முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

நின்னையல்லால் 28


நின்னை - 28


தயக்கம் சுணக்கம் எல்லாம் துளியும் இல்லை. கிட்டத்தட்ட உத்தரவு போல தான் இருந்தது, "நம்மட பெட் ரூமுக்குள்ள வெளி ஆக்கள எடுக்காதிங்க.." என்று சாத்வி சொன்னது.


மனைவி என அதிகாரம் எடுப்பது, நேரத்திற்கு உணவு பரிமாறுவதில், உடை அயர்ன் செய்து தருவதில், நேரம் தவறாமல் தேநீர் ஊற்றி தருவதில், இப்போது சொல்வது போல ரூமுக்குள்ள யாரையும் விடக் கூடாது என சட்டம் பேசுவதில் மட்டும் தானோ... 


மிச்சம் மிச்சம் எல்லாம் யார் கவனிப்பதாம்??  


வாமன் பதில் சொல்லாமல் நிற்க, ஹாலுக்கு சென்ற சாத்வி கடகடவென கலைத்து போட்ட சாமான்களை ஒதுக்கி, வேடிக்கை பார்த்த இரட்டை பெண்களை அழைத்து மேசையை ஒழித்து,


"இதுல இருந்து படியுங்க" என்றாள்.


அவள் உணவு மேசை ஆக்கிய டேபிளையே படிக்கும் மேசை ஆக்கி விட்டாள் நிமிஷத்தில்.


"ம்ம், ஓகே" என வந்து அதில் அமர்ந்த வாமன், "லாஸ்டா எக்சர்சைஸ் தந்துட்டு போன ஞாபகம் எனக்கு. முடிச்சிட்டிங்களா??" என ஸ்டிக்ட் வாத்தியாராக மாற, சாத்வி கிச்சன் வந்தாள்.


எட்டு மணி இருக்கும், பிள்ளைகளை அழைத்துச் போக கமலம் வந்தார். கதவைத் திறந்த சாத்வி அவருடன் பேசிக் கொண்டிருக்க,


"அது என்னதுங்கம்மா? பீன்ஸ்ல பொரியல் பண்ணுவாயிங்க. நீங்க தேங்கா பால் சேர்த்து வத்த வச்சி ஒண்ணு செஞ்சி இருந்திங்க.. நல்லா இருந்திச்சிங்க"


"பீன்ஸ் பால் கறி அது.."


"நாங்கலா தேங்கா பாலு அதிகோ சேத்துக்க மாட்டோ"


"தேங்காய் இல்லாம நாங்க சமைக்கவே மாட்டம்.."


"நாங்க ஆயில் தாங்க சேத்துப்போம்"


"நான் இந்தியன் சமையல் வீடியோ பார்த்து இருக்கன். ஸ்பெஷலான குக்கிங்ல தான் தேங்கா சேர்ப்பாங்க.."


"ஆமாங்க.."


"நாங்க சாதாரணமா குழம்பும் தேங்காய் பால் விட்டு தான் வைப்பம். ஒயில் சேக்குறது குறைவு.. தேங்காய் இல்லாம சமையலே இல்ல.."


"தேங்கா விக்கிற வெலைக்கு கட்டுப் படி ஆகும்களா??"


சாத்வி புன்முறுவல் செய்தாள்.


"இன்னும் ஆறு மாசம் இருக்கு எக்ஸாமுக்கு.. இப்ப பேப்பர் தந்தாலும் மூண்டு பேப்பர்லயும் எயிட்டி ப்ளஸ் எடுக்கணும். அதான் ஃபைனல் ஸ்கோர்.." என வலியுறுத்திய வாமன்,  விராந்தையில் செங்கமலத்துடன் பேசிக் கொண்டு நின்ற சாத்வியை கவனித்தான்.


கையை குறுக்கே கட்டி இத்துணை சகஜமாக, புனிதா செல்லம்மா தவிர்த்து வேறு யாருடனும் அவள் பேசிக் கண்டதில்லை அவன். நந்தினி நிவே ஜெயந்தியை அவள் நெருங்கவே இல்லையே.


