முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நின்னையல்லால் 29

  நின்னை - 29 பிறந்த நாள் விழா போன்ற விசேட நிகழ்வுக்கு உடுத்தி வரப் பொருத்தமான உடை சேலைசாத்விஹாசினியிடம்  இருக்காது என தெரிந்தே புடவை எடுத்து அதற்கான ப்ளவுஸையும் தைக்க டெய்லரிங் ஷொப்பில் கொடுத்தான். அங்கே தையல் காரன், "டிசைன் சொல்லுங்க சேர்" எனக் கேட்க, "இதுல இருக்கு அளவில.." என அளவு ஜாக்கெட் கொடுத்தான். "டிசைனில மாற்றம் இல்லயா?" எனக் கேட்டான் அந்த அதிகபிரசங்கி சிங்கள டெய்லர். வாமன் சாத்வி கொடுத்த ஜாக்கெட்டை மேலாக்காக பார்த்தான். சின்னக் கை வட்டக் கழுத்து வைத்த வழமையாக எல்லாரும் ஊரில் போடுவது போல் ஒன்று தான் அது.  யோசித்தவன், "டிசைன் காட்டுங்க" என கோரியதும் ஒரு ஆல்பமே வந்து விழுந்தது அவன் எதிரில். பெண்களுக்கான புடவை ஜாக்கெட் தைத்து தரும் பிரத்தியேக கடை அது. பதுளை நகரில் கொடி கட்டி பறக்கும் பிரபல ஷொப். பத்து பதினைந்து பேர் வரிசையாக உக்கார்ந்து ஆளுக்கு ஒரு மெஷினுடன் உறவாடி சில மணி நேரங்களில் வேண்டும் ப்ளவுஸை கச்சிதமாக வடிவமைத்துத் தருவர்.  ரசனை மிகுந்த எங்கள் தலைவர் வாமதேவன், ஆல்பம் பார்த்து 'இலியானா' போல் ஒரு மாடல் பெண் அணிந்து இருந்த படத்...

அன்பே 5


 

அத்தியாயம்: 5


இளங்காத்து வீசுதே! இசைபோலப் பேசுதே!

வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே!

மேகம் முழிச்சு கேக்குதே!


கரும்பாறை மனசுல, மயில் தோகை விரிக்குதே!

மழைச்சாரல் தெறிக்குதே! புல்வெளி பாதை விரிக்குதே!

வானவில் குடையும் பிடிக்குதே! புல்வெளி பாதை விரிக்குதே!

வானவில் குடையும் பிடிக்குதே!


மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே!

புதிய தாளம் போட்டு உடல் காற்றில் மிதக்குதே!


இளையராஜா இசையில் பழனிபாரதியின் வரிகளை ஸ்ரீராம் அவர்களின் குரலில் கேட்கும் போதே மனம் இதமாய் இருந்தது. தன் காதுகளுக்கு மட்டும் கேட்கும் படி சத்தத்தைக் குறைத்து வைத்து அந்த அதிகாலை வேளையில் காரை ஓட்டிக் கொண்டு இருந்தான் கௌதம். இதழ்கள் பாடல் வரிகளை முணுமுணுத்துக் கொண்டிருந்தன.


" ஆஹா!… ஆஹா!… என்ன அருமையா பாடுறாப்ல. காதுக்கு எவ்ளோ இதமா இருக்குன்னு தெரியுமா. நீ கேட்டியா டார்லிங் இத. டார்லிங்… " என ஹரிணியை திரும்பிப் பார்த்தான் கௌதம். தன் அருகில் இருந்த சீட்டில் துயிலும் மனைவி மற்றும் மகளின் தூக்கம் கலையாத வண்ணம் மெதுவாகப் பேசினான்.


பின் சீட்டில் ஹரிணி லேப்டாப்பில் மும்மரமாக வேலை பார்த்துக் கொண்டு இருக்க, அவனின் பேச்சு அவளின் செவிகளைச் சென்றடையவில்லை. அகிலனை மடியில் வைத்துக் கொண்டுவேறொரு ஜீவனும் அந்தக் காரில் இருந்தது. அது யாரெனப் பின்னர் தெரிந்து கொள்ளலாம்.


