முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 14


 

அத்தியாயம்: 14


"அகி… ஆதி... நில்லுங்க. எனக் கைக்கு அகப்படாமல் ஓடிய சிசிறுவர்களைக் குளிக்க வைத்து உடைமாற்ற வைப்பது மிகவும் கடினமாக இருந்தது ஹரிணிக்கு.


"ஐய்யைய. கிரவுண்டுல விளையாட வேண்டிய கபடிய, நாலு சுவரு இருக்குற ரூம் குள்ள விளையாடுறது ரொம்ப தப்பு. பம்கின், இவனுங்க ரெண்டு பேரும் ஒன்னா இருந்தா சமாளிக்கிறது கஷ்டம். உன்னைய பாத்தாலும் பாவமா தா இருக்கு. அதுனால நா உங்களுக்கு உதவி பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன். அகிலன நா கூட்டீட்டு போறேன். வா மாப்ள இந்த வயசான பம்கின் கையால டிரெஸ் மாத்துறத விட ஜெனி அக்காவோட பூபோலக் கையால மாத்திப்போம். நமக்குப் பவுடர் லாம் அடிச்சி விட்டு ஜம்முன்னு நம்மள கிளப்பி விடுவாங்க."என நந்து அகிலனை தூக்கிக் கொண்டான்.


ஹரிணி,"உங்க இம்ச தாங்க முடியாம பிளிச்சிங்க பவுடர தா அடிச்சி விடப்போறா அவெ." 


"எதுவா இருந்தாலும் ஜெனி அக்கா கையால கிடைச்சா போதும். பாய்ஸனும் பஞ்சாமிர்தமாகும்."


"அப்பப் போய் அவக்கிட்டையே டிரெஸ் மாத்திக்கங்க. இந்தா… இதுல உங்க ரெண்டு பேத்துக்கும் வேட்டி‌ சட்ட இருக்கு. நீங்கக் கிளம்பீட்டு ஜெனியையும் ரெடியா இருக்கச் சொல்லுங்க. உங்க மாமா வரையும் கிளம்பலாம்."என நந்து உடன் அகிலனை அனுப்பியவள் ஆதிரைக்கு உடை மாற்றலானாள். 


இருக்கும் சில அடி முடிகளை வலிக்காது சிக்கெடுத்து, பின்னி, ‌வண்ண வண்ண கேர்ப்பின்களை குத்தி, ப்ளாஸ்டிக் ரீத்தை வைத்தால், முடிந்து விட்டது தலையலங்கரம். பட்டுப் பாவாடை சட்டை, அது ஹரிணியின் கைவண்ணத்தில் மின்னியது. பவுடர் பூசி, கண்ணுக்கு மையிட்டு, காதில் ஜிமிக்கி வடிவில் எடை குறைவான காதணியை அணிவித்தவள், கரத்தைக் காயப்படுத்தாத வளையல்கள், சத்தம் அதிகம் வரும் ஜால்ரா கொழுசு, செயின், நெத்திச் சுட்டியெனப் பாபார்த்துப் பார்த்துதன் நண்பனின் மகளுக்கு அலங்காரம் செய்தாள் ஹரிணி. பெண் குழந்தைகளை அலங்கரிப்பது ஒரு சுகம் அல்லவா.


"ரொம்ப அழகா இருக்கடி செல்லம். பெரிம்மா உனக்குத் திருஷ்டி பொட்டு வைக்கிறேன்."எனக் கண் மையை எடுத்து ஆதியின் உதட்டிற்கு கீழே சிறிய புள்ளிபோல் வைத்தவளுக்கு திருப்தி ஏற்பட்டது. 


வைசு"நீ எவ்ளோ நேரம் அலங்காரம் பண்ணாலும், அஞ்சே நிமிசத்துல அவ கலச்சிடப்போறா. எதுக்கு டி இதெல்லாம்." 


"முழுசா அஞ்சு நிமிஷம் வச்சிருப்பாள்ல. அதுவே போதும் எனக்கு. அந்த நேரத்துக்குள்ள நா நாலு ஃபோட்டோ மட்டும் எடுத்துக்கிறேன். நந்து அகில கூட்டீட்டு வந்தானா."எனக் கேட்க, இல்லை என்பது போல் தலையாசைத்த வைசு ஆதியை கொஞ்சத் தொடங்கினாள். 


