முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 49

 

அத்தியாயம்: 49 


வலி தந்தவரை..


உயிராய் நினைக்க வைப்பது..


தாய்மையும் காதலுமே... 



வீடே விழாக்கோலம் பூண்டு இருந்தது.. மாவிலை தோரணங்கள் பல வண்ண மலர்கள் என  வீட்டை அலங்கரித்திருந்தனர்..  


என்னவாக இருக்கும் என்று பார்த்தால் அது இந்துவின் வளைகாப்பு... 


கௌதம், ஆண்களின் அடையாளமாய் பட்டு வேட்டி சரிதமாக இருந்தவன் தன் சரி பாதியான மனையாளின் விசேஷத்திற்கு வேண்டிய அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்து கொண்டிருந்தான்.. 


இரு பெண்கள் தன் வாழ்வை வசந்தமாக மாற்றியதை எண்ணி உள்ளம் மகிழ்ந்திருந்தான் கௌதம்.. மூன்றாவதாக ஒன்று வந்தால் சந்தோஷ கடலிலேயே மூழ்கி விடுவான் போலும்... 


"அடச்ச.. இந்த வீட்டுல நமக்கு இருக்குற கொஞ்சங்‌ கொஞ்சங் மரியாத கூட இப்ப குறைஞ்சிக்கிட்டே வருது.. எல்லாத்துக்கும் காரணம் இந்த பொண்ணுங்க தா.. ஆம்பளைங்கல நிம்மதியா விடமாட்டாள்க போல.. " என துண்டை உதறிவிட்டு கைலியுடன் அமர்ந்தார் கவியரசன்.. 


" ஏ சித்தப்பு.. இப்படி பரதேசி மாறி குளிக்காம கொள்ளாம இருக்குற.. விசேஷத்துக்கு மணி ஆச்சி நீ என்னடான்னா ஆண் சுதந்திரம் பத்தி புலம்பிட்டு இருக்குற.. " கௌதம்..


" என்ன என்னடா பண்ண சொல்ற மகனே.. ஒரு மணி நேரமா நா கால் கடுக்க காத்துட்டு இருக்கேன்.. இவளுக என்னடான்னா கதவையே தொரக்க மாட்டேன்ங்கிறாளுக.. ஒரு பொம்பள கிளம்பவே ஒரு மணி நேரம் அப்படின்னு வச்சுக்கிட்டா... எம்பொண்டாட்டி ‌அப்பறம் ரெண்டு மகள்க கிளம்ப மொத்த மூனுமணி நேரம்.. நா இப்படியே தா நிக்கனுமோ.. " கவியரசன் மகள்கள் உடைமாற்ற என அவரை வெளியே துரத்திவிட்டதால் பரிதாபத்துடன் நிற்கிறார்.. 


" இதுக்கு தானா.. ஹிம்.‌. எனக்கு சித்தப்புவா இருக்குற உனக்கு மேக்ப் பண்ண இடத்த நா அரெஜ் பண்ணித்தாறேன்.. " என யாரையோ தேடியவன் அபியிடம்..


" அண்ணி அண்ணே ரெடியாகிட்டாரா... " என்க..


" உங்கண்ணே எந்திரிச்சு  கெளம்பிட்டாளும்.. ஹிம்... இன்னும் தூக்கிகிட்டு தா இருக்காரு.. என்ன மாமா நீங்க இன்னும் கெளம்பலயா..." என்றாள் தலையில் பூ வைத்தபடி கேட்டாள்..


" எங்கம்மா ரூம் வாசலையே தாண்டி உள்ள எட்டி கூட பாக்க விடமாட்டேன்கிறாளுக.. இவ்ளோ பெரிய வீடு இருந்து என்ன புரயோஜனம் குளிக்க ஒரு பாத் ரூம் இல்லையே.. "


" நீ பேசாட்டிக்கி தொழுவத்துல மாட்டோட மாட குளிச்சிருக்கலாம்ல.. பாத்ரூம்ல தா குளிப்பியோ.. வாய் பேசமா கிளம்பு சித்தப்பு.. மண்டபத்துல எல்லாம் தயாரான்னு‌ பாக்கனும்.. நா வாரேன்.. " என வளைகாப்பு நடக்கவிருக்கும் மண்டபத்திற்கு சென்றான்.. 


தன் மடிக்கணினியில் வேலை செய்து கொண்டு இருந்தான் சம்பத்.. பிரகாஷ் சம்பத்தின் முகத்தை பார்ப்பதும் பின் கணினியின் திரையை பார்ப்பதுமாக இருந்தான்..


