முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 4


 

அத்தியாயம்: 4


"எம்மாடி தாரிக்கா. நில்லும்மா. அப்பாவால நடக்க முடியல. " என மதன கோபால் மூச்சி வாங்க நடந்து வந்தார்.


"அப்ப நீங்களும் உங்கம்மா கூட அங்கயே உக்காந்திருக்கலாம்ல. நா காரை எடுத்துட்டு வந்திருப்பேன்ல." என்றாள் மகள்.


" அதில்லம்மா. அக்கா இப்ப தா ஃபோன் போட்டுச்சி. சின்ன மாப்பிள்ள இங்க தா வாராராமே. அவருக்கு இந்த இன்டியன் ரெஸ்டாரன்ட்னா பிடிக்காது. அவரு வர்ற நேரமா பாத்து நாம அங்க போனா நல்லாவா இருக்கும். அதா இன்னொரு நாள் போலாமேன்னு. " என இழுக்க, மகள் முறைத்தாள்.


"உங்க சின்ன மாப்பிள்ளைக்குப் பிடிக்கலன்னா நாங்க எதுவுமே செய்யக்கூடாதாக்கும். என்னப்பா இது. நீ ஏம்ப்பா இப்படி அவனுக்குக் கீழ இறங்கி போறிங்க. நீங்களும் பிஸ்னஸ் மேன் தா. உங்களுக்குச் சென்னைல பெரிய பெரிய வீடெல்லாம் இருக்கு. இப்படி அவனுக்குப் பயந்துட்டெல்லாம் இருக்காதீங்கப்பா. அவெ ஒரு ஆளுண்டு அவன போய்ச் சின்ன மாப்பிள்ளை அது இதுன்னுட்டு. ஹிம். " என்றால் அலட்சியமாக.


எனெனில் ருத்ரா தாரிகாவை மதித்துப் பேசியது கூட இல்லை. அண்ணியாக வேண்டாம் சிறு வயதில் பேசிச் சிரித்து விளையாடிய தோழியாகக் கூட‌ நினைக்கவில்லை. எப்பொழுதும் அலட்சிய பார்வை சிந்தி வீட்டிற்கே அவன் தான் பாஸ் என்பது போல் நடந்து‌ கொள்வது தாரிகாவிற்கு பிடிக்காது. கிரிஷ்ஷும் புவனாவும் அத்தை மாமன் வீடு என வருடம் ஒரு முறை வந்து ஒரு மாதமாவது மதன கோபால் வீட்டில் தங்கிச் செல்வார். இந்தத் தேவ் பிறந்ததில் இருந்தே‌ விரல் விட்டு எண்ணும் அளவுக்கு மட்டுமே வந்துள்ளான்.


" அத்த மாமான்னு மத்த ரெண்டும் பேரும் வரும்‌போது தொறக்கி மட்டும் எங்கூரு கசக்குதோ. " என்பாள் தாரிகா.


கசப்பு இந்தியாவிற்கு வரும்போது மட்டுமல்ல. இந்திய உணவுகளைத் தொண்டைக்குள் இறக்கும் போதும் இருக்கும். தன் ஏழு வயதிலிருந்து அவன் இந்திய உணவைத் தொட்டது இல்லை. சீஸ், ப்ரெட், டாக்கோஸ், கேக்ஸ், ஹாட் டாக், பர்கர், பீசா, செலெட், கெலாக்ஸ். ஓட்ஸ் என அந்த உணவுகளைத் தான் விரும்பி உண்பான்.‌ இறைச்சி வகைகள் கூட ஓகே தான். அதுவும் காரம் இல்லாமல் இருக்க வேண்டும்.


சாதம், சப்பாத்தி, சாம்பார், பரோட்டா, தோசை என நம்மூர் உணவுகளைக் கண்டாலே வேப்பக்காயை உண்டது போல் முகம் கோணும். அவனுக்கு மட்டுமே ஸ்பெஷலாகச் செய்வர் அமிர்தா. இத்தாலியன், சைனீஸ் உணவுகளைக் காரமில்லாமல்.


