அத்தியாயம்: 72
எத்தனை சொந்தங்கள் இருந்தாலும்,
ஓர் ஆணுக்கு மனைவி தான்,
பெண்ணுக்கு கணவன் தான்.
அதற்கு இணை வேறு எதுவும் இல்லை.
விழுதுகள் மரத்தை தாங்கலாம்.
வேர் மட்டுமே அதை வாழ வைக்கும், கணவன் மனைவி என்ற உறவும் வேர் போன்றது தான்..
" என்ன நீ எத்தன வருஷமா காதலிச்சதா சொன்ன.. " என ஹரிணி புருவம் ஏற்றி வினவினாள்..
அவளின் குரலில் தெரிந்த மாறுபாட்டையும் முகத்தில் தெரிந்த பாவனையையும் வைத்து தான் எங்கோ தவறாக புரிந்து கொண்டுள்ளோம் என்பதை உணர்ந்தவன்..
‘இல்லையே அது அவா கையெழுத்து தா.. நா செக் பண்ணேனே.. அப்றம் எதுக்கு இப்படி பாக்குறான்னு தெரியலையே.. நம்ம கோபமா பேசுனது.. சென்டிமென்ட் ஸீன் எல்லாமே வேஸ்ட் டா.. ‘ மனதிற்குள் நினைத்தபடி உறைந்து நிற்க..
" சொல்லு பாவா.. எத்தன வர்ஷம்.. " என ரிஷியை நோக்கி முன்னேறி வர முதல் முறை அவனின் கால்கள் பின்னே நகர்ந்தது..
கையில் இருந்த காகிதத்தை சுருட்டி அடிப்பதற்கு தோதாக வைத்தவள் தரனிடம் மீண்டும் அதே கேள்வியை கேட்டாள்..
முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு.. “ இப்ப எதுக்கு தேவையில்லாதத பத்தி கேக்குற.. " எரிச்சலுடன்..
அவனுக்கு தான் அவனிடம் கேள்வி கேட்டால் பிடிக்காதே..
" அப்ப உனக்கு தெரியாது.. அப்படி தான பாவா.. என்ன நீ நிஜமாவே லவ் பண்ணியா இல்லையா.. சந்தேகமா இருக்கே.. சொல்லு காதலிக்கிற தான.. “ நக்கலாக வந்தது குரல்..
" ம்ச்.. ஒரு பத்து வருஷத்துக்கு மேல ஆகப் போதுன்னு நினைக்குறேன்.. ரொம்ப நாள் ஆச்சா அதா அக்யூரேட்டா டேட் தெரியலா.. இப்ப என்ன அதுக்கு.. " அவனும் அசால்ட்டாக கேட்க..
" பத்து வர்ஷமா லவ் பண்ற பொண்ணோட ஹேண்ட் ரைட்டிங் கூட உனக்கு தெரியாது.. மூனு வர்ஷமா கூடவே இருக்குற பொண்டாட்டியப் பத்தியும் தெரியாது உனக்கு.. நீயெல்லாம் எதுக்கு காதலிக்கிற , கல்யாணம் பண்ணிக்கிற.. வாழ்வே மாயம் னு பாட்டு பாடிட்டு தாடி வளத்துட்டு திரிய வேண்டியது தான.. ச்ச.. உன்ன பாத்தாலே.. " என கையில் மடித்திருந்த காகிதத்தை ஓங்கினாள்..
தன்மேல் விழும் முன் கைகளால் அதை தடுக்க எண்ணியவன் காற்றைத் தான் அளக்க வேண்டியதாக இருந்தது.. ஏனெனில் அது அவன் மேல் வீசப்பட வில்லை.. ஆனால் காகிதம் வீசப்பட்டிருந்தது..
யார் மீது எரிந்தாள்..
" ஆ.. ஆ.. என்ன விட்டுடு.. என்ன விட்டுடு.. கொல பண்ண பாக்குறாளே பாதகத்தி.. ஐய்யையோ என்னோட பொண்டாட்டிக்கு நா ஒரே புருஷன்னாச்சே.. நா என்ன பண்ணுவேன்.. என்னைய விட்டுடு.. என்ன காப்பாத்துங்க..” என்ற அலறல் சத்தம் கேட்டத..
