முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

நேசிப்பாயா 2

 


அத்தியாயம்: 2


கலிபோர்னியா தொழில் மாகாணம் என்று சொல்லலாம் அல்லது அமெரிக்காவின் இதயம் என்று கூடச் சொல்லலாம். எனெனில் அங்குத் தான் நாம் உபயோகிக்கும் ஐபோன் நிறுவனமான ஆப்பிளின் தலைமை நிறுவனம் உள்ளது. ஆப்பிள் மட்டுமல்ல டெஸ்லாஸ்,‌ மைக்ரோசாப்ட் என வர்த்தக துறையில் கொடிகட்டி பறக்கும் நிறுவனங்கள் அனைத்தும் கலிபோர்னியாவில் உதையமானது. 


லாஸ் ஏஞ்சல்ஸ். 


கலிபோர்னியாவில் உள்ள முக்கியமான நகரம். நம் இந்தியாவில் எப்படி மும்பை, சென்னை, டில்லி முக்கிய நகரமோ அதுபோல் அமெரிக்காவின் மிக‌ மிக முக்கிய நகரங்களுள் அதுவும் ஒன்று. 


ஓங்கி உயர்ந்த மரங்கள் இல்லை கட்டிடங்கள். எந்த அளவுக்கு உயரம் என்றால் நீங்கள் அதன் மொட்டை மாடியிலிருந்து கீழே பார்த்தீர்கள் என்றால் அங்கு நிற்கும் கார்கள் அனைத்தும் சிறிய எறும்புபோல் தெரியும். மனிதர்கள் சிறு புள்ளிபோல் தெரிவர்.  அவ்வளவு உயரமாக, வானை முட்டித் தள்ளும் அளவிற்குக் கட்டியிருந்தனர். அதுவும் அழகிய கட்டிடங்கள். 


அதேபோல் ஒரு கட்டிடத்தின் வாயிலில் தான் ஒரு கார் வந்து நின்றது. லக்ஸரி கார் என்று சொல்லப்படும், அனைத்து சவுகரியங்களும் கொண்ட கார் அது. அதன் கதவைத் திறந்து கொண்டு ஒருவர் இறங்கினார். 


கருப்பு நிற கோர்ட் சூட்டுடன் கையில் ஒரு ப்ரீப் கேஸ்ஸை வைத்திருந்த அவர் தன் வேக நடையுடன் அந்தக் கட்டிடத்திற்குள் பிரவேசிக்க, அவரின் காரியதரிசி ஓடி வர வேண்டியதாக இருந்தது. 


நடந்து சென்றாலே பின்னால் வருபவர்கள் வேகமாக வந்தால் மட்டுமே அவரைப் பிடிக்க முடியும். இப்போது வேக நடை என்றால் சொல்லவா வேண்டும். 


அங்கிருந்த லிஃப்ட்டின் உள்ளே சென்று தன் மணிக் கட்டில் இருந்த கடிகாரத்தை பார்க்க, அவரின் பீஏ செல்லவேண்டிய தளத்திற்கான பொத்தானை அழுத்தினார். 


அவர் செல்ல வேண்டிய தளத்தில் ஒரு மீட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நீள்வட்டமாகப் போடப்பட்டிருந்த மேஜையை சுற்றி சுமார் இருபது பேர் கோர்ட் சூட்டுடன் அமர்ந்து தங்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தனர். அவர்களின் சம்பாஷனைகள் ஆங்கிலத்தில் இருந்தது. 


‘நமக்குப் புரியுற மாறி அதை டப்பிங் பண்ணிக்கிவோம். ‘


"மிஸ்டர் டேவிட். அது எப்படி சரிவரும்?. நாங்க அங்க பல வர்ஷமா food business பண்ணிட்டு இருக்கோம். இப்ப திடீர்னு வந்து காலி பண்ண சொன்னா என்ன பண்றது?. " என அதங்கமாகப் பேச,


"உங்கள யாரும் காலி பண்ண சொல்லல மிஸ்டர் பீட்டர். எங்க கூடச் சேந்து பிஸ்னஸ் பண்ண தா சொல்றேன். அதுவும் பார்ட்னர்ஷிப் முறைல. " என்றபடி உள்ளே வந்தார் சிவ்ராம். 


