முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பனி 25

அத்தியாயம்: 25 மண்ணாசை பெண்ணாசை இரண்டும் பேராசை. அது அழிவு பாதைக்கு வழி காட்டும். ஆரம்பத்தில் வேகமாக முன்னேறி பேராசையெனும் ஓடத்தில் பயணிக்கும் போது சுகமாகவும் இன்பமாகவும் இருக்கும். சிறு சூறைக்காற்று வீச தொடக்கினால் அந்தப் போரசை படகு கவிழ்ந்து நம்மையும் மூழ்கடித்து விடும். வேலாயுதத்திற்கு அது ஏறுமுக காலம். கனகவேல் இறப்பின் போது அவருக்குச் சிறு வருத்தம் கூட இல்லை. உடன் பிறந்தவனின் மரணம் கண்ணீரை வரவைக்க வில்லை.  'அப்பாடா... சொத்த மூனா பிரிக்க வேண்டிய அவசியம் இல்ல. கண்ணா தான. அவனச் சமாளிக்க எனக்குத் தெரியாதா! எல்லாமே எனக்கும் எம்பிள்ளைக்கும் தான்.' என ஊரில் இருக்கும் சில ஏக்கர் நிலத்தையும் வீட்டையும் தன்னதாக மாற்ற நினைத்தார்.  அதற்கு ஏற்ற சூழ்நிலையும் வந்தது. விஷக்காய்ச்சல் வந்து கண்ணாயிரம் படுத்த படுக்கையாகிப் போக, மருத்துவத்திற்கு ஆயிரக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. தினமும் விவசாய வேலை பார்க்கும் அரசியிடம் ஏது அவ்வளவு பணம். பால் முகம் மாறாத இரு குழந்தை கையில் வைத்துக் கொண்டு அவர் உதவி கேட்காத ஆளே இல்லை. வாய் வார்த்தையாக 'நீ நல்லா இருக்கணும்ய்யா... ' எனப் புகழ்ந்த எந்த ஒரு ...

பனி 19

அத்தியாயம்: 19



சாரதா ஹோம்... அது ஒரு தொண்டு நிறுவனம்.


அங்கு அவ்வபோது சென்று நாங்களும் அன்னை தெரேசாவின் ஜீன்கள் தான் என்பதை நிறுபிக்க சேவை செய்வர் நிவியும் பையூவும். இன்றும் அப்படித்தான் வந்துள்ளனர். சாருவும் விஜியும் உடன் இல்லை. இருந்திருந்தால் நால்வரும் சேர்ந்தே வந்திருப்பர்.


"குட் மார்னிங் மேடம்... இன்னைக்கி எங்க போகப் போறோம்? என்ன பண்ண போறோம்?" பைரவி புன்னகையுடன் அந்த நிறுவனத்தின் மேலாளர் திருமதி மங்கையர்க்கரசியிடம் வினவினாள் பையூ.


"அடுத்த மாசம் நம்ம சார்பா விதைப் பந்து குடுக்க சொல்லி சாரதாம்மா சொல்லிருக்காங்க. அதுக்கான வேலையைத்தான் இன்னைக்கி பண்ணப்போறோம்." என்றார் அவர் புன்னகையுடன். 


விதைப்பந்து... 


இது பண்டைய எகிப்தின் விவசாய முறை ஆகும். இதைக் கொண்டு ஒரு காட்டையே நாம் உருவாக்க இயலும். அதற்கு நமக்கு தேவையானது களிமண், பசுஞ்சானம், நல்ல தரமான விதைகள். மண்ணையும் சானத்தையும் கலந்து நீர்விட்டு பிசைந்து பெரியதாகவும் அல்லாமல் சிறியதாகவும் இல்லாமால் இரண்டிற்கும் இடைப்பட்ட அளவில் உருட்டு, அதன் நடுவே விதைகளை வைத்து நிழலில் முதலில் உலர்த்த வேண்டும். பின் சூரிய ஒளியில் காயவிட்டு எடுத்தாள் விதைப்பந்து ரெடி. 