"ச்ச… என்னடி பிள்ள பெத்து வச்சிருக்க. எப்ப‌ பாத்தாலும் பேசிக்கிட்டே இருக்கான். ஹிம்… நைட் அவனால எனக்குச் சோ மச் ஆஃப் தொல்லைஸ். அவனும் தூங்கல, எங்களையும் தூங்க விடல."என ஹரிணி சலிக்க,


"ம்… இப்ப‌ எம்மகன் தொல்லையாத்தா தெரிவான். நைட் புருஷனும் பொண்டாட்டியும் அவன நாங்க பாத்துக்கிறோம்னு தூக்கிட்டு போகும்போது தெரியலல்ல. வா ஆதி உங்கப்பா உன்ன பாக்கனும்னு சொன்னாரு. எம்புள்ளையப் போய்த் தொல்லன்னு சொல்றா. லூசு…"என ஹரிணியை திட்டிய படி வெளியே சென்றாள்.


கூடத்தில் அனைவரும் தயாராக இருக்க, அகிலனுடன் வந்த ஜெனிபர் இன்னும் புது உடை மாற்றாது நின்றாள். 'நான் எதற்கு… ' என அவர்களுடன் வரத் தயங்கியவளை மலர் அதட்டி உடைமாற்ற சொன்னார். 


மலர்,"எல்லாரும் ரெடி. இந்த ஹரிணிய மட்டும் இன்னும் காணும்."  


"பூவத்த நா இங்கருக்கேன்."எனச் சந்தன நிற சேலையில் அடர் பச்சை நிற பார்டர் கொண்ட கேரளத்து சேலையில் ஒயிலாய்‌ வந்திறங்கினாள் ஹரிணி. 


"கௌதம்… நா நல்லா இருக்கேன்னா."என முந்தானையை சுற்றி காட்ட, அவன் அவளுக்குத் திருஷ்டி சுற்றி போட்டான்."என்னோட டார்லிங்‌ எப்பையுமே‌ அழகுதா."என்றபடி.


"ஹரிணி இந்தா..‌. உன்னோட சேலைக்கு மேச்சா வளையல்."என இந்துக் கண்ணாடி வளையல்களைத் தர, அதை மாட்டிக் கொண்டு ஆட்டி ஆட்டி ஓசை‌ எழுப்பி விளையாட, அகிலன் வந்து அவளின் இடையில் ஏறிக் கொண்டான். 


மலர்,"அம்மையும் மகனும் மேச்சிங்க டிரெஸ் போட்டிருக்கிங்களாக்கும்." 


"ஹரிணி‌ மட்டுமில்ல நாங்களும் மேச்சிங்க தா."என அபிநயா சொல்ல அப்போது தான் கவனித்தார் மலர் இளைய ஜோடிகளும் குழந்தைகளும் ஒரே நிறத்தில் உடை அணிந்திருந்ததை. 


"அப்பத்தா… எங்க ஃபேமிலிக்கு ரெட்."வருண் சிவப்பு சட்டை மற்றும் அதன் கரை வைத்த வேட்டி அணிந்திருந்தான்.


"நாங்க மட்டும் என்னவாம். பஞ்சு மிட்டாய் கலர்ல சும்மா தகதகன்னு ஜெலிக்கிறோம்ல. சின்னப் பையன் நானே இந்த வயசுல வேட்டி கட்டுறேன். ஏ மாமா நீ மட்டும் வேட்டியே கட்ட மாட்டேங்கிற."நந்து கௌதமிடம் கேட்க,


"நமக்கு எது செட்டாகுமோ அத தான்டா பண்ணனும். செட்டாகாதத பண்ணா நம்ம மானம் தா காத்துல பறக்கும்."எனப் பேசிய படி கழண்டு இருந்த நந்துவின் சட்டை பட்டனை மண்டியிட்டு மாட்டிவிட்டபடி பேசினான் கௌதம்.


மருமகனுடன் கொஞ்சி பேசிய கௌதமை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் பவித்ரா வேகமாகச் சென்று காரில் அமர்ந்து கொண்டாள். செல்லும் அவளைப் பின்தொடர்ந்தது சென்றான் சம்பத். 


