அத்தியாயம்: 55
"என்ன காக்கி சட்ட காத்து கலர் டிரெஸ் போட்டுட்டு இந்தப் பக்கம் வீசுது. " கௌதம்.
ப்ளாக் ஜுன்ஸ். ப்ளாக் சர்ட். கண்ணில் கூளிங் க்ளாஸ் சகிதமாகப் பைக்கில் சாய்ந்து நின்ற விக்னேஷை பார்த்து.
" அதே கேள்விய நானும் கேக்கலாமா. " விக்னேஷ்.
"கேக்கலாம். ஆனா பதில் தா வராது. பரவாயில்லயா. " கௌதம். வாய் அவனிடம் பேசினாலும் கண்களும் கைகளும் லேப்டாப்பில் வேலை செய்து கொண்டு இருந்தது.
" அவ்ளோ வேல இருக்குன்னா எதுக்கு இங்க வந்து வெட்டியா நிக்கணும். ஆஃபீஸ் போக வேண்டியது தான. " விக்னேஷ். காரின் முகம் பக்கம் ஏறி அமர்ந்து கொண்டு பேச,
" முக்கியம் தா. ஆனா பண்ண விட மாட்டேங்கிறாங்க. வேணா வேணாம்னு சொன்னாலும் நம்மலையும் இழுத்துட்டு வந்திடுறானுங்க. என்ன பண்ண. ஆல் இஸ் மை தலையெழுத்து. "
" சேம் எழுத்து தா எனக்கும். சும்மாவே இருக்க விட மாட்டேங்கிறங்க. ச்ச... கடுப்பாகுது. " எனக் காரில் குத்த,
" டேய் அது எங்காருடா. முதல்ல கீழ் இறங்கு. கொரங்கு மாறி ஏறிக்கிட்டு. " என விக்னேஷ் இறங்கச் சொல்ல, அவன் மாட்டேன் என்று கூறி காரை உதைத்தும், கண்ணாடியில் தண்ணீர் ஊற்றியும் கௌதமை வெறிப்பேற்றிக் கொண்டு இருந்தான்.
" ஹாய் விக்கி. என்ன இந்தப் பக்கம். "
" இதே கேள்விய நா கேட்டேன் பதில் சொல்ல முடியாதுன்னு சொல்ட்டான். போலிஸ் கேள்வி கேட்டா நாங்க பதில் சொல்லனுமாம். ஆனா போலிஸ் நாங்க கேக்குற எதுக்கும் பதில் சொல்லமாட்டானுங்களாம். என்ன டா உலகம் இது. " கௌதம்.
" இன்னைக்கி அப்பாக்கு பிறந்த நாள். அதுனால என்னோட சுமதி அவங்க கையாலயே சமச்சி இல்லாத குழந்தைங்களுக்கு குடுப்பாங்க. இன்னைக்கி இங்க வாங்கன்னு கூட்டீட்டு வந்தேன். அதோ பேசிட்டு இருக்காங்க பாரு. " எனத் தன் தாயை காட்ட, ஹரிணி அவரின் அருகில் சென்றாள் உதவி செய்ய வேண்டுமா எனக் கேட்க,
"இதோ பாரு பத்து நிமிஷம் தா. அதுக்கு மேலலாம் என்னால செக்கியூரிட்டி வேல பாத்துட்டு நிக்க முடியாது சொல்லிட்டேன். லேட் ஆகுது. சீக்கிரம் வா. " என்ற கௌதமிற்கு இதழ் கோணி அழகு காட்டி விட்டுச் சென்றாள் ஹரிணி. அதைக் கண்டு சிரித்த ஆண்களின் கண்ணிற்கு சிறுவர் பலூனை வைத்து விளையாடுவது பட்டது.
பலூன் பறந்து வந்து அங்கிருந்த ஒரு மரத்தின் மீது பட்டு வெடித்து சிதறியது. குழந்தைகள் அதை மிரண்டு பார்த்துவிட்டு ஓடிச் சென்றனர் வேறு பலூனை எடுக்க.
"ம்… அழகுக்காக வளத்திருக்காங்க போல. மூங்கில் மரம். நல்லா வளந்திருக்கு. " ரிஷி. அந்த மூங்கில் மரத்தை வெறித்துப் பார்த்தபடி
" விவசாயி இது மரம் கிடையாது. புல் வகைய சேந்தது. " கௌதம் கிண்டலாக.
"ம்… புல்லுதா. ரொம்ப உயரமா வளரக்கூடிய புல். 40 மீட்டர் உயரமா கூட வளருமாம். இது ஒரு நாளைக்கி ஒரு மீட்டர். அதுக்கும் மேல கூட வளருமாம். டெய்லி வளரும் போல. " விக்னேஷ்.
