முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 51


 

அத்தியாயம்: 51


" மா....மா.. இங்க பாருங்க.. உங்க பொண்ணு என்னோட வீட்ட இடிச்சுட்டா.. " என புகார் அளித்தாள் பதின்ம வயது பெண்..


" மாமா வா.. யாருக்கு யாருடி மாமா‌.. அங்கிள்னு கூப்பிடு.. மாமா கீமான்னு எங்க அப்பாவ சொந்தங் கொண்டாடுனா இப்படித்தா பண்ணுவேன்.. " என மணல் வீட்டை இடித்து தள்ளினாள் மற்றொரு பெண்..


இடித்தவளை துரத்திக்கொண்டு இருந்தாள் மற்றவள்.. கையில் மணலை அள்ளிக் கொண்டு.. 


" ஆரம்பிச்சுட்டிங்களா.. உங்க ரெண்டு பேர்க்கு மட்டும் சண்ட போட காரணமே தேவையில்லை.. " சத்தியமூர்த்தி.. இவர்களின் சேட்டைகளை வீடியோவாக பதிவு செய்தபடி இருந்ததால் குரல் மட்டும் வந்தது.. 


மகாபலிபுரம் கடற்கரை.. 


" இங்க பாத்தியா..  இதுதா நா  மாமா  அத்த அப்பறம் உங்கண்ணே சேந்து வாழப் போற வீடு.. இனி அண்ணின்னு கூப்பிடனும் என்ன பேர் சொல்லி கூப்பிட்ட உங்கண்ணே சண்டைக்கு வருவாரு.. அண்ணனையும் தங்கச்சியையும் பிரிச்சுட்டேன்னு என்ன குத்தஞ்சொல்லக் கூடாதுப்பா.. " ஹரிணி மணலில் வீட்டை கட்டிக்கொண்டே.. 


"நீ தலகீழ நின்னாலும் எங்கண்ணே ஒன்னும் உன்ன கல்யாணம் பண்ணிக்காது.. இந்த வீட்டுலையும் சேந்து வாழாது.. " என வைசாலி ஹரிணி கட்டிய வீட்டை இடித்தாள்..


 வைசாலியிடம் உடன் படிக்கும் தோழிகள் சிலர் அவளின் அண்ணனின் ஃபோன் நம்பர் கேட்டும் அவனை பற்றி விசாரித்தும் நச்சரிப்பது வழக்கம்..‌ அதனால் யார் தன் அண்ணனை பற்றி பேசினாலும் கேட்டாலும் வைசுவிற்கு   கோபம் வரும்.. அதற்காகவே அவளை விளையாட்டாக சீண்டுவாள் ஹரிணி.. 


இருவரும் மணலில் குளித்துவிட்டு சத்தியமூர்த்தியிடம் வந்தனர்.. ஆலமரம் இல்லாமல் சொம்பு இல்லாமல் பஞ்சாயத்து நடந்தது.. 


" மாமா.. இவா என்னோட வீட்ட இடிச்சுட்டா.. " ஹரிணி..


" ஏம்மா.. " மூர்த்தி வைசுவிடம்..


" ப்பா இவா வயசுக்கு மீறி பேசுறாப்பா.. " வைசு..


"  உங்கள மாமான்னு கூப்பிடக் கூடாதாம்.. இங்கிலீஷ் ல ‌அங்கிள்னு தா கூப்பிடனுமா.. ஏன்னு கேளுங்க மாமா... " ஹரிணி வைசுவை பேசவிடாது பேசினாள்..


" பாத்திங்களாப்பா என்ன முழுசா பேசக் கூட விடமாட்டேங்கிறா.. " வைசு..


" மா....மா.. இவா தா தப்பு தப்பு புரிஞ்சிக்கிட்டு சண்ட போடுறா.. நா வெளாட்டுக்கு தா சொன்னேன்.. அதுக்கு போய் நா கட்டின வீட்ட இடிச்சிட்டா.. " என்றவளின் கண்ணில் நீர் சுரந்தது..


