முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 54


 

அத்தியாயம்: 54 


அதிசயம்... 


ஆச்சரியம்… 


ஆனால் உண்மை.‌..


ஹரிணி சமையல் அறையில் நின்று கொண்டிருக்கிறாள். அதுவும் தோசை மாவுடன். அவளால் நம்பவே முடியவில்லை.‌ தான் தானா இதைச் செய்தது என்று. ஏனெனில் ஒரு கரண்டி மாவை தோசை கல்லில் ஊற்றி, வட்டம்… என்று சொல்லி விட முடியாது. ஒரு மாறி உருளைக்கிழங்கு வடிவம் என்று சொல்லப்படும் வடிவம் இல்லாத வடிவம். அதுபோல் தோசையை கல்லில் ஒட்டாமல் சுட்டு, பிய்க்காமல் முழுதாகக் கரண்டியில் எடுத்தும் விட்டாள்.


அப்ப அது அதிசயம் தான.


" என்னால நம்பவே முடியல. நானா இது. இது அத்தனையும் நா சுட்ட தோசையா. வாவ்!!.‌‌ அந்த அதிசயத்த நா யார்கிட்டையாது காட்டனுமே. ஹாங். முதல்ல நமக்கு சொல்லிக் குடுத்த சமையல் ஆசிரியர் பவதாக்கு இத காட்டுவோம். ஐய்யோ. சந்தோஷமா இருக்கே. " எனப் பவதாவிற்கு வீடியோ கால் போட, அது எடுக்கப்பட வில்லை. அவள் கல்லூரி செல்லும் நேரம். இவளிடம் எப்படி ஃபோனில் பேசுவாள்.


" என்ன எடுக்க மாடேங்கிறா. இப்ப நா இத யார்கிட்டையாச்சும் காட்டியே ஆகனுமே. ம்... யார்கிட்ட காட்ட. " என யோசித்துக் கொண்டு இருக்கும்போது குளியல் அறையின் கதவைத் திறந்தது.


" பாவா... அவெந்தா இதுக்கு சரியான ஆளு. பா...வா." எனக் கத்திக் கொண்டே அறைக்குச் செல்ல,


"ஷூ.. மெதுவா‌ பேசு டி.‌ பையன் முழிச்சக்க போறான். " என இதழில் விரல் வைத்தான்.


" ஷூ... ஷூ... தான். ஆனா நா உங்கிட்ட ஒன்னு காட்டணும். வா... வா பாவா. " எனக் கரத்தினை பிடித்து இழுத்துச் சென்றாள்.


" ஏய் இருடி. பனியன் மாட்டிட்டு வர்றேன். " என்க.


" அதா ஷார்ட்ஸ் போட்டிருக்கேல்ல. போதும். வா. பாவா.‌" என தரத் தரவென இழுத்துச் சென்றாள்.


" இங்க பாரு பாவா. ‌எல்லாம் நா பண்ணது. சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு. " என வகைவகையான சமைத்து வைத்ததை போல் பேசினாள். ஆனால் டேபில் இருந்தது ஒரு ஹாட்பாக்ஸ். இரு கிண்ணங்கள். தண்ணீர் டம்ளர் ஒன்று. தட்டு ஒன்று.‌ அவ்வளவுதான் இருந்தன. அந்தக் கிண்ணங்களில் ஒன்றில் தேங்காய் சட்டினி. மற்றொன்றில் தக்காளி சட்டினி. என்ன தக்காளியும் சரி, தேங்காயும் சரி இரண்டிலுமே சரியாக அரைபடவில்லை. முழுதாக மிதந்து கொண்டிருந்தது. அதைக் கண்டு புன்னகைத்தவன்,


" அத பாக்கதா என்ன கூப்டியா. " என்க.


" ம்… ஆமா பாவா.‌ நா ஆறு மணிக்கெல்லாம் எழுந்து இது அத்தனையையும் செஞ்சேன். ம் சாப்பிடு. சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு பாவா. " என ஆவலுடன் தட்டை நிரப்ப, ரிஷி எழுந்தான்.


" எங்க பாவா போற. " என ஷார்ட்ஸ்ஸை பிடித்து இழுக்க.


