முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 53


 

அத்தியாயம்: 53


காலம் 


கண்ணீரை மட்டுமல்ல..


காயங்களையும் மாற்றும்..


கேள்வியை மட்டுமல்ல..


பதில்களையும் மாற்றும்..





ஆறு மாதங்களுக்கு பின்..



" இதோ பாரு நா நல்லவன்லாம் கெடையாது.. ரொம்ப மோசமானவன்..‌ கோபக்காரன்.. சொன்ன பேச்ச கேளு இல்லைன்னா.. " என கண்களை உருட்டி மிரட்டி கொண்டு இருந்தான் கௌதம்..


" ஏய்.. ஏய்..‌ என்னைய மதிக்காம தவண்டா போற.. இரு.. " என ஓடிச் சென்று தூக்கினான் தன் மகளை.. பொக்க வாயை திறந்து சிரித்தாள் ஆறு மாதங்களே ஆன கை குழந்தை.. 


ஆதிரை.. 


தன்னை தூக்கிவன் கைகளிலிருந்து விடுபட காலை உதறி திமிறிக்கொண்டு இருந்தவள் அவனின் கன்னத்தில் அடித்தாள்.. 


"பெத்த தகப்பனையே கை நீட்டி அடிக்குறேல்ல.. இதெல்லாம் உனக்கு யாரு சொல்லி குடுத்தான்னு எனக்கு நல்லாவே தெரியும்… எல்லாம் சகவாச தோஷம்.. இனிமே உம்பெரியப்பங் கூட சுத்துறத பாத்தேன்..‌ அவ்வளவு தா பாத்துக்க.. தாவிட்டு அவக்கிட்ட போறத பாத்தேன் அப்றம் நடக்கப்போற விபரீதத்துக்கு நா பொறுப்பில்ல சொல்லிட்டேன்.. " என திட்டியபடியே மகளின் உடையை மாற்றினான்... 


சம்பத்திற்கும் பவித்ராவிற்கும் திருமணம் முடிந்து இருபது நாள்களே ஆனது.. அதனால் இன்று குலதெய்வம் கோயிலுக்கு‌ சென்று வழிபட முடிவு செய்து குடும்பத்துடன் தயாராகிக் கொண்டு இருந்தனர் அனைவரும்.. தந்தையும் மகளும் ஒரே நிறத்தில் உடை அணிந்திருந்தனர்.. 


" இனிமே போ மாட்டேன் ப்பா.. உங்க பேச மட்டுமே கேக்குறேன்.." சுதா  கீச்சுக்குரலில் பேச..  யாரது என சுற்றி முற்றி பார்த்தான் கௌதம்..


" நீ தானா.. "


" அண்ணா இங்க என்னண்ணா பண்ணீட்டு இருக்க.. உன்னைய மதினி வெளில திட்டீட்டு இருக்கா.. நீ என்னடான்னா உங்க பொண்ண கொஞ்சிகிட்டு இருக்குற.. வாண்ணா.. வந்து அவள என்னன்னு கேளு.." சுதா 


" பொதுவா ஆம்பளைங்க கெளம்பி வெளில நின்னுட்டு பொம்பளைய  'கிளம்பலையா.. நேரமாச்சு..' அப்படீன்னு அதட்டுவாங்க.. பொம்பளைங்க ' இருங்கங்க.. பிள்ளைய ரெடி பண்ணிட்டு இருக்கே..’ ன்னு சொல்லுவாங்க.. ஆனா ஏ வாழ்க்கைல மட்டும் ஏ எல்லாமே தலைகீழ்லா நடக்குது.. ஹீம்.. " என்றவன் பெருமூச்சு விட..


" நீ மதினிக்கு ரொம்ப செல்லங் குடுக்குறீங்க.. அதா மதிக்க மாட்டேங்கிறா.. " 


" மிரட்டுனேன்னு வை.. என்னைய தூக்கி போட்டு மிதிச்சுடுவாம்மா.. அண்ணே பாவமில்லையா.. மிதி வாங்குற வயசா எனக்கு.. வா.. போலாம்..”  என‌ அறையை விட்டு வெளியே வந்தவன் கண்டது ரிஷி தரனை..


