முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பனி 25

அத்தியாயம்: 25 மண்ணாசை பெண்ணாசை இரண்டும் பேராசை. அது அழிவு பாதைக்கு வழி காட்டும். ஆரம்பத்தில் வேகமாக முன்னேறி பேராசையெனும் ஓடத்தில் பயணிக்கும் போது சுகமாகவும் இன்பமாகவும் இருக்கும். சிறு சூறைக்காற்று வீச தொடக்கினால் அந்தப் போரசை படகு கவிழ்ந்து நம்மையும் மூழ்கடித்து விடும். வேலாயுதத்திற்கு அது ஏறுமுக காலம். கனகவேல் இறப்பின் போது அவருக்குச் சிறு வருத்தம் கூட இல்லை. உடன் பிறந்தவனின் மரணம் கண்ணீரை வரவைக்க வில்லை.  'அப்பாடா... சொத்த மூனா பிரிக்க வேண்டிய அவசியம் இல்ல. கண்ணா தான. அவனச் சமாளிக்க எனக்குத் தெரியாதா! எல்லாமே எனக்கும் எம்பிள்ளைக்கும் தான்.' என ஊரில் இருக்கும் சில ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தன்னதாக மாற்ற நினைத்தார்.  அதற்கு ஏற்ற சூழ்நிலையும் வந்தது. விஷக்காய்ச்சல் வந்து கண்ணாயிரம் படுத்த படுக்கையாகிப் போக, மருத்துவத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. தினமும் விவசாய வேலை பார்க்கும் அரசியிடம் ஏது அவ்வளவு பணம். பால் முகம் மாறாத இரு குழந்தை கையில் வைத்துக் கொண்டு அவர் உதவி கேட்காத ஆளே இல்லை. வாய் வார்த்தையாக 'நீ நல்லா இருக்கணும்ய்யா... ' எனப் புகழ்ந்த எந்த ஒரு ...

பனி 16



 



அத்தியாயம்: 16


"பிடிச்சிருக்கு… எனக்கு அவன ரொம்ப பிடிச்சிருக்கு... ஏன்னு தெரியல. ஆனா எனக்கு ஓகே…" பைரவி தான் அது.  கண்களில் மதுவின் முகத்தையும் தன் அளவில்லா காதல் கனவுகளைத் தாங்கிய படி எல்லையில்லா வானத்தைப் பார்த்துக் கொண்டே பினாத்தினாள்.


அட்ராக்ஷன்... க்ரெஸ்.... மதுவைப் புகைப்படத்தில் பார்த்த நொடியில் இருந்தது. ஓர் ஈர்ப்பு இருக்கத்தான் செய்தது. அந்த மயக்கம் எப்பொழுதும் தீராது அவளுக்கு.


"லூசா டி நீ. அவனப் போய் பிடிச்சிருக்குன்னு சொல்ற. அவெ கன்டிஷன சொல்றப்பவே மூஞ்சில தண்ணிய ஊத்திட்டு வராம… பேன்னு வாய் பாத்திட்டு வந்திருக்க. " என காட்டமாகக் கத்தினாள் நிவி‌. நிவேதா. 


"ஏய்! இப்ப எதுக்கு நீ அவள ஏத்தி விடுற. சும்மா இரு. " என்றாள் சாரு.


" முதல்ல உன்னய கொல்லணும்டி.. போய்ப் பாத்து பேசிட்டு வாங்கன்னு சொன்னா... மூக்கு முட்ட அவனுங்க காசுல வாங்கி திண்ணுட்டு வந்திருக்க. யாரு அவெ? அவ்ளோ பெரிய அழகனா." என நிவி சொல்ல, பையூ தன் ஃபோனில் இருந்த மதுசூதனனின் புகைப்படத்தைக் காட்டினாள். 


