முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

பனி 22

அத்தியாயம்: 22


நமக்குப் பிடித்தவர்களை... 


நினைக்கும் போது… 


முகம் மட்டுமல்ல... 


மனதும் புன்னகைக்கும்… 


மதுவின் உதடுகளும் புன்னகையில் நிறைந்திருந்தன. தன் மனம் கவர்ந்த, தன்னைக் கொள்ளை கொண்ட மாதுவை நினைக்கும் போது தன்னுள் உண்டாகும் உணர்வுக்களுக்கு என்ன பெயர் வைப்பது? இதயம் தரையில் இட்ட மீனாய் துடித்து தன்னவளை அள்ளிக் கொள்ளச் சொல்லி கட்டையிடுகிறதே இதன் பொருள் என்ன?


உடலில் உள்ள ஹார்மோன்கள் அனைத்தும் அவள் ஒருத்தியின் அருகாமையில் அளவில்லாமல் சுரந்து, தன்னை நிலையில்லாது கட்டுபடுத்த இயலாது, மலையின் உச்சியில் இருந்து சரியும் சிறு கல்லை போல் சிதறி  ஓடுகிறதே இதன் காரணம் என்ன? காதலா!! அதில் சிறிதும் நம்பிக்கை இல்லை அந்த இருபத்தி ஏழு வயது ஆண் மகனுக்கு. 


எத்தனையோ பெண்களைக் கடந்து வந்துள்ளான். காதல், காமம் என இரண்டையும் தன்னிடத்தே காட்டி பழக துடித்த பெண்களுக்கு மத்தியில் தோன்றாத உணர்வு, இவளிடம் வருகிறது என்றால்.. அது காதல் தானா! 


ஆண், பெண்ணிடம் இருக்கும் பாலின ஈர்ப்புக்குப் பெயர் காதலா! அவர்களுக்குள் இருக்கும் அன்பும் அக்கறையும் இணைந்து பல ஆண்டு வாழ வேண்டும் என்ற ஆசைக்கு பெயர் காதலா! அப்படி எனில் நான் பைரவியை காதலிக்கிறேனா!! 


இல்லை… காதல் எல்லாம் இல்லை... இது ஒரு தேவை… அவளின் உடல். ம்.. உடல் தான்... மோதிய கணத்தில் இருந்தே அவனை மோகம் கொள்ள வைத்தது அவளின் பட்டுடல். இடையை அழுத்திய கரங்கள் உணர்ந்த மென்மை. ஆடை மூடி பாகங்களில் மென்மையையும் அவளின் பெண்மையையும் சோதிக்க நினைத்தது. 


அதற்கு உரிமை வேண்டும். அதைத் திருமணத்தால் மட்டுமே தர முடியும். இதுவரை தூண்டப்படாத அவனின் ஆண்மையைத் தூண்டி விட்டு சென்றவளின் பெண்மை வேண்டும். அவனுக்கே அவனுக்கு என அவள் வேண்டும். 


காதல் என்ற ஒன்றை உணரும் முன் காமத்தைப் பருகிவிட துடித்தது ஆணின் உள்ளம். 


தன்னைப் பார்க்கும் போதெல்லாம் பிரகாசித்த பைரவியின் முகத்தில் வந்த பூரிப்பு, அவனுள் எதேதோ செய்வதை உணர்ந்தான். இதுவரை அனுபவித்திடாத அவஸ்தைகள் அது. எல்லாம் புதிதாகத் தெரிந்தது. அவனின் மனம் அவளை நாடியதோ இல்லையோ உடல் வேண்டும் என்று தவித்துக் கொண்டு இருக்கிறது. பைரவிக்காக. 


இரண்டே சந்திப்பு. முழுதாக ஒரு மணி நேரம் கூட கிடையாது. அதற்குள் இத்தனைப் பித்தனாக மதுவை மாற்றி விட்டாள் நுண்ணிடையாள். அதை எண்ணியவனுக்கு மெல்லிய புன்னகை உதயமாக தன்னவளைத் தேட தொடங்கினான். சமையலறையில் தாயிடம் சத்தமின்றி முணுமுணுத்து கொண்டிருந்தவளைக் கண்டவன் எழுந்து சென்றான். 


