அத்தியாயம்: 6
"தேவ் அங்கிள். " என்று கத்தியபடியே மாதேஷ் ஓடிச் சென்று தேவ்வின் கைகளில் ஏறிக்கொண்டான்.
" ஹேய். நீ இந்த நேரத்துல இங்க என்ன பண்ணீட்டு இருக்க?. " என்றவனின் கேள்வி யாருக்கானது மாதேஷ்கா இல்லை வாசுவிற்கா குழப்பமாக இருக்கிறதே. ஏனெனில் அவனின் பார்வை மொத்தமும் வாசவி மேல் தான் இருக்கிறது.
" ஐஸ்கிரீம் சாப்பிட்டோம். இவங்க தா வாங்கி தந்தாங்க. " எனத் தன் கையில் இருந்ததை காட்ட, தேவ் அதைச் சுவைத்தான். கூடவே அவனின் விழிகள் வாசுவையும் சுவைத்தன.
'ச்ச... இவெ சொந்தக்கார பையன்னு தெரிஞ்சிருந்தா எங்கை காசு போட்டு ஐஸ்கிரீம் வாங்கி குடுத்திருக்க மாட்டேன். மங்கூஸ் மண்டயென் எப்படி பாக்குறான் பாரு?. அவனும் அவனோட எலி வால் பங்க்கும். அவெ கண்ணு அவிஞ்சி அந்த ஐஸ்கிரீம் மேலயே விழ. ' திட்டியபடியே அவனைத் தாண்டிச் செல்லப் பார்க்க,
"ஹாய் ஸ்வீட்டி. ரொம்ப நாள் ஆச்சில்ல பாத்து. " என்க.
"எனக்கு எப்படி தெரியும்?. உன்ன நா கடைசியா எப்ப பாத்தேன்னு எனக்கு நியாபகமே இல்ல. நியாபகம் வச்சிக்கிற அளவுக்கு நீ ஒன்னும் பெரியளும் இல்ல. ஹும்." என்று திரும்பி அவனைப் பார்த்து நடந்தபடியே பேசியவள் தன் கூந்தலை காற்றில் பறக்க விட்டுத் திரும்பிக் கொண்டாள்.
" பட் எனக்கு நல்லா நியாபகம் இருக்கே. ஃபஸ்ட் டயம் உன்ன பாத்தது. நீ மெஸ்ஏஜ் அனுப்புனது. பதிலுக்கு நானும். " என்றபோது திரும்பிப் பார்த்து அவனை முறைக்க, அவன் கூலாகக் கண்ணடித்தான்.
"அப்பச் சரியா பாக்கல. இப்ப பாக்கும்போது தோனுது. மெஸ்ஏஜ்க்கு சரியான ரிப்ளே பண்ணிருக்கலாம். ஓகே சொல்லிருக்கலாம். " என்றவனின் குரலில் இருந்த மாறுதல் பெண்ணவளை தாக்க, அவள் அவனை முறைத்தபடியே நடந்து சென்றாள். நடையில் துள்ளல் இல்லை என்றாலும் அவளின் கோப நடை கூட ஒயிலாய் தெரிந்தது அவனுக்கு.
அதை ரசித்துப் பார்த்தவன் காரிலிருந்து ப்ரேசரை அதாவது கோர்ட்டை அணிந்து கொண்டு தன் அண்ணன் மகனைக் கையில் எந்தியபடி அவள் நுழைந்த ஹோட்டலுக்குள் நுழைந்தான் ருத்ரதேவ். வாசவியிடம் பேசும்போது இருந்த அமைதியான முகம் மாறி இருந்தது. அவனின் பார்வை எப்படி இருந்தது என்றால்.
'அமைச்சரே. இத்தனை நாள்களாக இந்தப் பெண்கள் நம் அந்தப்புரத்தை அலங்கரிக்கவில்லையே. என்ன காரணம்?. யார் செய்த சூனியம்.?' என்பது போல் இருந்தது, அந்த ஹோட்டல்லை அவன் பார்க்கையில்.
