முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 46

 

அத்தியாயம்: 46



"நா யாருன்னு உனக்கு தெரியுமா.. எம்பின்னாடி எத்தன பேரு சுத்தினானுங்கன்னு தெரியுமா.. எனக்கு வந்த லவ் லெட்டர் எத்தனன்னாவது தெரியுமா.. என்ன பொண்ணு பாக்க வந்த எத்தன மாப்பிள்ளைங்கள ரிஜக்ட் பண்ணேன்னு தெரியுமா..


 எத்தன பேரும் என்ன சுத்துனானுங்க.. ஆனா நா உன்ன சுத்தி வர்றேன்.. இந்த எட்டு மாசமா நா உன்ன கரெக்ட் பண்ண கஷ்டப் படுறேன்.. டேய் என்ன பண்ணா நீ எனக்கு செட்டாவ.. " தன் பாட்டுக்கு பேசிக்கொண்டே இருந்தாள் ஹரிணி.. 


தன் மணிக் கண்களால் அவளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அலட்சிய பார்வை பார்த்து விட்டு தன் வேலையை பார்க்க சென்றது சேந்தன்.. 


மலருடன் இங்கு வந்து சில மாதங்கள் ஓடி விட்டதா.. அவளின் வயிறும் வளர்ந்து உள்ளே இருக்கும் மகவும் வெளியே தெரிய ஆரம்பித்து விட்டது.. அந்த மகவிற்கு காரணமானவனை கண்டு கொள்ளாது அந்த குடும்பத்துடன் ஒன்றிப் போனாள் பெண்.. ரிஷி தரன் அப்படி ஒரு ஜீவன் உள்ளது என்பதையே மறந்து விட்டாள் சில நாட்களாக..  


அங்கு உள்ள அத்தனை பேருடனும் பழகி தன் வட்டத்திற்குள் இழுத்தாலும்.. இந்த உறவுகள் உண்டாக காரணமானவனை ஒதுக்கியே வைத்திருந்தாள்.. தாமரை இலையின் மேல் ஒட்டாது உருளும் தண்ணீரை போல் கணவன் மனைவிக்கும் இடையே எவ்வித ஒட்டுதலும் இருக்கவில்லை.. ஆனால் ரிஷி அப்படி இருக்க விடவில்லை என்று தான் சொலீல வேண்டும்.. வலுக்காட்டாயமாக எதையாவது செய்து கொண்டே இருப்பான்..‌ 


" நீயும் சரி உன்னோட ஓனரும் சரி.. ரொம்ப திமிரு பிடிச்சவிங்கடா.. நா சொல்லுற எதையும் காதுலையே வாங்காத மாறி எப்படி பாவ்லா காட்டுறீங்க.. அவன என்னால ஒன்னும் பண்ண முடில.. ஆனா உன்ன என்னால பண்ண முடியும்.. பாரு.. " என அங்கிருந்த புல்லில் நீளமான ஒரு புல்லை எடுத்து ஓங்கினாள் ஹரிணி..


அவளுக்கு சேந்தனையும் உதயாவையும் தொட்டுத் தழுவி கொஞ்ச வேண்டும் என்ற ஆசை உண்டு.. அவர்கள் ரேக்ளாவில் பங்கேற்று ஓடிய போதிருந்தே இருக்கிறது.. அவளும் விடாமல் முயற்சி செய்கிறாள் அதனுடன் பழக.. ஆனால் அவளை அருகில் கூட வர விடுவதில்லை அவைகள்.. அதனால் உண்டான கடுப்பில் தான் இன்று விளையாட்டாகவே அடிக்க ஓங்கினாள்.. 


'ம்மா.....ஆ.. ' என்று சிலிர்த்து எழுந்த சேந்தன் அவளை நோக்கி வர பயந்து போன ஹரிணி பின்னோக்கி நகர்ந்தாள்... 


பாவம் அவள் கால்கள் இடறி விட கீழே விழ இருந்தாள்... ஐந்து மாச கர்ப்பிணியான அவள் தன் குழந்தைக்கு அடி பட்டுவிடாத படி வயிற்றை கைகளால் மூடிய படி விழுவதற்கு தயாராக இருக்க..‌ அவள் தரையை சேரும் முன்னே இரு கரம் அவளை பாதுகாப்பாய் தாங்கி பிடித்தது...


ரிஷி தரன்.. அந்த கரங்களுக்கு சொந்தக்காரன்..


கோபமாக " அறிவில்லையா டி உனக்கு.. இந்த மாறி நேரத்துலயா இப்படி ஆடுவ.. கொஞ்சங் கூட உனக்கு மத்தவங்க பேச்ச கேட்டு நடந்துக்கிற பழக்கமே இல்லைல.. " என அவளை வசைபாடினான் அவன்.. 


