முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

விழி 51

அத்தியாயம்: 51 


" ஃபஸ்ட் விஷஸ் சொல்லாம்னு பக்கத்துல படுத்திருந்த உன்ன தேடுனா. ஆள காணும். சரி கௌதமையாது எழுப்பி வாழ்த்து சொல்லலாம்னு கதவ தட்டுனா. அங்கையும் காணும்னு பதில் வருது. எங்கடா போயிருந்திங்க. ம்... "என்க.


" எங்கள இங்க பொலம்ப விட்டுடு நல்லா ஊர் சுத்தி வர்றிங்க போலயே. " ஜெனி.


" அதுவும் மூச்சி முட்டக் குடிச்சிட்டு தள்ளாடிட்டே வர்றீங்க. என்ன இதெல்லாம். " பவி.


" பவி... நா குடிக்கலம்மா. ஜஸ்ட் ரெண்டு டம்ளர் தா குடிச்சேன். சின்ன டம்ளர் தா. " சம்பத், குரலில் தெளிவில்லை.‌


" ஆமா நாங்க எல்லாரும் ரெண்டு டம்ளர் தா குடிச்சோம். நம்பலன்னா பாருங்க. இது தா அந்த டம்ளர். " எனப் பிரகாஷ் கிணற்றில் நீர் எடுக்கப் பயன்படுத்தும் சிறிய சைஸ் வாளியை காட்ட,


" ஆ… இவ்வளவு குடிச்சா வயிறு என்ன ஆகும். பிறந்தநாள் அதுவும் இப்படி குடிக்கலாமா. " இந்து.


"பிறந்தநாளுக்கு குளிக்காம இருந்தா தப்பில்ல. குடிக்கலன்னா தா தப்பு மதிம்மா. " என்க இந்து கண்கலங்க ஆரம்பித்தாள்.


 " ஐய்யோ... மதிம்மா, எதுக்கும்மா அழற. எனக்கு எதுவும் ஆவாது. நீ ஒன்னும் கவலப்படாத.‌ பட்ட சாராயம் குடிச்சி பட்ட பகல்ல அழிஞ்சவிங்கதா அதிகம். ராத்திரில குடிச்சா நல்லதும் மா. நம்ம உள்ளூர் ஜோசியக்காரெ சொன்னா சரியாத்தா இருக்கும். மதி. மதீ.ஈ... " என்றவனை திரும்பியும் பாராது சென்று கதவை மூடிக் கொண்டாள்.


" மச்சான் கதவ மூடிட்டா. இப்ப நா எங்க படுக்குறது. " கௌதம்.


" ம்… மொட்ட மாடில. துணைக்கி உந்தம்பியையும் மச்சானையும் கூட்டீட்டு போ. " எனப் பவித்ரா சொல்ல, ஜெனி தலையணை போர்வையை எடுத்து வந்து கொடுத்து விட்டுச் சென்றாள்.


" வாவ்… கருணை உள்ளம் கொண்ட மகராசிகள். இவங்கள வாழ்த்தி ஒரு பாட்டு பாடலாமே. என்ன பாட்டு பாட. " கௌதம்.


" நல்ல மனம் வாழ்க. நலமுடனே வாழ்க. " எனப் பிரகாஷ் ஆரம்பிக்க, மற்றவர்கள் கோரஸ் பாடிக் கொண்டே மாடிக்குச் சென்றனர். இவர்களின் இந்த கூத்தைத் தரன் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துச் சிரித்துக் கொண்டு இருந்தான்.


" உன்னால தா பாவா இன்னைக்கி எல்லாருக்கும் மொட்ட மாடில தூக்கம். போய் உனக்கும் இடப் பிடிச்சி வச்சி படுத்துக்கங்க. " என கோபமாக சொல்லித் திரும்பியவளை தூக்கிக் கொண்டு தன் அறைக்குள் ரிஷி சென்றான். அவன் அருகில் வந்ததும் தான் தெரிந்தது அவன் குடிக்கவில்லை என்று. ஏன் என்று கேட்டவளிடம்.


