அத்தியாயம்: 13
தட்டில் இரண்டு உளுந்த வடையை எடுத்த கௌதம், அதை ஸ்பூனில் உதவியால் அறுவை சிகிச்சை செய்து உள்ளிருக்கும் மிளகு மற்றும் பச்சை மிளகாய்களை பத்திரமாக எடுத்து வெளியை வைத்து விட்டு, ஒரு கிண்ணம் நிறைய சாம்பாரை ஊற்றி அதனுள் வடையை புதைத்து வைத்தான்.
"இது அநியாயம் ண்ணே."பிரகாஷ். கொஞ்ச கோபமா இருப்பது போல் தெரிந்தது.
"எது டா அநியாயம். உனக்கு வேணுமுன்னா உள்ள போய் வாங்கிக்க டா. இது மை வைஃபுக்கு எடுத்துட்டு போறேன். மிளகு சாப்ட்டா என்னோட பேபிக்கும் அவளுக்குள்ள இருக்குற பேபிக்கும் உறைக்கும்ல. அதா எல்லாத்தையும் டிஸ்போஸ் பண்ணீட்டு என்னோட மதிய பாக்க போறேன்."
"நீ பண்றது எதுவுமே நல்லா இல்லண்ணே."என மேல் மூச்சு வாங்க பேசினான்.
"டேய்… உளுந்த வடைய சாம்பார்ல ஊற வச்சி சாப்ட்டா உடம்புக்கு நல்லதுன்னு இஸ்ரோ விஞ்ஞானிகளே சொல்றானுங்க. பாக்க வேற மாறி இருந்தாலும், இதோட ருசிய அடிச்சிக்கவே முடியாது. இந்தா… அண்ணே உனக்காக ஒரு வாய் ஊட்டுறேன்."எனப் பிரகாஷிற்கு பங்கு குடுக்க, அதை வாங்கிக் கொண்டவன், மீண்டும் ஆரம்பித்தான்.
"நியாயமா ண்ணே இதல்லாம்."
"டேய், இதுக்கு மேலஉனக்குக் குடுக்க முடியாது டா. என்னோட மதிக்கி இது. போடா…"என எழுந்து செல்ல, பிரகாஷிம் பின்னாலேயே சென்று, பாடிய பாட்டையேதிரும்பத் திரும்பப் பாடினான்.
"டேய், என்னடா வேணும் உனக்கு. பின்னாடியே வந்து காதுக்குள்ள தொனத்தொனன்னுடு இருக்க."கடுப்பாகிப் போனது அவனுக்கு.
"கடுப்பாகுதா. எனக்கும் இப்படி தான இருந்துச்சி. இன்னைக்கி காலைல நீங்கப் பண்ண கூத்தால."
"அப்படி என்ன பண்ணிட்டேனு நீ என்ன பெரிய வக்கிலு மாறி விசாரிக்கிற."
"உங்களுக்குத் தெரியாதா. அப்ப நா ஃபிளாஷ் பேக் வேணும்னா ஓப்பன் பண்ணி சொல்லவா."
"சரி சொல்லு கேப்போம். ஆனா வேகமா சொல்லி முடிச்சிடனும். நமக்கு டெலிவரி வேல இருக்கு."
காலை ஒன்பது மணி இருக்கும். ஜீன்ஸ் டீ சர்ட் என டிப்டாப்பாகத் தயாராகி வந்தான் பிரகாஷ்.
"எங்க கைப் புள்ளைக்கி யாரோ மேக்கப் ஜாஸ்தியா போட்டு விட்டுருக்காங்க போலையே. மூஞ்சில மட்டும் முக்காக் கிலோ பவுடரு. பத்தடி தள்ளி இருந்தாலும் வீச்சம் வர்ற அளவுக்குச் சென்ட்டுனு குதூகலமா இருக்குறாப்ல தெரியுது. என்ன விசயம்."எனக் கேலி செய்தான் சம்பத்.
"உங்களுக்கு எல்லாம் கிடைக்காத அரிய வாய்ப்பு. எனக்குக் கிடைச்சிருக்கு மச்சான் ஸார். நா அத யூஸ் பண்ணி ஹப்பியா இருக்க போறேன்."
