முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

பனி 18


 

அத்தியாயம்: 18


"ராக்கி பாய்... " என பையூவும் சாருவும் ஒரு சேர கத்த, ராக்கி புன்னக்கைத்தானே தவிர அவர்களிடம் பேச முன்வரவில்லை.


ஏனெனில் அவன் டியூட்டியில் இருக்கிறானாம். வெரி ஸ்ரிட் ஆஃபிஸ்ஸர்.. என்பது போல் விறைப்பாய் நின்றான் அவன். 


"என்ன பிரச்சனை? " என வாட்ச் மேன்னிடம் கேட்க, அவன் இன்விடேஷன் இல்லாமல் வந்திருக்கின்றனர் என்றார். அவர்களிடம் யாரின் அழைப்பின் பேரில் வந்திருக்குறீர்கள் என்ற விசாரித்த ராக்கி, விஜியை வாசலுக்கு அழைத்துவர சொன்னான்.


" ஆனாலும் இது கொஞ்சம் ஓவரா தெரியல. எங்கள உங்களுக்கு தெரியும் தான. அப்றம் ஏன் உள்ள விடாம நிக்க வைக்கிறீங்க." பையூ இரு கரத்தையும் கட்டிக் கொண்டு சற்று கோபமாகக் கேட்க, சாரு ஆமோதித்தாள்.


" ‌என்னோட வேலைம்மா‌ இது. ஆக்சலி பாதுகாப்புக்குத் தான் வந்திருக்கேன். யார உள்ள விடணும் விடக்கூடாதுன்னு வாட்ச்மென்னுக்கு தகவல் போயிருக்கும். இந்த விசயத்துல நான் தலையிடவே‌ கூடாது. அந்த வகைல பாத்தா நான் என்னோட கடமய விட்டு லைட்டா நகந்திட்டேன். " என்க,


"பாய்… மது அண்ணா எங்க? அவரும் வந்திருக்காரா?" எனச் சாரு ஆவலாக கேட்க, பைரவி அவளை முறைத்தாள். ராக்கி பைரவியின் பார்வையைப் பார்த்து விட்டு,


"நீ கவலப்படாதம்மா அவெ வரல. நான் மட்டும் தான். அதுவும் கொஞ்ச நேரத்துக்கு மட்டும் தான் இங்க இருப்பேன்."


" ஏன்?" 


" ஏன்னா! இந்த பார்ட்டிக்கி ஒரு முக்கியமான வீஐபி வாரார். அவர் வந்து போற வரைக்கும் இங்க பாதுகாப்பு. அடுத்து அந்தாளு பின்னாடியே போகணும். " என்றவன் தன் பணியைக் கவனிக்க செல்ல பார்க்க, 


" இவரு தான் ராதாகிருஷ்ணனா! " என்றாள் நிவி. 


அவளுக்கு தெரியும் சாரு நடந்ததை சொல்லியிருந்தாள்.  இப்பொழுது தான் நேரில் பார்க்கிறாள்.


"எஸ் நாந்தா அது. ரொம்ப பெரிய பேரா இருக்குன்னு ஃபில் பண்ணக்கூடாதுன்னு ராக்கி யா அதச் சுருக்கி கிட்டேன். நீயும் பைரவி ஃப்ரெண்டா. ‌உன்ன நான் அன்னைக்கு ரெஸ்டாரன்ட்ல பாக்கலயே. சாறு ஏன் இந்த பொண்ண கூட்டீட்டு வரல. நாலே பேர கூட்டீட்டு வராம எதுக்கு நீ மாப்பிள்ள பாக்க வந்த. " என நடந்து சென்றவன் மீண்டும் வந்து பைரபியையும் சாருவையும் கடிய, இருவரும் புருவம் உயர்த்திப் பார்த்தனர். அதைக் கண்டு கொள்ளாது,


"By the way… I am Ratha Krishnan. what's your sweet name." எனத் தன் வழக்கமான பிட்டைப் போட்டு கரம் நீட்ட, நிவேதா முழித்தாள்.


'என்ன இவெ நமக்கு பிட்டு போடுறான்.' என.


"என்ன நிவி பாக்குற! நம்ம அண்ணா தான் கைய தைரியமா குடுக்கலாம்." என்றாள் பையூ.


