முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உறவு 5

அத்தியாயம்: 5     இரு தினங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பூஞ்சோலை கிராமத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தான் தர்மேந்திரன்.   தன் அண்ணனின் பதினாறாம் நாள் காரியத்திற்காக.   பிறந்து வளர்ந்த ஊரைப் பார்க்கையில் தன் அண்ணனுடன் சேர்ந்து கழித்த நாள்கள் நினைவிற்கு வந்தன. இப்பொழுது அவன் உயிரோடு இல்லை என்பதை மிகவும் சிரமப்பட்டுப் புத்திக்கு கொண்டு வந்து, வடியும் கண்ணீரையும் அழும் மனத்தையும் சமாதானம் செய்தான்.   வேதனையும் வலியும் அவனின் உடலை வியாபித்து, ஆளை உருக்கி இருந்தது. ஆனாலும் திடமாக இருக்க வேண்டிய அவசியத்தை அவனின் குடும்பம் உணர்த்தியது‌.   கிளம்பும் போது தான் குழலி அழைத்து, “அண்ணா… அண்ணி மயங்கி விழுந்துட்டாங்க. ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போயிருக்கோம்.” என்று தகவல் கூறி அழுதாள்.   “என்னாச்சி வெண்மா?”   “தெரியலண்ணா. சரியாச் சாப்பிடக் கூட மாட்டேங்கிறாங்க. எப்பப் பாரு அழுதிட்டே தான் இருக்காங்க. எனக்கு அவங்கள நினைச்சாக் கவலையா இருக்கண்ணா.” என வருந்திச் சொல்ல, தாய்க்கு அழைத்து என்னானது என்று விவரம் கேட்டான்.   “ஆர்த்தி கர்ப்பமா இருக்கா தர்மா. உங்கண்ணே நம்மள ...

நேசிப்பாயா 111 (Epilogue 1)


 

அத்தியாயம்: 111


Fremont.


Hotel OLA.


நாளை காலை ருத்ரதேவ் மற்றும் வாசவியின் திருமணம் அங்கு தான் நடைபெற உள்ளது. அந்த ஹோட்டலையே வேறு விதமாகக் காட்டும் படி அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. கார்த்திக் ஜோஹிதாவின் ஐடியாவால் அந்த ஹோட்டல் மின்னியது.


"நம்ம ஊர்லலாம் பெண்ணத் தேடி வந்து தான் கல்யாணம் பண்ணிக்கிறது வழக்கம். பையன தேடி பொண்ணு போய்ப் பழக்கமே கிடையாது. அதுனால எங்களால லாஸ் ஏஞ்சல்ஸ் வர முடியாது, எல்லாத்தையும் தூக்கி கிட்டு நம்ம இடத்தத் தேடி வரச் சொல்லு கார்த்திக் அந்தப் பெரிய மனுஷன. நம்ம பொண்ணு வேணும்னா வந்து தான் ஆகணும்னு சொல்லு. " என்பது முருகுவின் உத்தரவு.


அதற்கு பணிந்து MET குழும உரிமையாளரும் கல்யாண மாப்பிள்ளை ருத்ரதேவ்வின் தந்தையானத் திருவாளர் சிவ்ராம் Fremontல் திருமணத்தை வைத்துக் கொள்ள சம்மதித்து குடும்பத்துடன் அங்கு வந்து தங்கி உள்ளார். நாட்களின் எண்ணிக்கைக் குறைவாக இருந்த போதிலும் எந்த ஒரு குறையும் இல்லாது ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக நடந்தன. க்ரிஷ்ஷின் தலைமையில்.


" வாசு எனக்குக் கிடைக்காதது‌ சின்ன வருத்தம் தான். பட் எங்க வீட்டுக்கு தான வாசு வரப்போறா. இனி டெய்லியும் பாத்துக்கலாம், பேசிக்கலாம், பழகிக்கலாங்கிற நிம்மதில தான், கல்யாண வேலைய பாக்குறேன். " எனச் சோக கீதம் பாடிய படி தம்பியின் கல்யாண வேலையை கவனித்தான்.


