அத்தியாயம்: 52
கல்லூரி வளாகம்.
அடைத்து வைத்திருந்த பட்டாம் பூச்சிகள் அனைத்தும் சிறகடித்து பறப்பது போல், அத்தனை நேரம் பாடம் படித்த மாணவர்கள் சந்தோஷமாக வெளியே வந்து கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் ஒரு பட்டாம்பூச்சி தான் பவதாரிணி. கூட அவளோட தோஸ்த், நண்பி, சங்கீதா.
ரெண்டு பேரும் ரொம்ப நேரமா மூழ்கிக் கிட்டு இருக்குற சட்டத்த எப்படி காப்பாத்துறது. கயிற தூக்கி போட்டா இல்ல காத்தடிச்ச ரப்பர் டியூப்ப தூக்கி போட்டா என டிஸ்கஸ் செய்து கொண்டே நடந்து வந்தனர். ஏனெனில் அவங்களுக்கு நீச்சல் தெரியாது. அதுனால சட்டத்த நீந்திக் காப்பாத்த முடியாதுங்கிறதுக்காக ரொம்ப டீப்பா ஆலோசனை செஞ்சிட்டு இருக்காங்க.
தனக்கு முன்னே பின்னே யார் வருகிறார்கள் என்று கவனியாது நடந்து வந்த அவர்களை இடிப்பது போல் வந்து நின்றது ஒரு ஆடிக் கார். சிவப்பு கலர்.
'அட நம்ம கௌதம் அண்ணாவோடது. ' என சந்தோஷமாகக் காரில் அருகே சென்று கண்ணாடி வழியே உற்று பார்க்க,
" என்ன அண்ணாக்கு நீளமா முடிவளந்துடுச்சி.. சுடிதார்லாம் போட்டிருக்காரு. ச்சீ இது அந்தப் பஜாரி ஹரிணில்ல. இவா எங்க இங்க. ஏ இவளுக்கு இந்தக் கொல வெறி. போலிஸ் காரே பொண்டாட்டிய கொல்ல பாக்குறியே. நியாயமா இது. " என கேள்விகளைத் தாங்கியபடி ஹரிணியின் அருகில் வர, ஹரிணி கீழே இறங்கினாள். அவளிடம் சண்டைக்கி தயாராகும் முன், உள்ளிருந்து மழலையர் மொழி கேட்டது.
" அகி… ஆதி... " என கதவைத் திறந்து உள்ளேநுழைந்து குழந்தைகளைக் கொஞ்ச, முன் சீட்டிலிருந்து அவளை மருண்ட விழியால் ஒரு சிறுவன் பார்த்துக் கொண்டு இருந்தான். பவதா புருவம் சுருக்கி யோசிக்க,
"ஹர்ஷா, உன்னோட சித்திக்கு ஹாய் சொன்னியா. " என ஹரிணி கேட்க, அவன் கையை மட்டும் அசைத்தான்.
ஹர்ஷாவை சம்பத் தத்தெடுத்து ஒரு வாரம் ஆகிறது. காப்பகத்தில் வளர்ந்ததால் இயல்பாகவே தனிமையை விரும்பியானான் அவன். யாரிடமும் பேசாது புன்னகை மட்டுமே சிந்தும் அவனுக்குக் கூச்ச சுபாவம் வேறு உள்ளது. சம்பத் வீட்டிற்கு வந்த இந்த நாளில் பேசிச் சொற்கள் மிகவும் கம்மி. அதனால் தான் பேச்சுப் பயிற்சி கொடுக்க என ஹரிணி அவனை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றுகிறாள். ஹரிணியுடன் இருக்கட்டும் எனப் பவித்ராவும் அனுப்பி உள்ளான்.
" ஹாய் குட்டி. என்னோட பேரு பவதா. இவா என்னோட ஃப்ரண்டு சங்கீதா. " எனத் தன்னை தானே அறிமுகம் செய்து கொண்டு.
