அத்தியாயம்: 15
மதுசூதனன் பைரவியின் திருமண கதை. நான்கரை ஆண்டுகளுக்கு முன்.
"ஹலோ... மிஸ்டர் மதுசூதனன்? " என்ற பெண் குரல் இழுவையாகக் கேட்டது. அதைக் கேட்டதும் மது ஃபோனை ராக்கியிடம் திணித்து விட்டு நகர்ந்தான்.
“ஹலோ…” என ராக்கி வாயைத் திறக்கவும்,
" ஹாங்... மிஸ்டர் மதுசூதனன்.. நான் உங்க ப்ரெஃபைல்ல மேட்ரிமோனில பாத்தேன். அதான் கால் பண்ணேன். என்னோட பேரு... "
"ஒரு நிமிஷம்... ஒரு நிமிஷம்... நான் மதுசூதனனின் கிடையாது. நீங்க பேச நினைக்கிறது வேற ஒருத்தரு."
"பட் இது மிஸ்டர் மதுசூதனனின் நம்பர் தான? ப்ரெஃபைல்ல இந்த நம்பர் தான் இருந்தது. "
"நம்பர் அவரிது தாம்மா. ஆனா மெம்பர் வேற."
"ஓ... நீங்க யாரு?"
"என்னோட பேரு ராதா கிருஷ்ணன். சுருக்கி ராக்கின்னு கூப்பிடுவாங்க. மதுசூதனனோட ஃப்ரெண்டு."
" ஓ… ஹலோ… நான் பைரவி.. நான் எதுக்கு கால் பண்ணேன்னா... "
"மேட்ரிமோனில மதுசூதனன் ஃபோட்டோ பாத்திருப்பீங்க. பேசி பாக்கலாம் கூப்பிட்டுருக்கீங்க. சரியா… "
"இல்ல… மீட் பண்ணலாமான்னு கேக்க கூப்பிட்டேன்." என்க, ராக்கி ஒரு நொடி காதில் இருந்த செல்ஃபோன எடுத்து பார்த்து விட்டு மீண்டும் காதில் வைத்தான்.
"என்ன சொன்னீங்க? " நம்ம முடியாதவனாகத் திரும்ப கேட்டான் ராக்கி.
"நான் அவர மீட் பண்ணணும். அவர்கிட்ட இதைச் சொல்லி கூட்டீட்டு வாங்க."
" ம்...ம்...ம்.... வர்றேன்.." என ராக்கி எல்லா பக்கமும் தலை அசைத்தான்.
"இது என்னோட நம்பர். சன்டே மீட் பண்ணலாம். நான் ஃப்ரி தான். மெஸ்ஏஜ் பண்ணுங்க." என்று கூறி, வர வேண்டிய இடத்தை அவளே சொல்ல, ராக்கி அதிர்ந்து தான் போனான்.
ஏனெனில், இது போன்று மேட்ரிமோனில் பாத்து அழைப்பவர்களிடம் மது பேசுவதே இல்லை. ராக்கி தான் பேசுவான். ‘நான் மதுசூதனன் இல்லை.’ என்ற வார்த்தையிலேயே பலர் கடுப்பாகி கட் செய்து விடுவர்.
'பேச பிடிக்கல போல... அதா ஃப்ரெண்ட பேச சொல்றான்.' என மீண்டும் அழைப்பது இல்லை.
சிலர் அழைத்தாலும் மதுவைப் பற்றி மேம்போக்காக விசாரித்து விட்டு சென்று விடுவார். நேரில் சந்திக்கும் அளவுக்கு யாரும் நெருங்கவில்லை.
ஆனால் பைரவி நேரில் சந்திக்க வேண்டும் என்றதும் ராக்கிக்கு முகம் தெரியாத பைரவி தான் மதுவின் மனைவி என்ற நம்பிக்கை பிறந்தது.
ஞாயிறு...
காலில் விழாத குறையாய் ராக்கி மதுசூதனனை இழுத்துக் கொண்டு காஃபி ஷாப்பிற்கு சென்றான். அதுவும் அவள் வரச் சொன்ன சரியான நேரத்திற்கு. பன்ச்வாலிட்டி.. அதாவது நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பது. ராணுவ வீரர்களுடன் வளர்ந்த அவனுக்கு நேரம் முக்கியமானது.
