முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 44

அத்தியாயம்: 44


வருந்தாதே... நீ  


எதை இழந்தாலும்... 


அது இன்னோரு வடிவில்..  


உன்னை வந்து சேரும்.. 




காலை வேளை அது..


" ஹரிணி... " வெளியே செல்ல இருப்பவளை தடுத்து அழைத்தான்  கதிர்..


" என்ன விசயம்.. டக்குன்னு சொல்லு.. " என்றாள் வாட்சை பார்த்த படி.. 


" ம்ச்.. இதுல சைன்‌ போட்டுட்டு போ.. " என சில காகிதத்தை நீட்டினாள் தீப்தி.. 


" எதுக்கு.. என்னதிது.. " என வாங்கிப் படித்தவள்‌ அதிர்ந்து போனாள்..


அது டிவர்ஸ் பேப்பர்ஸ்.. 


" வாட் தா ஹெல்.. யாரு இத செஞ்சது...‌ " என கத்தினாள்.. 


" நான் தா... " என ஓம் வந்து நின்றான்.. 


" அவென் நம்ம குடும்பத்துக்கு செட்டாக ‌மாட்டான்.. கையெழுத்து போட்டிடு.. ஈஸி.. " ஓம் .


" எதுக்கு குடும்பத்துக்கு செட் ஆகனும் எனக்கு செட்டான போதும்.. நீ எதுக்கு என்னோட லைஃப்ல தலையிடுற.. ஸ்டே அவே.. " என்றாள் கோபமாக.. 


"ஹரிணி.. உன்ன ப்ளான் பண்ணிக் அண்ணனும் தம்பியும் சேந்து ஏமாத்துறானுங்க.. அதுலையும் அண்ணே மகா ஃபிராடு.. வேண்டாம்   சுதந்திரமா உன்னோட‌ லைஃப்ப நீ வாழு.. அந்த பட்டிக்காட்டான்‌ எதுக்கு... " கதிரவன் பேசிக் கொண்டே போக ஹரிணிக்கு கோபம் ஏறிக்கொண்டே சென்றது..


" ஷட் டாப்.. " என உச்ச சுரத்தில் கத்தியவள்..


" ஜஸ்ட்.. ஷட்.. யூவர்.. மௌத்.. அதர் வைஸ்.. யூ மஸ்ட் ஃபீல் ஃபார் தட்... நீ யாரு நா என்ன செய்யனும்னு சொல்ல.. நா உனக்கு மரியாத தர்றேன்னா அது உன்னோட வயசுக்கு மட்டும் தா.. அத கெடுத்துக்காத..  உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.. பேசாம போய்டு‌.. " 


" ஹரிணி கதிர் நமக்காக என்னல்லாம் செஞ்சிருக்கான்.. அவனப் போய் இப்படி எடுத்தெரிஞ்சு பேசுற.. இது தா உங்கம்மா வளத்த ‌விதமோ.. " தீப்தி  ஏளனமாக பேச..


மேஜையில் வைக்கப்பட்டிருந்த சூடான காப்பியை எடுத்து தீப்தி யின் முகத்தில் ஊற்றினாள் ஹரிணி‌ கோபமாக.. 


"என்னோட அம்மாவ பத்தி பேச உனக்கு எந்த தகுதியும் இல்ல.. ***** " என ஹரிணி சரலளாக கெட்ட வார்த்தைகளில் திட்ட..


சூடு தாங்க முடியாது வலியில் தவித்தவள் துடைத்துக்கொண்டே..  " பின்ன உங்கம்மா என்ன சமூக சேவகியா தூக்கி வச்சு கொண்டாட.. ஏற்கனவே கல்யாணம் ஆகி கொழந்த குட்டிகளோட சந்தோஷமா இருந்த குடும்பத்த செதச்ச.. துரோகி... சேம்லஸ் விமன்... " தீப்தி


" ஓஹோ.. சந்தோஷமா யாரு நீங்க... ஹி.. கூழுக்கு கூட வழியில்லாத உன்ன இப்படி மாட மாளிகைல வாழ வச்சது எங்கம்மா பண்ண தப்பு தா.. ஒத்துக்கிறேன்.. பட் உங்கப்பா என்ன மூனு வயசுக் குழந்தையா சாக்லேட் குடுத்து ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்க.. " என்றாள் கைகளை கட்டிக்கொண்டு.. 


