முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 50

 

அத்தியாயம்: 50


சந்தோஷம்  


எப்போது கால்நனைத்தாலும்  


கவலையின்றி துள்ள குதிக்கும்


மீன்களை பார்த்து... 


கையில் வைத்திருந்த அரிசி பொரியை சிறிது சிறிதாக குளத்தில் எரிந்ததால் அதை உண்ண வந்த மீன்களை பார்த்து  தன் மனம் அமைதி அடைவதைப் போல் உணர்ந்தாள் ஹரிணி..


அவளின் சஞ்சலத்திற்கு காரணம் தரன்..‌ அவளின் கணவன்.. அவனை வெறுப்பதா இல்லை விலகி நிறுத்துவதா என புரியாமல் குழம்பி போய் இருந்தாள்...  


மூளை அவன் அத்துமீறி நடந்து கொண்ட தவறை சுட்டிக்காட்டி விலகி இருக்க சொன்னது.. ஆனால் மனமோ அவனின் கம்பீரத்தையும் அழகையின் செயலயும் ரசிக்கச் சொல்லி காதல் கொள்ளச் சொன்னது.. இப்படி இரண்டும் அவளை இரு திசைகளுக்கு இழுக்க எதன் பக்கம் செல்வது என்ற குழப்பமே மேலோங்கி இருந்தது..


கவியரசன் கிருபாவதி குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்திருந்தவள் குளக்கரையில் அமர்ந்து இருந்தாள்.. அவளின் நினைவுகளின் நாயகனே எதிரில் வந்து கொண்டு இருந்தான்.. 


அவனின் கம்பீர நடையை எப்பொழுதும் போல் ரசித்த மனதை அடக்கிக் கொண்டு அருகில் வருவதற்குள் சென்று விட எண்ணி திரும்பி நடக்கலானாள்... 


கைகள் எப்போதும் போல் சிறை பிடிக்கப் பட்டிருந்தது தரனால்..


" விடு.. விடு..‌" யாரும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக குரல் தாழ்த்தி கூற..


" அது முடியாதுன்னு உனக்கே தெரியும்... " தரன்..


" ம்ச்.. விடு.. இல்லைன்னா கத்தி எல்லாரையும் கூப்பிடுவேன்... பாத்துக்க.. " என்றாள் மிரட்டல் தோணியில்.. 


கை விடுதலை செய்யப்பட்டிருந்தது "இவெ சொன்னதும் கேக்குற ரகம் இல்லையே.. " என எண்ணியவள் காற்றில் மிதக்கலாள்.. சத்தமிட முடியாதபடி அவளின் வாய் மூடப்பட்டு இருந்தது தரனின் கைகளால்.. 


மரங்கள் அடர்ந்திருந்த இடமாய் பார்த்து அவளை மெதுவாக இறக்கியவனின்  கண்கள் விஷமத்துடன் சிரித்தது..  


" உனக்கு கொஞ்சங்கூட அறிவே கெடையாதாடா... ச்ச.. " ஹரிணி என முகம் திருப்ப..


" கொஞ்ச நாளாவே மரியாத பலம்மா இருக்கு... இது கூட நல்லாதா இருக்கு.. நீ டா போட்டு கூப்பிடும் போது சும்மா கிக்கா தா இருக்கு..  " மனைவியின் கோபத்தை ரசித்தபடி கூறினான் அவன்..


" என்ன நல்லா இருக்கு.. எதுக்கு என்ன தூக்கிட்டு வந்த.. நா போறேன்.. " என திரும்பி நடக்க போனவளிம்..


" உங்கிட்ட ஒன்னு காட்டனும் .. அப்றம் ஒன்னு பாக்கனும்.. " அவளை போக விடாமல் தடுத்தான் அவன்..


" எதுவா இருந்தாலும் அங்கேயே காட்டிருக்கலாம்ல.. இங்க எதுக்கு தனியா தூக்கிட்டு வந்த.." என நகர்ந்தவளை நகரவிடாது செய்தவன் அவளை மரத்தில் சாய்த்து கைகளால் அணை கட்டியிருந்தான்.. 


" காட்டுறத அங்கையே காட்டிடுவேன்.. ஆனா  ஒரு மேட்டர் பாக்கனுமே.. அங்க எல்லாரும் இருக்காங்களே.. எனக்கு ஓகே உனக்கு வெக்கமா இருக்காது..  " குறும்புடன் கேட்க..


" ஆ.. " என அடுத்த வார்த்தை பேச வருவதற்குள் அவளின் இதழ்களை மூடினான் தன் கை கொண்டு..