" ஆமா ஆமா… தங்கச்சியோட பிடிச்ச கைய நாளைக்கி பொறுப்பா மச்சினன் கைல குடுக்க வேண்டியது நீங்க தா‌ன் அண்ணா…. "  எனச் சாரு அண்ணாவை ராகம் போட்டு இழுக்க,


" இதோ பாரு, அண்ணான்னு கூப்பிட்ட மறுபடியும் அந்த வாட்ச்மேன கூப்பிட்டு வெளில தூக்கி போட சொல்லிடுவேன். ஒழுங்கா போய்டு." எனச் சிறு கோபமாக திட்டி விட்டினான்.‌


"இவளயே அண்ணன்னு கூப்பிடாதங்கிறேன். இதுல துணைக்கி கூப்பிட ஆள் சேத்திட்டு இருக்கா பாரு." என ராக்கி முணுமுணுத்த படியே நடந்துசெல்ல,


" ராக்கி பாய், உங்க பேர சொல்லிட்டு. பொண்ணு பேர கேக்காம போறீங்க. " எனப் பையூ கத்த,


" எனக்கு தேவையில்லம்மா அது." என்றான் அவனும் கத்தலாக.


"சரி விடுங்க. ரெண்டோட சேத்து நாலு பேரும் உங்க தங்கச்சிங்க வரிசைல நின்னுக்கிறோம். எங்கல மறந்திடாதிங்க அண்ணா..‌" சாரு. சட்டென திரும்பி பார்த்தவன்,


" நாலா!... மூணு பேர் தான நிக்கிறீங்க." என அவன் எண்ணி முடிப்பதற்குள் விஜி வந்து நின்றாள், தன் தோழிகளை உள்ளே அழைத்துச் செல்ல.


'இந்தப் பொண்ணு கூட அழகாத்தா இருக்கு.' என நினைத்து அருகில் வருவதற்குள், சாரு, இவளும் உங்க தங்கச்சி தான் என்று அறிமுகப்படுத்தி செய்ய, திரும்பி சென்று விட்டான். அவனின் நடையை பார்த்து மூவரும் சிரிக்க,


"யாருடி அது?" விஜி.


"அதெல்லாம் அப்றம் ‌சொல்றோம். ஏன்டி ஃபோன எடுக்கல?" எனக் கேட்டு அவளைச் சுற்றி வளைத்தனர் தோழிகள்.


" ஸாரி டீ.. ‌ஃபோன சைலஸ்ல வச்சிருந்திருக்கேன். வெரி ஸாரி‌... நானே எதிர்பாக்கல, இவ்ளோ டைட் செக்யூரிட்டி இருக்கும்னு. ஸாரி..‌." என்க, ‌பெரிய மனதுடன் மன்னித்தனர் மூவரும்.


பெரிய தோட்டம் அது. எல்லா இடங்களிலும் வண்ண விளக்குகள் மின்ன, வருபவரை வரவேற்கும் விதமாத‌, சிவப்பு கம்பளம் விரித்து ஆங்காங்கே, நீலமும் வெள்ளையும் கலந்த பலூன் ஆர்ச்சும் இருந்தது. சிறு குழந்தைகள் விளையாட, டிராம்போலைன் என்ற குதித்து விளையாடும் மேடை இருந்தது. காற்று நிரப்பப்பட்ட பெரிய ரப்பர் சறுக்கலும், பந்துகளால் நிரப்பட்ட பெரிய தொட்டி என அனைத்தும் இருந்தது. 


பெரியவர்களையும் இளைஞர்களையும் கவரும் வகையில் இசை நிகழ்ச்சியுடன், மதுபானமும் பரிமாறப்பட உள்ளது. ஆங்காங்கே போடப்படிருந்த மேசையில்‌ கூட்டம்‌ கூட்டமாக அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். 


அனைவரும் மகிழ்வுடன் இருக்கு, விஜியின் முகமும் அவளின் அன்னையின் முகமும் கலையிழந்து இருந்தது.  


ஆசை ஆசையாய் பெற்று வளர்ந்த மகன், படிப்பைக் கூட  முழுதாக முடிக்காது, வேலைக்கு செல்லாது, ஏரியாவில் இருக்கும் வெட்டி பசங்களுடன் சேர்ந்து ஊர்‌ சுற்றி, திடீரென காதல் என்று வந்தான். சம்மதிக்க முடியாது என்ற பெற்றோரிடம் கேட்ட கூடாத‌ பல கேள்விகளைக் கேட்டு காதலிக்காகச் சொத்தை பிரித்து வாங்கி கொண்டு சென்று விட்டான் அவன். 