பின் " உன்னோட அம்மா உன்னோட அப்பாவ வித்துட்டாங்க.. ஏதோ பொம்மையை  விக்குற மாறி எங்கம்மாட்ட வித்துட்டாங்க.. அதுக்கு விலை தா நீங்க இப்ப அனுபவிக்கிறீங்களே இந்த ஆடம்பரமான வாழ்க்கை.. மத்தபடி ஏமாந்தது நானும் என்னோட குடும்பமும் தா.. நீங்க நல்லா தா  இருக்கிங்க.. நகை என்ன நட்டென்ன ஃபாரின் காரு கூப்டதும் என்ன மேடம்னு கேக்க ஆளுன்னு ராணி மாறி ஒரு வாழ்க்கை இதுக்கெல்லாம் காரணம் யாருன்னு நா சொல்ல வேண்டியதில்ல.. " 


" ஹரிணி நீ ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கிடலன்னாலும் நாங்க உனக்கு அண்ணனும் அக்காவும் தா.. நாங்க உனக்கு பயாலாஜிக்கல் பிரதர்ஸ் அண்டு சிஸ்டர் தா.. நம்மோட ரெண்டு அப்பாம்மா மேரேஜ்ஜும் சட்டப் படி‌தா நடந்தது.. உன்னோட கார்டியன் இப்பவும் நா தா.. அவென் வேண்டாம் உனக்கு.. இப்பதா தீப்தி சொன்னா அவனும் தீப்தியும் மேரேஜ் பண்ணிக்கிட்டதா.. "


" ஓ.. அப்ப நா அந்த மேரேஜ் சர்ட்டிபிகேட்ட பாக்கலாமா.. ப்ளீஸ்.. " கேலியாக இரு கரத்தையும் கட்டிக் கொண்டு..


" அ...து.. அது.. " என தடுமாறினால் தீப்தி.. எப்படி தருவாள் கல்யாணம் என்ற ஒன்று நடந்தாள் தானே.. அப்படி சொன்னால் ஹரிணி தன் வாழ்க்கையே போய்விட்டதென முடங்கி விடுவாள்.. ஈசியாக அவளை துரத்திவிட்டு விட்டு முழு சொத்தையும் தான் அனுபவிக்க முடியும்.. நேற்று கையில் மது பாட்டிலை எடுத்தவுடன்  தான் நினைத்தது நடந்து விடும் என்று நினைத்ததாள்.. போலிப் பத்திரம் கூட ரெடி பண்ணவில்லை.. என்ன செய்வது என யோசிக்கலானாள் தீப்தி.. 


" பயாலாஜிக்கல் அக்கா.. பயாலாஜிக்கல் அக்கா.. என்ன எப்படி பொய் சொல்றதுன்னு மனசுக்குள்ள டெமோ பாக்குறிங்களா.. வேணாம்.. அன்னைக்கு நைட் நீ ஓட்டுனியே.. ஒரு படம்.. அது ஃபெயில்லியர் ஆகிடுச்சாம்..‌ ஃப்ளாப்.. படு கொக்க.. ஸ்கிரீனே  கிழிஞ்சு போச்சாம்... " என தன் மொபைலை காட்டினாள்.. 


அதில் தீப்தி காட்டி ரிஜிஸ்டர் ஆஃபிஸும் அங்கு அந்த நேரத்தில் நடந்த திருமணங்களும் படமாய் ஓடியது.. நடந்தது டெல்லியில் என்பதால் cctv கேமரா மூலம்  அந்த ஆஃபிஸுல் இருந்தது எடுக்கப்பட்டிருந்தது.. ஹக்கிங் செய்து..


" எப்பைல ‌இருந்து சாட்சி கையெழுத்து போடுறவங்கள எல்லாம் ஹஸ்பெண்ட்‌ அண்டு வைஃபா அநோன்ஸ் பண்ணாங்கன்னு தா தெரியல.. " ஹரிணி..


தன் நண்பனின் திருமணத்திற்கு மணமகனின் சார்பாக  சாட்சி கையெழுத்து தரனும்.. மணமகளின் சார்பாக தீப்தியும் கையெழுத்து போடும் காட்சிகள் வீடியோ வடிவில் காட்டினாள் ஹரிணி.. 


