அத்தியாயம்: 5
" சிவ்ராம் ஸாரோட குடும்பத்த அன்போட வரவேற்கிறேன். " என்றான் கார்த்திகேயன் பணிவான புன்னகையுடன்.
கார்த்திகேயன் கம்பீரமான உருவம். அடர்ந்த மீசை. அதில் சில நரை முடிகள். காதில் ஓரத்தில் உள்ள கிர்தாவிலும் நரை ஒன்றிரண்டு நரை முடிகள். ஆனாலும் சிகை அடர்த்தியாக இருந்தது. நாற்பத்தி ஐந்து வயதிலும் கல்லூரி இளைஞர்போல் தோற்றம். அவரைப் பற்றி வர்ணிக்க வேண்டுமால். வேண்டாம். அவரின் மனைவி ஜோஹிதா என்னை முறைக்கிறார். அவளின் கணவனை வர்ணிக்கக் கூடாதாம். அவள் மட்டுமே ரசிப்பாளாம்.
‘
ரசிச்சிட்டு போட்டும். யாருக்கு வேண்டும். அரை கிழவனாகப்போற அவர வர்ணிச்சி நாங்க என்னத்த சாதிக்க போறோம். ஹிம்.’
"ஸாரி மிஸ்டர் அண்டு மிஸஸ் கார்த்திகேயன். உங்கள என்னோட ஃபேமிலி தொந்தரவு பண்ணிடலைல." க்ரிஷ் சிறு சங்கட்டமாக. அவனுக்குத் தெரியும் இன்னேரம் அவரின் சொந்த ஊர் எது? எப்படி? எப்போது? இங்க வந்து செட்டில் ஆனீர்கள் என்ற வரலாற்றை ராசாத்தியும் தன் மாமானாரும் கரந்திருப்பார்கள் என்று. அது உண்மையும் கூடத் தான். அதான் அந்தச் சங்கட்டம்.
"அப்படில்லாம் இல்ல கிரிஷ். உங்களுக்கு எப்படி என்ன தெரியும்?. " கார்த்தி.
" உங்கள நா ஒரு மீட்டிங்ல பாத்திருக்கேன். அப்பா தா சொன்னாரு. நீங்கத் தா இந்த ரெஸ்டாரன்ட்டுக்கு ஓனர்னு. பட் நீங்களே இறங்கி வந்து சமையல் செஞ்சி பரிமாறுவிங்கன்னு நா எதிர்பாக்கல." என்றவனும் கார்த்திகேயனின் கை பக்குவத்தை பாராட்ட, அங்குப் பேச்சும் சிரிப்புமாக இரவு உணவு முடிந்து கொண்டிருந்தது.
மற்ற அனைவரும் வெளியே சிறு சிறு மேஜையில் அமர்ந்திருக்க, இவர்கள் தனியாக ஒரு சிறிய கேபின் போல் இருந்த ஒன்றில் அமர்ந்திருந்தனர். யாரும் அனுமதியின்றி உள்ளே வர முடியாதபடி தனித்து இருந்தது அது. ஆனால் அனுமதி இல்லாமல் உள்ளே வந்து விட்டாள் ஒருத்தி.
" கார்த்திப்பா. வெளில க்ளோசிங்க போர்டு மாட்டாம என்ன பண்ணீட்டு இருக்கிங்க. சமக்கட்டு குள்ள போய்ட்டா உங்களுக்குத் தா நேரம் போறது தெரியதே. இந்த ஜோஹிம்மா எங்க போனாங்க?. கொஞ்ச கூடப் பொறுப்பே இல்ல அவங்களுக்கு. ச்ச.
வாசல்ல எப்பையும் போல அந்த மேத்யூ வந்து கலாட்டா பண்ணிட்டு இருக்கான். மாம்ஸ் அவனுங்கள சமாளிச்சிட்டு இருக்காரு. சொல்லி வைங்க. இனியும் அவெ வம்பு பண்ணா நா சும்மாலாம் இருக்க மாட்டேன். அவனோட ரெண்டு பல்லையும் கலட்டி அவெங்கிட்டையே குடுத்திடுவேன். இடியட். கொஞ்ச கூட மேனஸ் இல்லாத அறிவு ஜீ….வி... " என யார் இருக்கிறார்கள் என்று பாராது தன் பாட்டிற்கு பேசிக் கொண்டே இருந்தவள் சிவ்ராமின் குடும்பத்தைப் பார்த்து விட்டு அமைதியாகி விட்டாள்.