" நாங்க எல்லாரும் அந்த வெந்த சோத்ததா சாப்பிடுறோம். நல்லாதான இருக்கோம். இவனுக்கு மட்டும் என்ன வந்தததாம். அத்தைக்காக மாமா கூட இன்டியன் ஃபுட்டத்தா சாப்பிடுறாரு. இவெ மட்டும்‌ அதிசய பிறவியா இருப்பான் போல. ச்ச. "


அதுமட்டுமில்ல கோபம் வந்தால் தினமும் ஒரு பொருள் உடையும். கோபம் அதிகமாக வராது. ஆனால் வந்தால் அது காஸ்ட்லியான கோபமாகத்தான் இருக்கும். ஏனெனில் அதிகம் உடைபடுவது அவனின் கார், செல்ஃபோன் மற்றும் பைக். பந்தா காட்ட மாதம் ஒரு புதிய ஃபோன். புதுமாடல் கார். எனப் பணத்தை வரைமுறையின்றி கண்ட படி செலவு செய்கிறானென தேவ்வுடன் தாரிகாவிற்கு சிறு வயதில் இருந்தே ஆகாது. அதிலும் இப்போது அண்ணி வேறு.‌


"மாப்பிள்ள மேல எனக்கு எதுக்கு பாப்பா பயம். நம்ம தன்யாவ கட்டிக்க போறவரே அதான் கொஞ்சம் மரியாத குடுக்கிறேன். "


'எது இவெ தலைல எந்தங்கச்சிய கட்டி வைக்கப் போறீங்களா. ' என்றிருந்தது மதன கோபால் முதல் முறை தன்யாவின் திருமண செய்தியைக் கேட்டு. தன்யாவிற்கு புவனாவின் வயது தான் இருக்கும். புவனாவிற்கே அடுத்த மாதம் திருமணம் என்ற நிலையில் அடுத்து தேவ் தானென இப்போதே இடம் பிடிக்க முயல்கிறார் கோபால்.


"நீங்க மட்டும் தான் அவெ தன்யாவ கட்டிப்பான்னு நம்புறிங்க. ஆனா எனக்கு ஒரு துளி கூட நம்பிக்கை இல்லை. அவனுக்கும் தன்யாக்கும் செட் ஆகாது ப்பா. இந்த எண்ணத்த இப்பவே விட்டுடுங்க. " என்ற தாரிகாவிற்கு நம்பிக்கை உள்ளது தேவ்வின் மீது. எப்படியும் அவன் சம்மதிக்க மாட்டான் என்று.


"ஏ பாப்பா அப்படி பேசுற. அவங்க ரெண்டு பேரும் நல்லாத்தான பழகிக்கிறாங்க.‌ ஃப்ரண்ட்ஸ் மாறி.‌"


" அதுக்காகவா அவனுக்குப் போய் என் தங்கச்சி கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நினைக்கிறிங்க.‌ ஃப்ரண்ட்ஸ்‌ மாறிப் பேசிட்டா போதுமா.‌ என்ன நியாயம்ப்பா இது. நம்மூர்ல மாப்பிள்ளைங்களுக்கு பஞ்சமா என்ன?. "


" தன்யாவும் உன்ன மாதிரி இங்க அமெரிக்கால செட்டில் ஆகிவிடுவான்னு நினைச்சேன். " என்றவருக்கு அமெரிக்க மோகம். சிவரஞ்சனியை காரணம் காட்டி இங்கேயே செட்டில் ஆகிவிட நினைத்த அவரை, “ராசா வாப்பா’ என இழுத்து சென்றார் ராசாத்தி. சிவரஞ்சனிக்கும் இந்தியாவில் இருக்கத்தான் விருப்பம் என்று விட்டாள். அதனால் அக்காவைக் காரணம் காட்டி அவ்வப்போது வந்து சென்றவர், மகள்கள் இருவரும் இங்கேயே வந்து விட்டால் சிவரஞ்சனியை சரிக்கட்டி அமெரிக்காவில் செட்டில் ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்.


" ஏம்பா அமெரிக்கா, அமெரிக்கா ன்னு பறக்குறீங்க. இங்க ஒண்ணுமே இல்லப்பா. பெரிய பெரிய பில்டிங்க பாத்து ஆன்னு வாய பிளக்காதிங்க. நம்ம நாட்டுல இருக்குற நிம்மதி இங்க கிடையாது. " என்க.‌


"என்ன இருந்தாலும் அமெரிக்கா அமெரிக்கா தா. "


"உங்கள மாறி இக்கரைக்கி அக்கர பச்சன்னு நினைக்கிறவங்களுக்கு எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் புரியாது. எதுக்கும் நீங்க இளையராஜா மியூசிக் போட்டாரில்ல அந்தச் சொர்க்கமே என்றாலும் அந்தப் பாட்டு. அத திரும்பத் திரும்பக் கேளுங்க அப்பத்தான் உங்களுக்குத் தெரியும் நம்ம ஊரோட அருமை. " என்க.‌.