அவன் சென்ற போதாவது ஆண் துணை எனக் கணவன் இருந்தார். இப்போது அந்தக் குடும்பத் தலைவரையும் இழந்து விட்டனர் தாயும் மகளும். மகனின் அருவருக்கத்தக்க சில செயல்கள் காதில் விழுந்ததால் ஓராண்டுகளுக்கு முன் இதயம் தன் துடிப்பை நிறுத்திக் கொண்டது அவருக்கு. 


இருக்க ஒரு வீடு, சில நகைகள், வங்கியில் சிறிது பணம். அதை வைத்து மகளைக் கரை சேர்க்க நினைத்தவருக்கு உடலில் பிணி பிடித்துக் கொள்ள, மகளை அண்ணன் மகனுக்கு எனத் திருமணம் பேசி உள்ளார். வெளிநாட்டில் இருக்கும் அண்ணன் மகன் வந்ததும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது.


இப்போது மகனிடம் கையேந்தி அவன் தரும் பணத்தில் வாழ்ந்து வருகிறார். விஜி திருமணம் முடியும் வரை தனக்கென ஒரு வேலையை தேடிக் கொண்டு விடுதியில் தங்கியுள்ளாள். அன்னை மகனுடன் இருக்கிறார்.  


பேத்தி, மகன், மருமகள், ஆடம்பர வீடு என எதற்கும் குறைவு இல்லாமல் நலமுடன் வாழ்க்கை‌ செல்ல சந்தோஷம் தான். ஆனால் மரியாதை என்பது கிடைக்கவில்லை. 


மருமகள் துளியும் கண்டு கொள்வது இல்லை. மகன் வேலை இருக்கிறது என்று அதைக் கவனிக்க செல்ல, வீட்டில் தனித்து விடப்பட்டது போல் இருக்கும் அவருக்கு ஒரே ஆதரவு அவரின் பேத்தி. 


அவரின் வற்புறுத்தலாலும் விஜியின் அழைப்பாலும் தான் தோழிகள் வந்திருந்தனர். மற்றபடி விஜியின் அண்ணனைக் கண்டாலே இவர்களுக்கு பிடிக்காது.


"வாங்கம்மா… வா… ஏன் லேட்டா வர்றீங்க. காலைலயே வந்திருக்கலாம்ல. சிறப்பா கவனிச்சிருப்பேன். இப்ப பாரு கூட்டத்துல சரிய கவனிக்க முடியாம போய்டுச்சி. " எனச் சாருவின் கரத்தைப் பிடித்து விடாமல் குளுக்க, அவள் சிறு சங்கடத்துடன் கரத்தை உறுகிக் கொண்டாள். 


அடுத்து அவன் நிவியின் பக்கம் திரும்பி, " இன்னொரு நாள் நான் ஃப்ரீயா இருக்கும் போது எங்கயாது அவுட்டிங் போகலாம்." என்றவன் பையூவின் கரம் பற்ற வர, அவள் தன் புருவங்களை உயர்த்தி பார்த்தாள். அது 'விலகியை நில்..' என்பது போல் இருந்தது.  


அதையெல்லாம் கவனியாது விசாகன் முகமெல்லாம் பல்லாக மூவரையும் பார்த்து சிரித்துக் கொண்டே எதெததையோ பேசினான்.


அவனின் பேச்சு கேட்கும் படி இல்லை அவர்களுக்கு. அதனால் வழிஞ்சல் பேர்வழி என மூவரும் சேர்ந்து விகாசனுக்குப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.


தன் தோழிகளிடம் தன் அண்ணன் நடந்து கொள்ளும் முறையைக் கண்டு சங்கடமாக விஜி நிற்க, அதற்குள் வர வேண்டிய முக்கியமான விஐபி வர… சென்று விட்டான் அவன். 


" ஸாரி டி..‌. அவெ… அப்படித்தா... உங்களுக்கு தான் தெரியுமே." என விஜி தயங்கி தயங்கி பேச, நிவி வாயைத் திறக்கும் முன் இழுத்துச் சென்றாள் சாரு. நிவிக்கு கோபம். உள்ளே அனுமதிக்காதது. இப்போது தொட்டு தொட்டு பேசும் அவளின் அண்ணனின் செயல் என எல்லாமே ஆத்திரத்தை அதிகமாக்கியது. சாரு மட்டும் இழுத்துச் செல்லவில்லை‌ எனில் பொங்கி இருப்பாள். அதைக் கவலையுடன் கண்ட விஜியிடம்,


"அவள விடு விஜி. ஆமா யாரு வர்றது?" எனப் பையூ கேட்டாள்.