வரவேற்பு, ஆர்டர் கொடுக்கும் இடம், பில்லிங் செக்ஷன், அங்காங்கே வைக்கப்பட்டிருந்த மீன் தொட்டிகள், சின்ன சின்ன அழகு செடிகள், சுவற்றில் அந்த ஊரின் பெருமையை எடுத்துச் சொல்லும் அளவுக்கான ஓவியங்கள், குளிர்ந்த காற்று என அவனை முதலில் வரவேற்றது அமெரிக்கன் ஸ்டெயில்லில் இருந்த உணவகம். அதை ரசித்துப் பார்த்தவன் கண்களுக்கு ‘அதுவும் நல்லாத்தா இருக்கு’ என்று தோன்றியது. பின்,
மாதேஷ் காட்டிய கதவு வழியே உள்ளே செல்ல, அவனின் புருவங்கள் ஆச்சர்யத்தை காட்டின.
கார்த்திகேயன் தான் பெற்ற பிள்ளையைப் போல் அந்த உணவகத்தைப் பாதுகாத்து வந்தான். ஒவ்வொரு மாதமும் அந்த உணவகத்தின் தீம் மாற்றப்படும். சீசனுக்கு ஏற்றார் போல் அதன் வண்ணங்களும் மாற்றப்படும்.
உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால், அமெரிக்க நாட்டில் ஃபுல் பால் என்ற சாக்கர் கேம்மையும் கார் ரேஸ்ஸையும் அதிகமான பேர் விரும்பிப் பார்ப்பர். அந்தப் போட்டிகள் நடைபெறும்போது பெரிய திரையில் அதன் லைவ் ஷோவை ஓட விட்டு விட்டுச் சுவர்களின் அதன் பிரபலமான ப்ளேயர்களின் உருவத்தைத் தீட்டி, வந்து உணவுண்ணுபவர்களுக்கு அவர்களின் விருப்பமான வீரர்களின் புகைப்படம் பதித்த டீசர்ட்டை பரிசாகத் தந்து வாடிக்கையாளர்களைக் கவருவான்.
அதே போல் தான் இன்டியன் ரெஸ்டாரன்ட்டுக்கும் தீபாவளி, ஹோலி, பொங்கல் போன்ற விசேஷங்களுக்குச் சிறப்பாக எதையாவது செய்து கஸ்டமர்களை திருப்தி படுத்துவான். இன்று ராஜராஜ சோழனின் சதய விழா. அதன் பொருட்டு சுவர்களில் அவரின் பெருமையை வரைந்து, அவரின் தலைநகரான தஞ்சாவூரின் பாரம்பரிய உணவுகள் இன்று சமைக்கப்பட்டிருந்தது.
" வாட்ட ஸ்டுப்பிட் ஐடியா!. " என்று உதடுகள் ஏளனமாக வளைந்தாலும். கார்த்திகேயனின் தொழில் உத்தியைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. பிழைக்கத் தெரிந்த ஆள் தானென மனம் மெச்சிக் கொண்டாலும், அதைக் காட்டாது விரைப்பாக நடந்து சென்றான் தேவ்.
" என்னடி தனியா வர்ற!. எங்க அந்தப் பையன?. " எனக் கோபமாக நடந்து வந்த மகளைப் பார்த்து ஜோஹிதா கேட்க, ராசாத்தியம்மாளும் மற்றவர்களும் அந்த ஹாலை விட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது. ஜோஹிதாவின் கேள்வியைக் கண்களின் தாங்கியபடி தாரிகா நிற்க,
" பின்னாடி வர்றான்." என்றபடி அங்கிருந்த ஒற்றை சோஃபாவில் அமர்ந்து கொண்டாள். அவளின் கோபம் பள்ளி செல்லமாட்டேன் என்று அடம்பிடிக்கும் சிறுமிபோல் இருந்தது. இரு கரத்தையும் கட்டிக்கொண்டு உதடுகள் லேசாகத் துருத்திக் கொண்டும் அமர்ந்திருந்தவளை பார்க்கயில் சிரிப்பு தான் வந்தது. அதை க்ரிஷ் ரசித்துப் பார்க்க,
'கொன்னுடுவேன். அங்க காணாம போனது உன்னோட பையங்கிற நினப்பு இல்லாம் சைட் அடிச்சிட்டு நிக்கிற. உன்ன... ' என அவனின் தோளைச் சுரண்டி திட்ட, காலடி ஓசை கேட்டது.
