அத்தியாயம்: 58
" உனக்குக் கதிர் வீச்சுன்னா என்னன்னு தெரியுமா? I mean radiation."
" ம்… படிச்சிருக்கேன்.. அது கண்ணுக்குத் தெரியாத ரொம்பவே பவர்புல்லான wave. அதாவது கடல் அல மாதிரி ஏறி ஏறி இறங்கி படம் வரைஞ்சிலாம் எங்க மிஸ் எனக்குப் பாடம் நடத்துன மாதிரி நியாபகம் இருக்கு. " எனக் காற்றில் படம் வரைந்து கூற,
"வேற என்ன தெரியும்?"
"அது பேப்பர் மேல லைட் அடிச்சா லைட் பேப்பர ஊடுருவி சுவர அடையுற மாதிரி, எல்லா பொருள்லயும் நுழைஞ்சி நுழைஞ்சி போகக்கூடிய தன்ம இருக்கு. அது நிக்கவே நிக்காது. அத ஸ்டாப் பண்ற பொருள் எதுவுமே இல்ல. டைவர்ட் பண்றதுக்கும் எதுவுமில்ல. போய்க்கிட்டே இருக்கும்.. கண்ணுக்கு தெரியவே தெரியாது.
இன்ஃபேக்ட் நாம எக்ஸ்ரே எடுப்போமே அது கூட ஒன் டயிப் ரேடியேஷன் தான். நம்ம தோலு, தசை ரத்த நாளம்னு எல்லாத்தையும் தாண்டி நம்ம எலும்ப அழக படம் பிடிச்சி காட்டும். எலும்புக்குள்ள போகுற அளவுக்கு எக்ஸ் கதிருக்கு பவர் இல்ல. ஆனா அதுக்குள்ளையும் போய் நம்ம உயிர் அணுன்னு சொல்ற செல்ஸ், மரபணுன்னு சொல்ற டிஎன்ஏ வரைக்கும் பாதிப்ப ஏற்படுத்துற திறம வாய்ந்த அதிக பவர்புல்லான ரேடியேஷன் இருக்கு. அதோட பேரு தான் தெரியாது.“
“செம்ம… அப்றம்… “ என விக்னேஷ் ஊக்குவிக்க, பைரவிக்கு குஷியாகி போனது. பாராட்டி விட்டானாம். ஆதலால் தன் அறிவு புலமையைக் காட்ட எண்ணி,
“ எனக்கு இன்னென்னும் நிறைய தெரியும். மேரிக் க்யூரி அம்மையாருன்னு ஒருத்தங்க இருந்தாங்க. அவங்க தான் முதல் நோபல் பரிசு வாங்குன முதல் பெண். அதுவும் ரெண்டு வாங்கிருக்காங்க. ரெண்டு கேட்டகரிக்கு. வேதியல் அதாவது கெமிஸ்ட்ரி அப்றம் இயற்பியல் பிசிக்ஸ். அவங்க தான் ஆபத்துன்னு சொல்ற எக்ஸ் கதிர்கள யூஸ் பண்ணி எக்ஸ்ரே மிக்ஷின் உருவாக்குனது. அத வச்சி first world war ல நிறைய பேரோட உயிர காப்பாத்திருக்காங்க. ஆப்ரேஷனுக்காக இப்ப வர இந்த மிக்ஷின யூஸ் பண்ணிட்டு தான் இருக்காங்க.
