முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 52

அத்தியாயம்: 52


கார்மேகங்கள் தான் சேர்த்து வைத்த நீர் திவலைகளை கொட்ட சரியான நேரம் எது என யோசித்துக்கொண்டு இருந்த வேளை அது... 


தோட்டத்தில் பூத்திருந்த தன் விருப்பமான மலர்களை பொக்கே செய்வதற்காக  பறித்து கட்டுக்களாக அடுக்கி வைத்திருந்த அந்த பேழையை தடவிப் பார்த்தபடி நடந்தாள் இந்துமதி.. 


தன்னுடைய படிப்பு இன்று பணமாக மாறுகிறது என்ற பூரிப்பு அவளின் முகத்தில் நன்றாக தெரிந்தது.. தன் கணவனின் வேலை இது.. இவை அனைத்தும் சென்னை மற்றும் பெங்களூருக்கு செல்கிறது.. இப்போது பார்த்தா உடன் இல்லாமல் வெளியூருக்கு பயணம்  செல்ல வேண்டும் என கௌதமை தன் மனதிற்குள் திட்டிக்கொண்டு இருந்தாள் அவனின் மதி... 


முன் தின காலை வேளையில் நடந்ததை நினைத்துப் பார்த்தாள்.. 


" அத்த.. ஆச்சி.. " என்று அழைத்துக் கொண்டு வந்தான் சம்பத்..‌


" என்னடா காத்து இந்த பக்கம் வீசுது.. நீ ஊருக்குள்ள தா இருக்கியா‌.. பல நாளா தலயே கண்ணுக்கு தெரியல.. இப்ப நீட்டியிக்க என்ன காரணம்..  " தரன்.. வாசலிலேயே மடக்கி பிடித்து பேசினான்.. 


" உன்னைய பாக்க வரல வழிய விடு.. நா போனும்... " சம்பத் எரிச்சலாக..


" நீ என்னடா சப்பானி மாறி பேசுற.. ம்..  ' சந்தைக்கு போனும் ஆத்தா திட்டும்.. காச குடு.. ' இந்த டயலாக்க கமல் மாறியே சொல்லு வழிய விட்டுடுறேன்.. " வம்பாக..


" டேய் கொன்னுடுவேன் டா வம்பு பண்ணேன்னா.. " என விலகி நடக்கலானான் சம்பத்.. 


" நியாயமா பாத்தா உந்தங்கச்சிய தா வழி மறிச்சு வம்பு பண்ணனும்.. ஆனா அண்ணன வழி மறிக்க வேண்டியதா இருக்கு.. நேரக் கொடும டா.. " என புலம்பினான் தரன்.. 


சிறிது தூரம் சென்றவன் மீண்டும் தரனின் முன் வந்து நின்றான் சம்பத்..   எதையோ கேட்கும் ஆவலுடன்.. 


" என்ன மச்சா‌ டையலாக் சொல்ல போறியா.. " தரன் கேட்கும் ஆவலில் இருக்க...


அவனை முறைத்தவன் " அது... " சம்பத்..


" எதுக்கு மச்சான் தயங்குற சொத்த கித்த எழுதி வாங்கப் போறியா.. எம்பேருல எதுவும் கிடையாதுடா.. எல்லாமே இன்னொருத்தர் பேருல இருக்கு.. யாருன்னு சொல்றேன்‌ மயக்க மருந்து ரெடி பண்ணி எழுதி வாங்கிடு..‌ சரியா.." 


" போடாங்.. "


" சரி என்ன விசயம் மச்சா.. " 


" அது நீயும் ராணிம்மா தா அப்பா ஆக்ஸிடென்ட்க்கு சம்மந்தம் இருக்கும்னு நினைக்குறியா... " சம்பத்தின் கலக்கம் எதிரில் இருந்தவனுக்கு புரிந்தது எனினும் பலமாக சிரித்தான் தரன்.. 