" அவசரப்பட்டு எதையாது தப்பா பேசிடாத அப்றம் அவதி படப்போறது நீ தா.. ஏற்கனவே நீ பேசுனதுனால தா நமக்கு இந்த நிலம.. " என கூறி அவளின் மூக்கை சீண்டிவிட்டு தன் கைகளை விலக்கினான்..


" எப்படிடா நீ தப்பே பண்ணாத மாறியும்  நாந்தா உன்ன புரிஞ்சிக்காம சண்ட போடுற மாறியும் சீன் க்ரியேட் பண்ற.. " ஹரிணி.


" நா.. தப்பு பண்ணவ.. மாட்டேனே.. நீ தா அவசரப்பட்டு அநியாயத்துக்கு கோவப்படுற.. இது சரி இல்ல கிட்.. " என்றவன் அவள் அணிந்திருந்த சுடிதாரின் டாப்ஸ்ஸில்  மறைக்க முடியாது வளர்ந்திருந்த வயிற்றில் கை வைத்தான்... 


தட்டிவிட வந்தவளின் கைகளை பின்னால் லாக் செய்தான்.. " பேபிஸ்.... உன்னோட அம்மா இப்பல்லாம் ரொம்ப கோபப்படுறா.. டென்ஷன் ஆகுறா.. தேவையில்லாதத எல்லாம் செய்றா.. அது வேண்டாம்னு சொல்லுங்க டா.. அவளுக்கு அது நல்லதில்ல.. உங்களுக்கும் நல்லது இல்ல.. பீப்பீ தா அதிகமாகும்... " என்று தன் குழந்தைகளுடன் பேச ஆரம்பித்தான்..


சென்னையில் இருந்து இங்கு வந்த நாள் முதல் தன்னிடம் வலுக்கட்டாயமாக அவளை இப்படி நெருங்க அவன் முயற்சித்தது இல்லை.. தள்ளி நின்று கேலி கிண்டல் செய்து நக்கல் நெரிக்கும் பார்வையால் வம்பு செய்வானே தவிர தொட்டது இல்ல.. 


இன்று அவன் நடந்து கொண்ட விதம் அவளுக்கு அதிர்ச்சி என்றால் அதற்கு அவனின் குழந்தைகள் அசைந்து பதில் சொன்ன விதம் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.. அதே நேரத்தில் தன் குழந்தையின் முதல் அசைவு என்ற சந்தோஷமும் இருந்தது.. 


தரன் ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தான் தன் குழந்தையிடம்.. அதை எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை ஹரிணி.. விழி மூடி தன்  குழந்தையின் அசைவுகளை உணர்ந்து கொண்டிருந்தாள்.. 


அவளின் மோன நிலை கலைக்காது டாப்ஸ்ஸை விலக்கி தன் செல்வங்களுக்கு முத்தத்தை பரிசளித்தவன்.. செல்வங்களை சுமக்கும் தாய்க்கு சேர்த்தே அதை பரிசளித்திருந்தான்.. அவளின் தேகம் சிலிர்ப்பதை அவனால் காண முடிந்தது..


பின் தன் கன்னத்தில் உணர்ந்த வெப்பக் காற்றால் கண் திறந்தவள் கண்டது  தரன் தன் கழுத்தில் எதையோ மாட்டிக்கொண்டிருப்பதை... 


பென்டெண்ட்..


ஒருவனின் வாயை உடைத்து தன் தந்தையிடம் அடிவாங்கி போலிஸிடம் மிதி வாங்கி இப்படி வாங்கி வாங்கி வாங்கியது அந்த பென்டெண்ட்.. அதை அணிவித்தவன் அவளின் வெண்கழுத்தில் தன் இதழையும் பதித்தெடுத்தான்.. 


நெருங்கி நின்ற ரிஷியின் சாம்பல் நிற கண்களில் தன்னை தொலைத்தவள் முத்தமிடவும் கோபம் கொண்டாள்.. தன்னுடைய அனுமதியை அவன் எதற்கும் கேட்டதே இல்லை என்று அவன் மீதும் அவனின் விருப்பம் போல் வளைந்து குடுக்கும் தன் மீதும் கோபம் மேலுங்க.. 


" ஹே... " எதையோ கூற வந்தவளின் இதழில் மீது விரல் வைத்தவன்.. " திருமண நாள் வாழ்த்துக்கள் கிட்.. நம்ம ஃபஸ்ட் இயர் அன்வசரி.. சீக்கிரம் வளந்திடு கிட்.. LKG பேபிய கல்யாணம் பண்ணிகிட்ட மாறி ஃபீளிங்கா இருக்கு.. சீக்கிரம் கிண்டர் காடன்ன விட்டு வெளில வந்திடு... " என்றான் கேலியாக.. 


