முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நின்னையல்லால் 15





 
நின்னையல்லால் - 15


கிழக்குப் பார்த்த பால்கனியை ஒட்டி அமைந்த அறை தான் வாமனுடையது. 


பத்துக்கு பதின் மூன்று வரும் சிறிய அறையே அது. 


அந்த சிறிய இடத்தில் கட்டில், கம்பியூட்டர் மேசை, கபோர்ட் அடைத்துக் கிடக்க, சுவர்களில் பெரிய திகதி காலண்டரும் வாமன் மயமான புகைப்பட ப்ரேம்களும் மாட்டி இருந்தன. 


அறையினுள் நுழைந்ததும் சாத்விக்கு சீருடையில் நின்ற சிறுவன் ப்ரேமில் தான் கண் போனது. அது வாமன் பள்ளிக் காலத்தில் எடுத்த படம். பத்து பனிரெண்டு இருக்கலாம் வயது.


பால் வடியும் கவர்ச்சி அந்த வயதில் அவனில் தெரிய,


"உங்கட கைய காட்டுங்க.." என்று அவள் கை பற்றி இழுத்தவன் நெற்றி முட்டும் நெருக்கத்தில் வந்திருந்தான்.


"நான் நினைத்தது சரி தான் ஹாசினி" ரகசியம் போல காதில் அவன் சொல்ல,


என்ன நினைத்தார்? என்ற யோசனையிலும், அவன் அருகாமையும் பர்ஃபியும் வாசனையும் தந்த இதயம் படபடப்பையும் சமாளித்தவள் அணை கட்டிய கையை அகற்றி, "என்ன நினச்ச?" எனக் கேட்டு விலகி நின்றாள்.


"அது.... " கையை விலக்கினாலும் பக்கத்தில் நிற்பவன், "நீங்க லெஃப்ட் ஹேண்ட் தானே??"


"ஓம்.." அதுக்கு என்ன என்பது போல் அவள் பார்க்க,


"நான் கண்டு பிடிச்சன்.. இதென்ன பெரிய கண்டு பிடிப்பு எண்டு கேக்க கூடாது. நான் இந்த அளவுக்காவது உங்கள ஒப்சேர்வ் பண்றனே.. உங்களுக்கு என்ர பேரே தெரியாது"


"உங்கட பேர் தெரியும்"


"என்ன தெரியும். சொல்லுங்க.."


"வாமன்.." அவள் நறுக்கென உச்சரிக்க,


"வாமன்.. ஹௌ நைஸ்.. உங்கட வாயால கேக்ககுள்ள ஒரு மாதிரி கிக்கா தான் இருக்கு.."


சாத்வி அவனை உற்று முறைக்க,


"ரைட், அது வெளில கூப்பிடுற ஷோட் ஃபோர்ம். ஃபுல் நேம் என்ன சொல்லுங்க?"


அவன் வாமனாகவே அறியப்பட்டவன். யூனிவர்சிட்டியில் அப்படி தான் பிரபலம். அவளை அவன் அப்பா அம்மா பெண் பார்க்க வந்த முதல் நாளில் மாப்பிள்ளை பெயரை ஒரு தடவை புனிதா சொன்னதாக ஞாபகம். 


கோயிலில் சந்தித்த போதும் தன் பெயர் குறிப்பிட்டு சுய அறிமுகம் செய்து இருந்தான் தான். அவளுக்கு தான் அது மூளையில் பதியவில்லை அப்போதைய மனநிலையில்.


"ஓ காட்!! ஷேம் ஒன் யூ வாமா.." என நெற்றியில் கை வைத்து அழகாக வருந்தியவன், "உன்ர வைஃபுக்கு உன்ர ஃபுல் நேம் கூட தெரியாது..." என புருவம் நெரித்து நொந்தான்.


அதுக்கு என்ன இப்ப? என்பது போலவே பார்த்த சாத்வி, "உங்களுக்கு தெரியுமா?"


"என்ர பேர் எனக்கு தெரியாதா? என்ன ஹாசினி!"


"என்ர பேர் தெரியுமா எண்டு கேட்டன்.."