" ஏன்டா பைத்தியம் மாறி சிரிக்குற... " கேள்வி கேட்டா பதில் செல்லாமல் இருப்பதால் கடுப்புடன் சம்பத் முறைக்க.. 


" சிரிக்காம என்ன பண்ண சொல்லுற.. கட்டுன ‌பொண்டாட்டிய நம்பனும் மச்சி சந்தேகப்பட்டா‌ நம்ம லைஃப் ரொம்ப கஷ்டம்.. " 


" அப்ப ராணிம்மாவ நீ நம்புறியா... " 


" இல்ல.. உந்தங்கச்சி உண்மையத் தவிர எல்லாத்தையும் பேசுவா... அழுத்த காரி.. வாய்ல இருந்து உண்மைய வரவைக்கிறது ரொம்ப கஷ்டமான விசயம்.. " கேலியாக..


" டேய்.. " 


" இதோ பாரு ஹரிணி தாங்கூட பழகுறவங்களுக்காக என்ன வேணும்னாலும் செய்வா.. அது உனக்கே தெரியும்.. அப்றம் அப்பா ஆக்ஸிடென்ட்ல சந்தேகம் இருக்குத்தா ஆனா ஹரிணிக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்ல.. " உறுதியாக..


" எத வச்சி உறுதியாக சொல்லுற சம்பந்தம் இல்லைன்னு.. " 


" அப்பாவ ஹாஸ்பிட்டல்ல சேத்ததே அவா தா... விசயம் தெரிஞ்சு நா சென்னை வர டுவெல் ஹவர்ஸ்ஸும் அவா தா அப்பா கூடவே இருந்து பாத்திருக்கா... அவர கொல்லனும்னு நினைச்சிருந்தா அந்த நேரத்துக்குள்ள முடிச்சிருப்பா... ஆனா செய்யல... ஏ.. அது மட்டுமில்ல அப்பா உடம்புல முன்னவிட அதிகமா சேன்ஜஸ் தெரியுது.. சீக்கிரம் எழுந்து நடமாட வாய்ப்பிருக்குன்னு டாக்டர் சொன்னாங்க... காரணம் உன்னோட ராணிம்மா தா.. " .


" என்ன சேன்ஜ மாப்ள.. " 


" அவளோட பேச்சு அப்பாவோட காதுல விழுதுடா.. அவரோட உடம்பு அதுக்க ரியாக்ட் பண்ணுது மச்சான்... " 


" ஆனா அம்மா... " 


" அவங்களுக்கு அவா மேல கோபம் அவ்வளவு தா... அப்பா சீக்கிரம் எழுந்திடுவாருன்னு டாக்டர்ஸ் சொல்றாங்க.. அப்படி நடந்துட்டா.. அம்மா கோபம் எல்லாம் கான்.. பறைச்சி போய்டும்.. ஓகே வா.. " 


" ம்.. சீக்கிரம் நடந்தா நல்லா இருக்கும்..‌‌" என தலையசைத்து உள்ளே செல்ல நடந்தவனின் கையில் இருந்த சாவியை பார்த்து சம்பத் வந்ததன் நோக்கம் அறிந்து கொண்டுன் தரன்.. 


"என்ன டிரைவர் வேலைக்கு வந்தியா.. இங்க வேலைக்கு ஆள் தேவையில்லையே.. தேவப்பட்டா சொல்லி அனுப்புறோம்.. இப்ப இங்கருந்து கிளம்பு.. வழி அந்தப் பக்கம்டா மச்சான்.. மாத்தி கீத்தி போய்டப் போற.. " தரன் என கேலி செய்ய..


"டேய்.... " என அடிக்க சென்றான் சம்பத்.. 


இருவரும் சிறிது தூரம் துரத்தி விளையாட " அட.. அட.. அட.. என்னவொரு கருமாந்திர காட்சி.. இவரு தொரத்த அவரு ஓட.. இவெங்க ரெண்டு பேரும் ஒருவேல லவ்வர்ஸ்ஸா இருப்பாங்களோ.. அப்படின்னு பாக்குறவங்கள சந்தேப்பட வைக்கிறது இந்த காட்சி.. " கௌதம் . 