அவரின் வருகையால் பேரமைதி நிலவியது. இதுவரை பேசிக் கொண்டும் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டும் இருந்தவர்களின் சத்தம் எதுவும் கேட்கவில்லை. சிவ்ராமின் காலடி சத்தம் மட்டுமே கேட்டது. அது மரியாதை காரணமாகவும் இருக்கலாம். இல்லை பயத்தின் காரணமாகக் கூட இருக்கலாம்.  


சிவ்ராம் பக்கா பிஸ்னஸ் மேன். எதில் எல்லாம் லாபம் பார்க்க முடியுமோ, அதில் எல்லாம் தன்னுடைய பங்கை வலுக்காட்டாயமாக எடுத்துக் கொள்வார். அதற்காக யாரையும் மிதித்துக் கீழே தள்ளிச் செல்பவர் அல்ல.


அந்தக் கலிபோர்னியா மாகாணத்தில் அவருக்கு என ஒரு குழுமம் உள்ளது. அந்த MET குழுமத்தின் கீழ் கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனி, சாப்ட்வேர் கம்பனியெனப் பல தொழில்கள் உள்ளன. எத்தனை தொழில்கள் இருந்தாலும் அவர்களின் ஆர்வம் இப்போது Hotel மற்றும் restaurant ன் பக்கம் திரும்பி உள்ளது. போட்ட காசை நூறு மடங்காகத் திருப்பித் தரும் ஒரே தொழில் உணவகங்களும், தங்கும் விடுதிகளும் தான். 


சொந்தமாகத் தொடங்கினால் வளர்ச்சி காண பல ஆண்டுகள் ஆகும். எனவே கரையான் புற்றெடுக்க கருநாகம் வந்து குடியேறிய கதைபோல் சில நட்சத்திர விடுதிகளின் உரிமையாளர்களுடன் வலுக்கட்டாயமாகப் பார்ட்னர்ஷிப் வைத்துள்ளனர். அந்தப் புற்றில் கரையானுக்கும் இடம் உண்டு. 


ஒப்பந்த அடிப்படையில் ஒற்றுமையாக இருக்கலாம் என்பது அவரின் திட்டம். 


" சிவ், அது என்னோட பல வர்ஷ உழைப்பு. அதுல பங்கு கேக்குறது எந்த விதத்துல நியாயம். " என்றார் அந்த வெள்ளைக்கார மனிதன். 


" மிஸ்டர் பீட்டர்சன், நீங்க எங்ககூட பார்ட்னர்ஷிப் வைச்சிக்கிட்டா உங்களுக்குக் கிடைக்கப்போற லாபம் ரொம்ப பெருசு. இதுவர நீங்கச் சம்பாதிச்ச பணத்த விட, இதுக்கு அப்றம் உங்களுக்குக் கிடைக்குற வருமானத்த நீங்கக் கனவுலையும் பாத்திருக்க மாட்டிங்க. உங்க ஸ்டார் ஹோட்டலோட தரத்தை இம்ப்ரூவ் பண்ணி அத டெவலப் பண்ணி நீங்க எதிர்பாத்திடாத வளர்ச்சிய உங்க பிஸ்னஸ்ல பாக்க போறிங்க… நீங்கச் சரின்னு சொன்னா!?. இல்லன்னா?. " எனச் சிறு மிரட்டல் தோனியில் மட்டுமல்ல அதிகார தோனியிலும் பேச,


அதைக் கண்டு எதிரில் இருந்தவன் பயப்படவில்லை. ஆனால் உடன் இருந்தவர்கள் கண்களில் சிறு பயம் தெரிந்தது. இதுபோல் எத்தனை பேரிடம் பேரம் பேசிப் பிஸ்னஸ் செய்திருப்பாரோ!


"எனக்கு உங்க பணம் தேவையில்ல மிஸ்டர் சிவ்ராம். " என்று சொன்னதோடு மட்டுமல்லாது அந்தப் பீட்டர்சன் மீட்டிங் ஹாலை விட்டு வெளியேயும் சென்று விட்டார். 


தனித்து போடப்பட்டிருந்த முதன்மை நாற்காலியில் வந்தமர்ந்த சிவ்ராமின் உதடுகள்‌ மெல்லியதாக விரிந்தன. அதைக் கண்ட அவரின் பீஏ, ஃபோனில் யாரிடமோ பேச, மற்றவர் மதிக்காமல் சென்ற அந்தப் பீட்டர்சனின் பரிதாப நிலையை நினைத்துப் பார்த்தனர். அதைத் தங்களின் முகத்தில் காட்ட சிவ்ராம் தன் தொண்டையை சொருமிக் கொண்டு அவர்களின் கவனத்தை திரும்பி அவர்களுடன் பேசத் தொடங்கினர். அது லாஸ் ஏஞ்சல்ஸ்ஸில் ஹோட்டல் பிஸ்னஸ் செய்பவர்கள்‌ ஒன்று கூடியிருக்கும் மீட்டிங். 