முன்பை விட அவன் மிகவும் அழகாய் மாறி இருந்தான்.. தாய்மை பெண்ணிற்கு மட்டும் தான் அழகா?. யார் சொன்னது இதோ ஆணுக்கும் தந்தை என்ற ஸ்தானம் அழகையும்  அன்பையும் கர்வத்தையும் பொறுப்பையும் குடுத்திருக்கிறது.. இதை ரிஷி தரனை பார்க்கும் அனைவருமே சொல்வர்.. 


எதுவும் பேசாமல் அவனை முறைத்து விட்டு விலகிச் செல்லத்தான் நினைத்தாள் ஹரிணி... அவளின் கால்கள் நடந்தாலும் கை எதிலோ மாட்டிக் கொண்டதைப் போல் உணர்ந்தாள்.. பிடி இறுகியே இருந்தது.. விடுபட முயற்சிக்க முடியவில்லை.. பிடித்திருப்பவன் தரன் ஆகிற்றே.. பிடிவாதக்காரன் திமிறினாலும் விட்டுவிடுவானா என்ன.. எத்தனை முறை முயன்றிருக்கிறாள் அந்த பிடியில் இருந்து விடுபட.. ம்ஹிம்.. அது இதுவரை நடந்ததே இல்லை..


" விடு விடு கைய.." ஹரிணி.. 


"முடியாதுன்னு சொன்னா... " தரன் அவனுக்குன்டான திமிருடன்.. 


" நா வீட்டுல எல்லாத்தையும் கத்தி கூப்பிடுவேன்.. " மிரட்டலாக.. 


" கூப்பிட்டு என்ன சொல்ல போற.. கைய பிடிச்சு இழுத்துட்டேன்னா... " நக்கலாக..


"ச்சி.. விடு.. " என முகம் திருப்பியவளின் கைகள் வெது வெதுப்பை உணர்ந்தது.. ‌அது சேந்தனின் ஸ்பரிசம்.. 


அதிர்ந்து திரும்பியவள் தன் கை சேந்தனின் முகத்தில் இருப்பதை உணர்ந்து தடவி கொடுக்கலானாள்.. திமில் கொம்பு வால் என மகிழ்ச்சியுடன் தொட்டுப் பார்த்து அதன் அருகாமையை ரசித்தாள் தன்னை ஒருவன் பின்னே நின்று ரசிப்பதை அறியாமல்... 


தரனின் கண்ணசைவிலேயே சேந்தன் உணர்ந்து கொண்டான் ஹரிணி தரனுக்கு யார் என்று.. அதான் அவளை அருகில் அனுமதித்தது போலும்...


பின்னால் இருந்து அணைத்த படி அவளில் தோலில்  கை வைத்து நின்றிருந்தவனின் மூச்சுக்காற்று அவளின் கன்னம் தொட்டது... அவளின் ப்ரத்தேக வாசனை அவனின் நாசியில் நிறைந்தது.. தாய்மையில் மெருகேறியிருக்கும் அவளின் அழகை ரசித்துக் கொண்டு இருக்கும் இந்த தருணம் மீண்டும் கிடைக்காது என்பது போல் ஆழமாக ரசித்தான் தரன்..


' டேய் அவா உன்ன பொம்பள பொறுக்கிங்கிற மாறி பேசுனவா டா... வெக்கமே இல்லாம அவளப் போய் ரசிக்குற... எங்க போச்சு உன்னோட கவுரவம்.. எங்க போச்சு உன்னோட ஈகோ.. வேணாம்டா நீ திரும்பவும் அவள நெருங்குனா உன்ன என்ன சொல்லுவான்னு  உனக்கே தெரியும்.. யோசிச்சுக்க.. ' மனசாட்சி அவனை மானாவாரியாக கேட்டது..


' நா நல்லா யோசிச்சுட்டேன்... அவளுக்கு எம்மேல லவ் வரலைன்னா வரவக்கனும்னு.. இந்த பழம் புளிக்கும்னு விட்டுடு மட்டும் போய்டவே மாட்டேன்... நீ அடங்கு கட்டின பொண்டாட்டிய தான சைட் அடிக்குறேன்.. போ.. போ.. வந்துட்டான் அடுத்தவன் பொண்டாட்டிய ரசிக்குற மாறி குத்தம் சொல்லிட்டு.. ‘ என விரட்டி விட்டான் தரன். 


