அத்தியாயம்: 1
இருபதாம் நூற்றாண்டின் கடைசி சில வருடங்கள்.
சென்னை மெரினா கடற்கரை. ஓயாது அடித்துச் செல்லும் அலைகளுக்குக் கரை என்றும் சொந்தமாகியதே இல்லை. வரலாம்... சில நொடிகள் தன்னை தீண்டலாம். பின் திரும்பியும் பார்க்காது சென்று விட வேண்டும். நிரந்தரமாக ஒட்டி உறவாடிக் கவிபேசாது அந்தக் கரையுடனான உறவு என்றும் இருக்கும். அதுபோல் தான் காதலும்.
" ம்ச்... வந்ததுல இருந்து அழுதுக்கிட்டே இருக்க. என்ன நடந்ததுன்னு சொன்னாத்தான தெரியும். " என்றான் அந்த இளைஞன். பள்ளி மாணவன்போல் பென்சில் பாடி. ஆனால் கல்லூரி மாணவன்.
" என்னன்னு நா உனக்கு எத்தன தடவ தா சொல்றது. உனக்குத் தா புரிய மாட்டேங்கிது. " பெண். அவளும் கல்லூரி மாணவி தான்.
இருவரும் காதலர்கள். காதலர்களுக்குள் ஊடல் போலும்.
"பொண்ணு தான பாத்திருக்காங்க. இதுக்கு எதுக்கு அழற நீ. போய்ப் பிடிக்கலன்னு சொல்லிடு. அவ்ளோ தா. " என்றான் கூலாக.
" ம்… சரி. சொல்லிடுறேன். ஆனா அவங்க காரணம் கேப்பாங்களே?. என்ன பதில் சொல்ல?. உன்ன காதலிக்கிறேன்னு சொல்லவா!. அப்படி சொன்னா அவங்க ஏத்துப்பாங்களா என்ன?. நீ இன்னும் காலேஜ் கூட முடிக்கல!. நமக்குன்னு உருப்படியா ஒரு டிகிரி இல்லாதப்ப… கல்யாணம் குடும்பம்னு எப்படி யோசிக்க முடியும். " என்றாள் பெண் கவலையாக.
" அப்ப இப்ப சொல்லாத. கொஞ்ச நாள் போகட்டும் படிப்பு முடியவும். எனக்குன்னு ஒரு ஜாப் அமையவும் வந்து உங்க அப்பாம்மாட்ட பொண்ணு கேக்குறேன். " அவ்ளோ தா. என்பது போல் பேச.
" உடனே குடுத்திடுவாங்களா!. என்ன வேல பாக்கப் போற?. " என்றாள் காட்டமாக.
" ஏ உனக்குத் தெரியாதா! எனக்கு மாஸ்டர் செஃப் ஆகுறது கனவுன்னு. " என்றான் சிறு எரிச்சலுடன்.
" நல்லாவே தெரியும். அதுக்காகத்தான +2 முடிக்கவும் எங்கூட டிகிரி படின்னு நா சொல்லச் சொல்ல கேக்காம கேட்டரிங் காலேஜ் ல போய்ச் சேந்த… பி.எஸ்.சி. கேட்டரிங் & ஹோட்டல் மேனேஜ்மென்ட். " என்றவளுக்கு அவன் தேர்ந்தெடுத்த படிப்பும் பிடிக்கவில்லை அவன் சமையல்காரனாக வேலை செய்ய நினைப்பதும் பிடிக்கவில்லை.
" இன்னும் மூணு மாசத்துல கோர்ஸ் முடிஞ்சிடும். அப்றம் நல்ல ஹோட்டல்ல நல்ல சம்பளத்துல வேல கிடைக்கும். வெளிநாடு, ஸ்டார் ஹோட்டல், எரோப்ளைன், கப்பல்னு கொஞ்ச நாள் கான்ட்ராக் போட்டு வேலை செஞ்சிட்டு வந்தா நாமளே கூட ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் நடத்தலாம். " என்றான் கனவுகளைக் கண்களில் தேக்கியபடி.