ஆனால் அதைப் பற்றிய கவலை பைரவிக்குக் கிடையாது. அரைமணி நேரம் காத்திருக்க வைத்தாள்.
" ம்ச்... என்னடா இது.." என நண்பனை கடிய,
"கால் பண்ணேன் மச்சி... டிராபிக்காம்… "
"ஏன் முன்னாடியே கிளம்ப வேண்டியது தான.." எனப் பற்களை கடித்தான் மது.
மதுவிற்கு ஆர்வம் இல்லை. ஆனால் அவனுக்குப் சேர்ந்து வைத்து ராக்கி ஆர்வமாக இருந்தான்.
"உனக்கு யாருன்னு தெரியுமா மச்சி. பேரு பைரவிங்கிறத தவிர. "
"பைரவியா... யாரு அது?" என்றவனை விசித்திரமாக பார்த்தான் ராக்கி.
"டேய்… உன்னப் பாக்க வர்ற பொண்ணோட பேரு பைரவி. "
"பரவாயில்லை நல்லாத்தா இருக்கு பேரு." என்றவன் ஈடுபாடு இல்லாமல் இருக்க ராக்கி தான் தலையில் அடித்துக் கொண்டான்.
ராக்கி மதுவின் மேட்ரிமோனி ப்ரெஃபைல்லுக்குச் சென்று பைரவியின் ஃப்ரெண்டு ரெக்வெஸ்ட், புகைப்படம் எதாவது கிடைக்குமா எனப் பார்க்க, அப்போது பைரவியும் சாருவும் உள்ளே நுழைந்தனர்.
சுற்றி முற்றி தன் பார்வையைச் சுழல விட்டவளைத்தான் மதுவும் பார்த்துக் கொண்டு இருந்தான். அது தான் பைரவி என்று உறுதியாக தெரியாத போதும், மனம் அது பைரவியாக இருக்க வேண்டும் என ஓலமிட்டது. இருவரின் பார்வையும் நேருக்கு நேர் சந்தித்து சிக்கிக் கொள்ள,
"ஹாய் மிஸ்டர் மதுசூதனன். ரொம்ப நேரமா வெய்ட் பண்றீங்களா." எனப் பையூ புன்னகையுடன் கேட்க, அவளின் முகம் பார்த்த படி அமைதியாக இருந்தான் மது.
"ஸாரி ட்ராஃபிக் அதிகம். இல்லன்னா கரெக்ட் டயத்துக்கு வந்திருப்போம். " எனச் சாருவும் வருத்தம் தெரிவிக்க, ஆடவர்கள் இருவரும் குழம்பித்தான் போயினர் யார் பைரவி என்று.
ராக்கி தயங்கி தயங்கி பேச ஆரம்பிக்க, " இதுல யாரு மிஸ் பைரவி." என நேரடியாக கேட்டான் மது.
" நாந்தா.. " என்றவளின் சிரிப்பும், முகமும் அழுந்த பதிந்தது அவன் உள்ளத்தில்.
" பேசலாமா... தனியா… " என மது எடுத்த எடுப்பிலேயே சொல்ல, சாருவும் ராக்கியும் எழுந்து வேறு டேபிளுக்கு சென்று அமர்ந்தனர்.
" என்னோட பேரு ராதாகிருஷ்ணன்… ராக்கி.." எனச் சாருவைப் பார்த்து கரம் நீட்ட,
"எம்பேரு சாருலதா.” என்றவள் நீட்டி கரத்தை பற்றவில்லை.
"ஆக்சலி எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல. ஒரு பொண்ணு கூட தனியா உக்காந்து பேசி." என எப்பொழுது போல் பார்க்கும் பெண்களிடம் போடும் பிட்டை போட,
"ஆர்டர் பண்ணுவோம்மாண்ணா... பசிக்கிது. " என்றாள் சாரு.
"என்ன சொன்ன?"
"சாப்பிட ஏதாவது ஆர்டர்… "
"இல்ல… என்னை என்ன சொல்லி கூப்பிட்ட? "
"அண்ணான்னு…" என அவள் சொல்லி முடிக்கும் முன் டேபிளில் இருந்த டிஸ்யூவைக் கசக்கி தூக்கி எறிந்தான்.
