முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 21

  அத்தியாயம்: 21   ஆர்த்தி, கையில் பெரிய உறையுடன் நுண்ணலை அடுப்பில் எதையோ வைத்து மூடி விட்டு, பெரிய பாத்திரத்தில் இருந்த வெண்ணையையும் சர்க்கரையையும் எலக்ட்ரிக் பீட்டரால் கலக்கத் தொடங்கினாள். அதன் சத்தத்தில் கதவைத் திறந்துக் கொண்டு வந்து நின்ற தர்மாவை அவள் கவனிக்கவில்லை. மும்மரமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள்‌   அவள் தன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்பதே தர்மாவிற்குள் பூங்கொத்துக்களைத் தோரணை கட்டித் தொங்க விட்ட உணர்வைத் தர, அமைதியாக அவளையே பார்த்தபடி நின்றான்.   எங்கே அவளைத் தொட்டால் கானல் நீராக மறைந்து விடுவாளோ என்ற பயம் உதிக்க, அவனின் தேவதையை விழிகளால் அவதானிக்கத் தொடங்கினான்.   வழமை போல் தூக்கிச் சொருகிய பாவாடை… மேலே அவனின் சட்டை… அதுவே அவளின் மேனியைத் தழுவிக் கொண்டது போன்று அவனுள் ஆசைத் தீயைப் பற்ற வைத்தது. தான் அணிவித்து விட்ட தாலி, வேலைப் பளுவின் காரணமாக சட்டைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்க, அவளின் கை அசைவுகளுக்கு ஏற்றார் போல் அது குதித்தாடியது…   முகம், கை, கணுக்கால்களை மட்டும் காட்சிப் படுத்தி நின்ற தன்னவளைக் கண் இமைக்காது பார்த்தா...

நேசிப்பாயா 3


 

அத்தியாயம்: 3


Fremont


ரொம்ப அழகான சிட்டி. சுத்தி பாக்க, என்ஜாய் பண்ண கத்துக்கன்னு நிறைய விசயம் இருக்கு அங்க. மக்கள் தொகை என்பது நம் ஊர்கள காட்டிலும் அங்க கொஞ்சம் கம்மி தான். பட் லைஃப் ஸ்டைல் நல்லா இருக்கும். ரொம்ப நல்ல இடம். இயற்கையோட இணைஞ்சி இருக்குற ஒரு சிட்டி.


சுத்தி பாக்க பல இடம் இருந்தாலும் நாம இப்ப அங்க எங்கையும் போல. ஏன்னா இப்ப இருட்டீடுச்சி. எதுவும் கண்ணுக்குச் சரியா தெரியாது. பகல்ல போவோம். சரியா.


அந்த அர்த்த ராத்திரி ஆகப்போற நேரத்தில, அந்தச் சிட்டில இருக்குற ஒரு ஹோட்டல்ல இருந்து இரு ஜீவன்கள் தனிமையை நாடி வெளியே வந்து தன் கரங்களைக் கோர்த்தபடி ஆள் ஆரவாரம் இல்லாத சாலையில், ஒட்டிக் கொண்டும் கட்டிக் கொண்டும் நடை பயின்று கொண்டிருந்தனர்.


காதலர்கள் என்று நீங்க நினைக்க வேண்டாம். ஏனெனில் ஒரு ஜீவன் நடுத்தர உயரமும், மற்றொரு ஜீவன் அந்த நடுத்தர ஜீவனின் இடை வரை மட்டுமே வளர்ந்திருந்தது. அந்த இருவருக்கும் பின்னாலேயே மற்றொரு ஜீவன் கத்திக் கொண்டே வந்தது.


