முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 47


 

அத்தியாயம்: 47


ஆ.. 


யாராவது இத்துனூண்டு டேப்பு இல்லைன்னா துணிய வச்சாது இந்தாளு வாய மூடுங்கடா.. வந்ததுல இருந்து பேசிக்கிட்டே இருக்காரு... ஷப்பா.. சோத்து அண்டாவ விட பெருசால்ல இருக்கே வாயி.. மூடவே முடியாதோ..


இது கௌதமின் மைண்ட வாய்ஸ்.. ஏனெனில் ஹிட்லர் வந்தவுடன் ஆரம்பித்த முன்னுரை முடிவுரை இல்லாமல் சென்று கொண்டே இருந்தது..  


" ஏ அப்பத்தா.. இவர பெக்கும் போது பேசிக்கிட்டே இருந்தியா.. மனுஷன் நான்ஸ்டாப்பா நிப்பாட்டவே மாட்டேங்கிறாரு.. " கௌதம்.. 


" தெரியலையே ராசா.. எனக்கு பிரசவம் பாத்த கிழவியத்தா கேக்கனும்..‌ ஆனாலும் ஓ அப்பனுக்கு வாய் வாருகால் மாறி நீளந்தா..‌ " நாச்சியம்மாள்.. 


" ம்மா நீ என்னம்மா இவனுங்களுக்கு வக்காளத்து வாங்கிகிட்டு அண்ணன கேலி பேசுற... அவரு கோபத்துல அர்த்தம் இருக்குள்ள... " கவியரசன்.


" என்னத்த அர்த்தத்த கண்டுட்டீரு நீரு.. சொல்லு சித்தப்பு.. " கௌதம்..


" ஏன்டா அவரு பொண்ணுக்கு பாத்து வச்சிருக்குற மாப்பிள்ள வாராருன்னா அத நீ மொதல்ல அவர்ட்ட தான சொல்லியிருக்கனும்.. நீ சொல்லல.. பவிட்ட வாது சொல்லியிருக்கலாம்ல.. அண்ணனா பொறுப்பில்லாம இருக்குற.. அதா அண்ணே  கோபப்படுறாரு..‌ " கவியரசன் கலியபெருமாளுக்கு ஆதரவாக பேச..


" வாதம் சரியா இருக்குண்ணே.. நீ உன்னோட கடமைய சரியா செஞ்சிருக்கனும்ல.. ஏ செய்யல.." பிரகாஷ் ஜர்ஜ்ஜாக அமர்ந்திருந்தான்.. 


" டேய்.. " கௌதம்..


" இருண்ணே.. நா அப்பறம் எதுக்கு வக்கீலுக்கு படிச்சுட்டு வந்திருக்கேன்.. ஹாங்.. சித்தப்பு சொல்லுறது சரித்தான மச்சான் இஸ் ஆன் தி வே ன்னு இப்ப சொன்னா என்ன அர்த்தம்.. அதுவும் சிட்டீல படிச்சவர கிராமத்துக்கு வரவச்சது தப்பு இல்லயா.. வசதி சரியில்லைன்னு மாப்பிள்ளை கோய்ச்சுட்டு போய்ட்டா ‌பவிய யாரு கட்டிப்பா.. மும்பையா இருந்தாலாவது  பாவ் பஜ்ஜி வாங்கி குடுத்து பாவ்லா பண்ணிருக்கலாம்.. இப்ப எத குடுத்து தாஜ்ஜா பண்ண.. நீங்க செஞ்ச குற்றத்துக்கு தண்ட தயார்.. அதுக்கு முன்னாடி உங்க தரப்பு வாதத்த நீ சொல்லலாம்.. ப்ரொஷீட்.."  என்றவனை அருகில் இருந்த துண்டால் அடித்தான் கௌதம்‌.. 


" கருப்பு சட்ட போட்டிருந்தா நீ வக்கீலா.. நன்னாரி நாயே.. " கௌதம்..


" டேய் அவன விட்டுட்டு எதுக்கு யார்ட்டையும் சொல்லாம விட்ட.. அத சொல்லு மொதல.. " நச்சியம்மாள் .


" உங்க புள்ள சொன்னாறா.. ஊர் திருவிழாக்குன்னு கூட்டிட்டு வந்த பொண்ண அவரோட அண்ணே மகனுக்கு கல்யாணம் பண்ணி வச்சத                         

' மாப்பிள்ள... மாப்பிள்ள... இப்பிடி இப்பிடி நடந்து போச்சு.. மனசுல வச்சுக்காதிங்க.. ' அப்டின்னு... மொதல்ல யாரு ராகவ்க்கு சொல்லிருக்கனும்... இவருதான.. செஞ்சாறா‌‌..  பெத்த பொண்ணு மேல அக்கறன்னு ஒன்னு இருந்தா சொல்லிருப்பாருல்ல... இவரமாறி ஒரு கண்ணுல வெண்ணையும் இன்னொரு கண்ணுல சுண்ணாம்பையும் வக்க முடியாது என்னா.. எனக்கு ரெண்டு பேருமே ஒன்னுதா.. பாரபட்சமெல்லாம் கிடையாது.. அவுங்க வாழ்க்கைல யாராது வெளாட நெனைச்சா அவ்ளோ தா.." என கெத்தாக சொன்னவன் பின்.. 


