முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நேசிப்பாயா 56


 

அத்தியாயம்: 56



"ஏய் அறிவிருக்கா உனக்கு. க்ரவுண்டுல எல்லார் முன்னாடியும் இப்படித்தா நடந்துப்பியா!" எனக் கார்த்திக் கத்த.


" நான் மொத மொற உன்னைப் பாத்து பெல் அடிக்கும்போது திரும்பிருந்தேன்னா நான் ஏன் அவ்ளோ நேரம் பெல்லடிக்க போறேன். நீ ஏன் பாக்கல?"


"என்ன வாய் ஓவரா பேசு மாதிரித் தெரியுது. பயம் விட்டுப் போச்சா. "


"நான் ஏன் பயப்படணும்? நீ என்ன பேயா பூதமா? "


"இதோ பாரு அன்னைக்கி நீ என்னைக் காப்பாத்துன. அதுக்காக நான் உனக்கு‌ நன்றி சொன்னேன். அவ்ளோ தான். நான் பேசவும் நீயா எதையாது கற்பன பண்ணிட்டு திரியாத. "


"நான் தான் கற்பன பண்ணுவேன்ணு தெரியுதுல. அப்றம் ஏன் உன்னோட ரெக்கார்டு நோட்ட என்னை எழுதித் தரச் சொன்ன."


"அதுக்கு… சைக்கிள்ள காத்த புடுங்கி விடுவியா. "


"நான் ப்ரேக்கையே பிடுங்கிருப்பேன். பாவமாச்சேன்னு விட்டேன். ராத்திரியெல்லாம் கை வலிக்க எழுதித் தந்தா… தொர சுகமா விளையாண்டுட்டு இருப்பிங்க. அதுவும் என்னைக் கண்டுக்காம. "


"அதுக்கு தான் வால்ட்டியூப்ப புடுங்கிட்டியே. அப்றம் என்ன? "


"அப்ப இத நான் கீழ போட்டுடவா. " என அவனின் ரெக்கார்டு நோட்டை காட்ட, அவன் அவள் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டு சைக்கிளில் திரும்பியும் பார்க்காது சென்றான். செல்லும் அவனின் உதடுகளில் மென்னகை படர்ந்தன.


கைத் தேர்ந்த சிற்பி செதுக்கி தங்கச் சிலைபோல் இருப்பாள் ஜோஹிதா. உயரத்திற்கு ஏற்ற எடை. பளிச்சென வெள்ளை நிறமாக அல்லாது சந்தனத்தைக் குழைத்து எடுத்த நிறம். அவளின் அழகிற்கு அவளைத் திரும்பிப் பார்க்காதவர்கள் இல்லை எனச் சொல்லலாம். கார்த்திக்கும் ரசிப்பான். காதல் எண்ணம் மட்டும் அப்போது வரவில்லை. 


ஆனால் வரவைத்தான். 'பண்ணா என்ன தப்பு.‌' என்ற எண்ணத்தை உண்டாக்கினான் அவளின் அண்ணன் விகாஸ்.


ஜோஹிதாவும் கார்த்திக்கும் மரத்தடியில் நிற்பதைப் பார்த்து விட்டு, அவளைத் தேடி வந்த விகாஸ்ஸிடம் போட்டுக் குடுத்தான் நவீன். அதைப் பார்த்த விகாஸ். கார்த்திகேயனை மிரட்டாது முருகனையும் பரத்தையும் எச்சரித்துவிட்டு சென்றான்.


அவனை மிரட்டாததற்கு காரணம் கார்த்திக் எம்எல்ஏவின் உறவினர் என்பதால்.


" டேய், அந்த எம்எல்ஏவால நமக்கு ஆகவேண்டிய காரியம் இருக்கு. நீ அந்தப் பையன மிரட்டப் போய். நாம கேக்குறத அந்தக் கட்சிக்காரெ செய்யாம போய்டுவான். அதுனால இப்போதைக்கு வேண்டாம். அப்றமா சமயம் வரும்போது அவன வெட்டி விடலாம். இந்த யாதவ் குடும்பத்துக்குன்னு ஒரு வழக்கம் இருக்கு. அதை மீற விடாம பாத்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு. பிள்ளையப் பாத்து வள. " என மோகனை எச்சரித்துவிட்டு சென்றார் நரேந்திரன்.