"A1 telecommunication company யோட எம்டி மிஸ்டர் சிராஜ். அண்ணாவோட பாஸ். அவருக்காக தான் இந்த ஸ்பெஷல் ஏற்பாடு. இவெ வருவான்னு தெரியாது. தெரிஞ்சிருந்தா நான் உங்கள இன்வெய்ட் பண்ணிருக்கவே மாட்டேன்." என்று சொல்ல, அனைவரின் கவனமும் சிராஜின் மீது படிந்தது.


முப்பது வயது இளைஞன் தான் அவன். ஆனாலும் அவன் அடைந்த உயரம் மிகவும் பெரிது. நிதானமின்றி அவனின் தொழில் மேலே மேலே என உயர்ந்து கொண்டே சென்றிருந்தது. 


பெண்களை வசீகரிக்கும் கலையில் சிறந்தவன். பெண் பித்தன். பொம்பள பொறுக்கி என்று அவன் பார்க்கும் பார்வையில் இருந்தே சொல்லி விடலாம். ஏனெனில் அவனின் கரம், தன் தோளில் தொத்திக் கொண்டு தொங்கிய திரை உலகின் பிரபல நட்சத்திர நடிகையின் ஆடையற்ற பளிங்கு இடையின் மீது அழுத்தமாகப் பற்றி இருந்தாலும், பார்வை வாஞ்சை இன்றி விசாகனின் மனையாள் மீதி தழுவி நின்றது. 


லோ ஹிப்... லோ நெக்... என உடலை மறைக்க வேண்டிய ஆடையில் அபாயகரமான தன் அழகைக் காட்டிக்கொண்டு இருக்க, அதைத் தன் பார்வையால் கூச்சமின்றி பருகிக் கொண்டிருந்தான் சிராஜ். 


தன் கணவன் அல்லாத ஒருவனுக்கு தன் அழகைத் தாராளமாகக் காட்டிக் கொண்டு நிற்கிறோம் என்ற எண்ணம் அவளுக்கும் இல்லை. அடுத்தவன் மனைவியைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்ற எண்ணம் சிராஜ்ஜிற்கும் இல்லை. தன் பாஸ்ஸின் பார்வை புரிந்த விசாகன் அவனின் காதுகளில் எதுவோ சொல்ல, விசாகனை கட்டி அணைத்து கொண்டான் சிராஜ் சந்தோஷமாக. 


இது தான் விசாகனின் தொழில். சிராஜ் கண் வைக்கும் பெண் யாராக இருந்தாலும், சிராஜ்ஜின் கட்டிலறைக்கு அழைத்து வருவது. சில நேரம் கடத்தி, மிரட்டி கூட இழுத்து வந்து சிராஜ்ஜின் காலடியில் போடுவான். 


சிராஜ்ஜின் சுகத்திற்குச் சம்மதிக்காதப் பெண்களை அபகரிக்க எனக் கூலிப்படையே வைத்திருக்கிறான். செந்தில், விசாகனின் மனைவி ஷீலாவின் தம்பி. அவன் தான் அந்த கூலிப்படை தளபதி. அவனுக்குக் கீழ் நூறு பேருக்கும் மேற்பட்டவர்கள் இருப்பர். 


கேக் வெட்டிய சிறுமி முதலில் அன்னைக்கு ஊட்ட, அவள் அதைப் பிட்டு சிராஜ்ஜிற்கு ஊட்டினாள். அவளின் சிரிப்பு ரசிக்கும் படி தோழிகளுக்கு மட்டும் தான் இல்லை. மற்றபடி வந்திருந்த விருந்தினர்கள் யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதெல்லாம் இங்க சகஜம் என்பது போல் நின்றனர். 


" ச்சீ… என்ன கருமம் டி இது. இவ ஊட்ட அந்தாளு அவ விர சூப்ப… ச்சீ… பாக்கவே முடியல. எதுக்கு டி இந்த மாதிரி ஃபங்ஷனுக்கெல்லாம் எங்கல கூப்பிடுற." என நிவேதா தான் திட்டி தீர்த்தாள். விஜி தாயை முறைக்க, அவர் கண்ணீருடன் வானத்தை வெறித்து பார்த்து படி அமர்ந்திருந்தார். 