" எனக்குப் பிடிக்கல. உன்னோட கெரியர நீ மாத்திக்க. அப்பத் தா எங்கப்பாட்ட நம்மள பத்தி பேச முடியும். " என்றவளை சிறு வெறுப்புடன் பார்த்தான்.
அவனுக்குத் தெரியும் அவளுக்குத் தான் தேர்ந்தெடுத்த வேலை பிடிக்கவில்லை என்று. ஆனால் அது அவனுக்குப் பிடித்தததாயிற்றே. எப்படி விட்டுக்கொடுப்பது.
"நீ கவர்மென்ட் எக்ஸாம் எழுதிக் கவர்மென்ட் ஜாப்புக்கு போனா என்னோட அப்பாக்கு நம்ம கல்யாணத்த நடத்திறதுல எந்தப் பிரச்சனையும் இருக்காது. சாதி சமூகம்னு எந்தத் தடையும் போடமாட்டாரு. அதுலையும் சென்ட்ரல் கவர்மென்ட் ஜாப்னா டபுள் ஓகே. இந்தச் சமையக்காரனா மாறுற உன்னோட ஆர்வத்த நீ ஏ கவர்மென்ட் ஜாப் மேல காட்ட கூடாது!. நம்ம லைஃப் செட்டில் ஆகும்ல. " என்றாள் பெண். ஆசையாக…
தன் கணவன் சமையல் கலை நிபுணர் என்று பிறரிடம் கூறினால் கேலி செய்யமாட்டார்களா?. இதே இது என் கணவன் கவர்மென்ட் ஆபீசர் என்றால் கெத்தாய் இருக்கும் என்று அவளின் தந்தை தான் கூறினார்.
இருவருமே ஒரு ஏரியா. கடந்த சில வருடங்களாகவே ஒன்றாகத்தான் வளர்ந்தனர். பெற்றவர்களுக்கும் இவர்களின் காதல் மறைமுகமாகத் தெரியும். ஆனாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அதனால் வேறு எதுவும் பிரச்சனை இல்லை. அவன் பார்க்க நினைக்கும் வேலை தான் பிரச்சினை.
" இப்ப என்ன சொல்லவர்ற?. உன்ன கல்யாணம் பண்ணிக்கணும்னா நா என்னோட கனவ விட்டுடுட்டு உங்கப்பெ சொல்ற வேலைக்கி போய்க் கூன கும்பிடு போடச் சொல்றியா!!. " என்றான் காட்டமாக.
" நா உன்ன நிரந்தரமா அத செய்யச் சொல்ல… கொஞ்ச நாள். நம்ம கல்யாணம் ஆகுற வர. அதுக்கப்றம் நா சமாளிச்சிப்பேன். எனக்காக ப்ளீஸ். நீ எனக்கு ரொம்ப முக்கியம். உங்கூடவே காலம் முழுக்க நா இருக்கணும்னு விரும்புறேன். புரிஞ்சுக்க ப்ளிஸ். " என்று இறைஞ்ச, அவன் காதில் கேட்காது கத்தத் தொடங்கினான். அதனால் கடுப்பானவள்,
"ஆல்ரெடி உன்னோட ஃபேமிலி மேல எங்கப்பாக்கு நம்பிக்க இல்ல. உங்கம்மா பண்ண காரியம் அப்படி. இப்ப வேலையும் அவருக்குப் பிடிக்காததுன்னா எப்படி ஓகே சொல்லுவாரு.?" என்ற வார்த்தை அவனைக் கோபம் கொள்ள செய்தது.
"ஓகே சொல்லன்னா போ. உங்கப்பெ பாக்குற கவர்மென்ட்டு மாப்பிளைய கட்டிட்டு போடி. எதுக்கு வந்து வந்து பேசி உயிர எடுக்குற?. எனக்கு நீ தேவையே இல்ல. " என்றவன் நிற்காது சென்று விட்டான்.