தன் வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டு மாலை நேரம் தன் வீட்டிற்கு செல்ல, அங்கு அவரின் மனைவி அவருக்காகக் காத்திருந்தார். அமிர்தா. மாளிகை போன்ற வீடு இருந்தாலும் அமிர்தாவின் எளிமை என்றும் வியப்பை தந்தது சிவ்ராமிற்கு.  


"ஏ பேபி வாசல்லயே நிக்கிற?. " என மனைவியை வந்தணைத்தார்.


"உங்கள பாக்க யாரோ வந்திருக்காங்க. வெயிட்டிங் ரூம்ல இருக்காங்க.‌ " என்றார் அவர் புன்னகையுடன்… மனைவியின் சிரிப்பில் தன்னை மறந்தவர் அவரின் கன்னத்தில் தன் இதழ் பதிக்க,


"ஐய்யோ என்னதிது!!. பேரெபேத்தி எடுத்த வயசுல இப்படியா!.‌ போங்க‌ அவரு ரெம்ப நேரமா காத்துட்டு இருக்காரு. " என்றார் வெட்கத்துடன்.


" எத்தன வயசான என்ன பேபி. யூ ஆர் மை வைஃப். " என்றவர் அவரின் மற்றொரு கன்னத்திலும் தன் இதழ் பதித்து விட்டுச் சென்றார். 


அங்கு வெயிட்டிங் ரூமில் பதட்டத்துடன் அமர்ந்திருந்தார் பீட்டர்சன். காலையில் வீராப்பாய் பேசிச் சென்றாரே அவர் தான் அது.


" என்ன பீட்டர்?. கான்ட்ராக்ட் சைன் பண்ணிடலாமா. " சிவ்ராம். நினைத்ததை சாதித்து விட்ட குரலில் சந்தோஷமாகக் கேட்க,


"எஸ் ஸார். எங்கிட்ட வேற வழி இல்லையே!!. " என்றார் சோகமாக. சிவ்ராம் திரும்பித் தன் பீஏவை பார்க்க, அவர் சிறு தலையசைப்புடன் பீட்டருடன் போட வேண்டிய ஒப்பந்த பத்திரத்தை எடுத்து வந்தார். 


சிவ்ராம் தங்களுக்கு ஒத்துவராதவர்களின் இடத்தில் பிரச்சினை செய்து, போலிஸ்ஸிடம் போதை கும்பலிடம் என்று மாட்டி விட்டு, ஒரு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கி, பின் காப்பாற்றுவது போல் வந்து அவர்களுடன் பிஸ்னஸ் பேசுவார். அது அவரின் வழக்கம். பீட்டர்சனுக்கு மனமே இல்லை. தான் உழைத்துக் கட்டிய ஹோட்டலை இவர்களுடன் பகிர்ந்து கொள்வது.


ஆனால் வழியில்லையே!. போதை கும்பலுடன் தொடர்பு உள்ளதா எனத் தினமும் வந்து சோதனை போடும் போலிஸ்ஸால் யாரும் அவரின் ஹோட்டலுக்கு சில காலமாக வருவதில்லை. இன்று துப்பாக்கி சூடு நடத்தி அதில் இருவர் இறந்து விட்டதாகச் செய்தி. அதான் வந்து நிற்கிறார். 


" இதுல கையெழுத்து போடுங்க பீட்டர்சன். " எனப் பத்திரத்தை நீட்ட, வேக வேகமாக வாங்கியவர் கையெழுத்து போடும் முன்,


"பத்திரத்த படிச்சிப் பாத்துட்டு போடு பீட்டர்." என்க, படித்துப் பார்த்த பீட்டருக்கு மகிழ்ச்சி அவரின் கண்களில் தெரிந்தன. 