"ம்மா... ம்மா... நில்லும்மா. உனக்கு இந்த ஊரு புதுசு. நீ பேசாட்டிக்கி போனா எப்படி திரும்பி வருவ?. சொன்னா கேளும்மா. இப்படியே திரும்பி நம்ம ரூம்க்குள்ள போய்டலாம் வாம்மா. " எனக் கத்த,


" நா எதுக்கு டா வரணும். நா பேசாட்டிக்கி சிவனேன்னு எங்கூர் திண்ணைல படுத்துக் கிடந்தேன். வா!. உனக்கு அமெரிக்காவ சுத்தி காட்டுறேன்‌. அன்டார்டிக்காவ சுத்திக்காடுறேன்னு கூட்டீட்டு வந்துட்டு, ஒரு மாசமா அடச்சி வச்சி கொடும படுத்துற. உன்ன பெத்த வயிறு பத்தி எரியுதுடா. பெத்த தாய ரூம்க்குள்ளையே பூட்டி வைக்க உனக்கு எப்படி டா மனசு வருது. " எனக் கத்தியபடியே அவரின் தாயும் நடந்து செல்ல,


"ம்ச்... நானா உன்ன ரூம்க்குள்ள அடச்சி வச்சேன். நீயாத்தான உள்ளுக்குள்ள போய் உக்காந்துக்கிட்ட. உங்கண்ணே வீடு தான அது. கூடவே உம்மகளையும் கட்டிக்குடுத்தருக்க. உரிமையா நடமாடுனா என்னவாம். நீ யாருக்கிட்டையோ காட்ட வேண்டிய கோவத்த எங்கிட்ட காட்டுனா எப்படி ம்மா?. "


"எது எம்மகளா!. அப்ப உனக்கு அவ அக்கா இல்லையா?. நா சொல்லச் சொல்ல கேக்காம உம்மக தாரிகாவ உங்கக்கா மகனெ கிருஷ்ணனுக்கு கட்டி வச்சி சம்மந்தம் பேசுனியே. அப்பெல்லாம் அது உனக்கு அக்காவா தெரியல. இப்ப மட்டும் என்ன உம்மகன்னு சொல்லுற.


சரி தா எம்மகா தா. அது எனக்கு மட்டும் மகா தா. ஊருக்குள்ள அத்தன பேரும் சொன்னாய்ங்க. வெளிநாட்டுக்காரனுக்கெல்லாம் பொண்ண குடுக்காத. அப்றம் அவதிப்படுறது நீ மட்டுமில்ல உம்பொண்ணும் தான்னு. கேட்டாரா அந்தாளு. சொந்தம் விட்டுடக் கூடாது. உறவு விட்டுடக்கூடாதுன்னு எம்புருஷெ செஞ்ச வேல இது. இப்ப எல்லாரும் சந்தோஷமாத்தா இருக்காங்க. எம்மக மட்டும் அந்த வீட்ட விட்டுட்டு வெளியே வராம கஷ்டப்படுறா. " எனக் கண்ணீர் வடிக்க,


"ம்மா… நீ போடுற சீனப்பாத்தா. அமிர்தா வ நாங்க வேணும்னே விட்டுட்டு வந்த மாறில்ல இருக்கு. அவா தா நம்ம கூட வரமாட்டேன்னு சொல்லிட்டு மச்சான் கூட இருக்கா. எதாவது வேலையா இருக்கும் ம்மா. " என்றார் சமாதானமாக.


" வேல இருக்குங்கிறவ எதுக்கு வா வான்னு கூப்பிடணும். எல்லா வேலையும் முடிச்சிட்டு கடைசியா வந்து கொல்லி வச்சிட்டு எஞ்சமாதிய பாத்து ரெண்டு சொட்டு கண்ணீர் விடற மாறி ஃபோட்டோ ஒன்ன எடுத்துட்டு போ வேண்டியது தான. வந்துட்டான். எதோ காணாதத கண்ட கொரங்கு மாறி. நா கேட்டேனாடா. உன்னோட அமெரிக்கா எப்படி இருந்தா எனக்கு என்ன டா. அத சுத்தி பாத்து‌ தா நா நட்டமா நின்னுடப்போறேனாக்கும்.