அவளின் கன்னம் தடவி சமாதானம் செய்தவர் மகளிடம் பேசினார்.. ம்ஹிம்.. வைசு உடன்படவில்லை.. வாக்குவாதம் முற்றியது ஹரிணி கோபம் கொண்டு சத்தியமூர்த்தியின் காரை அட்டாக் செய்கிறாள்.. உரிமை போராட்டம் நடந்தது அங்கு... மூர்த்தி பதறிப்போய் தடுக்கிறார்... 


இத்தோடு முடிந்தது அந்த காணொளி... அனுப்பியவர் யார் என்று தெரியாது... கலகம் பிறக்கவே அனுப்பியிருந்தனர் போலும்....


வீட்டில் இருந்த யாராலும் நம்ப முடியவில்லை.. காரணம் முதலில் சத்திய மூர்த்தியை ஹரிணிக்கு தெரியும் என்பது அடுத்ததாக இந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட நாளில் தான் மூர்த்திக்கு விபத்து நடந்தது அதுவும் சரியாக இரண்டு மணி நேரத்திற்கு முன் ரெக்கார்டு செய்யப்பட்டிருந்தது அந்த வீடியோ.. அதை ஹரிணி கட்டியிருந்த வாட்ச் காட்டிக்கொடுத்தது...


குழப்ப மனநிலையில் அனைவரும் இருக்க மூர்த்தியின் குரல் கேட்டு வந்த  கனகவள்ளி வெடிக்க தயாராக இருக்கும் எரிமலை போல் பொறுமிக்கொண்டு இருந்தார்.. அவரின் உலகம் மூர்த்தி அல்லவா.. இப்படி அசையாது படுத்திருக்க காரணம் ஹரிணி என்றால் சும்மா இருப்பாரா.. 


கோபமாக ஹரிணியின் அருகில் வந்து " உனக்கு அவர முன்னாடியே தெரியுமா.." என சைகையில் கேட்டார்.. 


புரியாமல் முழித்து கொண்டு இருந்தவளிடம் கௌதம் வள்ளி கூறியதை விளக்கினான்... 


" ம்... நல்லாவே தெரியும்.. " சாதரணமாக..


" ஏன்.. இங்க வந்ததுமே சொல்லல.. எப்படி தெரியும் உனக்கு எம்பொண்ணையும் அவரையும்..." வள்ளியின் சைகையை கௌதம் மொழி பெயர்த்தான்.. 


" நானும் வைசுவும் ஒரே இடத்துலே தா  ஒன்னாத்தா டான்ஸ் கத்துக்கிட்டோம்... அவள பிக்கப் பண்ண ட்ராப் பண்ண அங்கிள் தா வருவாரு.. அப்பத்துல இருந்து அங்கிளையும் வைசுவையும் தெரியும்... " 


" அப்ப ஆக்ஸிடென்ட் நடக்கும் போது நீ அங்க தா இருந்தியா..‌ " கௌதம் கனகவள்ளியின் குரலாக..


" இல்ல... " 


" பொய் சொல்லாத.. இவ்வளவு நாள் தெரியுங்கிறத மறைச்சவ.. இப்ப மட்டும் உண்மைய சொல்லுவியா... அவரோட இந்த நிலமைக்கு நீயும் ஒரு காரணம்..."  கனகவள்ளியின் கோபம் அதில் நன்றாகவே தெரிந்தது.. 


" இல்ல.. நா எதையும் மறைக்கல.. பொய்யும் சொல்லல.. கௌதம்.. கௌதம்.. நம்பு.. " என்றாள் அவனின் கையை பிடித்துக்கொண்டு..


நம்பு என்ற வார்த்தையே தோழி பொய் சொல்லவில்லை என்பதை அறிந்து கொண்டான் கௌதம்.. கனகவள்ளியிடம் ஹரிணிக்காக பரிந்து பேச அதை காதில் வாங்காது ரிஷி தரனின் முன் சென்றார்.. 