"வாங்க போலாம். அப்பா அப்பவே கால் பண்ணாரு. நேரமாது மலரம்மா."என வைசு சொல்ல, ஹரிணியின் மொபைல் சிணுங்கியது. ரிஷி தான்… என்ன சொன்னானோ தெரியவில்லை, கைகளைப் பிசைந்து கொண்டு அசடு வழிய நின்றாள் அவள்.


"பூவத்த… நீங்க எல்லாரும் மொதல்ல போங்க. நா ஜெனிய கூட்டீட்டு பின்னாடியே வர்றேனே." 


"ஏட்டி… கேணத்தனமா பேசுற. வா எங்க கூடையே. எல்லாரும் கிளம்புறப்ப கூட வராம தனியா வாராளாமா. கேணச்சி."என்க, அவள்‌ கௌதமை பார்த்தாள், உதவி‌ செய் என்பது போல்.


"பெரிம்மா. விடுங்க. அவா வந்துடுவா."  


"எல்லாரும் போய்ட்டா, யாரு கூட டா வருவா." 


"அவள கூட்டீட்டு வர வேண்டியவங்க கூட்டீட்டு வருவாங்க. வாங்க பெரிம்மா."எனச் சொல்லி ஹரிணியை பார்த்துக் கண் சிமிட்டி விட்டு அனைவரையும் அழைத்துச் சென்றான். 


"என்ன கேலி பண்ணிட்டு போறான். பா..‌.வா… உன்னால தா எனக்கு இந்த அவமானம்."எனப் புலம்பியபடியே அறைக்குச் சென்றவளின் முகத்தில் வெட்கம் வந்தது. ஃபோனின் அவன் கூறிய வார்த்தைகளை நினைக்கையில். 


ஹரிணி சேவை அணிவது என்பது அமாவாசை பௌர்ணமி போல் மாதத்தில் என்றாவது ஒரு நாள் அமைவது. அதை ரசிக்காமல் இருந்தால் எப்படி. அதான் அவளை மட்டும் தானே வந்து அழைத்துப் போவதாகக் கூறினான். 


குழந்தைகள் தூக்கி எரிந்த தலையணையையும் போர்வையும் எடுத்து வைத்திருந்து, கட்டிலை ஒழுங்கு படுத்தி விட்டுத் திரும்பியவளின் பார்வை வட்டத்திற்குள்‌ விழுந்தது அந்தச் சிறிய பகுதி. 


அவர்களின் அறை மூன்று அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டிந்தது. படுக்கை, ஜீம் மற்றும் குளியலறையென இரண்டாகப் பிரிந்திருக்கும். அடுத்து பால்கனி. திருமணமான முதல் நாள் இரவு அன்று அவன் கூறிய வார்த்தைகள் அவளுக்கு நினைவு வந்தது. 


'ஜீம் பக்கம் நீ போகவே‌ கூடாது. '‌ என்றது. இதுநாள் வரை அந்த ஜீம்மை எட்டிப்பார்த்தது இல்லை. பார்க்கும் எண்ணமும் வந்ததில்லை. ஏனோ அன்று அவன் அறையில் துப்பாக்கியைப் பார்த்ததிலிருந்து இந்த அறைக்குள் வேறு எதையோ‌ வைத்திருக்கிறான் என்ற எண்ணம்‌ மட்டும் வராமல் இருக்கவில்லை. 


"இதுவரைக்கும் இந்த ரூம் குள்ள பாவா போய் நா பார்த்ததில்லை. என்னையும் உள்ள விட்டதில்ல. அப்படி என்னதா இருக்கு இதுக்குள்ள. அலாவுதின் படத்துல வர்ற மாறி இதுக்குள்ள தங்கமும் வைரமும் நிரஞ்சிருந்தா… பாவா வர்றதுக்குள்ள திறந்து பார்த்திட வேண்டியது தா."என அதைத் திறக்க, அது திறக்கவில்லை.


"என்னடா இது லாக்கர் மாறி மாறிப் பாஸ்வேர்டுலாம்டு வச்சிருக்கான். நமக்குத் தெரியாம பாவா லைஃப்ல ரகசியமா… இருக்கவே கூடாதே."என எவ்வளவோ முயற்சிக்கிறாள். ஆனால் நம்பர் லாக் போட்டு வைத்துப் பூட்டி வைத்திருக்கிறான் அந்த ஜிம்மை. ஜிம் அப்படி தான் சொன்னான் அவ.