இது யாரோட வாய்ஸ்ஸூ..
" ஏய்.. நில்லு டா.. உன்ன எத்தன தடவ சொல்லிருக்கேன்.. என்னோட சைன்ன போடாதன்னு.. பிராடு.. நில்லு டா.. டேய்.. " என துரத்தினாள் கௌதமை..
ஆம்.. அவளின் கையெழுத்தை போட்டு கோர்ட்டில் சப்மிட் செய்தவன் கௌதமே..
" ஏய் இங்க பாரு.. ஒரு அப்புராணிய கொல பண்ண கேஸ்ல அநியாயமா உள்ள போய்டுவ பாத்துக்க.. அதுனால உடனை நிப்பாட்டு இத.. " ஓடியபடியே..
" நீயாடா அப்ராணி.. நீயா.. நில்லுடா.. பூவத்த உங்க பக்கம் வாரான் புடிங்க.. " என வீட்டினரை தனக்கு ஆதரவாக அழைத்தாள் ஹரிணி..
" ஹிக்கும்.. இப்ப அடிச்சுக்கிவீக.. அப்றம் குலாவிக்கிவீக.. இதுக்கு நடுவுல என்ன இழுக்காதடியாத்தா.. நா வர்ரேன்.. மத்தவுக வாரிகளா இல்லையா.. " என மற்றவர்களை அழைத்தார் அவர்.. மலர் பொதுவாக கணவன் மனைவி பிரச்சனைகளில் தலையிடுவது இல்ல..
" நீங்க போங்க அண்ணி நாங்க இவிக கூத்த செத்த நேரம் வேடிக்க பாத்துட்டு வாரோம்..” கவியரசன்..
" யோவ் சித்தப்பு படமா காட்டுறாங்க கை தட்டி விசில் ஊதி வேடிக்க பாக்க பாத்துட்டு இருக்க.. வந்து உம்மருமகள தடுத்து நிறுத்துய்யா.. " கௌதம்..
" அம்மாடி ஒரு நிமிஷம்.. " என நிறுத்தியவர் கையில் சிறிய கட்டையை குடுத்தார்..
" யோவ் சித்தப்பு நீயுமா.. "
" மகனே என்னோட மருமக கை பூ மாறி.. அது உன்ன மாறி காண்டாமிருகத்த அடிச்சு நோகக்கூடாதுல்ல அதா கட்ட.. இப்போதைக்கு தா இது அப்றமா.. "
" அப்றமா என்ன பண்ண போற.. "
" மலிவு விலைல துப்பாக்கி ஒன்னு வாங்கி வச்சுக்கோம்.." நங்கை குறுஞ்சிரிப்புடன்..
" எதுக்கு.. என்ன போட்டு தள்ளவா.. "
" ம்ம்.. இதுவரைக்கும் அத யூஸ் பண்ண சரியான நேரம் கிடைக்கல.. இப்ப கிடைச்சுருக்கு.. டேய் பெருமாளு எடுத்துட்டு வாடா அத.. " நங்கை..
" உனக்கு நான் தா நைனா கொள்ளி வைக்கனும்.. அது தா மொற.. நீ என்னடான்னா எனக்கு குண்டு வைக்குற.. " யார் கையிலும் மாட்டாமல் வீட்டையே வட்டமிட்டான் அவன்..
" இதுவரைக்கும் அவர ஹிட்லர்னு பேருக்கு தான கூப்டேல்ல.. இப்ப நா ஒரிஜினல் ஹிட்லராவே மாறப் போறாரு.. " என ஹரிணி விடாமல் துரத்த.. குடும்பத்தினர் அனைவரும் கௌதமிற்கு எதிராகவே இருந்தனர்..
நாச்சியம்மாள் தான் அதீத காண்டுடன் இருந்தார்.. தன் செல்லப் பேரனின் இத்தனை நாள் கவலைக்கு காரணமானவனை துவைத்து எடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் ஹரிணியை நன்கு ஏற்றி விட்டார்..