  "ராகவ் பத்தி எனக்கு நல்லா தெரியும்.. அவரு பவிய எந்த சூழ்நிலையிலும் விட்டுட மாட்டாரு.. " என தரனை முறைத்துக் கொண்டே சொல்லிச் சென்றான்..


' மிரட்டுறானாம்.. குத்திக்காடுறானாம்.. இந்த பார்வைக்கு என்ன பயப்பட வேற சொல்றான்... ஐய்யோ.. ஐய்யோ.. ' தரனின் மைண்ட் வாய்ஸ்..


" என்னவான்டா அவனுக்கு.. " 


" மாப்பிள்ள வாராராம்.. " பிரகாஷ் .


" ம்ச்.. அதத்தா வந்ததுல இருந்து கீரல் விழுந்த ரெக்கார்டு மாறி  புலம்பிக்கிட்டே இருக்காறே பெருமாள் சித்தப்ப.. நா இவனுக்கு என்னனு கேட்டேன்.. " தரன் .


" யாருக்கு தெரியும்.. மனுஷன் எப்ப எப்படி மாறுறாருன்னு சொல்லவே முடியலையே.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடித்தா சிரிச்சாப்ல இப்ப மொறச்சுக்கிட்டே போறாப்ல.. சீக்கிரம் ஆஸ்பத்திரில காமிச்சு நம்ம இந்துவோட வாழ்க்கைய காப்பாத்திடனும்.. " பிரகாஷ். 


வெள்ளிக்கிழமையும் வந்தது.. வீட்டார் ஆவலுடன் தங்கள் வீட்டு மாப்பிள்ளையை காண காத்துக் கொண்டிருந்தனர்..


தன்னை சுற்றி இருப்பவர்கள் சந்தோஷமாக இருக்க தான் மட்டும் ஏன் டென்ஷனா இருக்கிறோம் என நினைத்தபடி பூனை போல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் ஹரிணி.. 


" டார்லிங்.. பேரு என்ன வக்கனும்னு முடிவு பண்ணிட்டியா.. " கௌதம்..


' என்னடா வேணும் உனக்கு.. ' என்பது போல் அவனை பார்த்தாள் ஹரிணி..


" இல்ல.. டாக்டர் வாக்கிங் போக சொன்னதுக்காக இப்படி விடாம ரெண்டு மணி நேரம் நடந்தா குழந்த உடனே‌ டெலிவரி ஆகிடுமே.. அதுக்கு நேம் சூஸ் பண்ணிட்டியான்னு கேட்டேன்.. " 


" ஏன்டா நீ வேற நேரம் காலம் தெரியாமா மொக்க போடுற.. " என நொந்து கொண்டாள் ஹரிணி.


" இல்ல இன்னும் பத்து நிமிசம் குட்டி போட்ட பூன மாறி இப்டியே நடவேன்.. அடுத்த பத்து நிமிஷத்துல பேபிக்கு பெர்த் டே தா..‌. " என அவனும் விடாது வம்பிழுக்க..


" குட்டி போட்ட இல்ல அண்ணா குட்டி போடப் போற பூன.. என்ன ஹரிணி கரெக்ட் டைமிங்கல நா என்ரி குடுத்து அண்ணே பண்ண மிஸ்டேக்க திருத்திட்டேனா..  அதான் டா வக்கீலு... " பிரகாஷ்..


' ஒரு இம்சையையே சகிக்க முடியாது இதுல இன்னொன்னா.. காப்பாத்துங்க கடவுளே.. ' என வேண்டிக் கொண்டவள் அவர்களிடம் எதுவும் பேசவில்லை... 


" டார்லிங்.. டார்லிங்.. உன்னோட புருஷனுக்கு லக்கி நம்பர் அப்படின்னு எதுவும் இருக்கா.. " என்றவனை முறைக்க.. 


" அண்ணே.. தரன் அண்ணனுக்கு எட்டாம் நம்பர்னா புடிக்கும்ணே.. ராசின்னு சொல்லுவாரு.. ஆமா எதுக்கு கேக்குற..‌ " பிரகாஷ் .


" பதில் சொல்லிட்டு கேள்வி கேக்குற பாரேன்.. உன்னைய மாறி நாலு அறிவாளி தா தேவ நாட்டுக்கு.. " என்றவன் ஹரிணியின் தோலில் கை போட்ட படி..


