அத்தியாயம்: 53
" பீச்சுக்கு வந்தா காதலும் வளரும் காதலர்களும் வளர்வாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன். ஆனா எனக்கு மட்டும் ஏ பீச்சுல சுண்டல் வாங்கி சாப்டாலும் காதல் மட்டும் டெவலப் ஆக மாட்டேங்கிது. ஏ?. யார் செஞ்ச சூனியம் இது?. ம். ப்ளிஸ் யாராது எனக்குக் காதல் செய்வது எப்படின்னு கத்து தர்றிங்களா. தகுந்த சன்மானம் தர்றேங்க." மனோ.
பாவம் துண்டு கூட விரிக்காமல் யாசகம் வேண்டிக் கொண்டு இருக்கிறான். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை. பவதாரிணியின் நண்பியாகத் தான் சங்கீதா அறிமுகமானாள். விக்னேஷ் பவதா திருமணத்தின்போது சங்கீதாவின் ஓரவிழி பார்வையை உணர்ந்தாலும். 'நாங்கள்ளாம் யாரு. பாத்ததும் விழுந்திடுவோமாக்கும். ' என அவளைக் கண்டு கொள்ளாமல் சுற்றிக் கொண்டு இருந்தான்.
ஆனால் திடீர் ஞானோதயமாக ஊட்டியிலிருந்து வந்தபோது அவனுக்கும் கல்யாணம் செய்து செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது. எனவே பெண் தேடி நேரத்தை வீணடிக்காமல் கடைக்கண் பார்வை வீசும் சங்கீதாவை காதலிக்கலாமென நினைத்தான். அதுமட்டுமல்ல ரஜினி ஸார் ஒரு படத்துல சொல்லிருப்பாரு. ' நாம விரும்புற பொண்ணு விட நம்மல விரும்புற பொண்ணு கிடைச்சா வாழ்க்க சந்தோஷமா இருக்கும்.'ன்னு.
அதுனால மனோவ லைக் பண்ற சங்கீதாவ லவ் பண்ணலாம்னு முடிவு பண்ணி நேற்று ஒரு க்ரீடிங் கார்டை வாங்கிருக்கான். யாரோ எழுதி வைச்சிருந்த கவிதைக்குக் கீழ தன்னோட பெயரை போட்டுச் சங்கீதாவிடம் நீட்டியுள்ளான்.
அவன் தன்னை திரும்பி பார்க்கமாட்டானா என ஏங்கியிருந்த அவளுக்கு மனோ கார்டை நீட்டவும் வாங்கி கொண்டு வெட்க புன்னகை சிந்திக் கொண்டு நின்றாள். ஆனா இந்தப் பவதா இருக்காளே பவதா, சங்கீதாவிடம் எதுவோ சொல்ல, வெட்கம் வெறுப்பாக மாறிப் புன்னகை கோபமாக மாறி அவனை முறைத்து பார்த்தபடி. க்ரீட்டிங் கார்டை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள்.
அந்தக் கோபத்திற்கு என்ன அர்த்தம். காதல் கவிதை வேலை செய்ததா இல்லை வேறு வழியில் காதலை சொல்ல வேண்டுமா எனத் தெரியாது நேற்று முழுவதும் குழம்பிபோய் இருந்தவன், இனி கவிதைய நம்பாம தன்னோட லவ் வ அவளோட கண்ண பாத்து சொல்லிடலாம்னு பார்க்க வந்தா. ஹரிணி அவளை அழைத்துக் கொண்டு வந்து விட்டாள்.
சரி கடல் இருக்கு, அதுல கரையும் இருக்கு, நிழல் கொடுக்க சில போட்டும் இருக்கு, நாம ரெண்டு பேரும் அதுக்கு கீழ உக்காந்து ஒரு நல்ல முடிவு எடுப்போமேன்னு தனியா தள்ளிட்டும் வந்தான்.
யாரோட டிஸ்டபென்ஸ்ஸும் கிடையாது. அவர்கள் மட்டுமே இருந்தனர்.
தனியாகப் பேச வேண்டும் என்றபோது இருந்த தைரியம், தனிமை கிடைத்தபின் இல்லை. வெகுநேரமாக மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டு இருக்கிறான். ஆனால் வார்த்தைகள் தான் வாயைத் திறந்து வருவதாக இல்லை.
" அது வந்து... சங்கு... நா. " எனத் தொடங்கும் முன் கை நீட்டிப் போதும் என்றாள் அவள்.