"ஸா.ர்… " என்க,


" நா காலைல சொன்னது தா பீட்டர். உன்னோட ஹோட்டல நா விலைக்கி வாங்க விரும்பல. இனி இது நம்ம ஹோட்டல்." என்க, பீட்டருக்கு மகிழ்ச்சி. ஏனெனில் பார்ட்னர்ஷிப் முறையாகப் பின் பற்றப்பட்டு இருந்தது. லாபம் தான் அவருக்கு. சில பல பேச்சுக்குப் பின் பீட்டர் செல்ல மணி எட்டு தொட்டது. 


டைனிங் டேபிள். 


எவ்வளவு தான் வேலை இருந்தாலும் ஒரு வேளை உணவாவது குடும்பமே ஒன்று கூடி உண்ண வேண்டும். இது சிவ்ராமின் காலம் சென்ற தாயாரின் உத்தரவு. இப்போது வரை பின்பற்றுகிறனர். வேலை பளு இருக்கும் சமயங்களில் மட்டும் கிடையாது. 


" ஹாய் ப்பா!. இன்றைய நாள்‌ எப்படி போச்சி. " என்ற கேட்டபடி வந்து அமர்ந்தாள் ஒரு யுவதி. வயது இருபத்தி நான்கு இருக்கும். தந்தையின் தொழிலில் பங்கு கொள்ளும் பிஸ்னஸ் விமேன் அவள். பெயர் புவனா. பார்க்க இன்டியன் அமெரிக்கன் கமினேஷனில் இருப்பாள். 


" ம்… Not bad. உனக்கு?. " 


"அதே தாம்ப்பா. என்னப்பா நம்ம வீடு இவ்ளோ அமைதியா இருக்கு?. என்ன காரணம்?. " 


"ம்… அதான. மாதேஷ்ஷும் உன்னோட அண்ணியும் வீட்டுல இருந்தும்மா வீடு அமைதியா இருக்கு?. " சிவ்ராம். 


" Including your mother -in-law. அவங்களையும் சேத்துக்கங்க. Non Stop loud speaker." என்றபடி வந்தான் ஓர் இளைஞன்‌. இவன் தான் நம் கதையின் இரண்டாவது நாயகன்.


 ருத்ரதேவ். 


வீட்டிற்கு வெளியே விரைப்பாய் கெத்தாய் தன் முதலாளித்துவத்தை விட்டுக்கொடுக்காத அழகிய ஆண்மகன். வயது இருபத்தி ஏழு. 


" வா தேவா. இப்ப தா பீட்டர் வந்துட்டு போறான். " 


" ஐ நோ டாட். வந்து தான ஆகணும். கன் சூட்லாம் நடந்திருக்கும் போலயே. யார் காரணம்னு தெரியாமலா இருக்கும்!. " என்றவனின் தோரனையே சொல்லியது அவன் தான் அதைச் செய்தது என்று. பீட்டருடன் போட்ட காண்ட்ராக்ட்டை படித்தபடி உணவு மேஜையில் அமர, அமிர்தா வந்து அதைப் பிடுங்கி கொண்டார். 


" இது டைனிங் டேபிள். உங்க பிஸ்னஸ்ஸ இதுக்குள்ள வச்சிக்காதிங்க. அதென்ன டா யுவர் மதர் இன் லா. உனக்கு அவங்க பாட்டி. என்னோட அம்மாங்கிற உறவுக்கு மரியாத தரலன்னாலும் வயசுக்கு மரியாத குடு. " எனக் கோபமாகச் சொல்ல, சிவ்ராம் சிரித்தார்.‌


" ம்... Be respectful. பட் பாட்டிய விட அதிகமா வாய் பேசிட்டு இருக்கே ஒரு ஜீவன். அதா உங்க தம்பி. அவரையாச்சும் கொஞ்சம் பேசமா இருக்க சொல்லலாம்ல. அட்லீஸ்ட் ஒரு நாளுக்கு‌ ஒரு ஒருமணி நேரம் மௌன விரதம் இருக்க சொல்லுங்க. அது போதும். நா நிம்மதியா இருந்துப்பேன்‌. எனி டயம் டாக்கிங்… டாக்கிங்… டாக்கிங். கடிகாரத்துல இருக்குற நொடி‌ முள்ளு கூடப் பேட்டரி தீந்து போச்சின்னா நிக்கும். ஆனா உங்க தம்பி வாய். யப்பா. ஆமா எங்க அவரு?. " எனக் கேட்டுக் கண்களால் தேட, 


