அத்தியாயம்: 112
வாசவி.
அவளுக்குப் பிடித்த பச்சை நிறத்தில் தான் முகூர்த்த புடவை. அடர் பச்சை நிறத்தில் பெரிய தங்க சரிகை கொண்ட பார்டர்கள். உடலை ஒட்டி அழகாய் அவளின் வளைவு நெளிவுகளில் பொருந்தி இருந்தது. நெற்றியில் சுட்டி, வைர மூக்குத்தி, ஒட்டியாணம் எனத் தலை முதல் கால் வரை தங்கத்தால் அலங்காரம் செய்யப்பட்ட அழகு பதுவையாய்க் காட்சியளித்தாள்.
வாசவி கார்த்திகேயன்...
கண்ணாடி முன் சென்று ஒரு சில நொடிகளுக்கு ஒரு முறை தன்னைப் பார்த்து, 'நம்ம மூஞ்சி தானா இது!. இவ்ளோ அழகாவா இருக்கோம்!. ' என்ற வசனத்தை மனத்திற்குள் பேசிக் கொண்டு கட்டில் அமர்ந்து கொள்வாள்.
வெளியே கேட்ட மேள சத்ததில் மனம் மகிழ்ச்சி கொள்ளாது சோர்ந்து போனது.
" இன்னும் கொஞ்ச நேரம் தான். அப்றம் நீ வாசவி கார்த்திகேயன் இல்ல. வாசவி ருத்ரதேவ். புருஷெ வீட்டுக்குப் போயும் சின்ன பிள்ள மாதிரி நடந்துக்க கூடாது. பொறுப்பா அந்த வீட்டு மருமக கணக்கா நடந்துக்க. இல்லன்னா என்ன வளத்திருக்கான்னு உங்கப்பனத்தான் ஏசுவாங்க. " என உஷா, புகுந்த வீட்டில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பாடம் நடத்த, சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டவள் அழத் தொடங்கி விட்டாள்.
"வாசு என்னாச்சு? ஏம்மா அழற?" என்ற கேள்வியை யார் கேட்டாலும் பதில் சொல்லவில்லை அவள். கார்த்திகேயன் வந்தால் தான் வாயைத் திறப்பாள் என அவனை அழைத்து வந்தாள் ஜோஹிதா.
"நல்லாத்தான் இருந்தா கார்த்திக். திடீர்னு எந்தக் கருப்பு அடிச்சதோ!. அழ ஆரம்பிச்சிட்டா!. ஏய்... ஏய் வாசு... அழற நிப்பாட்டு டி... உ கார்த்திப்பா வந்திட்டான்ல. என்னனென்னனு வாயத் தொரந்து சொல்லு. " ஜோஹிதா வாசுவின் தோளில் தட்ட, வாசு நிமிர்ந்து கார்த்திக்கை பார்த்தாள். பார்த்தவள் வேகமாக அவனை அணைத்துக் கொண்டாள்.
"கார்த்திப்பா…. நான் அவசியம் இந்தக் கல்யாணத்த செஞ்சிக்கணுமா?" என்று கேட்டு, பெற்றவர்கள் இருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினாள் மகள்.
"கல்யாணமானா நான் அவெ வீட்டுல தான் தங்கணுமாம். உங்களப் பாக்கறது முடியாதுன்னு உஷா ஆன்டி சொன்னாங்க. எனக்கு வேண்டாம். என்னல உங்க கிட்ட இருந்து பிரிக்கிற இந்தக் கல்யாணம் வேண்டாம். " எனச் சொல்லி அழ,
'அட வாணரமே. நான் சொன்னத இப்படித் தப்பு தப்பா போட்டுக் குடுக்குது. இப்ப எல்லாரும் ரவுண்டு கட்டி என்னைந் திட்டுங்களே. அதுலயும் அவ மாமங்காரென் வந்தா என்னைப் பிச்சி எறிஞ்சிடுவான' என நினைத்த உஷா, மற்றவர்கள் வாயை திறக்கும் முன்,
" லூசா நீ! கல்யாண பண்ணா எல்லாருமே புருஷெ வீட்டுக்கு போறது தான வழக்கம். நாலாம் உன் மாமன கட்டீட்டு உன் மாமெங்கூடத் தான இருக்கேன். புருஷெ கூட இருக்கத்தான கல்யாணம் பண்ணி வைக்கிறதே. கண்ட படி பேசி ஒரு மணி நேரமா போட்ட மேக்கப்ப அழிக்காம வெளில கிளம்பு. மணமேடைல மாப்ள காத்திருப்பான்." உஷா.