ஏன், அவனுடன் கூட இந்த இனிய இயல்பு வரவில்லை இன்னும்.


"சரிங்கம்மா, நாங்க வாரோ" கமலம் மக்களுடன் விடைபெற, சாத்வி கதவை அடைத்து விட்டு கிச்சன் சென்றாள்.


"ம்ம்.. மெடம் அவட ட்யூட்டிய பாக்க போறாங்க..இன்னும் கொஞ்ச நேரத்தில சாப்பிட கூப்பிட போறாங்க .." அலுத்துக் கொண்டவன் ரூமுக்கு போனான்.


அவன் அடுத்த நாளுக்குரிய விரிவுரைக் குறிப்புகளை ஒழுங்கு படுத்தும் போது, "சாப்பிட வாரிங்களா?" எனக் கூப்பிட்டாள் சாத்வி.


அவளைப் போல, 'இல்ல வரமாட்டான்' என வெடுக்கென ஒருமுறை சொல்ல வேண்டும் போல எண்ணினான் விளையாட்டாக.


சாத்வியின் சாந்தமான விழிகளை பார்த்து பொய்யாக கூட அப்படி சீண்டத் தோன்றவில்லை. 


தவிரவும் இரசாயனவியல் பாடம் எடுக்கும் போது மூக்கை துளைத்த கருவாட்டு குழம்பு வாசம் எப்போதோ அவன் பசியை தூண்டிவிட்டிருக்க, அவன் கருவாட்டை ஒரு கை பார்க்க காத்துக் கொண்டிருக்கிறான்.


"எடுத்து வையுங்க வாரன்.." என்றவன் சில நிமிடங்களில் ஆஜர் ஆகினான்.


எதிரில் அமர்ந்து தனக்கும் போட்டுக் கொண்டவள், அவன் முகத்தை பார்த்துக் கொண்டு சாப்பிட்டாள். 


வாமனுக்கு அவள் பார்வை பழகி விட்டது. இதே அவன் மாறி பார்த்தால் என்ன என்பது போல புருவம் சுருக்குவாள். எதற்கு வம்பு என கருவாட்டு குழம்பை சோற்றோடு பிசைந்து அடித்தான்.


அவன் தட்டில் சாதம் குழம்பு தீரத் தீர அவள் போட்டுக் கொண்டே இருந்தாள்.


"போதும்.." என கட்டத்தில் எழுந்தவன், "டேபிள முட்டுது வயிறு" என கை கழுவினான்.


யம்மி ஹாசினி...  எனக்கு கருவாட்டு குழம்பு விருப்பம்.. தெரிஞ்சி தான் வச்சிங்களா என ஏதாவது கேட்பான், ஏதாவது சொல்வான் என எதிர்பார்த்தாள் சாத்வி. 


அவனோ சாப்பிடுவதற்கு தவிர வாயை திறக்கவில்லை.


அவளும் முடித்து எழுந்து பாத்திரங்களை ஒதுக்க, வாமன் வெளியே நின்று ஃபோன் பேசிக் கொண்டிருந்தான். 


அவன் வெளியே நின்று பேசினால் அலுவல் ரீதியான அழைப்பு என்று அர்த்தம். பர்சனல் கோல் என்றால் அறையிலேயே உட்கார்ந்து அலட்டுவான்.


படுக்கை அறை வந்தவள், புதிய தலையணையகளுக்கு உறைகளை அணிந்து கட்டில் விரிப்பையும் போட்டாள்.


இன்று மழை பெய்யவில்லை. தாங்கக் கூடிய விதத்தில் சுகமாக குளிர் காலநிலை நிலுவுவதால் கமபளிக்கு அவசியம் இன்றி சாதாரண போர்வையை வைத்தவள் முகம் கழுவி வந்து சிறிது நேரம் வாமனை பார்த்து இருந்து விட்டு கட்டிலில் சாய்ந்தாள்.