" யாராது ஒருத்தராது நிதானமா இருந்தாத்தா மத்தவங்கள ஒழுங்கா வீடு கொண்டு வந்து சேக்க முடியும். அதுமட்டுமில்லாம என்ன மறக்க வைக்கிற அளவுக்குப் போதய என்னைக்குமே நா தொட மாட்டேன். "


" அப்றம் எதுக்கு அவங்களுக்கு ஊத்தி குடுத்திங்கலாம். " ஹரிணி கோபமாக,


"ம்ச்... அவனுங்க என்ன பச்ச குழந்தையா. பால் டப்பாள வச்சி வாயில ஊட்ட. ம்… சரி விடு.‌ இன்னைக்கு எனக்குப் பெர்த் டே. ஒரு விஸ்கூட பண்ணாம கோபமா நிக்கிற. " எனத் தன் புருவங்களை ஒன்றன் பின் ஒன்றாக ஏற்றி இறக்க,


" அத சொல்லத்தா உனக்காகக் காத்திருத்தேன். ஆனா என்ன தூங்க விட்டுட்டு நீ தா எங்கையோ எந்திரிச்சி போய்ட. " என முகம் திருப்ப,


"அப்ப இப்ப சொல்லு. " என்றவன் முறைத்து பார்த்தவளை பார்த்துக் கண்சிமிட்ட, அவனின் பாவனையில் புன்னகை அரும்பியது அவளுக்கு.


" இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாவா. " என வெட்கம் கலந்த தன் வாழ்த்தைச் சொல்ல, அவளின் தோளில் இரு கரத்தையும் மாலையாய் போட்டவன்.


" பெர்த் டே பாய்க்கு கிஃப்ட். கிடையாதா. " எனத் தன்னை நோக்கி இழுத்து அவளின் கன்னத்தில் தன் விரலால் கோலமிட்டு கேட்க, மயங்கிடந்தவள் சட்டென விலகி,


" கிடையாது. உனக்கு கிஃப்ட்டுன்னு எதுவும் கிடையாது. போ… நீயும் போய் மாடில உந்தம்பிங்க கூடப் படுத்துக்க. " என வெளியே தள்ளி கதவைச் சாத்த தான் முயன்றாள். ஆனால் முடியவில்லை. அவனுக்குத் தேவையான பரிசைப் பெறாமல் எப்படி போவது. கதவுகள் சாத்தப்பட்டது. அவனுக்கு வேண்டிய பரிசும் கிடைக்கப்பட்டது.


"இந்த அண்ணனும் தம்பி ஒன்னு சேந்ததுதா சேந்தாங்க அவனுங்க அட்டகாசம் தாங்க முடியலப்பா. ச்ச. " இது ‌ஹரிணியின் மைண்ட் வாய்ஸ்.


விடிந்ததும் கலியபெருமாள் வேறு தன் மகனின் பிறந்த நாளைக் கொண்டாகிறேன் என்று ஆரம்பித்து விட்டார். கொண்டாட்டம் ஒரு நிறைவான குடும்ப விழாவாக மாறியது.


மறுநாள் காலையில் ஹரிணியின் கையில் ஒரு பெரிய கவர். ஜிகுஜிகு எனச் சிவப்பு நிறத்தில் கிஃப்ட் ராப் செய்யப்பட்டிருந்த அது அவளின் கட்டிலில் இருந்தது. விளையாடிக் கொண்டிருந்த தன் மகனிடம்.‌


" டேய் அகில். இது யாரு கொண்டு வந்து வச்சான்னு தெரியுமா. " எனக் கேட்க, அவன் தன் பிஞ்சு உதட்டைப் பிதுக்கி தலையை அசைத்தான், தெரியாது என்று தான்.‌


