அத்தியாயம்: 12
"இப்ப முடிவா என்ன தா சொல்றிங்க."பவித்ரா அதட்டலாகக் கேட்டாள்.
சம்பத்,"கொஞ்ச நாள் பொறுப்போம்னு சொல்றேன்."
"உங்களுக்கு என்னப்பத்தி கவலையே இல்லையா. நா படுற கஷ்டமும் அவமானமும் ஏ உங்களுக்குப் புரிய மாட்டேங்கிது. ப்ளீஸ் எனக்காக ஒத்துக்கோங்களேன்."எனக் கெஞ்சவே தொடங்கி விட்டாள்.
ஆனால் எதிரில் இருப்பவனுக்கு கல் மனம் போலும் கரையும் தன் மனைவியின் கண்ணீருக்கு இறங்க மறுத்தான் சம்பத்.
இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டது. இன்னும் இவர்களுக்குக் குழந்தை இல்லை. பவித்ராவிற்கு குழந்தை வேண்டும். எனவே மருத்துவரிடம் சென்று பரிசோதித்துப் பார்த்தாள். அவளுக்கு எந்தக் குறையும் இல்லை.
சம்பத்தையும் அழைத்தாள். மனைவியின் விருப்பத்திற்காக மருத்துவரைச் சென்று பார்க்க, அவனுக்கும் எந்தக் குறையும் இல்லை. இருவருமே ஆரோக்கியமாக இருக்கும் நிலையில் குழந்தை உண்டாகுவதில் தாமதம் ஆவதன் காரணம் தெரியவில்லை.
மருத்துவர் இருவரின் வயதையும் கருத்தில் கொண்டு சில காலம் காத்திருக்கும் படி கூறினார். ஆனால் பவித்ராவிற்கு அதில் உடன்பாடு இல்லை. செயற்கை முறையில் கருதரிக்க வேறொரு மருத்துவரை அணுகி முன்பதிவும் செய்து விட்டு, கணவனை அழைக்கிறாள். அவன் வர மறுக்கிறான். இது தான் பிரச்சனை.
"பவித்ரா… நீ சொல்ற ட்ரீட்மெண்ட்க்கு அவசியமே இல்லன்னு நா நினைக்கிறேன். நல்லா இருக்குற உடம்ப ஏ ஊசி ஏத்தி கெடுத்துக்கனும். நமக்கு இன்னும் வயசாகிடல."என்றான் சம்பத்.
"அதே தா நானும் சொல்றேன். 35 வயசுக்குள்ள இந்த ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டா நல்ல பயன் இருக்கும்னு சொல்றாங்க."
"உனக்கு 35 ஆக இன்னும் 11 வர்ஷம் இருக்கு பவி. வெய்ட் பண்ணுவோமே."
"அதுக்குள்ள எனக்கோ இல்ல உங்களுக்கோ எதாவது நடந்துடுச்சின்னா. நமக்கப்றம் குழந்தன்னு ஒன்னு வேணும்ல. யோசிங்கங்க… ப்ளீஸ்…"என ஆசையாகப் பேசி அவனின் சம்மதம் பெற பார்க்க,
"நீ என்ன சொன்னாலும் என்னால ஏத்துக்கு முடியல பவி. அட்லீஸ்ட் ஒரு ஐஞ்சு வர்ஷமாது வெய்ட் பண்ணீட்டு, நீ சொல்ற ட்ரீட்மெண்ட்க்கு போவோம். எல்லாத்துலையும் அவசப்பட கூடாதும்மா. இயற்கையா வழி இருக்கும் போதும் ஏ செயற்கையா பெத்துக்கனும்."என நயந்து பேசி மனைவியைச் சமாதானம் செய்ய முயன்றான்.
"என்னால காத்திருக்க முடியாது. எனக்கப்றம் கல்யாணம் பண்ண என்னொட ஃப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் பேபி இருக்கு. எனக்கு மட்டும் தா இல்ல. ஏ இந்து இப்ப மாசமா இருக்கா. செக்கேண்ட் பேபி அவளுக்கு. நமக்கும் குழந்த வேணும்னு உங்களுக்குக் கொஞ்சங்கூட தோனவே இல்லையா."என்றவளின் புலம்பல் பொறாமையாகத் தெரிந்தது சம்பத்திற்கு.
வீடு, பணம் என எதற்கும் குறைவில்லாத போதும் சின்ன சின்ன விசயங்களில் அவள் பிடிக்கும் பிடிவாதம் காரணமற்றதாகவும் தேவையற்றதாகவும் தெரிந்தது. அதுவும் வைசுவின் மகனைத் தன் மடியில் கிடத்தி கௌதம் செய்த சீர்களைப் பார்த்ததில் இருந்தே குழந்தை வேண்டும் என அணத்துகிறாள், அது தன் மகவுக்கு கிடைக்க வேண்டியது என்று.