"அதென்ன மொத மொற பாக்குற பையன அண்ணான்னு கூப்பிடறீங்க. அது கெட்ட பழக்கம்னு தெரிய வேண்டாமா! அண்ணனாம் அண்ணே.
அட்லீஸ்ட் வாங்க போங்கன்னு கூப்பிட்டிருந்தா கூட… அதை வேற மாதிரி டெவலப் பண்ணிருப்பேன். பட் அண்ணன்னு கூப்பிட்டு என்னோட ஹார்ட் ஹட் பண்ணிட்ட." என வராத கண்ணீரைத் துடைக்க,
"இல்லண்ணா.. "
"பாத்தியா… மறுபடியும் அண்ணேன்னு சொல்ற. இது தான் கூடாதுன்னு நான் சொல்றேன்." என்க,
"அது வந்துங்கண்ணா… "
"வேண்டாம்மா என்னோட ஹார்ட்டு ரொம்ப சிறுசு. அது அதிர்ச்சியான விசயம் தாங்காது. "
"தாங்கலன்னாலும் பரவாயில்லண்ணா.. " என்க, 'என்ன புசுக்குன்னு இப்படி சொல்லிட்டா..' என்பது போல் பார்த்தவனின் முன் தன் மோதிரத்தை எடுத்து காட்டி,
"எனக்குக் கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சிண்ணா. அவரத் தவிர மத்த எல்லாருமே எனக்கு அண்ணே மொற தான்.. வீணா பிட்டு போட்டு மனசுல கோட்டைக் கட்டிடக் கூடாதில்ல. அதான்..." என்றான் சாரு.
"பசிக்கிதுன்னு சொன்னேலம்மா… தங்கச்சிக்கி சாப்பிட என்ன வேணும். அண்ணே இப்பவே ஆர்டர் பண்றேன்." என நொடியில் சாரு தங்கையாக மாறிப் போனாள். இருவரும் ஆர்டர் செய்த உணவை மட்டுமல்லாது நட்பையும் சேர்ந்தே பரிமாறிக் கொண்டனர்.
பேச வந்த ஜோடி என்ன செய்கிறது...
"பைனாப்பிள் ஜூஸ்.. உனக்கு…" மது
"ம்... எனக்கும் அதுவே போதும்." என்றாள் பையூ. ஆர்டர் செய்த உணவு பரிமாறப்படும் வரை இருவரின் பார்வைகளும் பரிமாறப்பட்டது.
உடலை இறுக்கி பிடித்து வெள்ளை நிற டீ சர்ட். அதன் மேல் ஒரு கருப்பு நிற ப்ரேசர். செதுக்கப்பட்ட சிகை, தாடி கிடையாது.. மீசையும் அளவாக இருக்கும் படி வெட்டி வைத்திருத்தான். கண்கள்... அதை அவளால் பார்க்க முடியவில்லை. கருப்பு கண்ணாடி மூலம் தன் கூர் விழிகளை மறைத்திருந்தான் மதுசூதனன்.
அவனின் இதழ்கள் சொல்லும் எனக்கு புகைத்தல் குடித்தல் என எவ்வித கெட்ட பழக்கமும் இல்லை என்று. அடர்ந்த புருவம், திரண்ட மார்பு எனப் பார்வைக்கு கம்பீரமாக இருந்தான். 'அழகன்.. பேரழகன்.. ' என்றன பைரவியின் உதடுகள் தன்னாலேயே. அவள் மதுவை ரசிக்கும் பார்வை பார்த்தாள் என்றால் மது ஆராயும் பார்வை பார்த்தான் பைரவியை.
சராசரி உயரம். உடல் சற்று சதை போட்டிருந்தது. சின்ன கண்கள் தான். அதில் செவ்வக வடிவ பவர் கண்ணாடி. அவளின் பூசிய வட்ட வடிவிலான முகத்தில் கண்கள் சின்னதாக தான் தோன்றியது அவனுக்கு. இன்னும் கொஞ்சம் நீளமாவும் அகலமாவும் இருந்திருக்கலாம் என நினைத்தவனின் பார்வை கீழே இறங்கியது.