"கிட்… என்ன பண்ற."அழுத்தமாக வந்தது‌ குரல் அவளுக்குப் பின்னால் இருந்து. 


' ச்ச… இவெ வந்திட்டுவாங்கிறத மறந்து போய் ஆர்வக்கோளறுள இத தொறக்க போய்ட்டோமே. இப்ப நம்மள திட்டப் போறானா. சமாளிப்போம். ' என நினைத்து மெல்ல திரும்பி அவனைப் பார்த்தாள் அவள். கோபமாக இருக்கிறானா என்பதை அறிய அவனின் முகபாவனைகளை நோட்டமிட்ட, அவன் எவ்வித உணர்ச்சிகளையும் காட்டாது வெள்ளை வேட்டியை மடித்து கட்டியபடி நின்றான். அவளின் சேலை நிறத்திலேயே சட்டை அணிந்திருந்தவன் இறுக்கிய முகத்துடன் அவளின் அருகில் நடந்து வந்தான். 


"கைபிடில தூசி பாவா. தொடச்சிட்டு இருந்தேன்."என மெல்லிய குரலில் பொய் கூற, அவளை நம்பாது பார்த்தான் ரிஷி.


"ப்ராமிஸ்… நா இத திறக்கவே இல்ல. ஜஸ்ட் பாத்துட்டு தா இருந்தேன்."எனக் கூறியவளை நெருங்கி வர, அவள் சுவற்றில் சாய்ந்து நின்றாள். 


அவளின் விழிகளை உற்று பார்த்தப்படி‌ முன்னேறி வந்தவனின் சாம்பல் நிற விழிகள் சொல்லியது, 'தான் கதவைத் திறக்க முயன்றதை அவன் பார்க்கவில்லை' என்றும், தன்னை பயமுறுத்தப் பார்க்கிறான் என்றும். எனவே தைரியம் வரப்பெற்றவள். அவனின் மார்பில் கை வைத்துத் தள்ள, வைத்த கையைப் பிடித்திழுத்த படி பின்னே சாய்ந்தான் தரன். இருவரும் கட்டிலில் விழுந்தனர்.


பிரகாஷ் போல் தப்பு செய்யாது சரியாய் தன் மார்பில் அவளைப் படரவிட்டு அணைத்துக் கொண்டான் காதலாக. 


"கிட்… செம்மை...யா இருக்க."என அவள் சூடியிருந்த பூவின் வாசம் நுகர்ந்தவன், வென்கழுத்தில் ஆரம்பித்து அவளின் கன்னம் கண் என நெற்றி வரை முத்தமிட, அவள் வெட்கப் புன்னகை சிந்திபடியே‌ எழுந்து நின்றாள்.


"நீயும் தா பாவா… சூப்பரா இருக்க…"என்றவள் தன் கணவனை ரசிக்கும் பார்வை பார்க்க, தரன் அவளை நெருங்கி வந்து உரசாமல் நின்றான். அவளின் முகத்தில் தோன்றும் பாவனைகளை ரசித்தவன் அவளின் மதிமுகத்தைக் கையில் ஏந்தி அவளின் சிவந்திருக்கும் அதரத்தை வெகுநிதானமாகச் சுவைக்கலானான். 


"ம்… பாவா… கதவு…"எனக் கூறி விலகி நின்றாள். 


"இது அநியாயம் கிட். என்னோட வைஃப்பா, என்னோட ரூம்லயே வச்சி கிஸ் பண்ண, டேர் லாக்ல இருக்கனுமா என்ன."எனச் சலித்துக் கொள்ள, 'ம்… 'எனச் சிரித்துக்கொண்டே தரனின் மார்பில் தலை சாய்ந்தாள். அவளின் இடையணைத்து நின்றவனிடம்,


"பாவா… நா கேட்டா எனக்காக ஒன்னு செய்வியா…"என அவனின் முன்னிரண்டு சட்டை பட்டன்களை கழட்டி அகன்ற மார்பில் உள்ள முடிகளை விரலால் வருடியபடி கேட்டாள்.