" யாரு வேல இது. ஒரு வேல உங்கப்பாக்கு வந்த கிஃப்டா இருக்குமோ. ஏன்டா நேத்து முடிஞ்சி போன பிறந்த நாளுக்கு இன்னைக்கி கிஃப்ட் குடுக்குறது யாரா இருக்கும்.‌ உனக்குத் தெரியுமா.‌" என மீண்டும் கேட்க, மகன் அவளைக் குறுஞ்சிரிப்புடன் பார்த்து அந்தக் கவரை வாங்கி பிரிக்கவில்லை பிய்ந்து எரிந்தான்.‌


" அகி, இப்படி பண்ணாதம்மா. பாவா வந்தா உன்ன திட்டமாட்டான்.‌ என்ன தா திட்டுவான்.‌ விடு அகி. " என மகனிடம் சண்டை போட்டுப் பிடுங்கி பிரித்துப் பார்க்க, மகிழ்ச்சியில் அவளின் விழியில் நீர் கோர்த்தது.


அது அவளுக்காக கிஃப்ட்… ரிஷி தந்தது. இன்னும் வரவே செய்யாத அவர்களின் நான்காம் ஆண்டு திருமண நாளுக்கான பரிசு. அவள் கேட்டது தான். ரிஷியும் கௌதமும் தோளில் கை போட்டுப்படி, கேக்கை ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டது போல் இருந்த அந்த புகைப்படத்தைப் பெரிய அளவில் லேமினேஷன் செய்து தந்துள்ளான் அவளின் பாவா.


"பிடிச்சிருக்கா. " என‌ கேட்டபடி வந்த ரிஷியை ஓடிச் சென்று அணைத்துக் கொண்டாள் ஹரிணி. அவளின் செயலைக் காப்பி அடித்து மகனும் வந்து ரிஷியின் காலைக் கட்டிக் கொண்டான்.‌ மகனைத் தூக்கி கொஞ்சியபடியே,


" இப்பவே குடுத்துட்டேன். அப்றம் நா கேட்ட எதுவுமே நீ செய்ய மாட்டேங்கிறன்னு ஸீன் போட்ட பாத்துக்க. நீ தா மகனே சாட்சி. உங்கம்மாக்கு நா இத குடுத்துக்கு. " என மகனின் கன்னத்தில் முத்தம் வைக்க, ஹரிணி எம்பி அவனின் கன்னத்தில் முத்தமிட்டு அவனின் அகன்ற மார்பில் சாய்ந்து கொண்டாள்.


" தேங்க்ஸ், எல்லாத்துக்கும். எனக்கு இந்தக் குடும்பம் கிடைச்சதுக்கு. நீ கிடைச்சதுக்கு. அகி க்காக. இந்த லைஃப் க்காக. ஐ லவ் யூ. லவ் யூ வெரி மச். " எனக் கண்ணீருடன் இறுக்கமாக இடையணைத்து அவனின் மார்பில் முத்தமிட,


" நாந்தா கிட் உனக்கு நன்றி சொல்லணும். உன்ன பாத்ததுக்கு அப்றம் தா என்னோட லைஃப்பே வேற மாறி மாறுச்சி. இதுவரை அப்பாவால வெறும் வாய் வார்த்தையா மட்டுமே இருந்த இந்தக் குடும்பம் எனக்குக் கிடைச்சிருக்கு. அதுக்கு முன்னாடி வரைக்கும் நா இந்தக் கிராமத்துக்கு வந்து இந்தக் குடும்பத்துல ஒருத்தனா மாறுவேன்னு நா நினைச்சி பாத்தது இல்ல.


உன்னால தா இன்னைக்கி ஹரி முழு மனுஷனா மாறி இருக்கான். முக்கியமா வைசு கிடைச்சா. உன்னால தா அவா உயிரோட இருக்கான்னே தெரிஞ்சது.‌ அவள பாத்த அன்னைக்கி நா எவ்ளோ சந்தோஷமா இருந்தேன்னு சொல்ல முடியாது கிட். அப்பா‌, அம்மா வைசுன்னு மட்டும் இருந்த எனக்கு. இந்த இவ்வளோ பெரிய ஃபேமிலி கிடைக்க ஏதோ ஒரு வகைல நீயும் தா காரணம்.