வழக்கம் போல் தன் வேட்டியை மடித்து கட்டி கரு நீல ஃபுல் ஹண்ட் ஷர்டை பாதியாக மடித்து கையில் தன் மகனுடன் வந்தான்.. அகிலன் ரிஷி தரன் ஹரிணியின் மகன்.. 


" இவனுக்கு மட்டும் வேட்டி எப்படி தா இடுப்புல நிக்குதோ.. வேல்க்ரோ போட்டாலும் நமக்கு நிக்க மாட்டேங்கிதே.. " என புலம்பியவனின் கையில் இருந்த ஆதிரை தரனிடன் செல்ல தாவினாள்.. 


" அவன்ட்ட போகதன்னு உள்ள உனக்கு நா ஒரு மணி நேரம் கிளாஸ் எடுத்தேனே அதெல்லாம் வேஸ்ட்டா.. " என்பதற்குள் தரனின் மகன் கௌதமிடம் பாய்ந்தான்.. தரன் இதை நக்கலாக பாத்து சிரித்துக் கொண்டே ஆதிரையை தூக்கிக் கொண்டான்..


" உனக்கும் எனக்கும் செட்டாகாது.. சோ நா உன்ன தூக்க மாட்டேன்.. " என வீம்பாக நின்றவனிடம் செல்ல வேண்டும் என அகிலன் அழ..


" ஏன்டா சின்ன குழந்தைய அழ வக்குற.. ஆசையா வருது அத போய் அழ விட்டுட்டு.. தூக்குடா.. " என கவியரன் சத்தமிட வாங்கிக் கொண்டான்.. வந்தான் தன் வேலையை சிறப்பாய் செய்து விட்டு சிரித்தான் தன் பொக்கை வாய் தெரிய.. 


“ சிறப்பான அபிஷேகம்.. இதுக்கு தா பாஞ்சிட்டு வந்தியா.. “ என அகிலனை பார்த்து கேட்க.. அவன் சிரித்தான்.. 


"என்னய பாத்தா உனக்கு பாத்ரூம் மாறியா தெரியுது.. " என திட்டிக் கொண்டு இருக்க..


" ஐய்யோ.. என்னங்க இது.. கொஞ்சங்கூட உங்களுக்கு பொறுப்பே கிடையாது.. பாருங்க பிள்ள ஜட்டி ஈரமா இருக்கு.. குடுங்க நா மாத்தி விடுரேன்.. " என அகிலனை தூக்கிக்கொண்டு அறைக்கு விரைந்தாள் இந்து.. 


" புருஷன் சட்ட ஈரமாகிடுச்சே அதப்பத்தி கவலப்படுறாளான்னு பாரேன்.. நானும் எம்மகளும் ஒன்னு போல ட்ரெஸ் போட்டிருங்குறது பொறுக்கல இவங்களுக்கு... வயித்தெரிச்சல் பிடிச்ச குடும்பம்.. " என புலம்பியவன் இந்து உள்ளிருந்து குரல் குடுக்கவும்.. 


" இவா கிட்ட புருஷனா வேல பாக்குறது கஷ்டமா இருக்கே.. " என்றபடி இந்துவை பின் தொடர்ந்து சென்றான்.. 


அகிலனின் உடையை மாற்றிவிட்டு அவனை ரசித்து கொண்டு இருந்தாள் இந்து.. 


" ஏய் பிள்ளைய கண்ணு வைக்காதடி..  போடி அங்கிட்டு உந்து உந்து பாக்காம.. " கௌதம் அகிலனை தூக்கிக் கொள்ள..