அது அவர்களின் ப்ரைவேட் ஹால். இரவில் கடை முடிந்ததும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டு விட்டுச் சொல்ல ஏதுவாய் இவர்களுக்காகவே பெரிதாக வடிவமைக்கப் பட்டது. பொதுவாக அதில் யாரையும் அனுமதிப்பதில்லை. திடீரென ஒரு கூட்டத்தைப் பார்க்கவும் பெண் அமைதியாகி விட்டாள்.
" வாசு. இவங்க வா. இவங்கதா. " என ஒவ்வொருத்தரையும் அறிமுகம் செய்தாள் ஜோஹிதா.
"இது எங்க பொண்ணு. வாசவி கார்த்திகேயன். " கார்த்திகேயனின் குரலில் பெருமையும் கர்வமும் இருந்தது. இவள் எங்களின் மகள் என்பதில்.
வாசவி அனைவருக்கும் வணக்கம் வைத்துச் சற்று சங்கடத்துடன் அமர்ந்து கொண்டு, அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தாள். நம்ம ராசாத்தி பாட்டி இருக்குற இடத்துல அமைதியா?. இருக்க கூடாதே. சத்தமில்லாம இருக்க விடாதே நம்ம பாட்டி. வாசவியிடம் எதை எதையோ பேச, கார்த்திகேயன் மதன கோபாலுடன் கதை அளந்து கொண்டிருந்தார். ஜோஹிதா வெளி சென்றுவிட, இந்த க்ரிஷ் மட்டும் வாசவியை வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டே இருந்தான்.
" டேய்.! ஏன்டா அந்தப் பொண்ணு அப்படி பாக்குற?. கடிச்சி முழுங்குற மாறி. " தாரிகா.
"அது அந்தப் பொண்ண எங்கேயோ பார்த்த ஒரு ஃபீல். ஆனா எங்கன்னு தா தெரியல.? உனக்குத் தெரியுமா?." என்றவன் பார்வையை மட்டும் திருப்பவே இல்லை.
"எனக்கு எப்படி தெரியும்?. நா வேணும்னா அந்தப் பொண்ணுகிட்டையே கேட்டுச் சொல்வா?." என்க.
"ம்… ம்… கேளு... கேளு. கூடவே அந்தப் பொண்ணு ஃபோன் நம்பரையும் கேட்டு வாங்கிட்டு வா. பேசிப் பழக நல்லா இருக்கும். " என்ற க்ரிஷ்ஷை தொடையில் கிள்ள,
" ஷ்… ஆ. " எனக் கத்தி விட்டான். அவனைத் தன் பார்வையால் அவனின் மனைவி எரிக்க,
"என்னாச்சி ராச. " ராசாத்தி
"மாப்ளை எதுவும் பிரச்சனையா?." எனக் கோபால் கேட்க, அவன் அசட்டு சிரிப்பு சிரித்தபடி மனைவியை முறைத்தான்.
" ஃபோன் நம்பர் வேணுமாம்ல ஃபோன் நம்பர். அத வாங்க பொண்டாட்டியையே நீ தூதி விடுற. உன்னல்லாம் வெறும் கைல கிள்ளக் கூடாது. முள்ளு கரண்டியால பிராண்டி வச்சிருக்கணும்." என அவள் முணுமுணுக்க, அவன் தன் மகனுக்கு உணவு கொடுப்பது போல் கையில் உணவுடன் மகனைக் காண, மகனின் இருக்கை காலியாக இருந்தது.
"மாதேஷ்!. மாதேஷ் எங்க போனான்?. தாரிகா பாத்தியா?. பாட்டி நீங்க?. " என்று படபடத்துத் தேட,
"நம்ம இடத்த விட்டு வெளில போக வாய்ப்பில்லை க்ரிஷ். நா போய்க் கூட்டீட்டு வர்றேன். " எனக் கார்த்திகேயன் எழும் முன்னரே,
"நீங்கப் பேசிட்டு இருங்கப்பா. நா போறேன். " என எழுந்து சென்றாள் வாசவி.
'அப்பாடா தப்பிச்சேன். இல்லன்னா காதுல இருந்து ரத்தம் வர வைச்சிருக்கும் அந்தப் பாட்டி.' என்று நினைத்தபடி துள்ளல் நடையுடன் ஓடிச் சென்றாள் பெண்.
