அத்தியாயம்: 110
"ஜோதி, நான் உன்னோட வீசாக்கு அப்ளை பண்ணிட்டேன். பட் லேட் ஆகும் உனக்கு வீசா கிடைக்க. அதுவர நீ இங்க தான் இருக்கணும். " எனச் சேகமாக கூறிய ஜோஹிதா ஜோதியைக் கார்த்திக்கை விட்டு தூர அனுப்புவதில் மும்மரமாகவும் துரிதமாகவும் செயல் பட்டாள்.
இரு மாதங்களில் அவர்களுக்குள் நல்ல நெருக்கம் வந்திருந்தது. ஜோஹிதாவை டி போட்டு உரிமையுடன் அழைக்கும் அளவுக்கு ஜோதி அவளுடன் பழகியிருந்தாள். தினமும் அவளை விடுதியில் பார்த்தாள் ஜோஹிதா. அவளுக்குப் ஜோதியை பிடித்தும் போனது. கள்ளம் இல்லா சிரிப்பும். எதையும் எதிர்பாராது அன்பை மட்டுமே முன்னிறுத்தி பழகும் குணம் ஜோஹிதாவையும் கவர்ந்தது. ஏன் கார்த்தியின் மீது அவள் கொண்டு காதலும் கூட பிடித்திருந்தது.
ஆனால், அவர்களைச் சேர்த்து வைக்கும் எண்ணம் மட்டும் பிறக்கவில்லை. ‘கார்த்திக் என்னுடையவன். யாருக்கும் விட்டு குடுக்க மாட்டேன்.’ என்ற பிடிவாதத்தை மட்டும் அவள் விட்டுத் தர தயாராக இல்லை.
அரசு மருத்துவமனைக்கு சென்ற ஜோதியை மல்டி ஸ்பெஷலிட்டி ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்றாள்.
" இது தான் குழந்த." எனத் திரையில் காட்டிய உருவத்தைப் பார்க்கையில்,
'ஒரு ராத்தி தான் பிஸிக்கல் ரிலேஷன்ஷிப்ல இருந்தோம்னு சொல்றா. ஆனா அவளுக்குள்ள வளந்த கரு மாதிரி எனக்குள்ளையும் வளருமா. ' என்ற ஏக்கத்துடன் தன் வயிற்றில் கை வைக்க, ஜோதியின் மீது பொறாமை வந்து.
கார்த்திக் மீது அவளும், அவள் மீது கார்த்திக்கும் வைத்திருக்கும் காதலின் மீது ஆத்திரம் வருவதை மட்டும் தடுக்க முடியவில்லை. ஆனால் கார்த்திக்கின் மனத்தை மாற்ற இயலும் என்ற எண்ணம் வந்திருந்தது ஜோஹிதாவிற்கு சில நாட்களாக.
அன்றைய கூடலுக்குப் பின் இருவருமே பேசிக்கொள்ளாது இருந்தாலும் கார்த்திக்கின் பார்வை தன் மேல் படிவதை உணர முடிந்தது அவளால். அது குற்ற உணர்ச்சியாகவே இருந்தாலும் பார்க்கிறான் அதுவே போதும் என்றிருந்தது. சண்டைகள் குறைந்து போனது. பேச்சும் தான்.
ஜோதி சொன்னதை போல் அவனைப் புரிந்து கொள்ள முயன்று அவனின் செயல்களைக் கண்கானித்து ரசிக்க தொடங்கினாள்.
அது அவளுள் மீண்டும் ஒரு காதலைப் பிறக்கச் செய்தது. அதை வளர்க்க உதவியது ஜோதி. கார்த்திக்கை பற்றி முழுதாய்த் தெரிந்த கொள்ள ஜோதியிடம் ஒன்றினாள் ஜோஹிதா. நட்பு இருவருக்கும் கார்த்திக்கை மையமாக வைத்து உண்டானது. கார்த்திக்கைப் பற்றி ஜோதியிடம் அடிக்கடி பேசினாள்.