முழு புகைப்படம் அல்ல அது. உடலில் மேல் பகுதி அதாவது தலையில் இருந்து அவனின் சிக்ஸ் பேக் வயிறு வரை மட்டுமே இருந்தது அந்த புகைப்படம். வெய்ட் டீசர்ட்டில், கூலரை மாட்டிக் கொண்டு லேசானப் புன்னகையுடன் இருந்த மதுசூதனனைக் கண்டு சில நொடிகள் அசையாது இருந்தாள் நிவி. கண்கள் அவனின் கம்பீரத்தையும் ஆண்மை மின்னும் அழகையும் ரசிக்க, வெடுக்கென ஃபோனை பிடிங்கிக் கொண்டாள் பையூ. 


"He is mine… " என்றபடி.


"அது இன்னும் உறுதி ஆகல." என்ற நிவேதாவைக் கண்டு மற்றவர்கள் அலற. 


"ஐய்யோ நான் அந்த அர்த்தத்தில சொல்லப்பா. இன்னும் இவெந்தா மாப்பிள்ளன்னு முடிவாலன்னு சொல்ல வந்தேன். அவ்ளோ தான். " என்றாள் தடுமாறி. 


"நிஜம்மா அழகா இருக்காரா! " விஜி.


"ம்... அழகு தான். பாக்க ஆளு அழகு தான். அதை இல்லன்னு சொல்லிட முடியாது. அதுக்குன்னு இப்படியா கண்டிஷன் போடுவாங்க. சின்ன சின்ன விசயம். அதுக்கே கட்டாயம் நீ ஃபாலோ பண்ணணும்னு சொல்றான்னா… உன்னை அவனோட கன்ட்ரோல்ல எடுத்துக்க பாக்குறான்னு அர்த்தம். அவன மீறி நீ எதுவும் செய்யக்கூடாதுன்னு சொல்றான். எனக்குத் தெரிஞ்சி அவனோட அட்டிட்டியுட் சரியில்லையோன்னு தோணுது." என்ற நிவி, முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது, 


'இந்த லேடிக்கி அந்த பாடியா.. ' என்ற பொறாமை.


"அதெல்லாம் எங்க மது அண்ணனுக்கு எல்லாம் சூப்பராத்தா இருக்கும். எனக்குப் பூரண திருப்தி பையூ. நீ இவளுக பேச்ச கேக்காத. உன்னைக் குழப்பி விட்டுடுவாளுக. " எனச் சாரு தன் எதிரில் இருந்த இருவரையும் முறைத்து பார்த்த படி கூறினாள். 


"இவளோட எதுக்கு டி என்னையும் சேத்து சொல்ற. " என விஜி கோவிக்க, நிவி தான் 'நான் அப்படி கிடையாது.' எனக் கத்தினாள்.


இந்த நாலு பேர் நாலு விதமாக பேசுவாங்கன்னு சொல்லுவாங்கள்ல, பைரவி விசயத்தில மூணு பேர் தான். அந்த மூணு பேர் தான் இவங்க தான். நிவேதா, விஜயலட்சுமி, சாருலதா.


சாரு, எப்பவும் யபாசிட்டிவ் வைப்ரேஷன் மோடில் தான் இருப்பாள். ‘நடக்கும் அனைத்தும் நல்லதாவே இருக்கட்டும்.’ என எது நடந்தாலும் அதை நல்ல விதமாகவே எடுத்துக் கொள்வாள். பைரவியைப் போல். 


ஆனால் அடுத்ததாக இருக்களே, நிவேதா. ஃபுல் ஆஃப் நெகட்டிவ். எதற்கும் எதிர்மறையாகவே பேசி கடுப்பேத்தி கட்டையைப் போட்டு நம்மை குழப்பி தடுத்து நிறுத்துவாள். நாம் ஏதாவது சொன்னால், 'இப்படித்தான் எங்க அக்கா வீட்டுல. ' என ஆரம்பித்து ஹாலிவுட்டை மிஞ்சும் அளவுக்கு கிராபிக்ஸோட கற்பனை கதைகள் வரும் அவளிடமிருந்து.


விஜி, அவளை நியூட்ரல் என்று சொல்லலாம். தவறு என்று தெரிந்தால் துணிந்து நீ செய்வது தவறு என்ற எதிர்ப்பாள். சரி என்றால் ஆதரவும் தருவாள். அந்தக் கூட்டத்திலேமே இரு பக்கமும் யோசித்து முடிவெடுக்கும் ஜீவி அவள்.