" டேய்.. நில்லுடா எருமமாடே.. ஃபஸ்ட் ஏ இப்படி பண்ணனு சொல்லு.. " ஹரிணி..
" கேளுடி யாத்தா.. கேளு.. எங்கையோ போற மாரியாத்தா எம்மேல வந்து ஏறாத்தாங்கிற மாறி.. சொந்த அண்ணனுக்கே செய்வின வைக்கப் பாத்திருக்கானே முட்டாப்பையன்.. இந்த வெளங்காதவேன விட்டுடாதடி யாத்தா.. நல்லா போடு.. " என குத்துச்சண்டை பார்ப்பது போல் அடி குத்து விடாத என கத்திக் கொண்டே இருந்தார் நாச்சியம்மாள்..
" சொந்த அண்ணா.. இவனா.. எனக்கு பிடிக்கலப்பா.. நா ஃபோட்டோ பிடிச்சி OLX விக்கப்பாத்தேன்.. ஒரு பயங்கூட வாங்க வரல.. உம்பேரன் விக்காத expire ஆன பீஸ்.. "
"டேய் கத அளக்காதடா.. ஏன்டா இப்படி பண்ண.. எல்லா பிரச்சனைக்கும் காரணம் நீ தான்டா.. நில்லுடா..” ஹரிணி விடாமல் துரத்திய படி..
" ஏய் என்ன எல்லா தப்பையும் நானே பண்ணுனதா சொல்லுற.. நா ஜஸ்ட் சைன் மட்டும் தா போட்டேன்.. ஆனா உன்னோட புருஷன் கையேழுத்து போட்ட டைவர்ஸ் பேப்பர்.. அது உம்புருஷன் பீரோல பத்திரமா இருந்தது.. அது எங்கிட்ட எப்படி வந்ததுன்னு கொஞ்சம் உன்னோட பாசமலர்ட்ட விசாரியேன்.. " கௌதம்..
ஹரிணியின் பார்வை சம்பத்தை நோக்கி சென்றது.. ரிஷி அவனின் சட்டையை கொத்தாக பிடித்து உலுக்க ஆரம்பித்து விட்டான், ஏன் என கேட்டபடி..
" ஏன்னடா என்ன மாட்டி விட்ட.. நா உன்னோட தங்கச்சி புருஷன் இல்லையா.. " என கௌதமை கேட்டவன்..
" எவ்ளோ நேரம் தா நானே ஓடுறது.. கால் கடுக்குதுல்ல.. அதா உம்பக்கம் திருப்பி விட்டேன்.. உனக்கும் இதுல பங்கு இருக்குள்ள.. ப்ளான் போடும் போது மண்டைய மண்டைய ஆட்டுன.. இப்ப அனுபவி மச்சான்.. " கௌதம் நங்கையின் தோலில் சார்ந்து கொண்டு இளைப்பாறினான்..
"அனுபவிக்கனுமா.. இவென் என்ன மஸாஜ் சென்டருக்கு அனுப்புற மாறி சொல்லுறான்.. இவென் குலுக்குற குலுக்கப் பாத்தா பாடில ஒரு எலும்பு கூட மிஞ்சாது போலையே.. ஐய்யைய.. “ என மனதில் தெரிந்த தெரியாத அனைத்து தெய்வங்களையும் வேண்டினான் சம்பத்..
" மாப்ள நா.. நா.. என்னைய விட்டுடுடா..” ரிஷியின் பிடியில் இருந்து சற்றும் எதிர்பாராத நேரத்தில் தப்பி தூரமாக நின்று கொண்டான் சம்பத்..
" இதோ பாரு மாப்ள.. நீ ஃபீல் பண்ணனும்னு நா நினைக்கல.. ஆனா ஃபீல் பண்ணா எப்படி இருக்கும்னு பாக்கனும்னு ஆசப்பட்டேன்.. அவ்வளவுதா மாப்ள.. " என்றவனின் மீது பாயப் போனான் ரிஷி..