அவளுக்குச் சொல்லவா வேண்டும் நெஞ்சில் பதித்து வைத்திருக்கும் கார்த்தியின் ஒவ்வொரு அசைவையும் சொல்ல, அது அத்தனையையும் கேட்டுவிட்டு அதற்கும் வருந்தினாள் ஜோஹிதா.
'என்னை விட அவள் கார்த்திக்கைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கிறாள். அத்தனை காதலா அவன் மீது!. ' என்ற சோர்வும் வந்து சேரும். மனம் என்ற குரங்கு ஓரிடத்தில் நிற்காது தாவிக் கொண்டே இருந்தது ஜோஹிதாவிற்கு.
ஜோதிக்கு அனைத்தும் செய்தாள். என்ன ஆனாலும் கார்த்திக்கை மட்டும் விட்டு கொடுக்க மாட்டேன் என்ற பிடிவாதத்தை மட்டும் ஜோஹிதா விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.
அன்று, இன்டர்வியூ என்று அவளை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு ஜோஹிதா செல்ல, பார்க்க கூடாதவர்களின் பார்வை வட்டத்திற்குள் விழுந்தனர் இருவரும்.
நவீன் தான் விகாஸிற்கு தகவல் சொன்னது. ஜோஹிதா, ஜோதியைக் கண்டுபிடித்து விட்டாள் எனச் சொல்லியிருந்தான் அவன். விகாஸ் ஜோதியை வரவேற்க அடியாட்களுடன் காத்திருந்தான்.
" உனக்கு அடுத்த வாரத்துல வீசா கிடைச்சிடும். அப்பப்ப ஃபோன் பண்ணு. சரியா... என்னோட ஃப்ரெண்டு வீட்டு அட்ரஸ் தான் குடுத்திருக்கேன். உங்க முதலாளியம்மா வரவும் அட்ரஸ் கேட்டு உனக்கு அனுப்புறேன். எம்ஃப்ரெண்டு உன்னைச் சேக்க வேண்டிய இடத்துல சேத்திடுவா. " என்க, வாணிக்கு சந்தோஷமாக இருந்தது.
கார்த்தியின் உயிரை அள்ளவா சுமந்து கொண்டு செல்கிறாள். அது இருவரின் காதல் பரிசு. அவளின் துடிப்பு அது தான். அதை நல்ல படியாக பெற்றெடுக்க வேண்டும். இனி அது தான் தனக்கு எல்லாம் என்ற மகிழ்ச்சியுடன் தன் வயிற்றைக் கட்டிக் கொண்டு கார்த்தியின் ஜாடையில் பிறக்க போகும் குழந்தையைப் பற்றிய இனிய கனவில் இருக்க, ஆட்டோவை சுற்றி வளைத்தனர் விகாஸின் அடியாட்கள்.
ஜோஹிதா குழப்பத்துடன் கீழிறங்க, " இந்த *** நாய நாங்க அங்க தேடுனா. எங்களுக்குத் தண்ணி காட்டிட்டு இங்க வந்து கிடக்கா பாரு. நல்ல வேளை செஞ்ச ஜோஹிதா. வா டி." என ஜோதியின் கரம் பற்றி இழுக்க, ஜோஹிதா அதைத் தட்டிவிட்டாள்.
"நீங்க என்ன பண்றீங்க? அவள எங்க கூட்டீட்டு போகப்போறீங்க?. "
" எங்கவா? இவ இங்க இருக்குறத உம்புருஷெ பாத்திடுவான். பாத்தான்னா என்ன ஆகும்னு தெரியும் தான. உன் வாழ்க்கையே நாசமாகிடும். உன் கார்த்திக் கூட நீ சந்தோஷமா வாழணும்னா அவ இங்க இருக்க கூடாது. " எனக் கார்த்திக்கின் பெயரை சொன்னால் தான் ஜோஹிதாவிற்குப் புரியும் என்று கூற,
"அதுனால தான் அவள நான் வெளி நாட்டுக்கு அனுப்ப போறேன். இனி இவளால பயம் இருக்காது. ஜோதி ஏறு ஆட்டோல. " எனப் புறப்பட தயாராக, ஜோதியின் முடியை பிடித்து கொத்தாக இழுத்தான் விகாஸ்.