"பூஸ்ட் மாறி எதாவது என்ஜி டிரிங்க்ஸ் குடிக்கும்னு நினைக்கிறேன். அதா வேகமா அழகா வளருது. " கௌதம்.
" பாக்க சாதுவா அழகா இருந்தாலும். இது ஆபத்தானது இல்லையா. " ரிஷி.
" ரொம்பவே. " விக்னேஷ்.
" அப்படியா சொல்ற. ஆபத்தெல்லாம் மூங்கில் மரம் வளக்குறதுனால வருமா. என்ன. " கௌதம்
"ம். வரலாம். " விக்னேஷ்
"எப்படிப்பா வரும். ம்.. சைனீஸ் படத்துலலாம் பாத்திருக்கேன். அவனுங்க இந்த மரத்துல மேல ஏறி நின்று சண்டலாம் போடுவாங்க. இத வச்சி சண்ட போட்டாலும் ஆபத்தா என்ன. " கௌதம்.
" நீ கேப்டன் பிரபாகரன் படம் பாத்திருக்கியா. அதுல சரத்குமார வில்லன் மன்சூர் அலி ரெண்டு மூங்கில் மரத்த நல்லா வளச்சி, அவரோட ரெண்டு கைலயும் கட்டிப்போட்டு, கயிற வெட்டுனதும் வளைஞ்சிருக்குற மூங்கில் நேரா மாறிடும். அதுலகட்டிப்போட்ட ஹீரோ உடம்பு ரெண்டா கிளிஞ்சி உயிர் போய்ச் செத்து போய்ட்ட மாறிக் காட்டுவாங்க. அது ஆபத்து தான. அந்த மாறிப் பண்ணலாம் தான. " விக்னேஷ்
" எப்படி. மூங்கில்ல கைய கட்டிப்போட்டா. சாகடிச்சிடலாமா என்ன. " கௌதம்.
"ம்… அது எவ்வளவு வளைச்சாலும் வளஞ்சி குடுக்குமே தவிர. அவ்ளோ சீக்கிரம் உடஞ்சி போகாது. " விக்னேஷ்.
"அப்படியா." கௌதம்.
" அது உண்மையா பொய்யான்னு தெரியாது. ஆனா மூங்கில் மரத்த வச்சி ஒரு உயிர கொடூரமா எடுக்க முடியும்." எனச் சொல்லி ரிஷி சிரிக்க, கூடவே விக்னேஷும் கௌதமும்.
"அதா எங்களுக்குத் தெரியுமே." எனச் சேந்து சொல்லிச் சிரிக்க. மூவரின் சிரிப்பும் ஒரு விதமாக இருந்தது. எதையோ சாதித்து விட்டதை போன்று சத்தம் போட்டு வெற்றி சிரிப்பு சிரிக்க.
"என்ன ஜோக்குன்னு சொன்னா நானும் சேந்து சிரிப்பேன். " என்றபடி ஹரிணி அருகில் வந்தாள்.
" அதெல்லாம் வெளில சொல்லிட முடியாது. இது பாய்ஸ் டாக். பொண்ணுகளுக்குள்ள மட்டும் தா கேர்ள்ஸ் டாக்னு பசங்க கிட்ட சொல்ல முடியாத சீக்ரெட்ஸ் இருக்குமா என்ன. " எனக் கௌதம் சொல்ல, ரிஷி காரின் சாவியை ஹரிணியிடம் தூக்கி வீசினான். அதைக் கேச் பிடித்த ஹரிணியிடம்,
"நீ டிரைவ் பண்ணு. " என்றபடி தன் ஃபோனை நோண்டியபடி ஏறி அமர்ந்து கொண்டான். அவனைப் பார்த்தபடி நின்ற ஹரிணியின் தோளில் தாட்டி,
"எங்க உயிர் இன்னைக்கி உங்கைல தா. பாத்து ஓட்டு டார்லிங். " என்றபடி கௌதம் ஏறிக் கொள்ள, அவள் 'நீயாது சொல்லலாம்ல' என்பது போல் விக்னேஷை பார்த்து நின்றாள்.
" நத்திங். அப்பறம் பாக்கலாம். " என்றபடி தன் கூலிங் கிளாஸ்ஸை மாட்டிக்கொண்டு நடந்து சென்றான். செல்லும் அவனின் உதடுகளில் புன்னகை தவழ்ந்து. திரும்பி அவன் ரிஷியைப் பார்க்க அவன் தன் புருவங்கள் இரண்டையும் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்றி இறக்க, விக்னேஷிற்கு அது பிடித்திருந்தது. அந்த இருவருடன் சேந்து இதுவரை செய்த வேலை. யாருக்கும் தெரியாத வேலை அது.