"பாப்பா. " என்றார் கெஞ்சலாக.


"முதல்ல அவன ஒரு அஞ்சி நிமிஷம் உங்க கூட உக்காந்து பேசச் சொல்லுங்க. அப்றம் அவனுக்கு நம்ம தன்யாவ கல்யாணம் பண்ணி வைக்கலாம், அவெ சம்மதிச்சா." என்று கூறி அறைக்குள் சென்றவள் காரின் சாவியை எடுத்துக் கொண்டு வெளியேறினாள்.‌


Classic Foods.


தரமான உணவுகள் என்று பொருள். பல வண்ண விளக்குகளால் மின்னிய அந்த ரெஸ்டாரன்ட்டில் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். இந்திய உணவுகள் மட்டுமல்ல நீங்க எந்த வகையாக உணவுகள் எந்த விலையில் விரும்பிக் கேட்குறீங்களோ அதே விலையில் தரமாய் சூடாய் உணவு பரிமாறப்படும். சில ஆசிய‌ உணவுகள் அனைத்தும் வாழை இலையில் பரிமாறப்படும். 


கடையையும் கூட்டத்தையும் கண்ட ராசாத்தியம்மாள்,


"இந்த ஊருல எவெ வீட்டுலையும் அடுப்பு இருக்காதா என்ன?. எப்ப பாரு எந்த நேரமும் கடைலயே வாங்கி தின்னுட்டு திரியுறானுங்க. இப்ப நம்ம ஊரும் அப்படி தா மாறிட்டு வருது. " என வருத்தம் தெரிவிக்க,


"எப்பையாது ஒருதடவ தான பாட்டி. இறங்குங்க. நா பார்க்‌ பண்ணீட்டு வர்றேன். " எனத் தந்தையையும் பாட்டியையும் இறக்கிவிட்டவள் மகனைக் கையோடு அழைத்துச் சென்றாள். எனெனில் அவனுக்கு ஒரிடத்தில் நிற்கும் பழக்கம் கிடையாது. ஓடிக் கொண்டே இருப்பான்.


மகனைக் கையில் பிடித்தபடி நடந்து வந்தவளுக்கு எங்கு அமர்வது என்று தான் தெரியவில்லை. இருந்த மேஜைகள் அனைத்திலும் ஆட்கள் அமர்ந்திருந்தனர்.


" என்னடி கட இது. எங்க பாத்தாலும் ஆளுங்களா இருக்கானுங்க. கல்யாண வீடு கணக்கா நாம க்யூள நிக்கனுமா என்ன. " வேறு யாரும் அல்ல ராசாத்தியம்மாள் தான்.


"ம்மா. இந்தக் கட இங்க ஏரியால பிரபலமான கட ம்மா. அதா கூட்டம். " என அவரும் சளைக்காமல் தாயிக்கு இணையாகப் பேசிய‌படியே நிற்க.


"கொஞ்ச நேரம் சும்மா இருங்கிங்களா. தொனதொனன்டு. ச்ச. " எனத் தாரிகா திட்ட,


"நீங்கத் தமிழா?. " என்ற குரல் கேட்டது பின்னாலிருந்து.


மூவரும் ஒரு சேர திரும்ப, அங்கு அழகாய் ஒரு பெண் புன்னகை பூத்து நின்றுகொண்டிருந்தாள். பெண் தான் திருமணமான பெண் போலும். நெற்றியில் வைத்திருந்த குங்குமமும் கழுத்தில் தொங்கிய தாலியும் சொல்லியது மேட் இன் தமிழ்நாடு என்று. வயது நாற்பதை தாண்டி இருக்கும். ஆனால் அழகாய் இருந்தாள் அவள். அவளுக்குப் பாத்தமாய் பொருந்தி இருந்தது அந்தக் கரு நீல வண்ணச் சேலை. கடையின் ஊழியர் போலும். ஏப்ரான் கட்டி இருந்தாள் அவள்.


" நீங்க இன்டியன் ஃபுட் சாப்பிடுறதுக்காக வந்திருக்கிங்களா.? " என்றவளின் குரலும் இளமையாக இருந்தது.