" இவ வெளிநாடு போய்ட்டா நான் எப்படி அந்த *** பயல பலி வாங்குறது. சொல்லு... இவள இன்னும் தேடிட்டு தான் இருக்கான். அவெங்கிட்ட போய் இவ எங்கைல சிக்குனத சொல்லணும். இவள நான் படுத்துற பாட்ட பாத்து அவெ அழணும். வாழவும் முடியாம சாகவும் விடாம நான் அவன டார்ச்சர் பண்ண வேணாமா. அதுக்கு இவ வேணும் எனக்கு.
அப்பதா அவனால நம்ம குடும்பத்துக்குக் கிடைச்ச நஷ்டம் சரியாகும். இழந்த குடும்ப மானமும் கிடைக்கும். ஏய் இவள இழுத்துட்டு போங்கடா. " என வாணியை இழுத்து காரின் மீது தள்ள, அது சரியாக அவளின் வயிற்றில் இடித்தது.
"அம்மா…" என அலறியபடி தரையில் சரியா…
" ஜோதி…." என அவளின் அருகில் சென்று பார்த்தவள்,
" விகாஸ்ண்ணா ப்ளீஸ் அவள விட்டுடு. உனக்குக் கார்த்திக்கப் பலி வாங்கணும்னா அவெங்கிட்ட நேரடியா மோது. இல்லயா... நான் இருக்கேன். நான் அவன பாத்துக்கிறேன். நீ சொல்ற படியெல்லாம் கேக்குறேன். இவள விட்டுடு விகாஸ். அவ ப்ரெக்னன்ட்டா இருக்கா. ப்ளிஸ் விகாஸ். " என ஜோதியின் சடையை கையில் சுருட்டி அவளை தூக்க முயன்றவனிடம் கெஞ்ச, விகாஸின் தந்தையும், அவளின் தந்தையும் அவ்விடம் வந்தனர்.
"சித்தப்பா கேட்டிங்களா இத! கார்த்தியோட காதலி அவளுக்கு ஃப்ரெண்ட்டாம்."
" அப்பா... பெரிப்பா… விகாஸ் கிட்ட சொல்லுங்க. அவள விடச் சொல்லி சொல்லுங்க. சொல்லுங்கப்பா. அவ வயித்துல குழந்த இருக்கு. அவள நான் வெளிநாட்டுக்கு அனுப்பி வச்சிடுறேன். அவளால எந்த தொல்லையும் இருக்காது. " எனக் கெஞ்சினாள் ஜோஹிதா.
" குழந்தையா! நல்லதா போச்சி. அப்பெ யாரு?. கார்த்திக்கா! இது இன்னும் வசதியால்ல இருக்கும். " என அவர்கள் விகாஸ் சொன்னதையே வேறு மாதிரிச் சொல்லி, அவளைக் காரினுள் தள்ள, வலியுடன் ஜோதி அவர்களிடம் போராடினாள். அவள் மட்டுமல்ல ஜோஹிதாவும் தான். ஆனால் எந்த பயனும் இல்லை.
" உன்னால தான் நம்ம குடும்பத்துக்கு இந்த நிலம. நம்ம தொழிலே படுத்திடுச்சி. ஊருக்குள்ள பயந்து போய் பம்மி குனிஞ்சி பாத்தவெ எல்லாம் இப்ப எம்முன்னாடியே நிமிந்து, 'பொண்ண வேற எடத்துல குடுத்திருக்கிங்களாமே!. நம்ம இனம் இல்லாமே!. அப்பெ பேர் கூட சரியா தெரியாத பயளுக்கு கட்டிக் குடுத்திருக்கிங்களாமே!' ன்னு மூஞ்சிக்கு முன்னாடி பேசிட்டு போறான். நம்ம குடும்ப மரியாத மானம் எல்லாமே கெட்டுப்பேச்சி. அதுக்கு காரணம் நீ தான். " என ஜோஹிதாவை அடிக்க, விகாஸ்ஸும் சேர்ந்து கொண்டான்.