கௌதமின் தங்கையாகத் தன் மகவின் இருக்கையில் வேறு ஒருவரின் மகனைக் கிடத்தி, அதற்குத் தாய்மாமனாக இருந்து கௌதம் செய்முறைகளைச் செய்தது பவித்ராவிற்கு பிடிக்கவில்லை. அவளின் குழந்தைக்குக் கௌதமை மாமனாக அமர வைப்பாளா என்றால் கிடையாது. அதற்குக் கலியபெருமாளின் சம்மதம் கிடைக்காது என்று தெரியும்.
ஆனாலும் அதை மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஏனென்றே தெரியாமல் கௌதம் மீதும் எப்பொழுதும் கூடவே சுற்றும் ஹரிணி மீதும் வெறுப்பை வளர்த்துக் கொண்டாள் பவி.
"நா அடுத்த வாரம் சென்னைல அந்த டாக்டர்ட்ட அப்பாய்ன்மெண்ட் வாங்கிருக்கேன். நீங்கக் கண்டிப்பா வர்றீங்க."எனச் சொல்லிச் சென்றாள் பவித்ரா.
ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்ற காரணம் தெரியாது குழம்பிப் போய் நின்றான் சம்பத்.
"அண்ணே இதுக்கு பேரு தா சண்டையா. நா இப்பத்தா மொத தடவ பாக்குறேன்."பிரகாஷ். பவியும் சம்பத்தும் அவர்களின் அறையில் வாதம் செய்திருந்தால் யாருக்கும் தெரியாமல் இருந்திருக்கும். இவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்தது கொல்லைப்புறத்தில். எனவே ஒட்டுக் கேட்க வேண்டிய அவசியமின்றி அனைவருக்கும் தெரியும் படி நடந்தது. அந்த அனைவரில் பிரகாஷும் ஒருவன்.
"இதென்ன பிரமாதம். இத விட ஸ்பெஷலா உங்கண்ணனும் ஹரிணியும் போடுவாங்க. அதுல ஆக்ஷன் ஸீன்லாம் இருக்கும். ரஜினி ஸார் மாறிப் பறந்து பறந்து அடிக்கிறது, கோவை சரளாமாறிப் பொறட்டி பொறட்டி எடுக்கிறது. அதெல்லாம் உனக்குப் பாக்க குடுத்து வைக்கல."
"நிஜமாவா… இப்பையுமா சண்ட போட்டுக்கிறாங்க. தரன் அண்ணே ஹரிணிக்கெல்லாம் பயப்படாதே."
"உங்கொண்ணே எவ்வளோ பெரிய ஆளா இருந்தா என்ன. பொண்டாட்டிக்கி பயந்து தா ஆகனும். அத நேர்ல பாத்தவென்டா நா."
"அப்ப உங்க பொண்டாட்டி இந்து கூட லேட்டெஸ்ட் வர்ஷன் ஆஃப் கோவைசரளான்னு சொல்றிங்க. அடிக்கும்போது உங்க மேல ஏறி உக்காந்து அடிப்பாளா இல்ல கட்ட கத்தி ன்னு வேற எதாவது."பிரகாஷ் கேட்க அவனை முறைத்தான் கௌதம்.
"இல்ல… இதுவரைக்கும் நீங்கச் சண்ட போட்டதில்லயா? ஒரு வேள போடனும்னு ஐடியா இருந்தா. தம்பிய கூப்பிடுங்க. தம்பி நொறுக்கு தீனி லாம் வாங்கி வச்சிட்டு ரெடியா இருப்பேன். சண்ட ஸீன் பாக்க."
"அடிங்க கொய்யாலே… உ நார வாய தூக்கிகிட்டு ஏன்டா எங்குடும்பத்துக்குள்ள வார. நாங்க ஒத்துமையா இருக்குறது உனக்குப் பொறுக்கலையா."என விரட்டப் பிரகாஷ் ஓடினான்.
செல்லும் அவனைக் காண்கையில் கௌதமின் இதழிகளில் புன்னகை வந்தது. ஏனெனில் இந்து இதுவரை அவனுடன் பிடிவாதம் பிடித்ததே இல்லை. பிடிவாதம் செய்தால் தானே சண்டை மூளும். தன்னை புரிந்து நடந்து கொள்ளும் மனையாள் கிடைத்ததில் உள்ளம் பெருமிதம் கொண்டது. கூடவே தங்கையின் குணம் அறிந்ததால் கவலையும் ஒட்டிக் கொண்டது.