" நீயும் ஏன்டா வாருர என்ன.. உனக்காக வந்தே பாரு என்ன சொல்லனும்.. நீ ஏன்டா கிளம்பாம இருக்க.. " சம்பத்.. 


" நா ரெடிதா மச்சான்.. எம்பொண்டாட்டி தா விடமாட்டேங்கிறா.. போகாதீங்க.. போகாதீங்கன்னு.. ஒரே சென்டிமென்ட் சீன்தா..‌ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்திருந்தீங்கன்னா அத பாத்திருக்கலாம்.. மிஸ் பண்ணிட்டிங்க.." என காப்பியுடன் வந்த தன் மனைவியை வம்பிலுத்தான் கௌதம்.. 


" அண்ணா அவரு எங்க வேண்ணாலும் போட்டும்.. எனக்கு எந்த கவலையும் இல்லை.. பெட்டி எல்லாம் எடுத்து வச்சுட்டேன்.. பாத்துட்டு வேற என்ன என்ன வேணும்னும் சொல்ல சொல்லுங்க.. " அலட்சியமாக திரும்பிச் சென்றாள்.. அவளின் முகத்தில் கவலை இருக்கத்தான் செய்தது..


" இந்தும்மா நீ ஏம்மா ஃபீல் பண்ற. 

நானே அவன கூட்டிட்டு போய்ட்டு பத்திரமா கூட்டீட்டு வந்துடுறேன்.. இதோ காரு.. " சம்பத்.. 


" எல்கேஜி படிக்கிற பையன பத்திரமா பாத்துக்க டா மச்சான்.. ஃப்ரெண்ட்ஸ் ரெண்டுமே கிண்டர் கார்டன் ஸ்டூடெண்ட்ஸ் தா போல… ஹீம்.."  தரன் நக்கலாக. 


" போடா வேலையத்தவனே.. என்னோட ராணிமாவ கிண்டல் பண்ண வந்துட்டான்.. " சம்பத்..


"ஓ.. கிண்டல்.. சரி டிரைவர் வேல பாக்க வந்தது மச்சானுக்காகவா.. " தரன்..


" இல்ல என்னோட  ராணிம்மாக்களுக்காக.. " சம்பத் இந்துவையும் சேர்த்து சொன்னான்..


மகிழ்ச்சியுடன் கௌதமை வழியனுப்பினாள் இந்து.. செல்லும் முன் அவன் செய்த குறும்புகளை எண்ணும் போது இப்போது கூட அவளின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்தது..


இன்று..


" அட கேணச்சிறுக்கி.. கனவுல மெதக்காம.. கெளம்பு சீக்கிரமா.. மழ வர்ர மாறி இருக்கு.. வெரசா போவோம்.. வீட்டுலயே கெடன்னு சொன்னா கேக்குறாளா.. எம்பேச்ச என்னைக்கு கேக்குறா.. " என வசைபாடிக் கொண்டிருந்தாள் கிருஷ்ணம்மாள்.. 


" ம்மா.. கொஞ்சம் பொறும்மா.. வாணியக்காவும் சங்கர் அண்ணனும் ‌ சாப்பிட போயிருக்காங்க.. வந்ததும் போலாம்.. " 


" ஹிக்கும்.. இது பெரிய அரண்மன வீட்டு பொக்கிஷம் பாரு.. திருடன் வந்து தூக்கிட்டு போறதுக்கு... இங்க வந்து உக்காரவாது செய்யுடி... நடந்துட்டே இருந்தா கால் நோகாதா... வாடி.. " 


" ம்மா.. அந்த கிளாஸ் ஹவுஸ்ஸ பூட்டிட்டு வந்துடுறேன்‌.. இரும்மா.. " 


" நெறமாசமா இருந்துட்டு இங்கிட்டும் அங்கிட்டும் அழையாதன்னு சொன்னா கேக்குராளா.. அடியே.. பாத்து நட டி... சகதியா கெடக்கு.. " என எச்சரித்தார் அவர்.. 