"க்ரிஷ் அண்ணா, தாரிகா எங்க? பாட்டி, அம்மா, தன்யா, மாதேஷ்னு யாருமே எங்கண்ணுல சிக்கல. எங்க போயிருக்காங்க? " என்றபடி வந்தாள் அவளின் தங்கை புவனா, வெஸ்டன் உடையில் ஒயிலாய்.


"சிக்குறதுக்கு அவங்க என்ன ஆடா மாடா. இங்க தான் ரூம்க்குள்ள கும்மாலமடிச்சிட்டு கிடப்பாங்க. ஆமா உம்புருஷெ மார்க் எங்க? "


" அவரும் தேவ்வண்ணாவும் dad ட பாக்க நம்ம புது ஃபேக்டரிக்குப் போயிருக்காங்க. இங்க நீங்க மட்டும் தான் வெட்டி ஆஃபீஸரா இருக்கீங்க. மத்தவங்க எல்லாம் வேலை பாத்திட்டு இருக்காங்க."


"எது வெட்டியாவா! நானா!!. சுத்தி பாரு புவனா. எல்லாமே உன் அண்ணே பண்ணது. அந்த உச்சில இருக்குற லைட்ட கூட யாரோட உதவியும் இல்லாம நான் தான் ஒத்தையா ஏறி நின்னு கட்டுனேன். என்ன போய்... சரி… சரி... நீ மன்னிப்பே கேக்கலன்னாலும் உன்ன நான் மன்னிக்கிறேன்.‌ நீ ரொம்ப நாள் கழிச்சு ஸ்க்ரீன்குள்ள வர்றேல்ல அதா எதுவுமே தெரியல உனக்கு. I show you. அப்றம் என்னோட பெருமைய நானே சொன்னா நீ சந்தேகப்படுவ. அதுனால மை ஹனி சொல்லுவா. கம்... " என மனைவியைக் காண அழைத்துச் சென்றான் ரூமிற்கு.


அங்கு… புடவை கட்டி அலங்காரம் முடித்து இன்னும் சிறிது நேரத்தில் நடக்கவிருக்கும் நிச்சயத்திற்குத் தயாராகி இருந்தனர் பெண்கள்.


நம்ம ராசாத்தி பாட்டி குத்தாட்டாம் போட்டுக் கொண்டு இருந்தது. கையில் சியர் கேர்ள்ஸ் வைத்திருப்பார்களே, அது போல் கலர் கலராக மின்னக்கூடிய வண்ண காகிதத்தை வைத்துக் கொண்டு கண்களில் கூலிங் க்ளாஸ், காதுகளில் இயர் மாஃப் ஹெட் ஃபோன், அதில் ஆங்கிலப் பாடல் வேறு ஒலித்துக் கொண்டிருந்தது.


வரிகள் ஏதுவும் புரியவில்லை என்றாலும், கட்டிலில் மேல் ஏறி பாட்டியும் மாதேஷ்ஷும் ஆட, கூட தன்யாவும் தாரிகாவும் தரையில் நின்று ஆடிக் கொண்டிருந்தனர். அமிர்தா மட்டும் இந்த வயதிலும் ஆட்டம் போடும் தன் தாயை நினைத்து நொந்தபடி சோஃபாவில் அமர்ந்திருந்தார்.


அவருக்கு எந்த வேலையும் கிடையாது. உண்ணுவது உறங்குவது போக மகன் தாலி கட்டும் போது கையில் உள்ள அட்சதையைத் தூவி வாழ்த்துவது மட்டுமே பெரிய வேலை. 


மகளை பார்த்ததும், " புவனா! எப்படி வந்த? மாப்ள எங்க?" என ஆர்வமுடன் கேட்டார் அமிர்தா.


" என்னம்மா இதெல்லாம்!. என்ன நடக்குது இங்க?. " என்க, க்ரிஷ் பாட்டை நிறுத்தினான்.


" எவெ அவெ… " நம் ராசாத்தி தான்.


புவனா, " என்ன நடக்குது பாட்டி? என்ன பண்றீங்க?"  


தன்யா, "நாங்க பார்ட்டி கொண்டாடிட்டு இருக்கோம்." 