கௌதமிடமிருந்து தப்பிப்பதாக நினைத்து ஓடியவன் எதிலோ முட்டிக் கீழே விழுந்தான் பிரகாஷ்.
அது வேறுயாரும் அல்ல, எதிரில் யார் வருகிறார்கள் என்று நிமிர்ந்து கூடப் பார்க்காது, தலையைத் தன் ஃபோனில் நுழைத்தபடி நடந்து வந்த ஜெனிபர் மீது தான்.
இம்முறை பையன் சுதாரித்து விட்டான். அவன் கீழே விழுந்தான் தான். ஆனால் அவளையும் இழுத்ததால் இருவரும் சேர்ந்தே விழுந்தனர். அவன் ஒரு புறம் என்றால் இவள் அவனிடமிருந்து ஒன்றிரண்டு அடிகள் தள்ளி விழுந்திருப்பாள்.
இருவரும் தனித்தனியே தரையில் விழுந்து கிடக்க, அவர்களின் கரம் மட்டும் இணைந்திருந்தது. தட்டு தடுமாறி எழுந்தவன், அவளைப் பிடித்திருந்தத கரத்தை இழுத்து தூக்கி விட ஜெனி பிரகாஷை முடிந்த வரை முறைத்தாள். ஏனெனில் அவன்பற்றி இருந்த கரம் கண்ணி சிவந்திருந்தது. வலியும் எடுத்தது. விழும் போதும் சரி எழும் போதும் சரி, ஏன் இப்போது வரை கூட அவன் அவளின் கரத்தினை விடவில்லை.
"ஸாரிங்க… வலிக்குதா…"எனக் கையை விட்டு அன்று அவள் கேட்டது போல் கேட்க,
"பழி வாங்கிட்டிங்கள்ள. உங்கள தள்ளி விட்டதுக்கு என்ன நல்லா பழி வாங்கிட்டிங்க. நா தெரியாம தா பண்ணேன். ஆனா நீங்க என்ன வேணும்னே பிடிச்சி இழுத்து கீழ விழ வச்சிட்டிங்க. ஆ… எனக்கு வலிக்குது."எனத் தன் கரத்தினை தடவிய படி சிணுங்க…
"ஐய்யையோ… அப்படில்லாம் இல்லங்க. நீங்க வர்றத நா பாக்கலங்க. நம்புங்க… நா வேணும்னுலாம் பண்ணல."எனச் சொல்லிக்கொண்டே மருந்தினை எடுத்து வந்து கொடுக்க, அதை அவள் தன் கரத்தில் தடவி கொண்டிருந்தாள்.
"நல்லா சிவந்துருச்சி…"என்றவளுக்கு அழுகை வந்தது.
"ஐய்யைய அழாதீங்க. பிஞ்சு உடம்பு போல உங்களுக்கு. தொட்டதும் சிவந்துடுச்சு. நல்லா சாப்பிட மாட்டிங்களோ... எங்கம்மாட்ட சொல்லி வக்கிறேன். ஆனா அவங்க குடுக்குற எல்லாத்தையும் மிச்சம் வைக்காம சாப்பிடனும். அப்பதா உடம்பு வைக்கும். ஈருகுச்சி மாறி இருந்தா நாளைக்கு எனக்கு தா கஷ்டம். அதுனால தா சொல்றேன் நல்லா சாப்பிடுங்கன்னு."எனச் சிறு குழந்தையை மிரட்டுவது போல் பேச,
"உங்களுக்கு எதுக்கு கஷ்டம்?."எனக் கேட்டாள் புரியாமல்.
"உங்க கை உடைஞ்சுச்சுன்னா என்னதான சொல்லுவாங்க. அத தாங்கச் சொன்னேன். வேற எதுவும் இல்லங்க."என்றான் மழுப்பலாக.
அவள் நம்பாமல் பார்க்கவும், தன் பிடறி முடியைத் தடவிய படி தலை குனிந்து கொண்டான். பிரகாஷின் முகத்தில் சிறு வெட்கம் கூட வந்தது. அவனை முழுதாக ஒரு நிமிடம், தலை முதல் கால்வரை தன் விழிகளால் ஊர்வலம் செல்ல விட்டாள் மங்கை.
