ஆறு மாதங்களுக்குப் பிறகு.
பெரிய நிலைக்கண்ணாடி.
அதன் முன் குழப்பமாக நின்றுகொண்டிருந்தாள் ஜெனிபர். சேவை அணிவதா இல்லை லெகங்கா அணிவதா இல்லை சுடிதார் அணிவதா என்ற குழப்பம் தான் அது.
"சேலையோ இல்ல லெகங்காவோ கட்டுனா ஸ்கெட்ட கொஞ்சம் டைட்டாகக் கட்டனும். அது ஆபத்து. சுடிதாரா இருந்தா அதுவும் லாங் சுடியா இருந்தா லூஸ்ஸா கட்டுனாலும் சமாளிச்சிக்கலாம். " எனத் தன் பாதம் தொடும் அளவுக்கு நீளமான சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டு தன்னை பார்த்துப் பார்த்து அலங்காரம் செய்து கொண்டாள் ஜெனிபர்.
கண்ணுக்கு மை. நீளத் தொங்கட்டான் என அணிந்தவள் லிப்ஸ்டிக்கை கையில் எடுத்து விட்டு மீண்டும் அதை எடுத்து இடத்திலேயே வைத்து விட்டாள். ஏனெனில் உணவு உண்ணும்போது அது வயிற்றுக்குள் சென்று விடலாம் என்பதால். முன்பாக இருந்தால் எடுத்து அப்பி இருப்பாள். இப்போது மூன்று மாத சிசு சுமக்கு தாய் அவள். எதையும் கவனித்து பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளாள்.
எல்லாம் முடிந்து விட்டது. நேரம் வேறு ஓடிக்கொண்டே இருக்கிறது. மலர் அழைக்கும் முன் அவரின் கண்பார்வைக்குள் சென்று விட வேண்டும் என வேகவேகமாகத் தயாராகிக் கொண்டிருந்தவளின் அறைக்குள் புயலெனப் புகுந்தான் பிரகாஷ்.
" ஹோய் ஜெனி. செம்…மையா இருக்க. " என அவசர அவசரமாக மனைவியை அணைத்து உச்சி முகர்ந்தவன், நொடியும் தாமதிக்காது கட்டிலின் கீழ் ஒழிந்து கொண்டான்.
" ம்ச். என்னங்க இது. விளையாடுற நேரமா. இன்னைக்கி என்ன நாள். ஹரிணிக்கி வளைகாப்பு. எவ்ளோ வேல இருக்கும். அதெல்லாம் விட்டுட்டு சின்னப் பிள்ளைங்க கூட விளையாடிட்டு இருக்கிங்களே. வாங்க வெளிய. " என்க.
" முடியாது ஜெனி. சொன்னா புரிஞ்சிக்க. என்ன ஒரு படையே துரத்திட்டு வருது. வெளில வந்தேன்னான உம்புருஷெ உசுருக்கு ஆபத்து. யாராது வந்து கேட்டா நா இங்க இல்லன்னு சொல்லிடு. மிரட்டி கூடக் கேட்டாலும் வாயத் திறக்காத சொல்லிட்டேன். " எனப் போர்வையை எடுத்துக் கட்டிலில் போட்டு இருந்த கேப்பை அடைத்தான். யார் துரத்துவது என்ற கேள்விக்கு உடனே பதில் கிடைத்து விட்டது.
கையில் கட்டையுடன் இந்துவும் ஹரிணியும் வந்து கொண்டிருந்தனர். "எங்கடி அவன. " ஹரிணி.
"டேய் பிரகாஷு. ஒழுங்கா வந்திடு. இல்லன்னு சேதாரம் அதிகமா இருக்கும் சொல்லிட்டேன். " இந்து.
"ஆமா. மரியாதையா அப்ரூபர் ஆகி உண்மைய சொல்லிட்டேன்னா. உனக்கு டேமேஜ்ஜே ஆகாது. வெளில வந்திடு. " ஹரிணி.
