அத்தியாயம்: 71
வாழ்வில் நாம் சந்திக்கும்
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு மனிதர்களும்
எதோ ஒரு பாடத்தை
கற்றுக் கொடுத்து விட்டே செல்கின்றனர்..
எப்படி வாழ வேண்டும் என்பதற்கும்
வாழக் கூடாது என்பதற்கும்
உதாரணமாக..
மெல்லிய இளங்காற்று முகத்தில் பட , சிறு துளியாய் நீர் ரிஷியின் கன்னத்தை நனைத்தது..
விழி திறந்தவனின் முன்னால் ஈரக் கூந்தலில் நீர் சொட்ட அன்றில் பூத்த பூப் போல் முக மலர்ச்சியுடனும் உதட்டில் சிரிப்புடனும் நின்று கொண்டு இருந்தாள் மங்கை..
அப்போதுதான் குளித்து வந்திருப்பாள் போலும்.. நீல நிற சேலையில் காலை தேவதை போல் இருந்தவள் ரிஷியின் முகத்தில் நீரினை தெளிக்க துயில் கொண்டிருந்தவனின் தூக்கம் கலைந்தது
கோபமாக முறைத்த அவனுக்கு இதழ் கோணி அழகு காட்டி செல்ல முயன்றவளை எழந்து தன் கைக்குள் அடக்க நினைத்தவனின் பிடியில் சிக்காமல் காற்றில் மறைந்து போனாள் நங்கை..
சுற்றி முற்றியும் பார்த்தவன் பெண்ணவள் இல்லாததை உணர்ந்து தான் கண்டது கனவு என சோர்வுடன் குளியலறை சென்றான்..
ஈரத்துண்டை சோஃபாவில் போட்டவன் திரும்பிப் பார்க்க அங்கு தன் கோப விழிகளால் அவளை முறைத்துக் கொண்டு இருந்தாள் ஹரிணி..
" உம் பெட்டுல மட்டும் நா ஈரத் துண்ட போட்டிருந்தா என்ன என்னென்ன பேச்சு பேசுவ.. இப்ப நீ என்னோட பெட்ல போடுற.. உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா.. மரியாதையா எடுத்துடு.. " என விரல் நீட்டி எச்சரித்தவளின் வெண்டை பிஞ்சு விரலை வளைக்க எண்ணி நெருங்கினான்..
இம்முறையும் அவள் காற்றில் கலந்து விட்டாள்.. குழம்பிப் போனான் ரிஷி..
வேகமாக வெளியே செல்ல கதவை நெருங்கியவனை தடுத்தது அவளின் குரல் " பாவா எங்க போறீங்க.. உங்க கடல காட்டுக்கு தண்ணி ஊத்தவா.. இப்படியே போன உன்ன எல்லாரும் என்ன நெனப்பாங்க பாவா " என பனியனுடன் நின்ற அவனை சட்டை மாட்ட சொல்லி கண்களால் ஜாடை செய்தாள் ஹரிணி..
அணிந்து விட்டு திரும்பிய போது அவள் இல்லை.. தன்னை சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு அணுவும் அவளின் நினைவுகளை தருவதை உணர்ந்தவன் முகத்தில் சிறு புன்னகையும் சோர்வும் சேர்ந்தே வந்தது..
அன்று..
தரனின் சிந்தனைகளுக்கு இரையாய் அமைந்தது மூர்த்தி கூறிய வார்த்தை..
முழுமையாக ஏற்றுக்கொள்வது..
அக்செப்ட்டேஷன்..
ஒருவரின் நிறைகளையும் குறைகளையும் ஏற்று அவர்களை மாற்றாமல் அவர்களுக்காக தன்னையும் மாற்றாமல்.. சில இடங்களில் வளைந்து குடுத்து அவர்களை அப்படியே முழு அன்புடன் ஏற்றுக் கொள்வதே உண்மையான அன்பும் காதலும் ஆகும்.
சம்மதம் இன்றி அவளின் கழுத்தில் தாலி கட்டிய போதும் சரி, வலுக்கட்டாயமாக அவளின் பெண்மையை அனுபவித்த போதும் சரி, அன்னையின் கோபத்திற்கு இரையாய் மகவை சுமக்கும் மங்கை என்று கூட பாராது வீட்டை விட்டு அனுப்பிய போதும் சரி, தந்தையின் வார்த்தைக்காக விவாகரத்து காகிதத்தில் கையொழுத்திட்ட போதும் சரி, பழி வாங்கும் எண்ணம் அவன் மனதில் நிறைந்து இருப்பதை அறிந்த போதும் சரி, அவனின் குணம், பழக்கம் , ஏன் கர்வத்தையும் , ஆணவத்தையும் முழுமையாக ஏற்றுக் கொண்டு அவனிடத்தே காதல் கொண்டவள் ஹரிணி..
