அத்தியாயம்: 45
வானத்தின் கதவுகள் மெல்ல மெல்ல மூடும் தருணமிது !! காரிருள் மேகங்கள் புடை சூழ ஆதவனையே தன்னில் மறைக்க செய்யும் அழகிய மஞ்சள் நிற வெளிச்சத்தை பரப்பும் மாலை வேளை அது..
ரைஸ் மில்லில் நாற்காலியில் அமர்ந்திருந்தவனின் கண்கள் தீக்கங்கைப் போல் சிவந்திருந்தது.. கோபத்தில்...
" தம்பி.. " வேலையாள் வந்து முன் நின்றார்..
" அண்ணே.. போய் உங்க சின்ன முதலாளிய வரச்சொல்லுங்க.. "
" தம்பி வர நேரமாகுமே.. "
" வர்ர வர இருக்கேன்.. நீங்க போய் வேலையப் பாருங்க.. " சிறு எரிச்சலோடு வந்தது குரல்..
வெளியே வந்தவர் தரனுக்கு ஃபோன் செய்து கௌதம் வந்திருப்பதாகவும் விரைந்து வருமாறும் கூறினார்..
சிறிது நேரத்தில் தன் ராயல் எம்பயர் வண்டியில் வந்தான் ரிஷி தரன்.. ஆஃபிஸ் ரூமை நோக்கி விரைந்து வந்தவன் கௌதமின் கோபம் கண்டு ஏன் என யோசித்த படியே அவனுக்கு முன்னிருந்த நாற்காலியில் அமர்ந்தான்..
கௌதமிற்கு அதீத கோபம் இருந்த போதும் தரனை பார்த்துவுடன் சற்று தணிந்தது என்று தான் சொல்ல வேண்டும்.. ஏனெனில் ஹரிணியை பிரிந்து தரன் சந்தோஷமாக இல்லை என்பதை அவனின் முகமே சொல்லியதால்.. சேவ் செய்யப் படாத தாடி.. வற்றிய தேகம்.. பல நாட்கள் தூங்கியிருக்க மாட்டான் போலும் கண்கள் இரண்டும் குழி விழுந்து சோர்வுடன் இருந்தது..
கௌதம் தரனை பார்த்தபடி அமர்ந்திருக்க.. 'பேசாம இப்படி போஸ் குடுக்கத்தா வந்தானா இவெ.. இதுக்கு என்ன அவசரமா வந்தேனோ.. ' என எண்ணியபடி மேஜையில் இருந்த கணக்கு வழக்கு நோட்டை எடுத்து சரிபார்க்க ஆரம்பித்தான் தரன்..
பேசாமல் முழுதாக ஐந்து நிமிடங்கள் முடிந்தது.. அது தணிந்த கௌதமின் கோபத்தை மூட்டி விட்டு சென்றது.. நாற்காலியை உதைத்து தள்ளியவன் கொத்தாக தரனின் சட்டையை பிடித்து அடிக்க துவங்கினான்..
கௌதம் எழுந்த போதே அவன் என்ன செய்யப்போகிறான் என்பதை யூகித்தவன் அவனின் அடிகள் தன் மேல் படாதபடி தடுத்தான்..
" நீயெல்லாம் மனுஷனா டா.. திமிரு.. உடம்பு முழுக்க திமிரு.. " என வயிற்றில் குத்தியவனிடம்..
" நீ தான சோறு போட்டு வளத்த.. அதா ஜாஸ்தியா இருக்கு.. " நக்கலாக வந்து வந்தது தரனி வார்த்தைகள்..
" டேய்... அவள பிடிச்சுப் போய் தா நீ ஏமாத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு நெனைச்சேன்.. ஆனா இப்பத்தா தெரியுது.. நீ எம்மேல இருக்குற பொறாமைல தா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு.. "
" ஆமா இவரு பெரிய மன்னர் வகையிரா இவர பாத்து நாங்க பொறாமபடுறோம்... நா பொறாம படுற அளவுக்கு உங்கிட்ட ஒன்னுமே கிடையாதுடா.. அத தெரிஞ்சுக்க.. "
" அப்றம் எதுக்குடா என்னோட ஃப்ரெண்ட கல்யாணம் பண்ணிக்கிட்ட.. இப்ப எதுக்கு சண்ட போட்டு அவள அவங்கேயே விட்டுட்டு வந்த.." என முகத்தில் குத்த...