"ஹிம்… இந்த மாறிப் பாட்டெல்லாம் காதுல வாங்காம… ஏ அந்தப் பொட்டிக்குள்ள தலைய விட்டுடு உக்காந்திருக்க. ஒன்னு பாட்ட கேளு, இல்ல கண்ண மூடித் தூங்கு. எதுக்கு இந்த நேரத்துலையும் வேல பாத்துட்டு இருக்க. "  


" என்னோட சூழ்நில கௌதம். தூக்கமே வர மாட்டுங்கிது. இன்னும் ரெண்டு வாரத்துல கோவால ஒரு ஃபேஷன் ஷோ நடக்கபோது. என்னோட பெஸ்ட் ட நா இதுல குடுத்தே ஆகனும் கௌதம். என்னோட ஃப்யூச்சரே இதுல தா இருக்கு. " எனத் தலை தூக்காமல் கூறினாள் அவள். 


"ஹிம்… பெரிய பெரிய ஹீரோ ஹீரோயினுக்கு எல்லாம் காஸ்ட்யூம் டிசைன் பண்ணித் தந்த பொண்ணு டா இது. இப்ப ப்ளாட் ஃபாம்ல உக்காந்து துணி விக்கிற நிலமைக்கி இறக்கிட்டிங்களேடா. எப்படி இருந்த பொண்ணு, இப்படி மாறிட்டுச்சு. ச்ச… இதுக்கெல்லாம் காரணம் உன்னோட புருஷன் தா. இல்லையா… அவெ மட்டும் ஓம்காரன ஜெயில்ல தள்ளாம இருந்திருந்தா… ஆ… " எனப் பேசி முடிப்பதற்குள் அவனின் முடி அவளால் பிய்க்கப்பட்டு இருந்தது. 


" உனக்கு அவெ மட்டும் தா கண்ணுக்குத் தெரியவான்… எரும. எல்லாம் அந்தச் சுனில் தாரிஷ்ஷால வந்தது. அவனோட பேராசையால வந்த நிலம தா இது. " 


" அப்ப அந்தச் சுனில போட்டுத் தள்ளிட வேண்டியது தான. நம்மகிட்ட தா கொல பண்ற மிஷின் இருக்கே!. " 


" யாரு டா அது?. " 


" உம்புருஷன்தா!." என்றவனை முறைத்தாள் அவள்...


"அவன கொல பண்ணிட்டு ஜெயிலுக்கும் வீட்டுக்கும் எம்புருஷன அழயச் சொல்றியா. போடா லூசு…" என்க சிரித்தான் அவன். 


" என்னோட ஃப்ரெண்டால எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்க முடியும். எல்லாத்தையும் கூலாகச் சரி செஞ்சிடுவா. அவளுக்குள்ள திறம அருவி மாறிக் கொட்டிக்கிட்டே இருக்கும். " என்றவன் திரும்பி அவளைப் பார்த்து ஆல் தி பெஸ்ட், என்று நம்பிக்கை குடுத்தான். 


ஏனெனில் ஹரிணி புலம்பு ரகம் இல்லை. யார் தன்னிடம் வம்பு செய்கிறார் என்பது தெரியாத வரை தான் அமைதியாக இருப்பாள். பின் எதை எப்படி செய்ய வேண்டுமோ அப்படி தன் செயலால் முடித்துக் கட்டும் ரகம்.


ஓம் காரன் செய்த சில சட்ட விரோத நடவடிக்கைகளால்‌ அவனுக்குத் தண்டனை கிடைத்தப் பின், ரோஸ் குழுமம் முழுதாகத் திவாலாகிப் போனது. அதை மீட்டெடுப்பது என்பது முடியாத செயலாக இருந்த போதும், அதை மீட்க யாரும் முன்வர வில்லை, ஹரிணி உட்பட. கெமிக்கல் பேக்கரி, மெடிக்கல், ஐட்டி யென அவனுக்குச் சொந்தமான அத்தனை கம்பெனிகளும் அரசுடைமை ஆக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நபர்களுக்குத் தங்கள் சொத்துக்களை விற்று இழப்பீடு வழங்கினாள் ஹரிணி. 