' ஒரு வேள ஜீம் ரூமின் கதவுக்குப் பின்னால் என்ன உள்ளது என்று கேட்கப் போகிறாளோ…' 


"நீ கேட்டு இல்லன்னா சொல்வேனா கிட்."என்றவன் அவளை‌ நிலைக்கண்ணாடி முன் நிறுத்திப் பின்னிருந்து அணைத்துக் கொண்டு கழுத்தில் முத்தமிட, அவனின் விரல்கள் பெண்ணவளின் வளைக்கரத்தில் ஊர்வலம் சென்றது.


"பா… வா…"வெட்கத்துடன்,


"ம் …"என்றான் இதழ் திறக்காது.


"எனக்கு ஒரு girl baby வேணும்."என்றாள் அவள். 


"என்ன…"என அவளின் முகம் பார்த்தான் ரிஷி.


"ம்… பேபி தா. அதுவும் ஸ்பெஷல்லா. உன்னமாறி சாம்பல் கலர்ல கண்ணு. உன்னமாறி அடமெண்டா. நா பாத்து ரசிக்கிற உன்ன மாறியே இன்னொரு ஜீவன் எனக்கு வேணும். அதுவும் பொண்ணு தா வேணும். நீ உன்னோட சைல்ட் குட்ல எப்படின்னு பக்கத்துல இருந்து பாக்கனும் பாவா. கிடைக்குமா…"எனக் குழந்தைக்காகக் குழந்தைபோல் கேட்க, அவனுக்குப் புன்னகை அரும்பியது.


ஏனெனில் அகிலன் அப்படியே ஹரிணியின் குணங்களை கொண்டு பிறந்திருந்தான். உருவம் மட்டுமல்லாது செயல்கள் யாவும் ஹரிணியை நகல் எடுத்தது போல் இருக்கும். விட்டுக்குடுத்து ஆதியுடன் அனைத்தையும் ஷேர் செய்து குறும்புடன் விளையாடுவான். மனைவியின் சாடையில் மகனும், கணவனின் ஜாடையில் மகளும் இருந்தால் நல்லது தானே.


"ஒரு ஒரிஜினல் பீஸ்ஸ‌ வச்சிக்கிட்டே நாங்க படாத‌ பாடு படுறோம். இதுல ஜெராக்ஸ் காப்பி வேறய‌… பூமி தாங்காது ம்மா. நாட்டுக்கு நல்லது பண்ணணும் நினைச்சா… நீங்கப் போட்டுட்டு இருக்குற இந்த ப்ளான இப்பவே கைவிடுறது நல்லது."நந்து. கதவில் சாய்ந்த படி நின்று கொண்டு பேச, ஹரிணி சட்டென ரிஷியிடமிருந்து விலகி நின்றாள்.


ஹரிணி,"வாணரம்… நீ அவங்க கூடப் போலயா." 


"ஜெனி அக்கா இல்லாம நா மட்டும் போய் என்ன பண்ணப்போறேன். அக்கா இல்லாம நா எங்கையும் நகற மாட்டேன்னு பக்காவா நிக்கிறேன்."என நந்து சொல்ல, ஹரிணி அடிக்கப் பாய்ந்தாள். 


நந்து"மாமா… காப்பாத்துங்க…"என ரிஷியின் பின் ஒழிந்து கொண்டான்.


"இந்த வயசுல நீ பேசுறது ரொம்ப ஜாஸ்தி நந்து."எனச் சொல்லிக்கொண்டே அருகில் இருந்த தலையணையை எடுத்துக் கொண்டு துரத்த, 


"இதோ பாரு பம்கின்னு வருங்கால மருமகன வரவேற்கனும். இப்படி வறுத்தெடுக்க கூடாது. வருங்கால மாமியாருங்கிற ஒரே காரணத்துக்காகத்தா நா உன்ன சும்மா விடுறேன். என்ன அடிக்கிற வேல வச்சிக்காதிங்க."


"என்ன… மாமியாரா… யாரு… யாருக்கடா…"


"நீங்கத் தா. எனக்குத் தா. எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கத் தான, நீங்கப் பொண்ணு பெத்துக்கலாம்னு ப்ளான் போட்டிருக்கிங்.. நா இப்பவே சொல்லிக்கிறேன் எங்கிட்ட மரியாத இல்லாம இப்படில்லாம் நடந்துக்கிட்டா உம்மகள நா கட்டிக்க மாட்டேன் பாத்துக்கங்க."என ஹரிணியை கோபப்படுத்தியவனை தரன் காப்பாற்றி தூக்கிக் கொண்டு காருக்குச் செல்ல, ஹரிணி ஜெனியை பார்க்கப் போனாள்.


