அத்தியாயம்: 17
"என்ன! மொத ரெண்டும் ஓகேவா! " என இருவரும் புன்னகைக்க நிவி மட்டும்…
" இப்ப எல்லாமே சரியாத்தா தெரியும். ஆனா பின்னாடி இதுக்காக ஃபீல் பண்ணுவ. " என்றாள்.
" அவ வாய மூடுடி." சாரு..
"உன்னைப் பயமுறுத்துற அடுத்த கண்டிஷன் என்ன பையூ. "
"அது… அவெ ஒரு வெஜிட்டேரியன்.. "
" வாட்... " என்றனர் மூவரும் அதிர்ச்சியுடன்..
" என்னோட ஹாஸ்டல்ல எப்பயுமே நான்-வெஜ் இருக்கும். பட், எனக்கு பழக்கம் இல்ல. நான் பிறந்ததுல இருந்தே வெஜ் தான். எனக்கு நான்வெஜ் வாடையே ஆகாது. சோ… " என மது இழுக்க,
"உங்க வைஃப்பும் நான்வெஜ் சாப்பிடக்கூடாது. சரியா?" என்றாள் பையூ.
"இல்லை.. என்னோட வீட்டுல அதச் சமைக்க கூடாது. வெளில சாப்பிடலாம். வாங்கிட்டு வந்தும் கூட ஓகே தான். பட், எம்முன்னாடி கூடாது. வேஸ்ட்ட கூட சீக்கிரம் டிஸ்போஸ் பண்ணிடணும். ஸ்மெல் வர்றதுக்கு முன்னாடியே." என்க, இது பைரவிக்கு பெரும் அதிர்ச்சி தான்.
நடக்குறது... பறக்குறது... தாவுறது... குதிக்கிறது… நீந்துறது... ஊர்றதுன்னு கண்ணுல சிக்குற எல்லாத்தையும் உண்டு செமிக்கும் ரகம் அல்ல தான். ஆனால், கோழி, ஆடு, மீன், மூட்டை இல்லாமல் சோறு இறங்காது.
அவள் வாரத்தில் மூன்று நாள்கள் அசைவ உணவை விரும்பி உண்ணும் ஜீவன். அவளைப் போய்... ச்ச...
" காலை சூடான இட்லி மேல கொத்துக் கறி குழம்ப ஊத்தி சாப்பிட்டாத்தா அந்த வாரத்தோட முதல் நாளே ஸ்டாட் ஆகும். மீன் குழம்பு. மட்டன் பிரியாணி இல்லாத ஞாயித்துக்கிழமைய நான் யோசிச்சி கூட பாக்கவே விரும்பல.
அவனக் கல்யாணம் பண்ணிக்கிட்டா அது முடியாதா." என வருந்தி சொல்ல,
" ரொம்ப சிம்பிள் அவனப் பிடிக்கலன்னு சொல்லிடு. அது தான் கரெக்ட்டா இருக்கும்." நிவி.
"உன்னைச் சாப்பிடக் கூடாதுன்னு சொல்லலல்ல." சாரு..
" ம்... "
"அப்ப அம்மா வீட்டுல வந்து சாப்பிட்டுக்க. சாந்திம்மா செம்மையா சமைப்பாங்க. நீ மட்டுமில்ல அண்ணாவையும் சேத்தே கூட்டீட்டு வா. நீயா சமக்கிறேன்னு சமயக்கட்டுக்குள்ள போய் சமச்சி அண்ணாக்கு குடுத்து சாப்பாட்ட வெறுத்திட வச்சிடாத. " எனக் கேலியாகக் கூற, சாருவை முறைத்தாள் பையூ.
"சரி சரி அடுத்து என்ன?" நிவி..
"அடுத்தது கண்டிஷன் இல்ல… பட், எப்படி சொல்றது?"
" வாயால தான். " சாரு.
"ம்ச்… அவெ கொஞ்சம் டிசிப்ளீன் பாப்பான் போல இருக்கு. "
"அப்படின்னா!"