ஆனால் எரிகின்ற மாளிகையிலிருந்து தங்கள் கைக்குக் கிடைத்த விலையுயர்ந்த பொருளை அள்ளிச் செல்லும் மனிதர்களால் ஹரிணியின் சொத்துக்கள் சூரையாடப்பட்டது. இழப்பீடு, நஷ்டஈடு, கடன் என அவனின் பார்ட்னர்ஸ் பலரால் குழுமம் முழுவதுமாக முழுங்கப்பட்டிருந்தது.


ஹரிணிக்கு பணத்தின் மீது ஆசை இல்லாததாலும், பணத்தாசை பிடித்த மனிதர்கள் மத்தியில் வாழப் பிடிக்காததாலும், தன் தாத்தா தனக்கு தந்த சில சொத்துக்களை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவற்றை விற்றுவிட்டாள்.


ஆனால் கயவர்களின் கண் அவளின் ஹச்ஆர் ஃபேஷன் ஹவுஸ்ஸின் மீது விழுந்தது. இதுவரை நஷ்டம் என்ற ஒன்றை பார்த்திடாது லாபத்தை அள்ளித் தரும் அவளின் ஃபேஷன் ஹவுஸ்ஸை அபகரிக்க நினைத்துக் காய்களை நகர்த்தினான் சுனில். 


ஒரு தொழிலை முடக்க வேண்டும் என்றால் முதலில் அதன் வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனத்தின் மீது வைத்திருக்கும் நற்பெயரை கெடுக்க வேண்டும். அந்த நிறுவனங்களில் தயாரிப்புகள் தரமற்றவை, லாப நோக்கில் செயல்படுகிறார்கள் என்பது போன்ற மாயையை ஏற்படுத்த வேண்டும். அதைத்தான் சுனில் செய்கிறான். ரோஸ் குழுமத்தின் அவப்பெயரை ஹரிணியின் மீது திணித்தான். அவளின் வாடிக்கையாளர்களை விலை பேசி வாங்கிக் கொண்டான். அவளின் வேலையாட்கள் உட்பட அவளின் திறமையையும் சொந்தமாக்க முயல்கிறான். பலர் விலைபோகி உள்ள நிலையில், மீதி உள்ளவர்களை வைத்துத் தன் தொழிலை நடத்த போராடுகிறாள்.


தன்‌ மீது நம்பிக்கை வைத்த சில விஸ்வாசமான வாடிக்கையாளருக்கு, தான் சோடை போகவில்லை என்பதை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளாள் ஹரிணி. அதற்கு இந்த ஃபேஷன் ஷோ நிச்சயம் உதவும் என்று முழுதாக நம்புகிறாள். அந்த ஷோ வுக்காகத் தான் கடுமையாக உழைத்துத் தன்னை தயார் படுத்திக் கொண்டிருக்கிறாள். 


ஒருவரிடம் இருக்கும் திறமை என்பது பென் முட்டை போன்றது. அடுத்தவர்கள் அந்த முட்டையைத் திருடி விற்க முடியும். ஆனால் புதிதாக ஒன்றை உருவாக்க முடியாது. அது திறமைசாலிகளால் மட்டும் தான்‌ முடியும். ஹரிணியும் திறமைசாலி தான். 


________________


யாருமே வராத அந்தக் கேட்டை எத்தனை மணி நேரம் பார்த்தாலும் கண்கள் மட்டும் பூத்து போகவில்லை இருவருக்கும். அது ஜோதி மற்றும் கனகவள்ளி. தங்களின் பேரனின் வருகைக்காக வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருந்தனர் இரு பாட்டிமார்களும். 