இந்தப் பந்துகளை நாம் செல்லும் இடங்களில் தூவி விடு சென்றால் போதும், விதைகள் வளரும் சீதோஷ சூழ்நிலை அமைந்து மழை பெரும் போது விதை முளைத்து வளரும். விதைகள் எறும்பு பறவைகளுக்கு இறையாகாமல் அந்த மண் காக்கும்.  


இன்றைய திருமண வைபோபங்கள், வளைகாப்பு, புதுமனை புகுவிழா போன்ற சில சுப நிகழ்ச்சிகளிலும், பள்ளி விழா, அரசு நடத்து சிறப்பு விழாக்கள் போன்றவற்றிலும் விதைப்பந்தை மொத்தமாக வாங்கி, வருபவரின் கையில் கொடுத்து, மரம் வளர்க்கும் ஆர்வத்தைத் தூண்டி மரத்தின் முக்கியத்தும் மறைமுகமாக எடுத்து சொல்லப்படுகிறது. அது போன்ற ஒரு ஆர்டர் தான் இப்போது அந்தத் தொண்டு நிறுவனத்திற்கு வந்துள்ளது‌‌.


பைரவிக்கு மரங்கள் நடுவதில் ஆர்வம் உண்டு. அந்த ஆர்வம் வந்தக் கதை இது‌. அவள் பள்ளியில் படிக்கும் போது என்சீசியில் இருந்தாள்‌. அப்போது அருகில் உள்ள கிராமத்திற்கு சேவை செய்ய எனப் பத்து மாணவர்களை பள்ளியில் இருந்து அழைத்து சென்றனர். பல பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வந்து அந்த ஊரைச் சுத்தம் செய்ய, அப்போது அங்கு,


“மரம் வளர்ப்போம்.. 


மனித குளம் காப்போம்...


Save greeny.. 


Save Earth…” 


என்பது போன்ற பதாகைகளைத் தாங்கிய படி ஒரு கூட்டம் போராட்டம் செய்து கொண்டிருந்தது. 


"எதுக்கு மிஸ் மரம் வளக்க போராட்டம் பண்றாங்க." எனப் பைரவி ஆசிரியரிடம் கேட்டாள்.


"இப்பல்லாம் போராடி தா‌ன் மரம் வளக்க வேண்டி இருக்கு. " என்றார் அவர். 


அந்த ஊரில் ஒரு தொழிற்சாலையில் வர உள்ளதால் இடங்களை வாங்க தனியார் நிறுவனங்கள் முயற்சிக்க, அதை தடுத்து, ‘அங்கு அரிய மரங்கள் உள்ளது. எனவே வேறு எங்காவது தொழிற்சாலையைத் திறங்கள்.’ என்று போராடிக் கொண்டிருந்தனர் மக்கள். அதில் பைரவி பார்க்கையில் ஓர் இளம் பெண் ஒருத்தி அமைதியாக மைக்கில் மரங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அந்தப் பேச்சு சிந்திக்கும் படி இருந்தது அவளுக்கு.


ரசித்து கேட்டுக் கொண்டிருக்கும் போது  ஒரு நியூஸ் சேனலின் வேன் ஒன்று அங்க வந்து நின்றது. அதிலிருந்து மைக்கும் கேமராவுமாக ஒரு பெண்ணும் இரு ஆணும் இறங்கி, தங்களைச் செய்தி சேகரிப்பாளர் என்று அறிமுகம் படுத்திக் கொண்டவர்கள். அந்த இளம் பெண்ணின் முன் மைக்கை நீட்டி கேள்வி கேட்க தொடங்கினர்.