" இங்க washroom எங்க இருக்கு ஆன்டி? " என்றபடி சாந்தி தந்த தட்டில் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து நிற்க, 


"என்ன தம்பி இதெல்லாம்! நீங்க போய் எடுத்திட்டு. குடுங்க. ஏய் பைரவி தம்பியக் கூட்டிட்டு போய் வாஷ்ரூம காட்டு." என மகளை பணித்தார்.


'கூட்டுட்டு போய்க் காட்ட அதென்னா தாஜ்மகாலா! ரெண்டே ரெண்டு பெட்ரூம் வச்ச வீடு. ரெண்டு ரூம்ல எந்த ரூம்ல நுழஞ்சாலும் பாத்ரூம் இருக்க போது. அதுக்குப் போய் என்னை விரட்டுது இந்தம்மா.'  என முணுமுணுத்தாள். 


"நான் உங்கிட்ட பேசணும்.. தனியா..  இப்ப போலாமா… " என்க, சாந்தி சிறு வெட்க சிரிப்புடன் நகர்ந்து சென்றார்.


"என்ன பேசப் போறீங்க?" பைரவி.


"இங்க வச்சே தான் பேசணுமா." என்றான் கண்களால் தங்களைக் கவனித்துக் கொண்டிருந்த ஜெயாவையும் சைந்தவியையும் காட்டி. அவனைத் தன் அறைக்கு அழைத்து சென்றாள்.


அவனின் பாசையில் சொல்ல வேண்டும் என்றால் அது டஞ்சன். அதாவது வேஸ்ட் எனத் தூக்கி போட வேண்டிய பொருட்களை அடுக்கி வைத்திருக்கும் ஒரு அறை. அப்படித்தான் அவன் சொல்வான் என யோசிக்காது முதலில் தன் அறைக்கு வந்தாள். கதவைத் திறக்காது திரும்பி அவனிடம், "நாம மொட்ட மாடில நின்று பேசலாமா?" என்றாள்.


"மொட்ட மாடில பகல் பதினொரு மணிக்கு நிலா காயாது. வா... " எனக் கதவை திறந்தவன் நிச்சயமாக அதிர்ந்து விட்டான். 


"என்னதிது. " 


"என்னோட ரூம்." என்றாள் சின்ன குரலில்.


" வாட்... ரூமா... இத ரூம்முன்னு சொன்னா அவெ குருடனாத்தா இருப்பான்." என்றபடி உள்ளே செல்ல, அவள் புசுபுசுவென மூச்சு விட்ட படி அவனைப் பின் தொடர்ந்து சென்றாள்.


உள்ளே வந்ததும் நிஜமாகவே அவளுக்கும் அப்படித்தான் தோன்றியது.


 'ச்ச.. பெட் ரூம் வரைக்கும் வருவான்னு தெரிஞ்சிருந்தா கொஞ்சம் நீட்டா ஒதுக்கியாது வச்சிருந்திருக்கலாம்.' என்ற எண்ணம் தோன்ற, இறைந்து கிடந்த துணிகளைப் பரிதாபமாகப் பார்த்தாள்.


சாந்தி கொடுத்துச் சென்ற சேலை பிடிக்காது, வேறு எந்தச் சேலை கட்டலாம்  என யோசித்து, பீரோவில் உள்ள அனைத்து ஆடைகளையும் அள்ளி கட்டிலில் வீசிய இருந்தாள் பைரவி. 


"ஒரு டூ மினிட்ஸ்." என்றவள் உடையை எடுத்து மடிக்காது பீரோவில் திணித்தாள். அதை கைக் கட்டுக் கொண்டு சுவற்றில் சாய்ந்து நின்று பார்க்கலானான் மது. 


வேகவேகமாக அள்ளி அள்ளி அவள் வைக்க அது உள்ளே இருக்காது கீழே குத்திக்க, அதை பெருமூச்சி விட்ட படி மீண்டும் அள்ளி வைக்க… என அவள் படும் அவஸ்தையை ரசித்தவன்‌, தன் பார்வையால் அந்த டஞ்சனை அளந்தான். 