"உன்ன, வா தனியா வீடு எடுத்து தங்கலாம்னு எத்தன தடவ கூப்டேன். வந்தியா நீ. அப்பாவுக்குக் கொல்லி போட மகெ வரல. எனக்காச்சும் கொல்லி போடட்டும்னு சொல்லி அவ வீட்டுலயே குத்து கல் மாதிரி வந்து உக்காந்திருக்க. 


ஆனா உன்ன உயிரோட வச்சி எம்மகெ கொளுத்திட்டு இருக்கான். ச்சீ... நீ வேணும்னா இந்தக் கண்றாவிய ரசிச்சி பாரு. என்னை விட்டுடு. இனி அவன அண்ணேன்னு சொல்லி என்னை அவெ வீட்டுக்கு கூப்பிடாத." என கோமதியைத் திட்டி விட்டு சென்றாள் விஜி. 


அவரும் என்ன தான் செய்வார். ஆண்களை அண்டி பிழைத்து பழகிய அவருக்குக் கணவனின் இழப்பு பேரிடி. சரி மகனையாவது அனுசரித்து நடப்போம். அப்பொழுது தான் மகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்‌, என்ற எண்ணத்தில் இந்தச் சாக்கடையில் காலடி எடுத்து வைத்தார்.


ஆனால் வந்த நாளிலேயே அவருக்குப் புரிந்து விட்டது, மகன் பார்த்துக் கொண்டிருக்கும் வேலை. நல்ல வேளையாக விஜி விகாசன் வீட்டிற்கு வர சம்மதிக்கவில்லை என்று நிம்மதி கொண்டவருக்கு, பேத்தியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பட்டது. பெண் பிள்ளை. இந்தச் சாத்தான்களுக்கிடையே வளர்ந்தால் சீரழிந்து போகுமே.  


பாட்டி, பாட்டி… எனத் தன் காலை சுற்றி வரும் ஐந்து வயது பேத்தியை இந்த அரக்கர்களிடம் விட்டு செல்ல மனமில்லாமல் பாதுகாப்பிற்கு உடன் இருக்கிறார். அதை எப்படி மகளுக்கு புரிய வைப்பது என்று தெரியவில்லை அவருக்கு.


கோமதியின் முகத்தைப் பார்க்க பாவமாக இருந்தது ஆனாலும் இங்கேயே இருந்தால் அந்த காம கொடூரனின் கண்ணில் பட நேரிடும். அதனால் நால்வரும் இடத்தைக் காலி செய்ய, விஜி தான் அழுது தீர்த்தாள் தன் அன்னையை எண்ணி.


"பெத்த பொண்ண விட மகெந்தா முக்கியமா போட்டான் அவங்களுக்கு. " என அழுதவளைச் சமாதானம் செய்து ஹாஸ்டலில் விட்டு விட்டு வந்தனர் மூவரும். நிவியின் வீடும் பையூவின் வீடும் அருகருகே தான். நிவியும் பைரவியும் பள்ளி காலத்து தோழிகள். 


சாருவும் விஜியும் காலேஜ்ஜில் இருந்து  பழக்கம். சாரு இப்போது பையூவின் வீட்டில் தங்கி இருக்கிறாள். நால்வரும் படிப்பை முடித்து விட்டனர். சாருவுக்கும் விஜிக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது. 


நிவியும் பையூவும் இப்போதைக்கு வெட்டி தான். கோட்சிங் க்ளாஸ் சென்ற பைரவியைச் சாந்தி தடுத்து நிறுத்தி வைத்துள்ளார்.


"ஆறு மாசம் தான். அதுக்குள்ள ஒரு பையன பாத்து கல்யாணம் பண்ணி வைக்கலன்னா. நான் மறுபடியும் க்ளாஸ்க்கு போய்டுவேன். " எனத் தற்காலிகமாக அவளின் பயிற்சி வகுப்பிற்கு லீவ் விட்டுள்ளாள் பையூ.‌


அவளுக்குப் பிடிச்ச பையனா மது இருப்பானா…



தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

பனி 17

கருத்துகள்

கருத்துரையிடுக

pls share you review..

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...