" நா ஒன்னும் LKG பேபி கிடையாது  எனக்கு இருபத்தி நாலு வயசாகுது.. " 


" ஆனா உன்னோட மூளை மட்டும் எப்படி மூனு வயசு கொழந்த மாறியே யோசிக்குதே.. படபடன்னு பேசுறது கோபப்படுறது அப்றம் பழிவாங்குறேன்னு ஒன்னு பண்ணியே..  இதெல்லாம் கிட்ஸ் தா பண்ணுவாங்க.. நீ அப்படி தான இருக்க.. " 


" இல்ல நா அப்படி இல்ல.. " 


" அப்ப எல்லார் கிட்டையும் கிட்ஸ் மாறி நீ நடந்துக்க மாட்ட.. எங்கிட்ட மட்டும் தா.. இல்ல.. அப்படின்னா நா உனக்கு ஸ்பெஷல்... கரெக்ட்டா.... " கள்ளச் சிரிப்புடன்..


" ஒரு ஆணியும் கிடையாது.. நா இத போடவே மாட்டேன்... எங்கையாது தூக்கி போட்டுடுவேன்.. " செயினை சுட்டிக்காட்டி  சிறுபிள்ளைத்தனமாக கத்த..


" இப்பவும் நீ எங்கண்ணுக்கு கிட்டாத்தா தெரியுர.. ஹீம்... " பெருமூச்சு விட்டவன்..

 " என்ன வேண்ணாலும் பண்ணிக்க.. இப்பைல இருந்து அது உன்னோடது.. வச்சுக்கிறதும் தூக்கி வீசுறதும் யூவர் சாய்ஸ்.. பாய்.. உங்கம்மாவ பாத்துக்கங்க பேபிஸ்.. உங்கள் நம்பித்தா அவள விட்டு வைக்கிறேன்.. " என கூறி சென்று விட்டான்.. 


வந்த போது இருந்த மனநிலை முற்றிலும் மாறியிருந்தது.. ஒருவேலை திருமண நாளை அவன் நினைவில் வைத்திருப்பானா இல்லையா என்ற கவலையே அவளின் மனக்கலக்கத்திற்கு காரணமாக இருந்திருக்குமோ... யாருக்கு தெரியும்.. 


தினமும் அவளின் கழுத்தை ஆராய்வதையே வாடிக்கையாக வைத்திருந்தான் ரிஷி தரன்... அதை உணர்ந்து உள்ளுக்குள் ரசிப்பார் அவள்.. கம்பீரமாக ஊருக்குள் சுற்றும் ஆண்களை காதலுக்காக பின்னால் சுற்ற வைப்பதில் பெண்களுக்கு பேரானந்தம்.. 


' இந்த காலர் வச்ச சுடிதார யாருடா கண்டு பிடிச்சா.. ச்ச.. முழுசையும் மூடிகிட்டா நாங்க எப்படி பாக்குறதாம்... ' என சலித்து தான் போனான் தரன்..


இன்று.. 


பார்த்து விட்டான்.. சும்மா இருப்பான்னா என்ன.. அதுவும் தனியாக அவன் கையில் சிக்கிய பிறகும்.. ம்ஹீம்..  புகுந்துவிட்டான்.. 


கதவை தாளிட்டு வந்தவனை முறைத்து கொண்டு இருந்தாள் ஹரிணி..


தன் கண்கள் காட்டும் காதலின் பிரிதபலிப்பை அவளின் நயனங்களில் தேடிக் கொண்டு இருந்தான்  ஏக்கத்துடன்... 


அவள் எவ்வித உணர்ச்சியும் இன்றி நின்று கொண்டிருக்க.. நெருங்கி வந்துகொண்டிருந்த அவனை விட்டு விலகிச் செல்லவோ நகரவோ அவள் விரும்பவில்லை.. 


" க்கும்.. நகந்தா மட்டும் சும்மா விட்டுட்டு போய்டுவானாக்கும்.. எதுக்கு வந்தானோ அது பண்ணாம எப்படி போவான் அடமென்ட்.. அரகெண்ட்.. " என இதழ் கோணி பார்வையை வேறு பக்கம் திரும்பினாள். 


திடிரென தன் கன்னங்கள் குளிர்ந்துவிட தரனை கண்டவள் சொல்ல முடியாத உணர்வு பிடிக்குள் சிக்கி தவித்தாள்...  


கைகளில் வைத்திருந்த சந்தனத்தை அவளின் கன்னங்களில் பூசியவன் நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டான்.. 