"உங்களுக்குத் தமிழ்நாட்டு மேல அக்கறயே இல்லயா மேடம். நம்ம மாநிலத்துக்கு வர்ற ஒவ்வொரு ஃபேக்டரியையும் தடுத்து நிப்பாட்டுறதே உங்களோட வேலையா. ஏன் இப்படி நம்ம மாநிலத்த முன்னோர விடாம போராட்டம் பண்றிங்க. " என அந்தச் செய்தி சேகரிப்பாளர் பெண் கேட்க, 


"தொழிற்சாலைகள் ஆரம்பிச்சா தமிழ்நாடு வளந்திடும்னு யாரு சொன்னா மேடம்? " 


" முன்னேற்றம் வேற எப்படி வரும்? வேலை வாயில்லாத இளைஞர்கள் இருக்கிற மாநிலம் தா முன்னேறும்.. இங்க வரப்போற ஃபேக்டரியால எத்தன பட்டாதி இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்னு தெரியுமா? இது மூலமா எத்தன மக்கள் பசியாற சாப்பிடுவாங்கன்னு தெரியுமா‌? இப்படிப் போராட்டம் பண்றேங்கிற பேர்ல மக்கள மூளைச் சலவை செய்ய யாருக்கிட்ட எவ்ளோ பணம் வாங்குனிங்க? உங்களுக்கு சமூக விரோதிகளுக்கும் என்ன தொடர்பு?" எனக் கேட்க, அந்த பெண் புன்னகைத்தாள்.


"அப்ப எங்க போராட்டம் தப்புன்னு சொல்றிங்க சரியா?”  


"எஸ்... கண்துடைப்பு… டிராம்ன்னு சொல்றோம். " 


"அப்ப எங்கூட இன்னைக்கி முழுக்கு இருந்து இந்த நாடகத்துல பங்கு பெற உங்களை அன்போடு அழைக்கிறோம்." என இரு கரம் கூப்பி வரவேற்றாள். அந்தச் செய்தியாளர் திரும்பி கேமராமேன்னிடம்,


"நானும் போய் அந்தக் கூட்டத்துக்குள்ள உக்காந்துக்கிறேன். அப்பதான் என்னால அவங்க யாரோட தூண்டுதலால போராட்டம்னு உக்காந்திருக்காங்கன்னு தெரியும்." எனச் சொல்ல அந்தக் கூட்டத்தில் ஒன்றி போனர் செய்தியாளர்கள்.


அந்தப் பெண், செய்தி சேகரிக்க வந்தவர்களை அழைத்து, செல்ஃபோன் கேமரா என எந்த ஒரு எலெக்ட்ரிக் கேஜட்டும் இல்லாமல் அமர வைத்தாள். 


நிமிடங்கள் மணி நேரமாக மாறி பல மணி நேரம் ஓடியது. செய்திச் சேகரிப்பாளர் இருவருக்கும் கையை இழந்தது போல் இருந்தது ஃபோனை வாங்கி வைத்தது. கண்களை மூடி‌ முயன்று தங்களின் பொழுதை போக்க, பசி வந்து  விட்டது. சுற்றி முற்றி பார்க்க, ஒரு டீ கடை கூட இல்லை. அனைத்தும் மூடப்பட்டிருந்தது.


" மேடம்... இங்கச் சாப்பிட என்ன இருக்கு?" என அதிகாரமாக கேட்க, அவளோ செய்தியாளர்களிடம் கேமராவையும் மைக்கையும் கையில் கொடுத்து,


"உங்களோட உத்யோகம் மேடம். லட்சக்கணக்குல சம்பாதிச்சி குடுக்குற தெய்வம் மேடம் இது. இது கிட்ட கேளுங்க சாப்பாட்டு வரம் குடுக்கும். சாப்பிட ஏதாவதும் வரும். " என நக்கலாக சொல்ல, செய்தியாளர்கள் சண்டைக்கு நின்றனர். 


"என்ன மேடம் விளையாடுறிங்களா? " என எகிற,


"விளையாடல ஸார். சீரியஸ்ஸா தான் சொல்றேன். இந்த உலகத்துல நீங்க எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் பசின்னு வந்தா சாப்பாட்டத்தா தேடுவிங்க. செல்‌போனையோ! பணத்தையோ! கிடையாது. அந்தச் சாப்பாடு இந்த நிலத்துல இருந்து தான் கிடைக்கிது. 