பெயருக்குக் கூட ஒரு ஒழுங்கு முறையே‌ இல்லை. எல்லாம் கண்டபடி கிடந்தது. உடைகள் மட்டுமல்ல அங்காங்கே சின்ன சின்ன பொம்மைகள், பந்துகள் எனச் சிறு பிள்ளைகளின் விளையாட்டு சாமான்கள் இருந்தன. அதில் அவனைக் கவர்ந்தது என்றால் அந்தச் செம்பு சாமான்கள் தான். அதில் சமைத்து உண்டுள்ளாள் என்பதை சொல்வது போல் அடுப்பு கருகி இருந்தது. 


அதை எடுத்து பார்த்தவனின் கையில் இந்த கரி அப்பிக் கொள்ள, ' ஓ காட்.. ' என்றவன் கையை கட்டிலில் கிடந்த துண்டில் துடைத்தான். அது ஈரமாக கிடந்தது. 'ஈரத் துண்ட பெட்ல போட்டிருக்கா பாரு.' என அதை எடுக்கும் போது தான் அதைக் கண்டான்‌. 


பார்க்க ஆள் டெடி பியர் மாதிரி புஸ் என இருந்தாலும், அவள் ஒரு  டெடி பியர் பொம்மையை அணைத்து கொண்டு தான் உறங்குகிறாள் என்பதை சொல்வது போல் ஆள் உயர கரடி பொம்மை ஒன்று கட்டில் கிடந்தது. 


மேஜையின் மீது கத்தரிக்கோலும், கிழிஞ்ச துணிகளும் இருந்தன. ஏன் என்று சென்று பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது. பார்பி டாலுக்கு உடை தைத்து போட்டிருக்கிறாள். சிரிப்புடன் அந்த பொம்மையை எடுத்து பார்த்தவன்‌, 'பொம்மைக்கு கூட ஒழுங்கான டிஸ் போட்டு விட்டிருக்கா. ' என நினைத்து பார்த்தவனின் கண்களுக்கு அந்த வளையங்கள் சிக்கின. 


முதல் முதலில் அவனைப் பார்க்க வந்த போது அணிந்திருந்து பெரிய ஊஞ்சல் வடிவிலான வளையம் அது. அதுமட்டுல்ல, ஒரு பெரிய டப்பா நிறைய கம்மல்கள் தான் இருந்தன. அனைத்தும் அவளின் தோளைத் தெடும் அளவுக்கு நீளமானது. 


இப்போது என்ன அணிந்திருக்கிறாள் என திரும்பி பார்க்க, ஜிமிக்கி அணிந்திருந்தாள். அது அவளின் தோளைத் தொட்டு உறவாடும் போது சிறு பொறாமை எழுந்தது. கூடவே வியர்வைப் பூத்திருந்த அந்த காது மடலும், சேலையைத் தூக்கி சொருக்கிக் கொண்டு, மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்தவளின் இடையும், அவனை வா வென அழைப்பது போல் இருந்தது. ஒரு பக்கமாக தெரிந்த அவளின் பெண்மையின் பாகங்கள் மதுவைக் கின்னத்தில் ஊற்றி மதுவின் தொண்டைக்குள் சரித்தது போல் போதை தந்து அவளை அருகில் செல்ல வைத்தது.


"உனக்கு கம்மல்னா ரொம்ப பிடிக்குமா?" என ஒரு வித குரலில் கேட்டான். 


வெகு அருகில் கேட்ட அவனின் குரலில் சற்று பயந்து போனவள், திரும்பி பார்த்தாள்.


"ம்... ரொம்ப பிடிக்கும். தங்கம், வெள்ளி, மெட்டல், பிளாஸ்டிக்ன்னு எதுல இருந்தாலும் புது டிசைனா இருந்தா முதல் ஆளா போய் வாங்கிப்பேன். " என்க, அவளைக் குறுகுறுவென பார்த்தபடி நின்றான் மதுசூதனன்.


மன்னவனின் பார்வை தாளாது வெட்கம் வந்து விட, முகம் திருப்பினாள் பெண். அதைப் பொறுக்க முடியாது அவளை நெருங்கி தன் முகம் பார்க்க செய்தான் ஆடவன்.


நெற்றியில் பூத்திருந்த வியர்வைத் துளிகளைத் தன் இதழ்களால் ஒற்றி எடுக்க சொல்லி மனம் உந்த, அதற்கு நான் விட மாட்டேன் என்பது போல் குளிர்ந்த காற்று வந்து அவளின் நெற்றியின் மீது மோதி படர்ந்திருந்த முடிக்கற்றைகளைப் பறக்கச் செய்து, வியர்வை துளிகளைத் துடைத்து எடுத்துச் சென்றது. 