வயது இருபத்தி ஒன்று இருக்கும். கல்லூரி மாணவிபோல் ஸ்கெட் என்ற பெயரில் முட்டிக்கி மேல் மஞ்சள் நிறத்தில் அணிந்திருந்தவள் கரும்பு நிற வலை போன்ற லெகின்ஸ் ஒன்றை கொண்டு தன் வாழைத்தண்டு கால்கள் வெளியே தெரிந்திடாத படி மூடி இருந்தாள். உடலை ஒட்டி இறுக்கி பிடித்துக் கைகள் அற்ற பனியன். அந்த வலு வலுவென இருக்கும் தந்த கைகளை மறைக்க என மெல்லிய நூலில் நூர்க்கப்பட்ட டீசர்ட். அது லூசாக. உடலை ஒட்டாது தொளதொள என இருந்தது.
தலை முடியைச் சிவப்பு நிற ஹேர் கலர் அடித்திருந்தாள் பெண். அதை உயர்த்தி கட்டியதால் அவளின் துள்ளல் நடையுடன் சேர்ந்து காற்றில் ஆடியது. கைகளில் ஒரு இன்ச் நீளத்திற்கு நகமும். அதை ஒவ்வொரு வண்ண நிறத்தாலும் சாயம் பூசி இருந்தாள். உதடுகள் ப்ரவுன் கலர் லிப்ஸ்டிக்கில் தனித்து தெரிந்தது. கண்களில் அடர்ந்த மை. அனைத்திற்கும் மேல அவளின் ஒற்றை கல் மூக்குத்தி. அது நிறமற்ற கல். ஒளி பட்டால் ஒளிரும். அத்தனை அலங்காரமும் அவளின் புது நிறத்தை உயர்த்தி காட்டியது.
வாசு போய் அரை நாள் ஆகிவிட்டது. ஆனால் இந்த க்ரிஷ் இன்னும் அவளைத் தான் பார்த்தபடி இருந்தான். இல்லை அவள் சென்றதும் மூடப்பட்ட கதவைப் பார்த்தபடி இருந்தான்.
'பாக்கலங்க யோசிச்சிட்டு இருக்கேன். அந்தப் பொண்ணு சாடைலா நா ஒருத்தவங்க கூடப் பழகிருக்கேன். ஆனா யாருன்னு தா தெரியல. ச்ச... ' என்க. தாரிகா அவனுடன் சத்தமில்லாம் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள்.
"ஜோஹிம்மா அந்தச் சின்ன வாண்டு மாதேஷ்ஷ பாத்திங்களா?. " என மற்ற டேபிளை கவனித்துக் கொண்டிருந்த அன்னையிடம் கேட்க,
"இல்ல வாசு. ரோட்டுக்கு போய்டப்போறான். இது ரஸ் ஹவர் இல்லதா. ஆனாலும் பாத்துக்க. " என மகளைப் பார்க்காமலேயே பதிலளிக்க, வாசு மீண்டும் தன் துள்ளல் நடையுடன் தேடிச் சென்றாள்.
"மாதேஷ். மாதேஷ். " எனக் கத்திக் கொண்டே வர,
" வாசு யார தேடுற?. " என அங்கிருந்த பணியாளர்கள் கேட்க, அவள் ஒரு டேபிலின் மேல் ஏறி நின்று கொண்டு கை தட்டினாள்.
"ஹே ஹைஸ். ஒரு ரெட் டீசர்ட்டும். ப்ளாக் ஃபோண்டும் போட்ட ஒரு பையன யாராது பாத்திங்களா?. " எனச் சத்தமாக அனைவரிடமும் கேட்க,
"வாசு அந்தப் பொடியன் இப்ப தா வெளில போறத பாத்தேன். " என்றான் வில்லியம். அந்தக் கடையில் கார்த்திக்கிற்கு அடுத்து அவன் தான் செஃப்.
" தாங்க்ஸ் வில். நீ கன்ட்டின்யூ பண்ணு. நா போய் அவ பிடிக்கிறேன். " என வெளியே செல்ல, அங்கு மாதேஷ் அழகுக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு முயல் பொம்மையைச் சுற்றி சுற்றி வந்து விளையாடிக் கொண்டிருந்தான்.
" ஹாய் கிட்டி!. என்ன பண்ற.? "
" ப்ளேயிங். "
"என்ன விளையாட்டு இது?. "
" டாய் கேம். "
"நானும் உங்கூட விளையாடலாமா?."
" நோ."
" வெய்?. "
" I play alone. " என்க.
"என்னடா எல்லா கேள்விக்கு ஒன் லயன்ல ஆன்ஸ்சர் பண்ற?. "
" ஏன்னா எனக்குப் பதில பக்கம் பக்கமா பேசுறது பிடிக்காது. " என்ற சிறுவனின் பார்வை சென்று கொண்டிருந்த மனிதர்கள்மீது பட்டது. அவனின் பார்வை நடந்து சென்றவர்களிடம் இல்லை அவர்கள் கையில் இருந்த ஐஸ் கிரீமின் மீது இருந்தது.