"ஜெனி, நீ மல்லகப்பூ வப்பேல்ல."


“ம்."‌எனத் தலையசைத்தாள் ஜெனி.


"பாவா டூ மினிட்ஸ். ப்ரிஜ்லருந்து பூவ எடுத்துட்டு வாறேன்."என உள்ளே செல்ல, இங்குக் கைப்பிள்ள கோபமாகத் தன் அண்ணனை முறைத்துக் கொண்டு நின்றான்..


"என்னடா லுக்கு பலமா இருக்கு. நீ ஏ அவங்க கூடப் போகாம இங்க‌ நிக்கிற."ரிஷி.


"நீ பண்றது தப்புண்ணே."பிரகாஷ் மொட்டையாக, தரன் என்ன என்பது போல் பருவம் சுருக்க.


"தம்பியோட ஃபீஸிங்க புரிஞ்சிக்காக வீட்டுல இருக்குறது ரொம்ப தப்புண்ணே."


"அப்படி என்னடா தப்பா பண்ணீட்டேன், நீ வருத்தப்படுற அளவுக்கு."


"இன்னைக்காது பேசி ஏ ஆள பைக்ல கூட்டீட்டு போலாம்னு.‌ அரமணி நேரமா வாசல்ல காத்துட்டு இருந்தா. அஞ்சி நிமிசத்துக்கு முன்னாடி வந்த நீங்க, எல்லாத்தையும் கெடுக்குற மாறிக் கார்ல ஏத்தீட்டு கிளம்புறேங்கிறது சரியா!. என்னோட காத்திருப்புக்கு பலன் தா என்ன.!"எனப் போலியாகக் கண்ணீர் சிந்த. 


"எல்லாம் சரி. யாரு உ ஆளுன்னு சொல்லவே இல்ல."எனத் தன் முன் நிற்கும் தம்பியைப் பார்த்துக் கேலியாகக் கேட்டான் ரிஷி. 


"உங்களுக்குத் தெரியாதா.?"என்றான் குரல் உயர்த்தி மிரட்டலாக,


"தெரியாது‌ டா. உன்னோட ஆளு யாருன்னு நீ தா சொல்லனும்?.‌ இதுக்குன்னு வேறாளையா கூட்டீட்டு வர முடியும்."எனத் தன் தம்பியை உற்று பார்க்க… 


"ஜெனி. நம்ம வீட்டு வந்திருக்குற கெஸ்ட் ஜெனிபர்... ண்ணே... ஹரிணி கிட்ட வேல பாக்குதே அந்தப் பொண்ணு."என்றவனின்‌ முகத்தில் சிறு‌ வெட்கம்‌. 


பிரகாஷின் நடவடிக்கைகளை வைத்தே தரன் அறிவான். ஆனாலும் தைரியமாக வெளியே சொல்லும் அளவுக்கு அவனின் காதல் இருக்கிறது என்பதை இன்று தெரிந்து கொண்டான். அதை ரசித்தவன் தன் பைக்கின் சாவியை எடுத்துக் கொண்டான்.


ஜெனியின் மடியில் தான் அமர்ந்தேன் என்று அடம்பிடித்த நந்துவை தன் முன்னால் அமர வைத்துக் கொண்டு, மனைவியை ஏற்றிக்கொண்டு, கேலியும், கிண்டல்‌ பேச்சும், சிரிப்பும்மாக, சந்தோஷமாக ஒரு ஜோடி சென்றது.


சிவப்பும் சந்தனமும் கலந்த பாவாடை‌ தாவணியில் தன் பின்னால் அமர்ந்த ஜெனிபரை, கண்ணாடி வழியே‌ ரசித்தபடி, எவ்வித பேச்சுமின்றி காதலாய் சென்றனர் இந்த ஜோடி. தன் தோளில் விழுந்து கிடக்கும் பெண்ணவளின் வளைக்கரமும், முதுகில் சாயாது தள்ளி அமர்ந்து கொண்ட அவளின் எச்சரிக்கை உணர்வும், பிரகாஷின் பைக் பயணத்தை மறக்க முடியாத நிகழ்வாய் மாற்றியது.‌



தொடரும் ... கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் . நன்றி


அன்பே 13


அன்பே 15



கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...