" உனக்கு ஐஸ்கிரீம் பிடிக்குமா. என்ன ஃப்ளேவர் வேணும். " என கேட்கச் சிறுவன் ஹரிணியின் வாய் பார்த்தான். எதாவது பேசுவாள் என்று. ஆனால் அவளோ' கேள்வி கேட்டது உன்னத்தா. நீ தா பதில் சொல்லணும். ' என்பது போல் அமைதியாக நிற்க,
" எனக்கு, ஐஸ்கிரீம். பிடிக்காது. " தடுமாறி சிறு வெட்கத்துடன் தயங்கி தயங்கி பேசினான்.
" ஐஸ்கிரீம் பிடிக்காம ஒரு குழந்தையா ஆச்சர்யமா இருக்கே. எனக்கெல்லாம் இப்ப கூட யாரும் ஐஸ்கிரீம் வேணுமான்னு கேட்டா. நோன்னு சொல்லவே மாட்டேன்." சங்கீதா.
" அப்ப வேறென்ன செல்லம் பிடிக்கும் உங்களுக்கு. சொல்லுங்க. எதுவா இருந்தாலும் சித்தி உனக்குத் தர்றேன். ம். " என அவனின் சிகையை விரலால் கலைக்க,
" எதுவும்… வேண்டாம். " என்றான் சிறுவன்.
" என்ன ஹரிணி எங்க கூடல்லாம் பேசக் கூடாதுன்னு மிரட்டி வச்சிருக்கிங்களா. " என கேலியாகக் கேட்டாள் சங்கீதா.
ஹரிணி பவதாவின் நண்பர்களுக்கு நண்பி ஆவாள். பவதா அனைத்தையும் அவளின் நண்பர்களுடன் பகிர்ந்திருந்தாள். அதுமட்டுமல்ல ஹரிணி சென்னைக்கு வந்ததும் முதலில் சென்ற இடம் விக்னேஷின் வீடு தான்.
அவன் குடும்பத்தில் ஒருத்தியாக ஐக்கியமாகி விட்டவள். வாரம் ஒரு நாள் எனச் சமையல் கற்றுத்தர பவதாவுடன் டீல் பேசி உள்ளாள். எனவே வாரத்தின் ஒவ்வொரு ஞாயிறும் விக்னேஷ் வீட்டில் தான். அங்குச் சென்று விக்னேஷின் தாய் தந்தை அண்ணன் அண்ணி. அவர்களின் மகள் என பொழுதைக் கழிப்பாள். அவன் மட்டுமல்ல கௌதமும் இந்துவும் அவ்வபோது வந்து செல்வர். ரிஷி தினமும் பவதாவுடன் ஃபோனில் பேசிக் கொண்டு தான் இருக்கிறான்.
" ம்… சங்கீதா நீயும் ஏறு. நானும் பவதாவும் ஹோட்டல் போகப் போறோம். நீயும் வந்து எங்க கூட ஜாயின் பண்ணிக்க. " என அழைக்க,
" எது ஹோட்டலுக்கா. நோ… நெவர்… முடியாது. இன்னைக்கி நா அத்த கூடக் கோயிலுக்கு வர்றதா சொன்னேன். லேட்டா போனா பாவம் செய்து அவங்க தனியா போவாங்க. உங்கூடலாம் வர முடியாது. " எனக் காரை விட்டு இறங்க சங்கீதாவும் வர மறுத்தாள்.
" அட என்னங்கடா இது. வான்னு கூப்பிட்டா பிகு பண்ணுதுங்க இதுக. நா ஒன்னு உன்ன ஊர் சுத்த கூப்பிடல. உன்னோட அண்ணே ரிஷி அங்க தா கொத்தனார் வேல பாத்துட்டு இருக்காரு. அவர போய்ப் பாத்துட்டு, விக்கியையும் வரச் சொல்லிட்டு, நைட் அங்கேயே எல்லாரும் சேந்து டின்னர் முடிச்சிட்டு போலாம்னு கூப்பிட்டேன். இதுக்கு போய் ஓவராத்தா பண்ற நீ. " என்க. பவதா யோசித்தாள்.