" யாரு கார்த்திப்பா இப்படி ஒரு ரூல போட்டா?. ஏன் வைஃப் கூட ஹஸ்பென்ட் இருக்கட்டுமோ0வைஃப் வீட்டுல. நான் போய் ருத்ராட்ட சொல்றேன். ஆஃப்டர் மேரேஜ் நீ எங்க வீட்டுல தான் இருக்கணும்னு. சம்மதமா இல்லயான்னு கேட்டுட்டு கல்யாணத்த வச்சுப்போம். " எனக் கிளம்பியவளை, ஜோஹிதா தான் பிடித்து இழுத்து போட்டாள், கோபமாக.
" என்ன உலறுற வாசு?" என்றாள் பற்களைக் கட்டித்துக் கொண்டு.
"நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு? அவெ நம்ம வீட்டுல இருந்தான்னா கல்யாணத்துக்கு அப்றம் நான் உங்களப் பாக்க அவெங்கிட்ட பர்மிஷன் வாங்க தேவையில்ல. நினைக்கும் போதெல்லாம் நான் கார்த்திப்பாவ பாத்துப்பேன். " எனக் கார்த்திக்கை அணைத்துக் கொண்டாள் மகள்.
"அப்ப அவனோட ஃபேரன்ஸ்ஸ அவெ பாக்க வேண்டாம்மா. " உஷா.
" அப்ப கல்யாணத்துக்கு அப்றம் அவெ அவங்க அப்பாம்மா கூடவே இருக்கட்டும். நான் என்னோட கார்த்திப்பா கூடவே இருப்பேன்."
"அதுக்கு எதுக்கு டி கல்யாணம்! பைத்தியம் மாதிரி இருக்கு உம்பேச்சு... முதல்ல முகத்த நல்லாத் துடச்சிட்டு மேக்கப்ப அட்ஜஸ்ட் பண்ணு… " என ஜோஹிதா திட்ட,
"நான் போ மாட்டேன். நம்ம வீட்டுக்கு வர பர்மிஷன் கேக்குற கல்யாணம் எனக்கு வேண்டாம். "
"இப்பயும் நீ யார்கிட்டையும் பர்மிஷன் வாங்க தேவையில்ல வாசும்மா. நீ எப்ப நினைச்சாலும் எங்கள வந்து பாக்கலாம். உன்ன யாரும் தடுக்க மாட்டாங்க. " மகளின் முதுகை தடவிக் கொடுத்தான் அவன்.
"ஆனா கார்த்திப்பா!. " என ஆரம்பித்தவளை சமாதானம் செய்ய தொடங்கினான் கார்த்திக்.
வாசுவை முதல் முதலில் பள்ளியில் சேர்க்கும் போதும் இதே அலப்பறை தான். ‘உடன் வாருங்கள். இல்லை நான் பள்ளி செல்ல வில்லை.’ என்று பிடிவாதமாக இரு கரத்தையும் கட்டிக் கொண்டு சோஃபாவில் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்தாள். ஜோஹிதா கூடக் கோபமாகத் திட்டினாள். எங்கே தன்னைப் போன்று பிடிவாதக்காரியாக மகள் வளந்து விடுவாளோ என்று. ஆனால் கார்த்திக் அப்படி அல்ல.
அவளின் நியாயமான அனைத்து பிடிவாதத்திற்கும் வளைந்து கொடுப்பான். ஆனால் வீண் வரட்டு பிடிவாதம் என்றால் விட்டு கொடுக்க மாட்டான். அவளுக்குப் புரியும் படி எடுத்து சொல்வானே தவிர, வாசுவின் பிடிவாதத்திற்கு துணை நின்றது இல்ல.
எப்பொழுதுமே கார்த்திக் அப்படித்தான். யாரின் விருப்பத்திற்காகவும் தன் இலக்கை மாற்றிக் கொள்ள மாட்டான். இப்போதும் அதை நிறுபித்தான்.
