அத்தியாயம்: 73
அந்தி சாயும் நேரம்..
சாலையில் தன் வருகையை ஹாரன் சத்தமின்றி அறிவித்து கொண்டே வந்தது அந்த ராயல் என்ஃபீல்டு பைக்.. இருள் கவ்வத் துவங்கும் வேளையிலும் அதை ஓட்டிக் கொண்டு வந்தவனின் முகம் கதிரவனுக்கு நிகராக ஜொலித்தது..
மாறாக பின்னால் அமர்ந்திருந்தவளின் முகமோ சுடு நீரைப் போல் கொதித்துக் கொண்டிருந்தது.. வாயில் இருந்து முத்துக்கள் உதிரவில்லை என்றாலும் இதழ்கள் முணுமுணுத்துக் கொண்டே வந்தது..
கண்ணாடி விழியே அதை கண்டவனோ.. ஒருவித பரவச நிலையில் ஓட்டிக் கொண்டு இருக்கும் பைக்கின் வேகத்தை அதிகப்படுத்தினான்..
பல வாரங்கள் கழித்து கிடைக்கும் மனையாளின் அருகாமையை ரசிக்க ரிஷி தரன் இந்துவின் பூந்தோட்டத்திற்கு அவளை கூட்டிச் செல்கிறான்.. வழியில் அவர்களின் தோட்டத்தில் இருந்து பறித்த மாங்காய்களை தந்தவனுக்கு ஒரு அலட்சியப் பார்வையையே பரிசாக தந்தாள் ஹரிணி..
'இவள எப்டி கரெக்ட் பண்ணுறது.. நானும் எவ்ளோ நேரம் இவள கூட்டிட்டு ஊர் சுத்துறேன்.. ஒரு வார்த்த பேசுறாளா பாரேன்.. ராட்சஸி.. இன்னும் கீழ் இறங்கி கெஞ்சனுமா என்ன.. ஆனா எப்படி.. ' என யோசித்தவனுக்கு கிடைத்தது பூந்தோட்டத்தில் இருக்கும் மர வீடு..
ஹரிணி இந்த கிராமத்திற்கு வந்த புதிதில் மட்டுமல்லாது அவ்வ போது ஆசைப்பட்டு இந்துவிடம் கேப்பது ‘அந்த மர வீட்டுக்குள்ள எப்படி போறது.. கதவு ஜன்னல்.. ஏ எறி அந்த வீட்டுக்கு போற படிக்கட்டே தெரியலயே.. ’ என்று..
இப்போது அங்கு தான் அழைத்து வந்திருக்கிறான்.. சர்ப்ரைஸ்ஸாக இருக்க வேண்டும் என அவளின் விழிகளை துணி கொண்டு மூடச் சொன்னான் தரன்..
" முடியாது.." என அவனுடன் வர மறுத்தவளின் கரங்களை பிடித்து வலுக்கட்டாயமாக நயனங்களை துணி கொண்டு மூடி அழைத்து வந்தான் ரிஷி.
மரவீட்டிற்கு ஏற படிக்கட்டுகள் இல்லை.. ஆனால் மரக்கட்டைகளை ஒரு கயிற்றுடன் மூடிச்சிட்டு கோர்த்திருந்தான் ரிஷி..
கண் மூடி இருந்ததால் அதில் ஏற தரன் அவளுக்கு உதவுகிறேன் என்கின்ற சாக்கில் அருகில் வந்து, தந்த நெருக்கத்தை அனுபவிக்காமல் இருக்க முடியவில்லை ஹரிணியால். காதல் மனம் கள்வனின் அண்மையை விரும்பியதோ..
உயரமாக வளர்ந்திருந்த மரத்தின் உச்சியில் கிளைகளுக்கு நடுவே இருந்தது அந்த குடில்.. சிறியதாக இருந்தாளும் அதில் தாரளமாக நான்கு பேர் படுத்து உறங்கலாம்..
கதவுகள் முழுவதும் வேலைப்பாட்டுடன் இருக்க அதன் பிடியை மெல்ல திருகி உள்ளே அவளை அழைத்து வந்தவன் அவளின் கண்கட்டை மெல்ல விலக்கினான்.. பார்த்தவள் தன்னை ஆசையுடன் அணைத்துக் கொள்வாள் என்ற எதிர் பார்ப்புடன் அவளின் முகம் பார்த்திருக்க..