"இன்னேரம் இவன மாறியே இன்னொரு பையனும் இருந்திருப்பான்ல.. என்னால.. என்னால தா... என்னோட அஜாக்கிரதையால தா... " என்றவளின் கண்ணீருடன் குரல் தொடரும் முன்.. 


அவளின் இதழில் விரல் வைத்து பேச விடாது தடுத்தவன் அவளை மார்போடு அணைத்தான்.. " எவ்வளவுதா அழுதாலும் நடந்த எதையுமே நம்மளால மாத்த முடியாது மதி.. இப்படி பேசி உன்னைய நீயே கஷ்டப்படுத்திக்காத.. ப்ளீஸ் எனக்காக இனி இத பத்தி பேசாதா.. மறந்திடு.. ”  என்றவனின் முகமும் வேதனையில் கலங்கியிருந்தது.. 


அன்று... 


மூன்று மணிநேர தவிப்பிற்கு பின் மருத்துவ மனையை அடைந்தவன் கண்டது தன் மனைவியின் நலத்தையும் மகளின் பிறப்பையுமே.. ஹரிணியும் அதே மருந்துவமனையில் தான் இருக்கிறாள் என்பதை அவன் அங்கு வந்த பின்தான் தெரிந்தது.. 


ஹரிணி எங்கே என சுற்றி முற்றி தேடியவன் கண்களுக்கு வரான்டாவின் ஒரு நாற்காலியில் சோர்வுடன் அமர்ந்திருந்த ரிஷி தரன் தென்பட்டான்..‌


நிமிர்வுடனும் திமிருடனும் பார்த்து பழகிய ரிஷியை இவ்வாறு பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது.. விபரீதம் நடந்துள்ளதை அறிந்து கௌதம் ஹரிணியிடம் விரைந்தான்.. சம்பத் தரனை அணைத்து ஆறுதல் படுத்தினான்.. 


பச்சை நிற உடையில் சோர்வுடன் படுக்கையில் கிடந்த ஹரிணியின் கண்களில் வலிந்த கண்ணீரை   கண்டவன் தன்னால் எதுவும் செய்ய முடியாது போனதை எண்ணி வேதனை தவித்தான் கௌதம்... இரு மகவுகள்.. இரண்டும் ஆண் குழந்தை.. கருவில் ஒன்றாக வளர்ந்த அவைகளுக்கு ஒன்றாக உயிர் வாழ குடுத்து வைக்க வில்லை.. எத்தனை முயன்றும் ஒரு சிசுவின் உயிரை எமன் பறித்துக் கொண்டு சென்று விட்டான்.. 


 மகனின் இழப்பு அதிகமான வலியை தந்திருந்தது ஹரிணிக்கு.. ஆறு மாதங்கள் உருண்டோடியும் மனதில் அது நீங்காத வலியை தந்து கொண்டே தான் இருந்தது.. காலமே அவளின் வலிக்கு மருந்தாய் மாறியது..  


மறக்க முடியாத போதும் தன் நண்பனுக்காகவும் தன்னை சுற்றியிருக்கும் குடும்பத்தினருக்காகவும்  நடந்தவைகளை மறைத்து புன்னகையுடன் வளம் வந்தாள் ஹரிணி.. அதிலும் கௌதமின் மகளை காப்பாற்றியதில் அத்தனை ஆனந்தம் அவளுள்.. நிம்மதியும் கூட..


ஆதிரையையும் , அகிலனையும் சோஃபாவில் அமரவைத்து தரன் கொஞ்சிக் கொண்டு இருக்க.. சேலை கட்டி பாந்தமாக அறையை விட்டு வந்தாள் ஹரிணி.. இருவரும் இப்போது இருப்பது ஒரே அறையில் தான்.. ஹாஸ்பிடலை விட்டு தன் மனைவியையும் மகனையும் அவன் நேராக வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான்.. இம்முறை தாயின் கோபத்தையும் அவன் பொருட்படுத்தவில்லை.. முதலில் முரண்டு பிடித்து முறைத்துக் கொண்டிருந்த அவரும் பேரனை கண்டு கொஞ்சம் இறங்கி தான் வந்தார்..‌


தாய்மையின் பூரிப்பில் உடலில் சற்று சதை வைத்திருந்தது ஹரிணிக்கு..  அவளின் நடையில் மட்டும் சின்ன மாற்றம்.. அடி பட்டிருக்குமோ.. 