கவுண்டமணி ஸாரின் பாஷையில் சொன்னால்.. 'ஒன்னு வெந்தது. ஒன்னு வேகாதது. இன்னொன்னு அரவேக்காடு. ' அவர்களிடம் சென்று மது கூறிய கன்டிஷனைச் சொன்னால் எப்படி இருக்கும்?


ம்… 


‘ஆமாம், கண்டிஷன் கண்டிஷன் என்று சொல்றியேப்பா.. என்ன கண்டிஷன் என்று சொல்ல மாட்டிக்கிறியே.’ என நீங்க புலம்புறது கேட்குது. 


இதோ முதலானது… முக்கியமானது... 


" எனக்குத் தனிமைன்னா பிடிக்கும். அப்படியே வளந்திட்டேன். அப்பா அம்மா இறந்துல இருந்து தனிமையும் அமைதியும்  எனக்குப் பழக்கப்பட்ட ஒன்னாகிடுச்சி. என்னோட மனைவியா வர்றவ எங்கூடவே இருந்து என்னோட தனிமைக்கு துணையா இருக்கணும்னு எதிர்பார்க்கிறேன். ஐ மீன்… வேலைக்குப் போக கூடாது. 


உனக்கு அப்படி ஏதாவது ஐடியா இருந்தா. அதாவது வேலைக்கு போய் சாதிக்கணும்னு ஆசை இருந்தா இப்பவே சொல்லிடு, நமக்குள்ள செட்டாகதுன்னு நான் போய்க்கிட்டே இருப்பேன்." 


"வேலைக்கி போறதுக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்." எனப் பைரவி புரியாமல் கேட்க, 


"இருக்கு. நிறைய சம்மந்தம் இருக்கு. மேரேஜ் லைஃப்ங்கிறது ஒருத்தனுக்காக ஒருத்தர் அன்பா அரவணைப்பா இருக்குறது. என்னோட மனைவியா வர்றவ நான் எப்ப வருவேன்னு எதிர்பாத்து ஆசையோட எனக்காக வாசல்ல காத்திருக்கணும். என்னைப் பாத்தும் வர்ற ஒளிய அவளோட முகத்துல தினமும் பாக்கணும்.


வேலைக்கு போனா அது முடியாது. அவளும் டயர்டாகி என்னையும் டயர்டாக்கி. லாட் ஆஃப் டென்ஷன் இருக்கும். சோ வேலைக்கு போகக்கூடாது. அதே நேரம் பொருளாதார ரீதியில என்னோட வைஃப்புக்கு நான் செலவு செய்ய தயங்க மாட்டேன்." 


" என்ன! வேலைக்கு போக கூடாதா!!!!! அதெப்படி அத அவெ சொல்லலாம். போகணுமா வேண்டாம்மா பொண்ணுங்க தான் டிசைட் பண்ணணும்.. 


வேலைக்குப் போகமா அஞ்சிக்கும் பத்துக்கும் இவெங்கிட்ட கையேந்தி நிக்கச் சொல்றானா!" நிவி.


"அப்படி யாரும் சொல்லல. நீயா கற்பன பண்ணி பேசாத. " என்றாள் சாரு காட்டமாக. 


அவளுக்கு மதுசூதனனை பிடித்திருந்தது. ராக்கியையும் தான். சிரிப்புடன் தங்கச்சி என அழைத்ததும் கவிழ்ந்து விட்டாள். 


"ம்ச்... இப்ப சரின்னு தான் சொல்லுவானுங்க. அப்றம் காசு கேட்டா ஆயிரத்தெட்டு கணக்குக் கேட்டு தர மாட்டானுங்க. இப்படித் தான் என்னோட பெரியம்மா மகள ‘வேலைக்கே போக வேண்டாம். நாங்க நல்லா பாத்துப்போம். மக மாதிரி தான் எங்களுக்கு’ன்னு சொல்லி கூட்டீட்டு போனானுங்க. அங்க, அவள வீட்டு வேலக்காரிய விட மோசமா நடந்துறானுங்க. ‘வீட்டு வேலய மட்டும் பாத்திட்டு, என்னையும் கவனிச்சிட்டு ஒரு ஓரமா கிட’ன்னு சொல்றதுக்கு எதுக்கு வைஃப்… ச்ச... பொருளாதார சுதந்திரம் நமக்கு வேணும்னா வேலைக்கு போறது தான் சரி." நிவி. 