"ம்.. சரிம்மா.. " 


கவனமாகவே நடந்தாள்.. பூட்டி விட்டு திரும்பும் வேலையில் வந்தவனை கண்டு அவளின் மனதில் பயம் உண்டாக ஆரம்பித்தது.. ஏனெனில் வந்து கொண்டிருந்தது விஜயபாண்டியன்.. 


சும்மா வந்தாலே பயந்து நடுங்குவாள்.. அவனோ முழு போதையில் தள்ளாடிய படி வந்து கொண்டிருந்தான்.. அவனின் கண்களில் பட்டு விடாமல் செல்ல வேண்டும் என எண்ணியபடி நடந்தாள்.. 


"பாக்காம போன நாங்க உன்ன விட்டுடுவோம்மாக்கும்.. இந்த மாமன விட்டுட்டு ஊர் பேர் தெரியாதவன கட்டிக்கிட்டா நாங்க வாய்ல வெரல வச்சுட்டு சும்மா இருக்கனுமாக்கும்.. மும்பைக்காரன்ட அப்படி என்னத்த பாத்துட்ட..‌ ம்.. எங்கிட்ட இல்லாதத ஒன்னு இருக்கான்னு கேக்குறேன்... " போதையில் நிற்க கூட முடியாமல் தள்ளாடியபடி பேச..


" .... " விலகி சென்றாள் இந்து.. 


" உம் புருஷன் ஊர்லேயே இல்லையாமே.. திரும்பி வருவானா இல்லயா.. ஏன்னா உங்க வீட்டு ஆம்பளைங்க ராசி அப்படி.. அப்பங்காரன் போனான் வர்றப்ப பொணமாத் தா வந்தான்.. அண்ணங்காரேன் போனான்...  இருக்கானா இல்லையான்னு தெரியல தொலைஞ்சு போய்ட்டான்... அந்த லீஸ்ட்ல உன்னோட புருஷனும் சேந்திடுவானா இல்ல சேத்துடுவோம்மா.. " என போதையிலும் மிரட்டினான் விஜய்..


அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தாள்.. அது சாக்கடையில் ஊறிக் கொண்டிருக்கும் புழுவை பார்க்கும் அருவெருக்கத்தக்க பார்வை அது.. 


" என்ன டி அப்படி பாக்குற.. சும்மா விட மாட்டேன்டி.. உன்னையும் அந்த மும்பைக்காரனையும்.. பாரு.. இந்த விஜய் யாருன்னு..  " என அவளை நெருங்க அவள் பின்னால் நகர்ந்தாள்..


ஏற்கனவே அவனை பார்த்தில் பயந்து போய் இருந்தவள் நெருங்கி வரவும் நடுங்க ஆரம்பித்து விட்டாள்.. அவளின் பயத்தை அதிகரிக்கவோ என்னவோ கார்மேகங்கள் சூழ்ந்து மழையை பொழுய ஆரம்பித்தது.. திடீரென கேட்ட இடியின் சத்தத்தில் அதிர்ந்து போனாள்.. அந்த அதிர்ச்சியில் அவளுக்கு பிரசவ வலியும் வந்து விட்டது... 


" அம்மா... " என வயிற்றை பிடித்துக்கொண்டு நிற்க முடியாமல் அமர்ந்தவளை பார்த்து பயந்து போனான் விஜய்... 


அவளை பிடிக்கும் தான் அவளை கல்யாணம் செய்து கொள்ளவே ஆசை பட்டான் தான்... ஆனால்  காயப்படுத்த என்றும் நினைத்ததில்லை...‌ 


சத்தம் கேட்டு வந்த கிருஷ்ணம்மாள் 

"  டேய்.. ***பயலை.. என்னடா பண்ணுன என்னோட மகள ஐய்யோ ஐய்யோ  யாராது வாங்களேன்.. எங்கண்ணு முன்னாடியே எம்மக துடிக்குறாளே.. ஐய்யோ.." என கூப்பாடு போட்டாள் கிருஷ்ணம்மாள் .