மகளின் கலைந்த கண்மையை துடைத்து, மீண்டும் அலங்காரம் செய்தவன். "ருத்ரா உனக்காகக் காத்திட்டு இருக்கான் வாசு. கிட்டத்தட்ட எட்டு வர்ஷமா! அவன ஏமாத்த போறீயா? " எனக் கேட்க, வேகமாக எழுந்து சென்றாள் அவள்.
' எங்க போறா?. ' எனப் பின்னால் சொல்லாது இருந்த இடத்திலேயே இருந்து யோசிக்க, வாசு வாயில் கை வைத்துக் கொண்டு 'O My God. O MY God.' கத்திக் கொண்டே அறைக்குள் வந்தாள். வந்தவள் கார்த்திக்கை வந்து மீண்டும் அணைத்துக் கொண்டாள்.
"கார்த்திப்பா… கார்த்திப்பா... ருத்ரா சாமிங்கா இருக்கான். வேட்டி சட்டை அவனுக்கு எவ்ளோ சூப்பரா இருக்குன்னு தெரியுமா!. எனக்காக வளத்த மீசைய முறுக்கி கிட்டு, ஐயர் சொல்றது புரியாம திருதிருன்னு முழிச்சிட்டு. ஹாஹ்ஹாஹா… அவ்ளோ அழகா இருக்கான். " எனச் சிரித்தவளைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டனர் உஷாவும் ஜோஹிதாவும்.
"லேட்டாச்சி... எனக்காகக் காத்திட்டு இருக்கான். இப்ப நானா போய் அவெ பக்கத்துல உக்காந்துக்கணுமா. இல்ல கைய பிடிச்சி யாராது கூட்டீட்டு போகப் போறீங்களா?. " எனக் கேட்டாள் வாசு.
ஏனெனில் நேற்று நிச்சயத்தின் போது. ' கொஞ்சமாது பொண்ணு மாதிரி நடந்துக்க வாசு. நீயால்லாம் மேடைக்கு வரக் கூடாது. ருத்ரா தங்கச்சி உன்னைக் கூப்பிட வருவா. அவ கூட தான் வரணும். ' என்ற உஷாவின் திட்டு நினைவு வந்ததால் அவ்வாறு கேட்டாள்.
" புவனா… அவளக் காணுமே… நேரமாச்சி. கல்யாணம் பண்ணிக்கணும். எங்க ஜோஹிம்மா அவ. " எனக் கண்களால் தேடியவளைத் தரையில் கால் பதிக்காது தூக்கிச் சென்றான் கார்த்திக்.
மகளை தோளில் சுமத்தி மணமேடைக்கு வந்தவனைப் பார்த்து அனைவரும் ஆ வென வாயைத் திறந்தனர். பொதுவாக ஒரு வணக்கத்தை வைத்துவிட்டு ருத்ராவின் அருகில் வேகமாக வாசு அமர்ந்தாள்.
" Daddy's girl... " என ருத்ரா முணுமுணுத்தான்.
"இருந்திட்டு போறேன். உனக்கு என்ன வந்துச்சி? " என ரோசமாக கேட்க,
" எனக்கும் ஒரு Daddy's girl வேணும். என்னை மட்டுமே சப்போட் பண்ற மாதிரி ஒரு பொண்ணப் பெத்து குடுத்திட்டு… நீ உன்னோட Daddy க்கு girl லாவே இருந்துக்க. எனக்கு ஒன்னுமில்ல." என்க, அவள் அதிர்ந்து அவனின் முகம் பார்த்தாள்.
"என்னது கார்த்திப்பா கூடவே இருந்துக்கவா?. அதெல்லாம் முடியாது. நான் உங்கூட தான் இருப்பேன். பொண்ணு பிறந்தாத்தான என்னைக் கண்டுக்க மாட்ட... கொறஞ்சது ஐஞ்சி வர்ஷமாச்சும் குழந்தையப் பத்தி பேசவே கூடாது நீ. உனக்கு அது தான் தண்டன. " என இதழ் கோணி அழகு காட்டியவளின் இதழை தன்வசப்படுத்தினான் அவளின் நாயகன்.
"no more talks Sweety. " எனச் சொல்லி கண் சிமிட்டியபடியே இதழை விடுவிக்க... அப்போது தலை குனிந்து நாணத்துடன் வாயை மூடியவள் தான், திறக்கவே இல்லை.