"உனக்கு அது வேணுமா?. " எனக் கேட்க, வாண்டு புன்னகையுடன் அவளை திரும்பிப் பார்த்தான்.
" கிடைக்குமா?. அதுவும் ரெண்டா!. " என ஆசையுடன் கேட்டான்.
"ம்.. " எனத் தன் புருவங்களை இரு முறை ஏற்றி இறங்கிக்கினாள் பெண்.
"பட் ஒன் கன்டிஷன். " என அவளை அருகில் வரச் சொல்லித் தன் ஆள்காட்டி விரலை அசைத்தான் சிறுவன்.
"என்ன கன்டிஷன்?." என அவளும் அவனின் முன் மண்டியிட்டுக் கேட்டாள்.
"அம்மா வெளில வர்றதுக்கு முன்னாடி எங்கைல ரெண்டு ஐஸ்கிரீமும் இருக்கணும். அப்பறம் நா ஐஸ்கிரீம் சாப்பிட்டேன்னு அம்மாட்ட சொல்லவே கூடாது. ஓகேவா. " என்க ரகசியமாக அவளின் காதில் சொல்ல,
" ஓகே டீல். பட் ஏன்னு நா தெரிஞ்சிக்கலாமா?. "
"நைட் நேரத்துல சாப்பிட கூடாதுன்னு சொல்லுவாங்க. பட் எனக்கு ஆசையா இருக்கு. நா கேட்டேன் அம்மாட்டா. அவங்க நோ சொல்லிட்டாங்க. அதா கோபமா வெளில வந்துட்டேன். " என்க, அவனின் பாவனையில் வாசுவிற்கு சிரிப்பு வந்தது. அவனை வாரி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டவள், அவனைத் தூக்கி கொண்டு எதிரில் இருந்த கடைக்குள் சென்றாள்.
"அம்மா வாராங்கன்னு எப்படி தெரிஞ்சிக்கிறது. ஒரு வேள நா சாப்பிட்டுடு இருக்கும்போது வந்துட்டா.! மாட்டிக்கிவோமே. " என்றது அந்த வாண்டு.
"ம்… அதுவும் சரிதா. அப்ப ஒன்னு பண்ணுவோம். இங்க பக்கத்துல ஒரு பார்க் இருக்கு. ஐஸ்கிரீம்ம வாங்கிட்டு அங்க போய்ச் சாப்டுட்டு வருவோம். அம்மா வந்தா இன்ஃபார்ம் பண்ண ஆள ஏற்பாடு பண்ணுவோம். ஓகே வா." எனத் தன் இரு கட்டை விரல்களை உயர்த்தி கேட்க, வாண்டுவும் ஓகே என்றது. அவள் வில்லியமிடம் சொல்லி விட்டுப் பார்க்கை நோக்கிச் சென்றாள். இருவரும் கையில் ஐஸ்கிரீமுடன் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து பேசிச் சிரிக்க,
"வாசு, ஒன்னு தா வாங்கி தந்திருக்க. என்னோட இன்னொரு ஐஸ் எங்க?. " எனக் கேட்டான்.
"அதுக்குள்ள ஒன்ன காலி பண்ணிட்டியா!!." என வியப்புடன் கேட்டாள் வாசு.
"ம்… பாரு வேஃபர தா இருக்கு. " என்க, அவளும் மற்றொரு ஐஸ்கிரிமை வாங்கி வந்து அவனின் முன் நீட்டினாள். இருவரும் மும்மரமாகச் சுவைத்துக் கொண்டு இருக்க, ஒரு கார் க்ரீரீரீச் என்ற ஒலியுடன் பார்க்கின் முன் வந்து நின்றது.
அமைதியான இரவு நேரத்தில் கேட்ட அந்தச் சத்தத்தில் பயந்து போனவள் தன் ஐஸ்கிரீமை கீழே போட்டு விட்டாள். ஆனால் வாண்டு பத்திரமாக பிடித்துச் சுவைத்துக் கொண்டிருந்தான்.
'ஏம்மா எங்கேயோ கேட்ட சத்தத்துக்கு இத்தன பயம் பயப்புடுற.' என்பது போல் வாண்டு திரும்பிப் பார்க்க அவள் அசட்டு சிரிப்பு ஒன்றை சிந்தினாள்.
‘யார்ரா அது? இந்த வாசுவயே பயங்காட்டுறது’ என்ற மிடுக்குடன் யார் எனப் பார்க்க… அவளுக்கு
ச்சீ!!. இவனா? என்றிருந்தது.
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..