" பேபீஸ்.. இன்னைக்கு நா உங்களுக்கு ஒரு ரைம்ஸ் சொல்லப் போறேன்..  சேவல் எப்படி கொத்தும்.. ச்சி.. கத்தும் அப்படீன்னு நீங்க தெரிஞ்சுக்கலாம்.. " என குழந்தைகளுக்கு ரைம்ஸ் பாடி காட்டினான்... 


" இவென் எப்ப நர்சரி ஸ்கூல் டீச்சரானான்.. பாடுற தோரணைய பாத்த யாரையோ கலாய்க்குற மாறி தெரியுதே.. இவன்ட்ட இன்னைக்கு சிக்குன ஆடு யாரா இருக்கும்.. " என கௌதம் தேட ஹரிணி பூஸ்வானமாக தன் மூச்சை ஏற்றி இறக்கி விட்டுக்கொண்டு இருந்தாள்.. 


" டார்.......லிங்.. டார்....... " 


" உங்கண்ணனுக்கு என்னவாம் டா.. நான் தா அவெங்கூட பேசி ஒன்ற வருஷமாச்சே.. என்ன எப்ப பார்த்தாலும் வம்பிலுத்து கிட்டே திரியுரான்.. " ஹரிணி பட்டாசாய் வெடித்தாள்..


"நீ பேசலன்னா அவென் உங்கூட பேச மாட்டானாக்கும்.. க்கும்.. ஆமா  ரைம்ஸ்  தான பாடுறான.. இதுல என்ன வம்ப கண்டுட்ட.. ஒரு வேல பாட்டுக்குள்ள வேற அர்த்தம் இருக்குமோ.." யோசனையோடு.. 


" ம்.. இருக்கு இருக்கு.. " என்றவள் நடந்ததை சொல்லலானாள்.. 


அதாவது தொழுவத்தில் இருந்த கோழிக்களுக்கு உணவு வைக்க என சென்றவள் அதன் உணவை சிறிது எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்..


 " நல்லாத்தா இருக்கு.. " என கை நிறைய அள்ளி வாயில் போட்டாள்..


தனக்கு தான் என ஆசையோடு நின்று கொண்டிருந்த கோழிகள் அவள் வாயில் போட்டுக் கொண்டதும் தலையை சிலுப்பியது.. சரி அடுத்த கை யாது நமக்கு கிடைக்கும் என பார்த்திருக்க அதையும் தன் வாயிலேயே போட்டுக் கொண்டாள் ஹரிணி.. இப்படி பல தடவை ஏமாற்றம் அடைந்த கோழிகள் அவளின் காலை பதம் பார்த்தது.. 


கோழி கொத்தியது என்று சொன்னால் அவளின் மானம் என்ன ஆவது அதனால் காலில் முள் குத்தியதாக கூறினாள்..‌ யாருக்கும் தெரியாது என அவள் இருக்க இவளை கண்காணிப்பதையே வேலையாக வைத்திருக்கும் தரனின் கண்களில் பட்டு விட்டது.. அதான் கேலி செய்கிறான்.. 


" ஓ.. கால்ல இருக்குற புண்ணு கோழியால வந்ததா.. ஹா.. ஹா.. " என சிரித்தான் கௌதம்.. 


" சிரிக்காத டா‌.. ரொம்ப பண்றான் அவெ.. ‌அவனுக்கு என்னைக்காது இருக்கு.. " என்றவளின் காதுக்கருகில் சென்று..


" நா வேணும்னா வழி சொல்லவா.. " என்றான் கௌதம்.. 