"என்ன வாய்ப்பு டா அது."
"என்ன விசயம்னு வெளில சொன்னா நீங்க எல்லாரும் வயிறு எரீவிங்க. எதுக்கு உங்க வயித்தெரிச்சல கிளப்பீட்டு. எனக்கு ரொம்ப நல்ல மனசு பா. அதுனால சொல்லமாட்டேன்."என் பிரகாஷ் கூற கௌதம் அவசர அவசரமாக அவனிடம் வந்தான்.
"டேய், ஜெனியோட ஃபோன்ல டிஸ்ப்ளே தா போயிருக்கு. அண்ணே நெட்ல ஆர்டர் போட்டுட்டேன். நாளைக்கி வந்திடும். நானே சரி பண்ணி தாரேன்னு சொல்லிட்டேன். நீ வெட்டிய அமையாத. சரியா…"என்க, பிரகாஷ் அதிர்ந்து போனான்.
"அண்ணே என்னண்ணே சொல்ற. உன்னைய நம்பித்தா தம்பி பல ப்ளான் போட்டு வச்சிருக்கேன். கெடுத்துடாதண்ணே. நா அவள கூட்டீட்டு போய்யே சரி பண்ணிக்கிறேன்ண்ணே."என்றான் வேகவேகமாக.
சம்பத்,"ஓ… உ ஆளு கூட வெளிய போப்போறயா. இதத்தா அரிய வாய்ப்புன்னு சொன்னியா."
"ம்… எஸ்… டேட்டிங் போப்போறோம் மச்சான் ஸார். நானும் அவளும் பைக்ல ஊர் சுத்தி பாத்து, பேசி, பழகி, காதலிக்க போறோ."கற்பனை கடலில் மிதந்த படி சொல்ல.
சம்பத்,"என்னடா ப்ளான் போட்டு வச்சிருக்க."
"சொல்றேன் கேளுங்க. காலைல சாப்பாட்ட முடிச்சிட்டு நானும் அவளும் பைக்ல ஏறிச் செல்போன் கடைக்கி போய்ச் சர்வீஸ்க்கு குடுத்துட்டு, பக்கத்துலையே ஒரு நல்ல ஏசி தியேட்டரா பாத்து கையில பாப்கார்ன் வச்சிக்கிட்டே ஒரு படம். கழுத அது என்ன படமா வேண்ணாலும் இருந்துட்டு போட்டும். நா அத பாக்க போறது இல்ல. என்னோட கண்ணு ஜெனி மேல மட்டும் தா இருக்கும்.
அப்றம் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலா பாத்து எங்க லன்ச்சா முடிச்சிட்டு, ஃபோன வாங்கிட்டு வந்திடலாம்னு இருக்கேன். வரும்போதே பக்கத்தூரு கம்மாய்ல கொஞ்ச நேரம் நின்னு மீன் புடிக்க ட்ரை பண்ணலாமுன் இருக்கேன். எப்படிண்ணே என்னோட டேட்டிங் ப்ளான். சாயங்கால நேரம் நம்ம கம்மா கரையில… ம்… சூப்பர்ல."பிரகாஷிற்கு மகிழ்ச்சியாகிப் போனது.
கௌதம்,"அதெல்லாம் சரி. ஏசி டிக்கெட்டுக்கும், காஸ்ட்லி ரெஸ்டாரண்டுக்கும் காசு. எவ்ளோ வேணும்."
"ச்சச்ச… அசிங்கமா காசெல்லாம் தந்து தம்பி அவமானப்படுத்திடாத ண்ணே. உந்தம்பி சாமாளிச்சிப்பேன். நீ உன்னோட கிரெடிட் கார்டு பின் நம்பர் மட்டும் சொல்லு. போதும்."
"எதுபின் நம்பரா… உனக்கு எதுக்கு அது."