"என்னாச்சி ஏ ரெண்டு பேரும் ஒரே டயலாக்க திரும்பத் திரும்ப சொல்லிட்டு இருக்கிங்க. ஹரிணி இன்னைக்கி உனக்கு வளையல் போடுறாங்க. மண்டபத்துக்குப் போகாம நீ என்னடான்னா பட்டுச் சேலைய கட்டிக்கிட்டு அவர துரத்தி விளையாண்டுட்டு இருக்க. போய் ரெடியாகு. மலரத்த பாத்தா திட்டப் போறாங்க. " ஜெனி.
"திட்டமாட்டாங்க. இன்னைக்கி பூவத்த சப்போட்டோட பூகம்பமா வந்திருக்கேன். எங்க அவன. அவனுக்குத் தெரியும் எங்க இருக்கானுங்கன்னு. " ஹரிணி.
" யாரு. " ஜெனி.
"அத்தானும் என்னோட வீட்டுக்காரரும். காலைல இருந்து காணும். எங்க போயிருக்காங்கன்னு அவனுக்குத் தெரியும். அதா விசாரிக்க வேண்டிய விதத்துல விசாரிக்க வந்திருக்கோம். " எனக் கட்டையால் தன் கையில் அடித்துச் சொல்ல, ஜெனி கண்ணைக் காட்டினாள் கட்டிலின் அடியில் என்று.
"சரி இந்து. அவெ இங்க இல்லன்னு நினைக்கிறேன். வா நாம போய்க் கனகாத்த ரூம்ல தேடலாம். " என வெளியே செல்வது போல் பாவ்லா காட்டி செல்ல, அது தெரியாது தானாக வந்து தலையைச் சிக்கவைத்துக் கொண்டான் பிரகாஷ்.
" சொல்லு. எங்க உன்னோட அண்ணனுங்க. " ஹரிணி.
"எனக்குத் தெரியாது. "
"பொய் சொல்லாத. காலை அவரு பைக்க நீதான ஓட்டீட்டு வந்த. எங்க அவர டிராப் பண்ணிட்டு வந்த. சொல்லு. " இந்து.
"இல்ல இந்து. நா அண்ணே ரெண்டு பேரையும் பாக்கல. அப்பத்தா சொல்லும்மா. உம்பேரன இவளுக சேந்து சித்தரவத செய்றாளுக. என்னன்னு கேளும்மா. " என்க.
" நல்லா போட்டுங்கடி. பொண்டாட்டிக்கி இன்னைக்கி சீமந்தம் அந்த நினப்போ இல்லாம எங்கையோ ஊர் சுத்த போய்ட்டான் உங்கண்ணே. அதா எம்பேத்தி கோபமா கட்டைய எடுத்துட்டு வந்திருக்கா. அவனுங்க எங்கன்னு சொல்லிட்டா உம்மண்ட தப்பிக்கும் இல்லன்னா வீட்டுல சுட்ட பனியாரமாட்டம் வீங்கிக்கும் மண்ட. சொல்லிட்டு மண்டபத்துக்கு வந்து சேரு. டேய் வேலு கார எடுடா. உம்பொண்டாட்டி ஏறிட்டாளா. எம்மாடி ஜெனிபர் வா போலாம். எங்க அந்தக் கனகாவ. அவளையும் கூட்டீட்டு வா. " என்றபடி காரில் ஏறிச் சென்று விட்டார்.
"ஹரிணி எனக்குச் சத்தியமா தெரியாது. நம்பு. " என்க.
"இந்து அந்தக் கத்திய எடுத்துட்டு வா. வெங்காயம் வெட்டுற மாறி இந்த விரல குட்டி குட்டியா வெட்டி எடுத்துடுறேன். " ஹரிணி சொல்ல, இந்து நிஜமாகவே கத்தியை எடுத்து வந்தாள்.