இவ்ளோ பண்ண அவங்களால அவங்க உயிர காப்பாத்திக்க முடியல. அந்த ஆபத்தான ரேடியேஷன் அவங்கள அட்டாக் பண்ணி, அவங்களுக்கு கேன்சர் வந்து, ரொம்ப சீக்கரமாவே இறந்து போய்ட்டாங்க.. இப்பவரைக்கும் அவங்க யூஸ் பண்ண திங்க்ஸ், டைரில கூட அந்த ரேடியேஷன் பாதிப்பு இருக்குறதா சொல்றாங்க. அத யாரும் தொடக்கூடாதுன்னு பெட்டில போட்டு பாதுகாக்குறாங்க. தொட்டா அவ்ளோ தான். மர் கையா… சாவு தா… இத்தன வர்ஷம் கழிச்சும் அதுல இருந்து ரேடியேஷன் வருதுன்னா எவ்ளோ டேஜ்சரானது அது.“ என இல்லாத தன் சுடிதார் காலரைத் தூக்கிவிட்டு சொல்ல,
விக்னேஷ், “அப்ப அது ரொம்ப டேஞ்சரானது. சரியா?“
“எல்லா கதிர் வீச்சும் ஆபத்துன்னு சொல்லிட முடியாது. அதோட frequencyய பொருத்து அதாவது அதோட அதிர்வெண்ணைப் பொருத்து ஆபத்தானதா இல்லயான்னு தெரிஞ்சிக்கலாம்.
ஏன்னா நாம யூஸ் பண்ணற எல்லா எலக்ட்ரிக் கேஜெட்லயும் கதிர் வீச்சுங்கிறது இருக்கு. இயற்கையாவே சில பொருளுக்கும் உண்டு. உருளக்கிழங்குல இருந்து வாழைப்பழம் வரை அது இருக்கு.
டீவி, ஃபோன், ஓவன் ஏன் சூரியன்ல இருந்து நமக்கு கிடைக்கிற லைட்ல கூட ரேடியேஷன் இருக்கு. அதுனால தான் சூரியனுக்கு கதிரவன்னு பேரு வச்சிருக்காங்க போல. தென் துருவத்துல வெயில் அடிக்கிதுன்னு அதுல போய் விளையாண்டா தோல் புற்றுநோய்லாம் வரலாம்னு கேள்வி பட்டிருக்கேன்." எனத் தன் அறிவைக் காட்டியவள் பைரவி.
“ வாவ்… உனக்கு இவ்வளோ தெரிஞ்சிருக்கு. ப்ரில்லியண்ட் தான் போ.“
"எஸ்… பேஸிக்கலி எனக்கு இந்த மாதிரி சில சையின்ஸ் மேட்டர்ல ஆர்வம் அதிகம். அதுனால லைட்டா தெரிஞ்சிக்கிட்டேன். ஆமா இப்ப அதுக்கும் நம்ம கேஸ்க்கும் என்ன சம்மந்தம்?" எனச் சந்தேகமாக கேட்க,
“அப்பாடா… ஒரு வழி எதுக்கு வந்தோங்கிறது நியாபகம் வந்திடுச்சி. நாங்கூட எங்களுக்கு நீ அறிவியல் பாடம் நடத்ததா வந்தியோன்னே நினச்சேன்.“ என கேலியாக புன்னகைக்க,
“அப்ப இவ்வளோ நேரம் என்ன வச்சி விளையாண்டுட்டு இருந்திங்களா. ச்ச… இது தெரியாமா நான் எனக்கு தான் அறிவு இருக்குங்கிற மாதிரி பேசிட்டு இருந்திருக்கேன். எவ்ளோ பெரிய முட்டாள் நான். “ என்க, கணவன் மனைவி என இருவரும் குறுஞ்சிரிப்பு பூத்தனர்.
“அப்ப அரசனூர்லயும் ரேடியேஷன் அட்டாக் ஆகி இருக்கா? எப்படி? அங்க இருக்குறது செல்ஃபோன் டவர் தானா?. அதுல இருந்து ஆபத்தான ரேடியேஷன், எப்படி? “
பவதா, "செல்ஃபோன் டவர் ஆபத்து கிடையாது தான். அதுல இருந்து வெளிவர்ற கதிர்வீச்ச பொருத்தும், அதோட யூஸ்ஏஜ்ஜ பொருத்தும் செல்ஃபோனே ஆபத்தானதா மாறிடுது.“
“செல்ஃபோனுமா…“ என்றாள் குழப்பமாக.