"ய்யா... ய்யா… குடிக்க, கொரிக்கன்னு எல்லாமே இருக்கு. you want anything. take this. " என மினி கேன்டீனையே ராசாத்தி காட்ட,


"நீயும் வந்து ஜாயின் பண்ணிக்க புவனா. கம்..." எனத் தாரிகா புவனாவின் கரம் பற்றி இழுத்தாள். க்ரிஷ் அதை பற்றிக் கொண்டு மனைவியுடன் இணைந்து கொண்டு பாடலே ஒலிக்காத இடத்தில் பவ்வியமாக ஆடினான்.


"ஆமா, இங்கப் பொண்ணுங்க குடிக்கிற மாதிரி கூல் டிரிங்க்காத்தான் இருக்கா. இல்ல நாங்க குடிக்கிற மாதிரி ஹாட் டிரிங்க் எதாவது... " எனக் க்ரிஷ் தேட, பாட்டி 'இந்தாடா பேராண்டி. ' என முழு பாட்டில் ஓட்காவை நீட்டினார்.


"அட ஃபூல் பாட்டில் பாட்டி. இதுல ஒரு க்ளாஸ்ஸ உள்ள ஊத்திட்டு தான் ஆடிட்டு இருக்கீயா? உடம்புக்கு சேரலன்னா என்ன பண்ணுவ?. " க்ரிஷ்.


" எனக்கு என்னடா ஆகப்போது. என்றும் பதினாறு தான் நான். சந்தோஷமா இருக்கும் போது நோயெல்லாம் பறந்து போய்டும். " என்றவர் ஆட்டத்தை நிறுத்தவில்லை.


"சந்தோஷம். அது சரி... பேரெ கல்யாணம்னா இருக்கத்தான செய்யும். " என்க.


"அட போடா டேய். அந்த மைதா மாவுக்காரனுக்குக் கல்யாணம்னா நான் ஏன் சந்தோஷப்படணும். ஏன் சந்தோஷத்துக்குக் காரணம் எம்பேத்தி தப்பிச்சிட்டா. உந்தம்பிட்ட இருந்து. வெள்ளக்கார விநோதத்திட்ட இருந்து. ஹாஹ்ஹா... எம்மகெ இவள அமெரிக்க மருமகளா மாத்த எவ்ளோ ட்ரெய் பண்ணான்னு தெரியுமா… தல கீழா நின்று டம்ளர் டம்ளரா தண்ணிய குடிச்சான். ஆனா, கடைசில எதுவுமே நடக்கலயே. தப்பிச்சிட்டா எம்பேத்தி. அதுக்கு தான் இந்த பார்ட்டி. என்ஜாய்…" என்று தாரிகாவுடன் ஆட, தன்யா முறைத்தாள்.


" ஏய் கிழவி, இதுக்கு தான் பார்ட்டி வைச்சியா? "


"ஆமா... உனக்கு நான் மா நிறத்துல மீச வச்ச நம்மூர் பையன பாத்து வச்சிருக்குனேன். ஜாதகம் எல்லாம் பக்காவாப் பெருந்தியிருக்கு. ஊருக்கு போகவும் டும்டும்டும் தான். " என்க, தாரிகா‌ பாட்டியை முறைத்தாள்.


"உன்னோட ஆசைல ஆசிட் ஊத்த எனக்கு விருப்பம் இல்ல. ஆனா வேற வழி இல்ல. இங்க வா. " என ராசாத்தியின் கரம் பற்றி இழுத்து சென்ற தன்யா கேமராவும் கையுமாக, வந்து கொண்டிருந்தவர்களையும் நிச்சயதார்த்த நிகழ்வையும் ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருந்த டேனியலைக் காட்டி,


"அவெ பேரு டேனியல். என்னோட லவ்வர். நான் அவனத் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன். அவனும் அமெரிக்கா காரெந்தா ன். நானும் அமெரிக்க மருமக தான். நான் போட்ட சபதத்துல ஜெயிக்க போறேன். பாத்தீயா. " என இல்லாத காலரைத தூக்கி விட, ராசாத்தி மகனைப் பார்க்க வாயில் அடித்துக் கொண்டு சென்றார். கல்யாணத்தை நிறுத்த வேண்டாமா?


