அத்தியாயம்: 48
ஒரு துளி கண்ணீர்..
துடைப்பது நட்பல்ல..
மறு துளி கண்ணீர்..
வர விடாமல் தடுப்பதே..
உண்மையான நட்பு..
" மச்சான்.. " என ஆனந்தத்தில் அழைத்தான் ரிஷி தரன்..
பல வருடங்கள் கழித்து தன் நண்பனை சந்திக்கும் மகிழ்ச்சியில்..
தரனின் குரல் கேட்டது தான் தாமதம் கவணில் இருந்து புறப்பட்ட கல் போல் அவன் மேல் பாய்ந்தான் சம்பத் ராகவன்..
தரனின் சட்டையை கொத்தாக பிடித்தவன்.. " டேய்.. உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா.. என்னோட ராணிம்மாவ.. ராணிம்மாவ.. நீ போய் கல்யாணம் பண்ணிருப்ப.." என அடிக்க ஆரம்பித்தான்..
வீட்டினர் குழம்பிப் பார்க்க தடுக்க போன பிரகாஷ்ஷை பிடித்தான் கௌதம்..
" இருடா.. நாலு அடியாது வாங்கிகட்டும்.. கண்கொள்ள காட்சி டா அது.. ஆரம்பிச்ச உடனே தடுத்தா எப்பிடி.. பொறுடா.. " என்றான்..
' வேண்டாம்.. ' என தரன் கண்களால் வீட்டினரை தடுத்தவன்..
" சத்தியமா உன்னோட தங்கச்சி... உன்னோட ராணிம்மான்னு எனக்கு தெரியாது டா மச்சான்.. தெரிஞ்சா திரும்பிக் கூட பாத்திருக்க மாட்டேன்.. " ரிஷி சிரித்துக்கொண்டே..
“ பொய் சொல்லாத டா.. “
“உ ராணிம்மாவ அன்னைக்கி கேட்டப்பவே அறிமுகம் செஞ்சிருந்தேன்னா இந்த பிரச்சனையே வந்திருக்காது.. அட்லீஸ்ட் ஃபோட்டோலயாது நீ உந்தங்கச்சிய காட்டிருக்கலாம்.. “
" நீ தா சென்னைல எந்த பொண்ணையோ லவ் பண்ணேல்ல.. அப்றம் எதுக்குடா ராணிம்மாவ கல்யாணம் பண்ண... " சண்டையிட்டுக் கொண்டே..
" அந்த பொண்ணு இருக்குற திச பக்கமே போக்கூடாதுன்னு நீயும் எங்கப்பாவும் சேந்து தானடா சத்தியம் வாங்குனீங்க.. மறந்துட்டியா.."
" இத நா நம்பனுமா.. நாங்க சொன்னா நீ அப்படியே கேட்டுடுவ பாரு.. உன்ன பத்தி எனக்கு நல்லாவே தெரியும் டா.. ஃப்ராடு டா நீ.. ஐய்யோ.. உன்னப் போய் எங்க ராணிம்மாக்கு ஜோடியா என்னால பாக்க முடியலயே..." என தன் ஆத்திரம் அடங்கும் வரை வெளுத்து எடுத்தான் சம்பத்..
தரன் சம்பத்தை தடுக்க வில்லை மாறாக அவனுக்கு அந்த அதிரடியான அன்பு தேவையானதாக இருந்தது.. தந்தையின் ஆக்ஸிடென்ட்க்கு பிறகு அவன் மனம் விட்டு யாருடனும் பேச வில்லை.. சொல்லப்போனால் இறுகிப் போய்த்தான் இருந்தான் தரன்.. பல காரணங்கள் இருந்தன அந்த இறுக்கத்திற்கு..
மனபாரம் அதிகமாகும் போது தன் நண்பனின் நினைவு வரும் இருந்தும் அவர்களை அழைக்க வில்லை.. யாருக்கும் தான் இருக்கும் இடத்தை தெரியப்படுத்தவும் இல்லை அவன்..
அடித்து ஓய்ந்து போய் இருந்தவனை நாடிச் சென்று அணைத்தான் தரன்..
" மச்சான்.. எனக்கு தெரியாதுடா.. நம்புடா.. "
" எத நம்ப மாப்ள.. நீ ராணிம்மாவ பத்தி எதுவும் தெரிஞ்சுக்காமலா கல்யாணம் பண்ணிக்கிட்ட.. "
சம்பத்தின் மாப்பிள்ளை என்ற அழைப்பு தரனுக்கு மகிழ்ச்சியை தந்தது..