" குட் மார்னிங் சித்தீஸ். ஏ காலங்காத்தாலையே கால் கடுக்க காத்துட்டு இருக்கிங்க. அண்ணே வரப் பத்து மணி ஆகும். உள்ள வந்து இருங்க. " எனப் பிரகாஷ் அழைக்க, இருவரும் ஒரு சேர புன்னகைத்தனரே‌ தவிர ஏதும் பேசவில்லை. 


" ஒன்னு வர்றேன்னு சொல்லுங்க. இல்ல வர முடியாது, உ வேலய பாத்துட்டு போடான்னு சொல்லுங்க. ரெண்டும் இல்லாம புன்னகை அரசி மாறிச் சிரிச்சிட்டே ‌இருந்தா என்ன அர்த்தம். " என்றவனுக்கும் பதிலாக மீண்டும் ஒரு புன்னகையே கிடைத்தது. காண்டான பிரகாஷ்,


" உங்க கிட்ட நின்று பேச எஎனக்குத் தெம்பில்ல. நா போறேன். உள்ள போய் நல்லா சாப்டிட்டு வந்து உங்கள்ட்ட பேசுறேன். " என உள்ளே செல்ல, அவனைப் புன்னகையுடன் எதிர் கொண்டாள் வைசாலி. ரிஷிதரனின் தங்கை. 


" எங்க உன்னோட புருஷன்?. " எனச் சண்டைக்கி செல்பவன் போல் வேட்டியை மடித்துக் கட்டக் கொண்டே கேட்க,


" வேலை இருக்கு, வெளில போனும்னு சொன்னாரு. அதோ வர்றாரே. " எனச் சொல்லிப் படிக்கட்டைக் காட்ட, அங்கு அசோக் குமார் இறங்கி வந்துகொண்டிருந்தான். 


பிரகாஷை பார்த்ததும் 'இவனா… ' என அதிர்ந்தவன் கண்ணில் மாட்டாது தப்பி விடாலாம் என்று நினைக்க, எப்படி முடியும் அதான் வைசுபோட்டுக் குடுத்து விட்டாளே. 


" யோவ்… நீயெல்லாம் மனுஷனாய்யா. வெளி நாட்டுக்கெல்லாம் போய் வேல பாத்திருக்கியேன்னு உன்னையெல்லாம் மதிச்சி உங்கிட்ட ஐடியா கேட்டா… எஸ்கேப் ஆகி ஓடுறியே நியாயமாய்யா இது." 


"என்ன ஐடியா டா வேணும் உனக்கு?. " வேல்ராஜ். பிரகாஷின் அண்ணன்.


" இன்னைக்கி யாரு வர்றா நம்ம வீட்டுக்கு. " 


" யாரு… " வைசுவின் குரல் அது.


" என்னோட குல சாமி. பாசமுள்ள சூரியன். கௌதம் அண்ணே வாராப்ல. அவர வரவேற்க, ஐடியா குடுன்னு சொன்னா, கூரைய பிச்சிட்டு ஓடுறான். " 


" அவெ என்ன புது மாப்பிள்ளையா. மேல தாளம் எல்லாம் வச்சி வரவேற்க. " அசோக் கடுப்பாகக் கேட்டான். இரு நாட்களாகவே உயிரை வாங்குகிறான் ஐடியா குடு என்று, அதனால் வந்து கடுப்பு அது.


" அவரு உன்னோட ஒன் அண்டு ஒன்லி தங்கச்சி புருஷெங்கிற மறந்துடாத. நீ மலையேறுனாலும் உனக்கு உன்னோட மச்சான் தயவு தேவ. இதையும் மறந்துடாத. " பிரகாஷ்.


" இவெ எதுக்குடா மல ஏறனும். வீடு என்ன இமயமலைலையா இருக்கு. " சம்பத். 


