேய்.. எந்திரிச்சுட்டியா.. போய் குளிச்சுட்டு வா.. இந்துவ பாக்க போனும் .. " என தூக்க கலக்கத்தில் எதோ சொன்னவனை பார்த்தவள் திகிலடைந்தாள்..


"இவரு எப்படி ரூம்ல.. ஐய்யையோ என்னதிது.. " என தன்னை ஆராய நைட் ட்ரெஸ்ஸில் இருந்தாள்.. பார்ட்டிக்கு தான் உடுத்திச் சென்றிருந்த உடை அறையில் அங்கும் இங்கும் இறைந்து கிடந்தது.. அவளுக்கு எப்படி தெரியும் வீட்டில் வேலை பார்க்கும் அன்னம்மாவை அழைத்து அவளின் உடையை மாற்றச் சொன்னது.. தவறாக நினைத்துக் கொண்டாள்..


அசையாது இருந்தவளின் தோலை பிடித்து எழுந்தவன்.. " என்னாச்சு.. " என தரன் உலுக்க.. தோலில் இருந்த பிடி நலுவி அவளின் சட்டையை பிடித்து இழுத்தால், சட்டையின் முதல் இரண்டு பட்டன் தெறித்து விழுந்தது.. 


" சீ.. " என அறுவருப்புடன் அவனை உதறிவிட்டு நிற்க தரன் அதிர்ந்து போனான்..


அவள் தன்னை தவறாக‌ நினைத்து விட்டால் என்பதை அறிந்து கவலை கொண்டான் என்றால் அவளின் அறுவருத்த பார்வை ஆடவனை கோபமேற்றியது.. 


" நீ எல்லாம் ஆம்பளையா.. ச்சே.. நா உன்ன கண்ணியமானவன்னு நெனைச்சேன்.. ஆனா இப்படி ஒரு பொறுக்கியா இருப்பன்னு தெரிஞ்சிருந்தா உன்ன.. ச்ச.. சுயநினைவே இல்லாத பொண்ணோட சூழ்நிலைய உனக்கு சாதகமான யூஸ் பண்ணிக்கிட்டேல்ல... " என வாய்க்கு வந்ததை பேசினாள்.. அதன் அர்த்தம் கூட யோசிக்காமல்.. 


கோபம் இருந்தாலும் அவள் எதுவரை செல்கிறாள் என்பதை அறிய தரன் அவளை பேச விட்டு அமைதியாகவே இருந்தான்.. வெடிக்க தயாராக இருக்கும் உலைக்களம் போல்.. கடைசியாக அவள் சொன்ன வார்த்தை நெருப்பை அதிகமாக்கி விரைவில் வெடிக்கச் செய்தது.. 


" அப்படி உனக்கு ஒரு பொண்ணோட உடம்பு தா வேணும்னா.. இங்க விபச்சார விடுதி நெறையவே இருக்கு.. அங்க போக வேண்டிதான.. உன்ன மாறி ஆளுக்காகத் தா அவுங்க இருக்காங்களே.. காசு குடுத்தா போது.. ச்ச.. " என வேதனையோடு கூறியவள் பாத் ரூம் சென்று கதவை பூட்டிக் கொண்டாள்.. 


கதவில் சாய்ந்தவளால் நம்பத்தான் முடியவில்லை.. தரன்னா இது என்று.. ஷவரில் தண்ணீரை திறந்தவள் மனம் குளிரும் வரை நின்றாள்.. உடை கலைந்து தன்னை ஆராய்ந்தவளுக்கு  உண்மை புரிந்தது.. " அய்யையோ.. தப்பா நினைச்சுட்டோம்மே.. இப்ப என்ன பண்ண.. ஓகே.. ஃபஸ்ட் அவன்ட்ட போய் ஒரு ஸாரி கேட்போம்.. அப்றம் அவென் ரியாக்ட் பண்றத வச்சு எப்படியாது சமாதானப் படுத்திடனும்.. தப்பு எம்மேல தா.. சோ.. கொஞ்சம் பொறுமையா போனும்.. ஓகே.. பீ ரெடி.." என தனக்கு தானே கூறிக்கொண்டு வெளியே வந்தாள்.. 


இரண்டு பாக்கெட் சிகிரெட் காலியாகி இருந்தது..‌ சோஃபாவில் அமர்ந்து அவளையை கண் சிமிட்டாது பார்த்தவனின் பார்வை அவளை அச்சமுறச் செய்தது.. இருந்தும் அருகில் சென்று பேச துணிந்தாள்.. 


" ஸாரி நா... தப்பா.." என ஆரம்பித்தவளை பேச விடாது முடியை கொத்தாக பிடித்தவன் கோபமாக அவளை சுவற்றை நோக்கி தள்ளி சென்றான்.. வலித்தாலும் காட்டிக்கொள்ளவில்லை அவள்.. 


" எனக்கு விபச்சாரி தேவையில்லை.. ஏன்னா இந்த நாட்டு பாதி கல்யாணம் இதுக்காக மட்டும் தா நடக்குது.. சோ ‌பொண்டாட்டியும் விபச்சாரிதான்டி  புருஷனுக்கு.. " தரன்‌.


அவன் சொன்ன வார்த்தை புரியவில்லை.. அவளின் செவிகளுக்கு சென்று மூளை அதை ஆராயும் முன்னே தரன் அவளின் இதழை வன்மையாக சிறை செய்தான்.. 


முன்னேறாமல் நிறுத்தி விட வேண்டும் என நினைத்தவனை  தாபம் ஆட்கொண்டது.. தான் விரும்பும் பெண்ணவளின் அருகாமையும்  நெருக்கமும் அவனின் மூளையை சிந்திக்க விடவில்லை.. என்ன செய்கிறோம் என்று அறியாமல் அவளை முத்தமிட்டவனின் கைகள் பெண்ணவளின் அங்கங்களை பதம் பார்த்தது... 


நிலைமையை உணர்ந்து  விடுபட அவள் போராட.. அது அவனுக்கு மேலும் போதை ஏற்றியது.. கோபம் அங்கு காமமாக மாறியது.. 


முதல் கூடல்.. அன்பாய் , காதலாய் , அமைந்திருக்க வேண்டிய தாம்பத்தியம்.. வன்மையாகவும் , பிடிவாதமாக‌வும் , வலுக்கட்டாயமாகவும் நடந்தேறியது அங்கு... 


விபரம் தெரிந்த நாளில் இருந்து எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் ஹரிணியின் கண்கள் கண்ணீர் என்பதை பார்த்ததில்லை யாரும்... இன்று அழுதாள்..‌ அழுகிறாள்.. வலி.. உடலில் மட்டும் அல்ல மனதிலும்.. காயம்.. யாருக்கும் காட்ட முடியாத இடங்களில் எல்லாம்.. 


அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி என அதிர்ந்தவளின் இதழை முத்தமிட்டவன் " திருப்தியா இருந்தது கிட்.. எனக்கு ரொம்ப சந்தோஷம்.. ஹாங் எனக்கு வேற பொண்ணெல்லாம்  தேவையில்லை... நீயே போதும்.. டெய்லி நைட்டுக்கு மட்டுமில்ல டே க்கும் சேத்து 24/7.. " என மீண்டும் முத்தமிட்டு சென்றான்...


கோபம் , ஆத்திரம் , வருத்தம் , வெறி , என அனைத்து உணர்வுகளையும் அடக்கி அமைதியாக அமர்ந்திருந்தாள் கட்டிலில்... 


பலாத்காரம் செய்பவன் கணவனாகவே இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.. 


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


அன்பே 42


அன்பே 44



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...