"என்னண்ணே லூசு மாறிக் கேள்வி கேக்குற… பில் பே பண்ண உன்னோட கார்டு வேணும்னு. நேத்து நைட்டே இந்துவ கரெக்ட் பண்ணி உங் கிரெடிட் கார்ட் கைல வாங்கிட்டேன். நீ நம்பர் மட்டும் சொல்லுண்ணே. அப்பத்தா பே பண்ண முடியும்."என்றவனை ஏற இறங்க பார்த்தவன்,
"நம்பர் லாம் தர முடியாது. போடா…"எனத் திட்ட, ரோஷம் வந்தது பிரகாஷிற்கு.
காலை உணவு உண்ண வந்த ரிஷி தரனிடம் பிரகாஷ் பணம் கேட்க, அவன் ஏன் எதற்கென்று எந்தக் கேள்வியும் கேட்காமல் சில ஐநூறு ரூபாய் தாள்களை எடுத்துத் தந்தான். இதைப் பார்த்துக் கொண்டே இருந்த கௌதமிற்கு காண்டானது. 'போயும் போயும் அவெங்கிட்டையா காசு வாங்குற… இருடி… ' என மனம் கருவ, நல்லதொரு சந்தர்பத்துக்காகக் காத்திருந்தான்.
"இன்னைக்கி ரைஸ் மில்ல அரவ நடக்குது பிரகாஷ். வெட்டியா ஊர் சுத்தாம வந்து கவனி."எனப் பிரகாஷின் தந்தை அழைக்க, அவன் எந்தப் பக்கம் தலை அசைக்க எனத் தெரியாது முழித்தான்.
"நா பாத்துக்கிறேன் பெரிப்பா. அவெ இருக்கட்டும்."எனக் கூறி தம்பியின் தவிப்பை தரன் போக்கினான்.
"நீ எதுக்கு ப்பா… நாளைக்கி நடக்க போற விழாக்கு வேண்டியது எல்லாம் ஏற்பாட்டையும் நீ தான பாக்கப்போற, சாயங்காலத்துல இருந்து உனக்கும் விக்ரமுக்கும் வேலை அதிகமா இருக்கும். இப்ப நீ வீட்டுல இருந்து ரெஸ்ட் எடு. இவெ சும்மாதான இருக்கான். போவான்."கவியரசன் சொல்ல, அவரை முறைத்தான் பிரகாஷ்.
சிறு புன்னகையுடன் தரன் கிளம்பி ஆலை செல்ல, கௌதம்,"என்ன சித்தப்பு குளிர் விட்டுப் போச்சா. அவன போங்கிற."
"ஹா… அப்படி கேளுண்ணே."
"அவனே ஏசி தியேட்டர்ல குஷன் சீட்டு புக்க பண்ணி படம் பாக்கப் போறான். அவன போய் வெட்டியா ஊர் சுத்துறவன்னு சொல்ற. நக்கலா…"என்க,
"மூவி போறியா… யார் படம் பிரகாஷ். எத்தன மணி ஷோ."வைசு ஆர்வமாகக் கேட்டாள்.
"பத்தர மணிக்கி படம். மதியம் நட்சத்திர விடுதில தரமான சாப்பாடு. என்னடா அண்ணே சொன்னது சரியா."எனக் குறுஞ்சிரிப்புடன் கௌதம் சொல்ல, பிரகாஷின் வயிறுக்குள்ள புளியை கரைப்பது போல் இருந்தது.
"ஏய்… உம்புருஷன கூட்டீட்டு போச்சொல்லு. வந்ததுல இருந்து படுத்துத் தூங்கியை பொழுத போக்குறான். அவெங்கூட போ."என அவள் வருகிறேன் என்று சொல்லும் முன் வராதே என்றான் பிரகாஷ்.
"ம்ச்… இப்ப கூப்டா கூட அவரு வருவாரு. ஆனா நந்துவ வச்சிக்கிட்டு படம் பாக்குறது நடக்குற காரியமா என்ன."எனக் கவலையாக வைசு சொல்ல,
"நாங்க நந்துவ பாத்துக்கிறோம் வைசும்மா.நீ போய்ட்டு வா. டேய் வைசுவயும் கூட்டீட்டு போ."கவியரசன் உத்தரவிட்டார்.