"அண்ணா கார்த்திக் நீங்க நினைக்கிற மாதிரிப் பையன்லாம் கிடையாது. அவெ ரெக்கார்டு நோட்ட பாப்பா தான் எழுதித் தந்திருக்கா. அத வாங்கத் தான் மரத்தடில பாத்திருக்காங்க. கொஞ்சம் கோபக்காரெந்தான். ஆனா கார்த்திக் தப்பான பையன் கிடையாது. " என நற்சான்றிதழ் தந்தான் தர்ஷன். அவனுக்குக் கார்த்திக்கை மிகவும் பிடிக்கும்.


"அவெ நோட்ட ஏன் இவ எழுதித் தரணும். " என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் சென்றான் தர்ஷன்‌.


______


" ஏன்டா சோகமா மூஞ்சிய வச்சிருக்கீங்க. பாக்க இஞ்சி தின்னக் கொரங்கு மாதிரி இருக்கு. " டியூஷன் வாசலில் பேசாது மௌன விரதம் இருந்த நண்பர்களை பார்த்துக் கார்த்திக் கேட்க.


"எங்க மூஞ்சே அப்படி தான்." பரத்.


" நம்ம முன்னோர்கள கேலி பண்ணக் கூடாது மச்சி. அவங்கள மதிச்சி வணங்கணும். அப்படி பண்ணலன்னா அப்றம் பல்லில்லாத கிழவிங்க வந்து கனவுல உம்மாச்சி உம்மாச்சி யா குடுக்கும்." முருகு.


"ச்சீ... உனக்கு உதாரணம் சொல்ல வேற எதுவும் கிடைக்கலயா. கிழவி… உம்மா... உவ்வா…. " எனப் பரத் முகம் சுளிக்க,


"என்ன கிழவிய உவ்வான்ட்ட? அதுகளும் பிறந்த குழந்தையும் ஒன்னு. பொக்க வாயால உம்மாச்சி குடுத்தா சூப்பரா இருக்கும். ம்… " எனக் கண் மூடி ரசித்தவனை விசித்திரமான பார்த்தனர் இருவரும்.‌


"நிறைய உம்மா வாங்கிருப்ப போலயே. " கார்த்திக் கேலியாகச் சொல்ல…


"ஹி… ஆமா மச்சி." என பல்லைக் காட்டினான் முருகு.


அப்பொழுது விகாஸ் வந்து ஜோஹிதாவை இறக்கி விட்டு விட்டு, " க்ளாஸ் முடியவும் எனக்கு ஃபோன் பண்ணு.‌. நான் வராம நீ இந்த இடத்த விட்டு வெளிய வரக் கூடாது. இந்தா காசு. " என ஒரு ரூபாய் நாணயங்களை அவளின் கையில் கொடுத்து விட்டு இவர்களை முறைத்தபடி சென்றான் அவன்.


" என்னடா இவெ திடீர்னு பாசம பாத்துட்டு போறான். " என நண்பர்களைப் பார்க்க, இருவரும் திரும்பி நின்றிருந்தனர்.


"உங்களுக்கு என்னடா ஆச்சி?" 


"அது ஒன்னுமில்ல மச்சி. அந்தப் பக்கமா வெள்ள காக்கா ரெண்டு பறந்து போச்சி. அதான் பாத்து ரசிச்சிட்டு இருந்தோம். என்னடா. " எனப் பரத் முருகுவைப் பார்க்க.


"இல்ல... காக்காலாம் பறக்கல. அந்த வெள்ள குரங்கு விகாஸ் தான் அவெ தங்கச்சி இருக்குற திசைப் பக்கமே பாக்க கூடாதுன்னு நேத்து மெனக்கட்டு வந்து சொல்லிட்டு போனான். அதா திரும்பிக்கிட்டோம். " என்றான்.


ஏன்டா? என்பது போல் தலையில் அடித்துக் கொண்டான் பரத். 


‘அப்படி பொத்தி பொத்தி வளத்த பொண்ணா அது! ' என நினைத்தவன் நேராகச் சென்று அவளின் அருகில் அமர்ந்து கொண்டான்.


'எப்படித்தான் வளத்திருக்கானுங்கன்னு பழகிப் பாப்போம்‌. ' என அவளுடன் பழகத் தொடங்கினான்.


எப்பொழுதும் பின் வரிசையில் அமர்ந்து நண்பர்களுடன் கலாட்ட செய்யும் கார்த்திக் தன் அருகில் அமர்ந்தது ஜோஹிதாவிற்கு ஏகப்பட்ட குஷி. புன்னகையுடன் பேசத் தொடங்கினாள்‌.