மாநிறம். கருகருவெனக் கேசம். அதை முறையாகப் பராமரித்து வைத்திருந்தான். டிரிம் செய்யப்படாத மீசை. அதை முடிவை முறுக்கி விட்டிருந்தான். பாரதியார் மீசை போல் வைக்க முயற்சி செய்திருக்கிறான். அதிலும் பல வாரம் சேவ் செய்யாத தாடி, எண்ணெய் தேய்த்து வளர்கிறான் போலும். இரு விரல்களால் தன் மீசையையும் தாடியையும் அவ்வபோது தடவி விட்டு ஒழுங்கு படுத்துவான். அது அழகாக இருக்கவும் ரசிக்கும் படியும் இருக்கும்.
தினமும் அதிகாலை எழுந்து எது செய்கிறானோ இல்லையோ, சிலம்பம் பயிற்சிக்கு மட்டும் கட்டாயம் சென்று விடுவான். ஏற்கனவே ஒரு முறை தோற்றுப்போய் ஊரின் முன் அவமானம் ஆகியதால், விடாமல் பயிற்சி செய்து தன் திறமையை மெருகேற்றிக் கொண்டான். அடர் சிவப்பு நிற அரைக்கை சட்டையில் வெள்ளை வேட்டி கட்டி, எந்தப்பக்கம் பார்த்தாலும், இவனை ரைஸ் மில் ஓனர் என்று சொல்வதற்குறிய பத்து பொருத்தமும் பக்காவாக இருக்கா என்றால் தெரியவில்லை.
விளையாட்டுப் பேச்சு வீட்டாரிடம் மட்டுமே. மற்றவர்களிடம் அவன் காட்டும் முகம் வேறாக இருக்கும். கைப் பிள்ளை இப்போது வளர்ந்து அழகிய ஆண் மகனாக மாறி விட்டான். எனவே இவனைக் கைப்பிள்ளை என்று சொன்னால் கோபம் வருகிறது.
அனைத்தையும் அளந்தவளின் பார்வை அவனின் புஜத்தில் கட்டியிருந்த வெள்ளி தாயத்தில் வந்து நின்றது. புருவம் சுருக்கி என்ன அது என்பது போல் பார்க்க…
"எனக்குச் சின்ன வயசுல அடிக்கடி காய்ச்சல் வருமாம். அப்ப அல்லா கோயில்ல மந்திரிச்சி கட்டி விட்டாங்க. நா பெரியவனானதும் ஆம்ஸ் பெருசாகப் பெருசாக நா எக்ஸ்ட்ரா கயறு கட்டி மாட்டிக்கிட்டேன்."என்றான் விளக்கமாக.
"இந்தத் தாயத்து இல்லன்னா, இப்பையும் உங்களுக்குக் காய்ச்சல் வருமா…"என முக்கியமான சந்தேகத்தைக் கேட்க, அவன் தெரியாது என்பது போல் உதட்டை வளைத்துத் தோள்களை உயர்த்த, ஒரு கணம் அதை ரசித்தவள் சிரித்தபடி தலையசைத்து திரும்பிச் செல்லப் பார்க்க…
“ஜெனி…"என்று அவன் அழைத்ததால் திரும்ப,
“பர்.… என முடித்தான்.
"உங்க ஃபோன். அத விட்டுட்டு போறிங்க."என எடுத்துக் கொடுக்க, ஜெனிபர் மீண்டும் அலறினாள். ஏனெனில் அவளின் ஃபோன் கோமா நிலைக்குச் சென்றிருந்தது. ஸ்க்ரீனும் கீறல் விட்டிருந்தது.
அதைத் தட்டி தட்டி முதலுதவி செய்ய, ஆன் ஆகவில்லை அது. ஜெனிபரின் கண்ணிலிருந்து எப்போது வேண்டுமானாலும் விழும் என்பது போல் கண்ணீர் துளிகள் உருண்டு திரண்டு வந்து விழி ஓரத்தில் நின்றன.
"கொரியன் மொபைலா இது. அதா விழுந்ததும் உடஞ்சிருச்சி போல. ஏங்க சம்பாதிக்கிறேன்னு சொல்றிங்க, ஒரு நல்ல கம்பெனி ஃபோனா வாங்கி யூஸ் பண்ணக் கூடாது."எனக் கேலி செய்கிறானா இல்ல பரிதாபப்படுகிறானா என ஜெனியால் கணிக்க முடியாத படி பேச… கௌதம் வந்தான்.
'என்ன இங்க சத்தம் என்ன இங்க சத்தம்… ' எனக் கேட்டபடி,
"இங்க பாருங்க கௌதம். இவரு என்னோட ஃபோன்ன உடச்சிட்டாரு."எனக் குற்றம் சுமத்தினாள் பெண்.
"ஏன்டா உனக்குத் தூக்கிப்போட்டு விளையாட வேற எதுவும் கிடைக்கலையா. காஸ்ட்லி மொபைல கந்தல் கோலமாக்கி வச்சிருக்கியே டா. பாவி…"
"நா தூக்கி போடலண்ணே."
