அத்தியாயம்: 4
சென்னை…
அலுவலக நேரம் ஆதலால் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது. சாலையில் அதிக கவனத்துடன் மெதுவாகக் காரை ஓட்டிக் கொண்டு சென்றான் கௌதம்.
அவனின் அருகில் இருந்தவளோ, வலது புறம் திரும்பி அவனைப் பார்ப்பதும், பின் உடனே இடது புறம் திரும்பி ரோட்டை பார்ப்பதுமாக இருந்தாள்.
" டார்லிங்… கழுத்துல ஏதுவும் ப்ராப்ளமா? டாக்டர்ட்ட போலாமா?." என்றான் அக்கறையுடன்.
" ப்ராப்ளம் கழுத்துல இல்ல. "
"அப்றம் ஏ கழுத்த கடிகாரத்துல இருக்குற பெண்டுலம் மாறி இங்கிட்டும் அங்கிட்டும் ஆட்டிட்டு இருக்க. "
" நா உன்ன வாட்ச் பண்றேன்."
" வாட்சா!… எதுக்கு? "
"கொஞ்ச நாளாவே என்னோட ஃப்ரெண்டு சரியில்ல. அதிகமா கோபப்படுறான். அவனுக்கு என்ன பிரச்சினன்னு கண்டு பிடிக்கப் பாக்குறேன். " என்க, புன்னகைத்தான் கௌதம்.
"இவ்வளோ நேரம் பாத்ததுல எதாவது தெரிஞ்சதா!"
"ஓ… நல்லாவே தெரிஞ்சது. கண்ணுக்குக் கீழ இருக்குற டார்க்ஸ், நீ அதிகமா லேப்டாப்லையே உக்காந்திருக்கன்னு சொல்லுது. கண்ணுல இருக்குற ரெட், நீ நைட் சரியா தூங்கலன்னு சொல்லுது. நீ வளத்து வச்சிருக்குற தாடி, நீ ஒரு சோம்பேறியா மாறிட்டு வர்ரன்னு காட்டுது. அப்றம், உன்னோட காது பக்கத்துல இருக்குற நாலு வெள்ள முடி, உன்னோட வயசு முப்பத்தி ஒன்னு இல்ல அறுபதுன்னு சொல்லுது. அதிகமா கோபப்பட்டா சீக்கிரம் கிழவனாகிடுவாங்களாம். அப்படியா?" எஎனச் சந்தேகம்கேட்க.
"ம்… ஆகிடுவாங்க உன்னோட புருஷெ மாறி. அவனும் இப்ப கிழவன் தானா. ஏன்னா ரெண்டு பேருக்கும் இடைல பெருசா வயசு வித்தியாசம் இல்லல்ல. அதா கேட்டேன்."
"அவனுக்கு ஒன்னும் உன்ன மாறி முடி நரைக்கல. " என்றாள் ஹரிணி வேகமாக.
" நல்லா பாரும்மா… டை அடிச்சிட்டு ஊருக்குள்ள திரியுறானோ என்னமோ, வயசு தெரிஞ்சிடக் கூடாதுங்கிறதுக்காக. " கேலியாக…
"நோ… நோ… அவெ அப்படிலாம் கிடையாது. He is charming and handsome guy. அவன நிக்க வைச்சி எவ்ளோ நேரம் பாத்தாலும் சலிக்கவே செய்யாது. My man. " எனத் தன் அருகில் இல்லாத தன் கணவனைத் தன் கண்களுக்குள் கொண்டு வந்து, இமை மூடி ரசித்து வர்ணிக்க, கௌதம் காரின் வானொலியைச் சத்தமாக ப்ளே செய்தான்.
" ஏன்டா என்னோட கற்பனைல வந்து கட்டைய போடுற?."
"இதோ பாரு, இன்னைக்கி காலைல இருந்தே எனக்கு மூடு சரியில்ல. எம்பொண்டாட்டி எங்கிட்ட கோயிச்சிக்கிட்டா. என்னோட மகள வேற திட்டிடேன். இதுல உம்புருஷன் புராணத்த கேட்டா, நாளு வெலங்குமா, சொல்லு. "
"வெலங்கும் வெலங்கும். உனக்கு அவெ மேல பொறாமையா இருக்கா.?" எனக் கண்சிமிட்டி கேலியாகக் கேட்க…
" நா பொறமாபடுற அளவுக்கு அவெங்கிட்ட ஒன்னுமே கிடையாது. எனக்கு அவெ தேவையும் கிடையாது. " என்றான் காண்டுடன்.