"அத ஏன் அப்படி எடுத்துக்கிற! உன்ன மகா ராணி மாதிரி பாத்துக்கிற அளவுக்கு நான் நல்லாத்தா சம்பாதிக்கிறேன்னு சொல்றதா எடுத்துக்க கூடாதா என்ன! நம்ம வீட்டு வேலைய நாம் செய்யாமா வேற யாரு செய்வா. பொண்டாட்டிய வேலைக்கி அனுப்பாம பாத்துக்கிறது தான் நல்ல புருஷனுக்கு அழகு‌. எனக்குப் பாத்திருக்குறவன காட்டிலும் அண்ணெ பெஸ்ட்டுன்னு தான் சொல்லுவேன்." சாரு.. 


'திருமணத்திற்குப் பின் கண்டிப்பாக வேலைக்கு செல்ல வேண்டும். அப்பொழுது தான் இந்தக்  காலத்தில குடும்பம் நடத்த முடியும். உன் வருமானத்தில் பாதியைப் புருஷனிடமும், மீதியை இரண்டாகப் பிரித்து, உன் குடும்பதிற்கும் உனக்குமானச் செலவை பார்த்துக் கொள். என் மகனிடம் காசை எதிர்பாராக்காதே.' என மனசாட்சியே இல்லாமல் சாருவின் வருங்கால மாமியர் அவளின் உழைப்பைக் கூறு போட்டு பங்கு கேட்டிருந்தார். அதுவும் திருமணத்திற்கு முன்பே 


"வேலைக்கி போறது, சம்பளம் வாங்குறது, தாராளமா செலவு பண்றது, இதெல்லாம் வயசுல நல்லாத்தா இருக்கும். அப்றம் குழந்தன்னு வரும் போது இடிக்கும். அதக் கவனிக்கணும். கூடவே கட்டில்ல படுத்திட்டு கால்மேல கால் போட்டுக்கிட்டே புருஷெ போடுற உத்தரவ நிறைவேத்த பம்பரமா சுத்தணும். சமையல் செஞ்சி‌, வீட்ட ஒதுக்கி நாமலும் கிளம்பி ஆஃபீஸ் போனா… அங்க கண்டவெங்கிட்ட பேச்சு வாங்கணும். சில பொறுக்கிங்களோட பார்வையும் கையும் நம்ம மேல படும் போது கல்லு மாதிரி கண்டுக்காம இருக்கணும்.


காய்ச்சல் தலவலின்னு எது வந்தாலும் நம்மோட ஓட்டத்த நிறுத்தவே கூடாது. நிறுத்தவும் முடியாது. ஸ்வீச்சே இல்லாத மிஷின் மாதிரி தான் நாமலும். தானா ரிப்பேர் ஆகி நிக்கிற வர ஓடித்தான் தீரணும். ரிப்பேரே ஆனாலும், நம்மல நாம தான் பாத்துக்கணும். ஒரு பயலும் திரும்பி பாக்க மாட்டானுங்க. பெத்த பிள்ள உட்பட. 


வீட்டுல கஷ்டம், நாம வேல பாத்தாத்தா சரியாகும்னா வேலைக்கி போலாம். ஆனா எல்லாம் இருந்தும் வேலைக்கி எதுக்கு போகணும். புருஷெ தான் சம்பாதிக்கிறானே. அது போதாது." என்றாள் சாரு.


அவள் அன்னை படும் துயர் அது. 