நேற்று இரவு போதியளவு உறக்கம் இல்லையே. பகலிலும் தூங்கி பழக்கம் இல்லை. அதிகம் வேலை வேறு இன்று. உடல் அசதியில் கண்ணை சுழட்டிக் கொண்டு வர, சாய்ந்த மாதிரியே தூங்கிப் போனாள்.


நடுவில் விழித்து எழுந்து பாத்ரூம் போய் வந்து தண்ணீர் எடுத்துக் குடித்தவள், ஏதோ ஓர் வெறுமை உணர்வு படர, கட்டிலைப் பார்த்தாள். 


வாமன் இல்லை.


அவனுக்காக போட்ட தலையணை போர்வையும் சேர்ந்தே மிஸ்ஸிங்.


சுருக் என்று ஒரு வலி சாத்விக்கு. கோபித்து கொண்டு நேற்று போல வெளியில் போய் தூங்குகிறாரோ?


போத்தலை கூட மூடாது வெளியில் வந்தாள்.


அவள் நினைத்தது போலவே, இரட்டை குஷனில் உடல் குறிக்கி படுத்து இருந்தான் அவள் கணவன்.


அலார இசையில் நேரத்திற்கு எழுந்த வாமன் ஜாக்கிங் கிளம்பினான்.


பெர்ணான்டோ சற்று நேரத்தில் ஒரு வளைவில் அவனுடன் இணைந்து கொண்டார்.


சின்ன புன்னகையுடன் இருவரும் சேர்ந்து ஓடினர். 


ஏற்ற முனையில் உட்கார்ந்த சில நிமிட ஓய்வின் போது,


"பார்ட்டிக்கு செல்லும் உத்தேசமா வாமதேவன்.." எனக் கேட்டார் பெண்ணாண்டோ.


"எதைப் பற்றி கேட்கிறீர்கள்?"


"சீனியர் ப்ரபசர் ரணசிங்கவின் எழுபத்தைந்தாவது பிறந்த நாள் விழாவை பற்றி கேட்கிறேன்.."


"ஓ.. " என இழுத்தான் வாமன்.


அவனுக்கும் அழைப்பு உண்டு. செல்வதா இல்லையா என முடிவெடுக்கவில்லை. அவன் புதிதாக திருமணம் ஆனவன் என்பதால் ஜோடியாக அவனை எதிர்பார்ப்பார்கள். சாத்விஹாசினி வர விரும்புவாளா இல்லையா என்று தெரியாதே..



"என்ன யோசிக்கிறாய்.. வரவில்லையா.."


"இன்னும் முடிவெடுக்கவில்லை. என் மனைவியை கேட்க வேண்டும்"


"ஓ.. " என அவனை கூர்ந்து பார்த்தவர், "உன் மனைவியுடன் நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா?" எனக் கேட்டார்.


வாமன் அவசரமாக திரும்பி அவர் முகம் பார்த்தான். இப்படி ஏன் கேட்கிறார் இந்த பெர்ணான்டோ என புருவம் சுருக்கினான்.


"இல்லை.. தவறாக எடுக்காதே.. கேட்கத் தோன்றியது" எனக் குனிந்து அவிழாத ஷு லேசை கட்டிய பெர்ணான்டோ அடுத்த சுற்றுக்கு ஓடத் தயார் ஆகினார்.


எதை வைத்து இந்த மனிதர் இப்படிக் கேட்டார் என்ற கேள்வி வாமனை குடைந்தது. 


தலைக்கு குளித்த கூந்தலில் டவலை சுற்றி கிச்சன் வந்தாள் சாத்வி. 


சுட்டு அடுக்கிய தோசை சாம்பார் சட்னியை மேசையில் எடுத்துச் சென்று வைத்து விட்டு, தேநீர் ஊற்ற,


"ஹாசினி" என வாமன் கூப்பிட்டுக் கேட்டது. 


கலந்த டீயை ஊற்றிப் போய் அவனுக்கு கொடுத்தாள். ஒரு கையால் வாங்கியவன் மறு கையில் இருந்த அட்டையை அவளிடம் நீட்டினான்.


"என்ன இது?"


"பாருங்க!"