இரு கைகளுக்கும் வைர வளையல்கள் நான்கை அணிவிட்டு விட்டான் ஆசையுடன்.. 


அவள் கண்களில் அவளையும் அறியாமல்  நீர் திரண்டது... அது வடியும் முன் துடைத்தவன் கன்னங்களை கைகளில் ஏந்தி அவளின் செவ்விதழில் தன் இதழ்களை ஒற்றி எடுத்தான்.. பின் பென்டெண்டை தன் விரல்களால் வருடியவன்.. " தேங்க்ஸ் கிட்... எங்க இத நீ போட மாட்டியோன்னு லைட்டா ஒரு பயம் இருந்தது.." என்று பென்டெண்டில் அழுந்த முத்தமிட்டு சென்றுவிட்டான்.. 


தாய் தந்தை இல்லாத தனக்கு இது போன்ற நிகழ்வு நடக்காதோ என ஏங்கியிருந்தவளின் மனதை தன்  செயலால் குளிர்வித்து சென்றிருந்தான் ரிஷி.. எவ்வளவு நேரம் நின்றாளோ தெரியாது.. க்ளிக் என்ற சத்தத்தில் உணர்வு பெற்றாள்... 


" டேய்.. நீ எப்படா ரூம் குள்ள வந்த.. " என்றாள் செல்போனுடன் நின்று கொண்டிருந்த கௌதமை பார்த்து..


" வர்ரதா..  ஹலோ மேடம் நீங்க ரெண்டு பேரும் வர்ரதுக்கு முன்னாடி இருந்தே நா இங்க தா இருக்கேன்.. அதோ இருக்கு பாத்தியா.. அது தா பாத் ரூம்.. அந்த பாத் ரூம்ல தா முக்கியமான வேல செஞ்சுட்டு இருந்தேன்... " கௌதம்.


" கருமம்.. கருமம்.. " என தலையில் அடித்துக்கொண்டு முகம் திருப்பினாள் ஹரிணி..


" ஓ... நா இயற்கை அழைப்புக்கு போனது கருமம்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போட்டிங்கலே ஒரு மொக்க சீனு.. அது கருமம் கெடையாது.. அப்படித்தான.. " 


" நீ .... நீ..... பா..த்தியா... " அதிர்ச்சியுடன் தந்தி அடித்தது உதடுகள்..


" ம்.. பாத்தேன் பாத்தேன்.. அவென் உள்ள வந்து கதவ சாத்துனதும் ஒரு ஹாலிவுட் மூவிய எதிர் பாத்தேன்.. நடக்கல.. அட்லீஸ்ட் பாலிவுட் ரேஞ்சுக்காது இருக்கும்னு நெனைச்சேன்.. ம்ஹீம்.. கடைசில நம்ம கோலிவுட் சீனையே ரீ டெலிக்காஸ்ட் பண்ணுவீங்கன்னு அம்மா சத்தியமா நினைக்கல.. ஹப்பா.. என்னம்மா பாக்குறான்.. இப்பவே உன்ன கடிச்சு சாப்பிட்டுடுவான்‌ போல.. "


" போடா.. " என்றவள் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்திருந்தது..


" ஆனாலும் ஒரே ஒரு நன்ம நடந்திருக்கு.. " 


" என்ன.. " 


" ஆறு வருஷமா நா பழகுற என்னோட ஃப்ரெண்டு ஆணா பொண்ணா அப்படிங்கிற சந்தேகம் இருந்துச்சு.. இப்ப இல்ல.. அது பொண்ணு தான்னு முடிவுக்கு வந்திட்டேன்.. ஏன்னா  ‌என்னோட ஃப்ரெண்டுக்கு வெட்கப்பட தெரியும்‌கிறது இப்பத்தா எனக்கு தெரியும்.. வெக்கப்பட்டா அது பொண்ணு தான டார்லிங் " சந்தேகமாக..


" டேய்.. " என விரல் நீட்டி மிரட்டியவளின் வெட்கம் மட்டும் போகவே இல்லை..


அதை புகைப்படம் எடுத்தவன் " பாத்துட்டேன்.. பாத்துட்டேன்.. பக்கத்துல பாத்துட்டேன்.. " என கத்திக்கொண்டே செல்ல ஹரிணி துரத்தி சென்றாள் பின்னாலே.. 


மகிழ்ச்சி என்பது வரம்... அது கிடைக்கும் போது நிராகரிக்க கூடாது.. 


அவர்களின்‌ மகிழ்ச்சியை துணி கொண்டு துடைக்க வந்து கொண்டிருந்தது ஒரு சீடீ..

பூகம்பமாய்..

தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  

அன்பே 49

அன்பே 51


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...