தேனியில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்க்கும் சாருவின் அன்னையை வீட்டில் பார்ப்பது என்பதே அரிது. அவளும் அவளின் தங்கையும் தனித்தே இருப்பர். இந்தக் காலத்தில் பெண் பிள்ளைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை உறவினர்கள் என்று யாரை நம்பி கொடுக்க முடியாத போது, இருவரும் சிறு வயதில் பட்ட பாலியல் சீண்டல்கள் பல. குடிகார தந்தை. இருந்து இல்லாததற்கு சமம். வேலை வேலை என ஓடும் தாய். அதனால் அவளுக்குத் திருமணத்திற்குப் பின் வேலைக்கு செல்வதில் விருப்பமில்லை. ஆனால் என்ன செய்வது! அவள் வேலைக்குச் செல்கிறாள் என்பதாலேயே வந்த சம்மந்தம் அது. 


சம்பளம் வருகிறது தான். ஆனால் உடல் தேய்கிறதே. அந்தக் குடும்பத்தின் ஆணி வேரான பெண்ணின் மீது ஏற்றி வைக்கும் பாரங்கள் பல. 


இன்றும், பல வேலைக்கு செல்லும் பெண்கள் அப்படித்தான் காலில் சக்கரம் கட்டாத குறையாக சுழன்று வேலை செய்ய, அவர்களின் தலையில் மொத்த பொறுப்பையும் ஒப்படைத்து விட்டு‍ பல ஆண்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர். கேட்டால் ‘பெண்ணுக்குத் தான பொறுமை அதிகம். எதையும் பொறுப்பாக செய்வர். பெண்கள் பூமாதேவியின் அவதாரம்.’ என்று புகழ் பாடி தங்களின் கடமையில் இருந்து எளிதாக விலகி கொள்கின்றனர்.


அத்தியாவசிய தேவைக்கு வேலைக்குச் செல்வது தவறல்ல.‌ அது நாம் வாங்கி வைத்து கண்ணாடி தொட்டியில் வளர்க்கும் சில மீன்களுக்கு உணவு போடுவதற்கு சமம். ஒன்றிரண்டு போட்டாலே திருப்தி கிடைத்து விடும் அதற்கு. அதே நேரம் ஆடம்பரத்திற்கு வேலைக்கு செல்வது, மீன்கள் நிறைந்த குளத்திற்கு வண்டி வண்டியாகப் பொறியை வாரி இறைப்பதற்குச் சமம். அப்படிக் கொடுத்தாலும் அதன் பசி அடங்காது. அதை தான் சாரு கூறுகிறாள்.


(வேலைக்குச் செல்லும் என் அக்காமார்கள் சிலரின் புலம்பல்களைக் கேட்டதன் பலன் தான் இவை. உன்னை போல் வீட்டில் இருக்க முடிவதில்லையே என்பர்‌‌. வேலைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று நான். இக்கரைக்கு அக்கரை பச்சையாக தானே தெரியும்.)


"என்ன சம்பாதிச்சாலும் அது அவனோட காசு தான். நாம சம்பாதிக்கும் போது கிடைக்கிறது தான் நம்ம காசு. சின்ன சின்ன செலவுகளுக்கு கூட அவனுங்க கிட்ட கையேந்தி நிக்கணும் நினைக்கிறது, ஆண் ஆதிக்கத்தோட உச்சம்." என்றாள் நிவி.


" ஏ‌ன் புருஷெ காசும் பொண்டாட்டிக்கி தான. அதுல அவளுக்கும் உரிம இருக்கு. " என்றாள் விஜி. 


'அப்பாடா ஒரு வழியா நாட்டாம வாயத் திறந்திடுச்சி. இனி தீர்ப்பு மதுவுக்கு சாதகமாத் தான் வரும்.' 


"அதெப்படி டி சொந்த கொண்டாட முடியும்." நிவி.. 


" ம்... புருஷெ சம்பாதிச்சி அவெ பாக்கெட்டுல வச்சிப்பான். நீ சம்பாதிச்சி உன் பாக்கெட்டுல வச்சிப்ப. ரெண்டு பேரும் தனி தனி பாதைல போக எதுக்கு கல்யாணம். 


ஹஸ்பெண்ட் அண்டு வைஃப் ரிலேஷன்ஷிப்பும் கிட்டத்தட்ட பிஸ்னஸ் மாதிரி தான். அங்க கண்ணுக்கு தெரியுற பணம் தான் எல்லாத்தையும் முடிவு பண்ணும். இங்க அக்கறை, பாசம், கடமை, உரிமை அன்புன்னு கண்ணுக்குத் தெரிய நிறை விசயம் இருக்கு. 