"யா! ஒஃப்கோர்ஸ்! சாத்விஹாசினி.. ஃபர்ஸ்ட் நைட்டே நான் சொன்னனே"


"தெரியுது தானே.. பிறகு ஏன் ஹாசினி எண்டு கூப்பிடுறிங்க..?" சாத்வி தன் சந்தேகத்தை வெடுக்கென்று கேட்டு வைத்தாள்.


கையை குறுக்கே கட்டி அவளை ரசனையாக பார்த்தவன், "சந்தோஷ் சுப்பிரமணியம் படம் பார்த்து இருக்கிங்களா?"


"பாத்திருக்கன்.."


"அதுல ஜெனிலியாட பேர் என்ன தெரியுமா? ஹாசினி.. வெரி வ்வீட் கேரெக்டர்.. அந்த நேம அவ சொல்ற டோனே அல்டியா இருக்கும். எனக்கு அந்த பேர்ல ஒரு க்ரேஸ். ஃபோர்சுனேட்லி உங்கட நேம்ல பாதி அது தான். எனக்கு ஹாசினி எண்டு கூப்பிட பிடிச்சி இருக்கு. அன்ட் நான் நோட் பண்ணினதுல உங்கள நான் மட்டும் தான் அப்டி கூப்பிடுறன். அது தான் எனக்கும் வேணும். நான் மட்டும் யுனிக்கா கூப்பிடணும் என்ர வைஃப" 


சாத்வி அவனை இமை சிமிட்டாமல் பாரத்தாள். 


நேற்று இரவு அப்படி ஒரு அசிங்கமான கலவரம் நடந்து இருக்கிறது. கல்யாணம் கட்டி வந்த வீட்டில் எந்த புது மாப்பிள்ளைக்கும் ஒவ்வாத நிகழ்வு அது! தரித்திரம் அது இது என அவன் திருமணம் செய்த பெண்ணை அவள் குடும்பத்தை அவதூறு பேசிச் சென்றிருக்கிறாள் சொர்ணம்.


எப்படி அதை பற்றி யோசிக்காது முகம் கோணாது, சிறிதும் சட்டை செய்யாது சந்தோஷ் சுப்பிரமணியம் ஹாசினியை சிலாகிக்கிறார் இவர்!!!


"அது ஒரு இம்மெச்சுர் காதாபாத்திரம். தலையோட முட்டினா கொம்பு முளைக்கும் என்ற அந்த லூசு கேரெக்டருக்கும் எனக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா?" சாத்வி வினவ,


"லூசு எண்டுட்டிங்களா.. உங்களுக்கு பிடிக்காது போல.. தட்ஸ் ஓகே.. உங்களுக்கும் ஜெனிலியாக்கும் சம்மந்தம் இல்ல தான்.. நீங்க ஒப்போசிட் தான். ஆனா நீங்க அன்பிலீபபிள் ஹாசினி!!!" வாமன் அவள் பொருட்டு நேற்று உண்டான பிரம்மிப்பை வெளிப்படுத்தினான்.


"அப்நோர்மல் என்றிருங்களா.."


சத்தமாக சிரித்து விட்டவன், "சத்தியமா உங்கள மாதிரி ஒரு போல்டான பிள்ளய நான் பார்த்ததே இல்ல ஹாசினி.." என்றவன், "நேற்று என்ன முழுசா சாச்சிட்டிங்க.." என்றான்.


சாத்விக்கு வயிற்றில் என்னவோ படபடத்தது.


இரண்டு மூன்று தடவை இமை கொட்டினாள்.


நகர்ந்து அறையை நோட்டம் இடுவது போல் நாலு சுவரையும் பார்த்தாள்.


டேபிளில் சாய்ந்து கையை குறுக்கே கட்டி அவளையே அவன் நோட்டம் இடுவது விளங்க, தேகம் எங்கும் ஏதேதோ புது புது உணர்வுகள் அறிமுகம் ஆகின.


"ஹாசினி!" அவளாக திரும்ப மாட்டாள் என்று அவனாக கூப்பிட்டு,


"என்ர ஃபுல் நேம் தெரிஞ்சி கொள்ள விருப்பம் இல்லயா?" என்றதும் 


"இப்ப தெரியும்.." என்று சுவரில் மாட்டி இருந்த அவனுடைய பட்டமளிப்பு விழா படத்தை காட்டினாள்.