தன் தம்பி போல் வளர்த்தாலும் ஹரிணி சேந்தனை கொஞ்சும் போது எழும் பொறாமை உணர்வை அடக்கத்தான் முடியவில்லை அவனால்.. எல்லாத்திற்கும் மேலாக தனக்கு இதுவரை கிடைத்திடாத அவளின் ஆசை முத்தம் சேந்தனுக்கு கிடைத்ததால் கடுப்பாகி விட்டான் தரன்.. 


சேந்தனின் நெற்றியில் முத்தமிட்டவள் " பூவத்த நா தொட்டுட்டேன்.. நா தொட்டுட்டேன்.. முத்தம் கூட குடுத்தேனே... ஹே.. " என குதுகலத்துடன் அங்கிருந்தவனை கண்டுகொள்ளாமல் சென்றாள்... 


'ஹி....ம் எனக்கு எப்பதா இதுமாறி ஒரு முத்தம் கிடைக்குமோ.. ' என பெருமூச்சு விட..


' அவா குடுக்கலைனா நீ அப்படியே  விட்டுடுவ பாரு.. ' என்ற மனசாட்சியை போர்வை போர்த்தி உறங்க வைத்தான்.. 


சேந்தனிடம் சென்றவன் ஹரிணி முத்தமிட்ட இடத்திலேயே அவனும் முத்தமிட தரனின் தேகம் சிலிர்த்தது.. காற்றில் பறப்பதைப் போல் உணர்ந்தவனை இந்த காதல் என்னென்ன பாடு படுத்த போகுதோ..


"ஆஹா.. ஆஹா.. இந்த இந்து கைல அப்படி என்ன தா பக்குவம் இருக்கோ.. ஐய்யையோ யாரும் வந்திடுறதுக்குள்ள சாப்பிட்டுறனும்.. ம்... " என தட்டு நிறைய சாப்பாட்டை வைத்து உள்ளே தள்ளிக் கொண்டு இருந்தான் பிரகாஷ்.. 


"  தம்பீ.. " குரல் கொடுத்தான் கௌதம்..


" எவன்டா அவென் உறவு மொற சொல்லி பிச்ச எடுக்குறது.. எவனா இருந்தாளும் ஐ ஆம் பிஸி போய்டு அப்றம் வாப்பா.. " பிரகாஷ்.. 


" டேய்.. என்னடா அண்ணன மறந்துட்ட போல.. பிச்சக்காரன வெறட்டுற மாறி வெறட்டுற.. போய்ட்டு அப்றமா வரனுமால்ல.. அண்ணன்கிற  மரியாத கொஞ்சம் கூட இல்லாம போச்சு.. " கௌதம்.. 


" என்னண்ணே அப்படி சொல்லிட்ட.. நீ இல்லாத இந்த ஒரு நாள்ல நா எப்படி இளச்சி போய்ட்டே தெரியும்.‌. பாலை வனத்துல பெஞ்ச மழையாட்டம் சரியான‌ நேரத்துக்கு வந்த, இல்லைன்னா உந்தம்பிய நீ கருவாடாத்தா பாத்திருப்பண்ணே.. கருவாடாத்தா  பாத்திருப்ப.." என்றான் வராத கண்ணீரை துடைத்த படி..


" தெரியுதுடா.. நல்லாவே தெரியுது.. உன்னோட பேண்ட் சைஸ்ஸும் அதுக்குள்ள அடங்காம தொங்கிகிட்டு இருக்குற உன்னோட தொப்பையும் நா இல்லாம நீ எவ்ளோஓஓஓஓ கஷ்டப்பட்டிருக்கன்னு சொல்லுது.. " கௌதம்.. 


" அண்ணே.. துக்கம் தொண்டைய அடைச்சிடுச்சுண்ணே அத வயித்துக்குள்ள தள்ள தா கொஞ்சம் கொஞ்சம் அதிகமா சாப்டேன் போல.. உன்னைய பாத்துட்டேன்ல்லண்ணே.. சரியாகிடும்ண்ணே.. " 


" நீ திருந்தமாட.. என்னது டா அது... காமிடா.. டேய் ... " என தட்டில் இருந்த சாப்பாட்டை பறிக்க முயன்ற கௌதமின் கையில் மாட்டாமல் தட்டை திருப்பிக் கொண்டான் பிரகாஷ்.


" டேய்.. இது நண்டு தான.. என்னடா அதுக்கு இத்தன கால்லா இருக்கும்... " கௌதம் தட்டில் இருந்த நண்டை எடுக்க வர.. 


" ம்ஹிம் மாட்டேன்.. சொத்துல கூட பங்கு கேளு தாறேன்.. ஆனா சோத்துல.. ம்ஹிம்.. " என தர மறுத்தான் பிரகாஷ்..   