ரொம்ப காஸ்லினு சொல்ற டைமென்ஸ் கூட நம்ம பூமிய தாண்டி வேற கிரகங்கள்ல இருக்குன்னு நாசா கண்டுபிடிச்சி சொல்லுது. டைமென்ஸ் மட்டுமில்ல தங்கம் மாறியான எல்லாமே, தண்ணீ உட்பட எல்லாத்தையுமே நாம விண்வெளில பாக்க முடியும். ஆனா உயிர்… இந்த மாறியான மரம்… பூமிய தவிர வேற எதுலயும் பாக்க முடியாது ஸார்.


நம்ம கிட்ட கிடைச்ச பெரிய பொக்கிஷம் இந்த மரம் செடி கொடி. அத அழிச்சி, அது மேல நீங்க கோட்ட கட்டி முன்னேறுறோம்னு சொல்றது அசிங்கமா இல்ல. நல்லா இருக்குற மண்ணையும் காத்தையும் பாலாக்கி, பாவைவனமா மாத்திட்டு சாப்பாட்டுக்கு என்ன செய்விங்க. கேப்சூல்னு சொல்ற மாத்திரைய வாங்கி முழுங்கப் போறிங்களா. "  எனக் காட்டமாக கேட்க, வந்திருந்தவர்களுக்கும் அது புரிந்திருக்க வேண்டும்.


மரங்கள் தான் உயிர்கள் அனைத்திற்கும் ஆதாரம். விலை மதிப்பிட முடியாத அதை வளர்ப்பது நாம் அதற்கு காட்டும் சின்ன விஸ்வாஸம். அழிக்காமல் இருப்பது பெரும் உதவியாகும். என்று


அந்தச் செய்தியைச்‌ சேனலுக்கு அனுப்பி  தொழிற்சாலை வர முடியாத படி அந்த மங்கை செய்யும் போராட்டத்திற்கு உதவி செய்தனர் செய்தி சேகரிப்பாளர்கள். 


" வாவ்… அக்கா சூப்பரா பேசுனிங்க. அப்படியே சிலிர்ப்பா இருந்தது. என்னோட பேரு பைரவி." என இத்தனை நேரம் பெண் சிங்கமென உறுமிக் கொண்டிருந்த மங்கையிடம் கரம் நீட்டினாள்.


"என்னோட பேரு சுடர்விழி. " எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள் அவள். 


அன்றில் இருந்து இன்று வரை பைரவியின் ரோல் மாடல் சுடர் தான். அவள் மூலமாக தான் சாரதா தொண்டு நிறுவனம் அறிமுகமானது. வாரம் ஒரு முறையேனும் அங்கு சென்று அவர்களின் கானகம் உருவாக்குவோம் என்ற லட்சியத்தில் தன்னாலான உதவியைச் செய்வாள். தன்னை மறந்து விடும் அளவுக்கு அதில் ஒன்றிப் போனாள் பெண்.


இன்றும் மதுசூதனன் என்ற ஒரு ஜீவனை மறந்து அந்த வேளைகளில் மூழ்கிப் போகியிருந்தாள் அவள். 


" பையூ, இதுல சில குரோட்டன்ஸ் இருக்கு. இத சிவா நர்ஸரில வைச்சிட்டு போயேன்.‌" எனப் பைரவி புறப்படும் நேரம் தக்காளி பெட்டி போல் இருந்த, பெட்டி நிறைய கருப்பு நிற பையில் வளர்க்கப்பட்டு வரும் அழகுச்‌செடிகளை பைரவியின் சாப்பரில் மங்கையர்கரசி ஏற்றினார்.  