" என்னாச்சி தயா?. பாட்டி ஏன் கத்திட்டே போறாங்க?" டேனியல்.


"ஒன்னுமில்ல டேனி. " என்றவளின் பார்வை பைஜாமாவுடன் மிடுக்காய் நின்றவனைக் காதலுடன் தீண்டியது. அதை உணர்ந்தவன் புடவையில் வசீகரிக்கும் தன்னவளை தன்னோடணைத்து இதழொற்றலை வழங்கினான்.


"எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு தயா.‌ மேரேஜ்... அத அவ்ளோ க்ராண்டா ஹப்பியா செலிப்ரேட் பண்ணறது, நல்லா இருக்கு. கார்த்திக் அங்கிள் வீட்டுல காலை வைக்க கூட இடம் இல்ல. அவ்ளோ ரிலேட்டிவ் வந்திருக்காங்க.‌ பேச்சும் சிரிப்புமா… பாக்கவே கலர்புல்லா ‌இருந்தது. நம்ம மேரேஜ்ஜும் இப்படி தான் நடக்குமா.? " என அவளின் கன்னத்தில் கோலமிட்டபடி கேட்க, அவனின் ஊர்வலம் சென்ற விரலை பிடித்து அதன் நுனியில் முத்தமிட்டவள்,


" ம் நடக்கும்... பட் அது இந்தியால நடக்கும். " என அவனின் கழுத்தில் மாலையாய் கரம் கோர்த்து அணைத்துக் கொண்டாள்.


"என்னோட சைடுல நிக்க யாரு இருப்பா. " என்றவனுக்கு ருத்ரா வாசுவின் திருமணம் போல் சொந்தங்கள் கூடி நடக்கவேண்டும் என்று எண்ணம் வந்தது. ஆனால் சொந்தங்களுக்கு எங்கே செல்வது? எனக் கேட்டான்.


"டேனி... வாசு இருக்கா. உன்னோட சைடுல. அவ போதுமே. " என்க, அவன் அதை ஆமோதித்து அவளின் இதழை ஆசையுடன் சுவைக்க,


" ஏப்பா‌ அந்த ஓரமா போய் உங்க அன்ப பரிமாறிக்க வேண்டியது தான. ஏன் நடக்குற பாதைல நின்னுட்டு பரிமாறுறீங்க. " முருகு தான்.


"ஸாரி அங்கிள். " என டேனியல் வெட்கப் பட, தன்யா ஓடி விட்டாள்.


" கைல கேமராவ வச்சிருக்கியே யாரையாது ஃபோட்டோ எடுத்தீயா. " எனக் கேட்க, அவன் இதுவரை எடுத்த புகைப்படங்களை அவரிடம் காட்டினான்.


அதில் பெரும்பான்மையான புகைப்படத்தில் கார்த்திக் ஜோஹிதா இருவரும் கரம் கோர்த்து இணைந்தபடியும் பேசி சிரித்த படியும் இருக்க, அவருக்குத் திருப்தி கிடைத்தது போல் டேனியலை பாராட்டி விட்டு, அவர்கள் இருவரையும் தனியா கவனிக்க சொல்லி சென்றார்.‌


மாப்பிள்ளையின் வருகையைச் சொல்வது போல் பேண்டு வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. 


அந்த ஹோட்டல் நம்மூர்களில் இருக்கும் மண்டபம் போல் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. மாப்பிள்ளை வீட்டாருக்கு என ஒரு பகுதியையும், பெண் வீட்டாருக்கு என ஒரு பகுதியையும் ஒதுக்கி இருந்தனர்.‌ மூன்று வேளை இல்லை முழுவேளையும் சாப்பாடு போடப்பட்டது. கார்த்தி சொன்னது போல் நம்ம ஊரையே அந்த ஹோட்டலுக்குள் கொண்டு வந்த வைத்திருந்தான். திருவிழா போல் இருந்தது அந்த இடம்.