எனக்கு இப்ப கிடைக்குற அத்தன சந்தோஷத்தையும் உனக்கு நா திரும்பித் தரணும். நா உம்மேல வச்சிருக்குற காதல வார்த்தையால சொல்லாம, அந்தக் காதலுக்கு விஸ்வாசமா உங்கூட வாழ்ந்து என்னோட காதல காட்டணும்னு ஆசப்படுறேன் கிட். ஐ லவ் யூ சோ மச். " என அவளின் முன் உச்சியில் முத்தமிட, தந்தையின் பேச்சு புரியாவிட்டாலும் அகிலன் தனக்கும் முத்தமிட வேண்டும் என அடம் பிடித்தான்.


புன்னகையுடன் இருவரும் சேர்ந்து அவனுக்குக் கன்னத்தில் முத்தமிட, வெகுண்டு சிரித்தான் அந்த வாண்டு.


" நானும் லவ்யூ தா பாவா. ஸாரி உன்னோட மனச நா காயப்படுத்துனதுக்கு. அப்றம் தேங்க்ஸ். எல்லாத்துக்கும், நானும் என்னோட லவ்வ உன்னமாறியே உங்கூட வாழ்ந்து காட்டுறேன். ம். " என்றவளுடன் தன் மகனையும் சேர்ந்து அணைத்துக் கொண்டான் ரிஷி.


"பாவா நா இத நம்ம சென்னை வீட்டுக்கு எடுத்துட்டு போகப் போறேன். அங்க ஹால்ல இத வைக்கணும். அங்க இத வச்சிட்டா. இங்க நம்ம ரூம்க்கு வைக்க எதுவுமே இல்லயே பாவா. " எனக் கவலையுடன் சொன்ன மனைவியை பார்த்துச் சிரித்தவன்‌,


"அதுக்கு ஏங்கிட்ட வேற ஒரு ஃபோட்டோ இருக்கே. " என்க.


" எங்க காட்டு பாவா. " என ஆவலாகக் கேட்க.‌


" அது இன்னும் எடுக்கவே இல்ல. எடுத்தா கண்டிப்பா காட்டுறேன். " என்றவனை முறைத்தாள் அவள்.


" ஓகே உன்னோட மொறப்ப அப்றம் வச்சிக்க. இன்னைக்கி நைட் நாம சென்னை கிளம்புறோம். பேக் பண்ணி ரெடியா இரு. " எனத் தன் மகனைத் தூக்கிக் கொண்டு சென்றான் ரிஷி.


" எடுக்காத ஃபோட்டோவ எப்படி ரூம்ல மாட்ட முடியும்.‌ சரியான லூசு பாவா நீ.‌" எனத் திட்டிய படியே குளியலறை புகுந்தாள்.


ஹாலில் தரனுடன் சேர்ந்து மூர்த்தியும் கவியரசனும் கணக்கு வழக்குகளைப் பார்க்க, பிரகாஷ் கோபமாக இருந்தான்.


" நா ஒரு தொழிலதிபர். எங்கிட்ட டிஸ்கஸ் பண்ணாமா. என்ன ஒரு‌ ஓரமா உக்கார வச்சிட்டிங்கள்ள. இதுக்கெல்லாம் காலம் பதில் சொல்லும். " பிரகாஷ்.‌


" அது வாயத்தொறந்து சொல்லும்போது கேட்டுக்கிறோம். இப்ப வந்து மில்லு கணக்கு வழக்கெல்லாம் காட்டு. " கவியரசன்.