“ம்… செல்ஃபோன்ஸ்ஸ கொஞ்ச நேரம் மட்டும் யூஸ் பண்ணா ஆபத்து இல்ல. அதாவது பேசுறதுக்கு மட்டும் யூஸ் பண்ணா ஓகே.
பட் இப்ப நாம செல்ஃபோன பேசுறதுக்கு மட்டும் தான் யூஸ் பண்றோமா? இல்ல… காலைல கண் முழிக்கிறதுல இருந்து, நைட் தலைக்கு மேல வச்சிட்டு தூங்குற வர, செல்ஃபோன் நம் உடம்புல இருக்குற இன்னொரு கைய்யா மாறிடுச்சி."
"அதுனால நமக்கும் ரேடியேஷன் அட்டாக் ஆகுமா! கேன்சர் வருமா?"
"வரும்னு சொல்லல வரலாம்னு தான் சொல்றேன். அளவுக்கு மீறினால் அமிர்தம் நஞ்சு. அது மாறி தான் செல்ஃபோனும். 24/7னும் இண்டர்நெட் கனெக்ஷன்லயே இருக்குறது. சார்ஜர் போடுட்டே பேசுறது. தலைக்கு மேல் ஃபோன வச்சிட்டே தூங்குறது. பேட்டரி லோன்னு சிக்னல் காட்டுனதுக்கு அப்றமும் சட்ட பாக்கெட்ல வச்சிட்டே, அத சார்ஜ்ல போடாம இருக்குறது எல்லாமே ஆபத்தானது. அதுல இருந்து வர்ற மின்காந்த அலைகள் நம்மோட மூளைய, இதயத்த, நரம்பன்னு எல்லாத்தையும் பாதிக்கும். நம்மோட ஹார்மோன்ஸ்ஸ டேமேஜ் பண்ற பவரும் அதுக்கு உண்டு.
" நிஜமாவா…“
“ம்… 20 நிமிஷம் கன்ட்டினியூவா ஃபோன் பேசும் போது நம்ம உடம்போட ஹீட் ஒரு டிகிரி அதிகமாகுமாம். நம்ம மூளையோட மின்சார ஓட்டத்தை பாதிச்சி, நமக்கு மன அழுத்தமும், தூக்கமில்லாம இருக்குறது, ஏ மூளைல கட்டி, புற்றுநோய், வாந்தி, மலட்டுத்தன்ம, மரபணு குறைபாடு, தலைவலி, நரம்பு நளர்ந்து போறதுன்னு நிறைய இருக்கு.”
"பட் இது உண்ம இல்லைல்ல. ஏன்னா நிறை டவர்ஸ் நம்ம ஊருக்குள்ள இருக்கு. எல்லார் கைலயும் செல்ஃபோன் இருக்கு." என்ற பைரவி பயந்து விட்டாள் போலும்.
"செல் ஃபோன் அதிகமா யூஸ் பண்ணத பத்தி சொன்னது நிஜம். அதே நேரம் செல் டவர்ஸ்னால உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கு. உயிர் போயிருக்குன்னு நிறைய கேஸ் நிலுவைல இருந்தாலும் இதுவர ஆதாரத்தோட எந்த கேஸ்ஸும் நிறுபிக்க படல.
நம்ம கவர்மென்ட் டவர்ஸ்க்கும் அதுல இருந்து வெளில வர்ற frequencyக்கு கட்டுப்பாடுகள விதிச்சிருக்கு.. ஆனா அத ஃபாலோ பண்றாங்களான்னா! கேள்விக் குறி தான்? இப்ப ஏன் இதைப் பத்தி பாடம் எடுக்குறேன்னு யோசிக்கிறியா! நம்ம கேஸ்ஸும் ரேடியேஷன் சம்மந்தப்பட்டது தான்.
அரனூர்ல இருக்குற A1 tele communication industry யோட டவர்லயோ இல்ல, அதுக்கு பக்கத்துல எதுக்கு கட்டுனாங்கன்னே தெரியாத ஒரு கட்டடத்திலயோ சட்டத்து விரோதமா எதுவோ ஒன்னு நடந்திருக்கு.