" நா விசாரிச்ச வரைக்கும் ஹரிணிக்கு ஒரு அண்ணன் தான்டா.. நீ அந்த லீஸ்ட்லேயே இல்ல.. அவா வீட்டுல கூட பாத்தேன்.. ஒரு ஃபோட்டோ கூட உன்னோடது இல்லையே.. அவ்ளோ பாசம் உன்னோட ராணிம்மாக்கு உம்மேல.. " என்றவனை தீயாய் முறைத்தாள் ஹரிணி..
" நீ வா மச்சான் நாம மேல போய் பேசுவோம்.. இங்க bad vibration ஜாஸ்தியா இருக்கு.. வா.. " ஹரிணியை கண்டு கொள்ளாமல் சம்பத்தை அழைக்க அவன் நகராமல் நின்றான்..
" ம்ச்.. வா மச்சான்.. " என சம்பத்தை தூக்கிச் சென்றான் தரன்.. யாரும் இதை எதிர்பார்க்கவில்லை..
" ஹரிணி.. இங்க என்ன நடக்குது... உனக்கு ஏதாவது புரியுதா.. " கௌதம் புரியாமல் கேட்க..
" ஏ இவ்வளோ நேரம் தூங்கிகிட்டா இருந்த.. கண்ணு முன்னாடி தான நடந்தது.. இடியட்... " ஹரிணி பாப்கார்ன்னாக வெடித்தாள்..
அவளை விசித்திரமான பார்த்தான் கௌதம்..
" என்னடா.. "
" உன்னைய பாத்தா பொறாம படுற மாறி தெரியுதே.. ம்... உம்புருஷெ உன்னைய விட்டுட்டு உன்னோட அண்ணன தூக்கிட்டு போனதுனால இருக்குமோ.. " கௌதம்
" ஓ மூஞ்சி... ரெண்டு பேருக்கும் ஒருதர ஒருதர் தெரியும்ன்னு எதிர்பார்த்தேன்.. ஆனா தூக்கிட்டு போற அளவுக்கு பழக்கம் இருக்கும்னு நினைக்கல.. " ஹரிணி..
" எதிர் பாத்தியா? எப்படி?... "
" ம்ச்.. தீப்தியும் ராகவ் அண்ணனும் ஒரே காலேஜ்ல தா படிச்சாங்க.. தீப்திக்கு உங்கண்ணன தெரியும்னா... ராகவ் அண்ணாக்கும் தெரியும் தான.. " .
" ஓ.. கல்லூரி தோழர்களா.. உனக்கு ஏற்கனவே தெரியும்ங்கிறத எனக்கு தெரிய படுத்தியிருக்கலாம்ல.. பாரு நா வேற ஹனிமூன் கப்பிள்க்கு ரூம் புக் பண்ற மாறி ஹாஸ்பிட்டல்ல ரூம் புக் பண்ணிட்டேன்.. ஹீம்.. போட்டு வச்ச ரூம் வேஸ்ட்.." கௌதம்.
" அவெ அவனுக்கு என்ன கவலன்னா உனக்கு ஒரு தனி கவல.. ச்ச.. " சலிப்பாக.
" ஏ டார்லிங் சலிச்சுக்குற.. "
" ஒரு வாரமா அண்ணா ஏன்ட பேசவே இல்ல... நா கால் பண்ணாலும் எடுக்கல.. பாரு வந்ததுல இருந்து என்ன பாக்க கூட இல்ல.. " அவனின் தோலில் சாய்ந்து வருத்தமாக கூறினாள் ஹரிணி..
தனக்கு பிடித்தவர்கள் தன்னிடம் காட்டும் மௌனத்தை அவள் என்றும் விரும்பியதில்லை..
" ஓ.. அதா காலைல இருந்து டென்ஷனா இருந்தியா.. " என அவளின் தோலிலை வருடியவன்..
" எனக்கு தெரிஞ்சு ராகவ் க்கு உம்மேல கோபமே வராது.. ஃப்ரெண்ட்ஸ் பல நாள் பாக்கம இருந்ததால உன்ன கவனிச்சிருக்க மாட்டான்.. மத்தபடி கவலப் பட ஒன்னுமே இல்ல டார்லிங். " என்றான் கௌதம் சமாதானமாக ..
மாடியறையை கவலையுடன் பார்த்தபடி சென்றாள் அவளின் அறைக்கு.. தரனும் ஹரிணியும் ஒரே அறையில் இருக்க சம்மதிக்கவில்லை.. கர்ப்பமாக இருப்பதால் கீழே நங்கையின் அறையிலேயே தங்கிக் கொண்டாள் ஹரிணி..