டேனியல் ஃபோட்டோகிராபராக மாறி நிகழ்வுகள் அனைத்தையும் ரசனையுடன் பதிவு செய்து கொண்டிருந்தான். கேமராவில் மட்டுமல்ல, கண்களாலும்.


கையில் போடப்பட்டிருந்த மருதாணி நன்கு சிவந்து ருத்ரா - வாசுவின் மேல் வைத்திருக்கும் காதலைச் சொல்லியது. அந்த மருதாணி கோலத்தில் இருவரின் பெயரையும் இணைத்து எழுதியிருப்பதை‌ப் பார்த்தவளுக்கு முகமும் மருதாணி போட்டிருந்த கையின் நிறத்திற்கு மாற, அவளின் நண்பர்கள் அவளைக் கேலி செய்தபடி அமர்ந்திருந்தனர்.


இந்தக் காலத்தில் நடைபெறும் திருமணங்களில் உடுத்தும் லெகங்கா போன்ற நவீன உடையை உடுத்தாது, ‘ஒன்லி சேலை தான்.’ இது உஷாவின் உத்தரவு. பட்டு சேலை, காஞ்சிபுரம் சென்று டசன் கணக்கில் வாங்கி வந்திருந்தனர் கார்த்தி ஜோஹிதா தம்பதியனர். அது போதாது என,


"ப்ளிஸ் கார்த்தி. எங்க ஜோதிக்கி எங்கள செய்ய விடு."  எனப் புடவை நகைகளைச் சீர் தந்த அப்சத்தைத் தடுக்காததால் முருகுவும் சேர்ந்து கொள்ள அவர்களின் அலப்பறைகள் அதிகமாகிப் போனது.


"நாமெல்லாம் பொண்ணு வீட்டுக்காரங்க... எந்த சூழ்நிலையிலும் மாப்ள வீட்டாளுங்க கிட்ட இறங்கி போய்ட கூடாது. " என்ற முருகுவின் கலாட்டாவாலும்,


" உங்கப் பொண்ணுக்கு எங்க வீட்டு பையன்தான் வாழ்க்க தரப் போறாப்ல. அதுனால நாங்க தான் கெத்து. " எனக் க்ரிஷ்ஷின் கேலியாலும், நிச்சயம் கலகலப்பாக இனிதே முடிந்தது.


அடர் சிவப்பு நிற கோர்ட் சூட்டில் மணமகனுக்கே உரித்தானது திருமண கலையுடனும். இயல்பாகவே அவனுக்கு இருக்கும் கம்பீரக் கலையுடனும் ருத்ரதேவ் ராஜ தோரணையில் மிளிர்ந்தான்.


ருத்ராவின் உடையின் நிறத்திற்கு மேச்சான நிறத்தில் பட்டு புடவையில் தங்க ஆபரணங்கள் மின்ன வாசவி பெண்மையின் வெட்கத்துடன் தலை குனிந்து... ‘ஸாரிங்க வெட்கம் எல்லாம் வேற டிப்பார்ட்மெண்ட். அது வாசுக்கு வரல.’ ஆதலால் தலை நிமிர்ந்து அனைவரையும்‌ வரவேற்று, ருத்ராவுடனும் சுற்றி இருந்த உறவினர்களுடனும் வாயாடிக் கொண்டிருந்தாள் வாசு.


பார்க்க அந்த ஜோடி எதார்த்தமாகவும் கண்ணிற்குக் குளுமையாகவும் இருந்தது. அதை தூர நின்று மனைவியின் தோளணைத்தபடி ரசித்து பார்த்தான் கார்த்திகேயன். ஜோஹாதாவின் மனமும் நிறைந்து இருந்தது.


காலை வேளையில் முகூர்த்தம்.


மாக்கோலம், பூக்கோலம், திருஷ்டி கோலம் என விதவிதமானக் கோலங்களை மூலம் நம்மை வரவேற்றனர் இரு குடும்பத்தினரும், பன்னீரும் சந்தனமும் தெளித்து. இரு கரம் குவித்து, இரு பக்கமும், இரு வீட்டாரும் நின்று கொள்ள, ராசாத்தி அடித்துக் கொண்டிருந்த மங்கள மேளத்திற்கு நடனமாடிக்‌ கொண்டிருந்தார்.