" என்னடா..  கோழியாட்டம் தலையை தலைய ஆட்டிகிட்டு இருக்குற.. என்ன வேணும்.. " சம்பத்..


" அதுவா மச்சான் சார்.. " 


" டேய் ஒன்னு பேர் சொல்லி கூப்பிடு.. இல்ல மச்சான்னு சொல்லு இந்த சாரு மோருன்டு கூப்பிட்டன்னு வை.. " என விரல் நீட்டி அதட்டினான் சம்பத்..


"மச்சான் சார்.. நாம எது பண்ணாலும் வித்தியாசமா இருக்கனும் அப்பத்தா இந்த உலகம் நம்மல திரும்பி பாக்கும்... " 


"திரும்பி பாக்க நீ என்ன பின்னாடியே ஃபாலோ பண்ணிக்கிட்டா இருக்குற.. " 


" ஈ.‌ஈ.. மச்சான் சார் சிரிச்சுட்டேன்.. உங்க காமெடி சூப்பர்..‌ ஈ.. " என பல்லை காட்டினான்.. 


"வெளக்காத பல்ல எங்கிட்ட காட்டத்தா இவ்ளே நேரம் கூடவே உக்காந்திருந்தியா... " சம்பத்..


"இல்ல  மச்சான் சார்.. இந்த கட்டம் கட்டமா இருக்கே அதெல்லாம் என்ன.. லேப்டாப்லையும் பல்லாங்குழி வெளாடலாமா.. " சந்தேகமாக..


" பல்லாங்குழியா நீ எப்ப மச்சான் அதெல்லாம் விளாட கத்துக்கிட்ட.. சொல்லவே இல்ல.. " தரன்..


" வா டா நல்லவனே.. உன்னத்தா தேடுனேன்.. உந்தம்பி தா நா வரைஞ்சு வச்சிருக்குற டிசைன அப்படி சொல்லுறான்னு பாத்தா உனக்குமா அது பல்லாங்குழி மாறி தெரியுது.. " என லேப்டாப்பை அவனிடம் காட்டினான்.. அதன் குறை நிறைகளை இருவரும் ஆலோசிக்க ஆரம்பித்தனர்.. 


' முன்னாள் கொத்தனாரும் இன்னாள் கொத்தனாரும் சேந்து புதுவித தாஜ்மாகால் கட்ட ப்ளான் போடுறாங்க போல.. ஹிக்கும்.. சட்ட புத்தகத்த பத்தி பேசுனாலே நமக்கு புரியாது.. இதுமட்டும் புரிச்சுடவா போது.. ' பிரகாஷ்.. 


ஆங்கில வகுப்பில் அமர்ந்திருப்பது போல் ஒன்றுமே புரியாமல் பாவமாக  முழித்துக் கொண்டு இருந்தான்.. 


திடிரென தரன் பேசுவதை நிறுத்தினான்... அவனின் காதுகளில் மெல்லிய சலங்கையின் ஓசை கேட்டது.. அது யாருடையது என அவனுக்கு நன்கு தெரியும்... தன்னவளின் ஓசை.. 


பூஜை அறையில் இருந்து சில கவர்களுடன் வெளியே வந்து கொண்டிருந்தாள் ஹரிணி எப்பொழுதும் போல் மிதமான ஒப்பனையில்.. அவளின் கூந்தல் இப்போது இடையை தொட்டிருந்தது.. அதை பின்னி மணக்கும் மல்லிகையை சூடியிருந்தாள்.. வெளிர் கத்தரிப்பூ நிற பட்டு அவளின் கோதுமை நிறத்திற்கு அழகாய் பொருந்தியிருந்தது.. 


காலில் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் சில சலங்கையுடன் அவள் மாட்டியிருந்த மெட்டியின் ஒலி அது.. சலங்கையில்லாமல் மெல்லிய சங்கிலி போல் அணிந்திருந்த கொலுசு சத்தமிடவே இல்லை... தன் முந்தானை கொண்டு பெரிதாக வளர்ந்திருந்த தன் வயிற்றை மறைத்து மூடியிருந்தாள்...


' தன் உயிரை 

சுமக்கும் தன்னவள்!!.. வாவ்.. கவிதல்லாம் வருதை நமக்கு...' தரனின் மைன்ட் வாய்ஸ்  .


இப்படி காலில் ஆரம்பித்த அவனின் பார்வை மெல்ல மெல்ல பெட்ரோல் விலை போல் ஏறி அவளின் கழுத்தை வந்தடைந்தது.. தாலி சங்கிலியுடன் நீண்ட காசு மாலை ஒன்றை அணிந்திருந்தாள்.. அதற்கும் மேல் மெல்லிய பென்டென்ட் ஒன்று இருந்தது..