" அந்த ஹோட்டல்ல விளையாடுறதுக்கு நிறைய கேம் இருக்காம். கிட்ஸ் ஜோன்லாம் இருக்குன்னு பாவா சொன்னான். " என ஆசை வார்த்தை பேச, இது போதுமே பவதாவை காரினுள் ஏற்ற.
" பட், என்ன வீட்டுக்குக் கூட்டீட்டு போக மனோ அண்ணா வர்றதா சொன்னாரே. இப்ப நா உங்கூட வந்துட்டு அவரு என்ன தேடுவாறே. "
" ஃபோன்ல சொல்லிக்கலாம். வா பவதா. " சங்கீதா அலட்சியமாக. மனோவின் பெயரைக் கேட்டதால் வந்த அலட்சியம் அது.
"ம்… அதா ஃப்ரெண்ட்டு சம்மதிச்சிட்டாளே வேற என்ன. வா. " எனக் காரில் ஏறி ஸ்டாட் செய்ய, குறுக்கே வந்து விழுந்தான் மனோ இரு கரத்தையும் விரித்தபடி.
" ஸ்டாப் த கார். ஸ்டாபிட். " என்றவன் ஹரிணி எட்டி பார்க்கவும்,
"தங்கச்சிய எங்க கடத்தீட்டு போற. "
" ஹோட்டலுக்கு. "
" அங்க எதுக்கு. "
" அது உனக்கு எதுக்கு. "
" இதோ பாரு என்னோட நண்பன் என்ன நம்பி ஜுப்ப கைல குடுத்து பவதாவ வீட்டுல விடுற பொறுப்ப ஒப்படச்சிருக்கான். இப்ப வெறும் ஜுப்போட போனா என்ன என்ன பண்ணுவான்னு அவனுக்கே தெரியாது. சோ பவதாவ இறக்கி விடு. குறிப்பா பவதா பக்கத்துல உக்காந்திருக்கே, அந்தப் பொண்ண எங்கிட்ட தள்ளிவிட்டுடு நீ போ." எனக் காரில் அமர்ந்திருக்கும் சங்கீதாவை பார்த்தபடியே சொல்ல,
" ஓ... இவா தா உன்னோட வெய்டிங் லிஸ்ட் காதலியா. புரிஞ்சது புரிஞ்சது. ஆமா மனோ உன்னோட தேடுதல் வேட்டை முடிஞ்சது போலவே. யாரும் கிடைக்க மாட்டாங்கன்னு சங்கீக்கு ஓகே சொல்லிட்டியா. " எனக் கேட்க,
' அத ஏ ஊருக்கே கேக்குற மாறிச் சத்தமாக தா கேக்கனுமா. ' என நினைத்து முறைத்தான் அவளை.
" பதில் சொல்லு மனோ. " என அவனின் பார்வையை பொருட்படுத்தாது கேட்க, அவளைப் பக்கத்தில் வருமாறு சைகை செய்தான். ஏனெனில் உள்ளிருப்பவளின் உஷ்ன பார்வை அவனை மிரட்டிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஹரிணி,
" மனோ நா உனக்காகப் பார்பி டால் கிட்ட பேசிருக்கேன். அதுக்குள்ள நீ ஏ அவசரப்பட்டுச் சங்கீதாக்கு ஓகே சொன்ன, இப்ப நீ இல்லாம மடோனாவோட வாழ்க்க என்ன ஆகும். " ஹரிணி வேண்டுமென்றே சத்தமாகப் பேச, அது சங்கீதாவின் உஷ்ணத்தை அதிகப்படுத்தியது.