எல்லாருமே சந்தோஷமாக இருக்க, இருக்க வேண்டிய ரெண்டு பேரும் சந்தேகத்துக்கு பதில் டென்ஷனா இருந்தார்கள்.


ஒன்று ருத்ராதேவ்.


"தேவ் ரெடியா?" என்றபடி ருத்ராவின் அறையில் தலையை விட்டாள் தன்யா.


"என்ன டா கோலம் இது? அங்க மாப்பிள்ள எங்கன்னு ஐயர் கேட்டுட்டு இருக்காரு! நீ என்னடான்னா இப்படி நிக்கி இப்படியேவா மேடைக்கி வரப் போற. ஐய்யைய... " எனக் கேலியாகக் க்ரிஷ் கூற, தன்யா சிரித்தாள்.


" என் நிலமையப் பாத்தா உங்களுக்கு சிரிப்பாவா இருக்கு. " என்றான் கோபமாக, அவன் கோபம் கொள்ள காரணம்,


வேட்டி… 


இதுவரை அந்த ஆடையை அணிந்ததே இல்லை. எப்படி அணிவது என்று தெரியாது. பட்டு சட்டையை மாட்டிக் கொண்டு தன் சிகையை ஜெல் கொண்டு அடிக்கி, வளர்ந்திருந்த தன் மீசையை முறுக்கி விட்டு, மாப்பிள்ளை ரெடி… ஆனால் வெள்ள வேட்டி இருக்க வேண்டிய இடத்துல வெள்ள துண்டு. அதான் சிரிக்கின்றனர்.


" இதுவர நான் இதப் போட்டது இல்ல. ஒரு பட்டன்... ஒரு எலாஸ்டிக்… சின்னதா கயிறு இருந்தாக் கூட இழுத்து பிடிச்சி கட்டிருப்பேன். நல்லாத் தேடி பாத்துட்டேன். இதுல அப்படி எதுவுமே இல்ல.


இத இடுப்புல கட்டீட்டு மேடைக்கி வரணுமாம். சேர்ல இல்லாம தரைல உக்காரணுமாம். அங்க சட்டைப் போடாத ஐயர் வளத்து வச்சிருக்குற நெருப்ப சுத்தி வரணுமாம். அந்தாளு சொல்றத திரும்பி சொல்லணுமாம். அவர் கூட்டீட்டு போற இடத்துக்கு கூடவே போகணுமாம். இத விட ஈவ்னிங் வர நான் டிரெஸ்ஸ மாத்தக் கூடாதாம். மாம்‌, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்து லெசன் நடத்திட்டு போனாங்க.


எங்கயாது எதாவது ஒரு இடத்துல வேட்டி கலண்டு விழுந்தா?. என்னோட நிலம என்ன ஆகும்?”


" கஷ்டந்தா…"  எனப் பரிதாபப்பட்டான் க்ரிஷ்.


"என்னோட பிஸ்னஸ் ஃப்ரெண்ட்ஸ். நம்ம கம்பெனி மெம்பர்ஸ்னு எல்லார் முன்னாடியும் நான் அசிங்கப்படணும்னு தான் மிஸ்டர் கார்த்திகேயன் இப்படி ஒரு டிரஸ்ஸ குடுத்து போட சொல்லிருக்காருன்னு நினைக்கிறேன். " என நொந்து கொள்ள,


" இதெல்லாம் ட்ரெடிஷ்னல் தேவ். இப்படித் தான் கல்யாணம் நடக்கும். " என்றாள் தன்யா. 