" அதெல்லாம் எனக்குத் தெரியாது. என்னோட அண்ணனுக்குச் சிறப்பான தரமான வரவேற்பு குடுத்தாகனும். எத்தன நாள் கழிச்சி வாராரு. அவர பாக்காம என்னோட கண்ணு ரெண்டும் பாலைவனத்துல இருக்குற தண்ணீ மாறி வறண்டு போயிருக்குது. பாருங்க… பாருங்க… " எனக் கண்ணைக் காட்ட, அசோக் அதைக் குத்திவிட்டான்.


வேலராஜ், "டேய் அவெ போன மாசம் தானடா வந்தான். அதுக்குள்ள பல வர்ஷம் பாக்காதவே மாறி ஸீன் போடுற. "  


பிரகாஷ், "எப்ப வந்தாலும் என்னோட அண்ணனுக்குச் சிறப்பான வரவேற்பு தரனும்."


சம்பத், "என்ன மாறி ஐடிவ எதிர்பாக்குற. "


" நம்ம ஊரு எல்லைல நாலு புல்டோசர நிக்க வைச்சி, அதுல மண்ணு அள்ளுவாங்கள்ள, அதோட வாய். அது நிறைய பூவ பிச்சி போட்டு, அண்ணே காரு வந்தவுடனே போட்டு வரவேற்குறது. இல்ல நம்ம பக்கத்தூர்ல இருக்கு நந்தினிங்கிற யானைய வாடகைக்கி பேசி, அண்ணே, இந்து, அப்பறம் ஹரிணி, இப்படி கார்ல இருக்குற எல்லாருக்கும் பூ மாலை வாங்கிட்டு வந்து போடச் சொல்லி வரவேற்குறது. ஆரத்திய ரெடி பண்ணி வைக்கிறது. இந்த மாறி நல்ல நல்ல ஐடியாக்கல அவுத்து விடுங்க."


' அவெ பண்றத பாத்தா கௌதம வரவேற்க ப்ளான் போடுற மாறித் தெரியலையே. மேட்டர் எதுவா இருக்கும்.' எனச் சம்பத் யோசித்தான். 


வேல்ராஜ், "இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியல. அதென்ன அவனுக்கு மட்டும் அப்படியொரு வரவேற்பு. நாங்களும் தா முந்தாநேத்து வந்தோம். வான்னு மட்டும் தான நீ கேட்ட. வேற ஒன்னும் ஸ்பெஷலா பண்ணலையே. " 


" நீங்களும் எங்கண்ணும் ஒன்னா. "


சம்பத், "பின்ன அவனுக்கு மட்டும் கடவுள் பத்து கைப்பத்து காலு வச்சி விசித்திரமாவ படச்சான். " 


" எங்கண்ணே விசித்திரமான ஆளு இல்ல வித்தியாசமான அளு. உங்கள மாறிச் சாதாரண ஆளு இல்ல எங்கண்ணே. மைக்ரோசாப்ட் மாறி இன்னொரு கம்பெனிய இந்தியால ஓப்பன் பண்ணப்போற நம்பிக்கை‌ நட்சத்திரம். பல இளைஞர்களோட எழுச்சி நாயகன். அவரு பில்கேட்ஸ் கூடவே பிஸ்னஸ் டீல் பேசுறவரு. எலான் மாஸ்கே மாஸ்க் வாங்கி தந்தவரு." 


" ஏ அவருக்குப் பத்துரூபா குடுத்து மாஸ்க் வாங்க கூடக் காசில்லையா. நா வேண்ணா கொரியர்ல என்னோட பாக்கெட் மணிய வாங்கி அனுப்பி வைக்கிறேன். அட்ரஸ் சொன்னிங்கன்னா வசதியா இருக்கும். அப்படியே பத்துரூபா மாஸ்க்க டெலிவரி பண்ண சார்ஜ் கேப்பான். அதையும் நீங்கக் குடுத்துட்டா நல்லா இருக்கும். " நந்து.


 அசோகின் மகன். யூகேஜி படிக்கிறான்.