ஹரிணியின் முகம் அஷ்டகோணத்திற்கு மாறியது.. ' இவா இப்படி ரியாக்ஷன் பண்ணுற அளவுக்கு மோசமாவா இருக்கு.. இல்லையே.. நம்ம கிட்ட இருக்குற கலை திறமையெல்லாம் ஒன்னு திரட்டி கட்டுனதாச்சே..’ என யோசித்த படி குடிலை சுற்றி பார்வையிட்டான்..
குடில் இல்லை அது.. கண்ணாடி வீடு அது.. வெளியே இருந்து யாரும் உள்ளே இருப்பவர்களை பார்க்க முடியாது.. ஆனால் உள்ளே இருப்பவர்கள் அந்த ஊரையே கண்டு ரசிக்கலாம்.. அத்தனை அழகாய் நேர்த்தியுடன் கட்டியிருந்தான் ரிஷி..
இரவில் நட்சத்திரங்கள் நிலா என அனைத்தையும் ரசிக்கும் படி அதன் கூரையில் டெலிஸ்கோப் பொருத்தியிருந்தான்.. மழை பொழியும் போது அது வேறு உலகில் இருப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும் அற்புத வீடு அது.
ரசிக்கும் படியாகத் தான் இருந்தது ஆனால் ரசிக்க வேண்டியவள் ஹரிணி.. பிடிக்கவில்லை போலும்..
" ஏ.. என்னாச்சு.. அஞ்சு செக்கேண்ட்ல அம்பது ரியாக்ஷன் தர்ர.. " தரன் குழப்பமாக.
" இத காட்டத்தா என்ன கண்ண கட்டி பில்டப் போட கூட்டீட்டு வந்தியா.. ச்ச.. நா வேற என்னமோ இருக்கும்ன்னு நெனச்சு ஏமாந்து போய்டேன்.. ஹீம்.. வேற எதாவது இருக்கா அவ்வளவு தானா.. " என அலட்சியமாக கேட்டவளின் திமிர் அவனுக்கு பிடித்திருந்தது..
" மேடம் என்ன எதிர்பார் போட வந்திங்க.. இங்க கூட்டீட்டு போகச் சொல்லி இந்து கிட்ட ரெக்கமெண்ட்லாம் பண்ணிங்களே.. ஏ.. " ரிஷி நக்கலாக..
" ஒரு தாஜ் மஹால் அளவுக்கு இல்லைன்னாலும் ஒரு நார்மலான வுட் ஹவுஸ்ன்னு நினைச்சேன்.. பாத்தா இது ஹவுஸ் இல்ல சைன்ஸ் லேப் (science lab ).. பைனாக் குலர் , மைக்ரோஸ் ஸ்கோப் , பெரிஸ்கோப் , கண்ணாடி பீக்கர் , அப்றம் எலும்புக்கூடு அது மட்டும் தா மிஸ்ஸிங்.. அதையும் வாங்கி வச்சுட்டேன்னா இது எங்க ஸ்கூல் லேப் தா..” என நக்கலாக கூறியவள் லேபை இல்லை கண்ணாடி குடிலை சுற்றிப் பார்க்கலானாள்...
அவனின் திறமையை கேலி செய்ததால் கடுப்புடன் வெளியே வந்தவன் சம்பத்திற்கு ஃபோன் பண்ண..
" என்னடா தங்கச்சிய வளத்து வச்சிருக்கிங்க.. கொஞ்சம் கூட ரசனையே இல்ல அவளுக்கு.. " என மேலே கத்தும் முன்..
" பொண்ண நல்லாத்தா வளத்திருக்கோம்.. என்ன கிளிய வளத்து ஒரு கிங்காங் கிட்ட குடுத்துட்டோம்.. இல்ல கிங்காங் தூக்கிட்டு போய்டுச்சு.. ரசன.. அது அவகிட்ட இல்ல தா.. ஏன்னா இன்னும் உங்கூட வாழனும்னு முடிவு பண்ணிருக்காளே.. அப்ப ரசன அவகிட்ட கிடையவே கிடையாது தான.. " கௌதமின் குரல் அது..
" டேய் சம்பத் ஃபோன நீ ஏன்டா எடுத்த.. ஏற்கனவே நா உம் மேல கொல காண்டுல இருக்கேன் இதுல நீ பேசிப் பேசி அத அதிகமாக்காத.. " கோபமாக பற்களை கடித்தபடி பேச..