வேட்டியை மடித்து எப்படி அவிறாமல் கட்டுவது என யோசித்த படி பேச்சுக்கள் தொடர,


"பட், க்ரிஷ் கல்யாணம் அப்படி நடக்கலயே. கோர்ட் போட்டுட்டு தான் உங்கக்கா கழுத்துல தாலி கட்டினான். புகை மண்டலத்துக்குள்ள உக்காந்து இல்ல.‌


எவ்ளோ சிம்பிளா நடந்தது அது. இங்க... ச்ச…. வெளில கேக்குற டம்மு டம்முங்கிற கொட்டு சத்தம் காத பிளக்குது. இதுல ஐயர். அந்தாளு மூட்டுற நெருப்ல எப்ப ஃபயர் அலாரம் அடிக்கும்னு பக்கு பக்குன்னு இருக்கு. "


"நம்ம அத்த மாமா ரொம்ப நல்லவங்க தேவ். நான் இந்த மாதிரில்லாம் வேண்டாம்னு சொன்னதும் ஓகேன்னு சொல்லி சிம்பிளா வச்சிட்டாங்க. பட்... கார்த்தி மாமாக்கு இதுல ஒரு ஆசை. அட்ஜஸ்ட் பண்ணிக்க... ஒரு நாள் தான. அதுவும் உன் ஆசைக் காதலியின் அப்பாவோட ஆசைக்காக.."


" அப்ப கார்த்திக் அங்கிள நீ கொட்டவன்னு சொல்றீயா க்ரிஷ்?" தாரிகா. உடன் புவனாவும் இருந்தாள்.


 "ரெடியாகியாச்சா." என்றபடி உள்ளே வர, தேவ் கத்த தொடங்கி விட்டான். வேட்டி கட்ட வராததால்.


" மிஸ்டர் கார்த்திகேயன் என்னைப் பலி வாங்கணும்னு தான் இந்த மாதிரி பண்றாரு. " என்க,


"உன்னைப் பலி வாங்க எங்கிட்ட வேற நல்ல நல்ல வழியெல்லாம் இருக்கு. சிம்பிள்ளா என்னோட லாக்கர்ல இருந்த அந்த ஃபோட்டோவும், லெட்டரும் வாசு கைக்கு எப்படி வந்ததுன்னு சொன்னா போதும். உன் நிலம என்ன வேண்ணாலும் ஆகலாம். பட், எம் பொண்ணு கல்யாணத்தப்ப அதப் பண்ண மாட்டேன்.‌" என்றபடி கார்த்திக் உள்ளே வந்தான்.


"வாவ்… கார்த்திக் அங்கிள் செம்மையா இருக்கீங்க. இவன விட வேட்டி சட்டை உங்களுக்கு நான் சூப்பரா இருக்கு. " என்ற தன் அத்தை மகள்கள் இருவரையும் முறைத்தான் ருத்ரா.


'நான் எங்க வேட்டி கட்டிருக்கேன். முழுசா பாக்காம கமெண்ட் சொல்லுதுக. ' ருத்ரா மைண்ட் வாய்ஸ்.


"நிஜமாவே இது இடுப்புல தான் நிக்கிதா‌ கார்த்தி மாமா. இல்ல கம்மு போட்டு ஒட்ட வச்சிருக்கீங்ளாற" என க்ரிஷ் கார்த்திக்கின் சட்டையை தூக்க,


" டேய்! ஏன்டா எம்மச்சான மானபங்க படுத்துற. மாப்ள வீட்டுக்காரனுங்கன்னா என்ன வேண்ணாலும் பண்ணுவீங்களா?. நல்ல வேளை நான் வந்ததுனால காப்பாத்திட்டேன். இல்லன்னா என்ன ஆகிருக்கும்? " முருகு.


" ஒன்னும் ஆகிருக்காது. மாமா இது என்ன?. பெரிய சைஸ் கர்சீப் மாதிரி இருக்கே இத எங்க போடுறது" க்ரிஷ். ருத்ராவின் அங்கவஸ்திரத்தைச் சுட்டிக் காட்டி கேட்க,


"அது அங்கவஸ்திரம் க்ரிஷ்." அப்சத்.


" இது பாய்ஸ் மேல போட்டுக்கிற மேலாடைன்னு சொல்லுவாங்க. ஆமா, அத ஏன்டா மடிச்சி கைக்குள்ள வச்சிருக்க… அத தோள்ல போடணும்." என்றான் முருகு.