" விடுடி. பல்லு விளக்க வேணாமா. விடு. " என அவளிடமிருந்து விலக,


" பல்லு அப்றமா தேச்சிக்கலாம். இப்ப இத சாப்பிடு பாவா. உன்னோட கிட் ஆசையா உனக்காகச் சமயல் கத்துட்டு தனியா சமச்சிருக்கேன். சாப்பிட மாட்டியா. " என ஆசையாக அவனின் முகம் பார்த்துக் கேட்க, அவன் அமர்ந்தான். அவள் பரிமாறிய அனைத்தையும் உண்டு முடித்தான். இன்னும் ஒரு வாய் தான் மிச்சம். அவளின் சமையல் ருசியாக இருந்ததோ இல்லையோ. அதை அவள் எப்படி செய்தேன் என்று விளக்கிக் கூறிய விதம் ருசிக்கச் செய்தது. கூடவே அவளைத் தன் விழிகளால் பருகவும் செய்தான்.


" சூப்பரா இருக்கா பாவா. ம்… " என்றவளுக்கு அவன் விரல் மடக்கி சூப்பர் என்றான்.‌


" ம்ச்… சும்மா சொல்றியா. இல்ல உண்மைய சொல்றியா பாவா. " என அவள் கேட்க, கடைசி வாயை அவளுக்கு ஊட்டி விட்டு எழுந்து கை கழுவ சென்றான். செல்லும் அவனை முந்திக்கொண்டு வாந்தி எடுத்தாள் ஹரிணி.‌


" என்ன பாவா இது. நல்லாவே இல்ல. எப்படி சாப்ட. உவ்வா.‌" என வாயைக் கொப்பளித்து துப்ப,


" நல்லா தா கிட் இருக்கு. முதல்ல சமைக்கிறது அப்படி தா இருக்கும். போகப் போக சமச்சிட்டே இருந்தேன்னு வை மாஸ்டர் செஃப்க்கு எல்லாம் டஃப் குடுப்ப. " என அவளை விட்டுக் கொடுக்காமல் கேலி இல்லாமல் பேச, அவள் முறைத்தாள் அவனை.‌


லூசானா நைட் ஃபேண்ட். தொளதொளவென டீ சர்ட். அவளின் அங்கங்களை எடுத்துக் காட்டிய இரவு நேர உடை அது. உயர்த்தி தூக்கி கேச் க்ளிப் கொண்டு தன் கூந்தலை அடைத்திருந்தாலும் அதில் அடங்காது சில முடி கற்றைகள் அவளின் முன் உச்சியிலும், கன்னத்திலும் உரசி நின்றது. இடையில் கை வைத்து மையிடா அவளின் கோலிக்குண்டு கண்கள் இரண்டும் அவனைப் போலிக் கோபத்தோடு பார்க்க, அதைத் தூர நின்று ரசிக்காது. அவளின் அருகில் வந்து அவளின் இடையில் தன் கையைக் கயிறாக்கி கட்டி தன்னை நோக்கி இழுத்தவன்,


" நம்பு கிட். நா ஃபஸ்ட் டயம் சமைக்கும்போது. இதவிட மோசமா இருந்தது. ஆனா அதையே நானும் ஹரியும் சேந்து சாப்பிட்டு காலி பண்ணிடுவோம். என்ன கேட்டா நீ சமச்சது சூப்பர்னு சொல்லுவேன். " என அவளின் மூக்கோடு மூக்குரசி குரல் தாழ்த்தி ஹஸ்கி வாய்ஸில் அவளின் காதுகளுக்கு மட்டும் கேட்பது போல் பேச, பெண்ணவளுக்கு மயிர்கூச்சம் ஏற்றப்பட்டது.‌


" நிஜமாவா." என அவனின் கைகளில் நெளிந்தபடி கேட்டாள்.


"ம். " என ராகம் பாடினான் அவன்.


" நா சுட்ட தோசல உப்பு இல்ல பாவா. மாவுக்கு அத போட மறந்துட்டேன்.‌" என்றாள் அவன் தந்த இம்சைகளை அனுபவித்தபடி,


" பரவாயில்ல அடுத்து சுடும்போது போட்டுக்கலாம். "


" அப்றம் தக்காளி சட்னி புளிக்கிது. பாதி தக்காளி முழுசா இருக்கு. "


" மறுபடியும் மிக்ஸில போட்டுக்கலாம். "


" தேங்கா சட்னி பச்ச கலர்ல மாறிடுச்சி. பச்ச மிளகா அதிகம் போல. " என்க.


" அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். கிட். " என்று கழுத்திற்கு கீழ் இறங்கியவனை, முன்னேற விடாது அவனின் முகம் நிமிர்த்தி விழிகளை உற்று நோக்கியவள்,


" நா உன்ன ரொம்ப கஷ்டப்பட்டுத்துறேனா பாவா. நா உனக்கு மிஸ் மேச்சா. நல்ல வைஃப் கிடையாதா. " என்றாள் கவலையாக. முன் தினம் சம்பத் திட்டியபின் அவளுக்குள் இதே கேள்வி தான் உருண்டு கொண்டே இருந்தது.


எத்தனை விசயங்களின் அவன் தன்னை அட்ஜஸ்ட் செய்து வாழ்கிறான். காலையில் எழுவதிலிருந்து இரவு உறங்கும் வரை எத்தனை செய்கிறான் அவளுக்காக என. காஃபி போட்டுக் கொடுத்து காலை உணவு செய்து வைத்துவிட்டு தான் தன் ஆஃபீஸ்க்கு செல்வான். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அவளின் மொபைலுக்கு மெஸ்ஏஜ் வந்து விடும். அவன் தான் அனுப்புவான். சின்ன எமோஜிகள் போட்டு ஹார்ட் போட்டு என அது சரியாக வந்து கொண்டே இருக்கும்.


மூன்று வேளையும் தவறாது ஃபோனில் பேசிவிடுவான். இரவு. இருவரும் சேர்ந்து உணவு சமைப்பர். கேலியாய், சீண்டலாய், கிண்டலாய், கொஞ்சலாய், காதலாய். சில நேரம் அதையும் தாண்டிச் சமையல் செய்வர். உறக்கம் அவனின் கை அணைப்பில் இருந்தால் தான் வரும். அவள் ஊட்டிக்கு சென்ற சமயத்தைத் தவிர இது அவர்களின் தினசரி பழக்கமாக மாறி இருந்தது.


அவனை முழுதாக அறிந்து கொள்கிறேன் என்று அவனை வாட்டி வதைத்து விட்டோமோ என்ற எண்ணம் சம்பத் திட்டியபின் தான் உதயமானது. இனி அவனைத் தொந்தரவு செய்யாது அவனின் குணங்களையும் சேந்து அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுத்தாள் ஹரிணி.


அவனுக்காக எதாவது செய்ய வேண்டும் என்றெண்ணியவள். நேற்று முழுவதும் விக்னேஷின் வீட்டிலேயே தங்கி பவதாவின் உயிரை வாங்கி கற்றுக் கொண்டது தா இந்த உப்பில்லா தோசை. கணவனை இம்ப்ரெஸ் பண்ண. பட்… அதுவும் முடியல. ச்ச… என்றிருந்தது ஹரிணிக்கு.


' இவா பண்ண சமயல சாப்பிட்டு முடிச்சி சூப்பர்ன்னு சொன்ன அவனுக்குச் சூப்பர் கணவன் அப்படின்னு ஒரு பட்டம் குடுக்கலாம்னு இருக்கேன். உங்க முடிவ கமெண்ட் பண்ணுங்க. '


"கிட் என்ன பேச்சு இது. மிஸ் மேச்ட். அப்படில்லாம் கிடையாது கிட். We are make for each other. ‌என்ன கேள்விகேக்க, வாட்டி எடுக்க, சண்ட போடன்னு உனக்கு எல்லா உரிமையும் உண்டு. You are my better half. " என நெற்றியில் முத்தமிட்டவன்,


"அதே உரிம எனக்கும் இருக்கு. உன்ன வாட்டி எடுக்க. " என சொற்களைத் தன் பற்களுக்குள் மென்ற படி மெதுவாகச் சொல்லி அவளின் இதழைச் சிறை செய்தான் அவளின் காதல் கள்வன்.‌


காற்று புக முடியாத படி இழுத்து அணைத்தவனின் கையில் பொம்மையாக‌ மாறிப் போனாள் பாவை. உடலெங்கும் ஊர்வலம் சென்ற கரங்கள் இன்னும் இன்னும் என அவளைத் தன்னுள் புதைத்துக் கொண்டு இருந்தது. பிரிக்க முடியாத, பிரியவும் விரும்பாத சூழ்நிலையில், அவர்களைப் பிரித்து வைத்து ஒரு குரல். அது அழுகுரல்.


"ம்மா. ஆ... " எழுந்து உட்கார்ந்து அகிலன் அழ, ஹரிணி மகனைக் காண சென்றாள்.