" நாங்கூடதா உம் மேல காண்டுல இருக்கேன்.. ஏதே என்னோட பொண்டாட்டிக்கு மொறப்பையனாய்ட்ட.. இல்லேன்னு வையேன்.. "
" நீ காண்டாகுற அளவுக்கு நா என்னடா பண்ணேன்.. உனக்கு டைவர்ஸ்ஸா வாங்கி குடுத்தேன்.. "
" ஓ நீ அதுக்கு வேற ப்ளாண் போடுறியா.. வாய்ப்பில்லை ராஜா.. வாய்ப்பில்லை.. ஏன்னா மை வைஃப் ஆல் வேஸ் மை வைஃப்.. " என்றான் குதுகலத்துடன்..
" டேய் ஏன்டா இப்படி பண்ணுறன்னு கேட்டா பைத்தியம் மாறி ஒலரீட்டு இருக்க.. ஏங்கைல நீ தனியா மாட்டு அப்ப இருக்கு உனக்கு.. "
" ஓஓஓ இவரு பெரிய பாகுபலி.. ஒத்த அடி அடிச்சதும் நாங்க மல்லாந்து மண்ணுல மகுந்திடுவோம்மாக்கும். காரணம் தான தெரியனும் உனக்கு.. இரு நா ஏ உன்ன பழி வாங்கனும்.. ஹாங்.. ஆல் ரெடி சொன்னது தா.. நானும் ஹரிணியும் பழக ஆரம்பிச்ச இந்த ஏழெட்டு வருஷத்துல அவா கண்ணுல இருந்து நா கண்ணீரே பாத்ததில்ல.. எத்தன கஷ்டம் வந்தாலும் ஹரிணி அழ மாட்டா.. ஆனா உன்னால அழுதா..
உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டதுனால தா அவளுக்கு இத்தன கஷ்டம்.. நீ மும்பைல அவள விட்டுட்டு வந்த போதும் சரி டைவர்ஸ் பேப்பர்ல சைன் பண்ணப்பையும் சரி ஹரிணி உடைஞ்சு போய் உட்காந்திருந்தத பாத்த எனக்கு உன்ன கொல்லுற அளவுக்கு கோபம் வந்தது.. " என்றான் அதீத கோபத்துடன் ..
" என்ன பண்ண நீ அவளோட புருஷனாகிட்டியே.. அதுலயும் காதல் கணவனாம் நீ.. அதா உன்ன கதிகலங்க வக்கனும்னு நினைச்சேன்.. செஞ்சேன்.. ஆனாலும் இந்த ரெண்டு மாசமா உன்னோட கஷ்டத்த பக்கத்துல இருந்து பாக்குறப்ப இமயமலைல உக்காந்து ஜஸ்கிரீம் சாப்பிடுற மாறி குளுகுளுன்னு இருந்துச்சு.. வாவ்.. வாட்ட ஃபீல்.. வாட்ட ஃபீல்.. அதெல்லாம் அனுபவிக்குறவிங்களுக்கு தா தெரியும்..” என்றான் கௌதம் குதுகலத்துடன்..
" ம்ச்.. அதெல்லாம் விடு கடைசியாக ஒன்னு பண்ணியே.. அத எந்த கணக்குலடா எடுத்துக்கிறது.. "
" பலது பண்ணிருக்கேன்.. அதுல எதன்னு தெளிவா சொல்லேன்.. "
" நா எந்த பொண்ணுகிட்டடா ஐ லவ் யூ சொன்னேன்.. அத எப்ப நீ கேட்ட.. ஐஞ்சாறுன்னு சொன்னியே அதுல ஒரு பேராவது சொல்லு பாப்போம்.. "
" ஹா.. ஹா.. " கௌதம் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க..
" டே....ய்........" பல்லைக் கடித்தான் தரன்..
" மகாப் பிரபு நா சொன்னப்ப கூட உம் பொண்டாட்டி நம்பல.. சந்தேகமாதா என்ன பாத்தா.. ஆனா நீ சிரிச்ச பாரு ஒரு சிரிப்பு.. எதோ டூத் பேஸ்ட் விளம்பரத்துல வர்றவன் மாறி.. அதுல தா ஹரிணி கண்பார்ம் பண்ணா.. இதுக்கு ம்ம் எனக்கும்ம் சம்மந்தம் இல்லப்பா.. தப்பு உம்மேல தா.. நீ சிரிச்சிருக்க கூடாது.."
" சிரிச்சது ஒரு குத்தமா.. ஐய்யோ இப்ப அவா ஆடுவாளே.. " அவளை சமாதானம் செய்யும் வழி தெரியாது வாய் விட்டு புலம்ப..