வானத்துல பறக்க வைக்கிறேன்னு சொல்லி என்ன எந்திரிச்சி நடக்க கூட விடாம கூட்டீட்டு வந்திருக்க. அந்த எரோப்ளைன்ல உக்காந்திருந்து உக்காந்திருந்து முட்டிச் செத்தது தா மிச்சம். அப்படி கஷ்டப்பட்டு நா இந்த அமெரிக்காவ சுத்தி பாக்கணுமாக்கும். " எனத் தன் பாட்டுக்குப் புலம்பிய படியே செல்ல, அவரின் மகனும் பின்னாலேயே சென்றார்.


" பாட்டி. நில்லுங்க. எம்மகன எங்க கூட்டீட்டு போறிங்க. விடுங்க அவன. ரெண்டு நாள்ளல ஸ்கூல் இருக்கு அவனுக்கு. பாட்டி. " என்றபடி வந்தாள் ஒரு பெண்.


தாய், மகன், பேத்தி, கொள்ளுப்பேரன் என நான்கு தலைமுறையும் வீதியில் நடந்து கொண்டிருக்கிறது.


" எங்கூட எவ்வூருக்கு கூட்டீட்டு போறேன். அவனையாது நல்லபடியா வளக்கணும்ல. நா பெத்ததும் சரியில்ல. அது பெத்ததும் சரியல்ல. அடுத்த தலைமுறையாது நல்லா இருக்கவேண்டாமா!. "


"எங்க கூட்டீட்டு போறம்மா?. "


" செவிட்டு பயலாடா நீ?. எங்கூட ஊருக்குன்னு சொல்லிட்டே ‌இருக்கேன். மறுபடி மறுபடி கேட்டுட்டு. " என்ற பாட்டி நிற்கவே இல்லை.


' முட்டிச் செத்துடுச்சின்னு சொன்ன பாட்டியா இது!. இப்ப விட்டா கூட அமெரிக்கால இருந்து இந்தியாக்கு நடந்தே போய்ச் சேந்திடும் போலயே. ' பின்னால் வந்த பேத்தியின் மைண்ட் வாய்ஸ்.


இருவரும் கத்தி கத்தி பார்த்துப் பலன் இல்லை என்றதும் மூச்சி வாங்க ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


" என்னப்பா பாக்குறிங்க. போய் உங்கம்மாவ கூட்டீட்டு வாங்க. உங்க மாப்பிள்ளை வர்ற நேரம் ஆச்சி. " எனத் தந்தையை துரிதப்படுத்த, மகன் முடியவில்லை என்றாலும் ஓடிச் சென்று அன்னையே பிடித்தார்.


"ம்மா. உனக்கு இப்ப என்ன பிரச்சன்னனு சொல்லும்மா. தீத்து வைக்கிறேன். அத விட்டுட்டு சின்னப் பையெ கை பிடிச்சி இழுத்துட்டு பனி விழுற நேரம் பாத்து வீதி உலா போய்க்கிட்டு இருக்க. வாம்மா. " எனக் கரம்பற்றி இழுக்க,


" நா சிவனேன்னு தானடா இருந்தேன். என்ன ஏன்டா இங்க கூட்டீட்டு வந்து கொடும படுத்துற. " என ஆரம்பிக்க,


"பாட்டி... பாட்டி… ப்ளிஸ். என்ன வேணுமோ அத தெளிவா ஓப்பனா சொல்லுங்க. இந்தத் தலைய சுத்தி மூக்க தொடுறமாறியான விளக்கத்த திரும்பத் திரும்ப சொல்லாதிங்க. " எனக் கை எடுத்துக் கும்பிட, பாட்டியும் கும்பிட்டு.


" எனக்குச் சோறு வேணும் ஆத்தா. கிடைக்குமா?. " என்க, அப்பாவும் மகளும் மீண்டும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.