"ஐயரே வந்த வேலைய பாரும். ஓசில படம் பாத்திட்டு இருக்கீரு. நீரு தாலி எடுத்துக்குடுக்க லேட் ஆக்குனேல்னா 18+ ஸீன்லாம் மேடைலயே நடக்கும். அப்படி நடந்திட கூடாதுன்னா சீக்கரம் எடுத்து குடும் ஐயரே. " என்று முருகு குரல் கொடுக்க,
எவ்வித அவசரமும் காட்டாது நிதானமாக கார்த்திகயேன் பொண்ணைத் தாரைவார்த்து கொடுத்தான். வாசவியின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி தன் சரி பாதியாக மாற்றிக் கொண்டான் ருத்ரதேவ்.
மாலை மாற்றும் போது கார்த்திக் மகளை தோளில் தூக்கிக் கொள்ள, ருத்ராவிற்காக சிவ்ராம் வந்தார். மகனைக் கார்த்திக் தோற்கடித்து விடக்கூடாது என்று, சம்மந்திகள் இருவரின் போட்டியில் இடம் கலகலத்தது.
அம்மி மிதிப்பது… மணமக்களுக்கு பால் பழம் தருவது என எல்லா திருமணச் சடங்கையும் ருத்ரா வாசு இருவரும் ரசித்து பொறுமையுடன் செய்தான்.
"அமெரிக்கால அருந்ததிய பாக்க முடியுமா என்ன.?" என முருகு கேட்க,
"அமெரிக்காவா இருந்தாலும் அண்டார்டிகாவா இருந்தாலும் பகல்ல எந்த நட்சத்திரத்தையும் பாக்க முடியாது. எக்ஸப்ட் நம்ம சூரியன தவிர. " என க்ரிஷ் சொல்ல அங்கு சிரிப்பலைகள் எழுந்தது.
ருத்ராவின் வீட்டிற்கு செல்லும் போது வாசு அழவில்லை. மகிழ்வுடனே சென்றாள். தன் கார்த்திப்பாவிற்காக.
புதுமக்கள் நிறைவுடன் தங்களின் புது வாழ்வை தொடங்கினர்.
_____________
ஐந்தாண்டுகள் கழித்து.
கையில் ஐஸ்கிரீமுடன் ருத்ராவை எங்கு நேரில் பார்த்தாளோ அந்த பார்க்கில் தான் இருக்கிறாள் வாசு. அதே இரவு பொழுது அது. உடன் ஒரு சிறு வாண்டுவும் இருந்தது.
"என்ன வாண்டா!. ஹலோ அது எந்தம்பி. பேரு யுவனேஷ். கார்த்திப்பா ஜோஹிம்மாவோட பேபி. மை ஸ்வீட் டார்லிங். அவன போய் வாண்டுன்னு சொல்லிட்டு. மரியாத முக்கியம். " வாசுவின் மிரட்டல் அது.
யுவனேஷ். வாசு சொன்னது போல் கார்த்திக் ஜோஹிதாவின் மகன்.
" இந்த வயசுக்கப்றம் குழந்தையா?. விளையாடாத வாசு. உனக்கே கல்யாணம் ஆகப்போது. பேரன் பேத்தி எடுக்குற வயசுல வயித்தத் தள்ளிட்டு மகளுக்குப் போட்டியா நின்னா… பாக்குறவங்க என்ன சொல்லுவாங்க? " என்ற ஜோஹிதாவிடம்.,
"அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. அறுபது வயசுல கூட குழந்த பெத்துக்கிறவங்க இருக்கத்தான செய்றாங்க. உங்களுக்கு ஐம்பதே ஆகலயே." என்றவளை ஜோஹிதா முறைத்தாள்.
"எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சின்னா நீங்க ரெண்டு பேர் மட்டும் தனியா இருப்பீங்க. உங்களைத் தெள்ள பண்ணவாது ஒரு ஆள் வேணும். அட்லீஸ்ட் கார்த்திப்பா ஹோட்டல டெவலப் பண்ணி கவனிச்சிக்கவாது ஒரு வாரிசு வேணும். எனக்கு ஒரு உடன் பிறப்பு வேணும்." என வாசு பிடிவாதம் பிடிக்க,
மகளின் பிடிவாதத்திற்கு பெற்றவர்கள் இருவரும் வளையத்தான் வேண்டியிருந்தது. இல்லை எனில் ‘ருத்ராவைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். உங்களுடனேயே தான் இருப்பேன்.’ என்றவளை வேறு எப்படிச் சமாதானம் செய்வது.