மும்பையில் ஹரிணி பார்க்காத ஆண்கள் இல்லை. அழகிலும் பணத்திலும் ரிஷியை விட மேம்பட்டவர்கள் இருந்த போதும், கௌதம் சொல்வது போன்று ரிஷியின் மீது எப்படி காதல் வந்தது என்று தெரியவில்லை அவளுக்கு. இதை ரிஷியும் அறிந்திருந்தான்.. கூடவே அது அவனுள் அவள் காதலை அடைந்த கர்வத்ததையும் தந்தது உண்மை.
எவ்வித உறவும் இன்றி தன் தந்தையையும் தங்கையையும் காப்பாற்றியவள்.. தன் குழந்தையையும் தன்னையும் பற்றி யோசிக்காது.. இந்துவை மட்டுமல்லாது ஆதிரையையும் காப்பாற்றியிருக்கிறாள்..
ஏனெனில் ஏற்கனவே தன் கண் முன்னே அண்ணன் மற்றும் தம்பி என தன் குடும்ப உறுப்பினர்களை பறி கொடுத்தவள் அவள்.. மற்றவர்களின் உயிரை காக்க தன்னால் இயன்றவரை முயற்சிக்கும் இலகிய மனம் கொண்டவள் ஹரிணி..
அந்த மனம் தான் ஓம்காரனை காக்க எண்ணியதே தவிர பாசம் என்பது ஓம்மின் மீது துளியும் ஹரிணியிடத்தே கிடையாது..
இதை தரனும் அறிவான்.. ஆனாலும் ஏற்றுக் கொள்ள தான் அவனின் கர்வம் இடம் தரவில்லை.. தன்னிடத்தே அவள் வளைந்து கொடுக்க வேண்டும் எனவும் அவளை மாற்றிக் கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தான்.. இப்போது அவளிடம் வளைந்து நிற்கிறான்.. அவளின் அன்பிற்காக விவரம் தெரிந்த நாளில் இருந்து இதுவரை யாரிடமும் கூறாத ஒரு வார்த்தையை அவளிடம் எப்படி கூறுவது என்று ஒத்திகை பார்க்கிறான்..
ஒத்திகை அரங்கேருமா.. அதை அவள் ஏற்பாளா.. என்ற சந்தோகம் அவனிடத்தே அதிமாகிக் கொண்டே வந்தது..
காரணம்..
இரண்டு மாதங்களாக அவர்கள் பிரிந்து இருக்கிறார்கள்..இப்போதும் அவள் மும்பையில் தான் இருக்கிறாள்.. ஓம் செய்து வைத்த பாவங்களுக்கு தன்னால் இயன்ற பரிகாரம் செய்து நிறுவனத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்..
முதல் இரு நாட்கள் அவனுக்கு எதுவும் தோன்றவில்லை.. பின் அவளின் நினைவுகள் அவனை நிலைகுலைய வைத்து என்றால் பின் நாட்களில் வந்த விவாகரத்து நோட்டீஸ் ரிஷியை அடியோடு சாய்த்தது.. அவளிடம் இது பற்றி பேச ஃபோனில் முயற்சித்தான்.. அது எடுக்க பட வில்லை... தன் கர்வத்தை ஒதுக்கி வைத்து விட்டு நேரில் காணச் சென்றான்.. ஆனால் தேவதையின் தரிசனம் தான் கிடைக்க வில்லை..
நாட்கள் கடந்து கொண்டே செல்லச் செல்ல அவளின் நினைவுகளை தவிர்க்க இயலாது கானலாய் தோன்றும் அவளின் உருவத்துடன் போராட ஆரம்பித்தான் ரிஷி..
நிஜத்தில் அவளை அறியத்துடிக்கும் தன் ஐம்புலன்களையும் கட்டுப்படித்த வழி தெரியாமல் தவிக்கிறான் அந்த ஆறடி ஆண்மகன்..
உணவு மேஜையில் அமர்ந்தான் ரிஷி.. வீட்டில் அனைவரும் இருந்தும் தன்னை சுற்றி யாரும் இல்லாததை போல் உணர்ந்தவனின் முன் அழகிய வளைக்கரம் ஒன்று தட்டை வைத்து உணவை பரிமாறியது..