பெயர் ஆண்டு இரண்டும் அதில் பிரின்ட் ஆகி இருந்தது.


"வாமதேவன்.. வாமதேவன் நடராசா தான் நான்.. இங்க வீட்ட, அப்பா அம்மா ரெண்டு பேரும் தம்பி எண்டு தான் கூப்பிடுவாங்க. அக்கா அத்தான் சொந்த காரர் எல்லாம் தேவா எண்டு சொல்லுவாங்க. நிவேக்கு அண்ணா.." பெரிய விளக்கம் கொடுத்தவன்,


"இந்த நிலம எந்த ஹஸ்பன்டுக்கும் வர கூடாது ஹாசினி.." என சோகமாக முடிக்க, சாத்வி தலையை குனிந்து உதட்டை பிதுக்கினாள்.


"இப்ப சிரிச்சிங்களா.. சொரி! சிரிக்க ட்ரை பண்ணினிங்களா.."


சாத்வி இல்லயே என நிமிர,


"அதானே பாத்தன்.. நீங்க சிரிச்சிங்க எண்டா பிறகு நான் என்ன ஆகுற! ஆல்ரெடி ஆக்ஷன் ப்ளொக் பாத்தே மிரண்டு போய் கிடக்கிறன்.." 


"நான் கீழ போறன்.." இவருடன் கஷ்டம் என சாத்வி நடையை கட்ட,


"இருங்கடாபா.." என அவள் குறுக்கே வந்து கதவை லொக் செய்தவன்,


"கீழ ஒரே கூட்டமா இருக்கு ஹாசினி. நான் மோர்னிங் ப்ரெக்ஃபஸ்ட்டும் எடுக்கல்ல. ஹால்ல இருந்தா லஞ்சும் சாப்பிட ஏலாது. இப்ப அக்கா நமக்கு எடுத்து வருவா. இங்கயே சாப்பிட்டு போவம்.." என்றவன், "உங்களுக்கு பாத்ரூம் போகணுமா?" எனக் கேட்டு, அவள் இல்லை என்றதும் அவன் சென்றான்.


தளர்வாக விட்டு கிளிப் மாட்டிய தனது குட்டை முடியில் காதோரம் நழுவிக் கிடந்த குழலை ஒதுக்கிய சாத்வி, "காலையில சாப்பிடல்லயா இவர்.. நாம கேக்கவே இல்லயே... ஒரு மணி ஆகுது.. பசிச்சிருக்கும்!!" என்று முணுமுணுத்தாள்.


அவளுக்கு தெரிந்து, வாமனும் அவளை போலவே வஞ்சனை இல்லாது நன்றாக சாப்பிட கூடியவன்.. 


இவ்வளவு நேரம் அவன் சாப்பிடாமல் விரதம் இருந்து இருக்கிறானே.. என்ற கவலையில் நேற்று நிகழ்ந்த சம்பவங்களின் பாதிப்பு சற்றே தூரம் போயின.


சாத்வி சுவர் படங்களை பார்த்து நிற்கும் போது கதவை தட்டி விட்டு வந்தார்கள் வாமனின் அக்கா தங்கை.


அக்கா கையில் உணவும் தங்கை கையில் துணிப் பையும் இருந்தன.


"தேவன் எங்க.."


"பாத்ரூம்ல.."


"மட்டன் பிரியாணி நீங்க சாப்பிடுவிங்க தானே.. தம்பி ஃபுல் கட்டு கட்டுவான். அது தெரியும்.. உங்கள பற்றி தெரியாது.. நோர்மல் ரைஸ் அன்ட் கறியும் இருக்கு.. வேணும் எண்டா சொல்லுங்க.. எடுத்து வாரன்.."


"பிரியாணி சாப்பிடுவன்"


"அப்ப சரி!" பிரியாணி பக்கட்டுடன் தட்டு, தண்ணீர் போத்தலையும் மேசையில் வைத்தாள் நந்தினி.


"நீங்க சாரி மாத்தணுமாம்... அம்மா தந்து விட்டாங்க.." என நிவேதா பையை நீட்டினாள்.


"ஏன் இந்த சாரிக்கு என்ன..?" சாத்வி கேட்க, நிவேதா அவளுடைய அக்காவை பார்த்தாள்.