" எது… காட்டனுமா. கணக்கு வழக்கையா… என்ன சித்தப்பா இதெல்லாம். எம்மேல நம்பிக்க இல்லாம கணக்கெல்லாம் கேக்குறீங்க. நா ஒரு தொழிலதிபர். வக்கீலும் கூட. " எனப் பேசி முடிப்பதற்குள்,


"டேய் சென்னைல ஒரு லாரி ஏத்தி விட்டேன்னு சொன்னியே. எங்க. எத்தன மூட்ட. அது கணக்குல வரல. " மூர்த்தி. முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு கேட்க,


" இந்தா இருக்கு சித்தப்பா. " என அவனும் அந்தக் கூட்டத்தில் ஐக்கியமாகி விட்டான்.


அவர்களின் எதிரில் இருந்த நாற்காலியில் அசோக் வந்து அமர்ந்தான். முகத்தில் குழப்ப ரோகைகள் பல ஓடிக் கொண்டு இருந்தது. தலை தூக்கி மூர்த்தியையும் ரிஷியையும் பார்ப்பது. பின் தலை குனிந்து ஃபோனை பார்ப்பது எனத் தலையை மேலும் கீழுமாய் அசைத்தான் அசோக்.


" எதுவும் சொல்லனுமா அசோக். " மூர்த்தி.


" அது வந்து மாமா. " என இழுக்க, வைசு வந்து நின்றாள் அழுது கொண்டே.


"என்னாச்சிம்மா. உடம்புக்கு என்ன. " மூர்த்தி.


" எதுவும் பிரச்சனையாம்மா. இவங்கூட சண்டயா. " கவியரசன். இருவருமே சற்று படபடத்துப் பேச, ரிஷி புன்னகையுடன் அமர்ந்திருந்தான். அவனுக்குத் தங்கையின் கண்ணீருக்காகக் காரணம் தெரியும். 


" டேய் முட்டாப் பயலே. என்னடா பண்ண எம்பொண்ண.‌ அழுது அழுது முகம் சிவந்து போச்சி. உன்னத்தா கேக்குறேன். தலைல கை வச்சிட்டு உக்காந்த என்ன அர்த்தம். " என அசோக்கின் தலையில் தட்டி கவியரசன் சாடினார்.


" சித்தாப்பா சித்தப்பா. பொங்காதிங்க. என்னன்னு விசாரிப்போம். அதுக்குள்ள ஜர்மெண்ட் எழுதுனா என்ன அர்த்தம். என்னாச்சி மச்சான். எதுக்கு அக்கா கண்ணீர் சிந்துது." பிரகாஷ்.


" வாய மூடுடா. உன்ன யாரும் பஞ்சாயத்து பண்ண கூப்பிடல. மாமா நா உங்ககிட்ட பேசணும். " என ஆரம்பிக்கும் போதே வைசு வந்து மூர்த்தியின் அருகில் அமர்ந்து அவரின் தோளில் தலை சாய்த்தாள். பின்,


" ப்பா... இவரு மறுபடியும் அமெரிக்கா போகப் போறாம். எனக்குப் பிடிக்கல. நா எங்கையும் வரமாட்டேன். இங்கருந்து போகவும் மாட்டேன். " என அழ, மூர்த்தி சிரித்தார்.


எல்லாரும் இந்தியால இருந்து காண்ட்ராக்ட் போட்டு அமெரிக்கா போவாங்க. ஆனால் இந்த அசோக். வைசுவிற்காக இரண்டு வருட காண்ட்ராக்ட் போட்டுப் பெங்களூர் வந்துள்ளனான். அது முடிய உள்ளதால் மீண்டும் அதைப் புதுபிக்காது வெளி நாடே செல்ல முடிவெடுத்துள்ளான். இனி நினைத்த நேரத்தில் இங்கு வர முடியாது. மூர்த்திப்பா, கனகாம்மா, நாச்சி அப்பத்தா, மலரம்மா என அனைவரையும் காணொலியில் மட்டுமே காண முடியும். அதான் வைசுவின் அழுகைக்கு காரணம்.