தலை உயர்த்தியவன் கண்டது ஹரிணியை.. " ஏ இப்பிடி இருக்க பாவா.. ஒழுங்கா சாப்பிட்டாத்தா என்னவாம்.. பாரு மெலிஞ்சு போய் பாக்கவே சீக்கு வந்த நோயாளி மாறி இருக்க பாவா நீ.. ஆனாலும் முஞ்சிய மட்டும் எப்பையும் போல இருக்கு.. பாலிஷ் போட்டு வச்சிருக்குறமாறி.. எப்பிடி பாவா.. ம்.. சாப்பிடு பாவா... " என தட்டில் பறிமாறிய ஹரிணி எதிரில் இருந்த மேஜையில் அமர்ந்து கொண்டாள்..
அமைதியாய் உண்டு முடித்தான் ரிஷி.. எங்கே பேச முயற்சித்தாலே தெட முயற்சித்தாலோ மறைந்து விடுவாளோ என்ற பயம்.. மெதுவாக.. மிக மிக மெதுவாக ஒவ்வொரு பிட்டாக பிய்த்து உண்டான்.. சாப்பிடும் அவனையே எதிரில் இருப்பவள் இமை கொட்டாது ரசிக்கலானாள்..
கை கழுவி கொண்டு வந்தவனின் முன்னால் புன்னகையுடன் துடைக்க துண்டை நீட்டினாள் ஹரிணி..
வழக்கம் போல் வரும் மாயையா இல்லை நிஜமா என தெரியாது குழம்பியவன் அருகில் இருந்த டம்ளரின் நீரை அவளின் முகத்தில் ஊற்றினான்.. அவள் மறைய வில்லை..
நிஜம்..
இது கனவல்ல வந்திருப்பது ஹரிணி தான்.. அவள் கரைந்து விடவில்லை என்பதை அறிந்து அவனின் முகத்தில் சந்தோஷம் வந்திருக்க வேண்டும்.. ஆனால் வந்தது என்னமோ கோபம் தான்.. அவளின் முழங்கையை பிடித்து இழுத்தவன்..
" எதுக்கு டி வந்த.. உயிரோட இருக்குறேனா இல்லையான்னு பாக்க வந்தியா.. அக்கற இருக்குறவ மாறி சாப்பாடு பறிமாறுற.. அதா போய்டேல்ல ஒரேடியா.. எத்தன மொற பேச முயற்சி பண்ணேன்.. பேசுனியா.. பாக்க வந்தா கண்டுக்காம இருந்துட்டு.. இப்ப எதுக்குடி வந்து என்ன இம்ச படுத்துற.. உன்ன பத்து வருஷமா காதலிச்ச என்ன முட்டாளாக்கிட்டல்ல.. போய்டு.. எம்முன்னாடி வராத.. அதுதா உனக்கு நல்லது.. போடி..” தரன் கோபமாக அவளை தள்ள..
கீழே விழாமல் கௌதம் ஹரிணியை தாங்கி பிடித்தான்.. கௌதமிற்கு கோபம் வந்தது.. ஹரிணியை மதிக்காமல் தள்ளி விட்டதால்.. ரிஷியை நோக்கு செல்ல தடுத்தாள் ஹரிணி..
கோபம் அடங்காமல் திமிறியவனை பிடித்து இழுத்து சென்றனர் சம்பத் மற்றும் பிரகாஷ்..
" என்ன சொல்லுறான் இவன்.. போகவா.. எங்க போக.. பாக்க வந்தானா.. இவனா.. என்ன பேசுறான் கௌதம் உன்னோட அண்ணே.. " ஹரிணி குழப்பமாக அதே நேரம் நிதானமாகவும்..
" அவனுக்கு புத்தி குழம்பி போச்சு போல.. என்னென்னத்தையோ உளருறான்.. நாந்தா உங்கிட்ட சொன்னேனே.. பைத்தியமா மாறிகிட்டே வர்ரியான்னு.. " கௌதம் அவளின் கரத்தை பிடித்து இழுத்தபடி..
எங்கே இவர்களின் வாக்குவாதம் முற்றி சண்டை போட்டு விடுவார்களோ என ஹரிணியை அங்கிருந்து அழைத்து செல்ல முயன்றான் கௌதம்..
ஆனால் அவள் கௌதமின் இழுப்பிற்கு சென்று விடுபவளா என்ன.. அவனின் பிடியை விலக்கி மீண்டும் தரன் முன்னே வந்து நின்றாள்..
" நீ இவ்ளோ கோபமா கத்துற அளவுக்கு.. என்ன பண்ணீட்டேன் பாவா நா.. எனக்கு புரியல.. " என்றது தான் தாமதம் அவளின் கழுத்தில் கை வைத்தான் தரன்..
" என்ன அப்படி கூப்பிடாதடி.. " என்றவனின் படி கழுத்தை இறுக்க வில்லை.. அவனை பிடித்திழுத்து ஹரிணியை நெருங்க விடாது சம்பத்தும் கௌதமும் இருவருக்கும் இடையே வந்து நின்று கொண்டனர்..