" ஏய், ஏ இப்படி பொய் பொய்யா சொல்லிட்டு ஊருக்குள்ள சுத்துற. நா எப்ப மடோனாக்கு வாழ்க்கை குடுக்கறேன்னு சொன்னேன். " மனோவும் கத்த, அது சங்கீதாவின் செவியைச் சென்றடையவில்லை.
" ஐய்யோ பார்வையாலயே பொசுக்குறாளே. ஹரிணி, நா வேணும்னா நீ புதுசா ஆரம்பிக்கப் போற கடைக்கி மாமூல் கேட்டு எங்க டிப்பார்மெண்ட் ஆளுங்க யாரும் உன்ன தொள்ள செய்யாத படி பாத்துக்கிறேன். கூடவே கா பைசா செலவில்லாம உன்னோட துணி கடைக்கி மவுண்ட் ரோடுல கட்டவுட் வச்சி விளம்பரம் பண்ணித்தாறேன். ப்ளீஸ். இப்படியொரு தேவையில்லாத வதந்திய பரப்பாத. ஆல்ரெடி நா ரொம்ப கஷ்டத்துல இருக்கேன். மேக்கொண்டு என்ன கஷ்டப்படுத்தாத. " என செண்டிமெண்ட்டாகப் பேச முயன்று கண்ணைக் கசக்க,
" அதுதா கண்ணீர் உனக்கு வரலைல. ஏ சும்மா சும்மா கண்ண பிதுக்கி எடுக்குற. என்னாச்சு உன்னோட லவ்வு. சொல்லு கேட்போம். "
"எங்க நடுரோட்டுலயா. "
"சரி எங்கள ஃபாலோ பண்ணிட்டு வா. பாவா அந்த ஹோட்டல் தா கான்ஸ்டெக்ஷன் வொர்க்ல இருக்கேன்னு சொன்னான். அப்படியே உன்னோட ஃப்ரெண்டுக்கு ஃபோன் போட்டு நா அவெ பொண்டாட்டிய கடத்திட்டேன்னு சொல்லி ஹோட்டலுக்கு வரச் சொல்லு. இன்னைக்கி எப்படியும் அவனுங்க வாய திறக்க வைக்காம விடமாட்டேன். " எனச் சொல்லிச் சென்றாள்.
பின்னே அவளும் எத்தன நாள் தா கேப்பாள் ' அந்தச் சந்திரபோஸ்ஸும், தன்செயனும் என்ன ஆனான்?. அவனுங்களோட பிள்ளைங்கள போலிஸ் அரஸ்ட் பண்ணிடுச்சி. ஆனா இவனுங்க என்ன ஆனானுங்கன்னு தா தெரியல. இவனுங்க செத்துட்டானுங்கன்னு தெரியும். எப்படினு தா தெரிய வேண்டி இருக்கு. எப்படியும் ரிஷியோட வாய்ல இருந்தும் கௌதமோட வாய்ல இருந்தும் வார்த்தைய புடுங்குறது முடியாத காரியமா மாறிடுச்சி. ஏன்னா அண்ணனும் தம்பியும் கூட்டு சேந்துட்டானுங்கள்ள. சோ விக்னேஷ் தா சரியான ஆளு. ஆனா அந்தப் போலிஸ் காரெ கொஞ்சம் பிஸி. ஃபோன்ல கூடப் பேச அவனுக்கு நேரம் கிடைக்கல. அதுனால அவெ பொண்டாட்டிய கூட்டீட்டு போய்ட்டா தேடி வருவான்னு தா ப்ளான் போட்டுக் கூட்டீட்டு போறா. பாக்கலாம் சொல்லு வாய்ங்களான்னு. '