செல்ல மகள் அடி வாங்குவது பொறுக்காத அவளின் தந்தை, "அண்ணா முதல்ல அவளக் கவனிப்போம். அப்றமா அவன்... அதுக்கு அப்றம் வந்து நம்ம பொண்ணப் பாத்துக்கலாம். நம்ம இடத்துக்கு அவள இழுத்துட்டு போவோம். " என்க, ஜோஹிதா விகாஸ் அசந்த நேரம் அவனை தள்ளி விட்டு விட்டு காரில் இருந்த ஜோதியுடன் காரை ஓட்டிச் சென்றாள்.
"எங்க போய்டப்போறா! " என்ற இறுமாப்புடன் நின்றவர்களைக் கவனியாது மருத்துவமனைக்கு ஓட்டிச் சென்றாள் ஜோஹிதா.
ஆனால், குழந்தை தாய் இருவரில் ஒருவரைத்தான் காப்பாற்ற முடியும் என்று விட்டனர் மருத்துவர்கள். ஜோதி, குழந்தையைக் காப்பாற்றச் சொல்லி மருத்துவரிடம் இறைஞ்சினாள். கார்த்தியின் உயிர் அது. தன் உயிரை விட அது மேலானதாகப் பட்டது அவளுக்கு.
" குழந்த இறந்துடுச்சா டாக்டர்?"
"இன்னும் இல்ல. ஆனா அந்தப் பொண்ணு வயித்துக்குள்ள இருந்தா குழந்தையும் இறந்து, இந்தப் பொண்ணும் இறந்திடுவா. " என்றார் மருத்துவர்.
"ரெண்டு பேரையும் காப்பாத்த முடியாதா?"
"ஆப்ரேஷன் பண்ணலாம். ஆனா பேபிய இன்குபேட்டர்ல வைக்கணும். முழுசா வளராத பேபிக்கி உத்திரவாதம் தர முடியாது. " என்க, ஜோஹிதாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இன்குபேட்டரில் வைத்தால் தன் குடும்பத்தாரின் கையில் இந்தக் குழந்தை எளிதாக சிக்கி விடும் என்பதால். அந்தக் கயவர்களின் கையில் குழந்தை சிக்கினால் கொன்று விடுவார்கள்.
" டாக்டர், வாடகைதாய் மாறி ஏற்பாடு பண்ணலாமா? "
"முட்டாள் மாதிரி பேசாதீங்க ஜோஹிதா. அதெல்லாம் சாத்தியம் இல்ல. மெடிக்கலி வாய்ப்பில்லாத ஒன்னு. இன்குபேட்டர் தான் பெஸ்ட்டு. ஆனாலும் குழந்தை பிழைக்கிறது கஷ்டம் தான்." என்று விட்டார் மருத்துவர்.
ஆனால், ஜோஹிதா விடவில்லை. தன் குடும்பத்தினர் எப்படியும் கண்டுபிடித்து விடுவார். மறைத்து வைப்பதும் ஓடி ஒழிவதும் எளிதல்ல என்பதால் முதலில் குழந்தையை பாதுக்காக்க நினைத்து மருத்துவரிடம் கெஞ்ச தொடங்கினாள்.
சட்டவிரோதம், உயிருக்கு ஆபத்து என்று எத்தனை கூறியும் கேட்காது அவள் பிடிவாதத்தால் உதயமானவள் தான் வாசவி.
ஜோதிவாணி கார்த்திகேயனின் குழந்தை.