" டேய் நாம அப்படியாடா பழகிருக்கோம்.. நாம ரெண்டு பேரும் அந்த விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்துல வர்ர சரத்குமார் விக்ரம் மாறி பெஸ்ட் அண்ணனும் தம்பியும் இல்லை.. " 


" பாசமுள்ள சூரியனே... " பிரகாஷ் .


" பிறை தேயாத சந்திரனே.. " கௌதம்..


" ச்ச.. ஒத்த நண்டுக்காக அண்ணனும் தம்பியும் பாடுறேன்னு காத பஞ்சர் பண்ணிடாதிங்க..‌ இந்தாங்க... " என ஹரிணி இருவருக்கும் ஒன்றை தர..


" அப்பாடா அவனோடத விட நம்ம இது பெருசாத்தா இருக்கு... " என பிரகாஷ் தட்டை எட்டிப்பார்த்து நிம்மதி அடைந்தான் கௌதம்.. 


" ரொம்ப சந்தோஷப் படாத ண்ணே.. எனக்கு இது நாலாது.. உனக்கு இதுதா ஃபஸ்ட்.. ம்.. என்ஜாய்.. " என தட்டுடன் எழுந்து சென்றான் பிரகாஷ்.. 


"பெரிம்மாட்ட வர்ர வெள்ளிக்கிழமையும் இதே மாறி சமக்க சொல்லனும்.. " கௌதம்..


" ஏ.. ஹிட்லர் வாராரா.. " ஹரிணி.. 


" இதோ பாரு.. நா நல்ல மூடுல இருக்கும் போது காட்ஜில்லாவ எதுக்கு நியாபகப் படுத்துற.. " 


" பின்ன யாருக்கு விருந்தாம்... " 


" ஹிட்லர் வெள்ளிக் கிழமை வரல.. ஆனா நாளைக்கே வந்திடுவாரு... அப்றம் விருந்து யாருக்குன்னா வீட்டு மாப்பிள்ளைக்கு.‌‌. " . 


" யாருண்ணே கதைல புது கேரக்டர்ரா.. " பிரகாஷ் . 


" தட்ட காலி பண்ணிட்ட போலையே.. " 


" பின்ன நண்டோட வர நா என்ன முட்டாளா... அதவிடுண்ணே யாரந்த புதிய கதாப்பாத்திரம்... " 


" ஏற்கனவே இன்ரோ குடுத்த கேரக்டர் தா.. நம்ம பவிக்கு பாத்திருக்குற இளிச்சவாயன்.. ஐய்யையே தப்பா சொல்றேன்.. மாப்பிள்ளை... " 


" ராகவ் அண்ணா வாராரா.. " என அதிர்ந்தவள் பின் " அதெப்படி வர முடியும்.. கான்ரெக்ட் போட்டிருக்கே.. அது முடியாம எப்படி... " ஹரிணி வினவ..


" கேன்சல் பண்ணீட்டு தா.. " 


" அதுவும் உடனே எப்படி.. " 


" நீ எப்ப கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னியோ அப்பவே பேப்பர் போட்டாச்சி.. எல்லா ஃபர்மாலெட்டிஸ்ஸையும் முடிஞ்சிடுச்சி.  இங்க அதாவது உன்னோட புகுந்த வீட்டுக்கு வர்தா சொல்லி அட்ரெஸ் எல்லாம் வாங்கிருக்காரு டார்லிங்.. " அழுத்தமாக.. 


" இங்க எதுக்குண்ணே... " பிரகாஷ் .


" உங்கண்ணனுக்கு விருந்து குடுக்க.. " 


" விருந்தா.. " 


" ஆமாடா.. ஒரே தங்கச்சியோட ஒரே புருஷன்.. விருந்து வைக்க வேண்டாமா.. தலைல ஒரு மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்..  சீ.. ஃபைவ் ஸ்டார் ஹோட்டலையே தூக்கிட்டு வாராராம்.. விருந்துக்கு... உன்னோட அண்ணன தயாரா இருக்க சொல்லு.. கைல பேண்டேஜ்ஜோட..  " 


" அண்ணே நீ எதோ உள்குத்து இருக்குற மாறி பேசுறிங்களோ..." பிரகாஷ் சந்தேகமாக.. 


" உள்குத்தும் இல்ல  வெளிகுத்தும் இல்ல.. உனக்கு மச்சான் வாரான்.. அவ்ளோ தா.. போய் விருந்துக்கு என்ன என்ன வேணுமோ அத வாங்குற வழியப் பாரு.. " என்று விரட்டினான் பிரகாஷை.. 


ஹரிணி மட்டும் குழப்பத்தில் இருந்தாள்..  


தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  

அன்பே 45

அன்பே 47

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...