அதை பார்த்தும் அவன் முகத்தில் தவுசென்ட வாட்ஸ் பல்ப் எரிந்தது... மற்றவற்றை வர்ணிக்காது அவனின் பார்வை அவளின் கண்களை வந்தடைந்தது.. சரியா அந்த நேரம் ஹரிணியும் தரனை திரும்பி பார்த்திருந்தாள்.. இருவரது பார்வையும் சந்தித்துக் கொள்ள அவர்களின் தேகம் சிலிர்த்தது.. சில நொடிகள் தான் பின் தன் இதழ்களால் பிறர் அறியாமல் அழகு காட்டிச் சென்றாள் இவனை கண்டு கொள்ளாமல்... 


அவளின் ஒவ்வொரு அசைவையும் தன் கண்களெனும் கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்தான்.. 


" மச்சான் சார்..  மச்சான் சார்.. "


" என்னடா.. " 


" உங்க ஊர்ல எப்படியோ எங்க ஊர்ல  கேக்க ஆள் இல்லாம தனக்கு தானே பேசிக்கிட்டா அவிங்கள பைத்தியம்னு சொல்லுவோம்.. பாருங்க எங்க பவிய நீங்க கட்டிக்கப் போறதால சொல்ல முடியாம தவிக்கிறேன்.. பாவமில்லையா நானு.. " பிரகாஷ் 


' என்ன உளறுறான்.. இவ்ளோ நேரம் தனியாவா பேசினோம் .. நம்ம உயிர் நண்பன எங்க.. '  என தரனை திரும்பி பார்க்க அவன் தான் உறைந்து போய் இருக்கிறானே எப்படி கவனிப்பான்.. அவனின் பார்வை சென்ற திசையை கண்டவன் அங்கு ஹரிணி இருப்பதை பார்த்தான்.. பின் மீண்டும் தன் வேலையை பார்க்க தொடங்கினான்.. 


" மச்சான் சார்.. மச்சான்‌ சார்.. எங்கண்ணனுக்கு என்ன ஆச்சு.. ஏ இப்படி பேயறைஞ்ச மாறி‌ இருக்காரு.. " 


" அத எங்கிட்ட கேட்டா எப்படி‌.. அவனையே உலுக்கி கேளு... " 


" நீங்க அவரோட நட்பு தான.‌‌. கேளுங்க மச்சான் சார்... ".


" எதுக்கு அவென் பச்ச பச்சயா திட்டுறத கேக்கவா.. உனக்கு வேணும்ன்னா நீயே கேளு.. " 


" பச்ச பச்சையாவா.. ச்சச.. எங்கண்ணே  எவ்ளே நல்லவரு.. பொய் சொல்லாதிங்க மச்சான் சார்.. " 


" ஒரு நிமிசம்.. டேய் மாப்ள.. மாப்ள.. மா..‌" 


" என்னடா.. " என சுட்டெரிக்கும் வேகத்தில் வந்தது குரல்..


" என்னாச்சு மாப்ள.. திடீர்னு சைலெண்ட் ஆகிட்ட.. " 


திரும்பி அவனை பார்த்தவன் " கொஞ்சங் கூட அறிவே இல்லையாடா உனக்கு.. நாந்தா உந்தங்கச்சிய பிஸியா சைட் அடிச்சிட்டு இருக்குறேன்ல.. டிஸ்டர்ப் பண்ணுற.. என்ன மச்சான் நீ.." என மீண்டும் திரும்பிக் கொண்டான்... 


சம்பத் பிரகாஷை பார்க்க அந்த இடமே காலியாகி இருந்தது.. " நா சும்மா இருந்தாலும் இவனுங்க நம்மள பைத்தியமாக்காம விட மாட்டாங்க போல இருக்கே.. ஹிம்.. நல்ல குடும்பம்டா.. " என மடிக்கணினியை மூடிவிட்டு அமர்ந்தான்.. 


நங்கை அங்கும் இங்கும் எதையோ தேடிக் கொண்டிருப்பதை பார்த்தவன் " ம்மா எதையும் காணுமா.. என்னம்மா வேணும்... " என்றான் சம்பத்.


" அது தட்டுக்கு வைக்கன்னு பூ , பழம் , அதோட சேத்து சாக்லேட் வாங்கி வச்சிருந்தோம்.. அத காணும் ப்பா.. அதா தேடுறேன்.. நேரமாகுது.. " நங்கை..