" ஹாஸ்பிடலுக்கும் தேடி வந்தானுங்க கார்த்திக். தப்பிச்சிடலாம் தான் நினச்சி ஹாஸ்பிட்டல்ல விட்டு ஓடுனா... பட்... கொன்னுட்டானுங்க. அத விகாஸ் தான் எங்கிட்ட சொன்னான்.
அதுமட்டுமில்லாம நம்ம வாசு ஜோதியோட குழந்தன்னு தெரிஞ்சு அவள அழிக்க என்னென்னமோ பண்ணாங்க. ஆனா, உன்னோட சப்போர்ட் எனக்கு கிடச்சது. எனக்கும் நம்ம குழந்தைக்கும். " என்றவள் செய்த செயல் பெரியது.
தன் உயிரையும் பொருட்படுத்தாது வாசுவை அவள் காப்பாற்றி உள்ளாள். இதுவரை தன் உள்ளூணர்வு சொல்லியதை உண்மையை என்று ஜோஹிதாவின் வாய் மொழியாக கேட்க நேர்ந்தது. இப்போது மனம் என்ன நிலையில் இருக்கிறது என்று அவனால் சரியாக உணரமுடியவில்லை.
தன் முட்டாள் தனத்தால் காதலென்ற பெயரில் அறியாப் பெண்ணை ஏமாற்றியதற்கு வருத்தப்படவா!. நண்பன் என்று நம்பியவனால் ஜோதியை ஸ்டேஷனில் பார்க்க முடியாது போனதற்குக் கோபப்படவா!
தன் குழந்தையைச் சுமந்த ஜோதியின் அருகில் இல்லாது போன தன் சூழ்நிலையை வெறுக்கவா! நண்பர்கள் மட்டுமல்லாது மனைவியும் தன்னிடம் ஜோதிய பற்றிய எந்த உண்மையையும் சொல்லாது இத்தனை ஆண்டுகள் மறைத்தற்கு ஆத்திரம் கொள்ளவா!.
அல்லது 'எதாவது ரூபத்துல உங்கூடவே தான் இருப்பேன் கார்த்தி மாமா.' என்று சொல்லிய ஜோதி, வாசுவின் வடிவில் கிடைத்ததற்கு சந்தோஷப்படவா!. அனைத்து உணர்ச்சிகளும் ஒரு சேர அவனுள் வந்தது. கண்ணீல் நீர் சுரக்க, ஜோஹிதாவை இறுக அணைத்தான் கார்த்திக்.
" உங்கிட்ட உண்மைய சொன்னா என்னை நீ வெறுத்திடுவன்னு நினைச்சேன் கார்த்திக். அதா நான் எதையும் சொல்லல கார்த்திக். இத்தன வர்ஷமா மறைச்சி வச்சேன். என்னை மன்னிச்சிடு கார்த்திக்.
ஆனா, நம்ம காலேஜ் இன்விடேஷன பாத்ததும் ஜோதியோட நியாபகம் தான் வந்தது. என்னோட பிடிவாதம், வீம்பு, ஈகோ, பயம், எல்லாம் சேத்து ஒரு பொண்ணோட வாழ்க்கைய நான் அழிச்சிட்டேன் கார்த்திக். " எனச் சொல்லி அழ, அவளை இறுக அணைத்து கொண்டான் அவன்.
" இல்ல ஜோஹி…. வாசு ரூபத்துல ஜோ நம்ம கூட இருக்க காரணமே நீ தான். நீ செஞ்சது எவ்ளோ பெரிய காரியம்னு தெரியுமா?. என்னை விரும்புன பொண்ணோட வாழ்க்கைய அழிச்சிட்டு நிம்மதியா வாழ முடியாம தவிச்ச எனக்கு, வாசு மட்டும் தான் ஒரே ஆறுதல். அந்த ஆறுதல உயிரோட தந்த உன்ன எப்படி நான் வெறுப்பேன்?" என்றவனுக்கும் கண்ணீல் நீர் ததும்பியது.