" யூகேஜி நஹி… ஃபஸ்ட்… ஃபஸ ஸ்டான்டர்டு போலோ. மே ஒன்னாப்பு படிக்கிறேன் ஹைங். ஹாஹ்ஹா… என்ன ஃபெயில் ஆக்க யாராலையும் முடியாது. ஹாஹ்ஹா… ஆமா ஏ எல்லாரும் கூட்டம் போட்டு உக்காந்திருக்கிங்க. குத்தாட்டம் போட யாராவது வர்றாங்களா. " சற்று இல்லை அதிகமாகவே வாய் பேசுவான்.


பிரகாஷ், "டேய் வாண்டு. " 


" சொல்லுங்க பாண்டு. " 


" யாரு வாறான்னு தெரிஞ்சா நீ இப்படி பேச மாட்ட. " 


" யாரு இந்தியன் ப்ரசிடெண்ட்டா. " 


" இல்ல. " 


" அப்ப இந்தியாவோட முதல் குடிமகனா. " 


" ரெண்டும் ஒரே ஆள் தான்டா. இந்தியாவோட ப்ரசிடெண்ட் தான்டா முதல் குடிமகன். அவரு இல்லை. இந்த வீட்டோட குடிமகன். " 


" ஓ… குடிமகனா!. அப்ப வயசான ஆளுன்னு தெளிவா சொல்லுங்க. அப்பத் தான புரியும் எனக்கு. " என்று சொல்ல, வைசு அவனின் தலையில் தட்டினாள்.


" வயசுக்கு தக்குன மாறிப் பேச்சுன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன். கேக்கலன்னா இனி அடி தா விழும். " என மீண்டும் கை ஓங்க, மற்றவர்கள் தடுத்தனர்.


வேல்ராஜ், "வீட்டாளுக கிட்ட விளையாட்டா பேசுறான். அதுக்கு போய் அடிக்கிற. "


சம்பத், "விடு வைசு. யாருகிட்ட எப்படி பேசனும்னு அவனே பெரியவனா வளந்ததுக்கு அப்றம் தெரிஞ்சுப்பான். இந்த வயசுல அடக்காத. " 


பிரகாஷ், "என்ன ஆளாளுக்கு ஒன்னு சொல்றாங்க. அப்ப நானும் ஒன்னு சொல்றேன். வைசு நீ நல்லா அடிச்சி வள. எங்க வீட்டு அப்பத்தா கிழவிய விட அதிகமால்ல பேசுறான் இவெ. "


" எங்கம்மா அடிச்சாலும் நா வாங்கிப்பேன். திட்டுனாலும் அதையும் பொறுத்துப்பேன். ஏன்னா அவங்க தா என்னோட அம்மா... மதர்… மாதா… " என வராத கண்ணீரை துடைத்தபடி நடிக்க, மற்றவர்கள் சிரிக்க, பிரகாஷ் முறைத்தான் அவனை.


" மொறச்சது போதும். பில்டப் குடுத்து யாரே வர்றாங்கன்னு இன்ரோ குடுத்திங்களே. யாரு அது?." 


" கௌதம்ண்ணே. என்னோட பாசமுள்ள சூரியன். "


" ம்ச்… அவ்ளோ தானா. " 


"அவரும் அவரோட குடும்பமும் வருது. முக்கியமா ஆதி வர்றா. " 


" ஆதி பாப்பா வருதா. அத மொதல்லையே சொல்லிருக்கலாம்ல. ரெட் ரோஸ் ஓக்கேவா இல்ல எல்லோ ரோஸ் ஓக்கேவா. ரெண்டையும் கலந்து விடுவோம். அப்பா பாதர் உங்க ஃபோன் தாங்க. நெட்ல பொக்கே ஆர்டர் பண்ண. " 


சம்பத், "பல்லு கூட முழுசா மொலைக்காத பிள்ளைக்கி பொக்கேவாடா. "


" வர்றது யாரு. என்னோட ஆதி. " எனக் கெத்தாகச் சொல்ல. 