"நீ வேண்ணா பாட்டு பாடேன்.. அவுங்க ஆட.. நீ பாட.. சரியா இருக்கும்.."
" டேய்.. " பற்களை கடித்தான் தரன்..
" நீயாச்சு உம் பொண்டாட்டியாச்சு.. நா வரலப்பா..” என ஃபோனை கட் செய்தவன்..
" என்ன ஆளுடா இவென் கதவ சாத்துனமா கப்புன்னு கால்ல விழுந்தமான்னு இல்லாமா.. பொண்டாட்டியை சமாதானப் படுத்துவது எப்படின்னு அறிவுரை கேட்டுட்டு இருக்கான்.. இவனுக்கு பயிற்சி பத்தல வந்து நம்ம சித்தப்புட்ட கேட்டு கத்துக்க சொல்லனும்.. என்ன மதி அத்தான் சொன்னது சரியா... " என்றவனின் தலையில் கொட்டினாள் அவனின் மதி..
உள்ளே சிறிய பீம் பேக்கில் அமர்ந்திருந்தாள் ஹரிணி ரிஷியின் வருகையை எதிர்பார்த்த படி.. தன் அருகில் இருந்த மற்றொன்றை இழுத்து அவனின் அருகில் தள்ளியவள்.. அதில் அமரும்படி சைகை செய்தாள்..
அவளின் செய்கை எல்லாம் ரிஷியை ரசிக்கத் தூண்டியதே தவிர கோபம் உண்டாக்கவில்லை.. சின்ன சிரிப்புடன் அதில் அமர்ந்தான் கண்கொட்டாமல் அவளை பார்த்தபடி இருக்க..
" நா உனக்கு எத்தனாவது ஆளு.. பத்தா.. பதினொன்னா.. " கௌதம் பற்ற வைத்த தீ நன்றாக எரிந்தது.. முதல் முறை பொறாமை அவளின் கண்களின் தெளிவாய் தெரிந்தது..
" சரியா தெரியல.. கணக்கு எழுதி வைச்சிருந்த புக்க காணும்.. கண்டுபிடிச்சு தந்தா பாத்து சொல்ல ஈஸியா இருக்கும்..” தரன் மனைவியின் செயலை ரசித்தபடி கள்ளச் சிரிப்புடன் பதில் கூறினான்..
" யூ.... " என கோபமாக எழுந்தவள் அவனின் சட்டையை பிடித்து குலுக்கினாள்..
"உன்ன பிடிச்சுருக்குன்னு ஒரே காரணத்துக்காக நீ என்ன பண்ணாலும் பொறுத்திட்டு நா பைத்தியம் மாறி காத்துட்டு இருக்கேன்.. நீ என்னடான்னா.. நோட் புக் போட்டு லவ் பண்றியா.. உன்ன.. " என்று கோபமாக கத்தியவள் பின் அமைதியாக..
" ச்ச.. என்னோட லைஃப்ல என்னோட ஹஸ்பென்ட் எப்படி எப்படி இருக்கனும்னு எல்லாம் நா கற்பன பண்ணிருக்கேன் தெரியுமா.. என்னோட பாவாக்கு நான் தா ஃபஸ்ட் லவ்வா இருக்கனும்.. எல்லாத்தையும் ரெண்டு பேரும் மனசு விட்டு பேசனும்.. எந்த முடிவா இருந்தாலும் நாங்க ரெண்டு பேரும் கலந்து பேசி தா முடிவடுக்கனும்.. முக்கியமா சண்ட போட்டா ஈகோ பாக்காம வந்து எங்கிட்ட அவனே வந்து சமாதானம் பேசனும்..
தப்பு பண்ணா ஒத்துக்கிட்டு ஸாரி கேக்கனும்.. மொத்ததுல கோவமே படாத பாவாவா இருக்கனும்.. எல்லாத்துக்கும் மேல என்ன அதிகமா காதலிக்கனும்.. மேக் ஃபார் ஈச் அதர் மாறி வாழனும்னு ஆசப்பட்டேன்.. ச்ச.." என அவனை விடுத்து தரையில் அமர்ந்து கொண்டாள்..
" இதுல எந்த குவாளிபிகேஷனும் உங்கிட்ட இல்ல.. நீ ரொம்ப அழுத்தகாரனா பிடிவாதம் பிடிக்கிற அரகென்ட்டா ஆண் ஆதிக்கவாதி மாறி இருக்கா..இருந்தும் நா உன்ன லவ் பண்றேன் ஏன்னு தா எனக்கே தெரியல..