" நீங்க எழுந்து போய் வீடு முழுக்க தேடுனாலும் அவரு கிடைக்க மாட்டாரு ண்ணா. ஏன்னா அவரு அவரோட அம்மா, மக, மருமகெ, பேரன்னு‌ குடும்பமா சேந்து ஊர் சுத்தி பாக்க பக்கத்து டவுனுக்கு‌ போயிருக்காங்க. " 


" ஃபேமிலி.!! அப்ப அந்த ஃபேமிலில நம்ம அம்மா கிடையாதா?. " எனக் கோபமாக முறைத்துக் பார்க்கும் அன்னையை பார்த்துக் கேலி பேச, அவர் அவனைக் கரண்டியால் வலிக்காது அடித்தார். ஆனால் அவன் வலித்தது போல் நடித்தான். 


மிகவும் எதார்த்தமான குடும்பம் அவர்களுடையது. பேச்சு, சிரிப்பு என எப்பொழுதும் மகிழ்ச்சி மட்டுமே இருக்கும். வெளிநாட்டில் இருந்தாலும் நம் கலாச்சாரத்தைப் பின்பற்றுவதில் அமிர்தா கண்டிப்புடன் இருப்பார். 


நம்‌ தமிழ் பழக்க வழக்கங்களைச் சொல்லித் தந்ததால் வீட்டில் எப்போதும் தமிழில் தான் பேசுவர். அதே போல் தான் உணவும். நம் வழக்கப்படி இட்லி, சாம்பார், சட்னி வகையறாக்கள் எனத் தமிழ் நாட்டு உணவு மட்டுமல்ல பிற மாநில உணவுகளையும் அவர்களின் மேசையில் பார்க்கலாம். கணவனுக்கும் மகளுக்கு அந்த இட்டிலியை பரிமாறியவர் மகனுக்கு மட்டும் பாஸ்தாவை பரிமாறினார். உண்டு முடித்தபின். 


" தேவா. " 


"எஸ் டாட். " 


" நாளைக்கி நீ Fremont போ. அங்க பீட்டருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்னு இருக்கு. அத விசிட் பண்ணிட்டு ரிப்போர்ட் பண்ணு. " என்க, அவன் சரியெனத் தலையசைத்தான். 


" அங்க தான் கிருஷ் அண்ணாவும் அண்ணியும் போயிருக்காங்க. அப்பா ப்ளீஸ் பா. என்னையும் கூட்டீட்டு போகச் சொல்லுங்க ப்பா. மாமா கூட ஊர் சுத்திப்பாத்தா சூப்பரா இருக்கும். " என மகள் கேட்க, சிவ்ராம் ஓகே என்றார். அதுவும் இப்போதே செல்லலாமென அவள் அடம்பிக்க, புறப்பட்டும் விட்டனர்.‌ காரில் ஏறி அமர்ந்த புவனா,


" தேவ்வண்ணா உனக்குத் தெரியுமா அங்க இன்டியன் ரெஸ்டாரன்ட் ஒன்னு இருக்குன்னு என்னோட ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க. பேரு classic food ரெஸ்டாரன்ட். டேஸ்ட் செம்மையா இருக்குமாம். அங்க போனா நா மறக்காம போய் அந்த ஹோட்டல் சாப்பாட டேஸ்ட் பண்ணிடணும். " என்ற தங்கையை ஏற இறங்க பார்த்தவன்,


"‌ அந்த ரெஸ்டாரன்ட்ல சாப்டணும்னு சொல்லித்தா எங்கூட கார்ல எறி உக்காந்திருக்கியா?. " எனப் பூடாகூடமாகக் கேள்வி கேட்க, 


"ம்... ஆமா ண்ணா. ரொம்ப வர்ஷமா இருக்காம் அந்த ரெஸ்டாரன்ட் பட் நா இன்னும் போய்ப் பாக்கவே இல்ல. " எனச் சோகமாகச் சொல்ல, 


"Buvana went down a little. " எனக் கொஞ்சம் கீழே இறங்க சொன்னான் தேவ். 


"என்னாச்சி ண்ணா. " 


"ஃபோன மறந்துட்டேன். போய் எடுத்துட்டு வாறியா. " என உள்ளே அனுப்பியவன் அவள் திரும்பி வரும் முன் கார் எடுத்துக் கொண்டு சென்று விட்டான். 


ஏ…ஏ.? இந்தக் கொல வெறி. 


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


நேசிப்பாயா 3



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...