அந்தப் பழக்கம், பள்ளியில் நெருக்கம், பாடம் படிப்பதில் உதவி, அவளைத் தினமும் டியூசன் முடித்து வீடுவரை கொண்டு வந்து விடும் அளவுக்கு முன்னேறி இருந்தது. அதிலும் விகாஸ் பார்வைக்குப் படும்படி நின்று தான் பேசுவான் கார்த்திக் அவளின் வீட்டு வாசலில். விகாஸ் இருவரையும் முறைத்து பார்ப்பான்.


அதை எல்லாம் நம் ஜோஹிதா கவனிக்கவில்லை. அவளுக்குக் கார்த்திக் தன்னுடன் பேசுகிறான் என்பதை மட்டும் தான் பார்த்தாள். அந்தப் பழக்கம் காதலாக மாறிப் பன்னிரெண்டாம் வகுப்பு தொடக்கத்தில் ஜோஹிதா வெளிப்படுத்தியவுடன் ஏற்றுக் கொள்ள வைத்து.


விளையாட்டாய் ஓர் காதல் உண்டாகி. மெல்ல மெல்ல வளர்ந்து தீவிரம் அடைய தொடங்கியது.


கார்த்திக்கிற்கு ஏற்கனவே அவளைப் பிடிக்கும். இப்போது நெருங்கிப் பழகும் போது. ஒரு சில குணங்களை தவிர்த்து அனைத்துமே பிடித்திருந்தது. அவனும் காதலில் அடி ஆழம் வரை சென்றிருந்தான்.


அந்தக் குணங்களில் ஒன்று. ஜோஹிதா, ‘பிடிக்காது’ ‘முடியாது’ என்று சொல்லி விட்டாள், எத்தனை கெஞ்சினாலும் அதை செய்யமாட்டாள்.


அன்றொரு நாள் கார்த்திக், ‘புதிதாகப் பைக் வாங்கி உள்ளேன் வா’ என அழைக்க, முடியாது என்று மறுத்துவிட்டாள்.


அதுமட்டுமல்ல ஒரு படமாவது பார்ப்போம் எனக் கேட்டுப்பார்த்தான். 'எனக்குக் கமல் பிடிக்காது. அதுனால நான் வரல. நீ வேணும்னா ரஜினி பாடத்துக்கு வா. போவோம். அப்பயும் பக்கத்துல சேந்து உக்காந்துலாம் பாக்க மாட்டேன்.‌' என்பாள். அவனும் கெஞ்சிப் பார்த்தான். அவள் அசைந்து கொடுக்கவில்லை.


டியூஷன் முடிந்து செல்லும் போதும் கார்த்திக்குடன் பேசியபடி செல்வாள் தான். ஆனால் அவளின் கரம் கோர்த்து அவளுடன் தனிமையில் நடக்கச் சொல்லிக் கார்த்திக்கின் மனம் கெஞ்சும். ஜோஹிதா அதற்கு இடம் தரவில்லை. பருவ வயதின் உணர்ச்சிகளுக்கு அவள் இடம் தரவில்லை என்பது கார்த்திகேயனுக்கு சின்ன ஏமாற்றம் தான்.


எனக்குப் பிடித்ததை நீ செய்யாதபோது உனக்குப் பிடித்ததை ஏன் நான் செய்ய வேண்டும் என்று தோன்றியதால் அவன் ஜோஹிதாவிடம் கெஞ்ச மாட்டான். ஏனெனில் தான் அவளிடம் கெஞ்சுவதை அவள் உள்ளுக்குள் ரசிப்பதாகத் தோன்றியது அவனுக்கு. அது உண்மையும் கூடத் தான்.‌ என்ன ஆனாலும் தன் விருப்பத்தை விட்டுக் கொடுக்க மாட்டாள்.


மாதம் ஒரு முறை பீச். அதுமட்டும் தான் இருவரும் தனித்து சந்திக்கும் ஒரு இடம். தனி தனியே இடைவெளி விட்டு அமர்ந்து வருவோர் போவோரை கார்த்திக் செய்யும் கிண்டலை ரசித்த படி‌ அவன் வாங்கி தரும் மாங்கா பட்டாணி சுண்டலுக்காக அவள் காத்திருப்பாள்.