"அப்றம் எப்படி விழுந்துச்சு."
"அது நா ஓடி வந்துட்டு இருந்தேன்னா … அப்ப இந்தப் பொண்ணு எகுத்து யாரு வர்றான்னே தெரியாம வந்து எம்மேல மோத, நாங்க ரெண்டு பேரும் கீழ விழுந்துட்டோம் ண்ணே. அப்ப அவுங்க கைல இருந்த ஃபோன் தூரமா விழுந்து உடைஞ்சிடுச்சி. ஆனா நா அவங்கள பத்திமா காப்பாத்திடேன் ண்ணே."
"ஏண்டா, கீழ விழுந்தேன்னியே, ரெண்டு பேரும்மா…"என ரகசியம்போல் கேட்க,
"ஆமாண்ணே. ஆனா நா தாங்கிப் பிடிக்கிறதுக்குள்ள அந்தப் பொண்ணு உசார அந்தப் பக்கம் விலகி விழுந்துடுச்சி. அதுனால என்னோட நெஞ்சில விழ வேண்டிய பொண்ணு ஜஸ்ட் மிஸ்ஸாகி தரைல லேண்ட் ஆகிடுச்சு. தரைல நோ பார்க்கிங் ஃபோர்ட் ஒன்னு வக்கனும். அப்பதா யாரும் தரைல விழமாட்டாங்க."
"தாங்கிப் பிடிக்க முடியலன்னு தம்பி ரொம்ப வருத்தப்படுறீங்களோ…"
"கொஞ்சமா…"என இருவரும் ரகசியம் பேச, கடுப்பான ஜெனி.
"இப்ப என்னோட ஃபோனுக்கு என்ன வழி… இங்க இத ரீப்பேர் பண்ண கடை இருக்கா."எனக் கத்தினாள்.
கௌதம்,"இருக்கு ஜெனி. ஆனா அதுக்கு நீ டவுனுக்குள்ள கொஞ்ச தூரம் போனும். கொறஞ்சது அர நாள் ஓடிப் போய்டும். அதுவரையும் நீ சும்மா உக்காந்திருந்தா உன்னோட முதலாளி வந்து கத்துவா. என்ன சொல்ற?"
"சரி நாளைக்கி நா ஊருக்குள்ள போறேன். உங்களுக்குக் கட எங்கருக்குன்னு தெரியுமா?. லொக்கேஷன ஷேர் பண்ணுங்களே ப்ளிஸ்."எனக் கவலையாகக் கேட்டவளை பிரகாஷை முறைத்தான்.
"நீ ஏ தனியா போனும்.? டேய் இன்னைக்கி சாயங்காலம் இல்ல, நாளைக்கி காலைல நீ கூட்டீட்டு போய் என்னான்னு பாத்துட்டு வா. உடச்ச அவனே சரி பண்ணி தருவான்ம்மா. கவலப்படாம போ ஜெனி."என்றவனுக்கு சரியெனத் தலையசைத்து சென்றாள்.
"அண்ணே என்னோட அப்பாயின்மெண்ட்ட நீ ஏண்ணே குடுக்குற. ஊருக்குள்ள எனக்கு எவ்ளோ வேல இருக்குன்னு தெரியுமா. நா பிஸிண்ணே."
"டேய் அண்ணே உனக்குக் கரெக்ட் பண்ண வாய்ப்பு ஏற்படுத்திக் குடுத்தா… அத வேஸ்ட் பண்ணாம யூஸ் பண்ணிக்க."
"புரியலண்ணே."
"டேய்… ஜெனிய டவுனுக்குள்ள கூட்டீட்டு போய்த் திரும்பக் கூட்டீட்டு வரனும், அதுவும் தனியா… நீங்க ரெண்டு பேர் மட்டும் பைக்ல. காலைல போனா சாயங்கால வர உங்கூடவே இருப்பா. எப்படி…"எனக் கண்சிமிட்டிய கௌதமை வாரி அணைத்தவன்.
பார்த்த முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே
காட்சிப் பிழை போலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறிப்பின் எனை இழுத்தாய்
என்பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம்
என்றும் மறையாதே
எனச் சந்தோஷமாகப் பாடிச் செல்ல,
"தம்பி ரொம்ப சந்தோஷமா இருக்குற மாறித் தெரியுதே. இது கூடாதுல்ல… கலச்சிடுவோம்…"எனக் கௌதம் முணுமுணுத்துப் பிரகாஷிற்கு கேட்டிருங்க வாய்ப்பில்ல…
தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..