அசோக், "கூடவே ஹரிணியும் வராலாம். நீ சொன்னது அவா காதுல கேட்டுச்சின்னா. "


பிரகாஷ், "காது ரெண்டையும் பிச்சி உங்கைலையே குடுத்துடுவா. பாத்துக்க. "


"பரவாயில்ல... காது தான. ஊசி நூல் வச்சி தச்சிக்கலாம். எங்கிட்ட ஊசி இருக்கே. " என்றான் அந்த வாண்டு. 


" வா ஹரிணி… ஏ லேட்டு. " எனச் சம்பத்தும் அசோக்கும் சேர்ந்து கத்த. 


" அய்யோ… அத்த நா இல்ல. " எனப் பதறி எழுந்தான் அவன். அனைவரும் அவனைப் பார்த்துச் சிரிக்க,


" அவ்ளோ பயமாடா உங்கத்த மேல. " வைசு ஆச்சர்யமாக,


" பின்ன! நீங்க அடிக்கிறேங்கிற பேர்ல மசாஜ் தா பண்ணாவிங்க. ஆனா பம்கின்… அடிக்கிறேங்கிற பேர்ல தலைல குருவி சுத்துற மாறிப் பண்ணிடுவாங்க. அதுவும் ஒரிஜினல் குருவி. அதுமட்டுமில்ல ஒரே கொட்டுல ரெண்டு பண்ணியாரம் மண்டைல மொளச்சிக்கும். டேஜ்ஸரஸ் ஆன்டி. " 


" சரி வா.‌ நாம் போய்க் குளிக்கலாம். ஆதிய பாக்குறப்ப அழுக்கா இருக்க கூடாதுல்ல. வா… " என வைசு அழைக்க‌,


" ம்மா.…போன வாரம் தான குளிச்சேன். நம்ம நாட்டுல இருக்குற தண்ணி பஞ்சத்துக்கு வர்ஷத்துல ஒரு நாள் தா குளிக்கனும்னு, பிரகாஷ் மாமா தா சொன்னாங்க. " எனப் பிரகாஷை போட்டுக்குடுக்க. 


" ஏன்டா சின்னப் பையனுக்கு நல்ல பழக்கத்த சொல்லிக் குடுக்க மாட்டியா. " என அசோக் அவனின் தலையில் தட்டினான். 


" ஆமா… இல்லன்னாலும் உம்மகனுக்கு தெரியவே தெரியாதாக்கும். நீ பெத்து வச்சிருக்குறது ஒரு குட்டி சாத்தான்‌. யாரும் அவனுக்குச் சொல்லித்தனும்னு அவசியமே இல்ல. "


நந்து குளிக்க வர மறுத்து அடம் பிடிக்க,‌ "நா பாத்துக்கிறேன் வைசு. நீ போ. " என மனைவிக்குச் சிரமம் தரக் கூடாது என அவனை மகனைக் குளிக்க அழைத்துச் சென்றான். 


குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு தாய்க்கு மட்டுமல்ல, தந்தைக்கும் உண்டு என்பது போல் இருந்தது அசோக்கின் செயல்.


தொடரும் ...


கருத்துக்களை பதிவிட்டுச் செல்லும் மாறு கேட்டுக்கொள்கிறேன் .


நன்றி 

அன்பே 4


அன்பே 6


கருத்துகள்

like

Ad

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அன்பே 1

 விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே 2 இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு.                                      -   திருக்குறள்  மெய்யுணர்தல் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறுவது யாதெனில்..  மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்‌யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும்..  உண்மை எதுவோ அதை அறிந்தே தீர வேண்டும் என்கிறார் .. இந்த கதையிலும் தன் தங்கையின் மரணத்திற்கான காரணங்களை களையறிந்து, நாயகர்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பது தான் கரு..  அத்தியாயம்: 1   இந்தியாவில் பல தேசிய நெடுஞ்சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகளும் உள்ளது. இதில் ஒரு சாலையில் தான் நாம் பயணிக்க உள்ளோம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்துள்ள சாலையில் இருபுறமும் மரங்களை நன்கு வளர்ந்திருந்தனர். கரிய நிற தார் ரோட்டின் நடுவே வெள்ளை நிற க...