" அதாவது எல்லாம் கரெக்ட்டா நடக்கணும்னு நினக்கிறான். பர்ஃபெக்ட்டுன்னு கூட சொல்லலாம். மிஸ்டர் பர்ஃபெக்ட். இன்னைக்கி கூட நாங்க அவன லேட்டா வந்து, காக்க வச்சதுக்கு, ' இனி ஒருத்தர பாக்கணும்னா சரியான நேரத்துக்கு வந்து பழகு. லேசியா இருக்காத.. டயம் இஸ் கோல்ட். ' அப்படின்னு மூஞ்ச ஒரு மாதிரி வச்சிட்டு சொல்லிட்டு போனான். அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. சிடு மூஞ்சா இருப்பானோ! சிரிக்கவே தெரியாதோ!" என்க,
"இங்க பாரு பையூ.. நீ அவனக் கல்யாணம் பண்ணிக்கிறத பத்தி நல்லா யோசிச்சிக்க. ஒருக்க தலைய நீட்டீட்டேன்னா ஒரு வர்ஷத்துக்கு சகிச்சித்தான் ஆகணும். வாழ்க்கை வேஸ்ட்டாகிடும். கல்யாண சந்தைல நீ இரண்டாம் தரத்துப் பொருளா மாறிடுவ பாத்துக்க. வேலைக்குப் போகக்கூடாது, சுதந்திரமா டிரெஸ் பண்ணிக்க கூடாது, பிடிச்சத சாப்பிட கூடாது, இதுல டிசிப்ளீன் வேற. நீ அவனக் கல்யாணம் பண்ணிட்டு வாழ்றதும், பார்டர்ல பாகிஸ்தான் காரெங்கூட சண்ட போடுறதும் ஒன்னு தான். எப்ப வேணும்னாலும் குண்டடி படலாம். வாழ்த்துக்கள்.. " என்று விட்டு நிவி சொல்ல..
" நிதானமா முடிவு பண்ணு பையூ. ஏன்னா லைஃப்ல ரிவர்ஸ் பட்டன் கிடையாது.. " என்றாள் விஜி..
இருவரும் சென்ற பின் சாருவும் பையூவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"எதுவா இருந்தாலும். ஒரு கைப் பாத்திட வேண்டியது தான். நம்பிக்கையோட இரு பையூ.. காலம் நமக்கு வழி காட்டும். எதெது எப்படி எப்படி நடக்கணுமோ அதது அப்படி அப்படி நடந்தே தீரும். நாம நினைச்சாலும் மாத்த முடியாது. அதுனால உன்னோட ஹார்ட் என்ன சொல்லுதோ அதைக் கேட்டு முடிவு பண்ணு." எனச் சொல்லி சாரு சென்றாள்.
"ஹிம்... இவளுகல கூப்பிட்டு எங்கதைய சொன்னதுக்கு ஆளாலுக்கு ஒரு வசனத்த பேசிட்டு போய்ட்டாளுக. போரவளுக எம்மண்ட மூளையையும் சேத்தே குழப்பீட்டு போய்டாளுக. ஐய்யோ… இப்ப நான் என்ன பண்ண? வேற ஆளப் பாக்கலாம்னா இந்த மானங்கெட்ட மனசு வேண்டாம்னு சொல்லி அவெந்தா வேணும்னு துடிக்கிது. ஆனா மூளை... அவனக் கட்டிக்கிட்டா நீ சூறாவளில சிக்குன பட்டம் மாதிரி நார் நாரா கிளிஞ்சிடுவன்னு சொல்லுது. எனப் பண்ண.. ம்…" எனப் பலவாறு யோசிக்க அந்த இரவு உறக்கம் இன்றி சென்றது.
கூடவே மதுசூதனனின் முகமும், இறுக மூடியிருந்த உதடுகளில் பூத்த சின்ன சிரிப்பும், செல்லும் போது அவன் தன்னைப் பார்த்த பார்வையும், மனதில் ஆழமாக பதிந்து கொள்ள, மதுவைத் தாண்டி சிந்திக்க மாட்டேன் என லண்டித்தனம் செய்தது அவளின் இதயம்.
கண்டதும் காதல் கொண்டு விட்டாள் அல்லவா அதனால் அவனைச் சுற்றியே வளம் வருகிறாள்.
ஒரு நாள் முடிந்தது...
ஆனாலும் பையூவின் மனத்தில் தெளிவில்லை. கண்டிப்பாக அவன் கூறும் எந்த ஒரு நிபந்தனையையும் தன்னால் பின்பற்ற இயலாது. இதை மதுவிடம் சொன்னால் அவனை இழக்க நேரிடும்.