" ஏய் கொலகாரி. உன்ன போய் நல்லவன்னு நம்புனேன் பாரு. கத்தியா எடுத்துத் தர்ற. இரு எங்கண்ணேட்ட சொல்லி இப்பவே உன்ன வீட்ட விட்டு வெரட்டி விடுறேன். " என ஃபோனை எடுக்க, அதைப் பறித்துக் கொண்டாள் ஹரிணி.
" மரியாதையா அவனுங்க எங்கன்னு சொல்லிட்டேன்னா உடம்பு நல்லா இருக்கும். இல்லன்னா ஹைவேல அடிப்பட்ட காராட்டம் உங்காலு ரெண்டும் நசுங்கிப் போய்டும் பரவாயில்லயா. " என்றபடிபடி கத்தியைக் கழுத்தில் வைக்க,
" சொல்றேன். " என அலறினான்.
"நாந்தா கௌதம் அண்ணாவ கூட்டீட்டு போனேன். தரன் அண்ணா தா கூட்டீட்டு வரச் சொன்னாரு. "
"எங்க. " இந்து.
" சொல்ல முடியாது. " என்றவுடன் ஹரிணி கத்திக்கி அழுத்தம் கொடுக்க,
" ஏய் உன்னைய கூட்டீட்டு போய்க் காட்டுறேன்னு சொன்னேன். அதுக்குள்ள கூறு போட ரெடியா நிக்கிற. வா. " என அதிகாரமாகப் பேச, இருவரும் கையில் இருந்த ஆயுதத்தைச் சுழற்றினர்.
" போலாம் அண்ணீஸ். வாங்க. " எனப் பணிவுடன் அழைத்துச் சென்றான்.
ஜீப்பில் ஏறிப் புறப்படும் நேரம். சரியா ஒரு கார் வந்து நின்றது. அது விக்னேஷ் மற்றும் பவதா. அவனின் நண்பர்கள் ஜீவாவும் மனோகரும் வந்திருந்தனர்.
" ஐ போலிஸ் கார். " எனப் பிரகாஷ் விக்னேஷிடம் தஞ்சம் அடைய,
" விக்கி இந்தா. இத நீ வச்சிக்க. ஜீவா. உனக்கு இது. " என ஹரிணி உருட்டு கட்டைகளை எடுத்துத் தர,
" ஏய் ஜீவா. எங்க ப்ரியா. விட்டுட்டு வந்துட்டியா. ஏ. " என்க.
" அது ப்ரியா கன்சிவ்வா இருக்கா. டிராவல் வேண்டாம்னு அம்மா சொன்னாங்க. அதா. " எனப் புன்னகைக்க,
" ஓ… ஆல் தி பெஸ்ட். நீயாச்சும் உன்னோட வைஃப் கூடவே இருந்து பாத்துக்க. பிள்ளத்தாச்சி பொண்ண கஷ்டப்பட வைக்காத. " என்க.
" அதுலல்லாம் நம்ம பையெ நல்லாவே பாத்துக்குவாப்ல. சொல்லவே தேவையில்லை. " மனோ.
" ஏய் இது என்ன புதுசா ஒரு செயின் கழுத்துல தொங்குது. அதுவும் S ன்னு போட்டு. என்ன விசயம். " எனக் கேட்க.
" அது சங்கீதா என்னோட காதலுக்கு சம்மதம் சொல்லிட்டா. " எனச் சிறு வெட்கத்துடன் சொல்ல,
" ஓ… கடைசில கரெக்ட் பண்ணிட்ட போலையே. எப்ப கல்யாணம். "
" நாங்க காதல் பறவைகளா வானத்துல சிறகடிச்சி கொஞ்ச காலம் பறக்கலாம்னு இருக்கோம். ஒரு ரெண்டு வர்ஷமாச்சும் லவ் பண்ணி. அப்றம். "
" வீட்டுல பாக்குற பையன கல்யாணம் பண்ணிட்டு போய்டுவாங்க. சரியா. " என்ற பிரகாஷ் முறைக்க,
" சரி எதுக்கு இந்தக் கட்ட. யார அடிக்க. " பவதா.