அந்த தீ விபத்து ஒரு திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகம். அதுல இறந்து போன அத்தன பேரும் அதிகப்படியான கதீர் வீச்சு காரணமா பாதிக்கப்பட்டவங்க. எங்க அது வெளில தெரிஞ்சா கம்பெனியவே இழுத்து மூடுற நிலம வந்திடும்னு மக்கள ஏமாத்தி மறைக்க பாத்திருக்காங்க.
கண்ணாயிரத்துக்கும் சுடருக்கும் அந்த கம்பெனிகாரனுங்க ஏதோ ஒன்னு இல்லீகலா பண்றாங்கன்னு சந்தேகம். அது ரேடியேஷனா தான் இருக்கும்னு சுடர் உறுதியா நம்புனா. அத அதிகாரப்பூர்வமா நிறுபிக்க நினைச்சா. பட் அது இப்பவர முடியல.
எங்கிட்ட இந்த கேஸ் வந்தப்ப, சுடர் சொன்னது நிஜம்மான்னு இறந்து போன ஆள்களோட உடல பிரேத பரிசோதனை பண்ணணும்னு முதல்ல கோர்ட்டு இருந்து ஸ்டே வாங்கினேன். பிரேத பரிசோதனை நடந்தது. ஆனா எங்களால நிறுபிக்க முடியல. அங்க சிராஜ்ஜோட காசு ஜெயிச்சிடுச்சா. இல்ல ரேடியேஷன் காரணமாத்தா இறந்தாங்கன்னு உறுதியா சொல்ற அளவுக்கு டெக்னாலஜி இல்லயான்னு தெரியல. எங்களால நிறுபிக்க முடியல.
கவர்மென்ட்க்கிட்ட அந்த கம்பெனிய பத்தி சொல்லி ரைடு வர வச்சோம். அதுக்கான பலனும் ஜீரோ தான். யார் மூலமாவோ தகவல் அவனுக்கு போய்டுது. உசாராகிடுறான். அப்படியே ரைடு நடந்தாலும் அவனுக்கு எதிரா எதுவுமே வெளில வராத மாறி பண்ணிடுறான். நிறைய கொல. மர்ம மரணம்னு இந்த கேஸ்ஸ எடுத்து நடத்த ஆரம்பிச்சதுல இருந்து பாக்குறேன்.
சுடரோட அப்பா இறந்தது கூட அந்த ரேடியேஷன் அட்டாக்னால தான்னு சொன்னா. ஆனா எதுக்கும் எங்க கிட்ட ஆதாரம் இல்ல. சுடர் காணாம போறதுக்கு ஒன் வீக் முன்னாடி எனக்கு கால் பண்ணிருந்தா.
'மேம் இந்த முறை அவனால தப்பிக்கவே முடியாது. எங்கிட்ட வலுவான ஸ்டாங்கான ஒன்னு மாட்டிருக்கு.' ன்னு சொன்னா. என்னன்னு ஃபோன்ல சொல்ல. நேர்ல வந்து சொல்றதா சொன்னா. "
"ஒரு நிமிஷம்… இது சொல்லும் போது சுடர் எங்க இருந்தாங்க? அரசனூர்லயா! இல்ல சென்னைலயா!"
" பெங்களூர்ல."
"பெங்களூர்??"
"எஸ்… அங்க தான் இருக்குறதா சொன்னா.“
“ஏ அங்க போனாங்க?“
“ஃப்ரெண்ட பாக்கன்னு சொன்னா.“
"யாரு?"
“ஐ டோண்ட் நோ."
“எப்ப திரும்பி வந்தாங்க?“
“காணாம போன அன்னைக்கி காலைல தான் சென்னைக்கே வந்தா. மறுநாள் காலைல நாங்க மீட் பண்றதா இருந்தது. ஆனா பாத்துக்கவே முடியல."
"அப்ப அந்த எவிடென்ஸ்."