" ஏய்… என்ன இருந்தாலும் அவெ உன்னோட அண்ணெப்பா. மரியாத தரலன்னாலும், மதிச்சுப் பேசுப்பா, அவன்ட்ட. "
"எனக்குப் பிடிக்காத உம்புருஷனுக்கு நா குடுக்குற இந்த மரியாதையே ஜாஸ்தி. அதே நேரம் ஒரு திமிருபிடிச்ச, என்ன ஏமாத்துன அரகெண்ட்டுக்கு மதிப்பெல்லாம் தர முடியாது. அப்றம் இன்னொரு விஷயம், எனக்கு அவெ அண்ணனே கிடையாது. என்னோட அண்ணனு சொல்லாத. " என்றவனின் குரலில் சிறு கோபமும், என்னவென்று விவரிக்க இயலாத ஒரு உணர்வும் இருந்தது.
" ஓகே… சொல்லல. நீ டென்ஷன் ஆகாத. கூல். "
" நா எதுக்கு டென்ஷன் ஆகனும். கூலாத்தா இருக்கேன். ஆமா, நீ நிஜம்மாதா அவன லவ் பண்றியா? உன்ன அவெ நல்லா பாத்துக்கிறானா என்ன.?" எனச் சீரியஸ்ஸாக கேட்டான்.
" ஏ உனக்கு இந்தத் திடீர் சந்தேகம். எங்களுக்கு மேரேஜ் முடிஞ்சி மூணு வர்ஷத்துக்கு மேல ஆச்சு. நாங்க நல்லாத்தா இருக்கோம். என்ன அவெ ரொம்ப நல்லா வச்சிருக்கான். என்னோட எந்த ஒரு தனிப்பட்ட சுதந்திரத்துலயும் அவெ தலையிட்டதே கிடையாது. Perfect gentle man. " என்றாள்.
"ஓ… அந்த gentle man எங்க போறேன்னு உங்கிட்ட சொன்னானா? மூணு நாளா உன்னோட ஃபோன் கால எடுக்கல. எங்க போறேன், எப்ப வருவேன்னுங்கிற தகவல அவனோட மனைவி, உங்கிட்ட கூடச் சொல்லாம போயிருக்கான்னா பாத்துக்க.
இதுலருந்து அவெ உன்ன எந்த லெவல்ல வச்சிருக்கான்னு தெரிஞ்சுக்க. அவன முழுசா நம்பிட்டு இருக்காத. எந்த நேரத்துலையும் உன்னோட கால வாரி விட்டுட்டு, நீ தா காரணம்னு உன்னையே குறை சொல்வான். சரியான அடமெண்ட் சைக்கோ. "
" ஏய்… போதும் போதும். என்னோட பாவா பத்தி எனக்குத் தெரியும். நீ ஒன்னும் சொல்லத் தேவையில்ல. He is a…" கார் சிறு குளுங்களுடன் நின்றது. நிறுத்தி விட்டான் கௌதம்.
" நீ தனியா உக்காந்து உன்னோட புருஷெ பெருமையா பாட்டா பாடிட்டு இரு. என்னால அந்தக் கருமத்தெல்லாம் கேக்க முடியாது. அப்றம் கார பார்க் பண்ணிட்டு கீ ய என்னோட கேபின்ல வந்து குடுத்துடு. பை… " என அலுவலக வாசலிலேயே நிறுத்திவிட்டு இறங்க முயன்றவனிடம்,
" நீ தான டா கேள்வி கேட்ட. பதில் சொல்றதுக்குள்ள போற. எரும... " என்றவளை அவன் கண்டு கொள்ளாமல் இறங்க,
"ஹேய் உங்க ரெண்டு பேருக்குள்ள எதுவும் ரகசிய உறவு இருக்கா என்ன? சீக்ரெட் லவ் இருக்கா என்னோட பாவா மேல உனக்கு. ஏன்னா நா நல்லா இருக்கேனாங்கிறத விட, அவெ என்ன பண்றாங்கிறத தெரிஞ்சிக்க நீ ரொம்ப ஆர்வமா இருக்குற மாறித் தெரியுது. " அவள் பேசிக்கொண்டே இருக்க, கௌதம் அவளின் ஜன்னல் அருகில் வந்து அவளின் ஹண்ட் பைக்கை எடுத்தான்.