ஐந்தாண்டு கால காதல். இரண்டாண்டுகள் ஒரு தலையாகப் பின் இருபக்கமும் காதல் ஜோதியாக எரிய தொடங்கியது. ஆனால் இப்போது புயல் காற்று வீச அதைப் பாதுகாப்பாளா இல்லையா?. அவளுக்குத் தான் தெரியும்.
______________
"ஹலோ. "
"சொல்லு டி. இந்த நேரத்துல கூப்பிட்டுருக்க. “
" ஹேய்… எங்க வீட்டுல நம்ம விசயம் தெரிஞ்சிடுச்சி. " பதட்டமாக.
" நிஜமாவா!!… அப்ப ரொம்ப சீக்கிரமா என்னோட பொண்டாட்டியா ஆகப்போறன்னு சொல்லு. எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம். " குதுகலத்துடன் அவன் பேச.
" சீக்கிரமே... ஆனா எங்க வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க. "
"எனக்கு அந்தப் பிரச்சினயே இல்ல. ஏன்னா வீடு இருக்கு அதுல ஆளுங்க தா இல்ல. "
" அப்படி சொல்லதா. நா உனக்காக இருக்கேன். எப்பவும் உங்கூடவே தா இருப்பேன். நா வீட்ட விட்டு வந்திடலாம்னு நினைக்கிறேன். நீ ரயில்வே ஸ்டேஷன்ல வெயிட் பண்ணு. நா ராத்திரி பத்து மணிக்குள்ள அங்க வந்திடுவேன். அப்பறம் நாம கிடைக்கிற ட்ரெயில்ல ஏறி எங்கையாது போய்டலாம். சரியா!. " என்றாள் அவள்.
" நீ நிஜமாத்தா சொல்றியா டி.? " என்றவனுக்கு பெண்ணின் காதல் பூரிப்பை தந்தது.
"சத்தியமா தா சொல்றேன். நீ இல்லாம என்னால வாழ்வே முடியாது டா. நீ நா நம்ம குழந்தன்னு நாம சந்தோஷமா வாழணும். உன்னோட வலது கைய பிடிச்சிட்டு உன்னோட தோள்ள சாஞ்சிட்டு காலம் முழுக்க வாழணும்கிறது தா என்னோட ஆச. I love you… I love soo much. " எனக் கண்ணீருடன் பேச, அதைக் கேட்டவனுக்கும் கண்ணீர் வந்தது. அவளுடன் வாழு ஆசை எழ,
" நா வேணும்னா வந்து உன்ன கூட்டீட்டு போகவா?. நீ எப்படி தனியா வீட்ட விட்டு வெளில வருவ?. "
"அத நா பாத்துக்கிறேன். நீ ரயில்வே ஸ்டேஷன்ல காத்திரு அது போதும். " என உருகி உருகி பேசியவளுக்காகக் காத்திருக்கிறான் அந்த இளைஞன். மணி பன்னிரெண்டை தாண்டிச் சென்று விட்டது. ஆனால் அவள் தான் வரவே இல்லை.
அவள் நிச்சயம் வருவாள் என்ற நம்பிக்கையில் விடியும் வரை காத்திருந்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏதாவது பிரச்சனையா? என அவளின் வீட்டிற்கு சென்று பார்க்க, அது கூட்டமாகவும் இரைச்சலாகவும் இருந்தது.
" அந்த ஓடுக் காளி *** இனி இந்த வீட்டுல காலடி எடுத்து வைக்கக் கூடாது. டேய் அந்த *** கண்டு பிடிச்சா நம்ம கருப்பனுக்கு பலி குடுக்கணும். தேடுங்கடா அந்தச் சிறுக்கிய. கண்ணுல மாட்டுனா கேள்வி கேக்காம அவள பொழி போட்டிடணும். " என ஒரு பெண்ணின் குரல் கேட்க, கையில் கூரான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு நான்கைந்து பேர் வெளியே சென்றனர். அதைக் கண்டவன் பயந்து விட்டான். அவர்களின் கண்ணில் படாமல் வீடு வந்தும் சேர்ந்தான்.