"ம்மா!. என்னம்மா நீ?. நா உன்னோட வயித்த காயப்போட்டு பட்டினி போட்ட மாறிக் கும்பிடுற. இறக்கும்மா கைய. " எனத் தாயின் கரத்தை இறகக்கிவிட்டார்.


"பாட்டி அதா ஹோட்டல்ல சாப்டோமே. "


" அந்த இத்து போன ரொட்டிய நீயே தின்னு. எங்கூரு கம்மங்களி கூட அம்புட்டு வாசமா இருக்கும். நீ வாங்கித்தந்தியே? அதுக்கு போர் என்டா?. வாய்க்குள்ளையே நுழையல. ஆனா அத தின்னு தா நா உயிர் வாழணுமா?. ஈஸ்வரா!. என்ன ஏன்ட்டாப்பா இப்படி கொடும படுத்துற. காலம் போன காலத்துல உன்னையே நினைச்சிட்டு உ சந்நதியே கதின்னு வேல செஞ்சி உசுர விட்டுடலாம்னு பாத்தா. இந்தப் பாடுபாவிங்க எனக்குச் சோறு போடாம கொல்லுறான்னுங்க. ஈஸ்வரா. உனக்குக் கண்ணு இல்லயாடாப்பா!!. " எனச் சத்தம் போட்டுப் புலம்பி வைக்க,


"ம்மா… ம்மா... மானத்த வாங்காத. மரியாதையா ரூம்க்கு வந்திடு. நீ என்ன கேக்குறியோ அதையே உனக்கு வீட்டுல போய் அமிர்தாக்காவ செஞ்சி தரச் சொல்லுறேன். வாம்மா முதல்ல. நாளைக்கி இங்கருந்து போய்டலாம்." என மெதுவாகக் கெஞ்சவே ஆரம்பித்து விட்டார் அவர்.


" சமச்சி கிழிச்சா. பச்ச கறிய பாதி வெந்ததும் எடுத்துப் பச மாறி எதையோ கொட்டி, ரத்தம் மாறித் தக்காளி சட்டினிய ஊத்தி குடுப்பளே அதுவா சோறு. " என்க, 


" இப்ப உனக்கு என்ன தா வேணும் பாட்டி. சொன்னிங்கன்னா இங்க ரெஸ்டாரன்ட் இருக்கு அங்க ஆர்டர் குடுக்கலாம். " தாரிகா


" நல்லாவே இருக்குக்காது டி. கட சாப்பாடாம் சாப்பாடு. மனுஷெ திம்பானா அத.”


" அப்பத் திங்கிறவனுங்கல பாத்தா உனக்கு மனுஷனா தெரியலயா. " எனக் கேட்க, தாயின் முறைப்பில் அடங்கிக் கொண்டார் மதன கோபால்.


" சரி வா. உனக்குப் பிடிச்ச நல்ல நம்மூர் சாப்பாடே வாங்கி தர்றேன்‌. "


" நல்லா இருக்காது டின்னு சொல்றேல்ல. "


" அதெல்லாம் சூப்பரா ‌ருசியா உன்னோட வீட்டுல சாப்பிடுற மாறி இருக்கும். நீங்க இங்கயே இருங்க நா கார் எடுத்துட்டு வர்றேன். " என சொல்லித் திரும்பிய மகளுடன் சென்றார் தந்தை.


ராசாத்தியம்மாள் தன் பேரன் மாதேஷுடன் ஹோட்டலில் போடப்பட்டிருந்த மர பெஞ்சில் அமர்ந்து கொண்டனர்.


இந்த ராசாத்தி அம்மாளுக்கு தூரத்து அண்ணன் முறைதான் குரு மூர்த்தி. சின்ன வயதிலேயே வீட்டை விட்டு ஓடி வெளிநாட்டில் செட்டில் ஆனவர். அங்கேயே ஒரு வெள்ளைக்கார பெண்ணாய் பார்த்துக் கல்யாணமும் செய்து கொண்டார். ஊர் பக்கமே திரும்பிக் கூட பார்க்கவில்லை.