" டேய் நா எடுத்து மட்டும் தான்டா குடுத்தேன்.. அதுல கோர்ட்டு சீல் இருக்கே அத கவனிச்சியா.. அதுக்கு உன்னோட செல்ல தம்பி தா காரணம்.. அவனையும் கொஞ்சம் கவனியேன்.. " என பிரகாஷ்ஷை மாட்டிவிட்டு தப்பித்து கொண்டான் சம்பத்..
" அண்ணே இதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லண்ணே.. வா சுத்திப் பாக்கலாம்னு தா என்ன அங்க கூட்டீட்டு போனானுங்க.. உள்ள யாரு பேரு இருக்குன்னு கூட எனக்கு தெரியுதுண்ணே.. உதவி கிதவின்னு சொல்லி என்ன ஏமாத்தி ஃபைல் பண்ணீட்டாங்கண்ணே.. என்ன நம்புண்ணே.. இதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை.. நா ரொம்ப நல்லவன்ணே... " என ரிஷி அருகில் வரும் முன்னே சரணடைந்து விட்டான்.. கைப்பிள்ளை பிரகாஷ்..
" இதுக்கெல்லாம் மாஸ்டர் ப்ளான் போட்டு குடுத்தது நீ தானடா எனக்கு தெரியும்.. " என ஹரிணி கௌதமை துரத்த..
" மறுபடியும் முதல்ல இருந்தா.. " என்றவன் அவளிடம் சிக்கவில்லை..
" உன்னோட காதலுக்கு ஹெல்ப் பண்ணா நீ என்னோட லவ்க்கு ஹெல்ப் பண்றதா சொன்ன.. இது தா உன்னோட உதவியா எரும.. "
அவனை பிடிக்க முடியாமல் மூச்சு வாங்க நின்று விட்டாள் ஹரிணி.. வீட்டில் உள்ளவர்கள் இவர்களின் கூத்தை கண்டு அமைதியாக இருந்தனர்..
சத்தியமூர்த்தி விவாகரத்து பத்திரத்தை நீட்டிய போது ஹரிணியை வெறுப்பேற்ற கையெழுத்திட்டாலும் பெரியவர்கள் முன்னிலையில் ஹரிணியை யாருக்காகவும் என்னால் விட்டு தர இயலாது என்பதை தெள்ளத் தெளிவாக ரிஷி கூறிச் சென்றதால் இருவரின் பிரிவு விளையாட்டாகப் பட்டது..
" அட போங்கப்பா.. என்னால பிடிக்க முடியல.. " என கட்டையை கீழே போட்டவளுக்கு மூச்சு வாங்கியது..
அவளின் தோலில் விழுந்தது ஒரு வலிய கரம்.. " டார்லிங்.. இப்பையும் நா உனக்கு ஹெல்ப் தா பண்ணிருக்கேன்.. " கௌதம்..
" எது இது ஹெல்ப்பா.. டைவர்ஸ் வாங்கித்தர்றது ஒரு உதவியாடா.. " என கூறி அவனின் விரல்களை கடித்தாள் ஹரிணி..
" ஏய் கடிக்காத டார்லிங்.. " என துள்ளியவன் ஹரிணியை தன் முன்னே நிறுத்தி இரு கைகளையும் அவளின் கழுத்தில் மாலையாய் போட்டான்..
" நீ என்ன நினைச்ச அவென் ஓடி வந்து ' என்னால உன்ன விட்டு இருக்க முடியல.. ஐ ஆம் லவ்விங் யூ.. ரொம்ப ஆழத்துல போய் தூர்வாரி கிட்டே உன்ன காதலிச்சுட்டு இருக்கேன்.. எங்கூடவே இரு என்ன விட்டு போய்டாத ப்ளீஸ்.. 'னு அப்படின்னு காதல்ல கசிந்து உருகி தண்ணீயா ஓடுவான்னு நெனச்சியா.. அவனோட மனசுல இருக்குறத அவனுக்கு வெளிப்படையாக செஞ்சு தா பழக்கம்.. வாயால சொல்லி பர்மிஷன்லாம் வாங்குற அளவுக்கு அவனுக்கு பொறுமங்கிறது கிடையவே கிடையாது.. எல்லாமே ஆக்ஷன் அண்டு ரியாக்ஷன் தா.. நோ எமோஷன்.." கௌதம்..