"பாக்கவே இந்தச் செடி க்யூட்டா இருக்கு. " என ஆசையுடன் அதை வருடிக் கொடுத்தவள் நிவியுடன் புறப்பட்டு சென்றாள்‌ நர்சரிக்கு. 


அது ஒரு காம்ப்ளக்ஸ். அங்கு தான் சிறு சிறு அழகு செடிகள் முதல் அரியவகை மூலிகை செடிகள் வரை வளர்த்து விற்கும் நர்சரி கார்டன் உள்ளது. அங்கு தான் பைரவி மதுவை சந்தித்தாள். அவள் விருப்பியது போல் எதார்த்தமாக நடந்த சந்திப்பு அது... அவளின் வாழ்கையில் மறக்க முடியாத சந்திப்பாக மாற்றியிருந்தான் அவன்.


ஐந்தடுக்கு கொண்ட அந்த காம்ப்ளக்ஸ்ஸில் பைரவி மூன்றாவது தளத்தில் இருந்த நர்சரியின் வாசலில் நின்று கொண்டிருந்தாள். 


"நிவி சீக்கிரம்... " எனக் கத்திக்கொண்டே... 


"டூ மினிஸ்டர் டி. எவ்வீட்டுல இருக்குற ரோஜாக்கு உரம் வாங்கணும். கொஞ்சம் வெயிட் பண்ணு." எனக் கூறி நிவி வர மறுக்க, பையூ சிறு எரிச்சலுடன் அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து கொண்டு வேடிக்கைப் பார்க்க தொடங்கினாள்.   


பல இளம் ஜோடிகள் தங்களின் இணையுடன் பொழுதை இனிமையாக கழிக்க, அப்போது தான் நினைவு வந்தவளாக சட்டென நேரத்தை பார்த்தாள். மணி நான்கு ஐம்பது என்று காட்டியது.


"இனி அவனப் பாக்க முடியாது. அவ்வளவு தா‌ன்.‌‌ அவெ எனக்குக் கைக்கு எட்டாத கனி. ஐ ரியலி மிஸ் யூ மிஸ்டர் ஆல்கஹால். பேரு மட்டுமில்ல ஆளும் பாக்க பாக்க போதையாத்தா இருந்தான். இனி எனக்கில்ல அவெ. " என நினைத்து மனத்தை சமாதானம் செய்ய, மனம் கீழே பார் என கட்டளையிட்டது.


அவன் உன் அருகில் தான் இருக்கிறான் என இதயம் சொல்ல கண்கள் பரபரத்தன மதுசூதனனை காண. அவள் உள்ளூணர்வு அவளை ஏமாற்ற வில்லை. சரியாக அவன் ஒரு கடையில் இருந்து வெளியே வந்து அவன் இருப்பை  அவளிடத்தே காட்டி கொடுத்து விட்டான்.


மதுசூதனன்… 


‘நம்ப முடியவில்லை. அவனா அது.’ எனக் கண்களைக் கசக்கி உறுத்து விழிக்க, அவன் தான் என்றது கண்களும். ஒரு வித திகைப்போடு அவனைப் பார்த்துக் கொண்டே நின்றாள் பெண். 


"ஒரு ஷூ வாங்குறதுக்கு ஓராயிரம் கட ஏறி இறங்க வச்ச ஆம்பள நீயாத்தா இருப்ப. பொதுவா பொண்ணுங்களுக்கு தான் ஷாப்பிங் பிடிக்கும். நேரம் போனதே தெரியாம, ஒவ்வொரு கடைக்குள்ளையும் போய் எல்லாத்தையும் இறக்கி காட்ட சொல்லிட்டு, எதுவுமே நல்லா இல்லன்னு எங்கத்த பொண்ணுங்க செஞ்சி பாத்திருக்கேன். ஆனா அவளுகள விட நீ ரொம்ப மோசம் டா. " ராக்கி. 