அந்தி சாயும் நேரம் சூரிய அஸ்தமனத்தை கடற்கரையில் நின்று காண்பது மிகவும் அழகாக இருந்தது. வானம் ஆரஞ்சு நிறத்திற்கு மாறி இருந்து. நீலக் கடல். தூரத்தில் வெள்ளை இளஞ்சிவப்பு தொடங்கி ஆரஞ்ச், ரோஸ் என வரிசையாகப் பல நிறங்களை அடுக்கி வைத்திருந்த வானம். கால் நனைக்கும் குளிர்ந்த நீர். இதமாய் வீசிய கடற்காற்று. ரம்மியமான இருந்தது. பவதாவும் ஹரிணியும் சிறுவர்களுடன் ஆட்டம் போட்டுக் கொண்டு இருந்தனர். ஹர்ஷா மட்டும் கடற்கரையில் அமர்ந்து கடலயே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
வயது ஏழு தான் இருக்கும். நந்துவின் வயது தான். ஆனால் நந்துவுடன் ஒப்பிடும்போது ஹர்ஷாவை டார்ச் அடித்துத் தேடத்தான் செய்ய வேண்டும். அத்தனை அமைதி. அவனுக்கு இதெல்லாம் புதிது. புது உறவுகள். புது இடம். புது நேசங்கள் என எல்லாம் புதிது. விவரம் தெரியாத குழந்தையாக இருந்தால் பழகும் அனைவரையும் புன்னகையுடன் வரவேற்றிருப்பானோ என்று ஹரிணிக்கு அவ்வபோது தோன்றும், அவனின் அமைதியை கண்டு.
தன்னை சுற்றி உள்ள சமூகத்தை அறியும் ஆரம்ப கட்ட வயதில் இருப்பதால் தான் கிடைத்த அனைத்து சொந்தங்களையும் ஏற்பதா வேண்டாமா என்ற மன குழப்பத்தில் இருக்கிறான் சிறுவன். அம்மா அப்பா தாத்தா பாட்டி என அழைத்து அந்தச் சொந்தமும் தன்னை பாதியிலேயே விட்டு விட்டுச் சென்று விடுமோ என்ற கலக்கமே மற்றவர்களுடன் பேச விடாமல் செய்கிறது.
இல்லை நாங்கள் உன் நிரந்தர சொந்தம். உன்னை விட்டு விடமாட்டோம் என்று உணர்த்த வேண்டியிருக்கிறது அவனுக்கு. ஹரிணி, கௌதம் எனப் பெரியவர்களுடன் பேசத் தயங்கினாலும் சிறியவர்களான அகில் ஆதி ஆகாஷ் உடனாவது பேசிப் பழகலாம். ஆனால் ஹர்ஷா அதற்குத் தயாராக இல்லை. ரிஷி சம்பத் பவித்ராவை தவிர வேறு யாருடனும் பேசத் தயங்குகிறான்.
பார்த்த நொடியிலிருந்து பவித்ராவை அம்மா என அழைக்க அவன் தயங்கியதே இல்லை எனலாம். பவியை அவன் அம்மா என்று கூப்பிடும்போது அவனுக்குள் மட்டுமல்ல பவிக்கும் கண்ணீர் சுரக்கும். அவளின் தாயன்பு அவளை அன்னையாகவும் சம்பத்தை தந்தையாகவும் ஏற்க வைத்தது. மற்றவர்களிடம் தான் தயக்கம் காட்டுகிறான் சிறுவன். அவனைத் தங்கள் கூட்டு குடும்பத்தில் சேர்க்க வேண்டும் என்பதே பவித்ராவின் ஆசை.
பவதாவும் அகிலனும் சேர்ந்து கரையில் வீடு கட்ட, ஆதி அங்கிருக்கும் கிளிஞ்சல்கைளை பொறுக்கி வந்து பவதாவிடம் தந்தாள். வீட்டை அலங்கரிக்க வேண்டும் அல்லவா. அதான்.