' நா இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே. அதுக்குள்ள போதும்னா என்ன அர்த்தம். ' என்பது போல் முழித்தவனிடம்.
" ஒரு பொண்ணே வெக்கத்த விட்டு உங்கள நிமிர்ந்து பாக்குறாளேன்னு உங்களுக்கு இளக்காரமா இருக்குல்ல. அதா என்ன வெயிட்டிங் லிஸ்ல வச்சிருக்கிங்க. உங்க கிட்ட இருந்து நா இத எதிர்பாக்கல. " என்றவளின் குரலில் வருத்தமும் வலியும் இருந்தது.
" அப்படி இல்ல சங்கீதா. எனக்கு உன்ன பிடிக்கும். பட் நீ படிக்கிற பொண்ணு. உன்ன எந்த வகையும் நா டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு தா. " என்றவன் அவள் முறைக்குவும் அமைதியாகி விட்டான்.
" பவதா சொன்னா உங்கள பத்தி அப்பக் கூட நா நம்பல. இப்ப ஹரிணியும் சொல்றாங்க. எனக்கு எவ்ளோ அசிங்கமா இருக்குன்னு தெரியுமா. உங்கள போய் லவ் பண்ணேன்னு. ச்ச... " என்றவள் நடந்து செல்ல,
"என்ன கொடும டா இது. தொல்லைகள விட்டுப் பத்தடி தூரம் தள்ளி வந்தாச்சி பத்து நிமிஷம் பேசலாம்னு பாத்தா. அதுக ரெண்டும் சேந்து என்னோட வாழ்க்கைல படு மட்டமா விளையாண்டு வைச்சிருக்குங்க. இதுகல அப்றம் பாத்துக்குறேன். இப்ப முதல் சங்குவ சமாதானம் செய்யணும். சங்கு... சங்கு. " எனக் கத்தியபடி பின்னே சென்றான்.
அவள் பவதாவுடன் நின்று எதுவோ சொல்லிவிட்டு திரும்பி இவனே முறைத்துவிட்டு சென்றாள்.
" பவதா என்ன சொன்னா. "
"இனிமே நீங்க இருக்குற பக்கம் அவா வரமாட்டாலாம். உங்ககூட இருக்குறமாறி இடத்துக்குக் கூப்பிடாதன்னு கோபமா சொல்லிட்டு போறா. என்னண்ணா ஆச்சி. " என அப்ராணி போல் முகம் வைத்துக் கொண்டு கேட்க, அவளை ஏற இறங்க பார்த்தவன், விக்னேஷிற்கு கால் செய்து,
" மச்சான் இனி உனக்கும் எனக்கும் பக பகா தா. நம்ம ஃப்ரெண்ட்ஸிப் இப்பவே பனி பாறைல மோதி முழ்கி போச்சி. பை. இனி எங்கூட பேசாத. " எனக் கண்டபடி திட்ட, பவதாவும் ஹரிணியும் சிரித்தனர். மனோகர் கோபமாக நடக்க ஹரிணி அவன் பின்னாலேயே சென்றாள்.
பாசம்னு நினைக்க வேண்டாம். கார பார்க் பண்ணிட்டு வந்தப்ப சாவிய அவெங்கிட்ட கொடுத்துட்டா. இப்ப இவெ கோயிச்சிட்டு போய்ட்டா கார் சாவிய யாரு தருவா. அதா சாவிய கொடுத்துட்டு போன்னு சொல்ல, மனோகர் ஹரிணியை திட்டிக் கொண்டு இருந்தான்.
" உன்ன நண்பியா மதிச்சதுக்கு எனக்கு நல்லா பண்ணிட்டம்மா நீ. என்ன சொல்லணும். " எனத் திட்ட, ஒரு பைக் வந்து நின்றது. தலையில் இருந்த ஹெல்மெட்டை கலட்டி விட்டு இவர்களை நோக்கி வந்தான் விக்னேஷ்.
" என்னடா உனக்குப் பிரச்சன. ஏ ஃபோன்ல பேசாம பத்தூருக்கு கேக்குற மாறிக் கத்துற. " என்றான் அவன்.
" பிரச்சன. அது பவதாவால வந்தது. இதோ புதுசா நம்ம கூட்டத்துக்குள்ள சேத்திருக்கோமே ஹரிணி, இவளால வந்தது. அறுத பழசான உன்னமாறி நண்பனால வந்தது. "
" ம்ச்… என்னாச்சி டா. விசயத்த நேரா சொல்லு. லூசு மாறிப் பேசாம." விக்னேஷ்.