" ம்மா.. போறப்ப வழில வாங்கிக்கலாம் ம்மா.. விடுங்க.. " சம்பத்..


" இல்லப்பா.. வேலு ஆசையா வாங்கிட்டு வந்தது.. ஹோம் மெட் சாக்லெட்டாம்..  நெட்ல ஆர்டர் போட்டு வர வச்சான்... இந்துவுக்கு பிடிக்கும்னு.. அவ கண்ணுல கூட காட்டல அதுக்குள்ள காணுமே.." 


" அத்த ஒன்னா இல்ல டப்பாவே காணுமா.. " என்றான் தரன்.. தன் மனைவியின் உதட்டில் இருந்த கறையை வைத்து சந்தேகமாக.. 


" டப்பாவையே காணும் டா.. எங்க வச்சேன்னு தெரியல.. " நங்கை..


"வேற வாங்கிக்குவோம் விட்டுட்டு நீங்க ரெடியாகுங்கத்த.. பெரிப்பா வரவும் பொறப்பட்டுடலாம்.. " என்றவன்..


' திருடி.. முழு டப்பாவையும் தூக்கிட்டாளே... ' தனக்கு பங்கில்லை என்ற கடுப்பில் மனதில் வசை பாடினான் தரன்..


மஞ்சள் சந்தனம் மணமனக்க கைகளில் கண்ணாடி வளையல்கள் குழுங்க தாய்மையின் பூரிப்பில் விழா நாயகி அமர்ந்திருக்க சிறு வெட்கத்துடன் தன் மனைவியின் கன்னத்தில் சந்தனத்தை பூசினான் கௌதம்.. பின் பிறை நெற்றியில் குங்குமம் இட்டு எழுந்தவன்  அங்க முத்தமிட்டு அவளை வெட்கப்பட செய்தான்.. 


நடந்த அனைத்தையும் சிறு ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த தரன்  மனதிற்குள் தன் மனைவி ஹரிணியின் சிறு வளைகாப்பு விழாவையே முடித்து விட்டான்.. 


" எம் பேத்தி அழகே தனி... " என நாச்சியாம்மாள் திருஷ்டி கழிக்க.. அனைவரின் உள்ளமும் நிறைய விழா நடந்து முடிந்தது..


" எம்மாடி மருமகள்களே சும்மா நிக்காம போய் ரூம்ம ஒதுக்கி.. எல்லாத்தையும் கட்டப்பைல எடுத்து வைங்க.. அப்படியே தேங்காய எடுத்துட்டு வாங்க சுத்தி போட.. எம்மருமக மேல தா இன்னைக்கு ஊரு கண்ணே பட்டிருக்கும்.. " என மலர் அபியையும் ஹரிணியையும் விரட்டினார்.. 


அறைக்கு சென்ற இருவரில் அபி மட்டுமே வெளியே வந்தாள் ஹரிணி திரும்ப வில்லை.. 


" என்னதா கலர் கலரா கவர் போட்டு சாக்லேட் வந்தாலும்  இந்த ஹோம் மேட் சாக்லேட் டேஸ்ட் தனி தா.. அடிச்சுக்க ஆளே இல்ல.. ம்... ம்... " என எடுத்து வைத்திருந்த சாக்லேட்டை பிரித்து ரசித்து உண்ணலானாள் ஹரிணி..


ஆள் வரும் சத்தம் கேட்டு வேகமாக பின்னால் மறைத்து வைத்தவள் கண்டது ரிஷி தரனை.. 


முதலில் பயந்தவள் பின் அலட்சியமாக திரும்பிக் கொண்டாள்.. ' இவென் வந்தா எனக்கு என்ன.. ஹிம்...‌' 


" உன்னைய அதிகமா ஸ்வீட் சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காருல்ல.. நீ என்னடான்னா டப்பாவையே ஆட்டைய்ய போட்டு தெரியாம தின்னுக்கிட்டு திரியுற..‌ ம்.. " அதட்டலாக..


" நா என்ன வேணும்னாலும் சாப்பிடுவேன்.. உனக்கு என்ன வந்துச்சு... போ.. இங்கருந்து.. வந்துட்டான் தேவையில்லாதத‌ பேசிட்டு.. " எரிச்சலோடு..


" அப்ப தேவையானத பேசிடுவோம்..  " என்றான் கதவை தாழிட்டபடி நெருங்கி வந்தான்‌ அவளை.. 


நிச்சயம் எதுவும் ரொமாண்டிக்கா நடக்கப் போறது கிடையாது..  அப்றம் ஏ இந்த பில்டப்பு.. தெரியலயே..

தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...