அனைவரின் கவனமும் அவனிடம் திரும்ப, அமைதியாக நடந்து வந்து வாசவியின் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான் தேவ்.
" தேவ். நீ எப்ப வந்த?. " க்ரிஷ்.
"இப்ப தா. உன்ன பாக்க ஹோட்டல் போயிக்கிட்டு இருந்தேன். அப்ப தா பார்க்ல மாதேஷ்ஷ பாத்தேன். ஐஸ்கிரீமோட உக்காந்திருந்தான். " என்றபோது தாரிகா மகனை முறைத்தாள்.
'அத போட்டுக் குடுக்கத்தா ஸ்டெயில்ல நடந்து வந்து கால்மேல கால் போட்டு உக்காந்திருக்கானாக்கும். ' வாசு மைண்ட் வாய்ஸ்.
" உங்களுக்கு நா text பண்ணேனேனே மாப்ள இங்க வர்றத பத்தி. சாப்பிடுறீங்களா மாப்ள." என்ற மதன கோபாலை தாரிகா முறைத்தாள்.
'நீங்க அனுப்புனத அவெ பாத்திருக்க கூட மாட்டான். முதல்ல உங்க ஃபோன் நம்பர அவெ ஃபோன்ல சேவ் பண்ணி வச்சிருக்கானா இல்லையான்னு பாருங்க. 'தாரிகா மைண்ட் வாய்ஸ்.
" நைஸ் ரெஸ்டாரன்ட்டு. வெரி க்ளின் அண்டு சூப்பவ் கிரியேட்டிவ்விட்டி. " என்றவன் மதன கோபாலுக்கு பதில் சொல்லாது அவாய்ட் செய்வது கார்த்திகேயனுக்கு புரிந்தது.
"சாப்பாடும் நல்லா தா இருந்தது. வாய்க்கு ருசியா எத்தன நாள் கழிச்சி சாப்பிடுறேன்." என்ற ராசாத்தியை பார்த்து.
"அப்ப இத்தன நாள் எங்கம்மா சமச்சி தந்தது ருசியா இல்லன்னு சொல்ல வர்றிங்க. " என்று கேலியான ஒரு சிரிப்பு சிரித்து விட்டுக் கார்த்திகேயனே பார்த்தான்.
" எத்தன வர்ஷமா இத ரன் பண்றீங்க மிஸ்டர்.? " என இழுக்க,
" உங்களுக்கு ஆல்ரெடி என்ன தெரியும்னு நினைக்கிறேன் மிஸ்டர் ருத்ரதேவ். எத்தன வர்ஷமா இங்க ரன் பண்றோம்னு உங்களுக்குத் தெரியும். " என்றான் கார்த்திகேயன்.
"ம்… நல்லாவே தெரியும். இருந்தாலும் உரிம பட்டவங்க கிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்கிறது நல்லது தான நல்லது. " என்றவனுக்கு பதில் சொல்லாது ஒரு அலட்சிய பார்வை பார்த்தபடி நின்றான் கார்த்திகேயன். அவனைத் தேவ் முறைக்க தவறவில்லை.