அவர் எதோ சைகை செய்ய தரன் தர்மசங்கடமான உணர்ந்தான்.. அன்னையின் கோபத்து பற்றி நன்றாகவே அவனுக்கு தெரியும்.. இருந்தும் மனைவிக்காக அவன் எதையாவது கூறியிருக்கலாம் இல்லை எதுவுமே சொல்ல வில்லை.. 


கௌதம் ஹரிணியின் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டான்.. உன்னை நா விட்டுவிட மாட்டேன் என்பது போல்... 


தரனிடம் கோபமாக கை ஜாடை செய்து விட்டு மூர்த்தியின் அறைக்கு சென்று மறைந்தார் கனகவள்ளி.. 


" ஏப்பு.. என்னத்த சொல்லிட்டு போறா உங்காத்தா.. " நாச்சியம்மாள்.. அவரின் முகமும் கலவரத்தை தத்தெடுத்திருந்தது.. ஏனெனில் இங்கு வந்த இத்தனை நாட்களில் அவர் பேச முயன்றதே இல்ல.. இப்போது ஆவேசமா எதையோ சொல்லிச் செல்கிறாள் என்றால்.. 


" அப்பத்தா.. அது.. " சொல்ல முடியாமல் தவித்தான் தரன்.. 


" அப்பத்தா ஹரிணி இன்னைக்கே வீட்ட விட்டு போகனுமாம் இல்லைன்னா பெரிம்மா பெரிப்பாவ கூட்டிட்டு எங்கையாது போய்டு வாங்கலாம்.. என்ன பண்ணனு அவுங்க மகெங்கிட்ட கேக்குறாங்க.‌.. " கௌதம்.. 


சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் தவித்தான் தரன்... ஒரு பக்கமும் தன்னை ஈன்ற தாய் மறுபக்கம் தன் உயிரை சுமக்கும் தாரம்.. என்ன செய்வது... 


சிறிது நேரம் மௌனமாய் கழிய..


" டேய் மாடா அந்த தெற்கு தோட்டத்து வீட்டோட சாவிய எடுத்துட்டு வாடா.. " . நாச்சியம்மாள் கூற தரன் அதிர்ந்து விட்டான்.. 


" ம்மா என்னம்மா நீங்க.. அந்த புள்ளைகிட்ட பேசி புரிய வைக்கிறத விட்டுட்டு மாசமா இருக்குற பொண்ண வெளில தொரத்துரீங்க.. " நாதன்.. 


" தொரத்தல டா உன்னோட மருமகள.. விலகி இருக்க தா சொல்றேன்.‌‌. அந்த புள்ள இந்த வீட்டுக்கு வந்ததுலிருந்து நம்மகிட்ட பேசக் கூட முயற்சி பண்ணதில்ல.. அந்த ரூமே கதீன்னு மூரத்தியோட மட்டும் தா கெடப்பா..  இப்ப தா ஏதோ சொல்லிருக்கு.. " 


" அதுக்காக.. " கவியரசன்..


" அவா சொல்லிட்டு போற தோரணையே சரியில்லை.. ராத்திரியோட ராத்திரியா மூர்த்தி கூட்டீட்டு எங்கையாது போய்ட்டான்னா.. அதா கொஞ்ச நாள் தள்ளி  இருக்கட்டுமே.. அதுனால ஹரிணி எம் பேத்தி இல்லைன்னு ஆகிடுமா என்ன.. " நாச்சியம்மாள்.. 


வாதங்கள் பல நடந்த போதும் ஹரிணி வீட்டை விட்டு செல்வது உறுதியானது.. உடன் கௌதம் வர முயன்ற போது ஹரிணி தடுத்து விட்டாள்.. 