வாசுவின் திருமணம் முடிந்த அடுத்த ஓராண்டிற்குள்ளாக யுவனேஷ் பிறந்து விட்டான்.
" கார்த்திப்பா ஒரு தங்கச்சி இருந்தா நல்லா இருக்கும்ல. " எனக் கார்த்திக்கைக் கட்டிக் கொண்டு கேட்டவளின் காதைப் பிடித்து திருகியது ஜோஹிதாவைத் தவிர வேறு யாரும் இல்லை.
யுவனேஷ் பிறந்ததில் யாருக்கு மகிழ்ச்சியோ இல்லையோ. நம் ருத்ராக்கு ரெட்டிப்பு சந்தோஷம்.
ஏம்ப்பா?.
" நான் சின்ன வயசா இருக்கும் போது மிஸ்டர் கார்த்திகேயன் என்னோட சட்டையப் பிடிச்சி அந்தரத்துல தூக்கி அடிக்கடி நிப்பாட்டுவாரு. அவரத் தூக்குற அளவுக்கு அப்ப உடம்புல தெம்பில்ல. இப்ப தூக்கலாம்னா... பன மரம் மாதிரி தலைக்கி மேல வளந்த ஆள எந்தலைக்கி மேல தூக்குறது ரொம்ப கஷ்டம். ஆனா அவரோட பையன தூக்கலாம்ல. எனக்குப் பண்ண கொடுமைக்கு நான் பழி வாங்கலாம்." இது ருத்ராவோட மைண்ட் வாய்ஸ்.
இரவு நேரத்தில் அக்கா தம்பி இருவரும் ரசித்து ருசித்து பனிக்கூழை சுவைக்க, அந்த பேரமைதி இரவைக் கிழித்துக்கொண்டு அவர்கள் முன் ஒரு கார் இரைச்சலுடன் வந்தது நின்றது. அன்று போல் இன்றும் வாசவி அதிர்ந்து கையில் இருந்த ஐஸ்கிரீமைக் கீழே போட்டாள்.
" உனக்கு இதே வேலையா போச்சு ருத்ரா. என்னோட ஐஸ்கிரீம சாப்பிட விடாம வேஸ்ட் பண்றது. மெதுவா கார நிப்பாட்ட மாட்டியா!. " எனக் கோபமாகத் திட்ட,
"ஹே ஸ்வீட்டி. ஏன் இவ்ளோ கோபம். காம் டவுன். உன்னை ஐஸ்க்ரீம் சாப்பிடக் கூடாதுன்னு டாக்டர் சொன்னாங்களே. "
என்றபடி இறங்க,
" அதே டாக்டர் தான் உனக்குப் பிடிச்சத சாப்பிடு. நல்லா சாப்பிடுன்னு சொன்னாங்க. அது உ காதுக்கு கேக்கலயா? " என்றவளை அவன் முறைக்க, அவள் கோபமாக முகம் திருப்பிக் கொண்டு காரின் கதவைத் திறந்தாள்.
"பாத்தும்மா. கழுத்து சுளிக்கிக்கப் போது. " எனக் கேலியாக கூறியவனின் பார்வை தன் இரண்டாவது மகவை வயிற்றால் வைத்துக் கொண்டு முதல் மகவைத் சுமந்து கொண்டு சென்ற மனைவியின் மீது ரசனையுடன் விழுந்தது.
இரு மாதமாக இருந்த போதே வந்து அமர்ந்து விட்டாள் கார்த்திகேயனின் வீட்டில். கூடாது என்ற ருத்ராவிடம் சண்டை போட்டு, வீட்டை கோர்ட்டுக்கி, மாமியார் அமிர்தாவை நீதிபதியாக்கி வந்தமர்ந்துவிட்டாள்.
"அப்ப நீ மட்டும் போ. எதுக்கு எம்மகளக் கூப்பிடுற. " எனச் சொல்லி ஒரு வயது மகள் ஷிவானியைத் தன்னுடனேயே வைத்துக் கொண்டான் அவன். அந்தக் குட்டியும், ருத்ராவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு இருந்து கொண்டது.