சுதா,"அண்ணா நாங்களும் வர்றோம்ண்ணா."
"எங்களையும் கூட்டீட்டு போண்ணா."என லதாவும் சேர்ந்து சொல்ல,
"அட இத்தன பேரு போனா, தனியா எப்படி சமாளிப்பான்."சம்பத்.
"அதுனால தா நீங்களும் கூடப் போங்கன்னு சொல்றேன். அப்படியே வேலு அண்ணே அபி அண்ணி சித்தின்னு நம்ம குடும்பத்தையே குட்டியானைக்குள்ள ஏத்தி கூட்டுட்டு போங்க."கௌதம் வேண்டும் என்றே இல்லாத ஆளையும் சேர்ந்து இழுக்க, பிரகாஷ் என்ன செய்வான்.
இதில்"நேரமாச்சு கிளம்புங்க."என அனைவரையும் காரில் ஏற்றி அனுப்பி வைத்தான். அதிலும் வேண்டும் என்றே ஜெனியை பிரகாஷ் இருக்கும் காரில் ஏற்றாது வேறு காரில் ஏற்றி விட்டான்.
"அய்யாயிரம் ரூவா குடுத்திருக்கான் பாரு பிஸ்னாரி பயென். தலைக்கி ஐநூறு ரூபா வச்சாலும், அவெ குடுத்த காசு பத்துமா. இந்தா தம்பி இதுல அண்ணே உனக்குப் பின் நம்பரோட சேத்து கார்ட் வைச்சிருக்கேன். யார் யாருக்கு எது எது வேணுமோ. அது எல்லாத்தையும் வாங்கி குடுத்துடு."என்று வேறு சொல்லி வழி அனுப்பி வைத்தான்.
பிரகாஷ் பாவம்… காதலியோடு படம் பாக்க நினைத்த பிரகாஷின் ரொமாண்டிக் டயத்த, ஃபேமிலி டயமாக மாற்றி, காதலிக்க நேரமில்ல என்று சொல்ல வைத்துவிட்டான் இந்தக் கௌதம்.
'இப்ப ஈவ்னிங் ஆகிடுச்சு. ஃப்ளாஷ் பேக் ஓவர். '
"உனக்கே நியாயமாகண்ணே இது. வீட்டுல இருந்தா அவா கிட்ட தனியா பேசவே முடியலன்னு தான, வெளில போலாம்னு நினச்சேன். கடைசில என்னோட லவ்வுக்கு நீ வில்லனா வருவேன்னு. நா நினைக்கவே இல்லண்ணே."
"அப்ப நீ வெளில போனப்ப ஜெனி கிட்ட ஒரு வார்த்த கூடப் பேசல."
"அப்படின்னு சொல்லிட முடியாது. எம்பக்கத்துல தா உக்காந்து படமே பாத்தா. ஆனாலும்…"
"ஏ, சுதா லதா எப்பயும் ஜெனி கூடவே தான இருப்பாங்க. எப்படி தனியா ஜெனி உம்பக்கதுல உக்காந்தா."
"அது எல்லாரும் ஜோடி ஜோடியாக, குடும்பம் குடும்பமாக உக்காந்திருந்ததுனால, லதாவும் சுதாவும் சித்தப்பா பக்கத்துலையே இருந்தாங்க. தனியா இருந்தது நா மட்டும் தா. அதா வந்து உக்காந்தா."
"அப்பப் பேசினீங்களா."
"ம்…"
"இதே இது நீயும் அவளும் மட்டும் போயிருந்தா, உங்கூட சினிமாக்கு வர ஜெனி சம்மதிச்சிருப்பாளா. சொல்லு…"என்றபோது பிரகாஷ் முழித்தான்.
"அண்ணே உனக்கு நல்லது தான்டா பண்ணுவேன். பொண்ணுங்க மனச கவருறேன்னு சொல்லி அவங்கள பயமுறுத்தக் கூடாது. நீ நீயா இரு. அப்பத்தா உன்ன அவா புரிஞ்சி ப்பா. அவங்கள இம்ப்ரஸ் பண்றேன்னு சொல்லி நடிக்கக் கூடாது. இயல்பா இருக்கும்போது உண்டாகுற அன்பு என்னைக்கும் மாறாது."என்றான்.