" நீ செஞ்சிருக்கியே இதுக்கு பேர் என்னனு தெரியுமா.. எச்ச.. இதுல இருந்தே தெரிஞ்சது வீழ்ந்தாளும் மேன் மக்கள் மேன் மக்களே.. அதுல நீ யாருன்னு தெரிஞ்சிருக்கும்.. இன்னொரு டைம் நீ ரிஷிய பத்தி தப்பா பேசுன நடக்குறதே வேற‌...  " என்றவளை தீயாய் முறைத்தாள் தீப்தி..


" தீப்தி.. நீ உள்ள போ... " ஓம்..


" அண்ணா.. இவளுக்கு பயந்து நா போனுமா.. முடியாதுண்ணா.. " பிடிவாதமாக.. 


ஓம் கதிரை கண்காட்ட அவன் தீப்தியை அழைத்து சென்றான்.. 


" இங்க பாரு.. உனக்கே தெரியும் நம்ம தாத்தா பேருல.. " என்றவன் அவள் பார்வையை கண்டு நிறுத்தினான்.. 


" எந்த சூழ்நிலையிலும் அவரு உனக்கு தாத்தா வா ஆகவே மாட்டாரு.. சோ சொந்தம் கொண்டாடாம என்ன விசயமோ அத ‌நேராவே சொல்லு.. உன்னோட பிஸ்னஸ் மூளைய எங்கிட்ட  காட்டாத.. " காட்டமாக.. 


" மிஸ்டர் ரெட்டி ஸாரோட சொத்து எவ்வளவுன்னு உனக்கே நல்லா  தெரியும்.. வந்தவன்‌ உன்னோட பேர்ல இருக்குற சொத்துக்காகத்தா கல்யாணமே பண்ணியிருக்கான்.. நீ வேண்ணா பாரேன் அவனோட ஆச அடங்குனதும் சொந்த அபகரிச்சுட்டு உன்ன விட்டுட்டு போட்டுவான்.." ஓம்..


" ப்பா..‌ எம் மேல எவ்ளோ அக்கற.. " என கை தட்டியவள் .


" என்னோட சொத்த யாருக்கு குடுக்கனும்னு எனக்கு நல்லாவே தெரியும்... நா ஸ்கூல் படிக்குற பாப்பா இல்ல.. நீ சொல்றதெல்லாம் உண்மைன்னு நம்ப.. என்ன பாத்துக்க எனக்கு தெரியும்..‌ தள்ளியே இரு எங்கிட்ட இருந்து.. " என விரல் நீட்டி எச்சரித்து விட்டு சென்றாள் ஹரிணி.. 


ரிஷியை யாரிடமும் விட்டுக்குடுக்காமல் பேசியவள் ஏன் என்று யோசிக்கவில்லை.. அது அவன் மீது காதல் வளர்ந்து வருவதை உணரவில்லை அவள்.. நேற்று நடந்ததை நினைத்து அவன் கோபம் வந்தாலும் வெறுப்பு மட்டும் பிறக்கவே இல்லை.. 


அந்த கோபம் அவனிடம் இருந்து அவளை விளக்கி வைத்தது.. நாட்களும் சென்று கொண்டே இருந்ததே தவிர.. அவனிடம் பேசவோ தன் ஈகோவை விட்டுக் குடுத்து தனக்கு வாழ்க்கை குடு என யாசிக்கவோ அவளுக்கு விருப்பம் இல்லை.. தன்னை விட்டு சென்றவன் சென்றவனாகவே இருக்கட்டும் என மனதில் எழுந்த அவனின் நினைவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவனை மறந்தது விட்டதை போல் நாடகமாடிக் கொண்டிருக்கிறாள் ஹரிணி..  


சென்னை..


வீடெங்கும் அன்பேக் செய்யப்படாத அட்டைப் பெட்டிகளே நிரம்பி இருந்தது... 


" ஆ.....ஆ......ஆ....." என்ற அலறல் சத்தமும் சில சமயல் சாமான்கள் விழும் சத்தமும் கேட்டது.. 


இந்து என நினைத்தால் ஏமாந்து போவீர்கள் கத்தியது கௌதம்..‌


" என்னாச்சுங்க. " என குரல் கொடுத்தபடி படுக்கை அறையில் இருந்து வந்தாள் இந்து.