" அத உன்னோட ஃப்ரெண்டு கிட்டையே கேட்டிருக்கலாம்ல... தெளிவா புளி போட்டு வெளக்கிருப்பா.. " என்றான் கௌதமின் அடிகள் ஏதும் தன்மேல் படாதவாறு தடுத்துக் கொண்டே..
" எப்படிடா சொல்லுவா.. அவா உங்களுக்குள்ள நடந்த எதையும் எங்கிட்ட சொல்லல.. இருந்தாலும் அவா படுற கஷ்டத்தையும் வேதனையையும் பாக்க முடியாம தான்டா வந்தேன்.. உன்ன கொல்ல.. கொன்னுட்டா நிம்மதியாவாவது இருக்கலாம்ல.. "
" அப்பறம் ஏன் சும்மா அடிச்சிட்டு இருக்க.. கைட்ட அடிச்சி சாவடிக்கப் நேரம் ஆகும்.. கத்தி இல்ல அறுவா எதுவும் வேணுமா.. "
" கொல்ல தான் டா போறேன.. இப்ப இல்ல.. அவா வயித்துல இருக்குற உன்னோட கொழந்த வெளிய வந்ததுக்கு அப்புறம் அத வச்சே உன்ன சாகடிக்குறேன் பாருடா.." என அவனை குத்த அது சரியாக அவனின் மூக்கை பதம் பார்த்தது.. ரத்தம் வடிய ஆரம்பித்தது..
"வாட்.. என்ன சொன்ன.. " அதை துடைக்க கூட இல்லாமல் ஆவலாக கேட்டான் ரிஷி தரன்..
" ஏ காது உனக்கு கேக்கலையா.. அவா வயித்துல மூனு மாச கரு வளருது.. அதுவும் ஒன்னில்ல ரெண்டு.. டுவின்ஸ்.. " என சில ஸ்கேன் ரிப்போட்டையும் ஒரு சீடியையும் வீசினான் மேஜையில்..
வேகமாக அந்த சீடியை எடுத்து ப்ளேயரில் போட்டு பார்த்தான் தரன்.. திரையில் இரு புள்ளிகள் போல் தெரிந்தது அவனின் சிசு.. லேசான அசைவும் தெரிந்தது அதில்.. புது ரத்தம் உடம்பில் ஒவ்வொரு அணுவிலும் பாய்வது போல் உணர்ந்தான் ரிஷி.. மகிழ்ச்சி சந்தோஷம் எல்லாம் ஒருங்கே வந்து தாக்கியது.. அவன் எப்படி உணர்கிறான் என்பதை வெளிக்காட்ட இயலாமல் தவித்தான்.. ஓடிச் சென்று கௌதமை இறுக அணைத்தான் ரிஷி தரன்..
" ஏய்.. ச்சி.. விடுடா என்ன.." என விலகியவன்.. " ரொம்ப சந்தோஷமா இருக்க போலையே.. "
" ஆமா.. தேங்க்ஸ் கௌதம்.. நீ.. நீ.. எனக்கு எவ்ளே பெரிய ஹெல்ப் பண்ணிருக்கன்னு தெரியுமா.. தேங்க்ஸ்.. " என்றவன் முகத்தில் தந்தையாகிய மகிழ்ச்சி கறை புரண்டு ஓடியது..
தரனின் சந்தோஷத்தில் கௌதமிற்கும் சந்தோஷத்தை தர... "ஹரிணிக்கு நா இங்க வந்தது தெரியாது.."