" நீ வேண்டாம் டா.. உன்னோட வைஃப் க்கு நீ இப்பத்தா அதிகமா தேவ... அவா கூடவே இரு.. வராத... " என்றுவிட்டாள உறுதியாக..


நங்கை , சம்பத்,  ஹரிணி என மூவரும் அருகில் உள்ள தோட்டத்து வீட்டில் குடிபுகுந்தனர்..


யாருக்கு மகிழ்ச்சியாக இருந்ததோ இல்லையோ நங்கை மகிழ்ச்சியான உணர்ந்தார்.. தன் பெறாத பிள்ளைகளுடன் தனியாக ஒரு வீட்டில்   தன் கரங்களால் சமைத்து தன் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற இத்தனை நாள் கனவு நிறைவேறி விட்டதைப் போல் உணர்ந்தார்.. 


வாரங்கள் சென்றது.. வீட்டினர் அனைவரும் தினமும் ஹரிணியை சென்று பார்த்து வந்தனர்... விலகி இருந்தாலும் அந்த உணர்வே அவளுக்குள்‌ எழாத படி பார்த்துக் கொண்டனர்.. தரன் சம்பத்தின் துணையுடன் மனையாளுக்கு வேண்டியதை செய்தான்..


" ஹரிணி... ஹே.. ஹரிணி... " இந்து.. அவளுக்கு இது நிறைமாதம்.. 


" நீ ஏன் இங்க வந்த டாக்டர்ஸ் சொன்ன டெலிவரி டேட்க்கு இன்னும் இருபது நாள் தான இருக்கு.. ஊர் சுத்ரியா.. இரு உன்னோட புருஷனுக்கு ஃபோன் பண்றேன்... " என மொபைலை எடுத்து கால் செய்தாள் ஹரிணி.. 


" அவசியமே இல்ல.. ஐ ஆம் கம்மிங்.. " கௌதம்..


" காலையிலேயே புருஷனும் பொண்டாட்டியும் சேந்து தரிசனம் தந்திருக்கிங்க.. என்ன விசேஷம்.. " என்று இந்துவை பார்க்க அவள் கௌதமிற்கு அழகு காட்டி விட்டு பின்கட்டிற்கு சென்றாள்.. 


" என்னடா ஆச்சு.. " ஹரிணி.


" அது ஏன் கேக்குற.. " கௌதம் சலிப்பாக .


" சரி விடு காப்பி ஆத்துறேன்... " என எழ முயன்றவளை தடுத்தான் அவன். 


" ஒரு பேச்சுக்கு சொன்னா அப்படியே விட்டுடுறதா..  கேளுமா.. " கௌதம்..


" சொல்லு... " ஹரிணி 


" அதாவது நா வேல விசயமா மூனு நாள் டெல்லிக்கு போகனும்.. அதா.. " கௌதம் இழுவையாக..


" இதுக்கு த்தானா இந்து மூனு நாள் தான.. சீக்கிரம் வந்திடுவான்... " ஊருக்கு செல்வதால் கணவனை பிரிந்திருக்க வேண்டும் என அவள் கோபமாக இருக்கிறாள் என நினைத்து  சமாதானம் சொன்னாள் ஹரிணி..


" ஏய் முழுசா கேட்டுட்டு பேசு பக்கி.. நானே கஷ்டப்பட்டு ‌டையலாக் பேசிட்டு இருக்கேன்.. வந்துட்டா.. என்ன ஓவர் லாம்ப் பண்ண... " கௌதம்..


" அப்ப ஊருக்கு போறதுல பிரச்சனை‌ இல்ல.. " ஹரிணி..


" இல்ல.. நா எதுல போறேன் இப்படிங்கிறதுல தா பிரச்சனை.. " கௌதம்..


" நீ புரியுற மாறி பேசவே மாட்ட.. நா போறேன்..." ஹரிணி..