" நல்ல வேள நியாபகப்படுத்துன. விக்கி எம்பின்னாடியே வா. ஜீவா மனோ நீங்களும் தா. இந்து நீ பவதாவ கூட்டீட்டு மண்டபத்துக்குப் போ. நா பாத்துக்கிறேன். வாங்க. " எனப் பிரகாஷை பிடித்துக் கொண்டே அவர்களின் தோட்ட வீட்டிற்கு நடந்து சென்றனர்.
"விக்கி உனக்கு உருட்டு கட்டய வச்சி அடிச்சி பழக்கம் தான. ஒரே போடு. சுக்கு சுக்கு சிதறணும். ஜீவா நீயும் தா. "
" எல்லாம் ஓகே. ஆனா யார அடிக்கணும். எதுக்கு அடிக்கணும்." விக்னேஷ்.
"ம்ச்... அத வந்து பாத்து தெரிஞ்சிக்க. " என்ற படி நடந்து செல்ல, பிரகாஷ் தோட்டத்து வீட்டைக் காட்டினான். ஆனால் அது காலியாக இருந்தது.
"எங்கடா யாரையும் காணும். ஏமாத்த பாக்குறியா. " ஹரிணி.
"அட இரும்மா நீ வேற. தொனதொனன்டு. பேசாம பின்னாடி வா. " என்றவன் ஒரு மூளையில் உள்ள நிலத்தில் தண்ணீர் சேர்த்து வைக்கும் தொட்டியைத் திறந்து உள்ளே செல்ல, ஹரிணியும் புரியாமல் படிக்கட்டில் இறங்கினாள். அங்கு நீர் இல்லை அதற்குப் பதிலாக ஒரு ரூம் இருந்தது. ‘இன்னொரு சீக்ரெட் ரூமா.’ என்றபடி நடந்தவள் காதுகளில் தன் கணவனின் குரல் கேட்டது.
"ஹரி லெஃப்ட் சைட் வர்றான் ஒருத்தேன். "
" நா பாத்துக்கிறேன். நீ அவன விட்டுடாத. " கௌதம்.
" அதெப்படி விடுவேன். என்னோடது எல்லாமே ஹெட் ஷாட் தா. ஹரி புது கன்ன ட்ரெய் பண்ணியா. " ரிஷி.
"அதுக்கு டைமெண்ட் வேணும். எங்கிட்ட கம்மியா இருக்கு. இரு நா அத இப்பவே வாங்குறேன். "
"அப்றமா அத பாரு. இப்ப விடாத. போடு. போடு. "
"ய்யா. சாவுங்கடா. சாவுங்கடா…ஆ. " என இருவரும் கத்திக் கொண்டு இருந்தனர். அவர்களுக்குப் போட்டியாக ஹரிணியும் கத்தினாள்.
" விக்கி விடாத. நீயும் போடு. " என்க.
"எத. "
"அந்த வீடியோ கேம்ம. " என்று சொல்லி இருவரின் கண்ணில் இருந்த பாக்ஸை கலட்டி அதைத் தூக்கி எறிந்தாள். இருவரும் அவளிடமிருந்து தங்களின் வீடியோ கேம்மை காப்பாற்ற பாடுபட்டனர்.
இருவரும் இப்படி தான் மாதம் ஒரு நாள் என தேதிகுறித்து அந்த நாள் முழுவதும் வீடியோ கேம் விளையாடி வந்தனர். யாரை யாரு வெல்வது என்ற போட்டியும் சண்டையும் நடைபெறும்.