" எனக்கும் அவன பத்தி தெரியும்.
" இதுவரை அவனின் காதலை நல்ல மனநிலையில் கேட்காத காரணத்தால் ஏமாற்றமாக தலை கவிந்தாள்..
நாடியில் கை நிமிர்த்தியவன்... " அவென் அப்படி சொல்லலைன்னா என்ன நாம சொல்ல வச்சிடுவோம்.. அவனப் பாரேன்.. எந்த அளவுக்கு உனக்காக அவென் ஏங்கிருக்கான்னு தெரியுது.. என்னோட ஃப்ரெண்ட கட்டிக்கிட்டவனுக்கு என்னோட ஃப்ரெண்ட் கிட்ட காட்ட ஈகோ இருக்கவே கூடாது.. அப்படி இருந்தா அத மர்டர் பண்ணிடனும்.. அத தா நா பண்ணேன்.. " கௌதம்..
" எப்பயும் போல நீ பேசுற எதுவுமே புரியல.. புரியுற மாறி தா பேசேன்.. அப்படி எத சொல்ல வக்க நினைச்ச.."
" ம்ச்.. I Love you.. அத உங்கிட்ட மட்டும் சொல்லல.. நிறைய பேர்க்கிட்ட.. கிட்டத்தட்ட எத்தன பொண்ணுங்க கிட்ட சொல்லிருப்பான்னு உனக்கு தெரியுமா.. நா பாக்கவே ஒரு நாலு இல்லைன்னா ஐஞ்சு பேர்ட்ட சொல்லிருப்பான் நினைக்குறேன்.. அஞ்சா ஆறா.. ச்ச கவுண்ட் பண்ண மறந்திட்டேன்னு நினைக்கிறேன்.." என்றான் யோசனையுடன்..
இதை கேட்டதும் ஹரிணி ' ச்சச.. அப்படில்லாம் இருக்காது.. பொண்டாட்டியா மாறுனதுக்கு அப்றமும் நம்ம பக்கத்துல வர்றதுக்கே பாவா பயங்கரமா யோசிப்பான்.. அவனுக்கு போய் பொண்ணுங்க பழக்கம் அதெல்லாம் இருக்காது.. பக்கா ஜென்டில்மேன் மை ஹஸ்பென்.. ' என பெருமையாக எண்ணியபடி ரிஷி தரனை பார்க்க அதிர்ந்து போனாள்..
கௌதம் கூறியது நிஜம் என கூறியது ரிஷியின் இதழில் ஓரத்தில் பூத்திருந்த புன்னகை..
கோபமாக ரிஷியை முறைத்துக் கொண்டு இருந்தவளின் காதுகளில்.. " ஆனா உங்கிட்ட சொன்னானே.. ஐ அம் ஸாரி.. அப்படீன்னு.. அந்த வார்த்தைய நா இதுவரைக்கும் அவென் சொல்லி கேட்டதே இல்ல.. நீ தா ரிஷி மன்னிப்பு கேக்குற ரெண்டாவது ஆள்.. பெரிம்மா தா ஃபஸ்ட்.. இத அவென் வாயால கேக்கனும்னு தா இப்படி பண்ணேன்..
காதலிக்கிற ஒருத்தனுக்கு ஈகோ இருக்க கூடாது பா.. அதுவும் பொண்டாட்டி கிட்ட இருக்கவே கூடாது பா.. ஒரு வேல நா போட்ட ப்ளான் ஏ ஃபெயில் ஆகிடுச்சுன்னா.. ஒன்னும் பிரச்சனை இல்லை டைவர்ஸ் வாங்கீட்டு உன்ன வேற ஒருத்தனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சுடலாம்னு மேட்ரீ மோனியல் சைட்ல பதிஞ்சுலாம் வச்சேன்.. இதோ இவன் நல்லா இருக்கான்ல.. மும்பைல மாடலா இருக்கானாம்.. நீ டிசைன் பண்ற டிரெஸ் எல்லாத்தையும் அவனே போட்டு காட்டி ஓசி ஃபோட்டோக்கு போஸ்ஸும் குடுப்பான்.. முடிச்சுடலாம்மா.. " என மொபைல்லில் உள்ள படங்களை காட்ட..