இப்போது சரி என்று கூறி கழுத்தில் தாலி வாங்கி கொண்ட பின் முரண்டு பிடித்தால் என்ன செய்வான்? நிவி சொன்னது போல் நம் பாடி டேமேஜ் ஆகும் அளவுக்கு அடிப்பானோ. அப்படிச் செய்தால் நிச்சயம் சண்டை வரும். அது என் காதலை கருக்கி விடும். இப்பொழுது என்ன செய்வது? அவனுக்கு ஓகே சொல்லலாமா! வேண்டாமா? என்ற யோசனையிலேயே இருந்தவளுக்குத் தன் நிலை பிடிக்கவில்லை. எதை பற்றியும் தீவிரமாக சிந்தித்துக் கொண்டே இருக்கும் பழக்கம் அவளுக்குக் கிடையாது.
'பரிச்சைக்கு முதல் நாள் கூட நான் புக்க கைல எடுத்தது இல்ல. சிலர மாதிரி மண்டைல கொட்டிக்கிட்டே விடிய விடிய புத்தகத்துல புழு மாதிரி ஊர்னதும் இல்ல. மனச லேசா வச்சிக்கணும். யோசிக்கிறேங்கிற போர்ல மூளைய சூடாக்க கூடாது. இது தான் என்னோட கொள்க. ' என்பவளைப் போய் ஒரு நாள் முழுவதும் யோசிக்க வைத்தால் என்ன ஆகும். முதல் முறை மூளை ஓயாது வாஷிங்க மிஷன் போல் சத்தமிட்டுக் கொண்டே இருந்தது.
"போதும்... இதுக்கு மேல சின்ஸியரா யோசிக்க எனக்குத் தெம்பில்ல. நான் அப்படிக் கிடையாது. அதே நேரம், ரெண்டு நாள்ல ஒரு முடிவ அவெங்கிட்ட சொல்லணும். என்ன பண்ண... ம்... ஒன்னு பண்ணுவோம், ஒரு கேம் விளையாடி பாப்பபோம். அதுல நான் வின் பண்ணா அவனக்கு கால் பண்ணி ஓகே சொல்லிடுறேன். இல்லன்னா மனச இரும்பிக்கி கிட்டு நோ ன்னு சொல்லிட வேண்டியது தான். ஆமா என்ன கேம் வச்சி முடிவு பண்றது." என யோசித்தவளின் மூளையில் ஒரு மணி அடிக்க,
" இத்துனூண்டு சென்னை சிட்டி. மேப்ல கூட மத்த மாவட்டத்த பெருசு பெருசா குறிச்சாலும், சென்னைக்கு இடம் கம்மி தான். மக்கள் அதிகமா இருந்தாலும், ஒரு ஹன்சம் பாய பாக்க முடியாத அளவுக்கு பெருசில்ல.
இருபத்தி ஒரு வர்ஷம், நான் இந்தச் சென்னைலயே பிறந்து வளந்திருக்கேன். ஆனா இவெ மட்டும் ஏன் எங்கண்ணுல இத்தன நாள காட்டல அந்த ஆண்டவன். ம்… இப்பக் கல்யாணம்னு ஒருத்தன தேடும் போது அந்தக் கடவுள் நம்ம கண்ணுக்கு அவன காட்டுறான்னா என்ன அர்த்தம்… ம்... He is my man னு அர்த்தம்...
அத உறுதி படுத்திக்கணும்னா.. என்ன பண்ணணும். ம்... " என காலண்டரில் தேதியைச் பார்க்க, அது இன்று ஞாயிறு என்றது. மணியைப் பார்க்க அது மாலை ஐந்து என்றது.
"ஓகே நாளைக்கி ஈவ்னிங் அஞ்சி மணிக்குள்ள நான் அவன பாத்தேன்னா. அவெந்தான் எனக்கு புருஷன். நாந்தா அவனுக்கு பொண்டாட்டி. எங்கிட்ட மாட்டிட்டு முழிக்க போறான்.
அப்படிப் பாக்கலன்னா...." என நினைக்கும் போதே, மனத்தில் ஏதோ ஒரு ஓரத்தில் சுருக்கென குத்தியது.
" ஓகே… அப்படிப் பாக்கன்னா.. அவெ தப்பிச்சிட்டான்னு அர்த்தம். அவனுக்கு ஏத்த மாதிரி நல்ல பொண்ணாப் பாத்து நாமலே செட் பண்ணி குடுத்திட வேண்டியது தான். " என தன் விளையாட்டைத் தொடங்கியவள் வெளியே எங்கும் செல்லவில்லை.