" ஆமாம்மா அதுக்குத்தா வந்தோம். எங்களுக்குக் கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமாம்மா.? " என்றார் கோபால்.‌


" அம்மாடி இங்க சாப்பாடு நல்லா இருக்கும்னு சொல்லிக் கூட்டீட்டு வந்தா எம்பேத்தி. நல்லா இருக்குமா!. இருக்காதா.? வாய்ல வைக்கிற மாறி இருக்குமா?. இல்லை வாந்தி எடுக்குற மாறி இருக்குமா?. " ராசாத்தி.


"பாட்டீ. "


"இல்லடி இங்கையும் கண்றாவியாத்தா இருக்கும்னா வந்த வழியிலேயே திரும்பிப் போய்டலாம்ல. காச குடுத்து யாராது களிமண்ண வாய்க்குள்ள போடுவாங்களா?. " என அவளிடமே கேட்க, அவளுக்குப் புன்னகை அரும்பியது.


"மேம் என்னோட பேரு தாரிகா. இங்க டேபில் எதுவும் ஃப்ரீயா இருக்கா?. " 


"இது தா ஃபஸ்ட் டயமாமா‌ மேம் நீங்க இங்க வர்றது.? "


"எஸ் மேம்.‌"


"நீங்கப் புக் பண்ணிருந்திங்களா மேம்.? "


"இல்ல பண்ணல. ஆக்சலி நாங்க ப்ளான் பண்ணாம வந்துட்டோம். "


"இப்ப சாப்பாடு இருக்கா இல்லையா. " ராசாத்தியம்மாள்.‌


"பாட்டீ. “


" ம்மா. சும்மா இரும்மா. "


"எல்லா பயலும் சேந்து எவ்வாய தா மூடப்பாப்பானுங்க. போக்கதவிங்க. " என முணுமுணுக்க, அந்தப் பெண்.


"எங்கூட வாங்க. உங்களுக்கு அரேஜ் பண்ணி தாரேன். " என முன்னால் செல்லத் தாரிகா இருவரையும் திட்டிக்கொண்டே வந்தார்.


"வந்த எடத்தால வாய வச்சிட்டு சும்மா இருக்க மாட்டீங்களா!. ச்ச... நீங்க முன்னாடி போங்க. நா க்ரிஷ்கு கால் பண்ணிட்டு வர்றேன். " என்றவள் ஃபோனில் தன் கணவனை அழைத்தாள்.


"ஹலோ க்ரிஷ் எங்க இருக்க. உன்னோட வேல முடியவும் நா ஷேர் பண்ற லொக்கேஷன்க்கு வந்திடு. நாங்க ஹோட்டல் இருக்கோம். " என்க, அந்தப் பக்கத்திலிருந்து என்ன பதில் வந்ததோ இதுவரை சூடாக இருந்தவளின் முகத்தில் புன்னகையுடன் சிறு வெட்கமும் வந்தது. சில நிமிடங்கள் கணவனுடன் பேச்சிவிட்டு உள்ளே சென்றாள். அங்கே நம் ராசாத்தி வாழை இலையை வழித்து உண்டு கொண்டிருந்தார்.‌


" தாரி!! வா வா. வந்து இத சாப்பிடு. ரொம்ப சூப்பரா இருக்கு. நீ நல்ல இடத்துக்கு தா கூட்டீட்டு வந்திருக்க. ம்… ‌சாப்பிடு." என்றவரை வியந்து தான் பார்த்தாள் தாரிகா. பாட்டியை அல்ல‌ அந்த ஹாலை.


அந்த ஹோட்டல் இரு வேறு ஹால்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இந்திய உணவிற்கு என விசேஷமாக இந்திய கலையுணர்வுடன் ஆங்காங்கே ஓவியங்களும் சிலைகளும் நம் நாட்டை நினைவு படுத்துவது போல் இருந்தது. வெளியே அவர்கள் பார்த்தது பாஸ்ட் புட். துரித உணவுகள் கிடைக்கும் இடம். இன்டியன் ப்ளஸ் அமெரிக்கன் இரண்டுமே கிடைக்கும்.‌


நம் வீட்டில் உண்பது போல் உணர்வு மட்டுமல்ல உணவின் சுவையும் தரமானதாக இருந்தது. தஞ்சாவூரில் கிடைக்கும் சில விசேஷ உணவுகள் மேஜையில் நிரம்பி இருந்தன. தவலை அடையுடன், கடப்பாவும் சுடான இட்லியும், வாழை இலையை நிரப்ப, இனிப்பிற்கு பால் திரட்டும் பரிமாறப்பட்டது.