சாத்வி பிரித்து பார்த்தாள். ரணசிங்கவின் பிறந்த நாள் விழா அழைப்பிதழ் அது. 


"இண்டைக்கு நைட் பங்ஷன். நாமளும் போவமா??"


கேட்டவனை அலட்சியம் செய்தவள் அட்டையை உணவு மேசையில் வைத்து விட்டு கிச்சன் சென்றாள். 


"என்ன ஹாசினி.. ஓமா இல்லயா.. ரெண்டுல ஒண்டு சொல்லுங்களன்.." 


வாமன் அவள் பின்னாலேயே வர, டீ போட்ட பாத்திரங்களை கழுவி வைத்து ரூமுக்கு சென்றாள்.


அவளுடனே வந்தவன், லாப்டாப் பையை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு கிளம்பினான்.


வேகமாக வந்து அவன் எதிரில் நின்று கதவை மறைத்தாள்.


"என்ன?"


"சாப்பிடாம போறிங்க.. டீயும் குடிக்கல்ல.."


"சைட் ப்ளீஸ்.."


"சாப்பிட்டு போங்க.."


இதுவரை கதவை பார்த்து பேசியவன், அவள் கண் பார்த்து, "என்ன நினச்சுட்டு இருக்கிங்க ஹாசினி.. எனக்கு விளங்கல்ல.. உங்கள எனக்கு சர்வன்டா கூட்டி வந்து இருக்கனா நான்.. வாமனுக்கு மெய்டா நீங்க? மூண்டு வேளைக்கும் சாப்பாடு ஆக்கி போட்டு என்ன பராமரிச்சிட்டு இருக்கிங்க..."


"உங்களுக்கும் எனக்கும் கல்யாணம் முடிஞ்சி இருக்கு. அது தெரியுமா? ஒழுங்கா ரெண்டு வார்த்த என்னோட கதைக்கிறிங்க இல்ல.. நினைக்கிறத சொல்றிங்க இல்ல.. டான் எண்டு மணி அடிச்சா சோறு சமைக்கிறிங்க.. என்ன சாப்பிட வைக்கிறிங்க.."


"ஹொஸ்டலா நடத்துறிங்க.. வார்டனா நீங்க? எனக்கு வக வகையா சாப்பிட பிடிக்கும் தான்.. அயம் எ ஃபூடி.. ஐ அக்ரீ. ஆனா... சாப்பாடு மட்டும் வாழ்க்கை இல்ல.." 


மூச்சு விடாமல் பேசியவன் "ரிடிகுலஸ்.." என முணுமுணுக்க,


"வெறும் வயித்தோட வேலைக்கு போக வேணாம் எண்டு சாப்பிட தானே சொன்னன்..ஏன் இவ்வளவு கதைக்கிறிங்க?"


"ஓ.. இப்பவும் நான் சொல்ல வாரது உங்களுக்கு விளங்கல்ல. அப்டி தானே.."


"நிறைய கதைக்காம நேரா சொல்லுங்க. என்ன விஷயம்?"


அயர்வுடன் அவளையே பார்த்தவன், "நான் ஒரு இன்விடேஷன் தந்தனே.. அத அந்த டேபிள்ள போட்டுட்டு நீங்க பாட்டுல போனிங்களே.. அதுக்கு என்ன மீனிங்?"


"எனக்கு வர விருப்பம் இல்ல.."


"ஓ.. அத வாயால சொல்ல மாட்டிங்க.. ரைட் லீவ் இட். ஏன் வர விருப்பம் இல்ல.."


"நீங்க ஏன் இரவு வெளில வந்து படுத்திங்க.." வெடுக்கெனக் கேட்டாள்.


வாமன் பேச்சு மறந்து போனான்.


இவள் தான் அவளுக்கு பக்கத்தில் அவனுக்கு இடம் இல்லை என்று முதல் நாள் இரவு கட்டில் விட்டு உருட்டி விட்டாள். 


இப்போது ஏன் கட்டில்ல படுக்க இல்ல என்று கேள்வி கேட்கிறாள்.