" ஒன்னு என்னோட லேப்டாப்க்கு, இன்னொன்னு தேவையில்லாதத பத்தி பேசி என்னோட மூட ஸ்பாயில் பண்ணதுக்கு. தண்டன. " என இரு க்ரெடிட் கார்டுகளை எடுத்துச் சென்றான்.
" ஹேய், அப்ப ஏ ஃபோனுக்கு நீ காசு தருவியா. " எனக் கத்த,
" அத உம்புருஷன்ட்ட கேளு. முதல்ல ஊருல விவசாயம் பண்றேன்னு வெட்டிப் பந்தா காட்டிட்டு இருந்தான். அத விட்டுட்டு, இப்ப சென்னைக்கி வந்து வேல வெட்டிப் பாக்காம ஊர் சுத்துறானே, உன்னோட பா… வா… அவங்கிட்ட கேளு. கொண்டாந்து கொட்டுவான். "
" ஹேய், என்னோட பாவா இன்ஜினியர். இப்ப கான்ஸ்ட்ரெக்ஷன் முதலாளி தெரிஞ்சுக்க. வேல வெட்டி இல்லாதவன்னு கேலி பண்ணாத. "
" செங்கலு மண்மூட தூக்கறவன்னெல்லாம் இன்ஜினியர்னு சொல்லமாட்டாங்க. சித்தாள்னு சொல்லுங்க. ஆனா அந்த வேலக்கி கூட உம்புருஷன் லாய்க்கு கிடையாது. " என ரிஷிதரன் மூடை சுமப்பது போல் நினைத்துப் பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது. புன்னகையுடனே தன் முன்னே இருந்த மூன்று மாடி கட்டிடத்திற்குள் நுழைந்தான் கௌதம்.
" ச்ச… பொழுது போகாம லேப்டாப்ல உக்காந்து யூட்யூப் பாக்க போற இவன்லாம் என்னோட பாவாவ கேலி பண்றான். உன்ட… வந்து பேசிக்கிறேன். " எனக் காரை அதன் இடத்தில் நிறுத்தியவள், இங்கிருந்த லிப்டில் ஏறினாள்.
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் கௌதமின் உள்ளம் உவகை கொண்டது. 'உருப்புடாதவெ, ராசி இல்லாதவெ' என்பது போன்ற தன் தந்தையின் ஏச்சு பேச்சுக்குப் பதிலாகத் தான் உருவாக்கிய சாம்ராஜ்யம் இது என்ற கர்வம் அவனின் நடையில் தெரிந்தது. சொல்லும் வழியெல்லாம்அங்குப் பணிபுரியும் ஊழியர்களின் காலை வாழ்த்திற்குப் பதிலாக, தலையசைத்து புன்னகையை தந்தபடியே சென்று தன் கேபின்னுக்குள் அமர்ந்தான் ஹரிஹர கௌதமன்.
அவனின் அறையின் மேடையில் இருந்த மெடல்களும், புகைப்படமும் அவனின் உழைப்பிற்கு கிடைத்த வெகுமதிகள். களிமண்ணைப் போல் இருந்த அவனை, சிலை செய்த பெருமை அவனின் தோழியையே சாரும்.
ஹரிணி, கௌதமை திட்டிக்கொண்டே படிக்கட்டில் ஏறிவந்துகொண்டிருந்தாள். லிஃப்ட்டில் பழுது வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் சோர்வுடன் நடந்தாள் அந்தப் படிக்கட்டின் கைப்பிடியை ரசனையுடன் வருடிய படி.
இருவருமே பெருமை கொள்ளும் தருணம் அது. ஆம், இது வெறும் கட்டிடம் அல்ல. இவர்களின் மூன்றரை ஆண்டு கால உழைப்பின் பயன். சில நூறு பேருக்கு வேலை குடுக்கும் அளவுக்கு முன்னேற்றம் கண்டிருந்தது அவர்களின் உழைப்பு.
Madhy software மட்டுமல்லாது, வேறுசில பெயர்களையும் தாங்கி இருந்தது அந்தக் கட்டிடம், மொத்தம் மூன்று மாடிகளைக் கொண்டது.