"அதுவும் சுடரோட சேந்து காணாம போய்டுச்சி." என்க, பைரவி சோர்ந்து போனாள்.
'போற எல்லா பக்கமும் கதவ சாத்திட்டா எப்படி?' என்றிருந்தது.
" பட், அது சிராஜ் கைக்கு கிடைக்கல." என்றாள் பவதா.
"எப்படி இவ்ளோ உறுதியா சொல்றிங்க மேம்?"
"எப்படின்னா! இதுவர நம்ம சைடுல இருந்து தான் ஆதாரங்கள தேட நிறுபிக்கன்னு டயம் கேட்டு வாய்தா வாங்கிட்டு இருந்தோம். முதல் மொற சிராஜ்ஜோட வக்கீல் நாகேந்திரன் வாய்தா வாங்கி பதுங்குறத பாக்கும் போது எனக்கு அப்படி தான் தோணுச்சி. அவனுக்கு அந்த மாதிரி ஒரு ஆதாரம் இருக்குன்னு தெரியும். அத வெளில வரவிடாம பண்றேன்னு என்னை அப்பப்ப மிரட்டுவான். என்னோட ஒவ்வொரு செயலயும் கண்கானிக்க ஆள் வச்சிருக்கான். இன்னும் கொஞ்ச நாள் தான். இதே மாதிரி பண்ணி கேஸ்ஸ இழுத்தடிச்சி ஒன்னுமில்லாம ஆக்க ஃப்ளான் போட்டிருக்கானுங்க."
"அப்போ சிராஜ் கைக்கு ஆதாரம் போகல! "
"எஸ்… என்னோட கெஸ் சரின்னா அது சுடர கடத்துனவிங்க கிட்ட தான் இருக்கணும். இல்ல சுடர் அத எங்கையாது மறைச்சி வச்சிருக்கணும்."
"அப்போ சிராஜ் கடத்தலயா?"
“கடத்திருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஏன்னா சுடருக்கு கொஞ்சம் எதிரிங்க அதிகம் தான். இதுக்கு முன்னாடி அக்ஸிடெண்ட் ப்ளாக் மெயில் மாதிரி நிறைய அட்டெம்ட் நடந்திருக்கு.“
"அப்போ சுடரக்கா மரணத்துக்கும் சிராஜ்க்கும் சம்மந்தம் இல்லையா... ஒரே குழப்பமா இருக்கு… "
"அதே குழப்பம் தான் எங்களுக்கும். ரெண்டு கேஸ்ஸும் ஒரே ஆள காட்டுதா. இல்ல வேற வேற ஆளு செஞ்சானான்னு தெரியல.“
"ரொம்ப நன்றி மேடம். என்னை மேக்கொண்டு குழப்பி விட்டதுக்கு." என்றாள் நக்கலாக.
விக்னேஷ், "மிஸ் பைரவி.. இப்ப சொன்ன தகவல்ல இருந்து எதாவது நூல் கிடைச்சதா?"
" நூல் இல்ல. பெரிய நூல் கயிறே சிக்கிருக்கு."
"கயிறா?"