" நீ வந்த மாறி காட்டிக்க மாட்டேன்.. "
" எனக்கே நேத்து தா தெரியும்.. அவா ப்ரெக்னன்டுன்னு.. எங்கிட்ட கூட அவா சொல்லல.. "
" அப்றம் எப்படி தெரிஞ்சதாம்.. "
" ம்ச்.. இந்துக்கு ட்ரீட்மெண்ட் பாக்குற அதே ஹாஸ்பிட்டல்ல தா ஹரிணியும் பாத்திருக்கா.. அந்த டாக்டர் முதல எதையுமே சொல்லமாட்டேன்னு சென்னாங்க... நான் தா ஹரிணி ஹஸ்பெண்ட் ஃபாரின்ல இருக்கான்னு பொய் சொல்லி ரிப்போட்ட வாங்கிட்டு வந்தேன்.. பொய் சொல்லிட்டேன்.. எல்லாமே உன்னால தா.. "
"தேங்க்ஸ்.. இனி நா பாத்துக்குறேன்.. "
"என்னத்த பாத்துக்க போறியோ... இத பாரு நீ என்ன பண்ணுவேன்லாம் எனக்கு தெரியாது.. பெறக்கப் போற குழந்தைக்கு அப்பா நீயும் அம்மாவா ஹரிணியும் எப்பையுமே கூட இருக்கனும்.. நீங்க ரெண்டு பேர் இருந்தும் உங்க ஈகோ வால அந்த குழந்தைய தனியா வளர விட்டுடுடாதிங்க.. அநாதையா வளர நா என்னைக்கும் அனுமதிக்க மாட்டேன்.. " உறுதியான குரலில்..
கௌதம் தன்னைப் போல் இன்னொரு குழந்தை வளர்க்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.. தாயின் அரவணைப்பு வேண்டும் அதற்கு தந்தையின் துணையுடன் குடும்பமாக அது வளர வேண்டும் என்றான் கௌதம்.. கௌதமின் நிலை தரனுக்கு புரிந்தது..
" எங்களுக்குள்ள சண்டையே வராதுன்னு சொல்ல முடியாது.. ஆனா எந்த சண்டையும் எங்க பிள்ளைகள பாதிக்காம பாத்துக்க எங்களால முடியும்... ஒரு அப்பாவா என்னோட கடமைல இருந்து நா விலக மாட்டேன்.. அதே நேரத்துல அப்பாங்கிற உரிமையையும் நா விட்டுக் குடுக்கவும் மாட்டேன்.. " என கள்ள சிரிப்புடன் சத்தியம் செய்தான் தரன்..
அதாவது ' உன்னோட பொறுப்பு பருப்பெல்லாம் ஹரிணியோட நிப்பாட்டிக்கோ.. எம் பிள்ள மேல காட்டாத.. அத நா பாத்துக்குவேன்.. ' என்பது தான் அந்த சிரிப்பின் பொருள் அதில் சிறு பொறாமையும் எட்டிப்பார்த்து...
புரிந்து கொண்ட கௌதமும் ' பாக்கலாம் ' என்பது போன்ற விஷம சிரிப்புடன் சென்னை திரும்பினான்..
டிங்.. டிங்.. டிங்.. டிங்..
காலிங்க பெல் அடிக்கும் ஓசை கேட்டது..
" கௌதம் யாருன்னு பாரேன்.. " ஹரிணி மடிக்கணினியில் பார்வையை பதித்தபடி..
" ஐயா ரொம்ப பிஸி.. முக்கியமான வேல ஒன்ன பாத்துட்டு இருக்கேன்.. நீயே போய் பாரு... "
அப்படி என்ன வேலை செய்கிறான் என்று எட்டிப் பார்த்தாள்.. " இதுதா நீ பாக்குற முக்கியமான வேலையா.. " காண்டாக கேட்டாள் அவள்..
" பின்ன இல்லையா வலது கை தலைய தாங்குது.. இடது கை மொபைல தாங்குது.. காலு மொத்தமா என்னையையே தாங்குது.. அப்ப நா பிஸி தான.. கேம் விளாடுறது முக்கியமான வேலை இல்லையா.. நீ தா சும்ம உக்காந்திருக்க.. போ.. போய் யாருன்னு பாரு.. வெட்டி ஆஃபிஸர்.. "
" இடியட்.. " என அவனை திட்டியபடி அவனின் மொபைலை பிடுங்கிக் கொண்டு கதவை திறந்தாள் ஹரிணி..