உன்ன களத்து மேட்டுல பாத்தப்பவே பிடிச்சு இருந்துச்சு.. அப்றம் திருவிழால உன்னோட ஆளுமையும்.. கர்வமும் பிடிச்சிருந்துச்சு.. தீப்தியும் நீயும் இருக்குற ஃபோட்டோவ பாத்தப்பவே எனக்கு உன்ன கொல்லனும்னு தோனுச்சு.. அப்றம் ராகவ் அண்ணா வேற உனக்கு மெட்ராஸ்ல ஒரு லவ் இருக்குன்னு சொன்னப்ப நா உன்ன தொங்க விட்டி அடிக்கனும்னு நினைச்சேன்.. இப்ப கௌதம்.. சொல்றான் உனக்கு ஐஞ்சாறு லவ் இருக்குன்னு..
இப்ப கூட என்ன பண்ணுறேன்னே தெரியாம புலம்பிட்டு இருக்கேன்.. இதுக்கெல்லாம் காரணம் நீ தா.. உன்ன.. " என மீண்டும் சட்டையை பிடிக்க ஆவேசமாக எழுந்தவளிடம் இருந்து தப்பித்தவன்..
" உன்னோட கௌதம் என்ன ஹரிச்சந்திரன் மறு உருவமா என்ன உண்மையையே பேச.. அவென் பொய் சொல்லுறான்டீ.. "
" என்னோட ஃப்ரெண்ட் பொய் சொல்ல மாட்டான்.. நீ தா.. நீ தா.. உண்ம பொய்னு எதையுமே சொல்ல மாட்ட.. கமுக்கமா வச்சிருப்ப.. " என கூறிக் கொண்டே அவனை துரத்த அந்த சிறிய வீட்டில் அவளிடம் சிக்காமல் ஒடினான் ரிஷி..
" எனக்கு குழப்பமாவே இருக்கு.. நீ.. நீ.. என்ன லவ் பண்றியா இல்லையா.. " என சுட்டு விரல் நீட்டி கேட்டவளின் கண்கள் அவளையும் அறியாமல் கலங்கியது..
அவளின் அருகில் நெருங்கி வந்தவன் அவளின் கண்களை உற்று பார்த்தபடி.. " ஐ ஆம் ஸாரி.. ஐ எக்ஸ்டீம்லீ ஸாரி கிட்.. என அழுத்தமாக ஒவ்வொரு வார்த்தைகளையும் கூறியவன்...
" ம்ச்.. ஸாரிடி.. உன்ன இத்தனநாள் குழப்பத்துலயே வச்சதுக்கு.. நா உன்ட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்.. " என இதழ் கோணி நின்றவள் முன் இருகால்களையும் மடித்து மண்டியிட்டான் ரிஷி..
' பாவ மன்னிப்பு கேக்குறானோ.. '
அவன் என்ன சொல்லப் போகிறான் என அவளுக்கு தெரியும்.. அவன் காதலை சொல்வதற்குள் அவள் காற்றில் பறக்க ஆரம்பித்து விட்டாள்.. ஆணின் கர்வத்தை அடக்கி தன் முன் மண்டியிடச் செய்தது பெண்ணவளின் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சியாக தெரிந்தது..
சிறிய சிகப்பு ரோஜா மொட்டை அவள் முன் நீட்டியவன்.. " அலெக்ஸா.. Could you change the room's theme pls.. " என்ற உடன் சுற்றி இருந்த கண்ணாடி சுவர்கள் அனைத்தும் மறைந்தது..
மாறாக .....
பதினைந்து வயது முதல் இருபத்தைந்து வயது வரை எடுக்கப் பட்ட வித விதமான ஹரிணியின் புகைப்படங்களை தாங்கிய மரச் சட்டம் வந்தது.. மகிழ்ச்சியாக.. ஆனந்தமாக.. சோகமாக.. கோபமாக.. கௌதமுடன் கொண்டாடிய தருணங்கள்.. தாய்மையின் பூரிப்பில் இருக்கும் போது எடுக்கப்பட்டது என அவளின் பத்து வருட வாழ்வை புகைப்படமாக்கி இருந்தான் அந்த காதலன்..
ஆ வென் வாயை திறந்து பார்த்துக் கொண்டு இருந்தவளின் விரல்களில் ஓர் உணர்வு.. என்னவென விரலை பார்த்தவள் குழம்பிப் போனாள்.. ஆனந்த அதிர்ச்சியுடன்..