அவள் கண்ணில் சமிக்ஞை கிடைக்கும் வரை கை கால் படாமல் பக்கத்தில் மரம் போல் படுத்து மனக் கட்டுப்பாட்டுக்கு வாழப் பயிற்சி செய்ய முடியாது.


அவன் சிலையும் அல்ல. எத்தனை நாள் ஆனாலும் ஹால்லயே நிம்மதியாக உறங்கிக் கொள்வான்.


சாத்வியை தாண்டியவன் நடையை கட்ட, "நில்லுங்க.." என பின்னால் சென்றாள்.


"சாரி மெடம். நீங்க என்னோட எங்கையும் வர வேணாம்.. ஆள விடுங்க"


"சரி சாப்பிட்டு போங்க.."


"வேணாம்.."


அவன் காலுறை அணிந்து ஷூ மாட்டும் மட்டும் பொறுமையாக நின்ற சாத்வி அவன் எழுந்ததும், "சரி நான் வாரன். நீங்க சாப்பிட்டு போங்க.." என்றாள்.


அவன் சாப்பிட வேண்டும் என அவள் துடிப்பது பிடித்து இருந்தது. 


இருந்தாலும்...


இது நல்ல டீலிங்காவும் தெரிகிறது!! அவனுடைய வயிற்று பசியை பற்றியாவது அக்கறை கொள்கிறாளே!!


"ஓகே ஃபைன்!"


வட்ட வட்ட தோசையை கணக்கில்லாமல் போட்டுக் கொண்டவன், கை கழுவியதும், "எனக்கு உங்களோட அளவு ப்ளவுஸ் ஒண்டு தாங்க" எனக் கேட்டான்.


"என்னது"


"சாரி ஜாக்கெட் இருக்கு தானே..!"


"ஓம்.. அது என்னத்துக்கு?" 


"தாங்க.. வேணும்"


"இல்ல.. " சாத்வி தயங்க, "சரி! நீங்க பங்க்ஷன் வர வேணாம் நானும் லஞ்ச பெகல்டி கென்டீன்ல பார்த்துக் கொள்ரன்.." எனக் கிளம்பினான்.


"சாரி வாங்கப் போறீங்களா.. அதுக்கு ப்ளவுஸ் தைக்கவா.."


"தெரியுது தானே.."


சாத்விக்கு இதெல்லாம் ஒரு மாதிரி அவஸ்தை கலந்த உணர்வு கொடுத்தது. அவனை மறுக்க முடியாமல் ஒரு ஜாக்கெட்டை பையில் போட்டு கொடுத்தாள்.


மதியம் போல வந்த வாமன் ஃபேன்ஸி சாரியும் அதற்கு தகுந்தாற் போல தைத்த ஜாக்கெட்டும் எடுத்து வந்தான்.


"எட்டு மணிக்கு பங்க்ஷன். ஏழு மணிக்கு ரெடி ஆகுங்க" என்றவன் மாலை நேரம் லெக்சர் உண்டு என லஞ்ச் சாப்பிட்டதும் கிளம்பி விட்டான்.


நேற்று அவன் வாங்கி வந்த கதவு ஜன்னல் திரைகளை தைக்க ஊசி நூலுடன் அமர்ந்து விட்ட சாத்வி வெளிக்கிட எடுக்கும் போது நேரம் மாலை ஆறு முப்பதாகி விட்டது. 


"ஹாசினி! கெட் ரெடி... நேரம் இல்ல" வாமன் விரட்டியதும் அவசர அவசரமாக குளித்து வந்து உடை பார்த்தாள்.


மணிகள் வைத்த கருப்பு பார்டர் சிவப்பு ப்ளேன் சேலைக்கு, நீளமான கையும், அகலக் கழுத்துமாக ப்ளவுஸ் ஆ எனப் பல் இழித்தது.


வாழ்க்கையில் இப்படி ஒரு ப்ளவுஸ் அவள் அணிந்ததில்லை. 


"என்ன இது.. கழுத்து டீப்பா இருக்கு.. நான் தந்த ப்ளவுஸ் அளவு இல்லயே இது?"