"இந்த சாரிக்கு ஒரு குறையும் இல்ல. வடிவா தான் இருக்கு. இது முறை.. கால் மாறி வந்தா மாப்பிள்ள வீட்ட தார சாரிய மாத்திக் கட்டணும்.."


இப்ப இதை மாற்றி கட்ட வேண்டுமா என்ற அயர்ச்சியுடன் அதை வாங்கினாள் சாத்வி.


"ரெண்டு ப்ளேட் சாப்பாடு எடுத்து வர இவ்ளோ நேரமா? பசிக்குது அக்கா.." என குளியலறை இருந்து வெளிப்பட்டான் வாமன்.


"ஏன் அண்ணா, பட்டினி கிடந்து வந்த மாதிரி பறக்குறிங்க.." நிவேதா அவனை கிண்டல் செய்ய,


காலையில் இருந்து பட்டினி தானே இருக்கிறார்.. ஆனால் அதை இவர்களிடம் சொல்லி விடுவாரோ என சாத்வி பயந்தாள்.


"மாமியார் வீட்ட டைமுக்கு சாப்பிட்டு பழகிட்டுது நிவே. பன்ரெண்டு மணிக்கே ஸ்டொமக் அலாரம் அடிச்சிட்டு.."


"ஓஹோ!! பாக்க தெரியுது நல்ல கவனிப்பு தான் போல.. மூண்டு நாள்ள தொப்பை எல்லாம் டெவெலொப் பண்ணிட்டு வந்து இருக்கிங்க.."


"உண்மையா வா? வயிறு வச்சிட்டா? எனக்கே விளங்குது.. வர்க் அவுட் பண்ணணும்.."


"அவள் பகிடி பண்றாள் தேவா. உடம்பு எல்லாம் வைக்க இல்ல. ஃபிட்டா தான் இருக்கிறாய். வயித்துல மட்டும் கொஞ்சம் சத வச்சிருக்கு.."


"ஹாஹாஹா.. நானும் அத தான் அக்கா சொன்னன்.. தொப்ப வச்சிட்டு மூண்டு நாள்ள"


"ஏய், பகிடியா பண்றியா.. வெயிட் போட்டுட்டன் தான். இது என்ர ஃபால்ட். எல்லாம் ஹாசினியால.." 


நான் என்ன செய்தேன் என சாத்வி நடுவில் நின்று அவனைப் பார்க்க, அக்கா தங்கை இருவரும் அவளைப் பார்த்தனர்.


"சமைப்பிங்களா நீங்க?" ஆச்சரியமாக வினவினர்.


இதென்ன கேள்வி! என சாத்வி அவர்கள் அதிர்ச்சியை யோசிக்க,


"சமைப்பிங்களா வா.. நான் மறந்தே பொயிட்டன். எடுங்க காச.. ஆளுக்கு அஞ்சாயிரம்.. இப்ப வரணும் டென் தவுசன்" என அவர்களிடம் ரகளை செய்தான் வாமன்.


"நாங்க எப்டி நம்புற.. அவங்க சமைச்சி தரட்டும் சாப்பிட்டு பாத்துட்டு ஒத்துக் கொள்றம்.."


"நோ வே.. நான் தான் டேஸ்ட் பண்ணிட்டனே.. காசு இப்பவே வந்தாகணும்.."


"போங்கண்ணா.. எனக்கிட்ட பத்து பைசா இல்ல"


அவர்கள் மூவரும் பேசுவதை புரிந்தும் புரியாமலும் சாத்வி வேடிக்கை பார்க்க, 


"நந்தினி.. நிவேதா.." என கூப்பிட்டுக் கொண்டு மேலே வந்தார் வாமனின் தாயார்.


"கீழ ஆக்கள கவனிக்காம இங்க நிண்டு கதச்சிட்டு இருக்கிங்க.." என இரண்டு மகள்களையும் விரட்டியவர்,


"நீ என்ன தம்பி ரூமுக்கு வந்த.. சாப்பிட்டு முடிச்சுட்டு சொல்லிட்டு போக சனம் தேடும் எல்லா..?" அவனையும் கடிந்தார்.


"டக் எண்டு சாப்பிட்டு வாங்க.." என்று சாத்வி புறம் திரும்பியவர், "நீ சாரிய மாத்திட்டு வாம்மா.. உதவி வேணும் எண்டா நந்தினிய நிக்க சொல்றன்.." என்றார்.