தரைத் தளம்… Ground floor… அது பார்க்கிங்கிற்கு என ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல் தளம்… first floor… அது ராகவ் சம்பத் நடத்தும் கட்டுமான நிறுவனத்தின் அலுவல். ரிஷி தரன் அதில் பார்ட்னர். இருவரும் சேர்ந்து பெட்டி பெட்டியா வீடு கட்டுவதிலிருந்து வசதிகள் பல கொண்ட லக்ஸரி வில்லாகள் வரை, கட்டுவதில் திறமை கொண்டவர்கள். தாங்கள் படித்த சிவில் இன்ஜினியர் படிப்பிற்கு ஏற்றத் தொழிலை அமைத்துக் கொண்டனர், அவர்களுடன் படித்த மற்ற வேலையில்லா நண்பர்களையும் உடன் வைத்துக் கொண்டு.
அகிலன் பிறப்பதற்கு முன்னரே இதை இருவரும் தொடங்கி விட்டனர். தங்களின் நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் என வடிவமைத்துக் கட்ட ஆரம்பித்தவர்களின் தொழில் சூடு பிடித்தது என்றால் அது இந்த ஓன்றரை ஆண்டுகளாகத்தான்.
விஹான் சர்மா, இந்தியாவின் பணம் வசதி படைத்த முக்கிய தலைகளுள் அவரும் ஒருவர். மால்ஸ், நட்சத்திர விடுதிகள், ரிஷார்ட் என இஇவருக்குச் சொந்தமாகபல அடுக்குமாடி கட்டிடங்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் உண்டு. சென்னையில் உள்ள பீச் ரெஷார்ட்டில் ஹனிமூன் சூட் ஒன்று கட்ட புது இன்ஜினியரை தேட, இவர்களின் கையில் சிக்கினார்.
இன்டிபென்டல் சூட் அது. சூட்டின் ஒரு பக்கம் கடல் தெரியும் படி கண்ணாடி சுவர்கள் பொருத்தப்பட்டிருந்தது. சூட்டின் ஒரு பகுதியில் அழகிய செடிகளும் கொடிகளும் வளர்க்கப்பட்டு இருந்தது. அதில் மர ஊஞ்சல், உணவுன்னும் டைனிங் செட், கற்களை அடுக்கிஅருவிபோல் அமைத்து அதன் அடியில் சிறிய நீச்சல் குளத்தையும் வைத்திருந்தனர். அருவியின் நீர் வடிந்து குளத்தை நிரப்புவது போல் அழகாய் இருந்தது அது.
தேவைக்கு ஏற்ப வடிவத்தை மாற்றிக்கொள்ளும் வசதி கொண்ட கட்டில், வித்தியாசமான தோற்றத்தைத் தரக்கூடிய 3D floor மற்றும் சுவர்கள், கவர்ச்சிகரமான விளக்குகள், எங்கும் காதலையும் காமத்தையும் சலிக்காமல் எடுத்துச் சொல்லும் வகையில் ஐம்பொன் சிலைகள், சுவர்களில் ரசனைமிகு ஓவியங்கள், மினி மாடுலர் கிச்சன் எனச் சிறிய இடத்தில் அவர்கள் செய்து தந்த வசதிகளைப் பார்த்து விஹான் இவர்களின் ரசிகராக மாறி விட்டார்.
கற்று வைத்த மொத்த வித்தையையும் அதில் காட்டி அவரைத் தங்களின் கஸ்டமராக மாறிக்கொண்டனர். மும்பை, ஊட்டி, பெங்களூர், கேரளா, கோவா, மணாலியென மற்ற இடங்களில் உள்ள அவரின் ரிஷார்ட்களுக்கும் இது போன்ற ஹனிமூன் சூட் கட்டித்தர சொல்லியதால், அதன் இடங்களைச் சென்று பார்த்து அதற்கு ஏற்றார் போல் கட்டித்தருகின்றனர்.
இதுவரை கேரளா, புதுச்சேரி, பெங்களூரென மூன்று இடங்களுக்கு, சூட் முடிந்து பயன்பாட்டிற்கு வந்து விட்டது. கேரளாவில் கோவளம் கடற்கரையில் வேலை நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்னும் பல இருக்கிறது. அது இவர்களைப் பிஸியான பிஸ்னஸ் மேனாக மாற்றியது.
Second floor… கௌதமுடைய ஐடி கம்பெனியுடையது. கம்ப்யூட்டர்ஸ், சேர்ஸ், ஏசியென ஒரு சிறிய ஐடி நிறுவனம் எப்படி இருக்குமோ அதே போல் இருந்தது.