கன்னங்கள்… அந்த இரண்டும் வெட்டி வைத்த பன் போல் மிருதுவாக உப்பி இருந்தன. நாசி கூராக இல்லை என்றாலும் அழகாக இருந்தது. 'சைனா பீஸ்.. ' என்றன அவனின் உதடுகள். இதழ்களோ மெல்லிய கீற்றுகளாக ஆப்பிள் துண்டுகளை ஒன்று சேர்ந்தார் போல் சிவந்து கடிக்கத் தூண்டுவது போல் இருந்தது.
மொத்ததில் "டெடி பியர்.. லிட்டில் பாண்டா... " எனச் செல்ல பெயர் வைக்கும் அளவுக்கு இருந்தாள் பெண்.
"எதுக்காக என்ன கல்யாணம் பண்ணிக்க நினைக்கிற.." மது.
"வீட்டுல கல்யாணம் பண்ண சொல்லி ஒரே டார்ச்சர்... சரி பண்ணிக்கலாம்னு தேடுனப்ப உங்க ஃபோட்டோ பாத்தேன். பிடிச்சிருந்தது. அதான் பழகி பாக்கலாம்னு தோணுச்சி. நீங்க எதுக்கு என்னைப் பாக்க வந்திங்க. "
"சேம் டூ யூ.. பட் நான் உன்ன ஃபோட்டோல பாக்கல. இப்ப தான் ஃபஸ்ட் டயம் பாக்குறேன்."
"do you like me.." என ஆவலுடன் கேட்டாள் பைரவி. ஏனெனில் அவளுக்கு மதுவை மிகவும் பிடித்திருந்தது. அவனின் கர்வம் நிறைந்த பேச்சும், கெத்தான பார்வையும், ஆண்மை மிளிரும் முகமும் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவளுக்கு. தன்னைக் கவர்ந்தவனைத் தான் கவர்ந்திருக்கிறோமா என அறிய அவனின் பதில் எதிர்நோக்கி முகம் பார்க்க,
"I don't know.. " எனத் தோள்களைக் குளுக்கு வெளிப்படையாக சொன்னான்.
'இதுக்கு நாம என்ன ரியாக்ஷன் தர்றது... தெரியலயே. ' என்பது போல் முழிக்க அது மதுவின் உதடுகளில் குறுஞ்சிரிப்பை வரவைத்தது.
" ஷீ... எனக்குச் சில கண்டிஷன் இருக்கு. எனக்கு வரப்போற மனைவி இப்படி தான் இருக்கணும்னு. அத நிபந்தனைனு கூட சொல்லாம். இந்த கன்டிஷனுக்கு நீ ஒத்து வந்தா... நாம கல்யாணம் பண்ணிக்கலாம்." என்றான் நிதானமாக.
'கன்டிஷனா... ' எனப் புருவம் சுருக்கியவளிடம்,
"எஸ் கண்டிஷன் தான்.. " என ஒவ்வொன்றாக சொல்ல, பைரவி திருதிருவென முழித்தாள். இதெல்லாம் கன்டிஷனாய்யா என்பது போல் அவனைப் பார்த்து வைக்க,
"இந்த கண்டிஷன்ஸ் எப்படி? 'மிஸ்டர் மதுசூதனன் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளைக் கடை பிடிப்பேன். ' அப்படின்னு இருபது ரூபா ஸ்டாம் பேப்பர்ல எழுதி நாம ரெண்டு பேர் மட்டுமில்லாம, காட்சி கையெழுத்தும் போடணுமா? " என நக்கலாக கேட்க,
அதை உணர்ந்தவன், "அது உன்னோட இஷ்டம். எனக்கு நான் சொன்னத கண்டிப்பா ஃபாலோ பண்ற ஒருத்தி தான் மனைவியா வரணும். அது யாரா இருத்தாலும் ஃபாலோ பண்ணியே ஆகணும். "
"இது கொஞ்சம் ஓவர தெரியல. " எனக் கேட்க..
"my life… my way... என்னோட வாழ்க்கைல எங்கூட சேந்து முழு வாழ்க்கையையும் வாழுற ஒருத்தி தான் எனக்கு வேணும்னு நான் நினைக்கிறேன்.." என்க, பைரவி ஜூஸ்ஸில் இருந்த ஸ்ராவை ஆட்டிய படி யோசிக்கலானாள்.