"அவைக்கு ஹெல்ப் தேவை இல்ல அம்மா. செல்ஃபா ரெடி ஆவா. நீங்க போங்க நாங்க வாறம்" என அவருடன் சேர்த்து அக்கா தங்கையையும் அனுப்பி விட்டான் வாமன்.


தட்டில் உணவை போட்டு அமர்ந்தனர்.


"யாரு சொன்ன.. எனக்கு ஹெல்ப் வேணாம் எண்டு?"


"நீங்க தான் காலையில தனிய போய் ரெடி ஆகி வந்திங்க.. என்ன டிஸ்ரப் பண்ணாம.."


அவர்கள் அறையில் புடவை உடுத்தாமல் அவனை தவிர்த்ததை சொல்லி காட்டுகிறானா என யோசித்த சாத்விக்கு இப்போது எப்படி புடவை மாற்றுவது என்று யோசனை.


"என்ன திங்கிங்.. சாப்பிடுங்க.. திரும்ப தேடி வரப் போறாங்க...." என்றவன் மட்டன் பிரியாணியை காலி செய்தான்.


கீழே விருந்து முடிந்து பெண் மாப்பிள்ளை வருகைக்கு சொந்த காரர்கள் காத்திருந்தனர்.


"புனிதா, புள்ளய காண இல்ல இன்னும்.." என செல்லம்மா கேட்டார் மகளிடம்.


"மேல போனாங்க எண்டு சாத்விட மச்சாள் சொன்னா"


"புடவ மாத்த உன்ன தேடுறாளோ என்னவோ.. போய் பாரன்"


"இல்லம்மா.. அவளுக்கு உதவி தேவை இல்ல.. தேவ பட்டாலும் தம்பிட அக்கா தங்கச்சி இருக்காங்க கூப்பிடட்டும். அவளும் இவங்களோட பழக தானே வேணும். எவ்ளோ காலத்துக்கு நாங்களே நிக்கிறது?" என்ற புனிதாக்கு சாத்வியை தேடிப் போகும் எண்ணம் இல்லை. 


'சாரி மாத்தணும் சித்தி.. நீங்க வாங்க. அவர வெளில அனுப்புங்க..' என அக்கா மகள் கண்டிப்பாக கேட்பாள்.


'அவர் இன்னும் எழும்ப இல்ல சித்தி, நான் உங்கட ரூம்ல போய் சாரி கட்டிட்டு வாரன்' என காலையில் புடவை நகையுடன் கிளம்பியது போல என நினைத்தாள்.


அவள் எண்ணம் சரி என்பது போலவே உண்டு முடித்ததும் சார்ஜ் இணைப்பில் போட்ட தனது அலைபேசியில் இத்தனை நாள் வந்திருந்த ஈமெயில் குரூப் மெசேஜ்களை தட்டிப் பார்த்துக் கொண்டிருந்த வாமன் முதுகையே பார்த்து நின்றாள் சாத்வி.


"ஹாசினி! ரெடி ஆகுங்க.. லேட் ஆகுது" என இரண்டு தடவை சொல்லி விட்டவன் அங்கிருந்து அசைவது போல தெரியவில்லை.


'நீங்க கொஞ்சம் வெளியில போறிங்களா..' என அவளாக கேட்க எடுக்கும் போது அவனுடைய ஐஃபோன் சிணுங்கியது.


"ஹெலோ! ஹா.. கியன்ன சேர்" என சிங்களத்தில் பேசிக் கொண்டு கதவு திறந்து பால்கனிக்கு சென்றான்.


கிடைத்த வாய்ப்பில் பின்களை கழட்டி புடவையை உருவிப் போட்டவள், அவசரமாக செயற்பட்டாள்.


மறு முனையில் இணைந்த வாமனுடைய டிபார்ட்மெண்ட் ஹெட்டுக்கு என்ன அவசரமோ, சில வினாடிகளில் பேசி முடித்து அவர் வைத்து விட, ரூமுக்கு திரும்பியவன் மனைவி அளித்த தரிசனத்தில் தான் விழித்தான்.


வளரும்..

-ஆதுரியாழ் ❤️

Previous Epi

Next Epi

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...