அவன் கூறியது முற்றிலும் உண்மையே. அதுவரை பிரகாஷிடம் ஜெனி முகம் குடுத்து சரியாகப் பேசியதே இல்லை. இதில் தனியா வேறு அழைத்துச் சென்றிருந்தால் நிச்சயம் அவன்மீது நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டு இருக்குமா என்பது சந்தேகமே. இப்போது பிரகாஷ் ஜெனியின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்து விட்டான்.
தங்கை, அண்ணன், சித்தப்பா என அனைவரிடமும் காட்டிய அக்கறையும் அன்பும், ஜெனியை அவன் புறம் ஈர்த்தது. காதலாக இல்லை என்றாலும், இருவருக்கும் இடையே பொதுவான பேச்சுக்கள் தங்கு தடையின்றி இருந்தது. அவனிடம் பேச இனி தயங்க மாட்டாள் என்ற அளவுக்கு வளர்ந்திருந்தது.
இதை உணர்ந்த பிரகாஷ் எதையும் வெளிக்காட்டாது,"இப்ப என்னண்ணே சொல்ல வர்ற. நாரதர் கலகம் நன்மைக்கே ங்கிற மாறி, உன்னோட இந்தக் கலகமும் எனக்கு நல்லது செய்யத்தான்னு நா நம்பனும். அப்படி தான."
"எஸ்… எஸ்… எல்லாம் உன் நன்மைக்கே."
"நா நம்ப மாட்டேன். நீ என்ன பேச்சி கூட ஜோடி சேத்துவிட தா பண்றன்னு அப்பட்டமா தெரியுது. இவரு நாரதராம். நல்லதே செய்வாராம். ம்ஹிம்."என்றவன் கௌதமை முறைத்து பார்த்துக் கொண்டே சென்றான்.
"ஏ நா கருத்து சொன்னா மட்டும் யாருமே ஏத்துக்கிறதே இல்ல. பயிற்சி பத்தலையோ. மூர்த்தி பெரிப்பாக்கிட்ட டியுஷன் சேந்துட வேண்டியது தா."எனப் புலம்பிய படியே சென்றான் கௌதம்.
________
இரவு பதினோரு மணியாகியும் உறக்கம் என்பது இவர்களுக்கு வரவில்லை.
"இவனுங்க டயர்டே ஆக மாட்டேங்கிறாய்ங்க. நம்மல தா சோர்வாக்கிடுறானுங்க. எங்கிட்ட எனர்ஜி இல்லப்பா."என்றிருந்தது ஹரிணிக்கு. நான்கு சிறுவர்களும் சேர்ந்து அறையை ஒருவழியாக்கி கொண்டிருந்தனர்.
வருண் ஆதியை தூக்கிக் கொள்ள. நந்து அகிலனை தூக்கி கொண்டு. ஓடிப் பிடித்து விளையாண்டு கொண்டிருந்தனர். அதுவும் தலையணையை கையில் வைத்துக் கொண்டு தூங்கலாமென அழைக்க வந்து வைசுவும் ஹரிணியுடன் சோஃபாவில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருக்க, ஏதோ ஒன்று உடையும் சத்தம் கேட்டது.
சுவரில் மாட்டி இருந்து கடிகாரம். நந்து தூக்கி எறிந்த தலையணை அதில் பட்டு, அது கீழே விழுந்து தன் உயிரை விட்டிருந்தது. அதை ஹரிணி, கண்ணாடி துண்டுகள் காலில் குத்திவிடாமல் இருக்க, அந்த இடத்தை விரைந்து சுத்தப்படுத்திக் கொண்டிருந்தாள். வைசுவிற்கு கோபம் வந்து விட்டது. நந்துவை இழுத்து வைத்து அடிக்கத் துவங்கி விட்டாள்.