விக்னேஷுற்கு தன்னிடம் சிக்கும் சில கொலைகாரர்களைச் சட்டம் தண்டிக்கும் என்ற நம்பிக்கை கிடையாது. அதே நேரம் மன்னித்து வெளியே நடமாட விடும் பழக்கமும் கிடையாது. குற்றவாளிகளால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பொருத்து அவர்களை என்கவுண்டர் செய்வதும், தலைமறைவாகி விட்டார்கள் என்று சொல்லி அவர்களை யாருக்கும் தெரியாமல் வித்தியாசமாகக் கொலை செய்வதும் அவரின் வழக்கம்.
சந்திரபோஸ், தன்செயன், தமிழ்வாணன் மூவரின் க்ரைம் ரேட் அதிகம். பலி கொடுக்க வளர்க்கப்படும் விலங்குகளைப் போல் மனிதர்களை வளர்த்து அவர்களைச் சில பணக்காரர்களுக்குப் பலியாக்கியது, ஆராய்ச்சி என்ற பெயரில் அவர்களை தவறாகப் பயன்படுத்தியது, பொய்யான செய்திகளைப் பரப்புவதன் மூலம் உண்மையை யாரின் பார்வைக்கும் கொண்டு செல்ல விடாமல் மறைத்தது, என நிறைய இருக்கிறன.
அவர்களைப் பிடித்து ஜெயிலில் அடைத்து, சட்டத்தின் பார்வைக்கு காட்டாது. ஒரேயடியாக மறைக்க முடிவு செய்து ரிஷிக்கு உதவி செய்தான்.
அதை நினைத்தபடி தன் அன்னையை அழைத்துக் கொண்டு வீடு சென்றான். இங்கு ஹரிணி, முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு இதழ்களில் மட்டும் ஒரு கொடூர சிரிப்பினை தவழ விட்ட ரிஷியையும், உல்லாசமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்த கௌதமையும் குழப்பத்துடன் பார்த்தபடி காரைச் செலுத்தினாள்.
காரைப் பார்க் செய்ய என ஹரிணி சென்று விட, இருவரும் தங்கள் ஆஃபீஸ்க்கு நடந்து சென்றனர். அவர்கள் இருவரின் நினைவும் அன்று நடந்தது நினைத்தபடியே சென்றது.
அன்று மூவரும் அந்த கொலைகாரர்களைத் தோளில் தூக்கிப் போட்டுச் சென்ற இடம் பார்கவியின் கல்லறை. அங்கு எல்லா ஏற்பாட்டையும் செய்து வைத்து விட்டுதான் வந்திருந்தான் ரிஷி.
எப்போது ரிஷிக்குத் தன் தங்கையின் மரணம் நிகழ்ந்தது எப்படி என்று தெரிய வந்ததோ, அப்போதே அதற்குக் காரணமான சந்திரபோஸ்ஸின் உயிரை எப்படி எடுப்பது என்று தீவிரமாகச் சில காலம் யோசித்தான். அதற்கும் நல்லதோர் திட்டத்தைத் தீட்டியே வைத்திருந்தான்.
முதலில் அவன் செய்தது தங்கையின் உடலைப் புதைத்த இடத்தையும் அதைச் சுற்றி உள்ள நிலத்தையும் விலை கொடுத்து வாங்கியது. அதை வேலி போட்டு அதற்கு என ஒரு வாட்ச்மென்னை நிர்ணயித்து அந்த இடத்தைச் சுற்றி மனித நடமாட்டத்தை இல்லாமல் செய்தது.
அடுத்து கல்லறையைச் சுற்றி பல மூங்கில் மரங்களை நட்டது. அந்த மரத்தால் தான் அநியாயமாகக் கொல்லப்பட்டு கொதித்து கொண்டிருக்கும் தன் தங்கையின் ஆத்மாவை இரத்தத்தால் குளிர்விக்க முடியும் என்று வளர்த்தான்.
விக்னேஷ் சொன்னது போல் மூங்கில் மரம் தினசரி சில செண்டிமீட்டர்கள் வளரும் தன்மை கொண்டது. வெட்டி எடுத்தாலும் வேர் இருக்குமானால் வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.
குச்சியாய் உயர வளர்ந்திருந்த மூங்கில் மரத்தினை பென்சிலின் நுனிபோல் கூர்மையாக வெட்டி வைத்திருந்தான் ரிஷி. அதன் கூர் நுனி கூர்மையாகவே வளரும்.