‘சரி ஒரு நாள் தானன்னு பாத்தா இப்ப கிடைக்கிற எல்லா ஃபீரி டயத்துலையும் ஃப்ரீ ஃபயர் ங்கிற வீடியோ கேம விளையாட உக்காந்திடுறானுங்க.’
தரனோட ஜும் ரூம்ல தா கேம்மை செட் செய்து வைத்து விளையாடியவர்கள். ஹரிணியின் எதிர்ப்பு காரணமாக. தோட்டத்து வீட்டில் அண்டர் க்ரௌவுண்டல ரூம் செட் பண்ணி விளையாட வந்துட்டானுங்க. அதுவும் ஹரிணி வளைகாப்பான இன்னைக்கும்.
"கிட் உடைக்காத. கிட்... " என ஹரிணியை ரிஷி தடுத்தான் என்றால், கௌதம் விக்னேஷுடன் போராடிக் கொண்டிருந்தான்.
"ஜீவா. என்ன பாக்குற இந்த எடுத்துல ஒன்னு இருக்க கூடாது. எல்லாத்தையும் ஒடை. " என்க ஜீவா என்ன செய்து என்று முழித்தபடி நின்றான். ஏனெனில் ரிஷி அவனைக் கண்களால் மிரட்டிக்கொண்டிருந்தான்.
"டார்லிங் எல்லாமே காஸ்ட்லி ஐட்டம்ஸ். வெளிநாட்டுல இருந்து இறக்குமதி செஞ்சது. வித் டேக்ஸ் ஓட. ஒன்னும் பண்ணிடாதம்மா. " எனக் கெஞ்ச, சற்று சமாதானம் ஆனவள், ரிஷியின் உடையைப் பார்த்து மீண்டும் கத்த ஆரம்பித்து விட்டாள். ஏனெனில் அவன் இன்னும் பனியன் ஷார்ட்ஸ்ஸோடு இருந்தான்.
" என்ன இன்ஜினியரே சுரங்கம் அமைச்சி விளையாட இடம் செட் பண்ணிவச்சிருக்க போலயே. இன்னைக்கி எனக்கு வளைகாப்பு. உன்னோட பொண்டாட்டிக்கு சீமந்தம். அது நியாபகம் இருக்கா. இப்படி நிக்கிற. " எனக் கையில் கட்டையுடன் கேட்டாள் ஹரிணி.
"டார்லிங், ஃபங்ஷன் உனக்குத் தான. இவெ வந்து என்ன செய்யப்போறான். " என்ற கௌதமை அடிக்க,
"கிட் பதினொரு மணிக்கி தா ஆரம்பிக்கப் போறதா உங்கண்ணே சொன்னான். அதா அதுவரை சும்மா இருக்காம, ஒரு ரவுண்டு போய்ட்டு வந்திடலாம்னு. " என்றவனை அங்கிருந்த பம்பு செட்டில் குளிக்க வைத்து மண்டபத்திற்கு இழுத்து வரும் பொறுப்பை விக்னேஷும் ஒப்படைத்துவிட்டு சென்றாள் ஹரிணி.
குதுகலமாய் நண்பர்களுடன் ஆட்டம் போட்டுச் சரியாக லேட்டாக ஃபங்ஷனுக்கு வந்து தன் மனைவியின் கோபத்தை பரிசாகப் பெற்றுக் கொண்டான் ரிஷி.
சுற்றார் குடும்பத்தினர் சூழ, ஹரிணிக்கு வளைகாப்பு நடந்தது. கை நிறைய சந்தனத்தை அள்ளிப் பூசி, அவளைக் கேலி செய்த நண்பர்கள் உறவினர்கள் என அவளின் சீமந்தம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
பூசிய சந்தனத்திற்கு போட்டிய இன்று பூத்த பூத்த மலர்போல் பூத்திருந்த பெண்ணவளின் வாசமும் வீச, தரன் தன்னிலை இழந்து அவளின் முன்னுச்சியில் முத்தமிட்டு, சிவந்திருந்த கன்னத்தைத் தன் சீண்டலால் மேலும் சிவக்க செய்தான். இவள் தன்னவள். பிறரை உரிமை கொண்டாட விட அனுமதியேன் என்பது போல் அவளின் உச்சி வகிட்டில் குங்குமமிட்டவன். பிறை நெற்றியில் தன் இதழ் பதித்து எடுத்தான். சுற்றியிருந்தவர்களின் கேலியால் இருவருக்குமே சிறு வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது.