இருவருக்கும் இடையே ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. இன்றல்ல நேற்றல்ல கடந்த ஆறு மாதகாலமாக. என்று பீட்டர்சனிடம் அவரின் ஹோட்டல் விலைபேசப் பட்டதோ அன்றிலிருந்து கார்த்திகேயன் சற்று எச்சரிக்கையுடனே இருந்தான். அடுத்ததாக நம் உணவகத்தின் மீதும் அவர்களின் பார்வை படும் என்று. அவர் நினைத்துச் சரி என்பது போல் தேவ்வின் ஆட்கள் வந்து கார்த்திகேயனிடம் ஆறு மாதங்களுக்கு முன் அவனிடம் இந்த உணவகத்தை மறைமுகமாக விலை பேச, கார்த்திகேயன் மறுத்துவிட்டான். அன்றிலிருந்து இருவரும் முறைத்துக் கொள்கின்றனர்.
" மாப்ள எதாவது சாப்பிடுறீங்களா?. " கோபால். அவன் வாயைத் திறக்கும் முன்,
"இது க்ளோஸிங் டயம். " என்றான் கார்த்திகேயன்.
'உனக்கு எதுவும் கிடையாது போடா. ' என்றிருந்தது அவனின் பதில்.
" ஏன்டா வந்ததுதா வந்த கொஞ்சம் முன்னாடி வந்திருக்க கூடாது. நீ நல்ல சாப்பாட்ட மிஸ் பண்ணிட்ட. " க்ரிஷ்.
"எனக்கு நல்லது எதுன்னாலும் நா அத மிஸ் பண்ணவே மாட்டேன். " என்றவனுக்கு கடையைக் காலி செய்யும் எண்ணமே இல்லை போலும். எதோ உலக அதிசயங்களைச் சுற்றி பார்ப்பது போல் தலையை திருப்பித் திருப்பி பார்க்க, கார்த்திகேயன் விடை பெற்று சென்றார். அவர் மட்டுமல்ல ஜோஹிதாவும் ஊழியர்களும் தங்களின் உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேற, தேவையற்ற விளக்குகள் அணைக்கப்பட்டது.
'ச்ச போயும் போயும் இவெ கண்ணுலயா இந்த ரெஸ்டாரன்ட்டு படணும். ' என்றிருந்தது தாரிகாவிற்கு. அவள் தேவ்வை முறைத்து பார்த்தபடி மகனைத் தூக்கிக் கொண்டு வெளியே சென்றாள்.
"ஓகே தேவ். ஹோட்டல்ல மீட் பண்ணுவோம். பாய். " என க்ரிஷ்ஷும் மனைவியைத் தொடர்ந்து செல்ல, மதன கோபாலும் சென்று விட்டார்.
" எல்லாரும் போயாச்சி. ஏன்டா இன்னும் உக்காந்தே இருக்க. அதா கடைய மூடப் போறேன் சொல்லிட்டாங்கல்ல கிளம்ப வேண்டியதுதான. இன்னும் பேட்டி எடுக்கறவெ கணக்கா கொழா வச்ச டவுசர மாட்டிட்டு கால் மேல கால் போட்டு உட்கார்ந்திட்டு. என்ன நைட் வாட்ச்மேன் வேலைக்கா வந்திருக்க?. " என நக்கலாகக் கேட்டார். நம்ம ராசாத்தி பாட்டி தான்.
அதுவரை நடந்த அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த வாசவியின் கண்கள் ராசாத்தியின் பேச்சைக் கேட்டதும் மின்னின.
'வாவ். இந்தப் பாட்டியப் போய் அறுவன்னு நினைச்சிட்டோமே. ச்ச. இவனுக்குச் சரியான ஆளு இவங்க தா போல. உங்க ஃபேஸ் புக் ஐடி இருந்தா குடுங்க பாட்டி. நா உங்கள லைக் பண்ணி ஃபாலோ பண்றேன். ' வாசவியின் மைண்ட் வாய்ஸ்.
சரட்டென எழுந்தவன் ராசாத்தியின் தோளில் கை வைத்து அழுத்தியபடி இழுத்து சென்றான்.
"டேய் எடுப்பட்ட பயலை விடுடா என்ன. வலிக்குதுடா!. "என்ற ராசாத்தியை அவன் கண்டுகொள்ளவே இல்லை. அவனின் கண்கள் மொத்தமும் வாசவின் மேலேயே இருந்தன. கதவுகள் மூடும் சத்தம் கேட்டதும்.