"ஆதி பாப்பா. அங்க ஒரு சின்ன சங்கு இருக்கு பாரு. " என ஹரிணி கைகாட்ட ஆதி தன் பிஞ்சுப் பாதத்தை மணலில் புதைத்துக் கஷ்டப்பட்டு நடந்து சென்று எடுத்து வந்தாள். அந்த ஈர மணலில் படுத்து உருண்டு எனப் பல சேட்டைகள் செய்தனர் மழலையர்கள் இருவரும்.
" இந்த நிலமைல உன்னோட அப்பா பாத்தான்னா அவ்ளோ தா. எம்மக மண்டைய மண்ணாக்கிட்டியேன்னு திட்டப்போறான். " என்றபடி ஹர்ஷாவின் அருகில் அமர்ந்தாள் ஹரிணி. ஹர்ஷா திரும்பி கூடப் பார்க்கவில்லை. ‘கடல் மட்டுமே எனக்குத் தெரியும். வேறு எதையும் நான் பார்க்கமாட்டேன்’ என்பதுபோல் அமர்ந்திருந்தான்.
" ஹர்ஷாக்கு என்ன பிடிக்கலையா. " ஹரிணி கேட்க, அவன் திருப்பிப் பார்த்தான்.
"பிடிக்காதவங்க பக்கத்துல வந்து உக்காந்தாத்தா திரும்பிக் கூட பாக்க மாட்டாங்க. நீயும் என்ன பாக்கலையா. அதா கேட்டேன். ஹர்ஷாக்கு என்ன பிடிக்கலையான்னு. " எனப் புன்னகையுடன் கேட்டாள்.
" அப்படில்லாம் இல்ல. "
" நா யாருனு உனக்குத் தெரியுமா.? "
" ம்... அப்பா சொன்னாரு. நீங்க அவரோட தங்கச்சின்னு. "
" அது மட்டுமா சொன்னாரு!. "
" ம்... அவ்ளோ தா. "
" உனக்கு எது தேவையோ அத மட்டும் தா உன்னோட காதுல வாங்கிற போல. ம். " எனப் பெருமூச்சு விட்டவள்.
" நா உனக்கு அத்தை. ஹரிணி அத்தன்னு கூப்பிடணும்னு உனக்கு ராகவ் அண்ணா சொல்லித் தரலையா. "
" ம்... சொன்னாங்க. ஆனா…"
" அப்படி கூப்பிட பிடிக்கல. சரியா. " என்க மௌனமாய் இருந்தான் அவன்.
" ஹர்ஷா இதுவரைக்கும் நீ எப்படியோ. ஆனா இனி உனக்குன்னு நாங்க எல்லாரும் இருக்கோம். அத்த மாமா, பாட்டி தாத்தான்னு எல்லா உறவும் உனக்கு உண்டு. ஆனா அத நீ ஏத்துக்கணும். "
" நா ஒரு அநாத. என்ன எப்படி குடும்பத்துக்குள்ள சேத்திங்க. நா ஆஸ்ரமத்துல இருக்கும் போதே மத்த பசங்களோட அப்பா அம்மா அவங்களுக்கு கிஃப்ட் குடுக்குறத நா பாத்திருக்கேன். உடம்பு சரியில்லன்னாலும் பாத்துக்க இஷ்டமில்லன்னாலும் அவங்களுக்குன்னு ஒரு குடும்பம் இருந்தது. ஆனா எனக்குன்னு யாரும் இல்ல. இப்ப புதுசா கிடைக்கும்போது... பயமா இருக்கு. நா அநாதையாவே இருந்துக்கிறேனே. ப்ளீஸ். " என மனம் திறந்து பேச,
" ம்… அப்பா அம்மா சொந்த பந்தங்கள் யாரும் இல்லன்னா அவங்க அநாதையா என்ன. இந்த உலகத்துல அநாதைங்கன்னு யாரும் கிடையாது ஹர்ஷா. ஏன்னா யாரும் வானத்துல இருந்து குதிச்சிடல. எல்லாருக்கும் ஒரு அம்மா உண்டு. அப்பாவும் தா. அவங்களுக்கும் அப்பா அம்மான்னு இருப்பாங்க. சோ சொந்தங்களும் உண்டு. அப்ப யாரும் அநாதை கிடையாது தான. ம். என்ன யாரும் பக்கத்துல இருக்குறது இல்ல அவ்ளோ தா. " என்றவள் ஹர்ஷாவின் முன் மண்டியிட்டு அமர்ந்து அவனின் இரு கரங்களையும் பிடித்துக் கொண்டாள்.