அடுத்து, கார்த்திக் எந்தப் பெண்ணையாவது 'அழகா இருக்கால்ல' என்றால் அது ஜோஹிதாவை எரிமலையாய் வெடிக்க வைத்து விடும்.


"கார்த்திக் என்னைத் தவிர எவளயாது பாக்கணும் நினைச்சா கூடக் கண்ண நோண்டிக் கைல குடுத்துடுவேன். உனக்குக் கண்ணு ரெண்டு தெரியலன்னாலும் நான் உங்கூட குடும்ப நடத்துவேன். " என்பாள் மிரட்டலாக.


அது அவனுக்குப் பிடித்திருந்தது. அந்தப் பெசசிவ்னஸ். ரசிப்பான். சில நேரம் வெறுப்பேற்றி விளையாடுவான்.


அடுத்தது, அவளின் ஏளன பேச்சு…


ஒருவேளை கார்த்திக் அவளுக்குப் பிடிக்காத எதையாவது செய்து விட்டான் என்றால் அவனை பேசிப் பேசியே கொன்று விடுவாள். 


எப்படி என்று கதையின் போக்கில் தெரியும்.


ஆனால் கார்த்திக்கிடம் பிடிக்காதது என்று அவளுக்கு எதுவுமே இல்லை. ஆனால் அவனுக்கு இருக்கிறது…


சில நேரம் அவள் தன்னை முழுதாகக் கண்ட்ரோல் செய்து வைத்திருப்பதாகக் கூட அவனுக்குத் தோன்றும்.


‍"நான் என்ன செய்யணும் செய்யக் கூடாதுன்னு அவ தான் முடிவு பண்ணுவாளா மச்சான். " என நண்பர்களுடன் புலம்ப,


"காதல்ன்னா அப்படித்தான். நீ சொல்றத அவ கேக்கணும். இல்லன்னா அவ சொல்லறத நீ கேக்கணும். யாராது ஒருத்தர் விட்டுக் குடுத்து, கேட்டுக்கிட்டேத் தான் இருக்கணும். அப்படி கேக்க முடியாதுன்னா காதலிக்கவே கூடாது. " முருகுவின் அட்வைஸ்.


அந்தக் குழப்பம் எல்லாம் ஜோஹிதாவின் புன்னகை முகத்தைப் பார்த்ததும் காணாது போய்விடும். அந்த வயதில் எதையும் யோசித்து செய்யத் தோன்றவில்லை இருவருக்குமே.


பள்ளி முடிக்கும் வரை அவர்களின் காதலுக்கு ஜோஹிதாவின் வீட்டில் எந்தப் பிரச்சனையும் இல்லை. அரசல் புரசலாக இவர்களின் விசயம் தெரிந்த போதும் எதிர்ப்பு இல்லை. ஏனெனில் கார்த்திக் எம்எல்ஏவின் உறவினர் என்பதால். ஆனால், அது எந்த மாதிரியான உறவு என்று தெரிந்தபோது, மகளிடமிருந்து அவனைக் கட்டாயம் பிரிக்க வேண்டும் என்று தீவிரமாக முயற்சி செய்தனர் அவளின் குடும்பத்தினர். ஜோஹிதா அறியாமலேயே முயன்றனர்.


ஏனெனில் தங்களின் ஒரே பெண் வாரிசை அவர்கள் இழக்க தயாராக இல்லை‌‌. ஜோஹிதாவின் பிடிவாதம் அப்படி. அவளின் கையில் இருக்கும் கார்த்திக்கை அவள் அறியாமல் விலக்க வேண்டும். கட்டாயப்படுத்தினால் ஜோஹிதாவை இழக்க நேரிடலாமென கவனமாக இருந்தனர்.


" ஐய்யோ... ஐய்யோ… எனக்கு ஒரே பதட்டமா இருக்கு. " முருகு.


"நாங்க மட்டும் எப்படி இருக்கோம். அப்படித்தா உக்காந்திருக்கோம். " பரத்.


"எப்ப மச்சி வரும்?" முருகு.


"வரும்போது வரும். " அப்சத்.