இவன் சொல்வது போல் இருப்பதில் தவறில்லை. ஏனெனில் திருமணத்திற்குப் பின் பல பெண்களின் வாழ்க்கை இப்படித்தான் குறுகி சிறிய வட்டத்திற்குள் வந்து விடுக்கிறது. பலர் அதை விரும்பியே செய்தாலும், சிலருக்கு எப்படியாவது விடுதலை கிடைக்காத என ஏக்கம் இருக்கும்.
தானா விரும்பி அந்தக் கூட்டில் அமருவது வேறு. ஆனால் இவன் நிபந்தனையாகச் சொல்லும் போது… சற்று சிந்திக்க வேண்டி இருந்தது.
"உனக்கு நான் சொன்ன கண்டிஷன் ஓகேவா இல்லையான்னு... " என மது இழுக்க,
"இப்பவே சொல்லணுமா?" எனப் பதறி போய் கேட்டாள் பைரவி.
"இல்ல, ரெண்டு நாள் கழிச்சி கூட சொல்லலாம். ஒரு வேல நோன்னாலும் தைரியமா சொல்லிடு. உன்ன எந்த வகையிலயும் டிஸ்டப் பண்ண மாட்டேன். டேக் யுவர் ஓன் டயம். " என்றவன் எழுந்து சென்று விட்டான்.
அவனின் குரலில் இந்த ஆளுமையில் உன்னுள் புதைந்து கிடக்க எனக்கு எந்த நிபந்தனைகளும் தேவையில்லை எனச் சொல்லி கதறியது மனம். அவனுக்காக எதையும் செய்யும் பித்து நிலையை அடைந்திருக்கிறாள் பெண்.... ஓடி சென்று அவனை அணைத்து 'வா இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்... ' எனச் சொல்ல தோன்றியது.
சாரு தான் அவள் எதை பற்றியும் யோசிக்காமல் முடிவு செய்கிறாள் என்பதால், 'எந்த முடிவா இருந்தாலும் ரெண்டு நாளைக்கி அப்றம் சொல்றேன்னு சொல்லிட்டு வந்திடு... மாப்பிள்ளைய பத்தி முழுசா விசாரிச்சிட்டு. செட்டாவானான்னு சில டெஸ்ட் வச்சிட்டு கல்யாணத்துக்கு ஓகே சொல்லலாம்.' எனப் பல அறிவுரைகள் வழங்கித்தான் அழைத்து வந்தாள்.
அவன் சென்று பல நிமிடங்கள் கடந்து விட்டது. ஆனாலும் பார்வை விளக்க மனமின்றி வாயிலை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் பைரவி.
" ஏய்… பையூ... பையூ... " என அவளை உளுக்கினாள் சாரு.
"போதும்... ஃப்ரோஸன் குயினா உறைஞ்சி போகமா…என்ன சொன்னாருன்னு சொல்லு." என்க,
"எனக்கு எல்லாம் ஓகே.. இப்பவே சொல்ல சொன்னலும் ஓகே.. அவெங்கூடவே இருக்க ஓகே... மொத்ததுல ஓகே ஓகே..." என உலற,
"பையூ... என்னாச்சி உனக்கு.. ஏன் லூசு மாதிரி பேசுற... அடியே.. என்ன பாரு.. பாரு டி.. " எனக் கன்னத்தில் ஓங்கி அறைய, பைரவி அப்போது தான் கனவு உலகில் இருந்து வெளியே வந்தாள்..
"ஏன்டி அடிச்ச.."
"ம்ச்... அத அப்றம் சொல்றேன்.. இப்ப பாக்க வந்த பையன் என்ன சொன்னாரு. " எனக் கேட்க, அவள் நடந்தவற்றை சொன்னாள்.
அவனின் கண்டிஷன்களை கேட்ட பைரவிக்கு வராத கோபமும் ஆத்திரமும் அவளின் தோழிகளுக்கு வந்தது.
அப்படி என்ன கண்டிஷன் போட்டிருப்பான்னு உங்களுக்குத் தெரியுமா??
தொடரும் ...
💛அனிதா குமார்💛
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

madhu over ah tha poran
பதிலளிநீக்கு🤣🤣🤣
நீக்கு