தனது உடையை அயர்ன் செய்து கொண்டிருந்த வாமனைக் கேட்க,


"என்னது! டெய்லர் கழுத்த அறுத்துட்டானோ.." என லெக்சரர் முழித்தார். 


"இது என்ர ப்ளவுஸ் அளவில்லயே.."


என்ன சொல்லி சமாளிக்கலாம் என வாமன் யோசிக்க,


"கருப்பு கலர்ல உடுப்பு எடுக்கிற இல்ல நான்.. நானே கருப்பு.. இதுல கருப்பு சாரியா??" அடுத்த கண்டனமும் வந்தது அவளிடம் இருந்து.


அவசரமாக அவளை குறுக்கிட்டவன் "நோ ஹாசினி!! இது ரெட் சாரி வித் ப்ளெக் ப்ளவுஸ்.. இதுல நீங்க நல்லா இருப்பிங்க.." தேவதை மாதிரி இருப்பிங்க என சொல்ல நினைத்ததை அவசரமாக கத்தரி போட்டான்.


அவனை ஒரு பார்வை பார்த்தவள், பாத்ரூம் சென்று பாவாடை ப்ளவுஸ் அணிந்து மேலால் துணியை போர்த்தி வந்து புடவையை கட்டினாள் இந்தப் பெரிய ரூமில் அவன் அவளுக்கு முதுகு காட்டி தூரத்தில் நிற்கும் தைரியத்தில்.


இஸ்திரி முடித்தவனோ எதேர்சையாக திரும்ப, அவன் கண்கள் சாத்வியில் நிலைத்தன. அவனுக்குப் புறம் காட்டி மும்முரமாக சேலை உடுத்திக் கொண்டிருந்தாள்.


நல்ல முன்னேற்றம் தான்!! 


சிங்கிள் குவார்டஸிற்கு ஒரே ஒரு படுக்கையறை வைத்து கட்டிய எஞ்சினியரை வாழ்த்தினான் மனசுக்குள்!!


கண்கள் மனைவி முதுகில் மேய, அவள் சொன்னது போல ப்ளவுஸ் கழுத்து ஆழம் தான் என உறைத்தது! 


முதுகை முழுமையாக வெளிப்படுத்தவே வெட்டி இருந்தான் அந்த சிங்கள டெய்லர்.


பாத்ரூமில் கழுத்தளவு கண்ணாடியே உண்டு. பெட் ரூமில்  ட்ரெஸ்ஸிங் டேபிள் இல்லை. சாத்விக்கு ப்ளவுஸ் கட்டிங் ஆழ அகலம் தெரிய வாய்ப்பில்லை. 


விளங்கி இருந்தால், 'பொறுத்தது போதும் பொங்கி எழு' என கழட்டி வீசி இருப்பாளோ என்னவோ!!


திருட்டு வாமன் அவள் கவனிக்கவில்லை என்ற தைரியத்தில், கிடைத்த அளவில் அவள் பின்னழகை ரசித்து விட்டு வெளியே வந்தான் அதற்கு மேல் உள்ளே நிற்கும் தைரியமில்லாமல்!!


"நல்ல படியா பங்க்ஷன முடிச்சிட்டு நல்ல படியா வீட்ட வந்து குஷனில் சரணாகதி ஆகிரணும் வாமா.." எனச் சொல்லிக் கொண்டான்.


"அவ வெளிக்கிட்டு வாரதே பெரிய விஷயம்.. எந்த சேட்டையும் செய்துடாத.." என நினைத்துக் கொண்டான்.


ஒரு வேளை அவன் கலந்து கொள்ளப் போகும் பார்ட்டியில், அவன் சொன்னான் இவன் கேட்டான் என கண்டவன் கதையை கேட்டு மது அருந்தாமல் இருந்து இருந்தால், ஒரு வேளை அவன் வேண்டுதல் பலித்து இருக்குமோ என்னவோ!


விதி யாரை விட்டது, வாமனை விட?!



வளரும்...

-ஆதுரியாழ் ❤️
 

Previous Epi

கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...