" ம்… கொஞ்ச நாளைக்கி முன்னாடி கண்ணாயிரம் அங்கிளோட பொண்ணு தாமரைய யாரோ கடத்த பாத்திருக்காங்க. யாருன்னு தெரியாம இதுநாள் வர இருந்தேன். இப்ப நீங்க சொன்ன கதைய வச்சி பாக்கும் போது அது சிராஜ்ன்னு உறுதியாகிப் போச்சி. கேஸ்ஸ வாப்பஸ் வாங்க வைக்க கண்ணாயிரம் அங்கிள பயமுறுத்தி மிரட்டி பாக்க இத பண்ணிருக்கான்.“
“ஓகே… பட் இதுல நீ ஏறுற அளவுக்கு கயிறு எதுவும் இல்லையே.“
“இருக்கு. கிரிஸ்டல் மெத்.“
“வாட்… யூ மீன் ஐஸ்… “
“எஸ்… சுடரக்கா உடம்புல அந்த போதப் பொருள அதிகப்படியா ஏத்திருக்காங்க. அதே நேரம் தாமரைய கடத்த பாத்தவங்க கிட்டயும் அதே ஐஸ். இப்ப தாமரைய கடத்துனது சிராஜ் தான்னு உறுதி ஆகிட்டா. சுடர் அக்கா கேஸ் பின்னாடியும் சிராஜ் தான் இருக்கணும். “
“சிராஜ் தான்னு தாமரைய கடத்துனதுன்னு எப்படி உறுதி படுத்துவ?“
“சிராஜ்க்கும் தாமரைக்கும் தொடர்பு இருக்குறது உண்மன்னா தாமர மறுபடியும் கடத்தப்படுவா. இதே நேரம் சுடர் அக்கா கேஸ்ஸ சிபிஐக்கு மாத்தச் சொல்லி நடக்கப் போற போராட்டத்துல ப்ராப்ளம் வரலாம். அப்படி ரெண்டும் நடந்தா…“
“கல்ப்ரேட் சிராஜ்.” பவதா.
பைரவி, “நடக்கலன்னா…“
விக்னேஷ், “மறுபடியும் எல்லா கோட்டையும் அழிச்சிட்டு முதல்ல இருந்து போடணும்.“
“ரொம்ப சரியா சொன்னிங்க ஸார். பட் அப்படி நடக்காது. எனக்கு நம்பிக்கை இருக்கு. என்னோட கெஸ் சரியா தான் இருக்கும். இந்த மூணு கேஸ்ஸும் ஒன்னுக்குள்ள ஒன்னுன்னு முடிச்சி போட்டு வச்ச மாதிரி சிக்கலா இருக்கு. ஒரு முடிச்ச அவிழ்த்தாலே போதும். கண்டிப்பா எல்லாத்தையும் சால்வ் பண்ணிட முடியும்."
"ஓவர் கான்ஃபிடன்ஸ் மாதிரி தெரியுது. இது உடம்பு ஆகாதேம்மா." என்று கேலியாக சொன்னாலும், விக்னேஷ்ஷிற்கு அவளின் தன்னம்பிக்கை பிடித்திருந்தது.
"நான் தாங்கிப்பேன் ஸார். எல்லாத்தையும் தட்டி தூக்கிடுவேன்."
பவதா, "பைரவி, இது விளையாட்டு காரியம் இல்ல. கவனமா இருக்கணும்.. ஏன்னா சாரதாம்மால்ல இருந்து என்னோட ஃபோன் வர இந்த கேஸ் சம்மந்தப்பட்ட எல்லாரோட ஃபோன் காலும் ஒட்டு கேக்க படுது. "
"ஒட்டா!! எப்படி சொல்றிங்க?"
" சுடர் ஆதாரம் கிடைச்சிருக்குன்னு முதல்ல சொன்னது எங்கிட்ட தான். சாரதாம்மாக்கு கூட இத பத்தி தெரியாது. எனக்கும் அவளுக்கும் மட்டும் தெரிஞ்ச ஒன்னு வெளில போதுன்னா அது ஃபோன் மூலம் தான். “
"ஓ… அதா எங்கிட்ட நீங்க ஃபோன்ல பேசலயா."
"ஆமா. நீயும் கவனமா இரு. முடிச்ச மட்டும் அரசனூர் கேஸ்ஸ விட்டு விலகியே இரு. ஓகே. " என்க, பைரவி எல்லா பக்கமும் தலையசைத்தாள். கார் சின்ன குலுங்கலுடன் நிறுத்தப்பட்டது. அபினாஷ் அவளின் சாப்பருடன் பஸ் ஷாப்பில் காத்திருக்க, வேகமாக இறங்கியவளுக்கு ஆயிரம் பத்திரங்களை சொல்லு சென்றனர் அந்த தம்பதியினர்.
தொடரும் ... 💛அனிதா குமார்💛 கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..