ரிஷி புன்சிரிப்புடன் உப்பில்லாத மாவிற்கு உப்பு போட்டுக் கிண்டி வைத்துத் தோசை சுட ஆரம்பித்தான். கூடவே அவள் வைத்த சட்னிகளையும் சரி பார்க்க வேண்டி இருந்தது.


மகனைக் குளிக்க வைத்துத் தூய உடை அணிய வைத்துத் தானும் ஆஃபீஸ்க்கு தயாராகி வந்தாள் ஹரிணி. மகனுக்குக் கதை சொல்லி உணவூட்டி விட்டவள் அவனைத் தூக்கி கொண்டு கௌதம் வீட்டிற்கு சென்றாள் ஆதிரையை அழைக்க, அகிலனும் ஆதியும் அதே அப்பார்ட்மெண்ட்டில் உள்ள ப்ளே ஸ்கூலில் விட்டுவிட்டு சென்றால் பவித்ராவும் இந்துவும் மாலை அழைத்து வந்து விடுவர்.


அப்பார்ட்மெண்ட்டில் வீடு வாங்கும் போதே மூன்றாக்கத்தான் வாங்கியிருந்தனர். ரிஷி, கௌதம், சம்பத் மற்றும் பிரகாஷிற்கு எனத் தனித்தனியே வீடுகள் உண்டு. பிரகாஷிற்கு சமீபத்தில் தான் வாங்கப்பட்டது. எனவே அது வேறு பிள்டிங். கௌதமின் அருகில் இருக்க வேண்டாம் என்று பவித்ராவிடம் முன்பு கலியபெருமாள் சொன்னதால் சொந்த வீடு இருந்தும் வேறு வீட்டில் வாடகைக்கு இருந்தனர் சம்பத் தம்பதியினர்.


இப்போது தான் அப்பாவுக்கும் மகனுக்கும் ஒத்து போக ஆரம்பித்து விட்டதே. அதனால் சொந்த வீட்டிற்கே தன் ஜாகைகளை தூக்கி கொண்டு வந்து விட்டனர்.


" ஆதிக்குட்டி ரெடியா. " எனக் கேட்டபடி கௌதமின் கதவை ஹரிணி தட்ட, ஆதி வாட்டர் பாட்டில் பேக் சகிதமாகக் கிளம்பி ரெடியாக நின்றாள். அவளைத் தூக்கி தோளில் போட்டுக் கொண்ட ரிஷி பார்க்கிங்கை நோக்கி நடக்க, ஹர்ஷா எதிரில் வந்தான். அவனைப் பக்கத்தில் இருக்கும் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்துள்ளனர். பவித்ரா ஆயிரம் பத்திரம் சொல்லி மகனைச் சம்பத்தின் பைக்கில் ஏற்றி விட்டாள்.


முழுதாக ஹர்ஷாவின் தாயாக மாறி இருந்த அவளைக் காண்கையில் ரிஷியின் முகத்தில் புன்னகை வந்தது. ஆனால் அவளுக்கு வரவில்லை. அவனை முறைத்து பார்த்தபடி சென்றாள்.


" இவா இன்னும் உம்மேல கோபமாத்தா இருக்கா போல. " ஹரிணி.


" பின் வாங்குன அடி அப்படி. கொறஞ்சது நாலு வர்ஷம் ஆகலாம். அவளோட கோபம் குறைய. இல்ல அதுக்கும் கூட மேல ஆகலாம். உம்ஃப்ரெண்டா தங்கச்சி தான. " என்றவன் காரை ஸ்டார்ட் செய்ய,


"ம். அதுவும் சரிதா. உனக்குத் தங்கச்சி தான. உன்ன மாறியே தா இருப்பா. அரகெண்ட்டா. " எனக் காரில் ஏறப் போக, கௌதம் ஓடி வந்து முன் பக்கம் அமர்ந்து கொண்டான்.‌


" டேய் எரும. அது நா உக்கார வேண்டிய இடம் டா. எந்திரி. " எனச் சண்டைக்கி நிற்க.,


"எது உ இடமா. ஏய் காரே என்னோடதும்மா. ஓசி வாங்கிட்டு புருஷனும் பொண்டாட்டியும் ஊர் சுத்திட்டு இருக்கிங்க. மறந்துடாதிங்களா. போ போய்ப் பின்னாடி உக்காரு. " என்றவனை முறைத்தபடி ஹரிணி பின்னால் அமர.


" As a owner of this car றா‌ சொல்றேன். டிரைவர் வண்டி எடுப்பா. " என்றவனின் தலையில் தட்டிவிட்டு காரை இயக்கினான் ரிஷி தரன்.