" யாரு நா லூசா. சரிதா. சங்கீதாவ பத்தி நா உங்கிட்ட முந்தானேத்து என்னடா சொன்னேன். "
" ஓ... அதுவா. 'நா அவள காதலிக்கிறேங்கிறத கண்டு பிடிச்சிட்டேன். கார்ட்டு குடுத்து கரெக்ட் பண்ண போறே'ன்னு சொன்ன. நாங்கூட எங்கண்ணே கடைல இருந்து ஓசிக்கி க்ரீடிங் கார்டு எடுத்துக் குடுத்தேனே. குடுத்தியா அவகிட்ட. "
" குடுத்தாச்சி குடுத்தாச்சி. அதுக்கு அப்றம் என்ன நடந்துன்னு உனக்குத் தெரியுமா. "
" எனக்கு எப்படி டா தெரியும். ஒரு சீசீடீவி கேமராக்கு கீழ நின்னு உன்னோட லவ் சொல்லிருந்தேன்னா, காட்ரோல் ரூம்ல இருந்து ஈசியா பாத்திருப்பேன். காலேஜ்குள்ள வச்சி சொல்லிட்டு பாத்துயான்னு கேக்குற. ஏ கார்ட்ட கிழிச்சி மூஞ்சி மேலையே வீசிட்டாளா. " என ஆர்வமாக விக்னேஷ் கேட்டான்.
" அது மட்டும் தா நடக்கல. அதா நீ வந்துட்டியே. ஐடியா குடுக்க. "
" என்னாச்சி டா. "
" அவா கோபமா முறைச்சி பாத்துட்டே போய்ட்டா டா."
" ஏ. "
" எனக்கு எப்படி தெரியும் பவதா தா எதுவுவோ சொன்னா சங்கீ காதுல. என்னன்னு வந்து கேளு. " என அழைக்க,
" போலிஸ்காரனுக்கு இன்னொரு போலிஸ் காரனே விசாரிக்க வேண்டி இருக்கப்பா. " என ஹரிணி கேலி செய்ய, விக்னேஷ் மணலில் விளையாடிக் கொண்டிருந்த பவதாவின் அருகில் வந்து நின்றான்.
" என்ன சொன்ன பவதா சங்கீதா கிட்ட. "
" நா ஒன்னும் சொல்லலயே. " என்க.
" இதோ பாரு பொய் சொல் கூடாது. அப்றம் பரிச்சைல பெயில் ஆகுடுவ. என்ன பத்தி நீ அவா கிட்ட எதுவும் சொல்லலயா. நா ஊர்ல பார்பி பின்னாடி சுத்துனது. சங்கீதாவ வேண்டாம்னு விளையாட்டுக்குச் சொன்னதுன்னு ஊட்டில நடந்த அத்தனையையும் அவகிட்ட நீ மணிக்கணக்குல உக்காந்து பேசல. "
" இல்ல." என்க.
' அப்றம் எதுக்கு கோபமா போனா.' என ஆண்கள் இருவரும் யோசிக்க.
" மணிக்கணக்குலலாம் பேசல. ஜஸ்ட் ஐஞ்சே ஐஞ்சு செக்கேண்ட் தா உங்கள பத்தி பேசுனேன். அதுவும் நாலு வார்த்த தா. " பவதா.
" போதுமே. இது போதுமே மனோ யாரு என்னன்னு தெரிஞ்சிக்க. " என ஹரிணி கேலியாகச் சொல்ல,
"மச்சான் பாரு மச்சான். " என மனோ பொங்கினான்.
" அப்படி என்ன தா சொன்ன. "
" நீ மனோ அண்ணனுக்காகக் காத்திருக்காத அவருக்கு ஒரு பார்பி டால் கிடைச்சிருச்சின்னும், நீ அவருக்கு ஒரு ஸ்டெப்னி மாறின்னும், யாருமே கிடைக்கலான்னா உன்ன யூஸ் பண்ணிக்கலாம்னு இருக்காதுன்னு சொன்னேன். அவ்ளோ தா. உடனே அவளுக்குக் கோபம் வந்துடுச்சி. அதா போய்ட்டா."