" எப்ப கிளம்புறீங்க. " ரிஷி. அசோக்கிடம் கேட்க, அவனுக்குப் பெரிய நிம்மதி. அவன் வெளிநாடு செல்வதை பற்றி யாரிடமும் கலந்து பேசவில்லை. ரிஷி காதிற்கு சென்றால் வம்பாகிடுமோ என்பதால். ஆனால் இப்போது அவன் கோபப்படாமல் தனக்கு ஆதரவாகப் பேசியது, மகிழ்ச்சியை தந்தது.


" ஒரு வாரத்துல காண்ட்ராக்ட் முடியுது. ஆனா ரெண்டு மாசம் லீவ் போட்டுட்டு இங்கையே இருந்துட்டு. அடுத்து போய் ஜாயின் பண்ணலாம்னு இருக்கேன். " அசோக்.


"டிக்கெட் போட்டாச்சா. "


"ம்... டூ மந்த் கழிச்சி தரன். " என்க.


" அண்ணா எனக்குப் பிடிக்கலன்னு சொல்லிட்டு இருக்கேன். நா இங்கயே‌ தா இருப்பேன். என்னால அவரு கூடப் போக முடியாது. " என அடம்பிடிக்க,


" என்னடி பழக்கமிது. புருஷெ எங்க இருக்கானோ, அங்க பெட்டிய தூக்கிட்டு போய்கிட்டே இருக்கணும். அத விட்டுடு ஸ்கூல் பிள்ளையாட்டம் அடம்பிடிக்கிற. உன்ன என்ன நாளைக்கே வா கூட்டீட்டு போய்ட போறான். இன்னும் மாசம் இருக்கு. நல்லா சந்தோஷமா இருந்துட்டு அவெ கூடக் கிளம்பி போ. " என மலர் திட்ட, கனகவள்ளியும் அதற்கு ஏதுவாய் தலை அசைத்து மலரின் பேச்சை ஆமோதித்தார்.


" ப்பா… சொல்லுங்கப்பா. இந்தியாக்குள்ள எங்கனாலும் ஓகே. நா ஃபோன் பண்ணா போதும் மறு நாளே ரிஷி அண்ணாவும் கௌதம் அண்ணாவும் வந்திடு வாங்க என்ன பாக்க. ஆனா அமெரிக்கா போனா. அப்படி பாக்க முடியாது ப்பா. " வைசு.


"மம்மி ஆத்தா. இது உங்களுக்கே நியாயமா. உங்களோட சொந்த விருப்பத்த முன்னாடி வச்சி, நைனாவோட ஆசைய மட்டுமில்ல என்னோட எதிர்காலத்தையே பழைய சோறு மாறி ஆறப்போடுறீங்களே. அது தப்பில்லையா. " நந்து.


"டேய் அப்ப உனக்கு அமெரிக்கா போகச் சம்மதமா. " பிரகாஷ்.


" எஸ் அஃப்கோஸ். ஃபாரின் ரிட்டன்னா அதுக்குன்னு தனி மரியாத இருக்கும். எல்லாரும் என்ன மரியாத பாப்பாங்க. வர வர இந்த வீட்டுல எனக்குச் சரிவர அது கிடைக்காததுனால தூர தேசத்துக்குப் போய். "


"தவம் பண்ண போறான். தா யாருன்னு கண்டுபிடிக்க. "எனக் கேலி செய்தபடி ஹரிணி வர, நந்து முறைத்தான்.


" நைனா. நாம ஏ பம்கின்னுக்கு கொழந்த பிறந்ததுக்கு அப்றம் ஊருக்குப் போறத பத்தி பேசக் கூடாது. " நந்து.


" ஏ. " அசோக்.