வெடுக்கென பிடிங்கி அதை தூங்கி எரிந்தான் தரன் கோபமாக.. பின் ஹரிணியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான்... செல்லும் முன் கௌதமை முறைத்துக் கொண்டே சென்றான்..
" ஐய்யையோ என்னோட காஸ்ட்லி மொபைல் ஃபோன் போச்சே.. " என வருத்தமாக குரல் குடுக்க..
" அது உடைஞ்ச மாறி உன்ன உடைக்காம விட்டானே.. சந்தோஷப்படு.. " சம்பத்..
" அது என்னமோ சரிதா.. நமக்கு டேமேஜ் கம்மி தா.. இன்னைக்கு அத மொட்ட மாடில செலிபிரேட் பண்ணிடலாம்.. பியர் குடி என்ஜாய் பண்ணு.." கௌதம் மகிழ்ச்சியுடன்..
" ஹாங் பண்ணுங்க.. பண்ணுங்க.. " பவி கோபமாக..
இந்து கௌதமிடம்.. " உங்களுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா என்னோட அத்தான கஷ்டப்படுத்திருப்பிங்க.. இதுல உங்க ஃப்ரெண்டுக்கு இன்னோரு கல்யாணம் பண்ணி வைக்க போறிங்காளா.. அதுக்கு முன்னாடி உங்களுக்கு நா தாறேன் விவாகரத்து.. " என சட்டையை பிடித்து உலுக்கி தள்ளி விட்டு சென்றாள் இந்து..
" அதே தா உங்களுக்கும.. நண்பனோட வீட்டுலையா திருடுறீங்க.. உங்களுக்கு இருக்கு.. " என மிரட்டலாக சொல்லி சென்றாள் பவி..
இருவரும் திருதிருவென முழிக்க.. " நீங்க ஒன்னும் கவலப்படாதிங்க உங்க விவாகரத்து கேஸ்ஸ நா ஃபீரியாவே வாதாடி தாறேன்.. நானும் ஒரு வக்கீல் இல்லையா.. கருப்புக் கோட்டுக்கு இப்பதா வேல வந்திருக்கு.. எடுடா அந்த அந்த லா புக்க.. கணம் கோர்ட்டார் அவர்களே.. " பிரகாஷ் கேலி செய்ய..
" டேய் எங்களையாடா நீ கேலி பேசுற.. நீயும் கல்யாணம் பண்ணிப் பாரு.. அப்பத்தா எங்க கஷ்டம் உனக்கு தெரியும்.. " சம்பத்..
" வாய்ப்பில்ல ராஜா.. வாய்ப்பில்ல.. " கௌதம்..
" ஏன்.. " சம்பத்..
" ஆமா ரெண்டு பேரையும் ஜோடியாக்கி இந்த சீசன முடிக்க போறாங்க.. இனிமே இவனுக்கு பொண்ணு பாத்து.. கல்யாணம் பண்ணி.. வாய்ப்பில்ல.. வாய்பில்லை.. " கௌதம் நக்கலாக..
" அதுவும் சரிதா.. நீ கடைசி வர வருத்தப்படாத வாலிபர் சங்கம் தா.. " சம்பத் கேலியாக..
"அப்ப எனக்கு பொண்ணு பாக்க மாட்டிங்கலா.. கல்யாணம் நடக்காதா.. ஃபஸ்ட் நைட்டு. " பிரகாஷ் அதிர்ச்சியாக..
" அதா சொல்லியாச்சுல்ல போடா வேலய பாத்துட்டு.. " கோரஸ்ஸாக சொல்லிச் சென்றனர் இருவரும்..
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..