" பாத்தியா மச்சான். உண்மைய அப்படியே புட்டு புட்டு வச்சிருக்கா. உன்ன.. " எனப் பேச்சை முடிக்கும் முன் அவனுக்கு ஃபோன் வந்தது. அழைத்தது கௌதம்.
" டேய் மனோகரு. உ ஆளுல கூட்டீட்டு வந்தா திரும்பிப் பத்திரமா வீட்டுல விடனும்னு தெரியாதாடா. காலம் கெட்டு கெடக்கு அந்தப் புள்ள நா தனியா போய்கிறேனு ஒத்த கால்ல யாருமே இல்லாத பஸ்ஸுக்கு ஸ்டாப்ல நிக்கிறா. என்ன ஆளுடா நீ. " என்க.
" என்ன பாஸ் சொல்றிங்க இன்னமும் சங்கீதா பஸ் ஸ்டாப்ல தா நிக்கிறாளா. " என ஆர்வமாகக் கேட்க,
"ஆமாண்டா. " என்க.
" பாஸ். எப்படியாது அவள பஸ்ஸோ இல்ல ஆட்டோவோ ஏற விட்டுடாதிங்க. இதோ வந்துட்டேன்." என்றபடி விக்னேஷின் பைக் சாவியை வாங்கிக் கொண்டு ஓடினான். ஓடிய அவனை பார்த்துப் பெண்கள் சிரிக்க, விக்னேஷ் தன் நண்பனுக்காகப் பேசினான்.
" விக்கி, அந்தப் பொண்ணு மனோ கூட விளையாடுது. இப்ப எங்கிட்ட அத தா சொல்லிட்டு போச்சி. ' எத்தன நாள் என்ன கண்டுக்காம சுத்தல் விட்டாரு. இப்ப நா அவர விடப்போறே கண்டுக்காத பவதா. 'ன்னு. உன்னோட ஃப்ரெண்டு காதலுக்கு சீக்கிரம் பச்ச கொடி காட்டுவா அந்தப் பொண்ணு கவலப்படாத. ஹர்ஷா, ஆதி வாங்க கௌதம் வர்றதுக்குள்ள உங்களோட கெட்டப்ப மாத்திடுவோம். " என அந்த ஹோட்டலில் ஒரு அறை எடுத்து மண்ணில் விளையாடிய குழந்தைகளைக் குளிக்க ஊத்தி உடை மாற்றி அழைத்துச் சென்றாள்.
கடற்கரையை பார்த்ததும் பவதாவிற்கு விக்னேஷ் அவனின் காதலை தன்னிடம் கூறியது நினைவு வர, முகம் சிவக்க கணவனை வெட்க புன்னகையுடன் பார்த்தாள் அவள்.
" பாப்பாக்கு நியாபகம் வந்துடுச்சி போலயே. ம்… " எனக் கண் சிமிட்டினான் அந்த காவலன்.
" உங்கூட இருந்த ஒவ்வொரு நிமிஷமும். அப்போ நீ பேசுற ஒவ்வொரு வார்த்தையும் எனக்குள்ள பொக்கிஷமாகச் சேத்து வச்சிருக்கேன் விக்னேஷ். எப்படி அத மறப்பேன். " என்க.
" அப்ப நீ மறக்கல. " என்றவனின் பார்வை மனைவியைக் காதலுடன் வருட,
"ம். " என்றவள் முகம் திரும்பிக் கொண்டாள், ஆடவனின் முகம் பார்க்க நானி.
" சரி அப்ப நா உங்கிட்ட உங்க காதலிக்கிறேன்னு சொன்னேன். பதிலே சொல்லாம போய்ட்ட. இப்ப சொல்லலாம்ல. அதே பீச். அதே நா. அதே நீ. ம். " என்க, சிவந்திருந்த தன் முகத்தை அவனுக்குக் காட்டாது நிலம் பார்த்து நின்றவளின் முன் வந்து. அவளின் கன்னத்தைக் கரங்களில் தாங்கி, அவளின் மதி முகம் உயர்த்தி, தன்னை போதை கொள்ளச் செய்யும் அவளின் நயனங்களை பார்த்துக் கேட்க, பெண்ணவன் என்ன செய்வாள்.
காதலுடன் கூடிய கணவனின் அன்பு, காண கிடைக்காத அறிய வைரம். அந்த வைரம் தன் முன்னே நின்று காதலை வேண்டுகிறது என்ற உணர்வு பெண்ணவளுக்கு பேரனந்தத்தை தந்தது. திடீரெனக் கால்கள் உடலைத் தாங்கும் வலிமையை இழந்து விட்டதை போல் உணர்ந்தவள் தன் உடலைத் தாங்கும் பொறுப்பைக் கணவனிடம் கொடுத்து, அவனின் மார்பில் சாந்து கொண்டாள்.
