அத்தியாயம்: 59 சிறிய மூளை தான். ஆனால் அது செய்யும் வேலைகள் பல. ஒற்றை மூளை ஒட்டு மொத்த உடலையே இயக்கும் வல்லமை படைத்தது. பார்ப்பது கேட்பது தொடங்கி, சின்ன சின்ன அசைவுகளைக் கூட அதன் உத்தரவு இல்லாது செய்ய முடியாது. ஆனால் இங்கு மூளை எந்த வேலையையும் செய்யாது டம்மியாக இருந்தது. ஒரே ஒரு வேலையைத் தான் மும்மரமாக செய்ய முயன்றது அது. சிந்திப்பது, அதை தவிர்த்து வேறு எதற்கும் முக்கியத்துவம் தரவில்லை அது. யாரு அந்த வேலை செய்யாத மூளைக்கு சொந்தக்காரி என்றால், வேறு யார் நம் பைரவி தான். அவளின் சிந்தனை மொத்தமும் சுடர் பற்றியே இருந்தது. "நமக்கு அரசனூர் கேஸ் தேவையில்ல. சுடரக்கா கேஸ் மட்டுமே போதும். ஏன்னா அது ரொம்ப பயங்கரமான கேஸ்ஸா இருக்கு. புரியாத மாதிரியும் புரியிற மாதிரியும் நிறைய விசயங்கள வக்கீல் சொன்னாலும். அந்த கேஸ் கொஞ்சம் டேஜ்சரானது தான். கொலை எல்லாம் நடந்திருக்கு. சுடரக்கா கூட காணாம போன எவிடென்ஸ்ஸ தேடி நாம போறது புதை குழில குதிச்சி குதிச்சி விளையாடுறதுக்கு சமம். அதுனால நம்மோட கான்ஸ்டன்ட்டேட் மொத்தமும் சுடரக்காவ யாரு கடத்துனாங்கங்கிறதுல தான் இருக்கனுமே தவிர வேற எதுலயும் ...
நின்னை - 69 "கணவருட்ட இருந்து டிவோர்ஸ் கேக்குறிங்க சரிம்மா, அதுக்கு என்ன காரணம் முன் வைக்கிறிங்க?" சிவில் கேஸ் லாயர் கேட்டதும் ஹாசினி வாமதேவனை ஏறிட்டாள். தடக் இடும் இதயப்படபடப்பை மறைத்து அவன் உட்கார்ந்து இருக்க, "என்ன காரணம் இருந்தா டிவோர்ஸ் ஈசியா கிடைக்கும் சேர்.." எனக் கேட்டாள் ஹாசினி. "இலங்கை குடும்ப நல சட்டத்தில் விவாகரத்து கோர கூடிய காரணங்கள சொல்றன் கேளுங்க.. இதில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேலோ உங்கள் கணவர் மீது நீங்கள் காணும் பட்சத்தில் டிவோர்ஸுக்கு நீங்க அப்ளை பண்ணலாம்.." "முதலாவது உங்க கணவர் உங்களை அடித்து துன்புறுத்தல் செய்றது.. டொமஸ்டிக் வயல்ன்ஸ்ல…" "அவருக்கு வேறு பெண்களுடன் தகாத உறவு இருப்பது… அது நிரூபிக்க படும் பட்சத்தில் கேஸ் போடுறது உங்களுக்கும் ஈசி எனக்கு கேஸ் முடிக்க ஈசி.." அடுத்த காரணத்தை கூற அவரே சங்கடம் கொண்டார் போல.. வாமனை ஒரு நொடி பார்த்தவர், "கணவர் உங்களை தாம்பத்ய உறவில் திருப்த்திப்படுத்த தகுதியற்றவராக நீங்க கருதும் போது.. அதாவது திருப்தியான தாம்பத்ய வாழ்க்கைக்கு அவர் தகுதி இல்லாமல் இருந்தால்.." "அ...