காரின் பின் சீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மகளை தூக்கியவள். ' இவனால என்னோட ஐஸ்கிரீம் போச்சி. ' என முணுமுணுத்தபடியே முறைத்தக் கொண்டு சென்றாள், தங்களின் உணவகத்துக்குள்.
"ப்ரெக்னன்ஸி டயத்துல ஜங் ஃபுட் சாப்பிட கூடாது. டேய் நீ அவளுக்குத் தம்பி தான. இதயெல்லாம் நீ சொல்ல மாட்டியா. " என வாசுவை பின் தொடர்ந்த யுவனின் டீசர்ட்டை பிடித்து இழுத்து நிறுத்தி கேட்டதோடு ஐஸ்கிரீமையும் ருத்ரா பிடுங்கிக் கொள்ள,
" எங்கக்காக்கு என்ன பண்ணணும் பண்ணக்கூடாதுன்னு நல்லவே தெரியும். நீங்க எதுவும் சொல்ல தேவையில்ல மிஸ்டர் ருத்ரதேவ். " என்றான் அவனின் கரத்தைத் தட்டி விட்டு.
கார்த்திக் அவனைத் தூக்குவது போல் யுவனின் சட்டை பிடித்து தலைக்கி மேல் தூக்கியவன், " என்ன சொன்ன…. மிஸ்டர் ருத்ரதேவ் வா. நான் உங்கக்கா ஹஸ்பெண்ட்… மாமா ன்னு கூப்பிடணும். " என மிரட்ட,
"நீங்க கூட தான் எங்கப்பாவ இப்ப வர மிஸ்டர் கார்த்திகேயன்னு கூப்பிடுறீங்க. நீங்க அவர மாமான்னு கூப்பிடாத வர, நா உங்கள அப்படி கூப்பிட மாட்டேன். " என்றான் முறைப்பாக. இருவரும் முறைத்துப் கொள்ள, ஜோஹிதா வெளியே வந்து ருத்ராவை வரவேற்று அழைத்துச் சென்றாள்.
இரவு உணவு, அதை ஒன்றாக அமர்ந்து உண்டனர் அனைவரும். வாசு மட்டும் கார்த்திக்கின் வலது புறத்தை யாருக்கும் விட்டு கொடுக்காது அவனின் அருகிலேயே அமர்ந்தாள். அப்பாவும் மகளும் ஊட்டிக் கொள்ள,
"உன்னோட மாம் நம்மல கண்டுக்க மாட்டா. " என ருத்ராவும் ஷாவினியும் ஒன்றிக் கொண்டனர். அவனைப் பார்த்து சிரித்தபடி வாசு யுவனுக்கும் ஊட்டிய படி உணவுண்டவள் ஜோஹிதாவிடம் நீட்டினாள் கரத்தை புன்னகையுடன். கூடவே மற்றொரு கரம் நீண்டது. அது கார்த்திக்குடையது.
நடந்ததை மறந்தால் தான் நடந்து கொண்டிருக்கும் வாழ்க்கை சிறக்கும். அதை உணர்ந்தவன் வாணியை மறக்க முயன்று ஜோஹிதாவுடன் வாழத் தொடங்கியிருந்தான்.
கண்கள் ஈரமாக, கணவன் தந்த அன்பில் திளைத்து போனாள் பெண். எத்தனை ஆண்டு கால ஏக்கம் அது. அது அத்தனையும் சேர்த்து வைத்து வாழ்கிறாள் இப்போது.
காதலில் புரிதல் வந்து விட்டால்.
பிரிவுக்கு இடம் இல்லை.
போதும். இத்தோடு நம் கதையை முடிச்சிக்கிவோம்.
நன்றி.
வாச பெருமக்கள் அனைவருக்கும் என் பணிவான நன்றி.
உங்களுடைய கருத்துக்களும் விமர்சனங்களும் தான் என்னை எழுத்தாளரா உருவாக்கும். அதுனால கதை பற்றிய உங்கள் கருத்துக்கள் நிறையோ குறையோ எதுவாக இருந்தாலும் கமெண்ட் பாக்ஸ்ல மறக்காம சொல்லிட்டு போங்க.
பிடிச்சிருந்தா கதைய லைக் பண்ணுங்க.
உங்க ஃப்ரெண்ட்ஸ்ஸுக்கு சேர் பண்ணுங்க.
நன்றி.
வணக்கம்.
சுபம்.

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..