ஏசி காற்றில் வாழ்ந்தவனுக்கு குளுமையான இயற்கை காற்று கிளர்ச்சியைத் தந்திருக்க வேண்டும். கூடவே தான் செய்ய நினைத்த பணியை, தென்றல் காற்று செய்ததில் பொறாமையும் எழ, அவனைக் கவர்ந்த பெண்ணவளின் கன்னத்தில் தன் இதழ் பதித்தான். 


முதல் முத்தம். அவனின் ஆடை கூட அவளைத் தீண்டவில்லை. பெண்ணவளின் வாசம் நாசியை நிறைக்க சிறிதளவு இடைவெளியில் மதுவின் இதழ்கள் மட்டும் அவளுடன் உறவாடியது.‌ அந்தப் பஞ்சு மிட்டாயை விட மனமில்லாது மீண்டும் மீண்டும் தன் முத்தங்களை முத்திரை போல் பதித்துக் கொண்டே இருந்தான் மதுசூதனன்.


தன் மனம் கவர்ந்தவனின் நெருக்கம் பைரவியை கிறங்க செய்ய, " do you love me.. " என ஏக்கம் நிறைந்த குரலில் கேள்வியாய் அவனின் காதலை அவனிடம் கேட்டாள் பெண்.


அவள் தான் கண்ட நாள் முதலே காதல் செய்கிறாளே. ஆனால் மதுவின் குணம் தெரியாது அதை வளர்க்க விரும்பவில்லை. தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த அவனுக்குத் தன் மீது காதல் இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். 


ஒரு வேளை தன்னைப் போலவே அவனும் காதல் செய்கிறான் என்றால், அவனின் நிபந்தனைகளுக்குச் சம்மதம் சொல்லி, அவனிடம் அடங்கி திருமணம் செய்து கொள்வதில் எவ்வித தயக்கமும் இல்லை. 


ஆனால் காதல் இல்லாது தன் ஆதிக்கத்தாலும் கர்வத்தாலும் தன்னைத் திருமணம் செய்து கொள்ள முன்வருகிறான் என்றால், அது யோசிக்க படவேண்டிய ஒன்று. பதிலை எதிர்நோக்கி மதுவின் முகத்தையை பார்த்தாள். 


"No... எனக்கு லவ்வு மேல இப்பயும் முழுசா நம்பிக்கை இல்லை." என்றான்.


'என்ன சட்டுன்னு இப்படி சொல்லிட்டான். அன்னைக்குச் சொன்ன மாதிரி I don't know..ன்னு சொன்னா கூட, பரவாயில்ல. சிஸ்ஸர வச்சி வெட்டி விட்டு மாதிரி இல்லன்னு சொல்லிட்டான். ' என நினைத்தவள், அவனின் கரத்தைத் தட்டி விட்டு விட்டு,


"அப்பறம் எதுக்கு வந்து பொண்ணு கேக்குறிங்க? என்னை விருப்பாத ஒருத்தர கல்யாணம் பண்ணிக்க எனக்கு விருப்பமில்ல." என்றுவிட்டு அவன் புறம் முதுகு காட்டி நிற்க, பெண்ணவளை விலகளை ஏற்காது அவளைத் தன்னோட இணைத்து வாரி அணைத்தான் மது. 


"லவ் தான் இல்லன்னு சொன்னோன். பட் என்னோட மனைவி எனக்கு ரொம்ப பிடிக்கும். அது நீயானா ரொம்ப ரொம்ப பிடிக்கும். "  என்றவன் கிறக்கமாக அவளின் வென் கழுத்தில் முத்தமிட, பெண்வள் தேகம் சிலிர்க்க அவனை விட்டு விலகாது தவித்தாள். 


"நான் இன்னும் உங்க கன்டிஷனுக்கு ஓகே சொல்ல."