"என்னங்க டா சொல்ல வேண்டிய உண்மைய எல்லாம் சொல்லியாச்சா. சொல்லியாச்சின்னா கதைய முடிச்சிட்டு நடைய கட்டலாம். ஆல்ரெடி ரொம்ப சென்ட்டிமென்ட்டுங்கிற பேர்ல அறுக்கிறீங்கன்னு பலர் பாதி கதைல கிளம்பிட்டாங்க. இன்னமும் அழுகாச்சி ஸீனா ரப்பர் மாதிரி இழுத்திட்டே இருந்தா அவ்ளோ தான். கல்லெடுத்துட்டு அடிக்க வந்தாலும் ஆச்சர்ய படுறதுக்கு இல்ல. " என்றது நம் முருகு தான்.
ஒரு சேர அணைத்துக் கொண்டு நின்ற நண்பனின் குடும்பத்தைப் பார்க்கையில் வந்த மகிழ்ச்சி, அவரின் முகத்தில் நன்கு தெரிந்தது. அவரின் சொல்லைக் கேட்டு இருவரும் சிரித்தனர்.
"ம்… எல்லாம் சொல்லியாச்சி. இனி மறைக்க எந்த உண்மையும் இல்ல. அப்படி தான் ஜோஹி. " என்க, அவள் ஆம் என தலையசைத்தாள்.
"இப்பத்தான் கார்த்திக் மனசு லேசா இருக்கு. இத்தன நாள அந்த இடம் கணமா ரணமா இருந்தது. " என்றவள் நெஞ்சை நீவிக் கொள்ள,
"கார்த்திக்... ஜோதி சொன்ன சின்னுவ நாம கண்டு பிடிக்கணும். அவெங்கிட்ட கடைசியா என்னை சேத்துடு ஜோஹிதான்னு கேட்டா. முடியாமாப் போச்சி. " என வருந்தி சொல்ல,
"தேட வேண்டிய அவசியம் இல்ல. " எனத் தூரத்தே தெரிந்த ருத்ராவையும் வாசுவைக் காட்டினான் கார்த்திக்.
அவனுக்கு அவனின் வாணியக்காவின் இழப்பின் பாதிப்பு அதிகம் தான். அதனால் வருத்தமாக இருந்தவனைத் தன்யாவும் வாசுவும் சேர்ந்து சமாதானம் செய்து சிரிக்க வைத்துக் கொண்டிருந்தனர்.
"அது சின்னுவா?"
"ருத்ரா… அவெந்தா ஜோதி சொன்ன சின்னு. சேக்க வேண்டிய இடத்துல சேத்திட்டோம்." என்றவனுக்கு மனம் நிறைந்திருந்தது.
" சரி... சரி… உங்க எமோஷனல் காட்சி முடிஞ்சதுன்னா நம்ம வீட்டப் பாத்து போவோமா. இந்தக் கதைக்கி 'உண்மை சொன்னால் நேசிப்பாயா.'ன்னு வச்சிருக்கிறதுக்கு பதிலா 'ஃப்ளாஷ் பேக் சொன்னால் ஒத்துப்பாயா.'ன்னு வச்சிருக்கலாம். எத்தன ஃப்ளாஷ் பேக். படிக்கிறவெ மண்ட முளைய கொழ கொழன்னு கொழப்புன மாதிரித்தான். " முருகு.
'இது முருகுவோட ஃபீலிங் மட்டுமா. இல்ல உங்களுக்கு அதே மாதிரித் தான?'
முருகுவை போல் உங்களுக்கும் அந்த ஃபில் வந்ததுன்னா மன்னிச்சு. Happy ending கா ருத்ரா வாசுவோட கல்யாணத்தோட முடிக்கலாம்னு இருக்கேன்.'
"அப்பக் கல்யாணத்த நடத்திடலாமா?. " முருகு.
" ஊரே மெச்சும் படி நடக்கும் அது. " என்ற கார்த்திக்… வாசுவின் திருமண வேலைகளைப் பார்க்க வேகவேகமாக ஊர் திரும்பினர்…
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..