என்ன ஆனதோ ஏதானதோ தெரியாது திடீரெனத் தன் சொந்த ஊரான தஞ்சையை அடுத்துள்ள கும்பகோணத்திற்கு தன் பிள்ளை குட்டிகளுடன் வர. அவரின் மனதில், தான் பார்த்து ரசித்து வளர்ந்த எந்த ஒரு கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் தன் பிள்ளைகள் அனுபவிக்கவில்லையே என்ற ஏக்கம் தோன்றியது. அதனால் சொந்த ஊருடன் தனக்கு இருக்கும் சொந்தம் விட்டுப் போகாமல் இருக்க, தன் தூரத்து உறவில் தங்கை முறையில் இருக்கும் ராசாத்தி அம்மாளுடன் சம்மந்தம் வைத்துக் கொண்டார். அதாவது பெண் குடுத்து பெண் எடுப்பது.


தன் ஒரே மகள் சிவரஞ்சனியை ராசாத்தியின் மகன் (அதா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கத்திட்டே வந்தாரே அவர் தான்) மதன கோபால் அவருக்கும். ராசாத்தியின் ஒரே மகள் அமிர்தாவை குரு மூர்த்தியின் மகன் சிவ்ராமிற்கு திருமணம் செய்து வைத்தார்.


மதன கோபால் சென்னையில் இப்போது சொந்தமாகப் பிஸ்னஸ் செய்து வருகின்றார். அவருக்கு இரு மகள்கள். மூத்தவள் தாரிகாவை தன் அக்கா மகனுக்கே திருமணம் பேசி முடித்து விட்டார். க்ரிஷ் (கிருஷ்ண கேசவ்) தந்தையின் சாஃப்ட் வேர் கம்பெனிகளைப் பார்த்துக் கொள்கிறான். 


இப்போது மதன கோபாலின் இந்தத் திடீர் அமெரிக்கா பயணத்திற்கு காரணம். தன் மற்றொரு மகள் தன்யாவை ருத்ரதேவ்விற்கு பேசி முடிக்க வேண்டும் என்பது தான்.


ஆனால் அது இந்த ராசாத்தி பாட்டிக்கு பிடிக்கலவில்லை. 'எம்மகள இந்த நாட்டுக்குக் குடுத்தே தப்புன்னு சொல்லிட்டு இருக்கேன். இப்ப மொத்தமா சாமா சட்டிய‌ தூக்கிட்டு நம்மூர காலி பண்ணிட்டு வரப்போறானுங்கலாம். எல்லாம் எம்மருமக குடுக்குற யோசனையா இருக்கும். நா உயிரோட இருக்குற வரைக்கும் அந்தத் தேவா பயல எம்பேத்திக்கு கட்டிவைக்க விடமாட்டேன். ' என்று கங்கணம் கட்டிக் கொண்டு ராசாத்தியம்மாளும் அந்த இயந்திரப்பறவையில் பயணம் செய்து வந்துள்ளார்.


அவருக்குத் தன் முதல் பேரன் கிருஷ்ணாவை மிகவும் பிடிக்கும். எது சொன்னாலும் சிறு வெட்க புன்னகையுடன் தலையசைத்து கேட்டுக் கொள்வான். அதுமட்டுமல்ல க்ரிஷ் பார்க்கப் பழக என நம்மூர் பசங்ககளை போல் மீசை வைத்து புதிய நிறமாக இருப்பான். வெளிநாட்டு ப்ராடெக்ட்ன்னு சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.‌ அதனால் தான் தாரிகாவின் திருமணத்தில் எந்தப் பேச்சையும் பேசாமல் சந்தோஷமாகவே திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்தார்.