"இனியும் நீ ஓகே சொல்லணும் அவசியம் இல்லை. உன்னோட கண்ணே சொல்லிடுச்சி. எல்லாத்துக்கும் சம்மதம்னு. " என்றவன் தன்னை மயக்கும் பெண்ணவளின் நேத்திரங்களில் இதழொற்ற,


தன் உணர்வுகளுடன் அவன் விளையாடுகிறான் என்பதை உணர்ந்து அவனின் பிடியில் இருந்து விலகி நின்றாள். ஆடவனுக்கோ பெண்ணவளை விட்டு விலக தோன்றவே இல்லை. அவளைத் தன்னுள் புதைத்துவிட்டும் வேகத்தில் இறுக்கி அணைக்க,


"இது… இது... ரொம்ப வேகமா நடக்குற‌ மாநிரி இருக்கு." என்றாள் அவனின் அணைப்பில் நெளிந்தபடி.


"எது?" என்றவன் தன் இதழால் அவளின் மேனியில் கவி எழுதியபடி கேட்க,


"இது தான்.. நாம இப்படி கட்டீட்டு நிக்கிறது." 


"நமக்குக் கல்யாணம் ஆகப்போது." 


"அதுக்கு… இப்படித் தான் பழகணுமா. " 


"பழகுனா தப்பில்ல.." 


" பட்... " 


"என்ன வேணும் டெடி உனக்கு? " என விடுபட நெளிந்தவளை மனமே இல்லாமல் தன் மார்பில் இருந்து பிரித்து, அவளின் முகம் பார்த்து கேட்டான்.


" நாம ஒருத்தருக்கு ஒருத்தர் பழகணும். என்னை நீங்களும் உங்கள நானும் புரிஞ்சிக்கணும். அதுக்குள்ள கல்யாணமா! நான் உங்கள லவ் பண்ணணும். அந்த லவ் வெறும் லஸ்டா இருக்க கூடாது." 


"முட்டாள். நம்ம நாட்டுல பெரும்பாலன அரேஜ் மேரேஜ் வெறும் உடல் சார்ந்த உறவாத்தான் ஆரம்பிக்கிது. அது மெல்ல மெல்ல மனசையும் தொட்டு, சாகுற வர கூடவே இருக்கிற மாதிரி உருமாறிடுது.


நமக்கும் மாறும். கல்யாணத்துக்கு அப்றம் நிறைய டயம் இருக்கு. லவ் லஸ்ட்... ரெண்டுக்குமே. " என்க, பெண்ணவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 


முன்‌பின் தெரியாத ஆடவன். அவனின் குணங்கள், பழக்கங்கள், விரும்பு, வெறுப்பு என எதையும் அறியாத போது வெறும் உடலை வைத்து மட்டும் ஆரம்பிக்கும் திருமணம், எத்தனை நாளைக்கு இருக்கும். மோகம் மறைந்த பின், தான் அவனுக்குச் சலித்து விட மாட்டேனா? எனக் கேள்வி எழ, அதை அவனிடம் மறையாது கேட்டாள் பைரவி.


" நோ... உம்மேல எனக்கு இருக்கற தாபம் என்னைக்கும் குறையாது. " 


"அதெப்படி உறுதியா சொல்றிங்க?" 


"அது அப்படித்தான்... உறுதியா சொல்லணும்னா! வா வாழ்ந்து காட்டுறேன்." எனக் குறுநகை பூக்க, 


"ஆனாலும்… " என இழுத்தவளை இழுத்தணைத்து இதழில் அழுத்தமாக முத்தமிட்டவன், 


" போதும்... எதுவா இருந்தாலும், இனி மிஸ்ஸஸ் மதுசூதனனா ஆகுறத மாத்த முடியாது. உனக்குச் சம்மதம் இல்லன்னாலும் நம்ம கல்யாணம் நடந்தே தீரும். " என்றவன் மீண்டும் மீண்டும் அவளின் அதரங்களைச் சிறை செய்ய,


ஆடவனின் முத்தத்தில் பெண்ணவளின் சந்தேகங்கள் அனைத்தும் மாயமாய் மறைந்து போனது. மதுசூதனன் என்ற பனி மூட்டம்  அவளைச் சூழ்ந்து கொண்டது. தெளிவற்ற காட்சிகளைத் தரும் பனி மூட்டம் என்றாவது ஒரு நாள் விலகித்தானே தீரும். 

 தொடரும் ...



💛அனிதா குமார்💛


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி


கருத்துகள்

கருத்துரையிடுக

pls share you review..

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...