" அட.. இரும்மா நீ.. இந்தம்மாக்கு ஃப்ளைட் னா‌ பயமா.. அதுனால என்ன ஃப்ளைட்ல போகக்கூடாதுன்னு சொல்லுறா.. நீயே சொல்லு கார்லையோ ட்ரெயின்லையோ போனா டயம் வேஸ்ட்.. அத்தோட ட்ராவலிங் டயர்டு இருக்கும்.. சொன்னா புரிஞ்சிக்கவே  மாட்டேங்கிறா.. அதுனால.. " கௌதம்.. 


" அவள சமாதனப்படுத்த இங்க கூட்டிட்டு வரவேண்டிய அவசியம் என்னனு நா தெரிஞ்சுக்கலாமா.. " ஹரிணி..


" ஹி.. ஹி... அது.. அது.. " வெட்கப்படுவது போல் பாசாங்கு செய்தான்.. 


இருவரும் தனிமையை நாடி வந்திருப்பதை உணர்ந்தவள்.. “இந்த கிராமத்து மெரினா பீச்ச யூஸ் பண்ணிக்கங்க.. “ என கையில்  ஸ்கெட்ச் பேடுடன் வெளியே செல்ல தயாரானாள்..


" உன்னைய மாறி நல்ல நண்பி கிடைக்க நா எந்த ஜென்மத்துல என்ன புண்ணியம் பண்ணேனோ... " என கூறி தன் மனைவியை காண நடக்க எட்டு வைத்தான்.. 


அவனை முறைத்தவள் " ஏய்.. உனக்கு பத்து நிமிசம் தா டைம்.. அதுக்குள்ள முடிச்சுடு... " ஹரிணி..


" பத்து நிமிஷமா.. உனக்கே இது நல்லா இருக்கா.. நா நடந்து போறதுக்கே ரெண்டு நிமிசம் முடிஞ்சிடும்.. அதுக்கப்புறம் தொட்டு கிட்டு கால்ல விழுந்து சமாதானப் படுத்த குறைஞ்சது ஒரு மணி நேரம் வேணும்.. " கௌதம்..


" நீ எவ்ளே நேரம் வேணும்னாலும் எடுத்துக்கோ.. ஆனா தோட்டத்துல வேல செய்ய ஆளுக பத்து நிமிசத்துல வந்திடு வாங்க.. நீ ஓட்டுற‌ படத்த காசு குடுக்காமலேயே பாத்து ரசிப்பாங்க பரவாயில்லயா.. " ஹரிணி..


" நீ பேசிப் பேசியே என்னோட நேரத்த வேஸ்ட் பண்ணுற.. " கௌதம் .


" வெளில போ ன்னு சொல்லாம சொல்லுற.. " ஹரிணி..


" இத விட ஸ்ரெய்ட்டா யாராலையும் சொல்ல முடியாதுமா.. கிளம்பும்மா.. " என நடக்க ஆரம்பிப்பதற்குள் மீண்டும் ஹரிணி குரல் குடுத்தாள்..


" நீ இன்னும் போலையா.. போம்மா.. அப்படியே அந்த கதவ சாத்திட்டு போ.. " என்றவனை முறைத்து விட்டு 'இவனுங்க ரொமான்ஸ் பண்ண நாம காவல் காக்க வேண்டியதா இருக்கு.. ' என முணுமுணுக்க..


" இத குறிச்சு வச்சுக்கிறேன்.. உனக்கு தேவப்படுறப்ப.. நானும் அணிலா மாறி உதவி செய்றேன்‌.."  கௌதம்.


" நீ நடமாடு மிருகக்காட்சி சாலைன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. போடா... " என கூறிச் சென்றாள் ஹரிணி.. 


மனைவியை கொஞ்சி கெஞ்சி பர்மிஷன் வாங்கியவனுக்கு தெரியாது நடக்கவிருக்கும் விபரீதம்.. தெரிந்திருந்தால்.. அவனின் மதியை விட்டு நகர்ந்திருக்க மாட்டான்.. 


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...