ஆனால் நம் தேவ் இருக்கானே. அவனுக்கும் ராசாத்திக்கும் ஏழாம் பொருத்தம் தான்.‌ ராசாத்தி அம்மாள் எது சொன்னாலும் அதற்கு நேர் மாறாக எதையாவது செய்து அவருடன் மல்லுக்கு நிற்பான். அதுமட்டுமல்ல உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோலுரித்து வைத்தால் பளிச் என வெள்ளை வெளேர் என்று இருக்குமே அதுபோல் இருப்பான். மீசை கிடையாது. புருவத்தைத் தவிர முகத்தில் முடிகளே கிடையாது. அந்தப் புருவமும் அடர்ந்து கருமையாக இருக்கும். கருமை புருவங்களில் மட்டுமல்ல தலை முடியும் தான்.


பங்க் என்று முடியை வேறு சற்று நீளமாக வளர்த்து வைத்திருப்பான். எப்போது அவனிடம் பேசத் தொடங்கினாலும் நுனி நாக்கில் ஆங்கிலம் வந்து நர்த்தனம் ஆடும். அதுவும் ராசாத்தியிடம் பேசும்போது அது குத்து பாட்டுக்கே டான்ஸ் ஆடும். சிவ்ராம், அமிர்தா, புவனா, கிரிஷ் இவர்களைத் தவிர வேறு யாருடனும் கலகலப்பாகப் பேச விரும்பமாட்டான்.‌ தானாக வந்து பேசினாலும் அவாய்ட் செய்து விடுவான்.


சமீப காலமாகச் சிவ்ராமின் வலது இடது என எல்லா கையும் அவன் தான். க்ரிஷ்ஷை காட்டிலும் அவனுக்குத் தந்தையின் தொழில்மீது ஈடுபாடு அதிகம். அதனால் அவனுக்குத் தலைக்கனம் அதிகம் என்பது ராசாத்தியம்மாளின் எண்ணம். அது அவருக்கு மட்டுமல்ல தாரிகாவிற்கும் உண்டு.


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி


நேசிப்பாயா 2 நேசிப்பாயா 4



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

என்னை சுடும் பனி

  அத்தியாயம்: 1 சென்னை மாநகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது.  இந்தியாவில் தவிர்க்க முடியாத நகரம். நம் தலைநகரும் கூட. அது எப்பொழுதுமே பிஸியாகத்தான் இருக்கும்.  மெட்ரோ ரயில், மெரினா பீச், கட்சி ஊர்வலங்கள், மறியல் போராட்டம் எனப் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத அந்த நகரில் பைக் ரிப்பேராகி ஓர் இளைஞன் அதனுடன் போராடிக் கொண்டிருந்தான்.  "நமக்கு ஒரு நல்லது நடக்க போதுன்னா இதுக்கு பொறுக்காதே… ச்ச... " எனக் காலால் அதை உதைத்தவனின் அலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது.  "மச்சான் எங்க இருக்க? அவங்க வந்துட்டாங்கடா.. அடுத்து நீ தான்.. " என நண்பன் கதற,  "இதோ டூ மினிட்ஸ். " என்றவன் பைக்குடன் போராடிக் கொண்டிருந்தான். "வந்திடு மச்சான். இல்லன்னா என்ன நடக்கும்னு தெரியும் தான! " என மிரட்டலாக கேட்க…  " ஆன் தி வே. அதுவர சமாளி. " என்றவன் பைக்கை ஓரங்கட்டி லாக் செய்து விட்டு, பின் இருக்கையில் இருந்த ஒரு பார்சலை மட்டும் எடுத்துக் கொண்டு ஆட்டோவிற்காகக் கை அசைத்தான்.  அவனின் அவசர தேவை புரியாது எந்த ஆட்டோக்காரரும் நிப்பாட்டவில்லை. மணிக்கட்டைப் பார்ப்பதும் பின் நிமிர்ந்து சூ...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...