பாவா..
அன்று காதலாய் அவள் மொழிந்த பாவா என்ற அழைப்பு.. இன்று அவனுக்குள் இருக்கும் கோபத்தை அதிகப்படுத்தியது.. அதான் தன் நிலை மறந்து நடந்து கொண்டான்..
இருந்தும் ஹரிணி.. " நா என்ன பண்ணேன்னு நீ இன்னும் சொல்லவே இல்ல.. " என அவனிடம் கேட்டவள் நிதானமாக..
" கொஞ்சம் பேசாதிங்க ராணிம்மா.. பொறுமையாதா இருறேன்ட்டா.. " என இருவருக்கும் இடைய கெஞ்சிக் கொண்டு இருந்தான் சம்பத்..
" ஆமா ஹரிணி.. ப்ளீஸ் இப்ப பேசுனா சண்ட தா வரும்.. அப்றம் பேசலாமே ஹரிணி.. " கௌதம் கெஞ்ச..
" நீ சும்மா இரு கௌதம்.. " என அவனை விலக்கி ரிஷியின் முன் வந்தவள்..
" உன்னோட கோபத்துக்கு எனக்கு காரணம்னு தெரியனும்.. உன்னால சொல்ல முடியுமா முடியாதா.. " அதிகரமாய் ...
" ஓ மேடம்க்கு என்ன பண்ணிங்கன்னு நியாபகம் இல்லையாக்கும்.. " என கூறியவன் தன் அறைக்குச் சென்று டைவர்ஸ் பேப்பரை எடுத்து வந்து ஹரிணி முன் வீசினான்..
கீழே விழுந்த காகிதங்களை ஹரிணியும் கௌதமும் எடுக்க.. ஹரிணியின் கன்னத்தை பற்றியவன்.. " இதுவரைக்கு நா நினைச்சதையே நடத்தி பழக்கப்பட்டவன்டி.. எதுலையும் நா தோத்ததில்ல.. ஃபஸ்ட் டைம் நா என்னோட ஃபெயிலியர ஃபீல் பண்றேன்டி.. காரணம் நீ.. நீ மட்டும் தான்டி.. " என்றவன் ஆழ பெருமூச்சை விட்டான்.. பின்..
" ஐ.. ஆம்.. ஸாரி.. இதுவரைக்கும் நா இத இவெங்கிட்ட கூட சொன்னதில்ல.. இது நமக்குள்ள நடக்குற கடைசி கார்வர்ஷேஷன்னா இருக்கலாம்.. சோ.. என்ன மன்னிச்சிடு.. இதுவரைக்கும் நா உங்கிட்ட நடந்துகிட்டது பேசுனதுன்னு எல்லாத்துக்கும் சேத்து ஸாரி.. ஸாரி.. முடிஞ்சா என்ன மன்னிச்சிடு.. த சாய்ஸ் இஸ் யூவர்ஸ்.. " என கௌதமை சுட்டிக்காட்டியவனின் கண்களின் நீர் அரும்ப ஆரம்பித்தது..
சம்பத் அவனின் தோலில் ஆதரவாய் கை குடுக்க ரிஷி அவனை அணைத்தான்.. தன் இத்தனை வரு காதலையும் ஏக்கத்தையும் சொல்ல வேண்டியவளிடம் கூறாது தன் நண்பனின் அணைப்பில் இருந்த படி புலம்ப.. ஹரிணியின் செவிகளில் அது தேனாக பாய்ந்தது எனலாம்..
அவனின் நேசம் தெரியும்.. பாறைக்குள் வேர் விடும் புல்லை போல் அவ்வபோது முளைத்து தலை தூக்கும் அதை எதோ ஒரு காரணத்திற்காக வெட்டி வெட்டி விடுகிறான் என்று கூட தோன்றும்.. சில நேரம் காதல் இருக்கா இல்லையா என்று கூட அவள் குழம்பியதுண்டு.. ஏனெனில் அவன் அவளிடம் கருணை காட்டியதில்லை.. தன் மன உணர்வுகளுக்கு முகமூடி போடாது அப்படியே வெளிக்காட்டி விடுபவான்..
இன்று மனம் முழுவதும் பாரமாக உணர்ந்தவன் அவளின் விவாகரத்து முடிவை ஏற்றுக் கொண்டான்.. முழு மனதுடன்..
ஹரிணிக்கு அது தான் விருப்பம் என்றால் அவளின் மகிழ்ச்சிக்காக அவளை பிரியத் துணிந்தான.. அவள் இல்லாது வாழ இயலாது தான் ஆனாலும் பிரிவை எதிர்கொள்ள தயாராகினான்..
ரிஷி தரன்..
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..