மயங்கிக் கிடந்த அவர்களின் சுய நினைவானது வந்தவுடன் அந்த நுனிக்கு மேல் மூங்கிலை உரசியபடி மூவரின் உடலையும் கட்டி தொங்க விட்டுச் சென்றனர். அதாவது கீழே கத்தி இருக்க அதன் மேல் கட்டி தொங்க விடுவது போல. என்ன எஃகு கொண்டு செய்யப்பட்ட கத்தி வளராது. ஆனால் மூங்கில் மரத்தில் செய்யப்பட்ட இந்தக் கத்தி வளரும். அதுவும் அவர்களின் உடலைக் கிழித்துக் கொண்டு வளரும். ஒருவருக்கு தலா மூன்று மரங்கள். முதல் கத்தி இடைக்கு கீழே, அடுத்து இதயத்தைக் குத்தி கிழித்து சொல்லும் படியும், மூன்றாவது வில்லங்கமாக யோசித்த அவர்களின் மூளையை கிழிக்கும் படியும் வளரும் வகையில் கட்டி போட்டு விட்டு, தினமும் வந்து அதன் வளர்ச்சியைப் பார்ப்பர்.
எத்தனை சத்தமாகக் கத்தியும் அவர்களின் குரல் யாரின் செவிகளையும் சென்று சேராதே. மலை முகடுகளில் பட்டு அவர்களின் காதுகளையே வந்து சேர்ந்தது.
கத்தி கொண்டு எத்தனை உயிர்களின் உடலைக் கீறி உள்ளிருக்கும் உறுப்புகளைத் திருடி இருப்பார்கள். இப்போது அந்தக் கூர் நுனி கொண்ட மூங்கில் அவர்களின் உடலைக் குத்தி கிழித்து வளரும். இரத்தம் வெளியேறி, உடல் கிழிந்து மடிந்து போயினர். அதுவும் மூன்று நாள்கள் அந்த வேதனையை அனுபவித்து தான் உயிர் பிரிந்து சென்றது. பின் அவர்களை மருத்துவமனையில் வைத்துக் காப்பாற்றுகிறோம் என்று சொல்லி ஒரு நாடகம் நடத்தி இறந்து விட்டதாகக் கணக்கு காட்டி விட்டனர்.
இதை ஹரிணியிடம் சொல்வதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை தான். ஆனால் அவள் அந்தக் கிரிமினல்களின் இறப்பை கற்பனை செய்து பார்த்து மனம் வேதனை அடைவாள். அதனால் தான் சொல்லவில்லை.
இருவரும் தங்கள் கேபினுக்குள் சென்று மேஜையில் உள்ள பார்கவியின் புகைப்படத்தை பார்க்கும்போது நிம்மதி பிறந்தது. இனி விழி மூடினால் அவளின் அன்பான முகமே வந்து நிற்கும். அதிலும் கௌதமிற்கு சிறு வருத்தம். தன் தங்கையின் வளர்ச்சியைக் காணும் பாக்கியம் தனக்கு இல்லாமல் போனதை எண்ணி.
அவனின் அந்த கவலையைப் போக்கவே ஹரிணியின் வயிற்றில் சிசுவாய் வளர்ந்து கொண்டிருக்கிறாள் அவனின் தங்கை என்பதை அறியாமல் பார்கவியின் புகைப்படம் பார்த்துக் கண்ணீர் சிந்த, ரிஷி வந்தான். கூடவே ஹரிணியும். எழுந்து சென்று இருவரையும் அணைத்துக் கொண்டான், நன்றி என்ற வார்த்தையுடன்.
தவறு செய்வர்களுக்கு தண்டையை காலம் தரும். இங்கு ரிஷி தந்து விட்டான்.
நாம் செய்யும்.
பாவங்களுக்கான.
தண்டனையை.
நாம் அணிந்து.
கொள்ளும் நல்லவன்.
என்ற முகமூடி.
தள்ளிப் போடலாம்.
ஆனால்.
தப்பிக்க இயலாது.
தண்டனை கிடைத்தே தீரும்.
யாரின் மூலமாகவும்.
இதை வள்ளுவர் பொருட்பாலில் செங்கோன்மை எனும் அதிகாரத்தில் ஒரு குரலின் மூலம் அழகாய் கூறியிருப்பார்.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
கொடியவர்களுக்கு மரண தண்டனை கொடுத்துத் தக்கவரைக் காப்பது, உழவன் களையைக் களைந்து பயிரைக் காப்பதற்குச் சமம்.
சுபம்.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..