" அநாதைங்கிறது வெறும் வார்த்தை கிடையாது ஹர்ஷா. அது ஒரு உணர்வு. நம்மல சுத்தி எல்லாரும் இருந்தாலும் அந்த உணர்வு வந்துட்டா நாம எல்லாருமே அநாத தா. அந்த உணர்வ வரவிடக் கூடாது.
யாருமே பக்கத்துல இல்லாதப்பவும் அந்த உணர்வு வரலன்னா நீ அநாத கிடையாது ஹர்ஷா. நாம இங்க உலகத்துல தனியா இல்ல. சுத்தி யாராது ஒருத்தராது இருப்பாங்க, நம்ம மேல அன்பு காட்ட. எனக்கு ராகவ் அண்ணாவும் கௌதம் ரிஷின்னு கிடைச்சது மாறி, உனக்கு நா இருக்க விரும்புறேன் ஹர்ஷா. அத்தையா மட்டுமில்ல. உன்னோட ஃப்ரெண்டாவும் தா.
இனி நா அநாதன்னு நீ சொல்லவே கூடாது. உன்ன யாரும் அப்படி சொன்னா அது உன்னோட மனசுல என்னைக்கும் பதிவே கூடாது. எனக்குத் தெரியும் நீ கொஞ்சம் மெச்சூரிட்டியான பையன்னு. இந்த வயசுலையே உன்னோட எதிர்காலம். இறந்த காலம் நிகழ் காலம்ன்னு எல்லாத்தையும் யோசிச்சி பாக்குற அளவுக்கு உன்னோட மனசு பக்கவப்பட்டதுன்னு. அந்த மனசுல எங்களுக்கும் இடம் குடுன்னு தா கேக்குறேன். உம்மேல அன்பு காட்ட எங்களுக்கு வாய்ப்பு குடு ஹர்ஷா. நிச்சயம் எங்க குடும்பத்த உனக்குப் பிடிக்கும். " என உருக்கமாகப் பேச, ஹர்ஷா புன்னகைத்தான்.
" ஹரிணி அத்த ஆதி தண்ணீல விளையாடுறா. " எனக் கரம் நீட்டி அலையில் விளையாடிய ஆதியை காட்ட,
"ஆதீ… " எனக் கத்திக் கொண்டே ஹரிணி செல்லும் முன் ஹர்ஷா சென்று தூக்கி வந்தான் அவளை. திமிரி, அழுது, கத்தி, கடித்து வைத்து இறங்க முயன்றவளை கரையில் கொண்டுவந்து விடும் வரை கீழே இறக்கி விட வில்லை அவன். அவள் கோபமாக அவனை பார்த்து முறைத்துக் கொண்டே தன் பிஞ்சு கரத்தில் கிடைத்த மணலை அவன்மீது தூக்கி எறிந்து விட்டு ஓடினாள். ஹர்ஷாவும் துரத்திச் சென்றான். செல்லும் முன் திரும்பி ஹரிணியை பார்த்து ஒரு புன்னகை சிந்திச் சென்றான். அந்தச் சிறுவன்.
அன்பு.
ஒரு சிறந்த பரிசு.
அதைக் கொடுத்தாலும்.
பெற்றாலும் சந்தோஷமே.
அது உடையவன்.
அனாதை ஆவதில்லை.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..