ரிஷி ஹரிணியின் அருகில் வந்தவுடனே கௌதம் தன்னுடைய கேமாரவை தயாராக வைத்திருந்தான். இருவரின் வெவ்வேறு உணர்ச்சிகளை அழகாய் அதில் பதிவு செய்ய, காதலாய் ரிஷிதரனின் பார்வை தன் மனைவியை வருட, இவள் தன்னவள் என்ற கர்வமுடன் கம்பீரமாக ராஜ தோரணையில் நடந்து வந்து நிதானமாய் பெருமையுடன் தன் இணையை முத்தமிட்ட காட்சி. நாணமாய் தன்னவனை கடைகண்ணில் போலி கோபத்துடனும். இதழில் வெட்க சிரிப்புடனும் வெண்தாமரை போல் மலர்ந்திருந்த ஹரணி முகம் என அனைத்தையும் கௌதம் ஒளிப்படக் கருவியில் படம் எடுத்ததோடு மட்டுமல்லாது. அதை லேமினேஷன் செய்து தர, அதை ஆசையுடன் வாங்கிக் கொண்டு தன் நண்பனை அணைத்தாள் ஹரிணி. ஆனால் ரிஷி கௌதமை முறைத்தான்.
பின் ப்ளான் போட்டு ஃப்ரோம் பண்ண சொன்னது அவெ. ஆனா இவெ சிம்பிளா கைல குடுத்ததுக்கு ஹரிணி கட்டி பிடிச்சா. அது ரிஷிக்குக் கிடைக்க வேண்டிய பாராட்டும் ஹக்கும். அதான லைட்டா காண்டு. படத்தைத் தங்களின் சென்னை வீட்டில் மாட்டி வைத்துத் தினமும் பார்த்துப் பார்த்து ரசிப்பாள்.
அசோக் குடும்பம் ஸ்கைப்பில் வந்து அந்த நிகழ்வில் பங்கு கொண்டது. வைசுவும் நந்துவும் ஹரிணியை கேலி செய்ய அந்த நிகழ்வு குடும்பத்துடன் கொண்டாடியது போல் நிறைவாய் இருந்தது.
ஜெகன். இவனும் இன்ஜினியர் தான். நல்ல குடும்பமாக. பழக நல்ல குணமான பையனாக இருப்பதாக ரிஷி மலரிடம் நற்சான்றிதழ் தந்தான். அவன் தான் கவியரசரின் மூத்த மகள் சுதாவிற்கு எனப் பார்த்திருக்கும் மாப்பிள்ளை. அவளுக்கு இன்டீரியர் டிசைனிங் மேல் உள்ள ஆர்வம் அவளின் கணவனுக்கு உதவும். இருவரும் சேர்ந்து தொழிலில் மட்டுமல்லாது வாழ்க்கையும் இணைத்து வாழ முடிவு செய்து. நம் சேனையம்மன் கோயிலில் வைத்து நிச்சயம் செய்யப்பட்டது.
வீட்டின் ஆண் வாரிசுகள் முன் நின்று தான் திருமண ஏற்பாட்டைச் செய்வதில் மூத்த தலைமுறையினருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. நாச்சியம்மாள் வானம் சென்ற தன் கணவனைக் கண்ணீருடன் நினைத்துப் பார்த்தார். அது ஆனந்த கண்ணீர்.