சிறிய மேடாக அவளின் வயிறு வளர்ந்திருந்தது.. இது ஐந்தாவது மாதம் அவளுக்கு... கையில் சில கண்ணாடி வளையல் குலுங்க.. சேலையை தூக்கி சொருகி தன் கெண்டைக்கால்கள் தெரிய‌ கையில் துடப்பத்துடன் வந்தாள் சமையல் அறைக்கு..


" என்னாச்சு.. ஏ.. இப்படி சமயக்கட்டு மேல உக்காந்திருக்கிங்க.. இறங்குங்க கீழ.. " இந்து..


" ஷூ..ஷூ.. நீயும் இங்க வா வந்து பத்திரமா உக்காந்துக்க... " கௌதம் மெதுவாக..


" என்ன நானும் உங்க கூட சேந்து  விளாண்டுட்டு இருந்தா..‌ வெளங்கிடும்.. எல்லா சாமனையும் பிரிச்சு வைக்கனும்.. வீட அலசி விட்டு சுத்தப்படுத்தனும்..‌ ப்ளீஸ் வாங்க வந்து ஹெல்ப் பண்ணுங்க.. இல்லைன்னா உதவிக்கு ஆள் ஏற்பாடு பண்ணுங்க.. " இந்து.. 


" அடியே வாடி இங்க.. நேரங்காலம் தெரியாம... படிக்கட்டுல சில்லறைய கொட்டி விட்ட மாறி சிலுசிலுன்னுட்டு... " 


சரி என அவனின் அருகில் சென்றாள்.. பாத்திரங்கள் உருலும் சத்தம் மீண்டும் கேட்டது.. 


ஒரு நொடி பயந்தவள்.. " யாருங்க அது.." 


" உன்னோட சமயல பாராட்ட பிள்ளையார் தன்னோட ஜிகிடி தோஸ்த‌ இங்க அனுப்பியிருக்காரு.. வந்து பாத பூஜை பண்ண வா.. " 


" எலி யா..‌ எங்கங்க.. ஐய்யையே எப்படி தொரத்தி‌விடுறது...  " 


" எதுக்கு மா வெரட்டனும்.. அது பேசாட்டி ஒரு ஓரமாக குடும்பத்தோட வாழ்ந்துட்டு போட்டும்.. நாம ஒரு ஓரமா இருந்துட்டு போவோம்.. " என்றவனை முறைத்தாள் இந்து.. 


" அனைத்து உயிரினங்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும்.. நீ மான்டர் படம் பாக்கலை யா.. நா போட்டு காட்டுறேன் பாரு.. ஆ.." காதைப் பிடித்து திருகினாள் இந்து..


"மரியாதையா அத பிடிச்சு வெளில விடுங்க... இல்லைன்னு வைங்க குழந்த பெறக்குற வரைக்கும் நா என்னோட மாமா வீட்டுலையே இருப்பேன்.. நீங்களும் அந்த எலி கூட சந்தோஷமா ஒரே வீட்டுல குடும்பம் நடத்தீட்டு இருங்க.. முடிவு பண்ணிக்குங்க.. ம்.. இந்தாங்க.. " என தொடப்பத்தை அவன் கையில் திணித்தாள்..


அவனும் வீடு முழுவதும் விரட்டிக் செல்கிறான்.. ஆனால் எலி வெளியே செல்ல மாட்டேன் என கபடி ஆட்டம் ஆடியது.. 


டயர்ட்டாக சோஃபாவில் அமர்ந்தவன் முன் காப்பி கப்பை நீட்டியவள்.. " குடிச்சுட்டு தெம்பாக போய் விரட்டி விடுங்க... " என்றாள்.. 


" முடியலையே ம்மா.. " சோர்வாக..


" இன்னைக்கு ராத்திரி எப்படி எலி கூட தங்க முடியும்.. பாருங்க வீட்டு கதவ ‌தொரந்து வச்சுட்டு நீங்க அத விரட்டுவீங்களாம்... அது போச்சா இல்லையான்னு நா இங்க இருந்து பாத்து சொல்வேனாம்... ம்... " அவன் அருகில் அமர்ந்தபடி கொஞ்ச..