குழந்தைகளை இறக்கி விட்டவிட்டு கார் அவர்களின் கம்பேனிக்கு செல்லாது வேறொரு இடத்திற்கு சென்றது.


" பாவா நாம எங்க போறோம். "


" சர்ப்ரைஸ். " ரிஷி எனப் புன்னகைத்தான்.


" எந்த ரைஸ்ஸும் வேணாம். ஒழுங்கா ஆஃபிஸ்க்கு வண்டிய விடு. எனக்கு இம்பார்ட்டன் மீட்டிங் இருக்கு. இனி நா அதிகமா வேல பாக்கனும். ஒன்னுக்கு ரெண்டு பிள்ள குட்டியா பெருத்துடுச்சி. சோ கார்டு வெர்க் பண்ணாத்தா அம்பானிய அடிச்சி தூக்க முடியும். " என்றவன் தன் மடிக்கணினியில் எதையே நோண்டிக் கொண்டே பேசினான். அவனின் பேச்சிற்கு பதில் வராததால்,


'பையெ பயந்துட்டான். நேரா காரு என்னோட ஆஃபிஸ்க்கு முன்னாடி தா நிக்கும். ' என மிதப்புடன் அமர்ந்திருக்க, கார் நின்றது. அதிலிருந்து இறங்கியவன்.


"டேய், எங்கடா கூட்டீட்டு வந்திருக்க. ஐய்யோ. உன்ன நா என்ன செய்யச் சொன்னேன். நீ என்ன பண்ணிட்டு இருக்க. ச்ச. எடு கார. எனக்கு லேட் ஆகுது. " எனக் காரில் மீண்டும் அமர்ந்து கொள்ள, ரிஷி அவனின் கையில் சில நூறு ரூபாய் தாள்களைத் தினித்தான்.


" பஸ்ல போன டயம் வேஸ்ட் ஆகும். பெட்டர் ஆட்டோல போய்டு. மீதி காச உன்னோட கேபின்னுக்கு வந்து வாங்கிக்கிறேன். " என்று சொல்லித் திரும்பி நடக்க,


"குடுத்தது முன்னூறு ரூபா. அதுல மீதி காசு கேக்குறான் பாரேன் பிஸ்னாரி பையெ. டார்லிங். சொல்லு டார்லிங் உன்னோட பாவாட்ட. " எனக் கத்த, ஹரிணியின் காதில் ஏறவில்லை. எனவே கௌதம் இறங்கி விட்டான் காரை விட்டு.


"எதுக்கு பாவா என்ன இங்க கூட்டீட்டு வந்திருக்க. " 


" அன்னை காப்பகத்துல இருக்குற குழந்தைங்க சிலர இங்க வச்சி தா பாத்துக்கிறாங்க. அவங்க எப்படி இருக்காங்கன்னு நீ பாக்கணும்னு தோனுச்சி. வா. " என உள்ளே அழைத்துச் சென்றான் ரிஷி.


அன்னை காப்பகத்தில் அவள் கண்டது கடுகு என்பது போல் இருந்தது ஹரிணிக்கு. நல்ல மனவளர்ச்சியுடன் பிறக்க வேண்டிய குழந்தைகளை வேண்டுமென்றே மருந்து மாத்திரைகளின் உதவியுடன் மாற்றி உள்ளனர் அவர்களின் தேவைக்காக. அனைத்தும் பத்து வயது கூட நிரம்பாத குழந்தைகள். வாயில் எச்சில் ஒழுக… ஈ. எனச் சிரித்தபடி, சுவாதினம் இல்லாமல், உணவு எடுத்து உண்ண முடியாமல், இயற்கை உபாதைகளுக்குச் சிரமப்படும் அவர்களைப் பார்க்கையில் அவளுக்கு வேதனையில் மனம் கொதித்தது.


இவர்கள் அனைவரும் வேண்டுமென்றே இவ்வாறு பிறக்க வைக்கப் பட்டுள்ளனர் என்பது தான் அந்த வேதனை. உள்ளுக்குள் இருக்கும் உறுப்புகளுக்காக வளர்க்கப்பட்ட மனிதர்கள் என்று நினைக்கும் போதே கண்ணில் நீர் சுரக்க, அதை துடைக்க கூடச் செய்யாமல் அச்சிறுவர்களை பார்த்தாள்.