விழி மூடினாலும் உந்தன் முகமே அன்பே

  அத்தியாயம்: 1  " அண்ணா ப்ளீஸ் ண்ணா.. இந்த ஒரு முறை வா ண்ணா.. அடுத்து உன்ன நா டிஸ்டர்ப் பண்ணவே  மாட்டேன்... " என்றது ஒரு பெண்ணின் கெஞ்சும் குரல்..  சென்னையில் அனைத்து பள்ளி மாணவர்களும்  கலந்துகொள்ளும் அந்த கலையரங்கத்தின் வாசலில் இருந்து தன்னை அழைத்துச் செல்ல வருமாறு தன் அண்ணனைக் கெஞ்சிக் கொண்டு இருந்தாள் அவனின் தங்கை வைசாலி.. "......" " சரி ண்ணா.. ஓகே.. நா ஸ்டேஜ் பக்கத்துலேயே வெய்ட் பண்றேன்.. பத்து நிமிசத்துல வந்துடுண்ணா.. பை.." வைசு உற்சாகமாக.. " என்ன வைச்சு அண்ணே வர்றேன்னே சொல்லிட்டாரா.. " அவளின் தோழி.. " பத்து நிமிசம்னு சொல்லுச்சி.. ஆனா வந்து சேர ஒரு மணிநேரத்திற்கு மேல ஆகும்னு நினைக்குறேன்.. "  " சரி வா நாம போய் மேக்ஸ் மிஸ்ட்ட சொல்லிட்டு வந்துடலாம்.. நீ கிளம்புனதும் நானும் என்னோட சிஸ்டர் கூட போய்டுவேன்.. மேம் கிட்ட சொல்லாம போகக்கூடாதுல.. அப்றம் கூப்பிட்டு வச்சி இஷ்டத்துக்கு ஆடுறன்னு க்ளாஸ் முன்னாடி திட்டும்.. " தோழி.. " இல்லப்பா.. நீ  போய் எனக்கும் சேத்து சொல்லிட்டு வா.. நா இங்கேயே நிக்குறேன்.. அண்ணா  சீக்கிரம் வந்துட...

நின்னையல்லால் பிறிது நானும் உண்டோ - 01

  நின்னையல்லால் - 01 "சாத்வி.." சத்தமாக அழைத்தாள் சாத்விஹாசினியின் சித்தி புனிதா என்கிற புனிதமலர். "வாரன் சித்தி" என வந்தவளிடம் கையில் இருந்த வெள்ளை கவரை கொடுத்த புனிதா, "பெடியன்ர போட்டோ வந்திருக்கு" என வாய்க்குள் சிரித்தாள். உறையை வாங்கியவள் சித்தியை ஏறிட, "நாளைக்கு கோயிலுக்கு வாராராம்... நேருல பாக்க.." என பற்கள் தெரியவே சிரித்தாள் புனிதா. சாத்விக்கு இதயம் துடிப்பு அதிகரித்தது. "என்ன சித்தி.. அதுக்குள்ள.." "என்ன அதுக்குள்ள.. பெடியன பாக்க வேணாமா? நேரா கல்யாணத்துல பாத்து கொள்றியா?" "இல்ல சித்தி.. நேற்று தானே அவங்க வீட்டால வந்தாங்க.. இப்ப தான் போட்டோ தாறிங்க.. அதுக்குள்ள.." "அப்டி தான் சாத்வி! நேரம் வந்து சேர்ந்தா எல்லாம் டப் டப் எண்டு நடக்கும்" சித்தி தத்துவம் பேசிவிட்டு தன் வீட்டு அடுப்பில் கொதிக்கும் குழம்பை பார்க்க சென்றாள் அவசரமாக. சாத்வி கவருடன் தனது அறைக்கு வந்தாள். அப்பா அம்மா இல்லாத ஒற்றை பிள்ளை சாத்விஹாசினி. ஐந்து வயதில் இருந்து அம்மம்மா செல்லம்மாவின் அரவணைப்பிலும் அம்மாவின் ஒரே சகோதரம் ...