"எப்படிப் போடுறதுன்ன தெரியாததுனால தான் உங்க மாப்பிள்ள இப்படி நிக்கிறாரு. " தன்யா சொல்ல, அப்பொழுது தான் தேவ்வின் கீழே பார்த்தனர் மூவரும்.‌


" இவெ என்ன கல்யாணத்துக்கு மாப்பிள்ளையா உக்கார சொன்னா!. ஃபேன்ஸி ட்ரெஸ் காம்படீஷனுக்கு வேசம் போட்டவெ கணக்கா நிக்கிறான். மகனே என்னாச்சி. "


" உங்க மகனுக்கு வேட்டி கட்ட தெரியலயாம். " எனத் தாரிகா சொல்ல, இதோ நான் காட்டி விடுறேன் என முருகு அலப்பறை செய்ய, கார்த்திக் கட்டி விட்டான். கட்டும் போதே,


" வாழ்த்துக்கள்… எவ்வீட்டு மருமகனா உன்னை ஹப்பியா லெல்கம் பண்றேன். இனி உங்க ரெண்டு பேரோட லைஃப்ல எல்லாமே நல்லதாவே நடக்கும்னு நம்புறேன். வாசு, சின்ன பொண்ணு. கொஞ்ச வால் தனமும், பிடிவாதமும் அதிகாமாவே இருக்கும். ஆனா. " என்க,


"மிஸ்டர் கார்த்திகேயன். Vasu is My love. அவள நான் எங்கண்ணுக்குள்ள வச்சி பாத்துப்பேன். ப்ராமிஸ். " எனப் புன்னகையுடன் சொல்ல, கார்த்திக் தன் மருமகனை அணைத்துக் கொண்டு புன்முறுவல் பூத்தான்.


" ரெடியாகியாச்சா? வெளில ஐயர் வரச் சொல்லுறாரு!. " என்ற குரல் கேட்க, ருத்ராவிற்குள் சிறு பதட்டம். எதையாவது சொதப்பி எல்லாருக்கும் காட்சி பொருளாக் கேலி பொருளா மாறிவிடுவோமோ. என்ற கல்யாண பதட்டம் வந்தது.


" மாப்பிள்ளைக்கி நரம்பு தளர்ச்சி இருக்கும் போலயே. மச்சான் எதுக்கும் நீ பொண்ணு குடுக்குறத பத்தி நல்லா யோசி. " என முருகு சொல்ல, ருத்ராவைத் தவிர அனைவரும் சிரித்தனர்.


அப்போது, "கார்த்திக்…" எனப் பதட்டத்துடன் வந்தாள் ஜோஹிதா.‌


"என்னாச்சி?"


"வந்து உம் பொண்ண பாரு. " எனச் சொல்லி, கையோடு அழைத்துச் சென்றாள் அவள்.


வாசு என்ன செய்ய காத்திருக்காளோ…


தொடரும் ...

கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .

நன்றி  

நேசிப்பாயா 110

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

அன்பே 2

அத்தியாயம்: 2  சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா? சௌக்கியமா கண்ணே சௌக்கியமா? சௌக்கியமா சௌக்கியமா? தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்! திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்! தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்! தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்; மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்! பிறை என விரிந்த நெற்றியும்.. வில் என வளைந்த புருவமும்.. செதுக்கி வைத்தது போன்ற நாசியும்.. மீன் போன்ற கண்களில் மையிட்டு.. மிதமான ஒப்பனையில் அடர் சிவப்பு நிற பார்டர் கொண்ட வெண் பட்டில் தேவலோகத்து அப்சரஸா என வியக்க வைக்கும் அழகுடன்.. பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் அவள் காட்டிய முக பாவனை காண்போரை சிலை என நிற்க வைத்து.. ரிஷியையும் தான்..‌ சிறிது நேரத்திற்கு முன் கார்டூன் கேரைக்டர் என அவனால் வர்ணிக்கப் பட்ட அவனது பம்கின் தான் மேடையில் பரதம் ஆடிக்கொண்டு இருந்தாள்..  அவளா இது என நகராது நின்றபடியே அந்த LED திரையை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்க.. தன்னுள் எழும் இந்த மாற்றத்திற்கு என்ன பெயர் இடுவது என புரியாது குழம்பி...

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...