" என்ன.. " என தன் புருவங்களை மேலெழும்பி கேள்வியாய் பார்க்க.. 


" அதாவது நமக்கும் அவனுக்கும் செட்டாக மாட்டேங்கிது.. எதுக்கு இவங்கூடல்லாம் பேசியும் பேசாமலும் நம்ளோட நேரத்தையும் வாழ்க்கையையும் வேஸ்ட் பண்ணீட்டு... அதுனால.. " 


" அதுனால.. " 


" அவன‌ டைவர்ஸ் பண்ணீடு.. " .


" டேய்.. என்னடா சொல்ற.. " அதிர்ந்து போய் விட்டாள் போலும்.. 


" உண்மையத்தா சொல்றேன் டார்லிங்.. அந்த திமிரு பிடிச்சவன் நமக்கு தேவையே இல்ல.. என்ன சொல்லுற.. எப்ப பேப்பர்ல சைன் போடுற.. " கௌதம்..


" ம்.. சைன் தான போட்டுட்டா போச்சு.. " 


" சூப்பர் நா போய் நல்ல வக்கீல பாக்குறேன்.. " என கிளம்பியவனை தடுத்தாள் ஹரிணி..


" கொஞ்சம் பொறுடா.. " 


" வக்கீல் கிடைக்குறது கஷ்டம் இதுல நல்ல வக்கீல் இப்பருந்தே ட்டிரை பண்ணாத்தா சீக்கிரம் கிடைக்கும்.. பாய்... " என்றவனின் கையைப் பிடித்து நிறுத்தியவள்.. 


" இதப் பத்தி நம்ம இந்து கிட்ட ஒரு வார்த்த கேட்டுட்டு சைன் போட்டுடவா.. " 


" கைய விடேன்... " 


" எதுக்கு.. " 


" விடேன் சொல்றேன்.. நீ எனக்கு காசே செலவு பண்ணாம டைவர்ஸ் வாங்கிக் குடுக்க பாக்குற.. என்னோட குடும்பத்துல குண்டு வைக்க நா சம்மதிக்க மாட்டேன்.. வாரேன்.. நீ எப்படி போனா எனக்கென்ன.. நீயாச்சு அவனாச்சு.. " என தலை தெறிக்க ஓடினான்.. எங்கே இந்துவிற்கு நான் கொடுத்த ஐடியா தெரிந்து விடுமோ என்ற பயத்தில்.. 


" கௌதம் சொல்றதும் எனக்கு சரியா படுதே ராணிம்மா.. நீங்க டிவர்ஸ் பண்ணிடேன்.. " சம்பத் இவர்களின் உரையாடலை கேட்டு..


"அண்ணா நீயுமா.. " 


" ராணிம்மா அவங்கவங்க வாழ்க்கைய துணைய தேர்ந்தெடுக்க அவங்கவங்களுக்கு உரிமையும் இருக்கு.. இது நிர்ப்பந்த்தால உண்டானா உறவு.. அத்தோட இப்படி கல்யாணங்கிற பேர்ல ரெண்டு ஈகேயிஸ்ட்ட கட்டி வச்சா எப்படி வாழ்வாங்க சந்தேஷமா.. இதுக்கு பிரிஞ்சு போய்டலாம்.. பிரச்சனையே இல்ல.. எனக்கு அவனப்பத்தி நல்லா தெரியும் மா..  பிடிவாதக்காரன்.. உங்களையும் நா சின்ன வயசுல இருந்து பாத்திருக்கேன்.. " சம்பத்..


அவனின் கைகளை பிடித்து அருகிலிருந்த நாற்காலியில் அமரவைத்தவள்.. " நா எப்படி பிறந்து வளந்தேன்னு இங்க இருக்குறவங்களுக்கு தெரியாது.. அது தெரிஞ்ச நீயும்மாண்ணே இப்படி பேசுற.. எங்கிட்ட எல்லாமே இருக்கு.. பணம் வசதி இதுல எந்த விதத்தையும் குறை கிடையாது.. 