" இம்புட்டு நேரமாக்கும் கதவ தொறக்க.. வழிய விடு உள்ள வரவா இல்ல வந்த வழியிலே திரும்பி போய்டவா.. " மலர் உடன் நங்கையும் கவியரசனும்..
மலரின் சத்தம் கேட்டவுடன் கௌதமும் இந்துவும் வந்து வரவேற்றனர்..
" பூவத்த... " என அருகில் செல்ல மலர் ஹரிணியுடன் பேசுவதை தவிர்த்தார்.. அதனால் ஹரிணி நங்கையின் மடியில் சோர்வுடன் படுத்துக்கொண்டாள்..
" இந்து டாக்டரம்மா என்ன சொல்லுச்சு.. பிரயாணம் பண்ணலாம்னு சொல்லுச்சா.. நீ கேட்டியா ஊருக்கு போலாமான்னு.. " மலர்..
" பெரிம்மா அவா உடம்பு நல்லா இருக்காம்.. இந்த வாரம் அங்க கூட்டிட்டு வரலாம் தா இருந்தேன்.. நீங்களே வந்துட்டிங்க.. "
" அப்ப சரி கெளம்புங்க எல்லாரும் சேந்து ஊருக்கு போவோம்.. என்ன தம்பி நீ அசதியா இருக்கேன்னா சொல்லு நாளைக்கு கூட கிளம்பலாம்.. " மலர் காரை ஓட்டி வந்த கவியரசனிடம் கேட்க..
" அதெல்லாம் இல்ல அண்ணி கௌதம் கூட வண்டி ஓட்டீட்டு வருவான்.. இப்பவே கூட புறப்படுவோம்... " கவியரசன்..
" இப்பவே வா... " என கௌதமும் இந்துவும் ஹரிணியை பார்த்து முழிக்க..
" ஆச்சிக்கு உன்ன பாக்கனும் போல இருக்குதா.. அதா கையோட கூட்டியார சொன்னாங்க.. எதுவும் பிரச்சனை இல்லேல... ம்... எடுத்துவைங்க துணிமணிய.. " என விரட்டினார் மலர்..
பாவமாக அமர்ந்திருந்த ஹரிணி நங்கையிடம் " பூவத்தைக்கு எம் மேல கோபமா.. "
" இருக்கலாம்.. நீ அண்ணிட்ட கடைசியாக எப்ப பேசுன.. " என்ற போது தான் நினைவுக்கு வந்தது தரன் மேலுள்ள கோபத்தில் மூன்று மாதமாக இவர்கள் யாருடனும் பேசவில்லையே என்று..
" என்ன பதில் வரல.. அண்ணி கோபமெல்லாம் பனி மாறி.. போய் பேசுனா உடனே கரைஞ்சிடும்.. எதுக்கு சோகமா முஞ்சிய வச்சிட்டு இருக்க.. பேசி பாரு... " நங்கை அமைதியாக இருந்தவளிடம்..
" பூவத்த... "
" ..... "
" பூவத்த.. நாந்தா உங்க மேல கோபப்படனும்.. என்னைய ஊருக்கு வான்னு கூப்பிடாததுக்கு.. நீங்க இந்துவ தான கூட்டிட்டு போக வந்திருக்கிங்க.. நா வர மாட்டேன் பா.. நானும் உங்க மேல கோபமா இருக்கேன்.. எனக்கு முன்னாடியே நீங்க முஞ்சிய திருப்பி கிட்டா நா விட்டுடு வேனா.. திரும்புங்க பூவத்த..." விளையாட்டாக..
" என்னடி பண்ணனும் உனக்கு பூவத்தையாம் பூவத்த.. மூனு மாசம் ஆச்சு நாங்க இருக்கோம்மா இல்ல செத்தோம்மான்னு கவலப் படாத உங்கிட்ட நா எதுக்குடி பேசனும்.. " கோபமாக..