" அப்பப் பதில் வராது. மயக்கம் தா வரும். சரியா பாப்பா. " என்க.
" இல்ல. வார்த்தையும் வரும். ஐ லவ் யூ விக்னேஷ். இன்னைக்கி மாறியே நா உன்ன என்னையும் காதலைச்சிட்டே இருக்குணும். ஐ லவ் வெரி மச். " என அவனின் கன்னத்தில் முத்தமிட,
" கல்யாணம் முடிச்சி ஆறு மாசம் ஆகியும் உனக்கு இன்னும் சரியா கிஸ் பண்ண தெரியலயே பாப்பா. " என வருத்தம் கொள்ள,
" அப்ப நீ சரியா சொல்லிக் குடுக்கலன்னு தான அர்த்தம். " எனக் கள்ளச் சிரிப்பு சிரித்தாள் அவனின் மனையாள்.
" ஏய். யார பாத்து. இரு உன்ன. " என்றவன் காதல் பாடம் நடத்தும் ஆசானாக மாறி விட்டான்.
_________________
"ம் இப்ப தா நீ பாக்கா அழகா இருக்க. " என ஆதிக்கி உடைமாற்றி தலை சீவி விட்டாள் ஹரிணி.
" அத்த அகிக்கி டிரெஸ் எங்க. " பாத்ரூமிலிருந்து ஹர்ஷா எட்டி பார்த்துக் கேட்டான்.
" அது... இந்தா இருக்கு. ம். இத நீ மாத்திக்க. நைட் எங்கூட தூங்குறியா. இல்ல உங்க அம்மா கூட. " எனத் தன் இல்லத்திற்கு அழைக்க,
" இல்ல அத்த. அம்மாக்கு நா கூட இல்லன்னா தூக்கம் வராதுன்னு சொல்லுவாங்க. நா அம்மா வீட்டுக்கே போறேன். " எனப் புன்னகைத்தான் ஹர்ஷா.
" வாங்க சீக்கிரம். நா டின்னருக்கு டேபிள் புக் பண்ணிருக்கேன். உன்னோட அம்மாவும் மாமாவும் வந்திருப்பாங்க. " என ரெஸ்டாரெண்ட்டுக்கு சிறுவர்களை அழைத்து வந்தாள். அங்கே அவள் சொன்னது போல் கௌதம், இந்து, பவியும் அமர்ந்திருந்தனர்.
சம்பத்தும் ரிஷியும் நடந்து கொண்டிருக்கும் கட்டுமான வேலைகளைப் பார்த்து முடித்து விட்டு வருவதாகச் சொல்லி இருந்தனர்.
" விக்கி இங்க. " எனக் கை அசைத்தாள் ஹரிணி, பவதா மற்றும் விக்னேஷின் வருகையைப் பார்த்து.
ஆர்டர் செய்ய உணவு வரவும் ரிஷியும் சம்பத்தும் வரவும் சரியாக இருந்தது. வந்து இருவரும் அமைதியாகவே இருந்தனர். கோபம் போலும். யாரின் மீது?. இருவருக்குமேவா?. ஆம். இருவருக்குமே தான். முதலில் வாயைத் திறந்தது சம்பத்.
" என்ன ராணிம்மா இதெல்லாம் கண்ஸ்ட்ரெக்ஷன் ஒர்க் நடக்குற இடத்துல நீங்க வர்றதே தப்பு இதுல குழந்தைங்கள வேற கூட்டீட்டு வர்றீங்க. உங்களுக்கு வேணும்னா பயம் இல்லாம இருக்கலாம். ஆனா எங்களுக்கு இருக்கு. இனி இந்த மாறி இடத்துக்கு வராதீங்க. " சம்பத். சற்று கடுமையாகவே இதைச் சொன்னான். ரிஷிக்கும் அதே எண்ணம் தான். அவன் பார்வையாலேயே மனைவியை முறைத்துக் கொண்டு இருந்தான்.