" ஒரு வேள பம்கின் வயித்துல இருக்குறது பொண்ணுன்னு தெரிஞ்சா பைக்குள்ள தூக்கி போட்டு எம்பொண்டாட்டிய எங்கூடவே கூட்டீட்டு போய்டுவேன். இல்லனா. திரும்பிக் கூட பாக்காம உங்க பின்னாடியை வந்திடுவேன். " என்ற நந்துவை ஹரிணி விரட்ட, ஒரு வழியாக அசோக் மீண்டும் வெளிநாடு செல்ல அனைவரும் சம்மதித்தனர்.


" வைசுமா. " என அழைத்தபடி கௌதம் வர, அவள் திரும்பிப் பார்க்கவில்லை.


" என்னாச்சி வைசு." ரிஷி.


" யாரும் எங்கிட்ட பேசாதிங்க. எல்லாரும் சேந்து என்ன துரத்திவிட பாக்குறீங்க. நா உங்களுக்குப் பாரமா போய்டேனா." 


" ச்சச்ச. நீ ஜஸ்டு அறுபது கிலோ தா இருப்ப. இதெல்லாம் ஒரு பாரமா. " கௌதம் சொல்ல வைசு அவனை அடித்தாள்.


" வைசுமா. இப்ப நீ எங்களுக்குத் தங்கச்சி மட்டுமில்ல, ஒரு குடும்பத்தோட தலைவி. உன்னோட குடும்பம் எப்படி இருக்கணும் முடிவு பண்ண உனக்கும் அசோக்குக்கும் தா உரிம இருக்கு. சோ ரெண்டு பேரும் கலந்து பேசி முடிவெடுங்க. எந்த முடிவா இருந்தாலும் எங்களுக்கு ஒகே தா. யார் வந்து தடுத்தாலும் நாங்க உன்ன பாக்க வருவோம். நீ எங்க இருந்தாலும். " ரிஷி, தங்கையின் தலை வருடிப் பேசினான்.


" நீயே யோசி வைசு. அசோக்குக்கு இருக்குற திறமைக்கும் அனுபவத்துக்கும் அங்க இருந்தான்னா எவ்வளவு சம்பளம் கிடைக்கும். உனக்காகத்தா பெங்களூருக்கே வந்தாரு. ஐடி ஃபீல்டுல இந்தச் சின்ன வயசுல இத்தன லட்சம் வாங்குற ஆள் கிடைக்கிறது கம்மி தா. வயசும் உடம்புல தெம்பும் இருக்கும்போது தா சம்பாதிக்க முடியும். ரெண்டும் போச்சின்னா கஸ்டம். சோ சம்பதிக்கணும்னு நினைக்கிற அவர தடுக்காத. " எனக் கௌதம் ஆறுதல் சொல்ல, இருவரும் தங்கள் தங்கையைச் சமாதானம் செய்து அமெரிக்காவிற்கு பேக் செய்து விட்டனர். ஆனால் உடன் இருக்கும் வரை வைசுவை தங்களுடனேயே வைத்துக் கொண்டு அவளை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டனர் அந்தக் குடும்பம். மொத்தத்தில் குடும்பம் ஒரு கதம்பமாக மாறி மணம் வீசியது.


'இந்தச் சீரியல் காட்சிகளை எல்லாம் பாக்கணுமான்னு நீங்கப் புலம்புறது எனக்கு நல்லாவே தெரியுது. இந்தக் கதைக்கு ஒரு எண்டு கார்ட்டு போடத்தா நானும் முயற்சி பண்றேன். ஆனா இந்தச் சந்திரபோஸ்ஸ எப்படி கொன்னானுங்கன்னு ஹரிணிட்ட மூணு பேரும் சேந்து சொல்லிட்டானுங்கன்னா கடைய சாத்திடுவேன். உங்களுக்கு அந்த டவுட்டு இருக்கும்னு தா நினைக்கிறேன். சோ அத சொல்லிட்டு கிளம்பிட வேண்டியது தா. '

 தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி  


விழி 50


விழி 52



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...