சுருள் ஆப்பம் அதன் சுவையே தனியாக இருந்தது. கேசரிமாஸ் என்பது இனிப்பு அல்ல அது ஆட்டின் தொடைகறியை சிலபல மசாலாக்கள் போட்டுப் பொரித்து செய்யப்படும் ஒரு வகை உணவு. அத்துடன் லஸ்ஸி. அத்தோடு நில்லாது பாசிப்பருப்பில் செய்த அசோகா அல்வா.


‘ஆஹா!. ஆஹா.! நம்ம நாட்டுல எதுக்கு முக்கியத்துவம் குடுக்குறோமோ இல்லையோ. நாக்குக்கு முதல் முக்கியத்துவம் தந்திடுறோம்.’


"இவ்வளோ கொறஞ்ச நேரத்துல எப்படி அவ்ளோ ஐட்டம்ஸ் செஞ்சிங்க. " தாரிகா வியப்பாக. ஏனெனில் பால் திரட்டு செய்யப் பல மணி நேரம் ஆகும். இவ்வளவு சீக்கிரம் எப்படி.?


" எங்க குக்குக்கு மேஜிக் தெரியும். சமயல் மேஜிக். " என்றார் அந்தப் பெண்.


"யாரும் மா அது.‌ நா பாத்தே தீரணும். வரச்சொல்லு. எத்தன நாளைக்கி அப்றம் நா நாக்குக்கு ருசியா சாப்பிடுறேன். அதுக்காகவே அந்தச் சமயக்காரனுக்கு தங்க காப்பு செஞ்சி போடணும். " என ராசாத்தியம்மாள் பாராட்ட, அவரின் சமயக்காரென் என்ற வார்த்தையில் அந்தப் பெண்ணின் முகம் சுருங்கியது. அதை அறிந்த தாரிகா.


"தப்பா எடுத்துக்காதிங்க. பாட்டி கொஞ்சம் ஸ்டெயிட் ஃபார்வேர்டு. மனசுல எதையும் வச்சிக்க மாட்டாங்க. அதுனால அவங்கள பெரிசா எடுத்துக்காதீங்க மிஸ்ஸஸ். " என அவளின் பெயரை அறிய முயல,


"ஜோஹிதா கார்த்திகேயன். " என்றவளின் முகத்தில் அத்தனை பிரகாசம். கார்த்திகேயன் அவரின் கணவனாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் தாரிகா.


மிகவும் கஷ்டப்பட்டு தன் மகனுக்குத் தாரிகா உணவை ஊட்ட, ஜோஹிதா தாரிகாவிற்கு உதவி செய்தார். அந்த ரெஸ்டாரன்ட்டில் வேலை செய்பவர் என்று நினைத்துக் கொண்ட தாரிகாவும் அவளுடன் சிரித்து பேச, மதன கோபால் தான் மீண்டும் ஆரம்பித்தார். ‘இதைச் சமைத்த குக்கை பார்த்தே ஆக வேண்டும் என்று’ ராசாத்தியும் சேர்ந்து கொள்ள, ஜோஹிதா அங்கிருந்த இன்டர்காமில் கிச்சனுக்கு அழைத்தாள்.


சமையல் செய்தவர் வரவும் ராசாத்தியும் மதன கோபாலும் பாராட்டித் தள்ள, க்ரிஷ் வந்தான். வந்தவன் அந்தக் குக்கை பார்த்து அப்படியே நின்று விட்டான்.‌.


"மிஸ்டர் கார்த்திகேயன். எப்படி இருக்கிங்க?. " என ஆனந்தமாக கைக்குளுக்கி கேட்க, மற்றவர்கள் ஜோஹிதாவின் கணவர் இவர் என்று நினைத்தனர்.


"உங்களுக்கு இவர முன்னாடியே தெரியுமா மாப்ள.? " கோபால்.


"தெரியாம எப்படி மாமா!. இவரு தா இந்த ஹோட்டல் ஓனர். " என்க.


'அட பாவமே! இவ்வளவு நேரம் ஓனர் பொண்டாட்டி கிட்டயேவா சாப்பாடு வெளங்குமா வெளங்காதான்னு கேட்டோம். ' என்றிருந்த ராசாத்தியம்மாளின் ரியாக்ஷன்.


தொடரும் ...

கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி  



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...