 " பக்கத்துல இருக்குற ஹாஸ்பிட்டல்ல பேசி அந்த ரூம்லையே உன்னோட புருஷன அட்மிட் பண்ணிடுவோம்.. " கௌதம்.. 


" எதுக்கு.. " பிரகாஷ் .


" எப்படியும் ஒரு ஃபைட் சீன் நடக்கப் போது உன்னோட அண்ணே மூக்கு வாயில ரத்தம் வடிய படுத்திருக்கும் போது ராசியான நம்பர் ரூம் கிடைக்கலைன்னா‌.. அதா இப்பவே புக் பண்ணி வைக்கிறேன்.." 


" அடிச்சா எங்கண்ணனுக்கு திருப்பி அடிக்க தெரியும்.. " பிரகாஷ் ரோசமாக..


" அப்ப பக்கத்துல இருக்குற ஒம்பதாம் நம்பர மச்சானுக்கு புக் பண்ணிடுவோம்.. " என்க.. இருவரும் கை தட்டி சிரித்தனர்.. 


" ஏன்டி.. அவிங்க உன்னைய கேலி பண்ணீட்டு இருக்காங்க.. நீ ஒன்னும் சொல்லாம கல்லுப் பிள்ளையார் கணக்கா இருக்குற.. என்னடி ஆச்சு.. " மலர்.. 


" ஒன்னுமில்ல பூவத்த.. " என்றவள் நங்கையின் மடியில் தஞ்சம் அடைந்தாள். 


வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது.. ' ஐ புலி வந்துடுச்சு ' என‌ அனைவரும் வாயிலுக்கு விரைந்தனர்.. 


ஐந்தரை அடியில்,  மாநிறத்தில் , இருபத்தி ஏழு வயது மதிக்கதக்க இளைஞன் வந்திறங்கினான்.. மஞ்சளும் நீலமும் கலந்த செக் டிசைன் டீசர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் என வந்திருந்தவன் கண்களின் கட்டுப்படுத்த பட்ட கோபம் தெளிவாய் தெரிந்தது... 


பரஸ்பர அறிமுகத்திற்கு பின் பெரியவர்களிடம் சகஜமாக பேசிக்கொண்டு இருந்தான் ராகவ்.. ஹரிணியிடம் ஏதும் பேசவில்லை பேசவும் முயற்சிக்கவும் இல்லை..


" வ்...வ்....வ்....வாவ்.. " என வாயைப் பிளந்தான் பிரகாஷ்..


" டேய் நாட்டுல பொம்பளப் பிள்ளைங்களுக்கு பஞ்சமாயிடுச்சுன்னு  இப்ப நீ ஆம்பளைங்கள சைட் அடிக்க ஆரம்பிச்சுட்டியா.. அவனாடா நீ.. " கௌதம் சந்தேகமாய்..


" அண்ணே போண்ணே‌.. ரசிக்க கூட விடமாட்டிக்கிற.. யாருண்ணே இந்த சல்மான் கான் ஜெராக்ஸ்.‌.. " 


" இவரு தான் டா ராகவ்.. ஹரிணியோட அண்ணன்கள்ல இவரும் ஒருத்தரு.. " கௌதம் .


" எத்தனாவது அண்ணன்ண்ணே.. " 


" இதப்பாரு நல்லா பதில் தெரிஞ்ச கேள்விக்கே நா திருதிருன்னு முழிப்பேன்.. நீ என்னடான்னா பதிலே தெரியாதத எல்லாம் கேக்குற.. அண்ணன்னா அண்ணே அவ்ளோ தா.. எத்தனாவதுன்னு கேட்டா தலைல பணியாரம் மொளைச்சுடும் பரவாயில்லையா.. இப்ப சொல்லு யாரு இவரு.. " கௌதம்..


" நம்ம மச்சான் ண்ணே.. ராகவ் மச்சான்.. ஓகே.. "  தலையில் வீங்கி விட்டதா என தடவிய படியே சொன்னான் பிரகாஷ்.. 


" அது.. பொழைக்க தெரிஞ்ச பிள்ள டா நீ.. " 


" நம்ம பவி மேல சல்மான் கானுக்கு ஓவர் லவ்வோ... பார்வையாலே கவிதை எல்லாம் பாடிடுவாரு போல..." பவித்ராவை முறைத்துக் கொண்டு இருந்த ராகவனை சுட்டிக்காட்டி பிரகாஷ் கூறினான்..


" எப்படி டா உன்னோட கண்ணு மட்டும் தப்பு தப்பா எல்லாத்தையும் பாக்குது.. 