பொண்டாட்டிக்கி செய்ய வேண்டியது அவனோட கடமை. அத நான் பாத்துக்கிறேன்னு சொல்லும் போது ஏன் தேவையில்லாதத பேசணும்." என விஜி நீளமாக தன் கருத்தை‌ச் சொல்ல, அனைவரும் அமைதியாகிப் போயினர்.


"உன்னைய கூட்டீட்டு போய் எனக்கு வரப்போற மாமியா வீட்டுல ரெண்டு நாள் விடுறேன். அந்த ரெண்டு நாள்ல அத்தன பேரையும் துவச்சி வெளுத்து காயப்போட்டிடு. " எனக் கேலியாகச் சொன்னாள் சாரு.


"ஆனாலும்… " என இழுத்த நிவியிடம்,


"போதும் ஒரு கன்டிஷனுக்கு ஒரு எபிசோட் எடுத்துக்கிட்டா மீதியிருக்குறதுக்கு, ரொம்ப நேரம் ஆகியும். அப்றம் பாக்குறவங்க கடுப்பாகிடுவாங்க. அதுனால இந்த டாப்பிக்க இத்தோட முடிச்சிக்கலாம். 


பொருளாதார ரீதியா கவனிக்கிறேன்னு சொல்லும் போது அனுபவிக்க வேண்டியது தான." என விஜி சொல்ல அடுத்த கன்டிஷனுக்கு வந்தனர். அது தான் டிரெஸ் கோடு.. 


" நான் நினைச்சேன். வெளில கோர்ட்டு சூட்டுன்னு இருந்தாலும் உள்ளுக்குள்ள பழங்காலத்து ஆளா இருக்கான். மாடன் டிரெஸ் போட்ட பட்டிக்காடுங்க." என்றாள் நிவி. 


"இதுல கருத்து சொல்ல பையூவ தவிர வேற யாருக்கும் உரிம கிடையாது. " என்ற வி‌ஜி பைரவியைப் பார்க்க, அவள் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருந்தாள். 


"பையூ, உனக்கு அவெ வேண்டாம். இதுக்கெல்லாம் கன்டிஷனா போட்டு, உன்னக் கல்யாணம் பண்ணிக்கிட்டான்னா, கல்யாணத்துக்குப் பிறகு அதை நீ ஃபாலோ பண்ணலன்னா உன்னை அடிச்சி கொடும படுத்தினாலும் படுத்துவான். பாடி பில்ட்டர். உன்னோட செட் ப்ராப்பர்ட்டி பாடிக்கு அவனோட ஸ்டீல் பாடி எப்படிச் சரியா வரும்? ம்… அழுத்தி பிடிச்சா நீ உடஞ்சி போய்டுவ. அவெ பலசாலி. " என்ற நிவி சிறிது இடைவெளி விட்டு,


"நான் எல்லா விசயத்திலயும் சேத்து‌ தான் சொல்றேன். இந்த மாதிரி ஆளுங்க கிட்ட நிதானம் இருக்காது. முரட்டு தனமாத்தான் இருப்பானுங்க. அதுலயும் கட்டில்ல சொல்லவே தேவையில்ல. " என்க, இப்போதும் பைரவி எதுவும் பேசவில்லை. 


"அடியே!! எதையாது பேசி தொலை. இல்லன்னா இந்த மாடு கண்டத பேசி உன்னோட ஹீரோவ ஆன்டி ஹீரோவா காட்சி படுத்திடுவா. " எனச் சொல்லி சாரு அவளை அடிக்க,


"ம்ச்...‌ என்ன சாரு?" என முகம் சுருக்கியவளிடம், மதுவின் நிபந்தனைகளை பற்றி கேட்க,


"எனக்கு மொத ரெண்டும் கூட ஓகே தான். பட் அடுத்த ரெண்டு தான் இடிக்கிது."



என்னதது என்றனர் மூவரும்.


தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி 

கருத்துகள்

கருத்துரையிடுக

pls share you review..

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...