சந்திரபோஸை பற்றி உலகிற்கு தெரிந்ததால் பலர் தங்களின் குழந்தைகளைத் தங்களுடன் அழைத்துச் சென்றாலும், சிலர் கைவிட்டு விட்டே சென்றனர். பெற்றோர் இல்லாத அவர்களை அரசு காப்பத்தில் வைத்து இப்போதைக்கு பாதுகாக்கின்றனர்.


அடைத்து வளர்த்தால் மிருங்கள் கூடக் கொடுரமாக மாறி விடும். அதே போல் தான் இந்தக் குழந்தைங்களும் மாறி இருந்தனர். யாரின் பேச்சையும் கேட்பதில்லை. கண்டித்தால் எதையாவது தூக்கி போட்டு அவர்களின் மண்டையை உடைத்து விடுகின்றனர். அவர்களுக்கு வேண்டிய அனைத்தும் ஆரம்பமாகவும் தேவைக்கு அதிகமாகவும் இதற்கு முன் கிடைத்ததால். இப்போதும் அது வேண்டும் என அவர்கள் பிடிவாதம் பிடிப்பதை பார்க்க முடிந்தது ஹரிணியால். இயற்கையாக இருக்க வேண்டிய ஒன்றை தங்களின் சுய லாபத்திற்காக மாறி உள்ளனர்.


அவை அனைத்திற்கும் மேலாக சுருதி. அவளின் உயிரை காப்பாற்றியாயிற்று. ஆனால் மனநிலை அது பயங்கறமாக பாதிக்கப்பட்டு இருந்தது. யார் அருகில் வந்தாலும் பயந்து அடிக்கும் அளவுக்கு பைத்தியமாக மாறி இருந்தாள். உடல் மெலிந்து, கண்களில் ஒளி இன்றி எங்கேயோ வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தவளையும் அவளை தன் உயிராக நினைத்து இப்போதும் காதல் செய்யும் மணிராமை காண்கையில், சந்திரபோஸ்ஸை தன் கைகளாலேயே கொல்லும் அளவுக்கு கோபம் வந்தது ஹரிணிக்கு.


விடாமல் கண்ணீர் வடிந்த அவளின் கன்னங்களை துடைத்தவன். " இவங்க எல்லாரும் சந்திரபோஸ்கிற ஒருத்தனால பாதிக்கப்பட சிலரோட நிலம. ஆனா இன்னும் இருக்காங்க. இதெல்லாம் தாங்குற அளவுக்கு என்னோட கிட் மனசு பலமானது இல்லை. அது ரொம்ப மென்மையானது. யாருன்னே தெரியாம ரோட்டுல அடிபட்ட பையன கண்ணீரோட தூக்கிட்டு போய், அவெ குணமாகுற வர கூடவே இருக்குற அந்த மனசு காயப்பட கூடாது கிட்.


ஆனாலும் உங்கிட்ட எதையும் நா மறைக்க விரும்பல. நாங்க அந்த போஸ்ஸா. " என்பதற்குள் ஹரிணி ரிஷியின் இதழை மூடி வேண்டாம் என்பது போல் தலையசைத்தாள்.


" எனக்கு தெரிய வேண்டிய விசயம்னா. நீயே சொல்லிருப்ப. நீ சொல்லலன்னா அது எனக்கு தேவையில்லாதது. அந்த சந்திரபோஸ் இறந்துட்டான்னு நினைக்கும் போது இப்ப நிம்மதியாவும் சந்தேகமாவும் இருக்கு பாவா. " என்க. ரிஷி புன்னகையுடன் அவளை அழைத்துச் சென்றான்.


'நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா கொல நல்லது தாங்க. ' கௌதமோட மைண்ட் வாய்ஸ்.


'அப்ப அந்த கொடுமக்காரனுங்க உடம்புல இருந்து எப்படி உயிர எடுத்தானுங்கன்னு சொல்ல மாட்டனுங்க போலயே. உங்களுக்கு எதாவது ஐடியா இருக்கா. அந்த போஸ் எப்படி இறந்திருப்பான்னு. ம். இருந்தா கமெண்ட்ல சொல்லுங்க. அடுத்த அத்தியாயத்தோட கதைய முடிச்சிடலாம்னு இருக்கேன். இவ்ளோ தூரம் இந்த கதை கூடவே

பயணம் செய்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல. கதைய பத்தியும் உங்களோட விமர்சனங்கள கமெண்ட் ஃபாக்ஸ் மறக்காம சொல்லிடுங்க ப்ளிஸ்.'


தொடரும் ...

கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி  




கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...