என்னா சொன்ன லவ்வா ராகவ்க்கு இல்ல.. பவிக்குத்தா லவ்வு... அதாவது.. " 


" அண்ணே கத சொல்லப் போறியாண்ணே.. " 


" ஆமாண்டா.. ஏ.. " 


" சீக்கிரம் சொல்லி முடிச்சுடுண்ணே... அப்றம் பாக்குறவங்க காண்டாகிடுவாங்க.. " 


" அப்டீங்கிற ஓகே.. சாட் அண்டு ஸ்வீட்டா முடிச்சுடுறேன்.. அதாவது பவி ஃபஸ்ட் இயர் காலேஜ் படிக்க, ஹிட்லர் எங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற காலேஜ்லே சீட் வாங்கி தந்தாரு..." 


" ம்... " 


"  ஒரு மாசம் கூட அங்க படிக்கல அவா.. வேற காலேஜ் சேக்க சொல்லி அப்ளிகேஷன அவளே வாங்கீட்டு வந்தா.. " 


" அப்புறம்.. " 


" ஹிட்லர் முடியாதுன்னாடாரு.. " 


" ஐய்யையோ.. " 


" அன்னைக்கு ராத்திரி 6.7 ரிக்டர் அளவுல மினி எர்த் குவக்  எங்க வீட்ட மட்டும் அட்டாக் பண்ணுச்சு.."


" அப்படீன்னா.. " 


" பூகம்பம் டா.. குறுக்க குறுக்க பேசாம கேட்டா வேகமா முடிச்சுட்டுவ.. இல்லன்னு வை.. " 


வாயில் கைவைத்துக் கொண்டான் பிரகாஷ்..


" ஹிட்லர் உடனே அவா ஆசப்பட்ட காலேஜ்லையே சேத்தாரு.. ஆனா படிப்பு மட்டும் வரவே இல்ல.. அரியர் அரியர்.. எல்லாத்துலையும் அரியர்.. " 


" உன்னைய மாறியா டா.. " நங்கை . 


" ஏஞ்சல் அவா ஆறு அரியர்.. நா ஐஞ்சு அரியர் தா.. நா கொஞ்சம் படிப்பாளியாக்கும்..  " 


" மேக்குறது எரும அதுல என்ன பொறும.. " கவியரசன்..


" யூ டூ சித்தப்பு.. இட்ஸ் ஓகே.. லெட்ஸ் கண்டின்யூ... காரணம் என்னன்னு ஹிட்லர் கேட்டப் லவ் பண்றேன்னு சொன்னா.. முடியாதுன்னு ஹிட்லர் சொல்ல.. அன்னைக்கும் எங்க வீட்ட பூகம்பத்தோட சேத்து சுனாமியும் அட்டாக் பண்ணுச்சு.. பாத்தா அவா படிக்குற காலேஜ் புரொபசர்ர லவ் பண்ணிருக்கா.. இவ்ளோ ஆனதுக்கு அப்றம் அது ஹரிணியோட அண்ணன்னு நா சொல்ல வேண்டியது இல்ல... " 


"வேக வேகமா கல்யாணம் பண்ணிக்க பவிக்கு ஆச தா.. ஆனா படிப்பு முடியாம நோ மேரேஜ் அப்படின்னு சொல்லீட்டாரு ராகவ்... பாடம் சொல்லிக்கிடுக்குற வாத்தியாரே ஸ்டூடெண்ட கரெக்ட் பண்ணிட்டாருன்னு யாரும் சொல்லக் கூடாதுல.. அதுனால கல்வி சொல்லிக் குடுக்குற வாத்தியார கல்லு மேல கல்லு அடுக்கி வீடு கட்டுற கொத்தனாராக்கிட்டா எங்க பவி.. " சோகமாக..


" கொத்தனாரா.. " கவியரசன். 


" ம்.. ஆமா.. கொத்தனாரு தா.. அத இங்கிலீஸ்ல பில்டிங் கன்ஸ்டெக்ஸன் அப்படின்னு சொல்லுவாங்க... துபாய் குறுக்கு சந்து... பஸ் ஸ்டாப் பக்கத்துல வீடு அவருக்கு.. " .


" டேய்.. சிவில் இன்ஜினியரிங்கையா சொல்லுற.. அடப்பாவி இன்ஜினியர் டா அந்த தம்பி.. " நங்கை . 


" ஹாங்.. அது தா.. தமிழ்ல கொத்தனாரு.. " 


" டேய்.. " என்றபோது வீடு திடீரென நிசப்தம் ஆனது... 


தரனின் புல்லெட்டின் சத்தம் கேட்டு.. 


சாவியை விரலில் சுழற்றியபடி வந்தவன் கண்டது கண்களில் கோபத்துடன் தன்னை கூர்ந்து பார்த்துக் கொண்டு இருந்த ராகவை தான்.. 


" சம்பத்.. " என்றான் சந்தோஷமாக.. 


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி




கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...