" நீ என்ன third umpire ‌ரா... ம்… வாசல தாண்டிடுச்சா இல்லயான்னு பாத்து சொல்ல.. " கௌதம் மனைவியின் மடியில் தலை சாய்த்தபடி கொஞ்சலாக பேசினான் அவன்.. க்ளீனிங் மூடில் இருந்து கிஸ்ஸிங் மூடிற்கு மாற இந்து அவனுடன் போராடிக் கொண்டிருந்தாள்..


" ம்.. ம்.. அங்க பாருங்க அது அங்க தா இருக்கு.. கதவ மட்டும் தொரங்க போய்டும்.. " நெருங்கும் அவனை முன்னேற விடாது தடுத்தாள்...


" போன பாதைலையே திரும்பி வந்தா என்ன பண்ணுவ..‌ " வில்லங்கமாக...


" அது வர்ர வழில நா நோ என்ட்ரி ஃபோர்டு ஒன்னு மாட்டி வச்சிடுறேன்.. ம்ச்.. விடுங்கங்க.. " சிணுங்களாக..


" ம்ச்.. அதுக்கு படிக்க தெரியலைன்னா... " 


" ம்... ட்யூஷன் நடத்தி சொல்லிக் குடுக்குறேன்.. இப்ப விடுங்க என்ன.. வேல கிடக்கு.. " 


" அத விட்டுட்டு நீ என்னக் கொஞ்சம் கவனியேன்.. நா தா பாவமா இருக்கேன்.. " என கொஞ்சினான்.. 


" கதவ யாரோ தட்டுற மாறி இருக்கு.. "


"தொறக்கலைன்னா டிசென்ஸி தெரிஞ்சவங்க திரும்பிப் போய்டுவாங்க.. டிசென்ஸி தெரியாத டாக் இங்க யாருமே இல்லைன்னு நினைக்குறேன்.. " என கரத்தால் தடுத்தவளின் கரங்களை விலக்கி விட்டு காதல் லீலை புரிய.. இந்து அருகில் இந்த பில்லோவால் கணவனை அடித்தாள்.. அதை பிடுங்கி எரிய பில்லோ சரியாக கதவை திறந்து வந்து கொண்டிருந்த ஹரிணியின் மீது பட்டது.. 


" அட கருமாந்திரம் பிடிச்சவிங்களா.. கதவ மூடிட்டு ரொமன்ஸ் பண்ணிருக்கலாம்ல.. ச்சச்ச.. இப்படி இங்லீஸ் படத்த லைவ் வா பாக்க வச்சுட்டிங்களேடா.. " ஹரிணியை பார்த்தவுடன் இந்து உள்ளே ஓடி விட்டாள்.. 


" கதவு பூட்டி தான இருந்துச்சு.." என கௌதம் யோசிக்க.


" எரும பூட்டல சாத்தி‌ இருந்துச்சு.. நா எத்தன வாட்டி தட்டினேன் தெரியுமா... " 


" ஓ.. நீ தா தட்டுனதா அது.. இப்பத்தா உன்ன பாராட்டிட்டு இருந்தேன்.. தெரியுமா..‌" 


" நீ பாராட்டுன லட்சனம் எனக்கு தெரியும்... நீ ஆஃபீஸ் போ.. நா மணிய வரச்‌சொல்லியிருக்கேன்.. எல்லாத்தையும் இந்து சொல்ற மாறி அரேஜ் பண்ணிடுவோம்... நீ நைட் டின்னர் வாங்கிட்டு சீக்கிரம் வா.. ஓகே... " 


கௌதம் போய் வரவா‌ என இந்துவை பார்க்க அவள் சரி என தலை அசைத்ததும் கிளம்பினான்.. 


இருமாதங்கள் ஓடி விட்டது.. தரனை பார்த்து பேசி.. எப்பொழுதும்  அவனைப் பற்றியே நினைக்கும் தன் மனதை என்ன செய்வது என்று தெரியவில்லை  ஹரிணிக்கு.. பகலில் அதை தவிர்க்க கௌதமுடன்‌ பிஸியாக வேலை செய்பவளை..‌ இரவு நெருஞ்சி முள்ளாய் குத்தியது.. 


விருப்புக்கும் , 

வெறுப்புக்கும் , 

நூல் அளவே வித்தியாசம்‌..

 தொடரும் ...



கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...