Third floor.…ஹரிணிக்கு. எப்படி இருக்குன்னு வர்ணிக்க ஆசை தான். ஆனால் நான்கு பக்கமும் சுவரை மட்டும் கட்டி வைத்திருக்கும் இடத்தை எப்படி வர்ணிப்பது என்று தெரியவில்லை. ஸாரி…
ஹரிணி கோபமாகக் கௌதமின் கேபின்க்குள் வந்தாள். தன் கையில் இருந்த கார் சாவியை அவனின் டேபிளில் வைத்தவள்,
" என்னோட ஆஃபிஸ் எப்ப ரெடியாகும்னு, உன்னோட அண்ணன்ட்ட கேட்டுச் சொல்லு. " எனக் கோபமாகக் கேட்க, கௌதமிற்கு குஷியாக இருந்தது.
" யூஸ் லஸ்… இடியட்… 'கிட் பத்தே நாள்ல உன்னோட ஃபேஷன் ஹவுஸ் ரெடியாகிடும்'னு சொன்னான். பத்து நாளுங்கிறது பத்து மாசம் ஆகப்போது. கண்டவனுக்கெல்லாம் கட்டித்தர நேரம் இருக்கு. கட்டுனவளுக்கு செஞ்சித் தர முடியாலயாக்கும் அவனுக்கு." எனச் சற்று நேரம்வரை ரசித்துக் கொண்டிருந்த தன் ஆசைக் கணவனை இப்போது திட்டித் தீர்த்துக் கொண்டு இருந்தாள் ஹரிணி.
" ஆஹா… ஹரிணி இப்பத்தா சந்தோஷமா இருக்கு. கொடல் வெந்தவெ வாயில குல்பி ஐஸ்ஸ வச்சது மாறி இதமா இருக்கு. " என்றான் கௌதம்.
அவனுக்கு ஹரிணி தரனை புகழ்ந்தால் பிடிக்காது. சண்ட போட்டுத் திட்டினாள் என்றால் சுவாரஸ்யமான கேட்பான்.
" உனக்கு வேடிக்கையா இருக்குள்ள. இந்த ராகவ் அண்ணனும் அவெங்கூட சேந்துட்டு என்னோட கேபின்ன மட்டும் ரெடி பண்ணி தர மாட்டேங்கிறாங்க. ச்ச… அங்க தொங்குற கயறு கட்டைய பாத்தா எப்படி ட்ரா பண்ண மனசு வரும். எங்கைல மாட்டட்டும் அந்தக் கயத்துவையே கட்டி வச்சி அடிக்கிறேன். " எனச் சலித்துக் கொண்டாள் அவள்.
எனெனில் அந்த நான்கு சுவற்றிற்குள் எதுவுமே செய்ய முடியாதே. நிற்கக் கூட இடம் இல்லாமல் கட்டுமான பொருள்கள் இறைந்து கிடந்தது. ஒரு நிமிடம்… அவளுக்குத் தான் மும்பையில் ஒன்று இருக்கிறதே பின் எதற்கு இங்கு. ஒரு வேளை கிளை தொடங்கப்போகிறாளோ?
"இருக்குற ஒன்னையே காப்பாத்துறது கஷ்டமா இருக்கு. ஐசியூ ஃபேஷன்ட் மாறி இப்பவோ, அப்பவோன்னு இழுத்துட்டு இருக்கு. இதுல இன்னொன்னா. முடியாது மா. மும்பைல இருந்த ஹச்ஆர் ஃபேஷன் ஹவுஸ்ஸ தா, சென்னைக்கி மாத்த போறேன். ஒரு மாசமாச்சு, மும்பைக்கி மூடு விழா போட்டு இனி இங்க தா கடய திறக்கப் போறேன். இத ரெடி பண்ணித்தர அவனுக்கு முடியல. இப்போதைக்கி கௌதம் ஆஃபிஸ் தா என்னோடதும்."
அப்படி என்ன ஆனது? ஹரிணி மும்பையை காலி செய்து விட்டு வரவும், கவலைக்கிடமாவும் இருக்கும் அளவுக்கு அவளுடைய ஹவுஸ்ஸில் என்ன நடந்தது?
தொடரும் ...
கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .
நன்றி

கருத்துகள்
கருத்துரையிடுக
pls share you review..