"என்ன பழக்கம் வைசு இது. கண்மண்ணு தெரியாம அடிக்கிற. அவெ என்ன வேணும்னா பண்ணான். தெரியாம தான விழுந்துச்சி. காரணமே இல்லாம என்னைக்கும் பிள்ளை அடிக்காத வைசு."தரன், அழும் நந்துவை தூக்கி வைத்துக் கொண்டு சொல்ல,
"இல்லண்ணா, ரொம்ப வாய் பேசுறாண்ணா. சேட்டையும் அதிகமா இருக்கு. அடிக்கலன்னா பேச்சையே கேக்க மாட்டான். இங்க குடுங்கண்ணா அவன."என நந்துவை பிடித்து இழுக்க, அவன் வரமாட்டேன் என்பது போல் தன் மாமனின் கழுத்தை இறுக பிடித்துக் கொண்டான்.
"நா வரமாட்டேன். நீங்க என்ன அடிப்பிங்க. நா வரமாட்டேன்."என்க, வைசு மீண்டும் அடிக்க வந்தாள்.
அவளிடம் மாட்டாது தரன் நந்துவை பார்த்துக் கொண்டவன்,"நா உன்ன அடிக்க வேண்டாம்னு சொல்ல வைசு. உன்னோட மகன எப்படி வளக்கனும்னு நீ நினைக்கிறியோ அப்படியே வளத்துக்க. ஆனா அவெ பண்ற சேட்டைய பாத்து அடுத்தவங்க என்ன நினப்பாங்களோ, திட்டுவாங்களோ, மத்தவங்களுக்கு பயந்து பையன அடிக்காதன்னு தா சொல்றேன். அது தப்பு."என்றான்.
"இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு மாமா. யாராவது எதாவது சொன்னா உடனே வந்து என்ன பிண்ணி எடுக்க வேண்டியது. மத்த நேரம் எல்லாம் நந்து குட்டின்னு கொஞ்ச வேண்டியது. கோபப்படுற அம்மா, எங்கூட சிரிச்சி பேசுற அம்மான்னு ரெண்டு பேர் இவங்களுக்குள்ள இருக்காங்க. சில நேரம் எது நம்ம அம்மான்னு எனக்கு கன்ஃப்யூஸ்ஸன இருக்கு."என்றவனை முறைத்தவள் வைசு.
"போதும் பேசுனது. வாப்போய்த் தூங்குவோம்."என அழைக்க,
"நோ… நோ… நீங்க பேசுற டோனே எனக்குச் சந்தேகமாக இருக்கு. பாசமா பேசி என்ன ரூம்க்குள்ள கூட்டீட்டு போய்க் கும்மு கும்முன்னு கும்ம போறிங்க ரைட்டா."என்க, தரன் புன்னகைத்தான்.
"அடிக்கமாட்டேன். வா…"என்றாள் அவள் அசட்டு புன்னகையுடன்.
"மாமா இவங்க சிரிக்கிற விதமே சரியில்ல மாமா. நாப்போ மாட்டேன்."என்க.
"இங்கையே இருக்கட்டு வைசு. நா பாத்துக்கிறேன்."என ஹரிணி சமாதானம் பேசி அனுப்பி வைத்தாள் வைசுவை. வருணையும் தங்களுடன் இருக்க சொல்ல, அவன் மாட்டேன் என்று ஓடி விட்டான்.
"கிட்… மார்னிங் சீக்கிரம் எழனும். நீ எந்திரிக்க அலாரம் வச்சிருக்கேன்."எனச் சொல்லிப் படுக்க, அவனின் மீதேறி படுத்தான் நந்து.
தன் மாமனிடம் ஏதேதோ பேசினான். வெகுநேரம் பேசினான். அவனின் முதுகை தட்டிக் கொடுத்தபடி, அவன் கூறும் புரியாத கதைகளைக் கேட்டபடி அவனை ரசித்தான் தரன். இதுவரை நந்துவை கேலி கிண்டல் எதுவும் ரிஷி செய்தது இல்லை. நந்துவின் செயல்கள் யாவையும் குறுஞ்சிரிப்புடன் ரசித்துப் பார்ப்பான். நந்து ரிஷிக்கு எப்பொழுதுமே ஸ்பெஷல் தான்…
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..