' அப்பாடா புயல் அடிச்சி ஓஞ்சதுன்னு சொல்வாங்கல்ல அந்த மாறி இருக்கு. ' என வழக்கமான தன் துள்ளல் நடையுடன் அனைத்தையும் ஒதுக்கி வைத்துக் கொண்டிருந்த தாய்க்கு உதவி செய்ய,
" வாசு போய் ஷட்டர இழுத்துட்டு வா. இல்லன்னா ஷாப் இன்னும் திறந்திருக்குன்னு ஆள் வந்திட்டே இருப்பாங்க. "
"ஓகே ஜோஹிம்மா. " என்றபடி சென்றாள் பெண்.
கடை மூடும் நேரம் என்பதால் ஷட்டரை இழுத்து விடும்போது தான் கவனித்தாள் அந்த முயல் பொம்மையை. அதன் மேல் எதுவோ எழுதி இருந்தது. என்ன என அருகில் சென்று பார்க்க, அதில் ஒரு ஃபோன் நம்பர் எழுதி இருந்தது. யாருடையது என்று அவளுக்குத் தெரியும். கோபமாகவும் வேகமாகவும் அதை டிஸ்யூ பேப்பர் கொண்டு அழிக்க, அவளை உரசி வந்து நின்றான் தேவ்.
" வா... சு. ரொம்ப அழகா இருக்கு. பேரு மட்டுமில்ல நீயும் தா. க்யூட் பார்பி டால் மாறி. " என ரசித்துச் சொல்ல.
"ஓ… எம்பேர உனக்கு இப்ப தா தெரியுமா!. அது தெரியாமத்தா என்ன மாட்டி விட்டியாக்கும். " என்றவள் கடைக்குள் செல்ல,
"நா இன்னும் அந்த நம்பர் யூஸ் பண்ணிட்டு தா இருக்கேன். நீ மெஸ்ஏஜ் பண்ணலாம். இந்த மொற பதில் உனக்குச் சாதகமா இருக்கும். " எனப் பேசிய படியே அவனும் பின்னாலேயே சென்றான்.
"எக்ஸ்கியூஸ்மி ஸார் இது க்ளோஸிங் டயம். " என்றான் வில்லியம் பணிவாக.
"ஐ நோ. பட் எனக்கு இப்ப டிரிங்க் வேணுமே. " என வாசுவை பார்த்துக் கொண்டே சொல்ல, வில் அவனுக்கு வேண்டியதை எடுத்துக் கொடுத்து, போகலாம் என்பது போல் புன்னகைத்தான்.
"தாங்க்ஸ் மேன். " என்றவனின் பார்வை வாசுவின் மேல் இருக்க, அவள் மும்மரமாக டேபிளை சுத்தம் செய்துகொண்டிருந்தாள். அவனும் பார்ப்பாள் என்று வெகுநேரமாக நிற்க... ம்ஹும். 'நா எதுக்கு டா உன்ன பாக்கணும்' என்பது போல் அவன் தன்னை பார்ப்பதை உணர்ந்தும் திரும்பவில்லை. ஆனால் திரும்பிப் பார்க்க வைத்தான். அங்கிருந்த கண்ணாடி டம்ளரை கீழே போட்டு உடைத்ததன் மூலம்.
'அடப்பாவி ஏன்டா போட்டு உடச்ச. ' என்பது போல் நிமிர்ந்து பார்க்க, அவன் தன் வசீகர புன்னகையுடன் அவளை பார்த்துக் கண்ணடித்து விட்டுச் சென்றான்.
'ச்ச. இன்னைக்கி இவனால எனக்கு மூணு ஐஸ்கிரீம் காசும், கண்ணாடி டம்பளருக்கான காசும் வேஸ்ட். என்னோட நேரமும் தா. ' எனச் சலித்தபடி திரும்பிக் கொண்டாள் வாசவி.
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..