மோதிரம்.. அவளிடம் இருந்து எடுத்துச் சென்றானே அது.. தன் அன்னையின் நினைவாக அவளிடம் இருந்த ஒரே ஒரு ஆபரணம் அது..
" இது.. இது.. இது எப்படி உங்கிட்ட..” ரோஜாவை வாங்கியவளுக்கு வார்த்தைகள் வரவில்லை.. அவளின் பறங்கையில் முத்தமிட்டு எழுந்தவன்..
" கண்டிப்பா தெரிஞ்சுக்கணுமா.. ம்.. " என தன் வசீகரப் புன்னகையுடன் இரு புருவங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்றி இறக்கினான் ரிஷி..
ஆம் என தலையை அசைத்தாள் வேகமாக..
அவளின் கன்னங்களை தன் கரங்களுக்குள் தாங்கியவன்.. " உன்னோட ஹாஸ்டல் ரூம்க்கு வந்தது நா தா.. உனக்கு நியாபகம் இருக்கான்னு தெரியல.. உங்க ஸ்கூல் ஃபங்ஷனல நாம மீட் பண்ணிருக்கோம்.. நம்ம முதல் சந்திப்பு.. அன்னைத் இருந்து உன்ன பாத்த அந்த நாள்ள இருந்து நீ.. இங்க.. இங்க தா நீ இருக்க.. உன்ன தவிர வேற யாரும் அதுல கிடையாது.." என தன் நெஞ்சில் அவள் முகத்தை புதைத்தவன் அவளை ஆரத் தழுவிக் கொண்டான்.. காதலாய்..
" I AM LOVING YOU KID.. Terribly.. Madly.. எல்லாமே.. எல்லாமே.. நீ தாடி.. எனக்குள்ள என்னோட இதயத்துல ஆழமா பதிஞ்சவ நீ.. I love you.. I love you so much..” என நெற்றியில் முத்தமிட்டு அணைத்துக் கொண்டான் அவளை..
" and sorry.. நா அன்னைக்கு உங்கிட்ட நடந்துக்கிட்டது தப்பு தா.. நீ கோபத்துல வார்த்தையால காயப்படுத்துனதுக்கு .. நா செயலால உன்ன காயப்படுத்திட்டேன்.. ஸாரி.. ஸாரி.. இனி நமக்கிடைல எந்த ஒரு சண்டையும் வரக்கூடாது.. வர நா அனுமதிக்க மாட்டேன்.. " என கர்வத்துடன் கூறியவனை விழி மூடாது கண்டாள் அவனின் கிட்..
ரிஷி , ஹரிணியை நெருங்கும் ஒவ்வொரு முறையும் அவனின் காதல் மனதை அவள் அறிவாள்.. செயல்களால் உணர்த்திய போதும் வார்த்தைகளால் கேட்பது தனிசுகம் அல்லவா.. அந்த சுகத்தில் தான் இப்போது மிதந்து கொண்டிருக்கிறாள்..
காதலுடனும், புரிதலுடனும் , பொறுமையுடனும் கையாளப்படுகிறது திருமண வாழ்க்கை என்றும் தோற்றதில்லை.. இனி இருவரின் வாழ்வும் வளம் பெற்று சிறப்பாய் அமையும்..
எத்தனை தடைகள் பார்த்தாலும்
நேசித்த இதயங்கள் அனைத்தையுமே கடந்து காதலை நிஜமாய் ஜெயிக்க வைத்திடும்.. இத்தோட இவங்க காதலுக்கு ஒரு எண்டு கார்ட்டு போட்டிடலாம்..
அடுத்ததா அப்பா மகெ அதா ஹிட்லர் கௌதம சேத்து வச்சி.. கௌதம் ரிஷிக்கும இடைல இருக்குற பிரச்சனைய பாத்திடலாம்..
சுபம்
இதுவரை ஆதரவு தந்து , பொறுமையாக வாசித்த வாசகர்களுக்கு எனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.. உங்களின் எதிர்பார்ப்பு, என் கதையின் நிறை, குறையை விமர்சனங்களாக தெரிவிக்கும் பட்சத்தில் அதை பூர்த்தி செய்ய இயன்ற வரை முயல்வேன்..
அன்பு சகோதர சகோதரிகள் அனைவருக்கும் நன்றி ....
நன்றி .....
நன்றி ....
மீண்டும் சந்திப்போம் ...
விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..