"ம்ச்… நமக்குப் பிடிச்ச மாதிரி இருந்தாத் தான் அதை யூஸ் பண்ண மனசு வரும். நீயோ அல்ல அந்தக் கடக்காரனோ சொல்லி காட்டுற ஷூ வ நான் வாங்கிக்கிட்டேன்னு வை. அது ஒரு ஓரமாத்தா கிடக்கும். யூஸ் பண்ண பிடிக்காது. என்னோட எல்லா திங்கஸும் எனக்குப் பிடிச்ச மாதியி தான் இருக்கணும். " மது.


" ஷூ கூடவா டா." 


"ஆமா... என்னோட லைஃப்ல எல்லாமே எனக்குப் பிடிச்சதாத்தா இருக்கணும். எவ்ரிதிங் இஸ் மை கண்ட்ரோல்." என்றவனை ஏற இறங்க பார்த்த ராக்கி,


"உடுப்பி ஹோட்டல்ல வெரைட்டி தோச ஆர்டர் பண்ற மாதிரி நீ உ உட்பிய ஆர்டர் பண்ணும் போதே நினைச்சேன்… நீ ஒரு வித்தியாசமான கிரியேச்சர்னு.‌ நல்ல வேளை இன்னும் இவனுக்கு எதுவும் அமையல." என முணுமுணுத்தபடியே ராக்கி முன்னாள் நடக்க, மது சட்டென நின்று விட்டான். பைரவி வீசிய காதல் அலை மதுவை தாக்கி விட்டது போலும். நிமிர்ந்து மாடியில் இருந்து தன்னையே வைக்க கண் வாங்காமல் எட்டி பார்த்தபடி நின்ற பைரவியை கண்டான் மது. இருவரின் பார்வையும் ஒருசேர மோதிக் கொள்ள, பெண்ணவளின் தேகம் சிலிர்ப்பதை ஆடவனால் உணர முடிந்தது. சில நொடிகள் அப்படியே நின்றான்.


" என்னடா நின்னுட்ட. கால்ல ஆணி குத்திடுச்சா என்ன? " என்றவன் நண்பன் பார்வை சென்ற திசையைப் பார்க்க,


"ஐ... நம்ம தங்கச்சி. " எனச் சந்தோஷமாகக் கத்தினான்.


"யாருக்கு தங்கச்சி?" என்ற மதுவை இப்போதும் ஏற இறங்க பார்க்க மட்டும் தான் முடிந்தது ராக்கியால்.


"யார நமக்கு தங்கச்சின்னு சொன்ன?" என மீண்டும் மிரட்டலாகக் கேட்க, "அது எனக்கு தான்டா. நேத்து தான் புதுசா சில தங்கச்சிங்கள அப்பாய்ண்ட் பண்ணே. அதுல மொத தங்கச்சி‌ பேரு பைரவி." எனச் சிறிய குரலில் சொல்ல,


‘அந்தப் பயம் இருக்கட்டும்.’ என்பது போல் பார்த்தவன் வெளியே செல்லாது படிக்கட்டை நோக்கி நடந்தான்.


"இவனுக்கு என்னாச்சி? ஏன் இப்படி வித்தியாசமா நடந்துக்கிறான். போய் பைரவிட்ட பேசப் போறானா! ஐய்யையோ அப்படி பேசிட்டான்னா இந்த மழ காலத்துல புயல் வந்து சென்னை முங்கிடிடுமே. நான் போய்க் காப்பாத்தறேன்." என்றபடி மதுவைப் பின் தொடர்ந்து படிக்கட்டில் ஏறி சென்றான். 


சென்னையைக் காப்பாற்றவா! பைரவியை மதுக்கிட்ட இருந்து காப்பாற்றவா! இல்ல அவளுக்குப் பக்கத்துல வந்து நின்றவளைக் கரெக்ட் பண்ணவா!  பாத்து தெரிஞ்சிப்போம்... 

 தொடரும் ...



💛அனிதா குமார்💛


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி

பனி 18

பனி 20

கருத்துகள்

கருத்துரையிடுக

pls share you review..

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...