நாம் இழந்த ஒன்று நம்மிடம் திரும்ப வந்து சேரும். சிலநேரம் சீக்கிரமாகக் கிடைக்கலாம். இல்லையேல் நாம் எதிர்பார்க்காகத நேரமாக இருக்கலாம். எப்போது வேண்டுமானாலும் நம்மிடம் வந்து நிச்சயம் சேரும்.
அதுபோல் தான் வந்து சேர்ந்தாள் பார்கவி. கௌதம் ஹரிணியின் மகளாய்.
ஒரு நொடியில்.
பார்த்த முகத்தை.
ஒவ்வொரு நொடியும்.
நியாபகத்தில் வைத்திருக்க.
செய்வது அன்பு.
அந்த அன்பு தான் இன்றும் பார்கவியின் முகத்தையும் நினைவையும் கௌதமிடமிருந்து மறக்கச் செய்யாமல் இருக்கிறது. அந்த அன்பு ஹரிணியின் மகளைக் கையில் ஏந்தியபோது தோன்றியது. தன் பாப்புடு. தன் தங்கை. தன் பார்கவி என்ற நினைப்பை.
தன் மகள் ஆதிரையை கையில் வாங்கியபோது கூட அப்படி தோன்றவில்லை. ஆனால் ரிஷியின் மகளைத் தூக்கி வந்த போதே உணர்ந்து விட்டான், தன் பாப்புடு வருகிறாள் என்று. அனைவரையும் விலக்கிச் சென்று தன் கையில் வாங்கி அந்த மலர் குவியலின் முகம். அது தன் பார்கவியின் முகம்போல் தோன்றியது அவனுக்கு. ரிஷியிடமும் ஹரிணியிடமும் சண்டை போட்டு அவளைத் தன்னுடன் வைத்துக் கொண்டான். தாயின் அமிர்தம் குழந்தைக்குத் தேவை. அப்போது மட்டுமே ஹரிணியின் கையில் அவளைத் தருவான். மற்ற நேரம் எல்லாம் கௌதமின் மார்பே அவளின் தொட்டில்.
பெயர் சொல்லவில்லை அல்லவா. மகிழினி.
"எனக்குப் பிடிக்கல. என்னோட பொண்டாட்டி பேரு அறுத பழசா இருக்குறது எனக்குப் பிடிக்கல. மஞ்சுமா மோகன். இவானான்னு லேட்டஸ்ட்டா வைக்காம என்ன இதெல்லாம். இப்படி வச்சா நாளைக்கி கல்யாணத்து அப்றம் எப்படி என்னோட ஃப்ரண்ட்ஸ்க்கு இன்ரோ குடுப்பேன். " சண்டைக்கி வந்தான் நந்து.
" அப்ப நீ கட்டிக்காத. நா பாத்துக்கிறேன். என்னோட பொம்மிய. " ஹர்ஷா.
"நீ பாப்ப நா அத பாத்துத்துட்டு இருப்பேனாக்கும். மகி பக்கத்துல போக் கூடாது சொல்லிட்டேன். ஆதி பக்கத்துலையும் தா. " என மிரட்ட, ஹர்ஷா சிரித்தான்.
பாவம் இருவரின் சண்டையையும் விளையாட்டாக எடுத்துக் கொண்டு அனைவரும் சிரிக்க, ரிஷி மட்டும் புருவம் சுருக்கி யோசித்தான்.
பாம்பின் கால் பாம்பறியும் அல்லவா. தன் தங்கை மகனின் எண்ணத்தை மாமானான அவன் அறிய மாட்டானா என்ன.
‘ஓகே இப்போதைக்கு இவங்கள இப்படியே விட்டுட்டு நா கிளம்புறேன்.’
நன்றி.
மீண்டும் ஒரு நல்ல கதை களத்துடன் உங்களைச் சந்திக்கிறேன்.
Final

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..