தன்னை காணவும் வரவில்லை. வீட்டிலும் இல்லை. எங்கே சென்றிருப்பாள்?. என்ற யோசனையுடன் நடந்து வந்தவனின் முன்,
"மச்சான் எங்க போயிருந்த ரெண்டு நாளா?. உன்ன கேட்டு ஒரு பொண்ணு நேத்து ராத்திரி வந்துச்சி. " என்றான் அவனின் நண்பன்.
" இப்பையும் இங்க இருக்காளா?. எங்க அவ?. " என ஆவலுடன் தன் அறைக்குச் செல்ல, அங்கு அவள் இல்லை. அதற்குப் பதிலாக ஒரு பெட்டி இருந்தது. அதில்.,
" நீ எனக்குக் குடுத்த வாழ்க்கைக்கும் சந்தோஷத்துக்கும் ரொம்ப நன்றி... உன்ன மாறி ஒரு நல்ல மனுஷங்கூட வாழ எனக்குக் குடுத்து வைக்கல. என்ன மன்னிச்சிடு. ஆனா எதாவது ரூபத்துல நா உங்கூடவே தா இருப்பேன்... உனக்கு என்ன மறக்குறது கஷ்டமா இருக்காதுன்னு நா நம்புறேன். ஏன்னா நாம ரெண்டு பேரும் ஒரு காரணத்துக்காகத் தான காதலிச்சோம்.. இப்ப அது முடிஞ்சி போச்சி. சோ நாம பிரிஞ்சி போறது தா சரி. என்ன மன்னிச்சிடு. " என்ற கடிதமும் அவன் அவளுக்குக் கொடுத்த பரிசு பொருள்களும் இருந்தன.
சிவப்பு கல் மூக்குத்தி. அது அவன் அவளுக்காக வாங்கி தந்தது. அதை அணிந்து கொண்டு வந்தபோது அவளின் முகம் அந்த நிலவுக்குச் சவால் விடும் அளவுக்கு அழகாய் தெரியும் அவனுக்கு.
ஆனால்… ஆனால்…
இப்போது அவள் இல்லை. எங்கே சென்றாள்? என்று தெரியவில்லை. கோபம் மேலோங்க, தன் கையில் கிடைத்த பொருட்களை உடைக்க.
" அடேய் *** பயலே. அப்பனையும் ஆத்தாளையும் முழுக்கின உன்ன இத்தன நாளா சோறு போட்டு வச்சிருந்ததே பெரிய விசயம். இதுல வீட்டுல இருக்குற சாமா சட்டிய உடைக்கிறியா!. ரவுடி நாயே. வெளில போடா. உம்மாமெ வந்தா அவனையும் அடிச்சி தெரத்தி விடணும். " என அவனின் அத்தை கூக்குரல் கொடுக்க. கோபமாக வெளியேறினான் அவன்.
இந்த வடிவம் இல்லா காதல் படுத்தும் பாடு இருக்கே!!. அது மிகவும் கொடுமை.
கண்ணீர் நதியாய் வழிகிறதே
நினைப்பது தொல்லை
மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே
காட்டில் தொலைந்த மழை துளிபோல்
கண்ணே நீயும் தொலைந்ததென்ன
நீரினைத் தேடும் வேரினைப் போலப் பெண்ணே உன்ன கண்டெடுப்பேன்
கண்கள் ரெண்டு மூடும்போது
நூறு வண்ணம் தோன்றுதே
மீண்டும் கண்கள் பார்க்கும்போது
லோகம் சூனியம் ஆகுதே
சிறு பொழுது பிரிந்ததுக்கே
பலபொழுது கதறிவிட்டாய்
ஜென்மங்களாய் பெண் துயரம்
அறிவாயோ நீ
வைரமுத்து அவர்களின் பாடல் வரிகள் இவை. இவை எந்த அளவுக்கு உண்மை என்பதை இந்தக் கதையில் வரும் மாந்தர்கள் தங்களின் வாழ்க்கையில் வாழ்ந்து உணர்கின்றனர்.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..