மேலே
" க்கும்.. லவர்ர தூக்கிட்டு வந்தமாறி தூக்கிட்டு இப்படி பேசாம ஜன்னல் கம்பியையே பாத்துட்டு இருந்தா என்னடா அர்த்தம்.. எதாச்சும் பேசேன்டா... அப்பாக்கு என்னாச்சு.. எப்ப ஆக்ஸிடென்ட் நடந்தது.. வைசு எங்க.. சொல்லுடா.. " சம்பத்..
"..... " .
" அப்பா சீக்கிரம் தேறி வருவாரு டா மாப்ள.. கவலப்படாத.. ஆக்ஸிடென்ட் எப்ப நடந்துச்சு.. " என்றவன் ஆதரவாக நண்பனை அணைத்தான்..
" அப்பாக்கு நடந்தது ஆக்ஸிடென்ட் இல்ல மச்சான்.. "
" என்ன மாப்ள சொல்ற.. "
" ஆமா.. மச்சான்... ஆக்ஸிடென்ட் இல்ல... யாரோ அவர கொலை பண்ண ட்ரை பண்ணிருக்காங்க.. "
"என்னடா சொல்ற.. எத வச்சு அப்படி சொல்ற.. போலிஸ் கேஸ் ஃபைல் பண்ணிருப்பாங்கள்ளா.. FIR ல என்ன போட்டிருக்கு.. காட்டு நா பாக்கனும்.. "
அவனின் பிரோவில் இருந்த சிறிய மரப்பெட்டி ஒன்றை எடுத்தவன் அதன் லாக்கை ஓப்பன் செய்து சில பேப்பர்களை எடுத்தான்..
இதில் காரை சத்தியமூர்த்தி வேகமாக செலுத்தியதாகவும் காரை சர்வீஸ் செய்யாமல் இருந்தாலும் முக்கியமாக சீட் பெல்ட் போடாமல் இருந்ததாலும் காரின் டயர் வெடித்து கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததால் மரணம் ஏற்பட்டுள்ளது என பதிவு செய்யப்பட்டு இருந்தது...
" மாப்ள.. இது உண்மையா.. இல்ல போலிஸ் ஜோடிச்சு விட்ட கதையா.. " சம்பத்..
" ஆக்ஸிடென்ட் உண்மத மச்சான்.. ஆனா... " தரன்..
"என்னடா.. "
" சொன்ன ரீசன் தா இடிக்கிது.. வைசு கூட இருக்கும் போது அப்பா வேகமா ஓட்ட மாட்டாரு... கார கரெக்டா சர்வீஸ் விட்டுடுவாரு.. நம்மக்கிட்ட ரூல்ஸ் பேசுறவரு சீட் பெல்ட் போடாம எப்படி கார எடுத்திருப்பாரு.. கார் டயர் பன்சர் ஆகியிருக்கனும்... அப்படின்னாலும் பள்ளத்துல எப்படி .... " ரிஷி..
" சரி மாப்ள.. அப்ப என்ன நடந்திருக்கும்னு நெனைக்குற.. " சம்பத்
" அப்பா கார யாராது சேஸ் பண்ணிருக்கலாம்.. தப்பிக்க வேகமா ஓட்டிட்டு போயிருக்கலாம்... பதட்டத்துல சீட் பெல் போடாம இருந்திருக்கலாம்.. அப்படீன்னாலும்.." தரன்.
" இது எல்லாமே நம்மலோட யூகம் தான மாப்ள... நடந்தது என்னனு நமக்கு தெரியாதே.. எத வச்சு அப்பாவ கொல பண்ண பாக்குறாங்கன்னு சொல்ற.. " சம்பத்
" ஹாஸ்பிடல்ல டூ டைம்.. அப்றம் சென்னை வீட்டுல ஒன் டைம் மர்டர் அட்டெம்ண்ட் நடந்திருக்கு.. நா கூட இருந்ததால அசம்பாவிதமா எதுவும் நடக்கல.. " தரன்
"அப்பாக்கு ஜாப் ரிலேட்டடா எனிமீ யாராச்சும் இருக்கலாம்ல மாப்ள.. " சம்பத்
" இருக்காங்க மச்சான்.. ஆனா இந்தளவுக்கு இறங்கி பண்ணற தைரியம் அவிங்களுக்கு கிடையாது.. அப்பாவோ இல்ல வைசுவோ வந்து சொன்னாதா அன்னைக்கு என்ன நடந்ததுன்னு தெரியும்... " .தரன்
" நடந்தத மறைக்குற அளவுக்கு செல்வாக்கான ஆளு யாரா இருக்கும்... ஏன் பண்ணானுங்க.. " சம்பத் .