"டேய் வேண்டாம் என்ன வெறுப்பேத்தாத. "


" பரிச்சை முடிஞ்சி ஒரு மாசத்துக்கு மேல ஆச்சி. எழுதும்போது வராத பயம். மார்க்கு வரும்போது இருக்க கூடாது டா. " கார்த்திக்.‌


"உனக்கு என்னப்பா நீ பாஸ்ஸானாலும் ஃபெயில் ஆனாலும் இன்சினியரிங் படிக்க வைக்க ஆளு இருக்கு. லட்ச கணக்குன செலவழிக்க காசும் இருக்கு‌. எனக்கு அப்படியா நான் தான் எங்க வீட்டுல முதல் மொற பன்னென்டாப்பு படிக்கிறவெ. பாஸ் ஆனா நான் தான் முதல் பட்டதாரி ஆவேனா!. அதான் பயம்மா இருக்கு. " முருகு.


"கவலப்படாத மச்சி பாஸ் ஆகிடுவ." பரத்.


"இல்லன்னா நம்ம மச்சான் உதவி செய்வாப்ல. சரியா கார்த்திக். "


"கண்டிப்பா. இப்ப வாங்க ஸ்கூலுக்கு போவோம். அங்க போர்டுல ஒட்டிப் போட்டிருக்குற பேப்பர்ல நம்ம பேரு இருக்கா இல்லையான்னு பாக்கலாம். " என அனைவரும் பள்ளிக்குச் செல்ல. ஆல் பாஸ் என்று அறிவித்தார் தலைமை ஆசிரியர். நம்ம முருகுக்கு சந்தோஷம்.


"காலேஜ்ல காலடி எடுத்து வச்சிடலாம். ஹே‌…" எனக் கத்திக் கொண்டே சென்றனர் மார்க்கைப் பார்க்க.


அங்கு ஜோஹிதா கார்த்திக்காக நின்றுகொண்டிருந்தாள். " என்ன ஜோஹி... க்ளாஸ் பஸ்ட்டா. " என கேலியாகக் கேட்க,


" இல்ல ஸ்கூல் ஃபஸ்ட். அதுவும் நான் இல்ல நீ. " என்றவளின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. அவனைச் சுற்றி மற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் வந்து நின்று வாழ்த்து தெரிவித்தனர்.


கார்த்திக் எதில் கவனம் செலுத்தினாலும் அதில் முழுமையாகத் தன் மன ஈடுபாட்டுடன் செய்வான். அனைத்திலும் பெஸ்ட்டாக இருக்க தன்னால் முடிந்தவரை போராடுவான். ஸ்போர்ட்ஸ் மட்டுமல்ல. படிப்பும் அப்படிதானென நிருபித்து உள்ளான்.


" எந்தக் காலேஜ்ல சேரப் போற கார்த்திக். "


" சிவில் இன்ஜினியரிங் படிக்கணும் ஆசை. என்ட்ரென்ஸ எழுதி நல்ல காலேஜ்ல சீட் வாங்கணும். நீ என்ன பண்ணப்போற ஜோஹி. "


"அப்பா பீபிஏ படிக்கச் சொன்னாரு. அவரோட தொழிலுக்கு உதவியா இருக்கும்னு. " என சோகமாகச் சொன்னாள் ஜோஹிதா.


" கவலப்படாத ஜோஹி. வேற வேற காலேஜ்ஜா இருந்தாலும் நாம தினமும் மீட் பண்ணலாம். " என்று அவளின் கரம் பற்ற, மெல்ல அதை விலக்கினாள் ஜோஹிதா‌.


"ஏன்னு தெரியல. இந்தப் பிரிவு நமக்குள்ள நிரந்தர பிரிவா உண்டாக்கிடுமோன்னு பயம்மா இருக்கு கார்த்திக். எனக்கு நீ வேணும் கார்த்திக். வாழ்க்கை முழுக்க உங்கூடவே நான் இருக்கணும். " என அவனின் தோள் சாய்ந்தாள் அவள். அதை முதல் அணைப்பாய் மாற்றினான் கார்த்திக்.


" எனக்கும் நீ முக்கியம் ஜோஹி. என்னோடல லைஃப்ல வந்து முதல் பெண். உன்னை நான் எந்தச் சூழ்நிலையும் விட்டுட மாட்டேன். ப்ராமிஸ். and I love you. " என்க.


" Me too loving you." என அணைத்துக் கொண்டாள் ஜோஹிதா.


பள்ளி காலம் அது வேறு. கல்லூரி காலம் என்பது வேறு. இருவருக்கும் இடையே உள்ள காதல் அவர்களை வேறு பாதை செல்ல விடாது காக்குமா. பார்க்கலாம்.


தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...