எதுவாக இருந்தாலும் தானாக நடக்க வேண்டும். தன் முயற்சியால் அல்ல. என்று வீட்டிலேயே பொழுதைக் கழிக்க, நிவியும், சாருவும் அவளைக் காண வந்தனர்.
" என்னடி நீ அப்படியே இருக்க?. " என்றாள் நிவி.
" அப்படியேன்னா… எப்படி.. ரெண்டு நாளுக்கி முன்னாடி பாத்திங்களே அப்படி தான!" என்க, அவளின் கையில் கிள்ளினாள் சாரு.
" ஸ்ஆ.. எதுக்கு டி கிள்ற? "
" எரும... இன்னைக்கி விஜியோட அண்ணே மகளுக்கு பெர்த் டே. மறந்துட்டியா?" என்க, தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தாள் பைரவி.
"ஆமாண்டி மறந்திட்டேன். டூ மினிஸ்ட்.. மேகி மாதிரி ரெடியாகி வந்திடுவேன். " என அறைக்குள் சென்றாள்.
"இவளுக்கு என்னாச்சி சாரு.. " நிவி பையூவின் விசித்திர நடவடிக்கைகளுக்கு காரணம் கேட்டாள்.
" தெரியல டி... நான் போய் கிஃப்ட் வாங்கிட்டு உன்னக் கூட்டிட்டு வந்திடுறேன். நீ ரெடியா இரு பையூ. நாம ஆட்டோல போகலாம்னு சொல்லிட்டு தான் போனேன். தலைய தலைய ஆட்டிட்டு. இப்படி மந்தார மாதிரி நிக்கிறா. லூசு…" என பைரவியைத் திட்ட, பைரவி அவள் கேட்ட இரண்டு நிமிடங்களில் தயாராகி வந்திருந்தாள்.
பாவாடை தாவணி... சந்தன நிறத்தில் கோல்டன் கலர் ஜரிகை வைத்து கேரளத்து பைங்கிளி போல் ரெடியாகி வந்திருந்தாள் பைரவி. அனைவரும் ஒன்று போல் உடை உடுத்திச் செல்லலாம் என்று திட்டம் போட்டு ஒரே நிறத்தில் தாவணி அணிந்திருந்தனர்.
"பைரவி, இப்ப தான் பொண்ணப் பாக்குற மாதிரி ஃபீலிங்கே வருது. இத்தன நாள ஆம்பளப்பையன மாதிரி முடிய வெட்டிக்கிட்டு கழுத்துல கருப்பு கலர் கயற மாட்டிக்கிடு, அதென்ன சொல்லுவாங்க.. புள்ளிங்கோ… ஹாங்.. புள்ளிங்கோ மாநிரி இருந்த. இப்ப தான் எம்பொண்ண பாக்குற மாதிரி இருக்கு. " என மகளின் தலையில் மல்லிகைப் பூவைச் சூட்டி விட்டார் சாந்தி.
'மது சொல்ற கண்டிஷன்கள் அனைத்திற்கும் பைரவி ஒத்துவரவில்லை. அதற்கு மாறாக அவளின் அன்னை சாந்தி தான் ஒத்து வருவார் போலிருக்கே. ' மைண்ட் வாய்ஸ்
சாந்தியையும் மதுசூதனனையும் ஒரு தராசில் கட்டினால், சமமாக இருக்கும். அவரும் வெஜிட்டேரியன் தான். உடை விசயத்தில் கண்டிப்பு உண்டு.
ஆனால் பைரவி அவர் பேச்சை கேக்க கூடாது என்பதற்காகவே ஏட்டிக்கி போட்டியாக நடந்து கொள்வாள்.
நீளமான முடி கிடையாது. தன் தோளைத் தொட்டு உரசும் அளவுக்கே கூந்தல் இருக்க வேண்டும் என்று வெட்டி விட்டாள் பையூ. ஏன் என்ற கேட்ட சாந்தியிடம்,
"இத பெயிண்டென் பண்றவங்களுக்கு தான் தெரியம், அதோட கஷ்டம் என்னன்னு.. சும்மா சும்மா திட்டாம இருங்க." என்க,
" பாக்குறதுக்கு ஆம்பளப் பையங்கணக்கா இருக்கு டி. ஏற்கனவே ஒரு கைல டாட்டோ, ஒரு கைல கலர்கலரா ரப்பர் பேண்டு, கழுத்துல கருப்பா எந்தக் கோயில்னே தெரியாம மந்திரிச்சி விட்ட தாயத்து, காதுல கால்ன்னு எதுவுமே போடுறது கிடையாது.. பாக்கவே கண்றாவியா இருக்க." என்றார் சாந்தி.