என்ன தா ஒன்னா நம்பரா இருந்தாலும் பக்கத்துல வேற நம்பர்ஸ் சேரும் போது அதோட வேல்யூ அதிகமா மாறும்.. என்னோட வேல்யூ ‌இந்த குடும்பந்தாண்ணா.. இங்க இருக்குறவங்க காட்டுற அன்பும் அக்கறக்கும் முன்னாடி எத வேண்ணாலும் சகிச்சிக்கலாம் ஏத்துக்கலாம்..


யாருமே இல்லாம நா வளந்த மாறி என்னோட குழந்தையும் வளரக்கூடாது.. அவனுக்கு தாத்தா பாட்டி பெரியம்மா பெரிப்பா இப்படி எல்லா செந்தமும் இருக்கனும்.. ‌முக்கியமா அப்பா.. அப்பாங்கிற உறவு வேறும் ரத்தம் சம்பந்த பட்டது மட்டுமில்லை ஒரு குழந்தையோட குருவே அப்பா தா.. அத என்னைக்கும் நா அகில் கிட்ட இருந்து பிரிக்க மாட்டேன்ண்ணா.. " என்றாள்.. 


சிறிது நேரம் யோசித்தவன் பின் 

" கண்டிப்பா அந்த பெட்டர்மாஸ் லைட்டு தா வேணுமா.. " சம்பத்.. 


" ம்.. நீங்க எங்கிட்ட டிவர்ஸ் பத்தி பேசுனது உங்க ஃபிரண்ட்க்கு தெரியுமா.. " கண் சிமிட்டி கேட்டாள் . 


" அவனுக்கு தெரிஞ்சா நா இன்னைல இருந்து வாழா வெட்டி தா.. அவன்ட்ட சொல்லிடாதம்மா.. கல்யாணம் ஆகி ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள கோர்ட் கேஸ்னு அலைய முடியாது.. நா வாரேன்.. " என சென்றே விட்டான்.. 


செல்லும் அவனை பார்த்து சிரித்தாள் ஹரிணி.. அப்போது ஊஞ்சலில் அமரவைத்து தன்  மகனை கொஞ்சிக் கொண்டிருக்கும் ரிஷியை திரும்பி பார்த்தாள் அவள்..  விழிகள் விலகாது அவனையே மெய் மறந்து ரசிக்க.. அதில் காதல் இல்ல ஆனால் இருந்தது.. 


அவன் செய்த செயலுக்காக அவனை விட்டு விலகவும் முடியாது.. தன்னிடம் வம்பிழுத்து கேலி செய்து வலுக்கட்டாயமாக பேச வைக்கும் அவனுடன் ஒன்றவும் முடியாது தவித்தாள் அவள்.. ஏன் என்னவென்று புரியாது அதற்கு விடை தேட முயன்று அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.. 


அவள் பார்வையை அருகில் இருந்த நிலைக் கண்ணாடியில் கண்டவன் தலை திரும்பி அவளை பார்க்க வில்லை.. பார்த்தால் அவள் முகம் திருப்பிக் கொள்வாள்.. 


இருவரும் ஒரே அறையில் ஆடிக் கொண்டிருக்கும் கண்ணாம்பூச்சி ஆட்டம் எப்பொழுது தான் முடிவுக்கு வருமோ..    


எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது

அது தான் உன்னை என்னிடம் சேர்த்தது

தொலைந்தது நானா கிடைத்திடுவேனா

கிடைத்திடும் போதும் தொலைந்திடுவேனா

பெண்கள் மனம் ஒரு ஊஞ்சலில்லை

ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை

இழுப்பது நீயா வருவது நானா

திசையறியாது திரும்பிடுவேனா

காதல் பொன்னூஞ்சலில் அசைவது

சுகம் சுகம்..... 


இவர்களின் நாடகம் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.. கன்னித் தீவு போல.. 


தொடரும் ...

கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி  



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...