" ஸாரி ராகவ் அண்ணா. இனி அப்படி பண்ண மாட்டேன். " என்றவளின் குரல் உடைந்திருந்தது. ஏனெனில் சம்பத் அவளிடம் கடுமையாகப் பேசவே மாட்டான். இன்று முன்னறிவிப்பு ஏதுமின்றி கட்டுமானம் நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளாள். கம்பி செங்கல் என நடக்கவே முடியாதபடி போட்டு வைத்திருந்த இடத்திற்கு ஹரிணி குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்தது ஏற்க கூடியதாக இல்லை. ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால், அதான் கோபம்.
"உங்க பேச்ச நம்புறேன் ராணிம்மா. நம்புறத தவிர வேற விழியே இல்ல. ஒவ்வொரு முறையும் வயித்துல பிள்ளையோட நீங்கக் காட்டுற வீர தீரச் சாகசத்த பாத்து பாராட்டுற அளவுக்கு நா ஒன்னும் சீர்திருத்தவாதி இல்ல. சாதாரண மனுஷன் தா. " என்றவன் குரலில் கடுமை குறையவே இல்லை. கனிவு இல்லை. அதைக் கேட்ட ஹரிணியின் முகம் வாடியது. கூடவே கண்ணீரும் சுரந்து விழியோரம் உருண்டு நின்றது.
" மச்சான் விடேன். எதாவது முக்கியமான விசயமா இருக்கும். அதா ஃபோன்ல பேசாமா நேர்ல வந்திருப்பா. என்ன டார்லிங் சரியா. " எனக் கௌதம் கேட்க, அவள் முழித்தாள்.
"ஓ... அப்படி என்ன முக்கியமான விசயம். ம்... எதுக்காக வந்தீங்க. என்ன தெரியணும் உங்களுக்கு. " என மிரட்ட,
"மச்சி காம் டவுன். விடு. வீட்டுல பேசிக்கலாம். " ரிஷி. மனைவி எதற்காக இங்கு வந்தாள் என்று அவனுக்குத் தெரியாதா என்ன.!!
" நீ சும்மா இரு மாப்ள. என்ன வேணும் ராணிம்மா உங்களுக்கு. அந்தக் கிரிமினல் எப்படி செத்தான்னு தான தெரியணும். அதுக்கு தான இங்க வந்திங்க.
ஒரு விசயத்த உங்ககிட்ட சொல்லாம விடுறோம்னா அது உங்க மனச காயப்படுத்துங்கிறதுனால தா. மத்தபடி சொல்லக் கூடாதுன்னு எதுவுமே இல்ல.
அதுனால தா அவெ சொல்ல. உங்களுக்காகத் தா. அது ஏ ராணிம்மா உங்களுக்குப் புரியல. எந்த விதத்துலையும் உங்க மனசு நோகக்கூடாதுன்னு பாத்து பாத்து பண்றான். அத கூடப் புரிஞ்சிக்காம சின்ன சின்ன வியசத்துல பிடிவாதம் பிடிச்சி இப்படி நடந்துக்கிறது தப்பு.
அந்தக் கிரிமினல்ஸ எப்படி செத்தான்னு தெரிஞ்சி நீங்க என்ன பண்ண போறிங்க. ம்... இவெங்கூட தேவயில்லாம மறுபடியும் சண்ட தான போடுவிங்க. ஏதோ புண்ணியம் பண்ண மாகன்கள கொல பண்ணிட்ட மாறி வெட்டிச் சண்ட போடுவீங்க. எதுக்கு ராணிம்மா இதெல்லாம். " எனச் சற்று கடுமையாகப் பேச, ஹரிணி அமைதியாகி விட்டாள். வீடு திரும்பும் வரை பேசவே இல்லை. பவதாவிற்கு ஹரிணியை பார்க்கவே பாவமாக இருந்தது. அவளின் கரத்தை இறுக பற்றிக் கண்களால் ஆறுதல் சொன்னான் கௌதம்.
ஏனோ அவளையும் அறியாமல் கண்ணீர் நீர் கோர்த்தது. சம்பத்தின் பேச்சைக் காட்டிலும் அவனின் கோபமான முகம் தான் அவளை அதிகம் பாதித்தது. அதான் கண்ணீர்.
ஒருவகையில் சம்பத் சொல்வதும் சரியே. அந்த மூவரும் எப்படி இறந்தனர் என்று தெரிந்தால் அது ஹரிணியின் மனதை பாதிக்கும். ஏனெனில் ஒருவரின் மரணத்தை ஏற்கும் அளவுக்கு உறுதியானது இல்லை அவளின் மனம் மிகவும் மெல்லியது.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..