"அப்ப அழகு படுத்திடுவோம்மா ம்மா. ஆக்டர் தல மாதிரி சால்ட் அண்டு பெப்பர் ஹர் ஸ்டெயில் வச்சி இன்னும் கொஞ்சம் முடிய வெட்டிக்கிட்டா டாம் பாய் மாறி இருக்கும்ல. என்ன சொல்றீங்க? " என அவரிடம் வரம்பு செய்பவள், இன்று தாவணியில் இருக்கவும் சாந்திக்குக் தலைகால் புரியவில்லை.
மகள் ஏறிய ஆட்டோ சென்று மறையும் வரை வாசலிலேயே நின்று தன் மகளின் அழகைக் கண்டு ரசித்தார் அவர்.
"நான் சொல்ற பேச்ச மட்டும் எப்பயோ கேட்டிருந்தான்னா இன்னேரம் பொண்ணு மாதிரி மாறி இருந்திருப்பா.. ஆனா கேக்கத்தா மாட்டேங்கிறா." எனப் புலம்பியபடியே வீட்டிற்குள் சென்றார் அவர்.
"அட்ரஸ் சரி தான?" சாரு.
"ம்... சரி தான்டி. விஜி அனுப்புன லொக்கேஷன் கூட இந்த இடத்ததா காட்டுது. இது தான் நாம தேடிவந்த இடம். " என்றாள் பைரவி.
"இவ்ளோ பெரிய வீடா இருக்குன்னு விஜி சொல்லவே இல்ல. வாவ்.. " என வாயைத் திறந்தபடி இருந்தனர் மூவரும்.
நால்வருமே மிடில் க்ளாஸ் தான். விஜியின் அண்ணன் லவ் மேரேஜ். வீட்டை எதிர்த்து திருமணம் செய்ததால் வீட்டை விட்டு விரட்டப்பட்டார்.
ஆனால், பெண் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு இல்லை போலும். விஜியின் அண்ணனைத் தங்கத்தட்டில் வரவேற்று வீட்டோட மாப்பிள்ளையாக வைத்துக் கொண்டனர்.
சில சூழ்நிலைகள் காரணமாக ஓடிச் சென்ற மகனை அண்டி வாழ வேண்டிய நிலை வர, வேண்டா வெறுப்பாக அவனின் நிழலில் வாழ்கின்றனர் விஜியும் அவளின் தாயும்.
உள்ளே நுழையவே பல அடுக்கு பாதுக்காப்பு போடப்பட்டிருந்தது. வண்ண விளக்குகள் மின்ன கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்க, மூவரும் வாசலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.
"ஏம்மா சொன்னா புரிஞ்சிக்க மாட்டேங்கிற. இன்விடேஷன காட்டு உள்ள விடுறேன். இல்ல உங்கள வரச் சொன்னவங்கள இங்க வரச் சொல்லுங்க. " எனக் கறாராக கத்திக் கொண்டு இருந்தார் அந்த வாட்ச் மேன்.
"என்னடி ஃபோன எடுத்தாளா! இல்லையா?" சாரு, எரிச்சலாக இருந்தது குரல்.
"இல்லடி... கால் பண்றேன்.. ரிங் போது. பட், எடுக்க மாட்டேங்கிறா.." என பையூ புலம்ப,
"பேசாம நாம வீட்டுக்கு போய்டலாம். எனக்கு கொஞ்சம் எம்பரைஸ்ஸா இருக்கு. " என்றாள் நிவி. அவர்களைத் தாண்டி செல்லும் கார்களுக்கெல்லாம் கேட்டைத் திறந்து விடும் வாட்ச்மெனைப் பார்க்கையில் அவமானமாக இருந்தது. திரும்பி செல்ல ஆரம்பித்தனர்.
"Is there any problem here?" என்ற குரல் அவர்கள் தடுத்து நிறுத்தியது.
யாருடையது என்று உங்களுக்கு தெரியுமா?
தொடரும் ...

madhu vanthacha 😍😍
பதிலளிநீக்கு🤣🤣🤣🤣🤣
நீக்கு