மத்தியான நேரம் மழை வேறு ஆதலால் நடமாட்டம் இல்லாமல் இருந்தது அந்த இடம்.. தற்செயலாக அங்கு வந்த ஹரிணி இந்துவை பார்த்து விட்டாள்.. 


அங்கு ஒரே ஒரு குட்டி யானை என்று சொல்லப்படும் டாட்டா ஏஸ் வண்டி மட்டுமே இருந்தது... 


விஜய் இந்துவை தூக்கி அதில் ஏற்றினான்... கிருஷ்ணம்மாளும் உடன் ஒன்றிரண்டு பெண்கள் மட்டுமே ஏறினர்.. விஜய் வண்டியை ஓட்ட முற்பட்ட போது தடுத்து விட்டாள் ஹரிணி.. 


" குடிச்சிருக்க நீ டிரைவ் பண்ணாத எங்கையாது விட்டுட்டேன்னா ஆபத்து.. இறங்கு நா ஓட்டுறேன்.. " ஹரிணி..


" நீ எப்படி ஓட்டுவ.. உன்னால எப்படி முடியும்.. ப்ளீஸ் நா சேஃபா ஓட்டுறேன்.. நீ வேணாம்.. நா ஓட்டக் கூடாதுன்னா வேற யாரையாது கூப்பிடுவோம்.. பொறு.. " என தடுத்தான் விஜய்.. அவளும் கர்ப்பிணி என்பதால்..


" யாரும் உதவிக்கு வர்ர வரைக்கும் காத்துட்டு இருக்க முடியாது.. தள்ளு  ஹாஸ்பிடல் போக... " என அவனை  மதிக்காது அந்த குட்டி‌ யானையை ஓட்ட ஆரம்பித்தாள்..


மேடு பள்ளம் என பார்த்து பார்த்து ஓட்டினாளும் வண்டி குளுங்குவதை தடுக்க முடியவில்லை... வீட்டினருக்கு தகவல் சொல்லி விட்டு தான் சென்றாள்.. 


மருத்துவ மனையில் இந்துவை ஸ்ட்ரெக்சரில் வைத்து தள்ளிச் சென்றார்.. ஆனால் ஹரிணி வண்டியை விட்டு இறங்கவில்லை.. மனம் இந்துவுடன் செல் என கட்டளையிட்டாளும் ஏழு மாத இருமகவை சுமக்கும் உடல் ஒத்துழைக்க வில்லை... 


பாதி தூரம் ஓட்டி வந்த போது தான்  கால்களுக்கு இடையே வடியும் நீரை பார்த்தாள்.. ஏன் என தெரிந்தாலும் நிறுத்தவில்லை.. ' ஒன்னும்மில்ல.. ஒன்னும்மில்ல.. சரியாகிடும் எல்லாம் சரியாகிடும்.. இதோ வந்துட்டோம்..  ' என்ற வார்த்தையை மந்திரம் போல் உச்சரித்துக் கொண்டே வந்தாள்.. 


தன்னைவிட அவளின் எண்ணம் முழுவதும் இந்துவை பற்றியதாகவே இருந்தது‌.. தன் நண்பனின் உயிர் ஆயிற்றி அவர்கள் இருவரும்..


தடுமாறி கீழே இறங்கி வெளியே வந்தவளின் கால்கள் சோர்ந்து மயங்கி சரிந்தான..‌ சரிந்த இடம் ரிஷி தரனின் மார்பு.. 


" ரிஷி..‌ இந்து.. " என புலம்பியவளை கைகளில் அள்ளிக்கொண்டு ஹாஸ்பிடலின் உள்ளே சென்றான்... 


அவனின் கண்கள் கலங்கியிருந்தது... 

பிரசவம்.. பெண்ணின் மறுபிறப்பாயிற்றே.. 

 தொடரும் ...



கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...