" ஸாரி த்த.... " சோகமாக..
" எனக்கு தேவையில்ல உன்னோட ஸாரிய நீயே வச்சுக்க.. உம் புருஷன் கூட பிரச்சனைன்னா அவெங்கூட பேசாம இரு.. நாங்கெல்லாம் உன்ன என்ன பண்ணீட்டோம்.. நாங்க உன்ன கொடும கிடும பண்ணிடலையே.. அப்படி பண்ணிருந்தா நீ பேசாம இருக்குறது நியாயந்தா... என்னோட மகளாட்ட பாத்தேன் உன்ன இப்படி என்னனு கூட கேக்காம இருப்பன்னு நா நெனைக்கவே இல்லடி யம்மா.. " என்றார் கண்ணீருடன்..
அவரின் பேச்சில் உள்ள உண்மை அவளை சுட்டது.. தலை தாழ்த்தி மௌனமாக இருந்தாள்..
" ஏன்டி நங்க உம்மவா உங்கிட்டயாச்சும் பேசுச்சா இல்லயா... தெரிஞ்சுக்க உம்மவா இப்ப மூனு உசுரா இருக்கா.. கிளம்பச் சொல்லு அது நம்ம வீட்டு வாரிசு... பிள்ளையையும் அத சொமக்குற ஆத்தாளையும் நா நல்லா பாத்துப்பேன்... நம்பிக்க இருந்தா வர சொல்லு... இல்லைன்னாலும் அவா வந்து தா ஆகனும்... ஏன்னா அது எம்புள்ள வாரிசு.. " என விராப்பாக சொல்லிவிட்டு சென்றார் மலர்..
ஹரிணி பேந்த பேந்த முழித்தபடி நின்றிருந்தாள்.. அவளிடம் நங்கை " எங்கண்ணி தா எங்களுக்கு டாக்டர்.. முகத்த பாத்தே யாரு எப்படி இருக்கான்னு சொல்லிடுவாங்க.. வாழ்த்துக்கள்.. என்ன ஆச்சியாக்குனதுக்கு.. " என்றவுடன் ஹரிணி நங்கையை அணைத்துக் கொண்டாள்..
" நா மறைக்கனும்னு நெனைக்கலம்மா.. "
" மறைச்சு வக்கயும் முடியாதே.. போய் பேக் பண்ணு நம்ம வீட்டுக்கு போலாம்... " என கன்னம் தடவி வாஞ்சையுடன் சொன்னார் நங்கை..
கௌதம் நடக்கும் அனைத்தையும் ஒரு பார்வையாளராக இருந்து பார்த்தான்..
இந்து தான் கோபமாக இருந்தாள்.. கூடவே இருக்கும் தங்களிடம் ஹரிணி சொல்லாததால் வந்தது அது..
" என்னடா இது.. ஆளாளுக்கு ஒரு திசையில முஞ்சிய திருப்புனா எப்படி சமாதானப் படுத்துறது.. ஐய்யோ ஊருக்கு போனா சமாதானப்படுத்த வேண்டிய லீஸ்டு ரொம்ப பெருசா இருக்குமே... என்ன பண்ணப் போறேனோ.. இது எல்லாத்துக்கும் அவென் தா காரணம்.. தட் லெம்ப் போஸ்ட்.. அவனுக்கு எப்படியோ தெரிஞ்சிருக்கு நா ப்ரெக்னன்ட் ஆன விசயம்... என்னைய வேவு பாக்க இங்க ஸ்பை வச்சிருக்கான்னு நினைக்குறேன்... அந்த ஸ்பை மட்டும் எங்கைல கிடைக்கட்டும்.. மவனே சட்னி தான்டா. " என உள்ளுக்குள் பொறுமியபடி கிளம்பினாள் ஹரிணி ஊருக்கு மலருடன்..
போட்டுக் குடுத்ததே உன்னோட உயிர் நண்பன் தாம்மா.. இது தெரியாம பொறுமுற..
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..