" அப்பாவ யாருக்கிட்ட இருந்து காப்பாத்தனும்னே தெரியல மச்சான்.. எப்ப எங்கருந்து ஆபத்து வரும்னு சொல்ல முடியாது.. அதா நா இங்க கூட்டீட்டு வந்திட்டேன்... நா இருக்குற இடம் யாருக்கும் தெரியக்கூடாதுன்னு... " தரன்.
" வைசு எங்க டா மாப்ள.. " சம்பத்..
" தெரியல மச்சான்... " என்றவனின் கண்கள் கலங்கி இருந்தது..
"அங்க எல்லா இடத்துலையும் தேடிட்டோம்.. கிடைக்கல... " வருத்தமாக..
" மாப்ள வைசு உயிரோட இருக்கான்னு நம்புறியா... “ சம்பத்..
" கண்டிப்பா உயிரோட தா இருக்கா.. எங்கையோ நல்லபடி இருக்கா.. என்னோட உள்ளுணர்வு சொல்லுது ... நிச்சயம் என்ன தேடிவருவா அந்த நம்பிக்கைல தா நா இருக்கேன்.." தரன் உறுதியாக..
" போடாங்க.. எப்படி டா வருவா.. யாருக்கும் தெரியாம உன்னோட அடையாளத்த மறச்சிட்டு இங்க வந்துட்ட.. ஃபோன் நம்பர் அட்ரெஸ் இப்படி எதாவது ஒன்னு அவளுக்கு தெரியுமா என்ன.. வருவாளாம்.. இந்த ஊரப்பத்தி அவளுக்கு தெரியுமா என்ன.. " சம்பத்.
" இல்ல.. அப்பா ஆக்ஸிடென்ட்க்கு அப்றம் தா.. இங்க இப்படி ஒரு குடும்பம் இருக்குறதே எனக்கு தெரியும்... " தரன்..
" இடியட்.. சுத்த வேஸ்ட்டுடா நீ... இதெல்லாம் தெரிஞ்சும் ஏ நீ அடுத்த ஸ்டெப் எடுக்கல.." சம்பத்..
" என்ன பண்ணனு தெரியாமலே இருக்குறேன்டா.. இப்ப வரைக்கும் யார தேட எங்க தேடனுன்னு தெரியல.. ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்.. அப்பாட்ட இருக்குற எதோ ஒன்னு அவனுக்கு தேவ பட்டிருக்கு... நிச்சயம் அத எடுக்க வருவான்.. " தரன்..
" எத ..... " சம்பத்..
" தெரியலயே மச்சான்.. " தரன்.
" சரி அதெல்லாம் விடு மாப்ள இப்ப நீ என்ன பண்ண போற.. " சம்பத்..
மௌனமாக அவனை குறுகுறுவென பார்த்தான் தரன்.. " என்ன பண்ணனும்னு எதிர்பாக்குற மச்சான்.. "
" அப்படி கேளு ஃபஸ்ட் நீ ராணிம்மாக்கு டைவஸ் குடு மாப்ள.. அது போதும் எனக்கு.. " சம்பத்..
ஒரு நிமிடம் முடியும் வரை அவனை கூர்ந்து பார்த்தவன்.. " வர்ர 26 இல்ல 28 அதுல ஒரு தேதிய வச்சுக்கலாம் மச்சான்.. " தரன்
" எத மாப்ள டைவஸ்ஸையா. " சம்பத்..
" இல்ல மச்சான்... உன்னோட கல்யாணத்த.. " தரன் கூலாக..
" வாட்.. " அதிர்ந்தான்
" நீ எனக்கு டைவர்ஸ் வாங்கித்தரனும்னு நினைக்குற ஆனா நா உனக்கு கல்யாணம் பண்ணனும்னு நினைக்குறேன்... இதுலருந்து தெரியுதுல நா எவ்ளோ நல்லவன்னு.. நீ எதோ ஒரு ஜென்மத்துல புண்ணியம் பண்ணிருக்கடா மச்சான்.. அதா நானே உனக்கு மாப்ளையா கிடைச்சிருக்கேன்.." என அவனின் தோலில் தட்டிக்குடுத்து விட்டு சென்றான் தரன்..
' புண்ணியமா.. நாலு வர்ஷமா இவன்ட்ட பட்ட பாடு போதாதுன்னு திரும்பவும் இவன்டே வந்திருக்குறேனே.. ஐய்யோ..' என நொந்து கொண்டவன் தரனின் பின்னாலேயே ஓடினான்..
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..